நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், செப்டம்பர் 05, 2019

ஆசிரியர் தினம்,

ஆசிரியர்களுக்கு ஒரு முன்னுதாரணம்

நபி (ஸல்) அவர்கள்*

*எதிர்கால தலைவர்கள் இன்றைய இளைஞர்கள். தலைவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டுமானால் இளைஞர்கள் நல்லவர்களாக உருவாக வேண்டும். நல்ல இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களுடன் ஆசிரியர்களுக்கும் உரியது. இதனால் அரசும் நற்பிரஜைகளை உருவாக்குவதே கல்வியின் பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.*

*ஆசிரியர் பணி ஓர் உன்னதமான பணியாகும். மனித உறவுகளோடு உறவாடும் பணி. இதனால்தான் “சிறந்த ஆசிரியர் கல்வியை ஊட்டுபவராக மட்டுமல்லாது ஆலோசகராக ஒழுங்கமைப்பவராக ஊக்குவிப்பவராக உதவுபவராக இருக்க வேண்டும்” என கல்வியல் அறிஞரான லூயிஸ் கோகலே என்பவர் குறிப்பிடுகின்றார். ஆசிரியர்கள் பொறுப்பாக செயல்படும் போதுதான் சிறந்த மாணவர்களை உருவாக்கலாம்.*

*ஆசிரியர் வகுப்பறையொன்றில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும் போது பாடங்கள் பற்றிய அறிவு மாத்திரம் ஆசிரியருக்கு போதுமானதல்ல பாடத்துடன் சம்பந்தப்பட்ட எவ்வளவு தேர்ச்சியுள்ளதோ அதேபோல் மாணவர்கள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அவர்களின் குடும்ப சூழல் மன நிலை கிரகிக்கும் தன்மை என அவர்களை விளங்கிக்கொள்ளும் நிலையினையும் அடைய வேண்டும்.*

*கிரகித்தல் விளங்கிக் கொள்ளல் போன்றவற்றில் மாணவர்கள் மாணவர்களுக்கு வேறுபடுவர். “ஜோனுக்கு லத்தீன் கற்பிப்பதற்கு ஆசிரியர் லத்தீன் மொழியை மாத்திரம் தெரிந்தவராக இருந்தால் மாத்திரம் போதாது. ஜோனைப் பற்றியும் நன்றாக அறிந்திருக் வேண்டும்” என சேர் ஜேம்ஸ் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.*

*எனவே வகுப்பறையில் உள்ள மாணவர்கள் பல இக்கட்டான சூழலிருந்தும் பொருளாதார நெருக்கடிக்குள்ளிருந்தும் வரும் போது ஆசிரியர் வெறுமனே கற்பித்தல் பணியை மாத்திரம் செய்துவிட்டு அவர்களின் உள்ளுணர்வுகளை தேவைகளை அவாக்களை கடினத் தன்மைகளை புரியாதவராக செல்வாரெனில் அதனால் மாணவர்களின் சிந்தனைத் தூண்டலுக்கு இடமில்லாமற் போகலாம். சில வேளைகளில் மாணவர்களின் விருப்பு-வெறுப்புகளுக்கும் உள்ளாக வேண்டிய நிலமைகளும் மாணவர்களின் விமர்சனத்துக்கு சிக்குப்பட வேண்டிய நிலமையும் ஏற்படலாம்.*

*ஆசிரியர் மாணவருக்கு பாடங்களை இலகுபடுத்தி ஆர்வமூட்டும் வகையில் போதிப்பது மாணவர்கள் மீது ஆசிரியர்கள் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாக அமையும். முஸ்லிம் சமுதாயத்தின் முதல் ஆசனாகிய நபி (ஸல்) அவர்கள் மக்களை அன்பின் அடிப்படையில் வழிநடத்துபவர்களாகவே இருந்தார்கள். இதனை பின்வரும் திருமறை வசனம் உணர்த்துகிறது.*

*(விசுவாசிகளே!) உங்களிலிருந்து நிச்சயமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் கஷ்டத்துக்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிகவும் வருத்தமாகவே இருக்கும். அன்றி உங்களை பெரிதும் விரும்புகின்றவராகவும் விசுவாசிகள் மீது அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கின்றார். (09:28)*

