நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, பிப்ரவரி 14, 2025

ஈஸால் தவாப்- கப்ரு ஜியாரத்,


ஈஸால் தவாப்- கப்ரு ஜியாரத்


நம்மை விட்டும் பிரிந்த சென்ற நம்முடைய மூதாதையர்களுக்காக நாம் செய்யும் நற்கருமங்கள் இரு வகை
1. அவர்கள் வஸிய்யத்  செய்து விட்டுச் சென்றதால் நாம் கட்டாயம் நாம் செய்ய வேண்டியவை 2. அவர்கள் வஸிய்யத்  செய்யாமல் அவர்களுக்காக நாமே விரும்பிச் செய்யும்  நல்லறங்கள்.  
மற்றொரு கண்ணோட்டத்தில் மவ்த்தாக்களுக்கு நாம் செய்யும் நற்கருமங்களில் இரு பிரிவுகள் உள்ளன. 1. பகரம் இல்லாமல் நேரடியாக அவற்றை அவர்களின் சார்பாக நாம் நிறைவேற்ற முடியும். ஹஜ், உம்ரா, குர்பானி ஆகியவை இதற்கு உதாரணம். 
 இறந்தவர்களுக்காக  நாம் ஹஜ், உம்ரா, குர்பானி போன்றவற்றை நிறைவேற்ற முடியும். 
2. அவர்களின் சார்பாக நாம் நிறைவேற்ற முடியாது ஆனால் அதற்குப் பகரமாக ஃபித்யா கொடுக்க முடியும். தொழுகை, நோன்பு ஆகியவை இதற்கு உதாரணம். இறந்தவருக்காக தொழுகை, நோன்பு ஆகியவை நாம் நிறைவேற்ற முடியாது. ஃபித்யா தரலாம்.
இறந்தவர் வஸிய்யத் செய்திருந்தால் கட்டாயம் செய்ய வேண்டும். அவ்வாறு வசிய்யத் செய்யா விட்டாலும் வாரிசுகள் செய்யலாம். 
மவ்த்தானவர்களின் சார்பில் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்
عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ حَجَّ عَنْ وَالِدَيْهِ بَعْدَ وَفَاتِهِمَا كُتِبَ لَهُ عِتْقٌ مِنَ النَّارِ، وَكَانَ لِلْمَحْجُوجِ عَنْهُمَا أَجْرُ حَجَّةٍ تَامَّةٍ مِنْ غَيْرِ أَنْ يُنْقَصَ مِنْ أُجُورِهِمَا شَيْئٌ "(بيهقي
இறந்து விட்ட பெற்றோருக்காக ஹஜ் செய்தவருக்கு நரக விடுதலை கிடைக்கும். அந்தப் பெற்றோருக்கும் பரிபூரணமான ஹஜ் நிறைவேறும் 
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ نَعَمْ حُجِّي عَنْهَا أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ (مسلم) باب الْحَجِّ وَالنُّذُورِ عَنِ الْمَيِّتِ
ஜுஹைனா என்ற குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து  என்னுடைய தாயார்  ஹஜ்ஜை நேர்ச்சை செய்திருந்தார். அவரால் ஹஜ் செய்ய முடியாமல் வஃபாத்தாகி விட்டார். அவருக்காக ஹஜ்ஜை நான் நிறைவேற்றலாமா என்று கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் ஆம் நீ ஹஜ் செய். உன் தாயாருக்கு கடன் இருந்தால் அந்தக் கடனை நீ நிறைவேற்றுவாய் அல்லவா அவ்வாறே  இது அல்லாஹ்வின் மீது அவருக்குள்ள கடனாகும். நிறைவேற்றுவது மிகவும் தகுதியானதாகும் என்றார்கள். 
படிப்பினை- ஷரீஅத்தின் நான்கு ஆதாரங்களில் ஒன்றான கியாஸ் கூடும் என்பதற்கு மேற்படி ஹதீஸ் முக்கிய சான்று
اَلْحَقَ رسولُ الله عليه السلام الحج في حق الشيخ الفاني بالحقوق المالية وأشار الى علة مؤثرة في الجواز وهي ( القضاء ) وهذا هو القياس (اصول الشاشي) 
மேற்படி ஹதீஸில் அந்தப் பெண் கேட்ட கேள்விக்கு நேரடியாக கூடும் அல்லது கூடாது என்று பதில் கூறாமல் நபி ஸல் அவர்கள் கடனை சுட்டிக்காட்டி கியாஸ் அடிப்படையில் பதில் கூறியுள்ளார்கள். இதுதான் இமாம்களிடம் கியாஸ் ஆகும். நபி ஸல் அவர்களும் கியாஸ் செய்துள்ளார்கள். கியாஸுக்கான முதல் தொடக்கம் நபி ஸல் அவர்களாகும்.
