செவ்வாய், ஜனவரி 21, 2020

NRC,CAA,NPR,எதிர்ப்போம்

*புறக்கணிப்போம்* 
*NRC. National registration of citizen
தேசிய குடி மக்கள் பதிவேடு* 
*CAA . Citizenship amendment  act 
குடியுரிமை திருத்தச் சட்டம்* 
*NPR  . National population register
தேசிய மக்கள் தொகை பதிவேடு* 
*ஆகிய இந்திய அரசியல் சாசன அடிப்படை உரிமைகளுக்கு எதிர்பானவை எனவே எதிர்த்து குரல் கொடுப்போம்
திங்கள், ஜனவரி 20, 2020

RSS.ன் முழுவிபர பட்டியல்,

யாரப்பா அது ஆர்எஸ்எஸ் அழிப்பேன் ஒழிப்பேன் கிளிப்பேன்னு கூவுனது அதன் விரல் நுனியை பாக்கவே முடியாதுடா இதோ அதன் விஸ்வரூபம்...
🚩ஆர் எஸ் எஸ் என்ற பிரம்மாண்டம்..🚩

#வாய்_வலிக்கும்_படிச்சி #தெரிஞ்சிக்க.... 

குடியரசுத் தலைவர்
பிரதமர்
உள்துறை அமைச்சர்
மத்திய அமைச்சர்கள்
துணைக் குடியரசுத் தலைவர்
பாராளுமன்ற சபாநாயகர்
மற்றும்

18 முதலமைச்சர்கள்
29 கவர்னர்கள்
417 எம்பிக்கள்
1600 க்கும் மேற்பட்ட எம் எல் ஏ கள்
1 லட்சம் கிளைகள்
15 கோடி 
தன்னார்வத்தொண்டர்கள்
2 லட்சம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகள்
5 லட்சம் ஆசிரியர்கள்
1 கோடி மாணவர்கள்
42 கல்லூரிகள்
13 உயர் கல்வி நிறுவனங்கள்
3 ஆராய்ச்சி நிறுவனங்கள்
120 படுக்கை வசதி கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழுநோயாளிகளுக்கான ராஜமுந்திரி ஆஸ்பத்திரி
2 கோடி பாரதீய 
மஜ்தூர் சங்கத்தின் உறுப்பினர்கள் (தொழிற்சங்கம்)
1 கோடி ABVP செயலாளர்கள் (மாணவர் அமைப்பு)
15 கோடி பிஜேபி உறுப்பினர்கள்
16000 பள்ளிகளை நடத்தும் வித்யா பாரதி.
1200 ப்ரகாஷன் சமூகம் (புத்தக வெளியீட்டு அமைப்புகள்)
9000 முழுநேர ஊழியர்கள்
7 லட்சம் மூத்த வீரர்கள் அமைப்புகள்
1 கோடி 
விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் (உலகம் முழுவதுமாக)
30 லட்சம் பஜ்ரங்தள் இந்துத்துவ தொண்டர்கள்
1.5 லட்சம் அலுவலகங்கள்
18 மாநிலங்களில் ஆட்சி
303 பாராளுமன்ற உறுப்பினர்கள்
64 மாநிலங்களவை உறுப்பினர்கள்
1460க்கும் மேற்பட்ட இயக்குநர்கள்

வன்வாசி கல்யாண் ஆஸ்ரம்
வன்பந்து பரிஷத் 
சம்ஸ்கார் பாரதி ( பண்பாட்டு அமைப்பு )
விஞ்ஞான் பாரதி ( அறிவியல் அமைப்பு )
லகு உத்யோக் பாரதி ( சிறுதொழில் அமைப்பு )
சேவா சஹ்யோக் ( நமக்கு நாமே தொண்டு செய்யும் அமைப்பு )
சேவா இண்டர்நேஷனல் ( உலகளவில் தொண்டுசெய்யும் அமைப்பு )
ராஷ்ட்ரிய சேவா சமிதி ( தேசிய அளவில் தொண்டு செய்யும் 
அமைப்பு )
ஆரோக்ய பாரதி
துர்கா வாஹினி
சாமாஜிக் சம்ரஸ்தா மஞ்ச் ( சமுதாய ஒருங்கிணைவு மேடை )
ஆர்கனேஸர்
பாஞ்ச்யஜன்ய
ஷ்ரீராம்ஜன்ம பூமி மந்திர் நிர்மாண் ன்யாஸ் ( ஷ்ரீ ராம் ஜன்ம பூமி கோயில் கட்டும் அமைப்பு )
தீன் தயாள் சோத் சன்ஸ்தான் ( தீன் தயாள் ஆய்வு மையம்)
பாரதீய விச்சார் 
சாதனா ( இந்திய கருத்தியல் அமைப்பு)
பாரத் விகாஸ் பரிஷத் ( இந்திய வளர்ச்சி அமைப்பு)
ஜம்மூ காஷ்மீர் ஸ்டடி சர்க்கிள்
த்ருஸ்டி சன்ஸ்தான் ( கண்பார்வை நிறுவனம்)
ஹிந்து ஹெல்ப்லைன்
ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கம்
#ஹிந்து முன்னணி
அகில் பாரதிய சாஹித்ய பரிஷத் ( அகில் இந்திய இலக்கிய அமைப்பு 
)
பாரதிய கிஸான் சங்கம் ( இந்திய விவசாய சங்கம்)
விவேகானந்த கேந்த்ர
தருண் பாரத் ( இளைஞர் அமைப்பு )
அகில் பாரதிய க்ராஹக் பஞ்சாயத் ( அகில இந்திய வாடிக்கையாளர் சேவை மையம் )
ஹிந்துஸ்தான் சமாச்சார் ( ஹிந்துஸ்தான் செய்தித்தாள்)
விஷ்வ சன்வாத் கேந்த்ர ( உலக கலந்துரையாடல் மையம்)
ஜன 
கல்யாண் ரக்த பேடீ ( இரத்த தான அமைப்பு
இதிகாஸ் ஸங்கலன் சமிதி ( இதிகாஸ ஒருங்கிணைப்பு மையம்)
ஸ்த்ரீ சக்தி ஜாக்ரண் ( பெண் சக்தி விழிப்புணர்வு மையம் )
ஏகல் வித்யாலய் ( பள்ளிகள்)
தர்ம ஜாகரண் ( மத விழிப்புணர்வு மையம்)
பாரத் பாரதி
சாவர்க்கர் அத்யாஸன் ( சாவர்கள் பயிற்சி மையம்) 
ஷிவாஜி அத்யாஸன் ( ஷிவாஜி பயிற்சி மையம்)
பதித் பாவன் சங்கடன்
ஹிந்து ஏக்தா ( ஹிந்து ஒற்றுமை அமைப்பு)
இன்னும் இதுபோன்ற பற்பல அமைப்புகள்

