மக்களின் கவனம் தன்பக்கம் திரும்ப வேண்டும் என ஒருவர் தாமாகவே முயற்சித்தால், அவர் தற்பெருமையில் நுழைந்துவிட்டார் என அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
செல்வமான நிலையில் பணிவு கொள்வதும், தன்னைவிட பிறரை சிறந்தவர்களாகக் கருதுவதும் அல்லாஹ்வின் நேசத்திற்குரிய செயல்களில் உள்ளவை என அலீ (ரலி) கூறியுள்ளார்கள்.
உபகாரம் செய்யுங்கள். கர்வம் உடையவர்களாக, பெருமை அடிப்பவர்களாக இருப்பவர்களை அல்லாஹ் நேசிப்பது இல்லை. ⁷4:36, 57:23, 16:23)
நபி (ஸல்) கூறினார்கள்.ஒரு அரபியை விடை அரபியில்லாதவர் சிறப்பு இல்லை; அரபியல்லாதவரை விட அரபியருக்கு எவ்விதச் சிறப்பும் இல்லை. கருப்பரை விட வெள்ளையருக்குச் சிறப்பு இல்லை. வெள்ளையரை விட கருப்பருக்கு எவ்விதச் சிறப்பு இல்லை. அறியாமைக்கால மூட பழக்க வழக்கங்களை என் காலடியில் போட்டு மிதித்து விட்டேன். முஸ்லிம்
கர்வம் கொண்டு தற்பெருமை அடிப்பவர்களையும் மக்களிடம் தங்கள் முகத்தை சுருக்கிக் கொள்பவர்களையும் பூமியில் அகந்தையுடன் நடந்து செல்பவர்களையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். என்பதை நினைவில் கொள்ள வேண்டும். [பெருமை கொண்டு] உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக்கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் யாவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை 31-18]
நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?’ என்று நபி (ஸல்) அ/வர்கள் கேட்டு விட்டு ‘பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே’ என்று விளக்கமளித்தார்கள்.அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு ரலியல்லாஹு அன்ஹு (நூல் புகாரி 4918, 6072,6657)
அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு. : 28:83
நீங்கள் அனைவரும் பணிவாக நடங்கள். சிலர் சிலர் மீது வரம்பு மீறக் கூடாது. சிலர் சிலரை விட பெருமையடிக்கக் கூடாது. ‘ என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டனர். அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு ரலியல்லாஹு அன்ஹு (நூல்: முஸ்லிம் 5109)
நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம். (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது. 17:37
அளவற்ற அருளாளனுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள் தாம், பூமியில் பணிவுடன் நடப்பார்கள்; மூடர்கள், அவர்களுடன் வாதாட முற்பட்டால் “” சாந்தி உண்டாகட்டும் “என்று கூறி (விலகி) சென்றுவிடுவார்கள். (அல்குர்ஆன்: 25:63)