நான்கு மத்ஹப்கள் உருவாகுவதற்குக் காரணமும் நபி ஸல் அவர்களின் வழி காட்டுதல் தான். 
عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَنَا لَمَّا رَجَعَ مِنْ الْأَحْزَابِ لَا يُصَلِّيَنَّ أَحَدٌ الْعَصْرَ إِلَّا فِي بَنِي قُرَيْظَةَ فَأَدْرَكَ بَعْضَهُمْ الْعَصْرُ فِي الطَّرِيقِ فَقَالَ بَعْضُهُمْ لَا نُصَلِّي حَتَّى نَأْتِيَهَا وَقَالَ بَعْضُهُمْ بَلْ نُصَلِّي لَمْ يُرَدْ مِنَّا ذَلِكَ فَذُكِرَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يُعَنِّفْ وَاحِدًا مِنْهُمْ  (بخاري)
நபி ஸல் அவர்கள் ஒரு கூட்டத்தாரை அனுப்பி வைத்த போது நீங்கள் பனூ குரைழா இருக்கும் இடத்திற்குச் சென்றே தவிர அஸர் தொழக்கூடாது என்று கூறி அனுப்பினார்கள். செல்லும் வழியிலேயே அஸர் நேரம் வந்து விட்டதால் நபித்தோழர்களில் சிலர் நாம் இங்கேயே தொழுது விடலாம். நபி ஸல் அவர்கள் சீக்கிரமாக நாம் செல்வதை ஆர்வப் படுத்துவதற்காக அவ்வாறு கூறியிருக்கலாம் என்று எண்ணி அங்கேயே தொழுதனர். மற்றொரு சாரார் என்ன இருந்தாலும் நாம் நபி ஸல் கூறிய இடம் சென்ற பிறகே தொழ வேண்டும் என்று எண்ணி அங்கே சென்ற பின் தொழுதனர். இரண்டையும் நபி ஸல் அவர்களிடம் கூறப்பட்டபோது இரி சாராரில் யாரையும் கண்டிக்கவில்லை. இது தான் மத்ஹபுக்கு ஆதாரமாகும்.                                       
வஃபாத்தானவர்கள் சார்பில் குர்பானியை நிறைவேற்றலாம்
 عَنْ حَنَشٍ قَالَ رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ مَا هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْه(ابو داود
நபி ஸல் அவர்களின் வஃபாத்துக்குப் பிறகு அலீ ரழி அவர்கள் இரண்டு ஆடுகளை குர்பானி கொடுப்பார்கள். காரணம் கேட்ட போது நபி ஸல் அவர்கள் தனக்காகவும் குர்பானி தரும்படி எனக்கு வஸிய்யத் செய்தார்கள் அதனால் அவர்களுக்கு சேர்த்து நான் தருகிறேன் என்றார்கள்.
இறந்தவர்களுக்காக நன்மைகள் சேர்த்து வைப்பதில் சதக்கத்துல் ஜாரியா மிகவும் சிறந்தது
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ(بخاري)
  ஒரு மனிதர் இறந்து விட்டால் அவராக நற்கருமங்கள் செய்யும் வாசல் தடைப்பட்டு விடுகிறது. ஆனால் மூன்று வழிகளில் நன்மைகள் அவருக்கு சேரும். 1.அவர் வாழும் போது நிரந்தரமான நன்மையை பெற்றுத் தரும் வகையில் செய்த தர்மம். 2. அவர் வாழும்போது போதித்த பயனுள்ள கல்வி. 3. அவருக்காக துவா செய்யும் நல்ல பிள்ளை.------- நூல் முஸ்லிம்           
عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ الْمَاءُ قَالَ فَحَفَرَ بِئْرًا وَقَالَ هَذِهِ لِأُمِّ سَعْدٍ رواه ابوداود
 சஃது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவருக்கு எப்போதும் நன்மை கிடைத்துக் கொண்டிருக்கும் தர்மம் எது? என்று கேட்டார்கள் “தண்ணீர்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் கூறினார்கள். அப்போது சஃது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு கிணற்றைத் தோண்டி இது உம்மு சஃது அவர்களின் நன்மைக்காக என்று கூறினார்கள்.