இவையெல்லாம் சேர்ந்த்துதான் ஆர் எஸ் எஸ். காங்கிரஸோ கம்யூனிஸ்ட்டோ அவ்வளவு சீக்கிரமாக இதன் வேரை அசைக்கக்கூட முடியாது. 92 ஆண்டுகளாக 
வளர்ந்திருக்கும் இந்த ஆர் எஸ் எஸ் அடுத்த 1000 ஆண்டுகள் இங்கு ஆட்சி செய்யும்.
என கணிக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் என்ற பிரம்மாண்டத்தை எதிர்த்து எதிரிகள் குரைப்பது, சூரியனை பார்த்து நாய் குரைப்பதை போன்றது. ஆகவே எந்த குரைப்பிற்கும் அவர்கள் பதில் தர மாட்டார்கள். 

 நன்றி 🇮🇳

வியாழன், ஜனவரி 16, 2020

apj. Abdul Kalam அப்துல் கலாம் அவர்கள் வாழ்வில்,

கண்ணீருடன் படித்து பகிா்கிறேன்.இன்றுமுதல் நானும் கடைபிடிக்க போகிறேன்.

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில்  ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில் படிக்க நேரிட்டது.... 
இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் , 
அவரது இளமைக்கால வாழ்க்கை :

"நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்...

என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு செல்வது வழக்கம்...

சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் , என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ..... ஆனால் என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டார்....

‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’ என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரியவில்லை ..

என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு வருத்தம் தெரிவித்தார் என் தாய்...
ஆனால் அதற்கு என் தந்தையோ .."எனக்கு கருகிய ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் " என்று பதில் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ....

சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்... நான் மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம் சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன் :
" அப்பா ... உங்களுக்கு உண்மையாகவே கருகிய ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?"

சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை , என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்....
" மகனே...உங்க அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
களைத்துப் போய் இருப்பார் ... 
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்...
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ....
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ....”

# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது...
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது...

ஆம்..
“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை ... 
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்....”

# இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு சாப்பிட அமர்ந்தபோது ...
எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான் போய் இருந்தது...
ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய் இருந்தது...

மனைவியின் உணவை இனி ஒருபோதும் குறை சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு , இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்...

# எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின் கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே...!!!

# நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல ... 
ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்...3 விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...👌👇📢👊

👉நேரம்
👉இறப்பு
👉வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...

👉நகை
👉பணம்
👉சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...

👉புத்தி
👉கல்வி
👉நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...

👉உண்மை
👉கடமை
👉இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...

👉வில்லிலிருந்து அம்பு
👉வாயிலிருந்து சொல்
👉உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...

👉தாய்
👉தந்தை
👉இளமை

7.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...

👉தாய்
👉தந்தை
👉குரு
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

அகதிகள்,

NASEER MISBAHI

*வாழிடம் அற்றவர்களாக வாழும் நிலையில் இருந்து எங்களை பாதுகாத்திடு யாஅல்லாஹ்*

👇👇👇

நாகரீகம் வளர்ச்சியடையாத காலத்தில் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக புதிய, புதிய இடங்களைத் தேடிச்சென்றது மனித சமூகம்.

ஆனால், வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டு நிற்கும் இந்த காலகட்டத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புதிய இடங்களைத் தேடி அலையாய் அலைந்து கொண்டிருக்கிறது மனித சமூகம்.

திட்டவட்டமான, வரையறைகள் எதையும் விதிக்க முடியாத பதத்தை கொண்டது தான் அகதி எனும் வார்த்தை.

கவலைகளையும், கொடுமைகளையும் சுமந்து, கேட்பாடற்று, வாழிடமற்று அலையாய், அலைந்து கொண்டிருக்கும் அந்த மனித சமூகம் தான் அகதிகள்.

ஐ. நா., வால் உலக மக்களிடையே அகதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 1951 –ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்ட தினம் தான் ஜூன் 20 –ஆம் தேதி அகதிகள் தினம்.

போர், பயங்கரவாதம், இனம், மொழி, மதம், அரசியல், பொருளாதாரம், தட்பவெட்பம் என இப்படியான பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி தாம் வசித்த தேசத்திற்குள்ளும், இன்ன பிற தேசங்களுக்குள்ளும் அகதிகளாக இடம் பெயர்ந்து உணவு, குடிநீர், உறைவிடம், மானம், மருத்துவம், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, உயிர் என பல்வேறு இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாகி வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவியாய் தவித்து வருபவர்கள் தான் அகதிகள்.

கடந்த 2016 –ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான கணெக்கெடுப்பின் படி உலகளவில் அகதிகளாக வாழ்வோரின் எண்ணிக்கை 63 கோடிக்கும் மேல்.

ஒவ்வொரு நிமிடமும் 8 பேர் தங்கள் நாட்டை விட்டு அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சமடைகின்றனர் என்றும் சராசரியாக நாள் ஒன்றுக்கு நாட்டை விட்டு, தங்கள் வாழ்விடங்களை விட்டு ஏதோ காரணங்களுக்காக 28,300 பேர் வெளியேறுகின்றனர் என்றும் அறிக்கையைத் தருகிறது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம். ( UNHCR - United Nations High Commissoner for Refugees )

இன்னும் கொஞ்ச காலத்தில் அகதிகள் முகாம்களின் எண்ணிக்கை உலக நாடுகளின் எண்ணிக்கையை விட அதிகரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சர்வதேச அளவில் அகதிகளாக இருப்பவர்கள் மிக அதிகமானவர்கள் முஸ்லிம்களே!

முதல் இரண்டு இடங்களில் முறையே ஃபலஸ்தீன, சிரிய மக்களே இடம் பெறுகின்றார்கள்.

கடந்த 2017 –ஆம் ஆண்டு கணக்கின் படி 90 லட்சம் சிரிய மக்கள் அகதிகளாக இருக்கின்றார்கள் என்கிறது ஐ. நா.,

துருக்கியில் 30 லட்சம் பேரும், லெபனானில் 10 லட்சம் பேரும், ஜோர்டானில் 6 லட்சத்து 57000 பேரும் இதர மக்கள் சொந்த நாட்டிலும், இன்னும் சிலர் அண்டை நாடுகளிலும் அகதிகளாக இருக்கின்றனர்.