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“இலகுபடுத்துங்கள்; கஷ்டப்படுத்தாதீர்கள்; ஆசையூட்டுங்கள்; வெறுப்படையச் செய்யாதீர்கள்” (புஹாரி)

*பொதுவாக மாணவர்கள் எதிர்பார்க்கும் நல்லாசிரியர் யார்?*

*இவ்வினாவிற்கு பல கோணங்களிலிருந்தும் விடைகள் ஏவுகணைகளாகப் பாயலாம். ஆயினும் இறுதியாக மாணவர்களின் உள்ளங்களை வென்றவரே மாணவர்களால் எதிர்பார்க்கப்படும் நல்லாசிரியர் என்ற முடிவுக்கு வரலாம். உள்ளங்களை வெல்லுதல் எனும் போது மாணவர்களுடன் சுமுகமாக மட்டுமன்றி அவர்களின் அந்நியோன்யத் தேவைகளைக் கூட அறிந்து அவற்றை நிவர்த்தி செய்யப் பாடுபடுபவரை மாணவர்கள் பெரிதும் விரும்புவர். அவர்களை தம் வாழ் நாள் பூராவும் மறக்கமாட்டார்கள்.*

*கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மாணவர்களின் உள நிலையை அறிதல் வேண்டும். மெல்லக் கற்கும் மாணவர்களையும் மீத்திரன் கூடிய மாணவர்களையும் சராசரி மாணவர்களையும் இனங்காணுதல் அவசியமாகின்றது. எனவே ஆசிரியர்கள் எவ்வகையான மாணவர்களுக்கும் பொருத்தமானவாறு நடு நிலையைக் கைக்கொள்பவராக காணப்பட வேண்டும். மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படும் அளவுக்கு கற்பித்தல் அமையக் கூடாது. மாணவர்கள் தவறு செய்தால் அவர்களை பரிகசித்து தண்டித்து கடுமையாக நடந்து கொள்வதை விட அவர்கள் மீது அனுதாபம் கொள்வதே சிறந்த வழியாகும். ஆசிரியர்கள் மாணவர்களை அன்பாகவும் பண்பாகவும் நடத்த வேண்டும்.*

*ஒரு முறை ஒரு நாட்டுப்புற மனிதர் பள்ளியில் நுழைந்து சிறுநீர் கழிக்க முற்பட்டார். இதனைக் கண்ட நபித் தோழர்கள் அவரைக் கண்டிக்க முனைந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி “அவரைக் கண்டிக்காது விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். அவரை அணுகி “இப்பள்ளிவாயல்கள் சிறுநீர் கழிப்பது அசுத்தப்படுத்துவது போன்ற கருமங்களுக்கு தக்க இடங்களல்ல; இவை அல்லாஹ்வை திக்ர் செய்வது தொழுவது போன்றவற்றிற்குரிய இடங்களாகும்” என்று கூறிவிட்டு ஒருவரை அழைத்து ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வந்து அவ்விடத்தில் ஊற்றுமாறு பணித்தார்கள். (முஸ்லிம்)*

*இங்கு நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரின் பிறந்து வளர்ந்த நாட்டுப்புற பின்னணியைக் கவனத்திற் கொண்டு அவரது தவறை அனுதாபத்துடன் நோக்கி மிக நாசுக்காக அவரை நெறிப்படுத்தினார்கள் என்பதை காண்கிறோம்.*

*மாணவர்களுக்கு அன்பு காட்டுவது அவர்களின் தவறுகளை அனுதாபத்துடன் நோக்கி நாசுக்காக திருத்துவதுடன் மாணவர்களின் திறமைகளை மெச்சுவதும் அவர்களின் நன்னடத்தைகளை பாராட்டுவதும் மிக முக்கியமானவைகளாகும். எப்போதும் ஆசிரியர்கள் திறமைகளை வெளிக்காட்டும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பையும் உற்சாகத்தையும் கொடுப்பவராக இருத்தல் வேண்டும்.*

*நபி (ஸல்) அவர்கள் அழகாக அல்-குர்ஆனை ஓதக் கூடியவராக இருந்த அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்களைப் பாராட்டினார்கள். (புஹாரி)*