عَنْ عَائِشَةَ - رضى الله عنها - . أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِىِّ - صلى الله عليه وسلم - إِنَّ أُمِّى افْتُلِتَتْ نَفْسُهَا ، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ « نَعَمْ »(بخاري)
ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து எனது தாய் எந்த வசியத்தும் செய்யாமல் திடீரென்று மரணித்து விட்டார்.அவர் என்னிடம் பேசியிருந்தால் என்னை தர்மம் செய்யச் சொல்லி இருப்பார். எனவே இப்போது நான் அவர்களுக்காக தர்மம் செய்தால் அந்தநன்மை அவர்களுக்கு கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்“ஆம் கிடைக்கும்” என்றார்கள் 

மற்றொரு ஹதீஸிலே ஒருவர் உபரியான தர்மம் செய்து தாய் தந்தையருக்கு அதனுடைய நன்மை சேர வேண்டும் என்று முயற்சி செய்தால் அந்த நன்மை அவருக்கு கிடைத்து விடும் அதன் காரணமாக சதகா செய்தவரின் நன்மையில் எந்தக் குறையும் வராது என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي: " إِذَا أَرَدْتَ أَنْ تَتَصَدَّقَ صَدَقَةً فَاجْعَلْهَا عَنْ أَبَوَيْكَ، فَإِنَّهُ يَلْحَقُهُمَا، وَلَا يُنْتَقَصُ مِنْ أَجْرِكَ شَيْئًا "(بيهقي
நீர் எப்போதாவது தர் ம ம் செய்ய நினைத்தால் இறந்து விட்ட உன் பெற்றோருக்காக அதை நீர் செய்தால் அவர்களுக்கும் நன்மை சேரும். உன்னுடைய நன்மையிலும் எவ்வித குறைவும் ஏற்படாது
இறந்து விட்டவர்களுக்கு நன்மைகளைச் சேர்ப்பதில் துஆவும் முக்கியமானது. 
وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلإخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالإيمَانِ [الحشر:8
 எங்கள் இறைவா! எங்களையும் மன்னிப்பாயாக!எங்களுக்கு முன்னால் ஈமானுடன் யாரெல்லாம் எங்களை விட்டும் சென்று விட்டார்களோ அவர்களையும் மன்னிப்பாயாக! என்று பிற்காலத்தின் நல்லவர்கள் துஆச் செய்வார்கள்.- சூரா ஹஷ்ர் வசனம் 8
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُولُ أَنَّى هَذَا فَيُقَالُ بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ رواه ابن ماجة
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்    ஒரு மனிதனுக்கு சுவனத்தில் படித்தரங்கள் உயர்த்தப்படும். இது எப்படி வந்தது என்று கேட்பார். அதற்கு அவரிடம் இது உனது பிள்ளை உனக்குச் செய்த துஆ என்று கூறப்படும். நூல்- இப்னுமாஜா
உயிரோடு இருப்பவர்களின் துஆவை மவ்த்தாக்கள் மிகவும் எதிர் பார்க்கிறார்கள்
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا الْمَيِّتُ فِي الْقَبْرِ إِلَّا كَالْغَرِيقِ الْمُتَغَوِّثِ، يَنْتَظِرُ دَعْوَةً تَلْحَقُهُ مِنْ أَبٍ أَوْ أُمٍّ أَوْ أَخٍ أَوْ صَدِيقٍ، فَإِذَا لَحِقَتْهُ كَانَتْ أَحَبَّ إِلَيْهِ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيُدْخِلُ عَلَى أَهْلِ الْقُبُورِ مِنْ دُعَاءِ أَهْلِ الْأَرْضِ أَمْثَالَ الْجِبَالِ، وَإِنَّ هَدِيَّةَ الْأَحْيَاءِ إِلَى الْأَمْوَاتِ الِاسْتِغْفَارُ لَهُمْ "(شعب الايمان
