роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЮாропிро▒ு, роЖроХро╕்роЯ் 26, 2018

роЗро╕்ро▓ாроо் роХூро▒ுроо் роЖроЯ்роЪி роЕродிроХாро░роо்,

  இன்று நாம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கிகொண்டிருக்கிறோம். ஏனெனில் இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடக்கயிருக்கிறது. அதில் மதவெறிகொண்ட பி.ஜே.பி. வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக நரபலி மோடி வந்துவிட்டால் இந்தியா முழுவதும் இன்னொரு குஜராத்தாக மாறிவிடுமோ என்றபயம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கிறது .இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன. அதற்கு இஸ்லாம் என்ன வழி கூறுது என்பதை பார்ப்போம். பிறரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டிய இஸ்லாமிய சமூகம் இன்று சர்வதேச அளவில் அச்சப்பட்டு வாழக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எந்த வழியிலாவது இஸ்லாமியர்களை அச்சுருத்திக்கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய எதிரிகள். நாமும் பயந்துவாழ்ந்துகொண்டிருக்கிறோம் .நாம் அஞ்ச வேண்டியவர்களா. அஞ்ச வேண்டிய சமூகத்தை சார்ந்தவரகளா. நம்முன்னோர்களின் இரத்தனாலமெல்லாம் வீரம் நிறம்பியிருந்த பரம்பரைக்கு சொந்தக்காரர்கள் இல்லையா. நம்மிடம் அந்த வீரம் எங்கே. கொஞ்சம் வரலாறை திரும்பி பாருங்கள்.வைர வரிகளால் பொறிக்கப்பட்டிருக்கும். அஞ்சா நெஞ்சர் ஹஜ்ரத் அலி(ரலி). அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஸா (ரலி). அல்லாஹ்வின் போர்வாள் காலித் இப்னு வலீத்(ரலி) போன்றோர்கள் வார்த்தெடுக்கப்பட்ட தங்கங்கள். இன்று நம்மிடம் அந்த பெயர் இருக்கிறது. ஆனால் அவர்ளின் வீரம் எங்கே.அந்த வரலாறு திரும்ப வேண்டாமா. அன்று அவர்கள் சிறுபான்மையினராக இருந்து பெரும் வல்லரசுகளான ரோமாபுரி. பாரசீகத்தை கூட ஆச்சரியப்பட வைக்கவில்லையா.அவர்களால் எப்படி முடிந்தது அதனுடைய இரகசியம்தான் என்ன. இரண்டு காரணத்தை சொல்லலாம். (1பேணுதலான அவர்களின் வாழ்க்கை وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ  24:55.  உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “ وهو على أنطاكية لما قدمت منهزمة الروم‏:‏ ويلكم أخبروني عن هؤلاء القوم الذين يقاتلونكم أليسوا بشرا مثلكم‏؟‏ قالوا‏:‏ بلى‏.‏ قال‏:‏ فأنتم أكثر أم هم‏؟‏ قالوا‏:‏ بل نحن أكثر منهم أضعافاً في كل موطن‏.‏ قال‏:‏ فما بالكم تنهزمون‏؟‏ فقال شيخ من عظمائهم‏:‏ من أجل أنهم يقومون الليل ويصومون النهار، ويوفون بالعهد، ويأمرون بالمعروف، وينهون عن المنكر، ويتناصفون بينهم، ومن أجل أنا نشرب الخمر، ونزني، ونركب الحرام، وننقض العهد، ونغصب، ونظلم، ونأمر بالسخط وننهى عما يرضي الله، ونفسد في الأرض‏.‏ فقال‏:‏ أنت صدقتني‏.