அடுத்த இடங்களில் ஆஃப்கானிஸ்தான், ஈராக், சூடான், சோமாலியா, மியான்மர், இலங்கை, வட ஆப்பிரிக்க நாடுகளைச் சார்ந்த முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

இவர்களெல்லாம் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் மற்றும் உள்நாட்டு குழுக்களின் போர், மற்றும் சமய ரீதியான காரணங்களுக்காக அகதிகளாக்கப்பட்டவர்கள்.

அடுத்து, இலங்கைத் தமிழர்கள் மொழி மற்றும் இன ரீதியான காரணங்களுக்காக உலகின் பல பாகங்களிலும் அகதிகளாக தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றனர்.

மிகச் சிலரே பொருளாதாரம், அரசியல், தட்பவெட்பம் ஆகிய நோக்கங்களுக்காக அகதிகளாக இருக்கின்றனர்.

இப்படி அகதிகளாக தஞ்சம் கேட்டு செல்பவர்களை ஏற்றுக் கொள்வதற்கு சர்வதேச அளவில் 147 நாடுகள் ஐ. நா., விற்கு உறுதி அளித்துள்ளன.

உறுதியளித்த படி இந்தியாவில் இலங்கைத் தமிழர்களும், மியான்மர் முஸ்லிம்களும் அகதிகளாக வந்த போது இந்தியா ஏற்றுக் கொண்டு இன்னும் அவர்களுக்காக பெரிய அளவிலான நிதிகளைச் செலவளித்து வருகின்றது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அகதிகளுக்கு ஆதரவாக பல சட்ட திட்டங்களை வகுத்திருக்கும் ஐ. நா., மன்றம் அகதிகளுக்கென தனி ஆணையத்தையும் அமைத்தது.

(அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் – UNHCR ) United Nations High Commissoner for Refugees.

அகதிகளுக்கு தேவையான பாதுகாப்பு, உணவு, குடிநீர், சுகாதாரம், மருத்தும், கல்வி, தங்குமிடம் போன்ற வசதிகளை இந்த ஆணையத்தின் மூலம் செய்து தருமாறு சர்வதேச நாடுகளை ஐ. நா., கேட்டுக் கொண்டது.

எனினும், உலக நாடுகள் அகதிகளின் நலனில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. பிற நாடுகளின் பிரச்சனையாக கருதுகின்றனவே தவிர மனித சமூகத்திற்கான பிரச்சனையாக கருதவே இல்லை.

உண்மையில், பயங்கரவாதம், உள் நாட்டு போர், இன, மத, மொழி, ரீதியிலான காரணங்கள் தான் அகதிகளை உருவாக்குகின்றது என்பதை தார்மீகமாக ஏற்றுக் கொண்டு மனிதாபிமானத்துடன் அணுகி இனி உலகெங்கும் அகதிகள் உருவாகாத படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், அகதிகளாக இருப்பவர்களை அவரவர்களின் சொந்த தேசங்களுக்கு திரும்ப அனுப்பி வைத்து, தொலைத்த வாழ்க்கையை மீட்டுக் கொடுக்க ஐ. நா., உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுத்த முன் வரவேண்டும் என்பதோடு இனி உலகின் எந்த பாகத்திலும், எந்த நாட்டிலும் அகதிகள் உருவாகாத நிலையை உருவாக்க வேண்டும்.

அகதி வாழ்க்கை என்றால் என்ன?

குடியுரிமை பறிக்கப்பட்டு அகதி வாழ்க்கைக்குள் தள்ளப்படும் ஒரு மனிதன் இழக்கும் பேரிழப்புகள் என்பது வார்த்தையில் சொல்லிட இயலாது.

இதுநாள் வரை  வழங்கப்பட்டிருந்த இன, நிற, மொழி, மத, ஜாதி அமைப்புகளைத் தாண்டிய சமத்துவ உரிமையை இழக்க நேரிடும்.

எழுத்தின், பேச்சின், கருத்தின் வழியே பெற்று வந்த சுதந்திர உரிமை பறிக்கப்பட்டு விடும்.

ஆள்பவர்கள், அநியாயக்காரர்களின் சுரண்டலுக்கெதிராக பெற்றுவந்த உரிமையும் போய்விடும்.

இறைவழிபாடு, ஷரீஅத் சட்டங்களை பின்பற்றுவது, மத அடிப்படையில் வாழ்வது, அதைப் பரப்புவது போன்ற சமய உரிமைகள் இல்லாமல் ஆகிவிடும்.

பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு எழுத்தறிவில்லாத, படிப்பறிவில்லாத அறிவிழந்த அதிகாரமற்ற சமூகமாக மாறும் நிலை உருவாகும்.

அரசியல் அமைப்பிற்கு உடபட்டு இது நாள் வரை பெற்று வந்த சட்டம் ஒழுங்கு, நீதிமன்றம் ஆகியவைகள் மூலம் அடைந்து வந்த நீதிகளும், உரிமைகளும் மறுக்கப்படும்.

தாய், தந்தையரை மனைவி மக்களை பிரிந்து சென்று, இன்பங்களை இழந்து கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய வீடுகள், தோட்டங்கள் நிறுவிய நிறுவனங்கள், சேமித்த செல்வங்கள், ஆபரணங்கள் என இதுநாள் வரை அனுபவித்து வந்த சொத்துரிமையை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

இதுபோக இன்னும், ஏராளமான அம்சங்களை இழந்து இரண்டாம், மூன்றாம், நான்காம் தர குடிமக்களாக வெட்ட வெளியில், முகாம்களில், கொட்டடியில் எவ்வித வசதிகளும் இன்றி வாழ நேரிடும்.

கற்பிழப்புகள், சித்ரவதைகள், தொற்று நோய்கள், சுகாதார மின்மை, உணவின்மை, உரிமையின்மை என கொடுமையான, கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கு பெயர் தான் அகதி வாழ்க்கை.

எல்லாவற்றிற்கும் மேலாக “இப்படியொரு வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா?” என்கிற விரக்தி வார்த்தை தினந்தோரும் உள் நெஞ்சை குடைந்து கேள்வியாய் கேட்டுக் கொண்டிருக்கும்.

