роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ிропாро┤рой், рокிрок்ро░ро╡ро░ி 02, 2017

роЪொро░்роХ்роХроо் рооро▒்ро▒ுроо் роиро░роХроо்,

*✍தெரிந்து கொள்வோம்:*
*சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி !*

*1. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள சொர்க்கங்களின் பெயர்கள் யாவை?*
*சொர்க்கங்களின் பெயர்கள் :*

*1. தாருஸ் ஸலாம் - அமைதியான இல்லம் ( 10:25 )*

*2. தாருல் கரார் - நிலையான உலகம் ( 40:39 )*

*3. ஜன்னத்துல் ஹுல்த் - நிலையான சொர்க்கம் ( 25:15 )*

*4. ஜன்னத்துல் மாஃவா - சொர்க்கச்சோலைகள் ( 53:15,  32:19 )*

*5. ஜன்னத்துன் நயீம் - இன்பகரமான சொர்க்கம் ( 5:65,  56:12 )*

*6. ஜன்னத்து அத்ன் - நிலையான சொர்க்கம் ( 9;27, 19:61,  38:50 )*

*7. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் - சொர்க்கத்துச் சோலைகள் ( 18:107,  23:11 )*

*சொர்க்க வாசல்களின் பெயர்கள் :*

*1. சலா ( ஸஹிஹீல் புகாரி # 1897*

*2. ஜிஹாத் ( ஸஹிஹீல் புகாரி # 1897*

*3. ஸதகா ( ஸஹிஹீல் புகாரி # 1897*

*4. ரய்யான் ( ஸஹிஹீல் புகாரி # 1897*

*5. ஹஜ்*
*6. கஸ்மன்*
*7. ஈமான்*
*8. திக்ரு*

*2. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நரகங்களின் பெயர்கள் யாவை?*

*1. ஜஹன்னம் (52:13)*
*2. ளலா (70:15)*
*3. ஹுதமா (104:4,5 )*
*4. ஸகர் ( 54:48,  74:26, 27, 42)*
*5.ஜஹீம் ( 69:31)*
*6. ஹாவியா (101:9)*

*3. சொர்க்கவாசிகளுக்கு வழங்கப்படும் பானங்களின் பெயர்கள் யாவை?*

*1. கற்பூர பானம் (76;5)*
*2. இஞ்சி பானம் (76:17)*
*3. ஸல்ஸபீல் (76:18)*

*4. சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் பட்டாடைகளின் பெயர்கள் யாவை?*

*1. ஸிந்துஸ் ( 18:31,  44:53,  76:21 )*
*2. இஸ்தப்ரக் ( 18:31,  44:53,  76:21 )*

*5. சொர்க்கவாசிகளுக்கு வழங்கப்படும் கன்னி (மனைவி) களின் பெயர் என்ன?*

*" ஹுருல்ஈன் "(கண்ணழகிகள்)*
*44:54,  56:22*

*6. சொர்க்கத்தில் வழங்கப்படும் ( போதையற்ற) முத்திரையிடப்பட்ட மதுவின் பெயர் என்ன?*

*" ரஹிகிம் மஹ்தூம் " ( 83:25 )*

*7. சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் இடையே இருக்கும் அகலமான தடுப்புச்சுவரின்பெயர் என்னா?*

*" அல் அஃராப் "( 7:46 to 49 )*

*8. மனிதன் சோதனைக்குள்ளாக்கப் படாமல் எளிதாக சொர்க்கம் செல்லமுடியாது என அல்லாஹ் எந்த வசனம் மூலம் எச்சரிக்கிறான்?*
*2:214*

*9. நல்லடியார்கள் தங்கும் சொர்க்கம் எங்கே உள்ளது?*

*" ஸித்ரதுல் முன்தஹா " என்ற இலந்தை மரத்தின் கீழ் உள்ளது (53:13,14,15 )*

*10. நரகவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் யாவை?*

*1. கொதிக்கும் : ( 6:70, 10:4, 37:67, 38:57)*
*2. சீழ் ( சலம்) ( 14:16,17, 38:57, 69:36, 78:25 )*
*3. ஸக்கூம் மரம் ( 37:62, 44:43 to 46, 56:52,53 )*
*4. முள்மரம் ( 88:6 )*