*ஆற்றல்களையும் திறமைகளையும் பொருத்தமட்டில் மாணவர்கள் பல தரத்தினவர்களாக காணப்படுவார்கள். விளங்கும் தன்மை கிரகிக்கும் ஆற்றல் போன்றவற்றில் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நிற்பர். ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக கவனித்து தேவையான அறிவை அவசியமான அளவிலும் தரத்திலும் பொருத்தமான நேரத்திலும் வழங்கும் ஆளுமையுள்ளவரே சிறந்த ஆசிரியர் ஆவார்.*

*நபி (ஸல்) அவர்களிடம் பலர் வந்து தமக்கு உபதேசிக்குமாறு வேண்டிய போது அவர்கள் வித்தியாசமான உபதேசங்களை செய்தார்கள்.*

*ஒருவருக்கு “நீ அல்லாஹ்வை வணங்க வேண்டும் அவனுக்கு ஷிர்க் வைக்கக் கூடாது” மற்றொருவருக்கு “நீர் எங்கிருந்த போதிலும் அல்லாஹ்வை பயந்து கொள்வீராக” மேலும் ஒருவருக்கு “கோபப்படாதீர்” என அவர்களின் வேறுபாட்டிற்கேற்ப பதில்களை வழங்கினார்கள்.*

*நபி (ஸல்) அவர்கள் தனது கல்விப் போதனைகளின் போது தமது தோழர்களின் தனியாள் வேறுபாடுகளை கவனத்திற் கொண்டு அவர்களுக்கு கற்பித்துள்ளார்கள் என்பதை காணலாம்.*

*கற்பித்தல் பணியைச் செய்பவர் வெறுமனே பாடங்களை மட்டும் படித்துக் கொடுப்பவராக இருந்துவிடக்கூடாது. மாறாக மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்வது அவசியமாகும். ஏனெனில் வெறும் கல்வியை மட்டும் போதிப்பதால் அவர்கள் பரீட்சையில் தேர்ச்சி பெறலாம். ஆயினும் சமூகத்தில் சிறந்த ஒழுக்க விழுமியங்களுடன் நடந்துகொள்பவர்களாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள நற்பிரஜைகளாக திகழ்வார்களா? என்பது கேள்விக்குறியாகிவிடும்.*

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நான் நபியாக (ஆசிரியராக) அனுப்பப்பட்டதன் நோக்கம் (இவ்வுலகில்) நற்போதனைகளை (செயல் வடிவில்) பரிபூரணப்படுத்தவேயாகும்” (புஹாரி)*

*அதனால்தான் கற்பித்தல் பணியை ஒரு தொழில் என்பதற்கு பதிலாக ஆசிரியம் ஒரு சிறந்த நற்பணி ஈருலகத்திற்கும் பயனளிக்கும் சேவை என இஸ்லாம் கருதுகிறது.*

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” ஒரு மனிதர் மரணித்துவிட்டால் அவரை விட்டும் அவரது அமல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிடும். மூன்று விஷயங்களைத் தவிர அதில் ஒன்று அவரால் பிறருக்கு பயனளிக்கப்பட்ட கல்வி” (புஹாரி)*

ஆஷுரா தினம்,


ஆஷுரா தினத்தில் நடைபெற்ற அற்புத சம்பவங்கள் ​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