வெள்ளத்தில் சிக்கி அபயம் தேடுபவரைப் போல மவ்த்தானவர்கள் தனது தந்தை, தாய், சகோதரர்,  நண்பன் ஆகியோரிடமிருந்து ஏதேனும் நன்மைகள் வந்து சேருவதை எதிர் பார்க்கிறார்கள். அவ்வாறு ஏதேனும் நன்மைகள் வந்து சேர்ந்து விட்டால் அதை இந்த உலகம் மற்றும் அதிலுள்ளவற்றை விட அதிகமாக அதை விரும்புவார்கள். பூமியில் உள்ளவர்களின் துஆக்களை இறந்தவர்களுக்கு அல்லாஹ் மலைகள் அளவுக்கு பெரிதாக்கி வைப்பான்.  உலகில் வாழும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள் வழங்குவதை இறந்தவர்களுக்காக நாம் தரும் அன்பளிப்பு அவர்களுக்காக நாம் இஸ்திஃபார் செய்வதாகும் 
عن عُثْمَان بْن سَوْدَةَ، وَكَانَتْ أُمُّهُ مِنَ الْعَابِدَاتِ، وَلِذَلِكَ يُقَالُ لَهَا: رَاهِبَةٌ قَالَ: " فَلَمَّا احْتُضِرَتْ رَفَعَتْ رَأْسَهَا إِلَى السَّمَاءِ فَقَالَتْ: يَا ذُخْرِي ، وَذَخِيرَتِي، وَيَا مَنْ عَلَيْهِ عِمَادِي فِي حَيَاتِي وَبَعْدَ مَوْتِي، لَا تَخْذُلْنِي عِنْدَ الْمَوْتِ، وَلَا تُوحِشْنِي فِي قَبْرِي "، قَالَ: " فَمَاتَتْ، وَكُنْتُ آتِيهَا فِي كُلِّ جُمُعَةٍ فَأَدْعُو لَهَا، وَأَسْتَغْفِرُ لَهَا وَلِأَهْلِ الْقُبُورِ، قَالَ: فَرَأَيْتُهَا لَيْلَةً فِي مَنَامِي، فَقُلْتُ: يَا أُمَّاهُ، كَيْفَ أَنْتِ ؟ فَقَالَتْ: يَا بُنَيَّ، إِنَّ الْمَوْتَ لَشَدِيدٌ كَرْبُهُ، وَأَنَا بِحَمْدِ اللهِ فِي بَرْزَخٍ مَحْمُودٍ، أَفْتَرِشُ فِيهِ الرَّيْحَانَ، وَأَتَوَسَّدُ فِيهِ السُّنْدُسَ، وَالْإِسْتَبْرَقَ إِلَى يَوْمِ النُّشُورِ ، فَقُلْتُ: أَلَكِ حَاجَةٌ ؟ قَالَتْ: نَعَمْ، قُلْتُ: مَا هِيَ ؟ قَالَتْ: " لَا تَدَعْ مَا كُنْتَ تَصْنَعُ مِنْ زِيَارَتِنَا وَالدُّعَاءَ لَنَا، فَإِنِّي آنَسُ بِمَجِيئِكَ يَوْمَ الْجُمُعَةِ، إِذَا أَقْبَلْتَ مِنْ أَهْلِكَ يُقَالَ: يَا رَاهِبَةُ، قَدْ أَقْبَلَ مِنْ أَهْلِكِ زَائِرٌ، قَالَتْ: فَأُبَشَّرُ، وَيُبَشَّرُ بِذَلِكَ مَنْ حَوْلِي مِنَ الْأَمْوَاتِ "(بيهقي
عن الْفَضْل بْن الْمُوَفَّقِ ابْنُ خَالِ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ، قَالَ: " لَمَّا مَاتَ أَبِي جَزِعْتُ جَزَعًا شَدِيدًا، فَكُنْتُ آتِي قَبْرَهُ فِي كُلِّ يَوْمٍ، ثُمَّ إِنِّي قَصَّرْتُ عَنْ ذَلِكَ مَا شَاءَ اللهُ، ثُمَّ إِنِّي أَتَيْتُهُ يَوْمًا، فَبَيْنَا أَنَا جَالِسٌ عِنْدَ  الْقَبْرِ غَلَبَتْنِي عَيْنَايَ فَنِمْتُ، فَرَأَيْتُ كَأَنَّ قَبْرَ أَبِي قَدِ انْفَرَجَ، وَكَأَنَّهُ قَاعِدٌ فِي قَبْرِهِ، مُتَوَشِّحًا أَكْفَانَهُ عَلَيْهِ سِحْنَةُ الْمَوْتَى، قَالَ: كَأَنِّي بُلِيتُ لَمَّا رَأَيْتُهُ، فَقَالَ: يَا بُنَيَّ، مَا بَطَّأَ بِكَ عَنِّي ؟ قَالَ: قُلْتُ: وَإِنَّكَ لَتَعْلَمُ بِمَجِيئِي ؟ قَالَ: مَا جِئْتَ مِنْ مَرَّةٍ إِلَّا عَلِمْتُهَا، وَقَدْ كُنْتَ تَأْتِيَنِي فَأُسَرُّ بِكَ، وَيُسَرُّ مَنْ حَوْلِي بِدُعَائِكَ، قَالَ: فَكُنْتُ بَعْدُ آتِيَهِ كَثِيرًا "(بيهقي
قال سفيان  رح  الاموات  احوج  الي الدعاء من الاحياء  الي الطعام والشراب
இமாம் சுஃப்யான் ரஹ் அவர்கள் கூறினார்கள். உயிரோடு இருப்பவர்கள் உணவின் பக்கம் எந்த அளவு தேவையுள்ளவர்களாக இருப்பார்களோ அந்த அளவுக்கு  இறந்தவர்கள் தங்களுக்காக செய்யப்படும் துஆக்களின் பால் தேவையுள்ளவர்களாக இருப்பார்கள்