‏ ‏ ஹிஜ்ரி  15ம் ஆண்டு ஹஜ்ரத் உமர்(ரலி)அவர்களின் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற யர்மூக் போர்களத்தில் ரோமர்கள் தோற்று அன் தாக்கியா போகும்போது அவர்களின் அரசர் ஹிர்கள் கேட்பான் உங்களைப்போன்று அவர்களும் மனிதர்கள்தானே அவர்களை விட நீங்கள் அதிகமானவர்கள் இல்லையா அவ்வாறிருந்தும் நீங்கள் தோற்று வருகிறீர்கள் உங்கள் தோழ்விக்கு காரணம் என்ன என்று கேட்கும்போது அவர்களில் ஒரு வயோதிகர் சொல்வார்.அந்த முஸ்லிம்கள் இரவு நின்று வணங்குகிறார்கள்.பகலில் நோன்பு நோற்கிறார்கள். நன்மையை ஏவி.தீமையை தடுக்கிறார்கள்.ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறார்கள்.ஆனால் நாம் மது அருந்துகிறோம்.விபச்சாரம் செய்கிறோம்.ஒப்பந்தத்தை மீறுகிறோம் அதுதான் காரணம் இதனைக் கேட்ட அரசன் சொல்வான் நீங்கள் சொல்வது உண்மை. அவர்களுக்கு வெற்றி கிடைத்தது அவர்களின் பேணுதலான வாழ்கையினால்.நூல்.பிதாயா வந்நிஹாயா.பாகம்.7  பக்கம்.20  எனவே நம்முடைய முன்னோர்களின் அச்சமில்லாத வாழ்க்கைக்கு முதல் காரணமாக இருந்தது பேணுதல். அடுத்தது 2)துஆ  أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ ۗ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ 27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும் அல்லாஹ் துஆ எனும் ஆயுதத்தை நமக்கு தந்திருக்கிறான் . நாம் இறையச்சத்தோடு இறைவனிடம் கையேந்தினால் எதிரிகள் ஆட்சியில் இருக்கமாட்டார்கள். இறைவன் நாடினால் ஆளே இருக்கமாட்டார்கள். எதிரிகளின் அராஜகம் வரம்புகடக்கும்போது அவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிராத்தனை செய்வது நபிமார்கள் .இன்னும் நம்முன்னோர்களின் நடைமுறையாக இருந்திருக்கின்றது. பிர் அவ்னின் தொல்லை அதிகரித்தபோது மூஸா நபி  கேட்ட துஆவை அல்லாஹ் கூறுகிறான்.  وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آَتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்..10.88 பத்ர் போரின் வெற்றியின் பின்னனியில் நபியின் துஆ  இருப்பதை நாம் மறக்கமுடியாது. அலி(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். பத்ர் போர் நடைபெற்றபோது யுத்தகளத்தில் இருந்த நான் மூன்று முறை நபியின் கூடாரத்துக்கு சென்றேன்.நபியவர்கள் ஸஜ்தாவில் இருந்து கொண்டு யா ஹய்யு யா கய்யூம் என்று துஆ செய்ததை நான் கண்டேன். அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். நூல். பைஹகீ.நஸயி. நபியின் துஆவின் காரணமாக பத்ரின் வெற்றி கிடைத்தது மட்டுமல்ல. யுத்தம் தொடங்கும் முன்பாகவே வெற்றியின் நம்பிக்கையும் சொல்லப்பட்டது. எதிரிகளில் யார் கொல்லப்படுவார். எந்த இடத்தில் கொல்லப்படுவார் என்பதும் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.  : فندب رسول الله صلى الله عليه وسلم الناس فانطلقوا حتى نزلوا بدرا فقال رسول الله صلى الله عليه وسلم : " هذا مصرع فلان " ويضع يده على الأرض ههنا وههنا قا ل : فما ماط أحدهم عن موضع يد رسول الله صلى الله عليه وسلم . رواه مسلم அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நபி(ஸல்)அவர்கள் போர் தொடங்கும்முன் எங்களிடம் சில குறிப்பிட்ட இடங்களில் கைவைத்து இது இவர் கொல்லப்படும் இடம் என்றார்கள். எதிரிகளில் கொல்லப்பட்ட எவரும் நபி(ஸல்)அவர்கள் கை வைத்து காட்டிய இடத்தை கொஞ்சம் கூட கடக்கவில்லை. நூல்.