ஆஷூறா தினம் அதிவிஷேடங்களை உள்ளடக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள நாளாகும் இதனால்தான் இந்நாளை முஸ்லிம்கள் விஷேட நாளாக அமைத்துள்ளார்கள். ​ 1) இன்றுதான் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டினால் ஆதம் (அலைஹி வஸல்லம்) அவர்களின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்து அவர்களை ஏற்றுக் கொண்டான். ​ 2) இன்றுதான் நபி நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்பல் ஜூதி எனும் மலையில் தரை தட்டியது. இந்தக் கப்பல் தூபான் என்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயம் நூஹ் நபீ (அலைஹி வஸல்லம்) அவர்களால்தான் செய்யப்பட்டது. ஜூதி மலையில் தட்டிய கப்பலை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். ஜூதி மலை இன்னும் இருக்கிறது. இந்த மலையில் நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்கள் கட்டிய பள்ளிவாயல் ஒன்று இன்றும் அவ்வாறே இருக்கிறது. மனிதர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று அதைப் பார்த்து வருகிறார்கள். ​ 3) இன்றுதான் நபீ மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும், நபீ ஈஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும் பிறந்தார்கள். ​ 4) இன்றுதான் நும்றூத் எனும் சர்வாதிகாரி நபீ இப்றாஹீம் (அலைஹி வஸல்லம்) அவர்களை நெருப்புக் கிடங்கில் எறிந்தான். ​ 5) இன்றுதான் நபீ யூனுஸ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது. ​ 6) இன்றுதான் நபீ ஐயூப் (அலைஹி வஸல்லம்) அவர்களின் துன்பம் நீங்கியது. ​ 7) இன்றுதான் நபீ யஃகூப் (அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது மகன் யூசுப் (அலைஹி வஸல்லம்) அவர்களை இழந்ததால் இழந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள். ​ 8) இன்றுதான் பாழ் கிணற்றில் எறியப்பட்டிருந்த நபீ யூசுப் (அலைஹி வஸல்லம்) அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ​ 9) இன்றுதான் நபி ஈஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும் இத்ரீஸ் (அலைஹி வஸல்லம்) அவர்களும் வானத்தின் பக்கம் உயர்த்தப்பட்டார்கள். ​ 10) இன்றுதான்ந பீ யூனுஸ் (அலைஹி ஸ்ஸலாம்) அவர்களை மீனின் வயிற்றில் இருந்து காப்பாற்றிய தினம். ​ 11) இன்றுதான் நபீ தாஊத் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் பாவத்தை மன்னித்த தினம். ​ 12) இன்றுதான் நபீமார்களான மூஸா, ஹாறூன் அலைஹிமுஸ் ஸலாம் ஆகியோரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட தினம். ​ 13) இன்றுதான் நபீ ஹழிர் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் அறிவை அதிகப்படுத்திய தினம். ​ 14) இன்றுதான் சுவர்க்கம், நரகம் இரண்டையும் படைத்த தினம். ​ 15) இன்றுதான் தவ்றாத், சபூர், இன்ஜீல், குர்ஆன் முதலான வேதங்களை இறக்கி வைத்த தினம். ​ 16) ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்றாபீல், இஸ்றாயீல் (அலைஹிமுஸ் ஸலாம்) ஆகியோரை படைத்த தினம். ​ 17) இன்றுதான் அர்ஷ், குர்ஸீ, லவ்ஹு, கலம், முதலானவற்றை படைத்த தினம். ​ 18) இன்றுதான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் யாவையும் படைத்த தினம். ​ 19) இன்றுதான் வானங்கள், பூமி யாவையும் படைத்த தினம். ​ 20) இன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட நாள். ​ 21)இன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்த நாள். ​ 22)இன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியிலுள்ளவர்களுக்கு முதன் முதலில் இறங்கியது. ​ 23) இன்றுதான் நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கின் பின்பு முதன் முதலாக இப்பூமியில் சமையல் செய்யப்பட்டது பத்தாம் நாளான ஆஷூறா தினம்தான். நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்கள்தான் முதலில் சமையல் செய்தார்கள். ​ 24) இன்றுதான் சுலைமான் நபீ (அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முழுவுலக ஆட்சியும் வழங்கப்பட்டது. ​ 25) இன்றுதான் நபீ ஸகரிய்யா (அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலைஹி