வரலாற்றில் ஒரு நாள்
நபிகளாரின் உடலை தோண்டி எடுக்க முயற்சித்த கிறிஸ்தவர்கள்
ஹிஜ்ரி 557 ம் ஆண்டு.அப்பாஸிய கிலாபத் பலஹீனமடைந்திருந்த காலக்கட்டம்.உலகில் கிருஸ்துவ பலம் ஓங்கிருந்தது.இன்றைய காலம் போலவே அன்றும் இஸ்லாமிய நாடுகள் பிரிந்துகிடந்தது.
அப்போது கிருஸ்துவர்கள்- மதீனாவுக்கு மேற்கத்தியர்களின் தோற்றத்தில் இரண்டு மனிதர்களை அனுப்பி வைத்தனர்.
இவர்களின் நோக்கம் பூமானின் உடலை தோண்டியெடுத்து அதை கிருஸ்துவர்களிடம் ஒப்படைப்பது.
அவ்விருவரும் பெருமானின் முபாரக்கான அறைக்கு அருகே தங்கினர். இவர்கள் இறையச்சமுடையவராகவும்,சீர்திருத்தவாதிகளாகவும்,ஏழைகளுக்கு உதவி செய்பவர்களாகவும் தங்களை காட்டிக்கொள்வதுடன்,தவறாமல் ஜன்னதுல் பகீஃயான முஸ்லிம்களின் பொது கப்ருஸ்தானுக்கும் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்லா ஷரீபுக்கும் ஸியாரத் செய்து வந்தனர்.
அதன் மூலம் தங்களின் திட்டத்தை நிறைவேற்ற நோட்டமிட்டனர்.
இவர்களின் வெளித்தோற்றத்தைப்பார்த்து மக்களும் இவர்களை நம்பினர்.
இவர்கள் தங்களின் திட்டத்தை செயல்படுத்தும் வேலையில் இறங்கினர்,இவர்கள் தங்கிருந்த வீட்டில் பெரும் குழிதோண்டி அதன்வழியாக நாயகத்தின் ரவ்லாவை அடைய முயற்சித்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக நீண்டகாலம் யாருக்கும் சந்தேகம் வராமல் தோண்டி-இறுதியில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை அடைந்து விட்டனர்.
இது ஒரு புறமிருக்க-
மறு பக்கத்தில்: சிரியாவில் இஸ்லாமிய அரசரான நூருத்தீன் சன்கி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் தங்களின் கனவில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கண்டார்கள்.
அதில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இரு திருடர்களின் பக்கம் சுட்டிக்காட்டி இவர்களிடமிருந்து தன் உடலை பாதுகாக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள்.
திடுக்கிட்டு விழித்த சுல்தான் அவர்கள்-
ஒழுச்செய்து,தொழுதுவிட்டு மீண்டும் தூங்கினார்கள்.அப்போதும் அதே கனவை கண்டார்கள்.இப்படி மூன்று தடவை கண்டு இக்கனவில் ஏதோ உண்மை இருப்பதாக அறிந்து தன் அமைச்சர் ஜமாலுத்தீன் அவர்களிடம் தான் கன்ட கனவை பற்றி கூறினார்கள்.
அதைக்கேட்ட அமைச்சர் ஜமாலுத்தீன் அவர்கள்-கலீபா அவர்களே! மதீனாவில் ஏதோ ஆபத்து சூழ்ந்திருப்பதாக தெரிகிறது,எனவே தாங்கள் இரகசியபயணமாக யாரிடமும் கூறாமல் உடனடியாக மதீனா புறப்படுங்கள்.என்றார்.
இருபது நபர்களுடன் நிறையபொருள்களுடன் சுல்தான் மதீனா வந்து சேர்ந்தார். மஸ்ஜித் நபவியில் நுழைந்து,ரவ்லாஷரீபில் தொழுது விட்டு,நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அன்னாரின் அருமை தோழர்களான அபூபக்கர்,உமர் ரலியல்லாஹுத் தாஆலா அன்ஹு ஆகியோருக்கும் சலாம் உரைத்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்கள்.
இப்போது என்ன செய்வது?
எப்படி அவ்விருவரை கண்டுபிடிப்பது?