கப்ருக்குச் சென்று துஆச் செய்வதற்கு ஆதாரம்
عن عائشة رضي الله عنها قالت: فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجتُ أطلبه فإذا هو بالبقيع رافعا رأسه إلى السماء (بيهقي)
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியுள்ளார்கள்.நான் ஒருநாள் இரவு நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களைக் காணாமல் தேடிச் சென்றேன். அப்போது பகீஃ கப்ருஸ்தானில் இருந்தார்கள். வானத்தை நோக்கியபடி துஆச் செய்து கொண்டிருந்தார்கள். நூல் பைஹகீ 
   عَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الأَضَاحِىِّ فَوْقَ ثَلاَثٍ فَأَمْسِكُوا مَا بَدَا لَكُمْ وَنَهَيْتُكُمْ عَنِ النَّبِيذِ إِلاَّ فِى سِقَاءٍ فَاشْرَبُوا فِى الأَسْقِيَةِ كُلِّهَا وَلاَ تَشْرَبُوا مُسْكِرًا ».
  நான் உங்களை கப்ருகளை ஜியாரத் செய்வதை விட்டும் தடுத்திருந்தேன். ஆனால் இப்போது நீங்கள் கப்ரு ஜியாரத் செய்யுங்கள். ஏனெனில் அது உலகின் மீது பற்றின்மையையும் மறு உலகம் பற்றிய நினைவையும் உருவாக்கக் கூடியதாக உள்ளது 
عن عثمان بن عفان يقول مرَّ رسول الله صلى الله عليه وسلم بجنازة عند قبر وصاحبه يدفن فقال رسول الله صلى الله عليه وسلم:استغفروا لأخيكم وسلوا الله له التثبيت  فإنه الآن يسأل (رواه الحاكم في المستدرك)
 நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கப்ரைக் கடந்து சென்றார்கள். அப்போது அந்த கப்ருக்கு உரியவர் அடக்கம் செய்யப் பட்டுக் கொண்டிருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உங்களின் சகோதரருக்காக தஸ்பீத்தைக் கேளுங்கள். கப்ரில் வைத்தவுடன் மலக்குகளின் கேள்விக்கு முறையாக பதிலை அவர் கூறுவதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். ஏனென்றால் அவர் இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப் படுவார்.-ஹாகிம்
عن قتادة عن أبي الصديق قال كان أنس إذا وُضِعَ الميت في القبر قال اللهم جَافِي الاَرْضَ عن جنبيه ووَسِّع عليه (بغية الحارث)
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கப்ரில் மய்யித் வைக்கப்பட்டவுடன் கீழ்காணும் துஆவை ஓதுவார்கள். 
اللهم جَافِي الاَرْضَ عن جنبيه ووَسِّع عليه
    யாஅல்லாஹ்! இவருடைய விலாப் புறங்களை நெருக்குவதை விட்டும் பூமியை தூரமாக்கி வைப்பாயாக! இவருக்கு கப்ரை விசாலமாக ஆக்கி வைப்பாயாக!
أن عمرا بن العاص رضي الله عنه لما حضرته الوفاة قال.... فإذا سويتم علي التراب فاجلسوا عند قبري نحو نحر جزور وتَقْطِيْعِها أَسْتَأْنِسُ بكم    (المستدرك علي الصحيحين للحاكم)
 அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மவ்த் நெருங்கிய மகன்களிடம் கூறினார்கள். என் கப்ரு மீது மண்ணைப் போட்டு நீங்கள் மூடிய பின்பு ஒரு ஓட்டகத்தை அறுத்துப் பங்கிடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அந்த அளவு நேரம் என் கப்ரு அருகே அமருங்கள். எனக்காக துஆச் செய்யுங்கள். நான் உங்கள் மூலம் நிம்மதி பெறுவேன்.