இந்த வாழ்க்கையை வாழச் செய்யத்தான் ஆளும் மத்திய ஃபாசிஸ அரசு CAA, CAB, NPR, NRC எனும் பேரில் சட்டங்களை இயற்றி முயன்று வருகிறது.

இருக்கிற அகதிகளின் பிரச்சனைகளை தீர்க்க உலக நாடுகளை ஐ. நா., கேட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தான் புதிய அகதிகளை, வாழிடம் அற்றவர்களை உருவாக்க துடித்துக் கொண்டிருக்கின்றது ஆளும் மத்திய பாஜக ஃபாசிஸ அரசு.

போராட்டங்கள் எவ்வளவு நடத்தப்பட்டாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெற மாட்டாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகின்றார்.

அமைதி வழியில் போராடுகிற பொதுமக்களைப் பார்த்து “வன்முறையாளர்களே பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தாதீர்கள்” என பிரதமர் மோடி கூறுகின்றார்.

சிறுபான்மை முஸ்லிம்கள் முற்றிலும் துடைத்தெறியப்பட்டு 2021 க்குள்ளாக இந்து ராஷ்ட்ரம் அமைக்கப்படும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகாவத் கொக்கரிக்கின்றார்.

எனவே அகதிகளாக்கத் துடிக்கிற, நம்மை அச்சுறுத்துகிற இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கெதிராக போராட்டக் களம் கண்டிருக்கிற நாம் அல்லாஹ்வின் மீது அதீத நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்ய கடமைப் பட்டுள்ளோம்.

ஏனெனில், அடக்குமுறையான வாழ்க்கையை எதிர்கொண்டு வாழ்வதில் இருந்து பாதுகாப்பு தேடுமாறு மாமறையும், மாநபி {ஸல்} அவர்களும் நம்மை வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

மூஸா {அலை} அவர்களின் சமூகம் ஃபிர்அவ்னின் கொடுங்கோன்மைக்கு எதிராக செய்த பிரார்த்தனை…

عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا‌ ۚ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏
      
“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள்.

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏

“(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்கள்.) ( அல்குர்ஆன்: 10:85, 86 )

ஆஸியா (ரலி) அவர்கள் ஃபிர்அவ்னின் கொடுங்கோன்மைக்கு எதிராக செய்த பிரார்த்தனை…

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ اٰمَنُوْا امْرَاَتَ فِرْعَوْنَ‌ۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ وَنَجِّنِىْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார். ( அல்குர்ஆன்: 66:11 )

பொதுவாக இறைநம்பிக்கையாளர்கள் கேட்க வேண்டிய பிரார்த்தனை…

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (286)

(முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக!

எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!

எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”        ( அல்குர்ஆன்: 2: 286 )


اَللّٰهُمَّ اِنَّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْفَاقَةِ وَالذِّلَّةِ وَاَعُوْذُ بِكَ مِنْ اَنْ اَظْلِمَ اَوْ اُظْلَمَ

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் வறுமை, சிரமம், கேவலம், ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். இன்னும் நான் அநியாயம் செய்வதை விட்டும், அநியாயம் செய்யப்படுவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

اللَّهمَّ إني أعوذ بك من الهَمِّ والحَزَنِ ، وأعوذُ بك من العجْزِ والكَسَلِ، وأَعوذُ بك من البخْلِ والجُبْنِ ، وأعوذ بك من غَلَبَةِ الدَّيْنِ وقَهرِ الرجال

யாஅல்லாஹ் நான் உன்னிடம் கவலைகள், துக்கங்களை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன். மேலும் இயலாமை, சோம்பலை விட்டும் பாதுகாவல் கோருகிறேன். மேலும் கஞ்சத்தனம், கோழைத்தனத்தை விட்டும் பாதுகாவல் கோருகிறேன். மேலும் கடன் பளுவையும், மனிதர்களின் அடக்கு முறைகளையும் விட்டும் பாதுகாவல் கோருகிறேன்!

இறைநம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனை பலன் தரும்...

قال حدثنا عفان من كتابه قال حدثنا سليمان يعني ابن المغيرة قال ثنا ثابت عن عبد الرحمن بن أبي ليلى عن صهيب قال كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى همس شيئا لا نفهمه ولا يحدثنا به قال فقال رسول الله صلى الله عليه وسلم فطنتم لي قال قائل نعم قال فإني قد ذكرت نبيا من الأنبياء أعطي جنودا من قومه فقال من يكافئ هؤلاء أو من يقوم لهؤلاء أو كلمة شبيهة بهذه شك سليمان قال فأوحى الله إليه اختر لقومك بين إحدى ثلاث إما أن أسلط عليهم عدوا من غيرهم أو الجوع أو الموت قال فاستشار قومه في ذلك فقالوا أنت نبي الله نكل ذلك إليك فخر لنا قال فقام إلى صلاته قال وكانوا يفزعون إذا فزعوا إلى الصلاة قال فصلى قال أما عدو من غيرهم فلا أو الجوع فلا ولكن الموت قال فسلط عليهم الموت ثلاثة أيام فمات منهم سبعون ألفا فهمسي الذي ترون أني أقول اللهم يا رب بك أقاتل وبك أصاول ولا حول ولا قوة إلا بالله

 ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஹுனைனில் நபிகளார் ஒரு நாள் சுபுஹ் தொழுகையை தொழவைத்தார்கள். தொழுகையிலோ அல்லது தொழுகையின் முடிவிலோ திடீரென நபி {ஸல்} அவர்கள் முனகும் சப்தத்தை நாங்கள் கேட்டோம்.

அந்த முனகல் சப்தமும், அதன் வார்த்தைகளும் எங்களுக்கு விளங்கவில்லை. அதற்கான காரணமும் எங்களுக்குத் தெரியவில்லை.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தொழுது முடித்ததும் இது குறித்து நாங்கள் வினவினோம்.
அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் “நீங்கள் அதை கேட்டீர்களா? என எங்களிடம் வினவினார்கள்.

ஆமாம்,  ”நாங்கள் கேட்டோம்” என்று கூறியதும், நபி {ஸல்} அவர்கள் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்:

”தோழர்களே! நமக்கு முன்னர் வாழ்ந்த ஒரு நபி, தமது சமுதாயம் பெரும்பான்மை பலத்துடனும், எவராலும் எளிதில் வீழ்த்திட முடியாத ஆற்றலுடனும் வாழ்ந்து வருவதை நினைத்து பெருமிதம் கொண்டார்.

