புதன், மார்ச் 30, 2016

யார் இந்த காதியானி,


بسم الله الرحمن الرحيم

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் விஷயத்தில்

கிறிஸ்தவர்கள் &காதியானிகளின் நிலைப்பாடு

மாரச் 25 புனித வெள்ளியையொட்டி எடுக்கப்பட்ட தலைப்பு

Eஆநபி ஈஸா அலை அவர்கள் இறக்கவில்லை, விண்ணுக்கு உயரத்தப்பட்டுள்ளார்கள் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.. ஆனால் இந்த விஷயத்தில் காதியானிகளும், கிறிஸ்தவர்களும் மாறுபடுகிறார்கள். ஈஸா அலை இறந்து விட்டார்கள் என்பது இந்த இரு பிரிவினரின் வழிகேடான கொள்கையாகும். இவர்களில் முதலாவதாக காதியானிகளைப் பற்றி பேசுவோம்

காதியானி மதம் உருவாக காரணம்

ஒவ்வொரு காலத்திலும் முஸ்லிம்களை அழிக்க தீய சக்திகள் முயன்றும் இஸ்லாம் மென்மேலும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம்களை கொள்கை ரீதியாக பிளவுபடுத்தினால் மட்டுமே அவர்களை அழிக்க முடியும் என்ற அடிப்படையில் சில நூற்றாண்டுகளாக யூத,கிறிஸ்தவர்கள் செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர். யூத, கிறிஸ்வர்களின் ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாக அன்றும் இன்றும் செயல் படுகின்றனர். அந்த வரிசையில் காதியானிகளின் தலைவன் மிர்ஜா..

மிர்ஜாவின் வாழ்க்கை பற்றிய சிறு குறிப்புபிரிட்டீஸ்இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காதியான் கிராமத்தில் 1835 ம்பிப்ரவரி13-ல் பிறந்தான். கல்வி கற்கும் குழந்தைப் பருவத்தில் மிர்ஜா  பாரசீக மொழியையும்அரபு மொழியையும் ஓரளவுக்கு கற்றுக்கொண்டான். கூடவே மருத்துவப் பணியாற்றிய தன் தந்தையாருக்கு ஒத்தாசையாகவும் இருந்தான். பின்னர் இளமைப் பருவத்தில் தன் தந்தையின் அறிவுரையின் படி 1864 முதல் 1868 வரை சியால்கோட் நகரில் கிளர்க் பணியாற்றினார். 1888 ம் ஆண்டு தமக்கு அல்லாஹ்விடமிருந்து வஹி வந்ததாகவும் அனைவரும்தம்மிடம் பைஅத் பெறவேண்டும் என்று கட்டளையிடப்பட்டதாகவும்கூறினான்.தன்னிடம் பைஅத் பெற்ற40 முரீதுகளின் உதவியால் 1889 ம் ஆண்டுமார்ச் 23 ல் அஹ்மதிய்யா அமைப்பை உருவாக்கினான். ஆரம்பத்தில் தனக்கு இறைவனிடமிருந்து வஹீ வருவதாக மட்டுமே வாதிட்டான். பிறகு தன்னை முஜத்தித் அதாவது மார்க்கத்திற்கு புத்துயிரூட்ட  வந்தவர் என்று வாதிட்டான் 1891-ல் தன்னை மஸீஹ் ஈஸா அலை என்றும் 1898-ல் தன்னை மஹ்தீ என்றும் இறுதியாக 1899-ல் தன்னை நபியின் நிழல் என்றும் இறுதியாக 1901-ல் தன்னை நபி என்றும் வாதிட்டான். இவன் தன்னை நபி வாதிட்ட நாளிலிருந்து இவன் வெளியே நடமாடாமல் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தான். காரணம் இவனைக் கொல்வதற்கு துடிப்புள்ள பல உலமாக்கள் வெளியே எப்போதும் காத்திருந்தார்கள்