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் உம்மு எனும் நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது
மய்யித்தை கப்ரில் வைப்பவர் இதைக் கூறட்டும்.
بِسْمِ اللَّهِ وَعَلَى مِلَّةِ رسول اللَّهِ صلى اللَّهُ عليه وسلم اللَّهُمَّ أَسْلَمَهُ إلَيْك الإشحاء من وَلَدِهِ وَأَهْلِهِ وَقَرَابَتِهِ وَإِخْوَانِهِ وَفَارَقَ من كان يُحِبُّ قُرْبَهُ وَخَرَجَ من سَعَةِ الدَّارِ وَالْحَيَاةِ إلَى ظُلْمَةِ الْقَبْرِ وَضِيقِهِ وَنَزَلَ بِك وَأَنْتَ خَيْرُ مَنْزُولٍ بِهِ إنْ عَاقَبْته عَاقَبْته بِذَنْبِهِ وَإِنْ عَفَوْت فَأَنْتَ أَهْلُ الْعَفْوِ اللَّهُمَّ أنت غَنِيٌّ عن عَذَابِهِ وهو فَقِيرٌ إلَى رَحْمَتِك اللَّهُمَّ اُشْكُرْ حَسَنَتَهُ وَتَجَاوَزْ عن سَيِّئَتِهِ وَشَفِّعْ جَمَاعَتَنَا فيه وَاغْفِرْ ذَنْبَهُ وَافْسَحْ له في قَبْرِهِ وَأَعِذْهُ من عَذَابِ الْقَبْرِ وَأَدْخِلْ عليه الْأَمَانَ وَالرُّوحَ في قَبْرِهِ  (الام للشافعي)                                  
குர்ஆன் ஓதி இறந்தவர்களுக்கு சேர்த்து வைப்பதற்கும்  நிறைய ஆதாரங்கள் உள்ளன. 
عن علي رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم من مَرَّ على المقابر فقرأ فيها إحدى عشرة مرة (قل هو الله أحد) ثم وهب أجره الاموات أعطي من الاجر بعدد الاموات(كنز العمال ,دُرُّ المختار )
 கப்ரைக் கடந்து செல்பவர் அங்கு 11 முறை இக்லாஸ் சூராவை ஓதி மரணித்தவருக்கு சேர்த்து வைத்தால் மரணித்தவர்களின் அளவுக்கு நன்மை வழங்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். நூல் கன்ஜுல் உம்மால் 
عن أنس أن رسول الله صلى الله عليه وسلم قال:من دخل المقابر فقرأ سورة يس خفف الله عنهم يومئذ وكان له بعدد حروفها حسنات(القرطبي)
 கப்ருஸ்தானில் நுழைந்து யாஸீன் சூரா ஓதினால் அல்லாஹ் கப்ராளிகளின் வேதனையைக் குறைப்பான். யாசீன் சூராவின் ஒவ்வொரு எழுத்துக்கும் நிறைய நன்மைகள் உண்டு. 
قال الامام أحمد بن حنبل: إذا دخلتم المقابر فاقرأوا بفاتحة الكتاب والاخلاص والمعوذتين واجعلوا ثواب ذلك لاهل المقابر فإنه يصل إليهم فالاختيارأن يقول القارئ بعد فراغه: اللهم أوصل ثواب ما قرأتُه إلى فلان (اعانة الطالبين)
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹிமல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். கப்ருஸ்தானில் நீங்கள் நுழைந்தால் ஃபாத்திஹா சூராவையும் இக்லாஸ் சூராவையும் ஃபலக், நாஸ் சூராவையும் ஓதி அதன் நன்மையை கப்ராளிகளுக்கு சேர்த்து வையுங்கள். அது நிச்சயம் அவர்களுக்குச் சேரும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையாகிறது இவற்றை ஓதி முடித்த பின்பு 
اللهم أوصل ثواب ما قرأتُه إلى فلان 
யாஅல்லாஹ் நான் ஓதிய இதன் நன்மையை இன்னாருக்கு சேர்த்து வைப்பாயாக என்று கூறுவதாகும்.- நூல் இஆனா
وَفِي شَرْحِ اللُّبَابِ وَيَقْرَأُ مِنْ الْقُرْآنِ مَا تَيَسَّرَ لَهُ مِنْ الْفَاتِحَةِ وَأَوَّلِ الْبَقَرَةِ إلَى الْمُفْلِحُونَ وَآيَةِ الْكُرْسِيِّ وَآمَنَ الرَّسُولُ  وَسُورَةِ يس وَتَبَارَكَ الْمُلْكُ وَسُورَةِ التَّكَاثُرِوَالْإِخْلَاصِ اثْنَيْ عَشَرَ مَرَّةً أَوْ إحْدَى عَشَرَ أَوْ سَبْعًا أَوْ ثَلَاثًا  ثُمَّ يَقُولُ : اللَّهُمَّ أَوْصِلْ ثَوَابَ مَا قَرَأْنَاهُ إلَى فُلَانٍ أَوْ إلَيْهِمْ   (ردالمختار)
ஃபாத்திஹா சூராவையும் பகரா சூராவில் முஃபிலிஹூன் வரை உள்ள ஆரம்ப வசனங்களையும் ஆயத்துல் குர்ஸீ, ஆமனர் ரஸூலு, சூரா யாஸீன், சூரா முல்க், சூரா தகாஸுர் சூரா இக்லாஸ் 12 அல்லது 11 அல்லது 7 அல்லது 3 தடவைகள் ஓத வேண்டும். பிறகு
اللَّهُمَّ أَوْصِلْ ثَوَابَ مَا قَرَأْنَاهُ إلَى فُلَانٍ أَوْ إلَيْهِمْ
என்று ஓதி துஆச் செய்யவும். நூல்- ரத்துல் முக்தார்.  