خيـّر الله تعالى ذلك النبي وأصحابه بأمر من ثلاثة أمور 
1- أن يسلط عليهم عدواً شديداً يحتل بلادهم ويستبيحها ، فيأسرهم ويستذلهم 
2- أو أن يعاقبهم بالجوع الشديد 
3- وإما أن يرسل عليهم الموت فيقبض منهم الكثير

இந்த பெருமிதம் மிகவும் ஆபத்தானது என்பதை அந்த நபிக்கு அறிவுறுத்திட நினைத்த வல்ல ரஹ்மான் அந்த நபியிடத்தில் “நபியே! உமது சமுதாயம், உம்முடைய பெருமிதத்தால் பெரும்பான்மை பலத்தை இழக்கும் அபாயகரமான ஓர் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

அவர்களின் பெரும்பான்மை பலத்தை குறைத்திடுவதற்காக பின் வருகிற மூன்று முடிவுகளில் ஏதேனும் ஒன்றை நீரும், உம் சமூக மக்களும் தேர்ந்தெடுத்து நம்மிடம் தெரிவிக்க வேண்டும்.

1. பலமான எதிரிகளை அவர்களின் மீது நான் சாட்டுவதன் மூலம் அவர்களின் எண்ணிக்கையை குறைத்திடுவேன். 2. பசி, பஞ்சம், பட்டினி போன்றவைகளை அவர்களின் மீது சாட்டி சோதித்திடுவேன். 3. இவ்விரண்டுமின்றி இயற்கையான மரணத்தின் மூலம் உம் சமூகத்தின் எண்ணிக்கையை குறைத்திடுவேன்.

இம்மூன்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பீராக! என்று வஹீ மூலம்  அறிவித்தான்.

இறைச் செய்தியை பெற்றுக் கொண்ட அந்த நபி தம் சமூகத்தார்களை ஒன்றிணைத்து நடந்த சம்பவங்களை விளக்கிக் கூறி, இது இறைவனின் கட்டளை மூன்றில் எதை நீங்கள் தேர்வு செய்கின்றீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு அம்மக்கள் “நீங்கள் தான் அல்லாஹ்வின் தூதராய் இருக்கின்றீர்கள்! எங்களின் வாழ்விற்கு எது சிறந்த முடிவாக இருக்கும் என்பதை தாங்களே நன்கு அறிவீர்கள். ஆகவே, நீங்கள் தேர்ந்தெடுக்கிற எந்த முடிவாக இருந்தாலும் நாங்கள் முழு மனதோடு, விரும்பி ஏற்றுக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.

உடனடியாக, அந்த இறைத்தூதர் தொழுகையில் ஈடுபட்டார். நீண்ட நேரம் அந்த இறைத்தூதர் தொழுகையில் ஈடுபட்டார். ஏனெனில், அந்த சமூகத்திற்க்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக தொழுகையில் ஈடுபடுவார்கள்.

தொழுது முடித்ததும் அல்லாஹ் அவருக்கு தெளிவான முடிவெடுக்கும் ஆற்றலை வழங்கினான்.

தாம் தெரிவு செய்திருக்கிற அந்த முடிவை அல்லாஹ்வின் சன்னிதானத்தில் முறையிட்டார்!

என் இறைவனே! என் உம்மத்தினரின் மீது பலம் வாய்ந்த எதிரிகளை நீ சாட்டி விடாதே! அவர்கள் என் சமூக மக்களை கேவலப்படுத்தி விடுவார்கள்.

என் இறைவனே! என் உம்மத்தினரின் மீது பசி, பட்டினி, பஞ்சம் போன்றவற்றை சாட்டிவிடாதே! அதனால் உன் மீது இருக்கிற நம்பிக்கையில் என் சமூகத்தார்கள் குறைவு செய்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்.

என் இறைவனே! இயற்கையான மரணத்தையே என் சமூக மக்களுக்கு வழங்கி விடு! அது தான் கௌரவமாகவும், சிறந்ததாகவும் இருக்கும் என நான் கருதுகின்றேன். அதையே நாங்கள் தேர்ந்தெடுக்கின்றோம்” என்று துஆ செய்தார்.

உடனடியாக, அல்லாஹ் அந்த துஆவை கபூல் செய்தான். ஆம்! அன்றைய நாளிலேயே அந்த சமூகத்தின் எழுபதினாயிரம் மக்கள் இறந்து போனார்கள்” என்று கூறிய அண்ணலார் இந்தச் செய்தியை அல்லாஹ் எனக்கு அறிவித்துக் கொடுத்தான்.

أما أنا فأقول : " اللهم بك أقاتل ، وبك أحاول ، وبك أصاول ، ولا ق

وة إلا بك

ஆதலால், நான் அல்லாஹ்விடம் “யா அல்லாஹ்! உன் அருளாலேயே நான் சன்மார்க்க சேவை செய்கின்றேன். உன் துணை கொண்டே எதிரிகளை நான் எதிர் கொள்கின்றேன். உன்னையன்றி எனக்கோ, என் சமூகத்திற்கோ எந்த ஆற்றலும், வலிமையும் இல்லை” என்று மன்றாடினேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

فقال أصحابه من بعده : اللهم بك نقاتل ، وبك نحاول ، وبك نصاول ، ولا قوة إلا بك 
وذلت ألسنتهم بها

இதைக் கேட்டதும், நபித்தோழர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பெருமிதம் குறைந்து, அல்லாஹ்வின் மீதான அச்சமும், ஆதரவும் சூழ்ந்து கொள்ள  அனைவரும் வானை நோக்கி கையை உயர்த்தி ”அல்லாஹ்வே! உன் அருளாலேயே நாங்கள் எதிரிகளுடன் போர் புரிகிறோம். உன் துணை கொண்டே நாங்கள் தீனின் சேவையைச் செய்கிறோம். எங்களுக்கு உன்னையன்றி எந்த ஆற்றலும், வலிமையும் இல்லை”. என்று கூறினர்

அல்லாஹ்வும் ஹுனைனில் ஏராளமான ஃகனீமத் பொருள்களோடு மகத்தான வெற்றியை வழங்கினான்.

வெற்றிக்குப் பிறகு நபித்தோழர்களின் இந்த செயல் குறித்து விமர்சித்து இறைவசனத்தை இறக்கியருளினான்.

لَقَدْ نَصَرَكُمُ اللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَيْئًا وَضَاقَتْ عَلَيْكُمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُمْ مُدْبِرِينَ  ثُمَّ أَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ

“இதற்கு முன்னர் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்துள்ளான். இப்போது, ஹுனைன் போர் நடைபெற்ற நாளிலும் அவன் உதவி செய்ததை நீங்கள் பார்த்தீர்கள். இன்று உங்களின் பெரும்பான்மை உங்களை இறுமாப்பில் ஆழ்த்தியிருந்தது.