எதுவும் தெரியவில்லை-அப்போது அமைச்சர் சுல்தானிடம்,கனவில் நீங்கள் கண்ட அவ்விருவரை நேரில் கண்டால் அடையாளம் கண்டு கொள்வீர்களா?என கேட்க-ஆம் என்று சுல்தான் பதில் கூறினார்.
உடனே, அரசர் தன்னுடன் நிறையபொருள்களை கொண்டுவந்துள்ளார் ஆகவே தாங்கள் வந்து அதை பெற்றுச்செல்லுங்கள் என மக்களுக்கு அமைச்சர் அறிவிப்புச்செய்தார்.
மக்கள் எல்லோரும் வந்தனர்,ஆனால் சுல்தான் எதிர்பார்த்த அவ்விருவர் வரவில்லை.
வேறுயாரும் மீதமிருக்கிறார்களா?என கேட்க, மக்கள் இல்லை என்று கூறினர்.
நன்றாக யோசித்துச்சொல்லுங்கள் என சுல்தான் சொன்னபோது-மேற்குலகைச்சேர்ந்த இரு ஸாலிஹீன்கள் வரவில்லை.அவர்கள் யாரிடமும் எதுவும் தேவையாக மாட்டார்கள்
.என்றபோது,அரசர் சந்தோஷப்பட்டார்.
உடனே அவ்விருவரை தன்னிடம் அழைத்துவரும்படி உத்தரவிட்டார்.
அவ்விருவரும் வந்தபோது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் சுட்டிக்காட்டிய அதே இருவர்கள் தான்.
நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்?அரசர் கேட்டார்.
நாங்கள் மேற்குலக நாடுகளிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்தோம்,பின்னர் மதீனாவந்த நாங்கள் இவ்வாண்டு முழுவதும் நாயகத்தின் அருகில் தங்கிவிடலாம் என்று முடிவு செய்து தங்குகிறோம்.என்றனர்.
இவர்கள் இருவரின் வீடு எங்கே இருக்கிறது?
என சுல்தான் அவர்கள் கேட்க மக்கள் அதைக்காட்டினர்,வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது-உள்ளே நிறைய பொருட்கள்,இரண்டு குர்ஆன்,நிறையநூட்கள் இருந்தன.
அங்கே ஒரு இடத்தில் பாய் விரிக்கப்பட்டிருந்தது,அதற்கு கீழே ஒரு பலகை போடப்பட்டிருந்தது.அந்த இடத்தில் சுல்தான் அவர்களுக்கு சந்தேகம் வரவே அதை எடுத்துப்பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.
காரணம், பலகைக்கு கீழே நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அறையின் பக்கமாக
ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.
அதைக்கண்ட மக்களும் கடும் அதிர்ச்சியுற்றனர்.பின்னர் அவ்விருவரையும் கொண்டு வந்து கடுமையாக விசாரிக்கப்பட்டபோது-
தாங்கள் கிருஸ்துவர்கள் என்றும், மேற்கத்திய ஹாஜிகளுடன் தங்களை கிருஸ்துவர்கள் அதிகமான பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர் எனவும், முஹம்மதின் உடலை திருடி அங்கு கொண்டு செல்லவேண்டும் என தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் கூறினர்.
அதை செவியுற்ற சுல்தான் நூருத்தீன் அவர்கள் கடுமையாக அழுதார்கள்.
பின்னர் அவ்விருவரின் தலையை நாயகத்தின் அறைக்கு அருகே துண்டிக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள்.
அவ்வாரே நிறைவேற்றப்பட்டது.
பின்பு சுல்தானின் உத்தரவுக்கிணங்க-நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித ரவ்லாவை சுற்றி பள்ளமாக தோண்டி சுற்றிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றி ஒரு பாதுகாப்புச்சுவர் அமைத்தனர்.
அல்லாஹுத்தஆலா சுல்தான் நூருத்தீன் ரஹ்மத்துல்லாஹி அவர்களின் மண்ணரையை வெளிச்சமாக்கிவைப்பானாக,
அதே போல் இன்றும் யுதர்களின் கை பொம்மைகள் நபியின் உடலை இடம் மாற்றுவதற்கும் இடிப்பதற்கும் துடிக்கிறார்கள் நிச்சயம் அல்லாஹ் அவர்களை நாஷப்படுத்தி விடுவான்.