முஸ்லிம்.மிஸ்காத். பக்கம்.531 நாம் இறைவனிடம் கையேந்தினால் கள்ளரசும்.வல்லரசும் கவிழும். நல்லரசு மட்டுமே நிலைக்கும்.  سعيد بن المسيب قال : كتب رسول الله صلى الله عليه وسلم إلى كسرى وقيصر والنجاشي أما بعد (تعالوا إلى كلمة سواء بيننا وبينكم أن لا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فان تولوا فقولوا أشهدوا بأنا مسلمون) قال سعيد : فمزق كسرى الكتاب ولم ينظر فيه فقال النبي صلى الله عليه وسلم : مزق ومزقت أمته ، ஹிஜ்ரி 6-ம் ஆண்டு நபி அவர்கள் எல்லா நாட்டின் மன்னர்களுக்கும் தூதுவர்கள் மூலம் இஸ்லாமிய அழைப்பு கடிதத்தை அனுப்பிய போது வல்லரசு நாடாக இருந்தபாரசீகத்தின் கிஸ்ரா மன்னனுக்கும் கடிதத்தை       شجاع بن وهبஎன்ற ஸஹாபியின். இன்னொரு அறிவிப்பின் படி عبدالرحمان بن حذافة(رضى)அவர்களின் மூலம் கொடுத்தனிப்பினார்கள். வாங்கிய கடிதத்தை கிழித்து போட்டான். இதனைக் கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள் .அல்லாஹ் கிஸ்ராவின் ஆட்சியை கிழித்து எறிவானாக. என்று சொன்னார்கள்.நபியின் துஆவை அல்லாஹ் செயல் படுத்தினான்.பதவி வெறிகொண்ட அவனுடைய மகனான சீரவைஹி என்பவன் தனது தந்தையையே கொலைசெய்து விட்டு ஆட்சியில் அமர்ந்தான். அதற்கு பிறகு ஒரு நாள் அரண்மனையில் உள்ள மருந்துகள் வைக்கப்படும் இடத்தில்  ஆண்மைக்கு பலன் தரும் என்று எழுதப்பட்டிருந்த ஒரு பாத்திரத்தை கண்டான். அதில் இருந்ததோ கொடிய விஷம் .அது அவனின் தந்தை கிஸ்ரா தன்னுடைய ஆட்சியை யாராவது கைபற்றினால் அவர்கள் விஷத்தால் சாகவேண்டும் என்று திட்டமிட்டு வைக்கப்பட்ட விஷம். அதை அறியாமல் அதை சாப்பிட்டு இறந்தான்.இது நடந்தது ஆறு மாதத்திற்குல். இவர்களுக்கு எதிராக நபி கேட்ட துஆ. அவர்களையும் அவர்களின் ஆட்சியையும் அழித்தது. பிறகு ஹஜ்ரத் உமர்(ரலி) காலத்தில் பாரசீகம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. `இரத்தமின்றி சப்தமின்றி வெற்றி பெரும்கூட்டம் நாம் மட்டுமே َنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَمِعْتُمْ بِمَدِينَةٍ جَانِبٌ مِنْهَا فِي الْبَرِّ وَجَانِبٌ مِنْهَا فِي الْبَحْرِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَغْزُوَهَا سَبْعُونَ أَلْفًا مِنْ بَنِي إِسْحَقَ فَإِذَا جَاءُوهَا نَزَلُوا فَلَمْ يُقَاتِلُوا بِسِلَاحٍ وَلَمْ يَرْمُوا بِسَهْمٍ قَالُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ أَحَدُ جَانِبَيْهَا قَالَ ثَوْرٌ لَا أَعْلَمُهُ إِلَّا قَالَ الَّذِي فِي الْبَحْرِ ثُمَّ يَقُولُوا الثَّانِيَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيَسْقُطُ جَانِبُهَا الْآخَرُ ثُمَّ يَقُولُوا الثَّالِثَةَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ فَيُفَرَّجُ لَهُمْ فَيَدْخُلُوهَا فَيَغْنَمُوا فَبَيْنَمَا هُمْ يَقْتَسِمُونَ الْمَغَانِمَ إِذْ جَاءَهُمْ الصَّرِيخُ فَقَالَ إِنَّ الدَّجَّالَ قَدْ خَرَجَ فَيَتْرُكُونَ كُلَّ شَيْءٍ وَيَرْجِعُونَ   அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள், "ஒரு  பகுதி  கரையிலும்  மற்றொரு  பகுதி  கடலிலும்  அமைந்துள்ள  ஒரு நகரத்தைப்  பற்றி  நீங்கள்  கேள்விப்பட்டிருக்கிறீ ர்களா?'' என்று  கேட்டார்கள். மக்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதேர!'