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் இந்தியாவிற்கு பிரச்சாரம் செய்ய வந்த போது இயற்கையாக இறந்து விட்டதாகவும்,  அவர்களின் கப்ரு காஷ்மீரில் இருப்பதாகவும் உளறிய மிர்ஜா...ஈஸா அலை அவர்களை மவ்த்தாக்கினால் தன்னை நபி என்று கூறும் வாதம் மக்களிடம் எடுபடும் என்பதும், அப்போது தான் ஈஸா அலை அவர்கள் மீண்டும் வருவார்கள் என்ற அறிவிப்புகள் அனைத்தையும் தனக்கு ஆதாரமாக ஆக்கிக் கொள்ள முடியும் என்பதும் மிர்ஜாவின் திட்டமாகும்.

'இறைவன் ஈசா நபியை உடலுடன் வானத்திற்கு உயர்த்திக் கொண்டான் என்றபெரும்பாலான முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு திருக்குர்ஆனில் எந்த இடத்திலும்எந்த ஆதாரமும் இல்லை (chirst in kashmir- பககம் 15)

ஒரு இடைக்குறிப்பு – அக்காலத்தில் தன்னை நபி என்று வாதிட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவாள். அவள் தன்னை நபி என்று வாதிட்டு, அதை நிரூபிக்க ஒரு கூட்டத்தையும் கூட்டி விட்டாள். இறுதியாக அவள் அதற்கான ஆதாரங்களை நபி ஸல் அவர்களுடைய ஹதீஸ்களிலிருந்து முன் வைக்க ஆரம்பித்த போது எங்கெல்லாம்   லா நபிய்ய பஃதீ எனக்குப் பின் வேறு நபி இல்லை என்று வருகிறதோ அத்தகைய நபிமொழிகளை வரிசையாக கூறிக் கொண்டே இருந்தாள். அங்கிருந்தவர்கள் அவளிடம் இதுவெல்லாம் உங்களுக்கு எதிரான ஆதாரங்கள் அல்லவா என்று கேட்க, அதற்கு அவள் கூறிய பதில் - இல்லை இதுவெல்லாம் எனக்கு சாதகமாக ஆதாரங்கள் தான். ஏனெனில் என்னுடைய பெயரே லா நபி என்பதாகும். நபி ஸல் அவர்கள் லா நபி பஃதீ என்று கூறியதெல்லாம் எனக்கே பொருந்தும். அதாவது எனக்குப் பின்னால் லா நபி வருவாள் என்பது அதன் பொருள்

மிர்ஜா தன்னை நபி என்று வாதிடும் முன்பு வரை ஈஸா அலை அவர்களின் வருகையை மறுக்கவில்லை

மஸீஹ் அதாவது ஈஸா அலை இவ்வுலகிற்கு வரும்போது அவர்களின் கரத்தின் மூலம் இஸ்லாம் உலகம் முழுவதும் பரவும்.

( மிர்ஜா எழுதிய பராஹினே அஹ்மதிய்யா – நபி என்று வாதிடும் முன்பு எழுதியது )

மிர்ஜா பிறந்த ஊர் மக்கா, மதீனாவை விட புனிதமானது என்பதும் காதியானிகளின் கொள்கையாகும்

பொய்யன் மிர்ஜா பிறந்த காதியான் என்ற ஊர் மக்கா மதீனாவை  விட புனிதமானது என்றும் இங்கு வந்து தரிசிப்பதை ஹஜ்ஜுக்கு நிகரானதாக என்றும் காதியானிகள் கருதுவார்கள். இதனை ظِلِّ حجஎன்று குறிப்பிடுகிறார்கள். கோவையிலிருந்தும் சென்னையிலிருந்தும் வருடம் தோறும் இந்த ஹஜ்ஜுக்குச் சென்று வருபவர்கள்

