роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЮாропிро▒ு, рокிрок்ро░ро╡ро░ி 24, 2019

роТро░ு роЖро▓ிрооிрой் рооройроХ்роХро╡ро▓ை

*என் மகனை ஆலிமாக்க ஆசை ஆனால்...*

சமூக மேம்ப்பாட்டிற்காகவும் மார்க்கத்திற்காகவும் இந்த நாட்டிற்காகவும் தன்னலமற்ற சேவையை வழங்கியவர்கள் உலமா பெருமக்கள் என்பது வரலாற்று உண்மை.

பெரும்பாலான உலமா பெருமக்கள் காலங்காலமாக மிகக்குறைந்த வருமானத்தில் பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை..

பள்ளிவாசலில் இமாம், அரபுக்கல்லூரியில் ஆசிரியர் பணி இவ்விரண்டுமே இவர்களின் கற்றலின் மூலம்  செய்யும் முக்கியப்பணி.

இந்தப் பணிகூட நிரந்தரமானதா? என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு இமாம் எந்த நிமடம் வேண்டுமென்றாலும் நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்படலாம். அவர் 50 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினாலும் சரிதான். எவரும் எதையும் கேட்க முடியாது. பிள்ளைகளின் படிப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து வருத்தப்பட இங்கே எவருமில்லை.

*எனவே ...*
*மார்க்க கல்வியை கற்ற ஆலிம்களின் வாழ்க்கை பல்வேறு நெருக்கடிகளுக்கும், சிரமங்களுக்கும் நிர்பந்தங்களுக்கும் உள்ளாகி இருப்பதன் விளைவாக சமுதாயத்தில் மார்க்க கல்வியைப் படிக்கும் ஆர்வம் பெரிதும் குறைந்து விட்டது. இன்று அரபி கல்லூரிகள் முதல் மக்தப் மதரஸா வரை மாணவர்களின் வருகை குறைந்து கொண்டே வருவதுடன் குழந்தைகளை ஆலிம்களாக்க சாதாரண பெற்றோர்கள் மட்டுமல்ல.. ஆலிம்களும் தன் குழந்தைகளை ஆலிமாக்க அச்சப்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும்..*

ஒற்றைக் கட்டில் போட்டுக்கூட தூங்க முடியாத ஒடுக்கமான அறைகளை ஒதுக்கி விட்டு தங்களின் இல்லங்களில் இரட்டை மெத்தையில் சொகுசாக துங்கும் நபர்களுக்கு அந்த நிர்வாகிகளுக்கு ஆலிம்களின் அவலநிலை புரிவதில்லை.

பல லட்சம், கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக பள்ளிவாசல்கள், மினாராக்கள்  கட்டப்படும். ஆனால் அதில் பணிபுரியும் இமாம்களுக்கு முறையான ஊதியம் வழங்க எந்த வழி வகையும் செய்யப்படுவதில்லை.

சின்ன சின்ன
விசயங்களுக்காக ஆலிம்களை அவமானப்படுத்தும் நிலை


இன்றைக்கு பெரும்பாலான பள்ளிவாசல்களில் இமாம்கள் தங்கள் உரைகளில் மார்க்கத்தை உள்ளது உள்ளபடியே சொல்ல முடிவதில்லை. எல்லா துறைகளுக்கும் மார்க்கம் வழிகாட்டுகிறது. ஆனால் எல்லாவற்றையும் சுதந்திரமாகப் பேச நிர்வாகம் அனுமதிப்பதில்லை. மீறி பேசினால் அடுத்த வினாடி அவரது வேலை காலி.

முதர்ரிஸ்களாக – இமாம்களாக, முஅல்லிம்களாக பணியாற்றும் தகுதியுடன் மட்டுமே உலமாக்களை உருவாக்கி, அல்லாஹ்விற்காக செய்யும் மார்க்க பணிகளுக்கு ஊதியம் கேட்கவோ – எதிர்பார்க்கவோ கூடாது எனப்படுவதால், நாட்டின் கடுமையான விலைவாசி உயர்வால் – குடிக்கும் தண்ணீருக்கும் சுவாசிக்கும் நல்ல காற்றுக்கும் கூட காசு கொடுக்க வேண்டிய இன்றைய காலகட்டத்தில், உலமாக்களின் ஊதிய உயர்வைப் பற்றி பேசுவதும், சிந்திப்பதும் ஒரு பாவச் செயலாகவே பார்க்கப்படுகிறது.

இதனால் ஆலிம்கள் தங்களின் குடும்பம் – குழந்தைகளின் கல்வி – மருத்துவம் – திருமணம் போன்ற எல்லா அடிப்படை காரியங்களுக்கும் சமுதாய மக்களிடமே தேவையாக்கப்படுவதுடன் ரமழான் கால அன்பளிப்பு – ஹதியாக்களை – நம்பி நிற்க வேண்டியுள்ளது.

*கடும் நோய்களால் அறுவை சிகிச்சைகள். திடீர் உயிரிழப்பு , மகளின் திருமணம்  போன்றவைகளால் பாதிக்கப்படும், ஆலிம்கள் குடும்பங்கள் ஜும்ஆ வசூலோடு லெட்டர் பேடுகளை கொடுத்து பரிதாபமாக விடப்படுகின்றனர். .*

இவர்களின் விஷயத்தில் சில நிர்வாகங்கள் பெருந்தன்மையாக இருப்பது ஆறுதலாகும்.

சமூகத்தின் சுக – துக்க காரியங்களுக்கு துஆ ஓத ஆலிம்களை முன்னிலைப்படுத்தும் சமுதாயத்தில் – வாழ்வாதாரா நிலையில் மிகவும் பின்தங்கியே வைக்கப்பட்டுள்ளார்கள்.

*ஆனால் வெளிப்படையாக உலமாக்களிடம் காணும் – மதிப்பு – மரியாதை – பிரபல்யம் – கசங்காத வெள்ளை உடை போன்ற மாயைகளால் உலமாக்களுடைய வாழ்வின் யதார்த்தங்களை அறிய இந்த சமுதாயம் மறந்து விட்டது .*

பேச்சாற்றல் – எழுத்தாற்றலால் பிரபலமடைந்தவர்கள், அல்லது நகரங்களின் முக்கிய புள்ளிகளில் பணிபுரியும் மிகச் சிலருக்கு அமையும் தேவைக்கேற்ற வசதி வாய்ப்புகளை போல ஒட்டுமொத்த ஆலிம்களின் நிலவரங்கள் இல்லவே இல்லை ... என்பது மறுக்க முடியாத உண்மை ..

*இறையச்சத்தை அடிப்படையாகக்கொண்ட நிர்வாகம்...*

*விருப்பு வெறுப்பின்றி மார்க்கத்தை உரக்க சொல்வதில் தடையேதும் இல்லாத நிலையில் ஆலிம்கள்...*

*எவரையும் எதிர்பார்க்காமல் தன்மானத்தோடு பணியாற்றுகின்ற தன்னிறைவு பெற்ற நிலை..*

*மேலும் அன்றைய இமாம்கள் நாட்டை ஆளும் கவர்னர்களாக ஜனாதிபதிகளாக இருந்தார்கள் ... என்கிற வரலாறு வெறும் பேச்சுக்காக மட்டுமே  இல்லாமல் சமூகம் அதை புரிந்து கொண்டு எப்போது இமாம்களை தங்களின் தலைவர்களாக பார்க்க தொடங்குகிறார்களோ அப்போதுதான் ஒவ்வொரு ஆலிமும் கூட தன் மகனை ஆலிமாக்க வேண்டும் என ஆசைப்படுவார்...

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்