ஆயினும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் தரவில்லை. மேலும், பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் உங்களுக்கு குறுகிப் போய் விட்டது. பின்னர் நீங்கள் புறமுதுகிட்டு ஓடிவிட்டீர்கள்.

பிறகு, அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் தனது சாந்தியை இறக்கியருளினான்.                                        ( அல்குர்ஆன்: 9: 25, 26 )

ஆணவப்போக்கும்… அதிகாரத்திமிரும்…

உலகில் ஆணவமும், அதிகார பலமும் நிறைந்தவர்கள் சாமானிய மக்களுக்கு எதிராக எவ்வாறான நிலைப்பாடுகளை எல்லாம் மேற்கொள்வார்கள் என்றும், அவர்கள் மேற்கொள்கிற நிலைகளுக்குப் பின்னால் எவ்வாறான சாயமெல்லாம் பூசுவார்கள் என்றும் அல்லாஹ் அருள் மறையிலே குறிப்பிடுகின்றான்.

செய்வதெல்லாம் குழப்பம்.. ஆனால் சொல்லிக் கொள்வதோ சீர்திருத்தம் என்று..

‏وَاِذَا قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِىْ الْاَرْضِۙ قَالُوْاۤ اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ

“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.

اَلَا ۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰـكِنْ لَّا يَشْعُرُوْنَ‏

நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.                    ( அல்குர்ஆன்: 2: 11, 12 )

அதிகார மமதை அழிவில் ஆழ்த்தி விடும்…

இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கிறது. மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கின்றார்கள் எங்களிடம் தான் அதிகாரம் உள்ளது என்று கூறும் அமித்ஷாவின் கவனத்திற்கு..

فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ (15) فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْآخِرَةِ أَخْزَى وَهُمْ لَا يُنْصَرُونَ (16)

ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம் கொண்டனர். "எங்களை விட வலிமை மிக்கவர் யார்?'' எனக் கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட வலிமையானவன் என்பதை அவர்கள் காணவில்லையா? அவர்கள் நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர்.

எனவே இவ்வுலக வாழ்க்கையிலேயே இழிந்த வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காக கெட்ட நாட்களில் அவர்கள் மீது கடும் புயல் காற்றை அனுப்பினோம். மறுமையின் வேதனை (இதை விட) மிகவும் இழிவுபடுத்துவது. அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.                  ( அல்குர்ஆன்: 41: 15, 16 )

ஆணவப் போக்கின் உச்சகட்டம்…

نَـتْلُوْا عَلَيْكَ مِنْ نَّبَاِ مُوْسٰى وَفِرْعَوْنَ بِالْحَـقِّ لِقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏ 

اِنَّ فِرْعَوْنَ عَلَا فِى الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِيَـعًا يَّسْتَضْعِفُ طَآٮِٕفَةً مِّنْهُمْ يُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَيَسْتَحْىٖ نِسَآءَهُمْ‌ ؕ اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِيْنَ‏

  وَنُرِيْدُ اَنْ نَّمُنَّ عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا فِى الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَٮِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِيْنَۙ‏ 
وَنُمَكِّنَ لَهُمْ فِى الْاَرْضِ وَنُرِىَ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا مِنْهُمْ مَّا كَانُوْا يَحْذَرُوْنَ‏ 

“மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்குக் கூறுகிறோம்.

ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான்.

அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்னும், ஹாமானும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம். (அல்குர்ஆன்: 28: 3-6)

அதிகாரத்திமிர் பிடித்தவர்கள் எந்த எல்லை வர வேண்டுமானாலும் போவார்கள்… அல்லாஹ்வின் ஆற்றல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது…

قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَـنُخْرِجَنَّكَ يٰشُعَيْبُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْيَتِنَاۤ اَوْ لَـتَعُوْدُنَّ فِىْ مِلَّتِنَا‌ ؕ قَالَ اَوَلَوْ كُنَّا كَارِهِيْنَ ۚ‏

“அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), “ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள் - அதற்கவர், “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று கேட்டார்.

قَدِ افْتَرَيْنَا عَلَى اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِىْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰٮنَا اللّٰهُ مِنْهَا‌ ؕ وَمَا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّعُوْدَ فِيْهَاۤ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّنَا‌ ؕ وَسِعَ رَبُّنَا كُلَّ شَىْءٍ عِلْمًا‌ؕ عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا‌ ؕ رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَـقِّ وَاَنْتَ خَيْرُ الْفٰتِحِيْنَ‏

“உங்கள் மார்க்கத்தை விட்டு, அல்லாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதற்கு திரும்பவே மாட்டோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்.

அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்“ (என்று கூறி), “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்).                                             (அல்குர்ஆன்: 7: 88, 89 )

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِرُسُلِهِمْ لَـنُخْرِجَنَّكُمْ مِّنْ اَرْضِنَاۤ اَوْ لَـتَعُوْدُنَّ فِىْ مِلَّتِنَا‌ ؕ فَاَوْحٰۤى اِلَيْهِمْ رَبُّهُمْ لَــنُهْلِكَنَّ الظّٰلِمِيْنَۙ‏

“நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள், அப்போது: “நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்” என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்.

وَلَـنُسْكِنَنَّكُمُ الْاَرْضَ مِنْۢ بَعْدِهِمْ‌ؕ ذٰ لِكَ لِمَنْ خَافَ مَقَامِىْ وَخَافَ وَعِيْدِ‏

“நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்” (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்).                    ( அல்குர்ஆன் 14: 13, 14 )

சமகால அகதிகள் உய்குர் முஸ்லிம்கள்…
சீனாவின் தெற்குப் பகுதியான ஷின்ஜியாங் கிட்டத்தட்ட நம் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா இவற்றையெல்லாம் ஒன்றாக சேர்த்தால் எவ்வளவு பெரியதாக இருக்குமோ அவ்வளவு பெரிய பரப்பளவு கொண்ட ஒரு பகுதி.