*11. நரகத்தில் இருக்கும் ஸக்கும் மரத்தின் பாளை எதனுடைய வடிவில் இருக்கும்?*

*ஷைத்தானின் தலைகளைப் போல் இருக்கும்!( 37:65 )*

*12. நகரவாசிகளை வானவர்கள் எதைக்கொண்டு அடிப்பார்கள்?*

*இரும்பு சம்மட்டியால் அடிப்பார்கள்! (22:21)*

*13. நரகவாசிகளின் ஆடைகள் யாவை?*

*1. நெருப்பினால் ஆன ஆடை ( 22:19)*
*2. நெருப்பினால் ஆன விரிப்பு ( 7:41)*
*3. நெருப்பினால் ஆன போர்வை ( 7:41)*

*14. நரகத்திற்கு எத்தனை*
*வாசல்கள் இருக்கும்?*

*7 வாசல்கள் இருக்கும் ( 15:44 )*

*15. நரகவாசிகளை வானவர்கள் எத்தனை முழம் உள்ள சங்கிலியால் கட்டுவார்கள்?*

*70 முழம் உள்ள சங்கிலியால் கட்டுவார்கள் ( 69:32 )*

*16. சபிக்கப்பட்ட மரம் எது?*

*கள்ளி மரம் ( 17:60 )*
*ஸஹிஹீல் புகாரி : 4716*

*17. நரகத்தின் எரிபொருட்கள் யாவை?*

*1. மனிதர்களும், கற்களும் ( 2:24 )*
*2. மனிதர்களும்,  ஜின்களும் ( 22:98,  72:15 )*

*18. நரகத்தின் பொறுப்புதாரியான வானவரின் பெயர் என்ன ?*

*மாலிக் ( 43:77 )*

*19. பெருமையடிப்போர் நரகம் செல்வார்கள் என அல்லாஹ் எந்த வசனம் மூலம் எச்சரிக்கிறான்?*

*( 16:29,  39:72,  40:75,76 46:20 )*

*20. ஸகர் எனும் நரகத்திற்கு எத்தனை வானவர்கள் காவல் இருப்பார்கள்?*

*19 வானவர்கள் ( 74:30 )*

*21. நரகத்தை யாரைக்கொண்டு நிரப்புவதாக அல்லாஹ் கூறுகிறான்?*

*மனிதர்களைக் கொண்டும், ஜின்களைக்கொண்டும் ( 32:13 )*

*22. " ஜன்னத்துல் ஃபிர்தௌஸிற்கு " தகுதியானவர்களின் பண்புகள் யாவை?*

*1. உள்ளச்சத்துடன் தொழுவார்கள்*
*2. வீணானவற்றை புறக்கனிப்பார்கள்.*
*3. ஸகாத்தை முறைப்படி நிறைவேற்றுவார்கள்*
*4.தங்களது வெட்கஸ்தலங்களை பாதுகாப்பார்கள்*
*5. ஹலாலான தங்களது மனைவிகள், தனது அடிமைப்பெண் இவர்களிடம் மட்டுமே உறவு கொள்வார்கள்*
*6. அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் பேணுவார்கள்*
*7. தொழுகைகளை பேணித் தொழுவார்கர் ( 23:2 to 11 )*

*23. உங்கள் மனைவிகளுடன் சொர்க்கம் செல்லுங்கள் என்ற நற்செய்திக்கு உரியவர்கள் யார்?*

*குர்ஆன் வசனங்களை விசுவாசித்து அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்படிந்து நடப்பவர்கள்! ( 43:69, 70 )*

*24. ஸகர் என்ற நரகத்தின் தன்மை யாது?*

*தொழாதவன்,  ஏழைகளுக்கு உணவளிக்காதவன் இவர்களின் உடல்களில் பட்டு அவர்களின் உருவத்தை மாற்றிவிடும்! ( 74:26 to 29,  74:42 to 44 )*

*25. ஹாவியா என்ற நரகத்தின் தன்மை யாது?*

*கடுமையான சூடேற்றப்பட்ட நரக நெருப்பாகும் ( 101:9 to 11 )*

*26. " ஹுதமா " என்ற நரகத்தின் தன்மை யாது?*

*உடலில்பட்டவுடன் நேராகச்சென்று இதயத்தை தாக்கும்! ( 104.5.6.7)*

рооройிродрок் рокроЯைрок்рокிрой் родுро╡роХ்роХроо்,

மனித படைப்பு இஸ்லாம்  கூறுவது என்ன?
மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டான் என்று ஒரு இடத்தில் குறிப்பி;டும் குர்ஆன், மற்றொரு இடத்தில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்படுகிறது இல்லையா?. மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?.