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், "இஸ்ஹாக்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் எழுபதாயிரம் பேர் அந்நகரத்தின்  மீது  போர்  தொடுக்காத  வரை  யுக  முடிவுநாள்  வராது.  அவர்கள்  வந்து (அந்நகரத்தில்)  இறங்கும்போது  அவர்கள்  எந்த  ஆயுதத்தைக்  கொண்டும்  சண்டையிட மாட்டார்கள்; அம்பெய்யவுமாட்டார்கள்.  அவர்கள்"லாயிலாஹ  இல்லல்லாஹு  வல்லாஹு அக்பர்' (அல்லாஹ்வைத்  தவிர  வேறு  இறைவனில்லை; அல்லாஹ்  மிகப்  பெரியவன்) என்றே கூறுவார்கள். உடேன அந்நகரத்தில் கடலிலுள்ள ஒரு பகுதி வீ ழ்ந்துவிடும். பிறகு  அவர்கள்  இரண்டாவது முறை"லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்று கூறுவார்கள்.  உடேன  அதன்  மறுபகுதி  வீ ழ்ந்துவிடும்.  பிறகு  அவர்கள்  மூன்றாவது  முறை "லாயிலாஹ  இல்லல்லாஹு  வல்லாஹு  அக்பர்'  என்று  கூறுவார்கள்.  உடனே  அவர்களுக்கு  வழி  திறக்கும்.  அதில்  நுழைந்து  போர்ச்செல்வங்களைத்  திரட்டுவார்கள்.  அவர்கள்  போர்ச் செல்வங்கைளப்  பங்கிட்டுக்கொண்டிருக்கும்போது  ஒருவர்  வந்து  உரத்த  குரலில், "தஜ்ஜால் புறப்பட்டுவிட்டான்'' என்று  அறிவிப்பார்.  உடனே  அவர்கள்  எல்லாவற்றையும்  விட்டுவிட்டு (தஜ்ஜாலை நோக்கி) திரும்பிச் செல்வார்கள் திக்ர் மற்றும் துஆவின் மூலம் நாவைமட்டும் பயன் படுத்தி எதிரிகளை விரட்டும் ஒரே சமுதாயம் முஸ்லிம்கள் மட்டும் தான். எல்லாவற்றுக்கும் மேலாக நம்மையும் நமது சந்ததிகளையும் கியாமத்வரை எதிரிகளை விட்டும் பாதுகாக்க நபியின் துஆ கேடயமாக அமையும். عائشة قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " اللهم من ولي من أمر أمتي شيئا فشق عليهم فاشقق عليه ومن ولي من أمر أمتي شيئا فرفق بهم فارفق به " . رواه مسلم எனது உம்மத்தின் காரியங்களில் ஏதேனும் ஒரு காரியத்திற்கு பொறுப்பேற்று அவர்களிடம் கடினமாக நடந்தால் இறைவா நீயும் அவரிடம் கடினமாக நடந்து கொள். என் சமுதாய பெறுமக்களே நாம் எந்த அச்சமும் .கலக்கமும்கொள்ள  வேண்டாம். வாழ்க்கையை அழிக்கும் போர்களத்திலும் சரி.வாக்களிக்கும் தேர்தல்களத்திலும் சரி வெற்றி நமதே.நாம் பத்ரின் முஸ்லிம்களாக இருந்தால். உத்தமர் உமரின் வாரிசாக இருந்தால்.அடலேறு அலியின் வாரிசாகவும் இருந்தால். நமது காலத்தின் அபூஜஹ்லுக்கும். அபூலஹபிற்கும் அவர்களின் முன்னோர்களின் நிலைதான் ஏற்படும் என்பது நிச்சயம். வல்ல அல்லாஹ் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து நமக்கு அச்சமற்ற வாழ்வை தருவானாக ஆமீன்…

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்