படிப்பினைக்குரிய மரணம்

லாகூரில் கடும் காலரா நோயினால் கி.பி. 1908 மே 25 அன்று இஷாவுக்குப் பிறகு மிர்ஜாவுக்கு வாந்தி, பேதி ஆனது மறுநாள் மே 26 அன்று பத்து மணிக்கு மரணமடைந்தான். இதேபோல  கடந்த நூற்றாண்டில் 1889-ல் ரஷாத் கலீஃபா  தன்னை ரஸூல் என்று வாதிட்டான். அதற்கடுத்த வருடமே 1990-இல் அமெரிக்காவின் ரிஸோனா மாநிலத்தில் ஃபஜ்ரு தொழுகையை முடித்து விட்டு வந்த போது கொல்லப்பட்டான். பொய்யர்களின் இறுதி முடிவுகள் இப்படித்தான்

யூத, கிறிஸ்தவர்களின் கைக்கூலியாக செயல்படும் விஷயத்தில் மிர்ஜாவும், ரஷாத் கலீபாவும் ஒன்று தான்

ஒவ்வொரு காலத்திலும் தன்னை நபி என்று வாதிட்டவர்களின் கொள்கைகள் பிரபலமாகாத நிலையில் இந்த காதியானிகள் பல நாடுகளிலும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கக் காரணம் முஸ்லிம்களை பிரித்தாளும் ஆங்கிலேயர்களின் ஆதரவு தான்.  காதியானிகளின் தலைமையிடம் லண்டனில் இருப்பதே இதற்கு சாட்சி.. இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன. மிர்ஜா தனது நூலில் “ இந்த ஆங்கிலேய ஆட்சியில் கிடைக்கும் நிம்மதி  மக்கா, மதீனாவிலும் கிடைக்காதுஎன்று எழுதினான்.

(ரூஹானி ஹஜாயின்-பாகம்-15 பக்கம்-156அவ்வாறே ரஷாத் கலீபாவும் ஆங்கிலேயர்களின் அடிவருடியாக செயல்பட்டான்.

முக்கிய குறிப்பு- கடந்த காலங்களில் முஸ்லிம்களை அழிப்பதற்கு முஸ்லிம்களையே கருவியாக யூத, கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதற்கு முஸ்தஃபா கமால், மிர்ஜா போன்ற பல சான்றுகள் வரலாற்றில் உண்டு. தற்போது அதே பாணியை மோடி  கையில் எடுத்துள்ளார்.  முஸ்லிம்களில் ஒரு சாராரைக் கொண்டே முஸ்லிம்களில் மற்றொரு சாராருக்கு தீவிரவாதப் பட்டம் கொடுத்து பிரித்தாளும் சூழ்ச்சியை  ஆரம்பித்துள்ளார். முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்
[3:21pm, 25/03/2016] மௌலவி. ஜ.காதர்பாஷா மன்பயீ: நபி ஈஸா அலை (இயேசு) சிலுவையில் அறையப்பட்டதாக நம்பும் கிறிஸ்தவர்களின் கொள்கையைப் பற்றி...

இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்தார் என்ற கிறிஸ்தவர்களின் கொள்கை அடிப்படையில் புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது.இயேசுவை யூதர்கள் கொல்ல முயற்சித்ததைஇஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவர்கள் இயேசுவுக்குப் பதிலாகவேறொருவரைத்தான் கொலை செய்தார்கள்.

சிலுவையில் அறையப்பட்டது யார் என்பதில் பல கருத்துக்கள் இருந்தாலும் அதில் சிறந்த கருத்து

وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا158النساء) عَنْ اِبْن عَبَّاس رض لَمَّا أَرَادَ اللَّه أَنْ يَرْفَع عِيسَى إِلَى السَّمَاء خَرَجَ عَلَى أَصْحَابه وَفِي الْبَيْت اِثْنَا عَشَر رَجُلًا مِنْ الْحَوَارِيِّينَ يَعْنِي فَخَرَجَ عَلَيْهِمْ مِنْ عَيْن فِي الْبَيْت وَرَأْسه يَقْطُر مَاء فَقَالَ : إِنَّ مِنْكُمْ مَنْ يَكْفُر بِي اِثْنَيْ عَشْر مَرَّة بَعْد أَنْ آمَنَ بِي قَالَ : ثُمَّ قَالَ أَيّكُمْ يُلْقَى عَلَيْهِ شَبَهِي فَيُقْتَل مَكَانِي وَيَكُون مَعِي فِي دَرَجَتِي -(وفي رواية هُوَ رَفِيقِي فِي الْجَنَّة) فَقَامَ شَابّ مِنْ أَحْدَثهمْ سِنًّا فَقَالَ لَهُ: اِجْلِسْ ثُمَّ أَعَادَ عَلَيْهِمْ فَقَامَ ذَلِكَ الشَّابّ فَقَالَ: اِجْلِسْثُمَّ أَعَادَ عَلَيْهِمْ فَقَامَ الشَّابّ فَقَالَ : أَنَا فَقَالَ: هُوَ أَنْتَ ذَاكَ فَأُلْقِيَ عَلَيْهِ شَبَه عِيسَى وَرُفِعَ عِيسَى إِلَى السَّمَاء وَجَاءَ الطَّلَب مِنْ الْيَهُود فَأَخَذُوا الشَّبَه فَقَتَلُوهُ ثُمَّ صَلَبُوهُ(تفسير ابن كثير) (نسائ) (سورة الصف) كتاب التفسير

பொருள் சுருக்கமாக --- நபி ஈஸா அலை அவர்களை யூதர்கள் கொல்வதற்காக துரத்திய போது ஒரு அறையில் தனக்கு நெருக்கமான 12 சீடர்களிடம் நபி ஈஸா அலை அவர்கள் கூறினார்கள் இப்போது உங்களில் யாரேனும் ஒருவர் தியாகம் செய்யத் தயாரா? அதாவது யூதர்கள் என்னைத் துரத்தும் இவ்வேளையில் அல்லாஹ் என்னை வானத்திற்கு உயர்த்தி விடுவான். எனக்குப் பதிலாக
[3:21pm, 25/03/2016] மௌலவி. ஜ.காதர்பாஷா மன்பயீ: என்பதால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இப்படி கூறினார்கள். இவ்வாறே உஹது போரில் நபி ஸல் அவர்களும் இவ்வாறு கூறினார்கள்

عَنْ أَنَسِ  رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي سَبْعَةٍ مِنْ الْأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ فَلَمَّا رَهِقُوهُ قَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ ثُمَّ رَهِقُوهُ أَيْضًا فَقَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبَيْهِ مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا (مسلم) بَاب غَزْوَةِ أُحُدٍ -  مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا أي ما أنصفت قريش الأنصار لكون القرشيين لم يخرجا للقتال بل خرجت الأنصار واحدا بعد واحد- وأنه يجب على الناس أن يقوا رسول الله بأنفسهم فلما قال ( من يردهم عنا ) كان ينبغي للكل أن يبادر فتأخر بعضهم ليس بإنصاف (شرح مسلم)

பைபிள் ஆதாரத்தின்படி பார்த்தாலும் இஸ்லாம் சொல்லக் கூடிய கருத்துக்குத் தான் வலுவான ஆதாரம் உள்ளது.

ஈஸா அலைசிலுவையில் அறையப்படவில்லை. விண்ணுக்கு உயர்த்தப்பட்டார்கள் என்றிருக்கும்போது அந்த வரலாற்றை அப்படியே மாற்றிஇயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கதை கட்டியவர் பவுல் என்கிற பவுலடியார். இவர் பிற்காலத்தில் உள்ளவர். உண்மையையும் பொய்யையும் கலந்து பைபிளை எழுதியவர்.  நபி ஸல் எவ்வாறு பிற்கால குழப்பவாதிகள் பற்றி எச்சரித்தார்களோ அதுபோல் இவர் விஷயமாக நபி ஈஸா அலை சூசகமாக எச்சரித்துள்ளார்கள்.  “கள்ளத் தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருவார்கள். உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்”(மத்தேயு-7:13)   பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக் கொண்டு எச்சரிக்கையாக இருங்கள் என்று ஈஸா அலை எச்சரித்தார்கள்.