இறந்தவர்களுக்காக குர்ஆனை ஓதுவது பற்றி ஷாஃபிஈ சட்ட நூல்களில் கூறப்பட்டுள்ள விளக்கமாகிறது.
أما الصدقة والدعاء فبالاجماع : وأما القراءة ففيها خلاف (اعانة)  فقد قال النووي رحمه الله في شرح مسلم : المشهور من مذهب الشافعي أنه لا يصل ثوابها إلى الميت وقال بعض أصحابنا يصل ثوابها للميت بمجرد قصده بها ولو بعدها وعليه الائمة الثلاثة واختاره كثيرون من أئمتنا واعتمده السبكي وغيره فقال:والذي دل عليه الخبر بالاستنباط أن بعض القرآن إذا قصد به نفع الميت نفعه وبين ذلك وحُمِلَ جمع عدم الوصول الذي قاله النووي على ما إذا قرأ لا بحضرة الميت ولم ينو القارئ ثواب قراءته له أو نواه ولم يَدْعُ (فتح المعين)
  இறந்து விட்டவருக்காக தர்மம் செய்வது, துஆச் செய்வது ஆகியவை இறந்தவருக்குச் சேரும் என்பதில் ஏகோபித்த  கருத்து உள்ளது. ஆனால் குர்ஆன் ஓதுவது இறந்தவருக்குச் சேருவதில் கருத்து வேறுபாடு உண்டு. இமாம் நவவீ (ரஹ்)  அவர்கள் முஸ்லிம் ஷரீஃபின் விரிவுரையில் கூறும்போது இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் பிரபலமான கூற்றின்   அடிப்படையில் அது சேராது என்பதாகும். ஆனால் மற்ற இமாம்கள் கூறும்போது குர்ஆன் ஓதுவதன் நன்மை அதை நிய்யத் வைப்பதன் மூலமாக இறந்தவரைச் சேரும் என்று கூறுகின்றனர். மத்ஹபுடைய மூன்று இமாம்களும் அதையே கூறுகின்றனர். பெரும்பாலான இமாம்களின் கருத்து அது தான். இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ள அக் கருத்துக்கு விளக்கமாகிறது இறந்தவருக்கு நிய்யத் செய்யாமல் குர்ஆன் ஓதினால் அது சென்றடையாது  என்பதேயாகும் என்று மற்றவர்கள் விளக்கம் கூறுகின்றனர்.       நூல்- ஃபத்ஹுல் முஈன்                    
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ رضي الله عنه قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا إِلَى سَعْدِ بْنِ مُعَاذٍ حِينَ تُوُفِّيَ قَالَ فَلَمَّا صَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوُضِعَ فِي قَبْرِهِ وَسُوِّيَ عَلَيْهِ سَبَّحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَبَّحْنَا طَوِيلًا ثُمَّ كَبَّرَ فَكَبَّرْنَا فَقِيلَ  يَارَسُولَ اللَّهِ لِمَ سَبَّحْتَ ثُمَّ كَبَّرْتَ قَالَ لَقَدْ تَضَايَقَ عَلَى هَذَا الْعَبْدِ الصَّالِحِ قَبْرُهُ حَتَّى فَرَّجَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهُ (احمد)  
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் சஃதுப்னு முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்த போது நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வெளியேறினோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜனாஸா தொழ வைத்தார்கள்.பிறகு அவரை கப்ரில் வைத்தவுடன் நீண்ட நேரம் தஸ்பீஹ் ஓதினார்கள். நாங்களும் தஸ்பீஹ் ஓதினோம். பிறகு தக்பீர் சொன்னார்கள். நாங்களும் தக்பீர் ஓதினோம். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இவ்வாறு ஏன் செய்தீர்கள் என்று கேட்கப் பட்டபோது இந்த நல்ல மனிதரை கப்ரு நெருக்கியது. நாம் தஸ்பீஹ் செய்ததன் மூலம் அல்லாஹ் அவருக்கு விடுதலை கொடுத்தான் என்றார்கள்.