‘ஷின்ஜியாங்’ (Xinjiang) மாகாணத்தில் வசிக்கும் உய்குர் முஸ்லிம் (Uyghur) என்றால், வெள்ளிக்கிழமை எழுந்து தொழுகைக்காக மசூதிக்குச் செல்லும்போது, உலகில் வேறெங்கும் முஸ்லிம்கள் பின்பற்றாத சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மசூதி வாசலை நெருங்கியவுடன், அங்கு கையில் இயந்திர துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் சீன பாதுகாப்புப் படையினர் வரவேற்பார்கள்.

முதலில் கருவிழித்திரை ஸ்கேன் செய்யப்படும். பின்பு மொத்த உடலும் சோதனை செய்யப்படும். இவையெல்லாம் முடித்து தொழுகை நடத்துவதற்காக  மசூதிக்குள் நுழையலாம். உள்ளே சென்று தொழுகை நடத்துவதற்கு நிமிர்ந்து பார்த்தால் அங்கு பிரமாண்டமாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் (Xi jinping) படம் மாட்டப்பட்டிருக்கும்.

உய்குர் முஸ்லிம்கள் வாசிக்கும் குர்ஆன் தணிக்கை செய்யப்பட்டிருக்கும். அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை சொருகப்பட்டிருக்கும்.

ஷின்ஜியாங் பகுதியில் உள்ள பாலைவனங்களில் சீன அரசு கடந்த சில ஆண்டுகளாக,  பிரத்யேகமான ‘பள்ளிகள்’ சிலவற்றை நடத்திவருகிறது. வெளிஉலகுக்குத் தெரியாமல் நடத்தப்படும் இப்பள்ளிகளில் பயில்பவர்கள் அனைவரும் 18 வயதைத் தாண்டிய உய்குர் முஸ்லிம்கள்.

தாடி வளர்த்தால், குர்ஆனின் மூலப் பிரதியை வாசித்தால், இஸ்லாமிய வழக்கப்படி திருமணம் செய்துகொண்டால், ஹலால் உணவை உண்டால், சீன அரசின் தொலைக்காட்சி சேனலைப் பார்க்க மறுத்தால், அதிபர் ஜி ஜின்பிங்கின் படம் வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்காவிட்டால், வாட்ஸ் ஆப் பயன்படுத்தினால், இந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

ஆள் அரவமில்லாத பாலைவனத்துக்கு நடுவில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் பயிலச் செல்பவர்கள், அவர்கள் சொல்லும் ‘பாடத்தை’க் கற்க மறுத்தால், அடித்துத் துன்புறுத்தப்படலாம். மின்சார நாற்காலியில் அமரவைக்கப்படலாம். இல்லை கொன்று தூக்கி எறியப்படலாம்.

உய்குர் முஸ்லிம்களை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் மதத்தையும், கலாச்சாரத்தையும் முதலில் வேரறுக்க வேண்டும். அவர்களைச் சீனர்களாக மாற்ற வேண்டும். அதற்காக தொடங்கப்பட்டவைதான் இப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட பள்ளிகள்.

இவை பள்ளிகள் அல்ல, மூளைச் சலவை மையங்கள் எனவும், பல அரச பயங்கரவாத குற்றங்கள் நடக்கும் சிறைகள் எனவும் சர்வதேச அளவில் உய்குர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

பொதுவாகவே தன் நாட்டு மக்களைக் கண்காணிப்பதில் பெரும் பகுதி பணத்தையும், உழைப்பையும் செலவழிக்கும் நாடு சீனா. ஆனால் ஷின்ஜியாங் பகுதியில் இது பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உய்குர் முஸ்லிம்கள் பயன்படுத்தும் செல்போன்களில் அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ‘மொபைல் ஆப்’ ஒன்று அரசால் வலுக்கட்டாயமாக இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் நம் ஆதார் அட்டையைப்போல் ஒரு அடையாள அட்டை உள்ளது. இவற்றை உய்குர்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள், அலுவலகங்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் என அனைத்து இடங்களிலும் காட்ட வேண்டும்.

தன் சொந்த வீடாகவே இருந்தாலும், வீட்டுக்குள் நுழையும் நேரம், வீட்டை விட்டு வெளியேறும் நேரம் உள்ளிட்டவற்றை வீட்டு வாசலில் ஒட்டப்பட்டுள்ள ‘கியூஆர் கோடை’ செல்போனில் ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு உய்குர் வரலாற்றையோ, இஸ்லாத்தையோ பெற்றோர்கள் போதிக்கக் கூடாது. 18 வயதிற்கு குறைவானவர்கள் மத நிகழ்வுகளில் பங்கு பெறக்கூடாது. எவரும் மெக்கா புனிதப் பயணம் செல்லக்கூடாது. ஹலால் உணவை விற்கும் உணவகங்களுக்குத் தடை. இ

தை எதிர்த்து நிகழும் போராட்டங்களை ராணுவத்தைக் கொண்டு அடக்குவது, மீறுபவர்களை அரசு நடத்தும் பள்ளிகள் என்ற இந்த சிறைகளுக்கு அனுப்புகிறது சீன அரசு.

பல அடுக்கு பாதுகாப்பு, சுற்றிலும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள். மின்சாரம் பாயும் கம்பிகள் நெளியும் மிகப்பெரிய மதில் சுவர்கள் கொண்ட இந்தப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கு, நாள் முழுவதும் சீன மொழியான மாண்டிரின், சீன அரசின் கொள்கைகள், சட்டங்கள் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை அனைவரும் மனப்பாடம் செய்யவேண்டும். செங்கொடியை வணங்கவேண்டும். உய்குர் முஸ்லிம் கலாச்சாரத்தையும், இஸ்லாத்தையும் விமர்சனம் செய்ய வேண்டும். அதிபர் ஜி ஜின்பிங் எழுதிய பாடல்களை மனப்பாடம் செய்து பாட வேண்டும்.

முதலில் இதுபோன்ற இடங்கள் இல்லை என்று மறுத்து வந்த சீனா, மறுக்க முடியாத ஆதாரங்களை சர்வதேச அளவில் செயற்பாட்டாளர்கள் வெளியிட்டவுடன் ஒப்புக்கொண்டது. ஆனால், அவை சிறைச்சாலை அல்ல. மத அடிப்படைவாதம், தீவிரவாதம் உள்ளிட்டவற்றை நோக்கிச் செல்பவர்கள் மீண்டு வருவதற்காக நடத்தப்படும் பள்ளிகள் என்று மழுப்பியது.