வஸல்லம்) மகனாகப் பிறந்தார்கள். ​ 26) இன்றுதான் நபீ மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்கள் பிர்அவ்னையும், அவனுடைய சூனியக்காரர்களையும் தோற்கடித்தார்கள். ​ 27) இன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கி இறந்தான். ​ 28) இன்றுதான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹு) ஷஹீதாக்கப்பட்டார்கள். ​ 29) இன்றுதான் அஹ்லுல்பைத் என்று அழைக்கப்படுகின்ற நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இனபந்துக்களில் அநேகர் ஷஹீதாக்கப்பட்டார்கள். ​ எனவே முஸ்லிம்கள் இந்நாளை சாதாரண நாளாக நினைத்து வீண் விளையாட்டில் கழிக்காமல் நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், ஸலவாத் ஓதுதல், திக்று செய்தல், மௌலித் ஓதுதல், ராதிப் மஜ்லிஸ்,பிக்று செய்தல், தியானம் செய்தல்,முறாகபஹ் முஷாஹதஹ் எனப்படும் பேரின்ப ஆத்மீக தியானம் செய்தல் போன்ற நல்ல விடயங்களைக் கொண்டு இந்நாளைச் சிறப்பித்தல் அவசியமாகும். ​​ ♣ ஆஷூறா தினத்தில் ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு தர்மம் செய்து, யாஸீன் ஓதுதல். ​ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களின் குடும்பத்தினல் அனேகர் ஈராக் நாட்டிலுள்ள கர்பலா எனுமிடத்தில் எதிரிகளால் ஷஹீதாக்கப்பட்டது இத்தினத்திலேயாகும். இதனால்தான் ஆஷூறா தினத்தில் ரொட்டி சுட்டு (ஹஸன், ஹுஸைன், அலி, பாதிமாஹ், அஹ்லுல் பைத்துகள்) ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் ஆத்மசாந்திக்காக யாஸீன் கத்தம் ஓதி வருகிறார்கள். இன்றுவரை இந்த வழக்கம் பல நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கையில் பல ஊர்களில் ஓதிவரப்படுகிறது . ​ இந்த வழக்கம் பல்லாண்டு காலமாக இருந்து வந்த போதினும் சமீபத்தில் தோன்றிய வழிகெட்ட கூட்டங்களிற் சில இவ்வழக்கம் பித்அத் என்றும், ஷிர்க் என்றும் மக்களிடையே பறை சாற்றி வருகின்றது. இத்தகைய கூட்டங்கள் பற்றிப் பொது மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ​​ ♣ ஆஷூறா தினத்தில் நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள் ​ இத்தகைய சிறப்புகளை பெற்ற ஆஷுராவுடைய நாளில் நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை பார்ப்போம். சில முஸ்தஹ்பான அமல்களை சூபியாக்கள், உலமா பெருமக்கள் கிதாபுகளில் எழுதியுள்ளார்கள். ​ 1) ஆஷுராவுடைய தினத்தில் குளிப்பது. இதனுடைய பலன் என்னவென்றால் அந்த வருடம் முழுவதும் நோய் நொம்பலங்கள் ஏற்படாது. ​ 2) கண்ணுக்கு சுர்மா இடுவது. இதனுடைய பலன் கண் நோய் வராது. ​ 3) ஸதகா செய்வது. ஏனென்றால் ஹதீஸில் வருகிறது. எவரொருவர் ஒரு திர்ஹம் ஸதகா செய்தால் எழுநூறு ஆயிரம் திர்ஹம் ஸதகா செய்த நன்மை கிடைக்கும். ​ 4) அனாதைகளின் மீது இரக்கம் காட்டுவது. யாரொருவன் ஆஷுராவுடைய தினத்தில் அநாதைக்கு இரக்கம் காட்டுவானோ அந்த அனாதையின் ஒவ்வொரு தலைமுடியின் அளவுக்கு ஸவாபு கிடைக்கும். ​ 5) நோயாளிகளை சந்திப்பது. நோயாளிகளை சந்திப்பதனால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும். ​ 6) அதிகமான நபிலான தொழுகைகளை தொழுந்து கொள்ளுங்கள். இத்தினத்தில் நான்கு றக்அத்துக்கள் தொழுவது ஒவ்வொரு றக்அத்திலும் பாத்திஹா ஸூறத் ஒரு தரமும் ஸூறதுல் இஹ்லாஸ் பதினொரு தரமும் ஓதி தொழுகையை முடித்தால்அவனது ஐம்பது வருட பாவங்களைஇறைவன் மன்னிப்பதுடன் ஒளியினால் ஒரு மின்பர் மேடையும் அமைக்கின்றான். ​ 7) உறவை துண்டித்தவர்களுடன் சேர்ந்து நடக்க வேண்டும். ​ 8) குடும்பத்தார்களுக்கு செலவழிப்பது. ​ 9) துஆ கேட்பது மிகுதியாக பாவ மன்னிப்பு கேட்பது. ​ 10) நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பெயரால் மௌலித் ஓதுதல், அந்த அடிப்படையில் ஆஷுறா தினமும், ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஷஹாததும் ஹிஜ்ரி 61ம் ஆண்டு ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் (ஷஹாதத்) வீர மரணமடைந்ததாக இஸ்லாமிய வரலாற்று நூல்களில் இமாம்கள் பதிவு செய்துள்ளார்கள். நூல்: தாரீக் தபரீ-5 /400, அல் பிதாயா வந் நிஹாயா-8/215

பிரபல்யமான பதிவுகள்