நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
ஞாயிறு, மார்ச் 21, 2021
இந்தியாவின் கஜானா... காலியா?
#தங்கத்தையும் (சுமார் 28 டன் ) விற்கும் ரிசர்வ் #வங்கி !
கடந்த 30 #ஆண்டுகளில் முதன் முதலாக இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் இருப்பு வைத்துள்ள தங்கத்தை #விற்பனை செய்துள்ளது.
#நரேந்திரமோடி தலைமையிலான #பாஜக. அரசுக்கு ஏற்கனவே 1.76 கோடி லட்சத்தை ரிசர்வ் வங்கி வழங்கியும் நிதிப் பற்றாக்குறை #சீரடையவில்லை.
இதனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தை #விற்பனை செய்து அதன் மூலம் வரும் லாபத்தை #மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
#இதன்படி ஏற்கனவே 1.15 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கம் விற்பனை செய்யப்பட்டு #விட்டது.
ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அடிப்படையிலேயே உலக வங்கியிடம் கடன் வாங்க முடியும்.
தற்போது தங்கம் விற்கப்படுவதால் மேற்கொண்டு கடன் பெறுவது மற்றும் கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
ஏற்கனவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து கொண்டிருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பும் கரைந்து வருவதால் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
2019-ம் ஆண்டு இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை பட்டவர்த்தனமாக தெரியவந்தது. எனவே, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மூடி மறைக்க முடியாத நரேந்நிர மோடி தலைமையிலான அரசு நிதிச்சுமையை சரிசெய்ய பிமல் ஜலான் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
தற்போது இந்த ஜலான் குழு தான் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை விற்கும் ஒரு ஆலோசனையை வழங்கி நாட்டை திவாலாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
ஜலான் குழு ஆலோசனைப்படி ரிசர்வ் வங்கி 1.987 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை (28377.981Kg) விற்பனை செய்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கட்சி வேறுபாடுகளின்றி நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு செயல்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி இருந்தார். மேலும், நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல முறை சுட்டிக் காட்டினார்.
ஆனால் எதற்குமே செவி சாய்க்காத மோடி அரசு, பொருளாதார மந்த நிலைக்கு ஊபர், ஓலா நிறுவனங்கள் தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டி தங்களுடைய பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்தது.
இதன் விளைவாக தற்போது நாட்டின் அடிப்படை ஆதாரனமான ரிசர்வ் வங்கியின் தங்கத்திலேயே கை வைத்து நாட்டை திவலாக்கும் நிலைக்கு மோடி அரசு இட்டுச்சென்றுள்ளது.
Source : The New Indian Express
#ஆன்திஸ்டே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...