ஆனால் 18 வயதைத் தாண்டிய இளைஞர்கள், மத்திம வயதுக்காரர்கள் அனைவரும் இப்பள்ளிகளில் சீருடைகள் அணிந்து கொண்டு பாடம் பயில்கின்றனர் (இதில் உய்குர் இன பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளும் அடக்கம்). சிறிய அறைகளில் பத்துக்கும் அதிகமானோர் தங்கிக்கொண்டு ஒரே திறந்த கழிவறையை பகிர்ந்து கொள்கின்றனர்.

இவர்கள் யாருக்கும் எப்போது வீடு திரும்புவோம் என தெரியாது. இவையெல்லாம் பள்ளியை நினைவுபடுத்துவதுபோல் இருக்கிறதா அல்லது சிறைச்சாலையை நினைவுபடுத்துகிறதா என செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  

உய்குர் இன முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு இஸ்லாமிய நாடுகள் அமைதி காக்கின்றன. அவர்களின் மதத்தை ஒரு மனநோய் என சீன அரசாங்கம் சொன்னாலும் செளதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் அமைதி காப்பதற்கான காரணம் ஒபிஓஆர் திட்டத்தின் கீழ் பல கோடிகளை இந்நாடுகள் சீனாவிடமிருந்து கடனாகப் பெற இருக்கின்றன.    

சீன அரசு இவ்வளவு பணத்தைச் செலவழித்து ஏன் இது போன்ற பள்ளிகளை நடத்தவேண்டும்? அதற்கான பதில் ஷின்ஜியாங் பகுதியில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களில் உள்ளது. சீனாவுக்குத் தேவையான 40% நிலக்கரி இங்குதான் உள்ளது. சீனாவின் உற்பத்திக்கு உதவும் காற்றாலை மின்சாரத்தில் 20% இங்கிருந்துதான் செல்கிறது.

ஷின்ஜியாங் பகுதியின் மண்ணுக்கடியில் இயற்கை எரிவாயு, எண்ணெய் வளம் கொட்டிக்கிடக்கிறது. மண்ணுக்கடியில் உள்ள வளம் கொழிக்கும் சுரங்கத்தை ஒப்பிடும்போது, சீன அரசுக்கு அதற்கு மேல் அலையும் உய்குர்கள் பெரிதாக தெரியவில்லை.

இவை எல்லாவற்றையும் விட சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் கனவுத்திட்டமான ‘ஒன் பெல்ட் ஒன் ரோடு’ திட்டத்தின் உயிர்நாடியாக ஷின்ஜியாங் கருதப்படுகிறது. இந்த ஓபிஓஆர் திட்டத்தின் கீழ் மத்திய ஆசிய நாடுகளை சீனாவுடன் இணைக்கும்  ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், கேஸ் குழாய்கள் மற்றும் ரயில் பாதைகள் ஷின்ஜியாங்கை ஊடுருவிச்  செல்கின்றன. 

உலக அளவில் சீனாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்றால் ஷின்ஜியாங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதன் விளைவே இப்பள்ளிகள்.

ஒரு கோடிக்கும் மேல் வாழ்கிற உய்குர் முஸ்லிம்களில் முக்கால் வாசியினர் இந்த தடுப்பு முகாம்களான சிறப்பு பள்ளிக் கூடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

( நன்றி: https://tamil.asiavillenews.com/article/china-uighur-suppression-and-the-history-behind-it-8107, பிபிஸி. நியூஸ், விகடன்.காம் )

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவித்திட, வெளியேற்றிட துடிக்கும் கொடிய விரோதிகளை அல்லாஹ் என்ன செய்வான்?

1. அழித்து விடுவான்….

1. அநியாயக்காரர்களை அல்லாஹ் கண்டு கொள்ளாமல் இருப்பதில்லை....

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

“இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கின்றான் என்று நீங்கள் கருத வேண்டாம். அவர்களை அவன் விட்டு வைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் தான்!        ( அல்குர்ஆன்: 14: 42 )

2. அநியாயக்காரர்களின் முடிவு தாமதமாக்கப் படுவதில்லை....

 وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ

“மேலும், கொடுமை புரிகின்றவர்கள் அவர்கள் எந்த கதியை அடையப் போகின்றார்கள் என்பதை அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள்”.  (அல்குர்ஆன்:26:227)

3. வல்லரசுகள் என்ன? எந்த கொம்பனாக இருந்தாலும் அத்து மீறினால் அழிவு நிச்சயம்....

فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ () فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا

“ஆத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: அவர்கள் பூமியில் எவ்வித நியாயமும் இன்றி பெருமையடித்துக் கொண்டு திரிந்தார்கள். “எங்களை விட வலிமை மிக்கவர் யார் இருக்கின்றார்கள்” என்று.

அவர்களைப் படைத்த இறைவன் அவர்களை விட வலிமை மிக்கவன் என்பது அவர்களுக்கு புலப்படவில்லையா? அவர்கள் நம் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில், அபசகுணம் உடைய சில நாட்களில் கடும் புயற்காற்றை நாம் அனுப்பினோம். உலக வாழ்விலேயே இழிவான வேதனையை அவர்களை சுவைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக!    ( அல்குர்ஆன்: 41: 15, 16 )

வல்லரசுக் கனவுகளை சுமந்து நிற்கிற சீனா அடுத்து இந்தியா இரு நாடுகளில் ஒன்று முஸ்லிம் சமூகத்திற்கெதிரான கொடுங்கோன்மையில் முந்தி விட்டது. இந்தியா தற்போது தயாராகிக் கொண்டிருக்கின்றது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உய்குர் முஸ்லிம்களையும், ரோஹிங்யா முஸ்லிம்களையும் வாழிடமற்ற அகதிகள் வாழ்விலிருந்து முழுமையாக பாதுகாத்து அருள்வானாக!

நம்மையும், நம் குடும்பத்தார்களையும், இந்திய தேசத்தின் எதிர்கால முஸ்லிம் தலைமுறையினரையும், இந்திய மக்களையும் கொடிய சட்டங்களில் இருந்தும், கொடுங்கோன்மை ஆட்சியாளர்களிடமிருந்தும் பாதுகாத்து அருள்வானாக!

ஃபாஸிச பாஜகவிற்கும், அதன் ஊது குழலான ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் அல்லாஹ் தக்க பாடத்தையும், முடிவையும் தந்தருள்வானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!


مصابيح المحراب : வாழிடம் அற்றவர்களாக வாழும் நிலையில் இருந்து எங்களை பாதுகாத்திடு யாஅல்லாஹ்!!!


http://vellimedaiplus.blogspot.com/2019/12/blog-post_26.html?m=1