பதில்:

1. மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் படைக்கப்பட்டான்:
அருள்மறை குர்ஆனின் 75வது அத்தியாயம் ஸுரத்துல் கியாமாவின் 37வது வசனம் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

'(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத் துளிக்குள் அவன் இருக்கவில்லையா?.'( அல் குர்ஆன் 75:37)

மேலும் அருள்மறை குர்ஆனின் பல வசனங்களில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 5வது வசனம் மனிதன் மண்ணிலிருந்தும், இந்திரியத் துளியிலிருந்தும், படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

'.....நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்: பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்து படைத்தோம்.....' என்று குறிப்பிடுகிறது.

மனித உடல் படைக்கப்பட்டிருக்கும் மூலக்கூறுகள் யாவும் (மனித உடலின் ஆக்கக் கூறுகள்) ஒரு சிறிதளவோ அல்லது பெரும் அளவோ பூமி இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் தெரிந்து கொண்டுள்ள மேற்படி உண்மையானது, மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்கிற அருள்மறை குர்ஆனின் கூற்றுக்கு அறிவியல் தரும் விளக்கமாகும்.
அருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்றும், சில வசனங்கள் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்றும் கூறுகிறது. மேற்படி கூற்று முரண்பாடானது அல்ல. ஒரே நேரத்தில் நடைபெற முடியாத எதிர்மறையான இரண்டு செயல்களுக்கு முரண்பாடு என்று பெயர்.

2. மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்:
அருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான் என்று கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 25வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்கானின் 54வது வசனம் சொல்லும் பொருளை உதாரணமாகக் கொள்ளலாம்:
இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து....'(அல் குர்ஆன் 25:54).
மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப்பட்டான் என்று அருள்மறை குர்ஆன் சொன்ன மூன்று கருத்துக்களையும் நவீன அறிவியல், உண்மை என்று நிரூபித்துக் காட்டியுள்ளது.

3. மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (Contradiction) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradistinction).
உதாரணத்திற்கு, ஒரு கோப்பை தேநீர் தயாரிக்கப் பட வேண்டுமெனில் - அதற்கு தேவையான அளவு வெந்நீர் வேண்டும். தேவையான அளவு தேயிலைத் துகளும் வேண்டும். தேநீர் தயாரிக்க வெந்நீர் வேண்டும். அதுபோல தேநீர் தயாரிக்க தேயிலைத் துகளும் வேண்டும் என்று சொல்வதால் - மேற்படி இரண்டு கூற்றுக்களும் வௌ;வேறாக இருந்தாலும், அவைகள் இரண்டும் ஒன்றுக் கொன்று முரண்படவில்லை. அத்துடன் இனிப்பான தேநீர் வேண்டுமெனில், சர்க்கரையும் வேண்டும். இவ்வாறு மேற்சொன்ன எந்த கருத்தும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை.
இவ்வாறு அருள்மறை குர்ஆன் மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப் பட்டான் என்று சொன்ன எந்த கருத்தும் ஒன்றொடொன்று முரண்படவில்லை. மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (Contradiction) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradistinction). உதாரணத்திற்கு ஒரு மனிதன் எப்போதும் உண்மையே பேசக் கூடியவன். அதேசமயம் அவன் ஒரு பொய்யன் என்றும் நான் சொல்கிறேன். மேற்படி எனது கூற்றுக்கள் முரண்பாடானது (Contradiction).