 படிப்பினை- இறந்தவருக்காக தஸ்பீஹ் ஓதுவது கூடும் என்றால் குர்ஆன் ஓதுவதும் கூடும்  என இதிலிருந்து விளங்க முடியும்.
ஈஸால் தவாப் செய்த பிறகு தனியாக துஆ அவசியமா?
 நன்மையை சாட்டுவது இரண்டு வகையாகும்.ஒன்று ஒருவர் ஒரு அமலை தனக்காக செய்து பிறகு அதன் நன்மையை மற்றவருக்கு சேர்த்து வைப்பது இந்த வகைக்கு கட்டாயம் துஆ செய்ய வேண்டும். அதாவது இறந்தவருக்கு சேர்த்து வைக்கும் வகையில் துஆச் செய்ய வேண்டும். இரண்டாம் வகை ஒரு அமலை பிறருக்கு சேர்ப்பதற்காக வேண்டியே செய்வது. இதற்காக தனியாக துஆச் செய்ய வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக ஒருவர் குர்ஆனை தனக்காக ஓதியிருப்பார். பிறகு அதை இறந்தவர்களில் யாருக்கேனும் சேர்த்து வைக்க நினைத்தால் யாஅல்லாஹ் இதன் நன்மையை இன்னாருக்கு சேர்த்து வை என துஆ செய்வது கட்டாயம். ஆனால் ஓதும்போதே அவருக்காக ஓதியிருந்தால் அதற்காக தனியாக துஆ ஓதுவது கட்டாயமில்லை. ஆனால் துஆ ஓதினால் நல்லது தான்.                           
இறந்து விட்ட பெற்றோரின் நண்பர்களுக்கு உபகாரம் செய்வதும் பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் கட்டுப்படும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « أَبَرُّ الْبِرِّ أَنْ يَصِلَ الرَّجُلُ وُدَّ أَبِيهِ ». (مسلم
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَجُلاً مِنَ الأَعْرَابِ لَقِيَهُ بِطَرِيقِ مَكَّةَ فَسَلَّمَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ وَحَمَلَهُ عَلَى حِمَارٍ كَانَ يَرْكَبُهُ وَأَعْطَاهُ عِمَامَةً كَانَتْ عَلَى رَأْسِهِ فَقَالَ ابْنُ دِينَارٍ فَقُلْنَا لَهُ أَصْلَحَكَ اللَّهُ إِنَّهُمُ الأَعْرَابُ وَإِنَّهُمْ يَرْضَوْنَ بِالْيَسِيرِ. فَقَالَ عَبْدُ اللَّهِ إِنَّ أَبَا هَذَا كَانَ وُدًّا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ وَإِنِّى سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ « إِنَّ أَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ أَهْلَ وُدِّ أَبِيهِ ».(مسلم 
இப்னு உமர் ரழி அவர்கள் மக்கா செல்லும் வழியில் ஒரு கிராமவாசியை சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவரை தனது வாகனத்தின் மீது ஏற்றி  தன்னுடைய தலைப்பாகையை அவருக்கு அணிவித்து கண்ணியப் படுத்தினார்கள். அப்போது நாங்கள் இப்னு உமர் ரழி அவர்களிடம்  இந்த கிராமவாசிகளுக்கு இவ்வளவு மரியாதை தேவையில்லை. இதை விடக் குறைந்த மரியாதையே போதுமல்லவா என்று கேட்க, அதற்கு இப்னு உமர் ரழி அவர்கள் கூறினார்கள் இவர் எனது தந்தைக்கு மிகவும் பிரியமானவர் என்பதால் இவரை நான் கண்ணியப் படுத்துகிறேன் என்றார்கள்

பிரபல்யமான பதிவுகள்