ஆனால் ஒரு மனிதன் நேர்மையானவன். அதே சமயத்தில் கருணை உள்ளம் கொண்டவன். மனிதர்களை நேசிப்பவன் என்று கூறுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradistinction). முரண்பாடில்லாத தனிப் பண்புள்ள கருத்தாகும்

рооிройро░ро▓் ро╡ாроЯ்роЯро░்,

ஆற்று நீரை குடத்தில் சுமந்து வந்து குடித்தது ஒரு காலம். பின்னர் கிணற்று நீரை சில்லென்று இறைத்து பானையில் வைத்து குடித்ததெல்லாம் அந்த காலம். அப்புறம் போர்வெல் தண்ணீர், கார்ப்பரேஷன் குழாயில் வந்த தண்ணீர் எல்லாவற்றையும் கடந்துவிட்டு இப்போது மிஸ்டர் நடுத்தரம் கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீரைதான் பெரும்பாலும் குடிக்கிறார்.
இம்மாதிரி கேன்களில் அடைத்து விற்கப்படும் நீரை சுத்தப்படுத்துவதற்கு பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீரை சுத்திகரித்த பிறகு இவற்றை முறையாக நீக்கவேண்டியது அவசியம். செலவுக்கு பயந்து கொண்டு அதை பலரும் செய்வதில்லை. எனவே, இதுபோன்ற நீரை அருந்துபவர்களுக்கு, இந்த வேதிப் பொருட்கள் உடலிலேயே படிந்து சிறுநீரக மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அலாரம் அடிக்கிறார்கள் மருத்துவர்கள்.இதுவும் தவிர, வைரஸ், பாக்டீரியா, ஸ்போர்ஸ் (நுண்ணுயிரிகள் அவற்றிற்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் தங்களைச் சுற்றி ஒரு கூட்டை (spores) ஏற்படுத்தி அதனுள் இருந்து கொள்ளும். சாதகமான சூழல் இருந்தால் அதை உடைத்துக் கொண்டு வெளியில் வரும்) போன்ற நுண்ணுயிரிகள் முறையாக நீக்கப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. இதனால் தொற்று நோய்கள் பாதிப்பும் வரலாம்என்கிறார்கள்.
உங்களை பயமுறுத்துவதற்காக இதை சொல்லவில்லை. இதற்கு தீர்வும் இருக்கிறது.சில பெரிய நிறுவனங்கள் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து விற்பனை செய்யும் நீரை பயன்படுத்தலாம். நாம் வாங்கும் கேன் தண்ணீர், இந்த முறையில் சுத்திகரிக்கப்படுகிறதா என்பதை கேட்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.கேன் தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்தினால் நல்லது என்றொரு நம்பிக்கை உள்ளது. அதிலும் பிரச்சினை இருக்கிறது. நாம் அதிகபட்சமாக 100 டிகிரிதான் கொதிக்க வைக்க முடியும். 150 டிகிரி கொதிநிலையிலும் உயிர் வாழும் நுண்ணுயிரிகளும் நீரில் உண்டு.100 சதவீதம் பாதுகாப்பான நீர் என்றால் அது பாதுகாப்பான நிலையில் இருக்கும் போர்வெல் நீர்தான். மழை நீர் பூமிக்கடியில் செல்லச் செல்ல அதில் உள்ள எல்லா கிருமிகளும் அழிந்து சுத்தமான நீராகிவிடும். நிலத்தடி நீர் மாசடையாமல் இருந்தால் அதைவிட பாதுகாப்பான நீர் நாம் பயன்படுத்த வேறு எதுவும் இல்லை.
ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலுக்கு எவ்வளவு செலவு?
மூடி: 25 பைசா
பாட்டில்: ரூ 1.50 முதல் ரூ. 2.50
நீர் சுத்திகரிப்பு : 10 பைசா முதல் 25 பைசா
லேபிள்: 15 பைசா முதல் 50 பைசா
அட்டைப்பெட்டி : 50 பைசா
போக்குவரத்து: 10 பைசா முதல் 25 பைசா
மற்றவை: 25 பைசா
மொத்தச் செலவு : ரூ.2.85 முதல் 4.25 வரை
(லேபர், மார்க்கெட்டிங் செலவுகள் மற்றும் வரி தவிர்த்து)
கடைசியில் நாம் வாங்குவது : ரூ. 10 முதல்
Source: Centre for Science and Environment தரும் தகவல்களிலிருந்து பல்வேறு இடங்களில் திரட்டியது. இது தோராயமான தொகை. இடத்துக்கு இடம் பல்வேறு காரணங்களால் ஓரளவுக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ வேறுபடலாம்.

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்