கப்ருடைய வாழ்க்கையும் சில படிப்பினைகளும்
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى (55) طه
ஆறு ஊரில் நீ என்று ஒரு எழுத்தாளர் எழுதிய சிறிய இஸ்லாமிய நூல் உள்ளது. அதில் மனிதன் கடந்து வரும் பாதைகளை ஆறு பகுதிகளாகப் பிரித்து எழுதியிருப்பார்கள். மனிதனின் தொடக்கம் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதுகந்தண்டு. இது முதல் உலகம். பிறகு அவரவரின் தந்தைமார்களின் முதுகந்தண்டு. இது இரண்டாவது உலகம். பிறகு நமது தாய்மாமார்களின் கருவறை. இது மூன்றாவது உலகம். பிறகு இந்த பூமியில் பிறக்குதல். இது நான்காவது உலகம். பிறகு கப்ருடைய வாழ்க்கை. இது ஐந்தாவது உலகம். பிறகு சுவனம் அல்லது நரகம். இது ஆறாவது உலகம். இது தான் கடைசி. இன்னும் நிரந்தரம். மனிதனின் ஆறு ஊர்களில் ஐந்தாவது ஊரில் தான் அவனது உடலை விட்டும் அவனது தற்காலிமாக ஆன்மா பிரிந்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. அது தான் மண்ணறை வாழ்க்கையாகும். இந்த மண்ணறை வாழ்க்கை புரிந்து கொள்ள முடியாத மர்மமான ஒன்று.
இன்னும் சிலர் இதை விபரிக்கும் போது அல்லாஹ் தஆலா ஆரம்பமும் இல்லாதவன். முடிவும் இல்லாதவன். ஆனால் மனிதனுக்கு ஆரம்பம் உண்டு. ஆனால் முடிவு இல்லை என்று கூறுவார்கள். காரணம் மேற்காணும்ஆறு ஊர்களிலும் அவன் மாறி மாறி வசித்தாலும் ஆன்மா ஒன்று தான். அதன்படி அனைத்து மனிதர்களுக்கும் முதலாவது பிறந்த நாள் ஒன்று தான். அதாவது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்த போது அல்லாஹ் அனைத்து மனிதர்களின் ஆன்மாக்களையும் அல்லாஹ் படைத்து விட்டான். ஒவ்வொரு மனிதனும் மனித உருவில் பிறந்த தேதிகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம்.
அனைத்து மனிதர்களுக்கு முதல் தொடக்கம் ஒன்று தான் என்பதை விபரிக்கும் நபிமொழி
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ وَنَفَخَ فِيهِ الرُّوحَ عَطَسَ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ فَحَمِدَ اللَّهَ بِإِذْنِهِ فَقَالَ لَهُ رَبُّهُ يَرْحَمُكَ اللَّهُ يَا آدَمُ اذْهَبْ إِلَى أُولَئِكَ الْمَلَائِكَةِ إِلَى مَلَإٍ مِنْهُمْ جُلُوسٍ فَقُلْ السَّلَامُ عَلَيْكُمْ قَالُوا وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ ثُمَّ رَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ إِنَّ هَذِهِ تَحِيَّتُكَ وَتَحِيَّةُ بَنِيكَ بَيْنَهُمْ فَقَالَ اللَّهُ لَهُ وَيَدَاهُ مَقْبُوضَتَانِ اخْتَرْ أَيَّهُمَا شِئْتَ قَالَ اخْتَرْتُ يَمِينَ رَبِّي وَكِلْتَا يَدَيْ رَبِّي يَمِينٌ مُبَارَكَةٌ ثُمَّ بَسَطَهَا فَإِذَا فِيهَا آدَمُ وَذُرِّيَّتُهُ فَقَالَ أَيْ رَبِّ مَا هَؤُلَاءِ فَقَالَ هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ فَإِذَا كُلُّ إِنْسَانٍ مَكْتُوبٌ عُمْرُهُ بَيْنَ عَيْنَيْهِ فَإِذَا فِيهِمْ رَجُلٌ أَضْوَؤُهُمْ أَوْ مِنْ أَضْوَئِهِمْ قَالَ يَا رَبِّ مَنْ هَذَا قَالَ هَذَا ابْنُكَ دَاوُدُ قَدْ كَتَبْتُ لَهُ عُمْرَ أَرْبَعِينَ سَنَةً قَالَ يَا رَبِّ زِدْهُ فِي عُمْرِهِ قَالَ ذَاكَ الَّذِي كَتَبْتُ لَهُ قَالَ أَيْ رَبِّ فَإِنِّي قَدْ جَعَلْتُ لَهُ مِنْ عُمْرِي سِتِّينَ سَنَةً قَالَ أَنْتَ وَذَاكَ قَالَ ثُمَّ أُسْكِنَ الْجَنَّةَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أُهْبِطَ مِنْهَا فَكَانَ آدَمُ يَعُدُّ لِنَفْسِهِ قَالَ فَأَتَاهُ مَلَكُ الْمَوْتِ فَقَالَ لَهُ آدَمُ قَدْ عَجَّلْتَ قَدْ كُتِبَ لِي أَلْفُ سَنَةٍ قَالَ بَلَى وَلَكِنَّكَ جَعَلْتَ لِابْنِكِ دَاوُدَ سِتِّينَ سَنَةً فَجَحَدَ فَجَحَدَتْ ذُرِّيَّتُهُ وَنَسِيَ فَنَسِيَتْ ذُرِّيَّتُهُ قَالَ فَمِنْ يَوْمِئِذٍ أُمِرَ بِالْكِتَابِ وَالشُّهُودِ (ترمذي) باب- السلام عليكم تحية ادم وذريته - كِتَاب تَفْسِيرِ الْقُرْآنِ
சுருக்கம்- நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதுகைத் தடவி அவர்களின் சந்ததிகள் அத்தனை பேரையும் அல்லாஹ் வெளியாக்கிக் காட்டினான் என்றும் உள்ளது. அதில் ஒருவரின் பிரகாசம் அதிகம் காணப்பட்டது. யார் இவர் என கேட்ட போது இவர் உமது சந்ததிகளில் தோன்றப் போகும் தாவூத் அலைஹிஸ்ஸலாம் என்று அல்லாஹ் கூற, அவரின் வயது என்ன என்று கேட்க, நாற்பது என்று அல்லாஹ் சொன்னான். தன்னுடைய வாழ்நாளில் இருந்து 60 ஐ அவருக்குத் தந்து அதை 100 ஆக பூர்த்தியாக்க அல்லாஹ்விடம் கோரிய போது அல்லாஹ் அதை ஏற்றான். பிறகு நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு வந்தார்கள். வாழ்ந்தார்கள். சரியாக 1000 வயதிற்கு 60 வயது மிச்சம் இருக்கும்போது மலக்குல் மவ்த் வந்து உயிரைக் கைப்பற்ற அனுமதி கேட்டார்கள். எனக்கு இன்னும் 60 வயது மிச்சம் உள்ளதே என நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் கூற, மலக்குல் மவ்த் நடந்த தை நினைவு படுத்திய போது அதை நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் ஏற்க மறுத்தார்கள். அதாவது மறந்து விட்டார்கள். முதன் முதலில் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் மறந்தார்கள். இன்றும் அவர்கள் பிள்ளைகள் பல விஷயங்களை மறந்து விடுகிறார்கள். மற்றொரு அறிவிப்பில் அன்றிலிருந்து தான் அல்லாஹ் இனிமேல் முக்கியமான ஒப்பந்தங்களில் வாய் வார்த்தை கிடையாது எழுத்துப் பூர்வமாக இருக்க வேண்டும் என்பதைக் கட்டளையிட்டான்.
படிப்பினை- அனைத்து மனிதர்களின் முதல் தொடக்கம் ஒரே நாள் என்பது நாம் விளங்க வேண்டிய படிப்பினையாகும்.
கப்ருடைய வாழ்க்கை என்பது மறுமையின் முதல் நிலையாகும்
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الْآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ (ابن ماجة
கப்ரில் அடக்கம் செய்யப் படும் முன்பே உடலை விட்டும் பிரிந்த நல்ல முஃமினின் ஆன்மா ஏழாவது வானம் வரை சென்று வரும்
(கப்ருடைய இன்பம், அல்லது வேதனையை விபரிக்கும் இந்த ஹதீஸ் கடந்த வார மிஃராஜ் பயான் குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது)
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةِ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ.....ثُمَّ قَالَ إِنَّ الْعَبْدَ الْمُؤْمِنَ إِذَا كَانَ فِي انْقِطَاعٍ مِنْ الدُّنْيَا وَإِقْبَالٍ مِنْ الْآخِرَةِ نَزَلَ إِلَيْهِ مَلَائِكَةٌ مِنْ السَّمَاءِ بِيضُ الْوُجُوهِ كَأَنَّ وُجُوهَهُمْ الشَّمْسُ مَعَهُمْ كَفَنٌ مِنْ أَكْفَانِ الْجَنَّةِ وَحَنُوطٌ مِنْ حَنُوطِ الْجَنَّةِ حَتَّى يَجْلِسُوا مِنْهُ مَدَّ الْبَصَرِ ثُمَّ يَجِيءُ مَلَكُ الْمَوْتِ عَلَيْهِ السَّلَام حَتَّى يَجْلِسَ عِنْدَ رَأْسِهِ فَيَقُولُ أَيَّتُهَا النَّفْسُ الطَّيِّبَةُ اخْرُجِي إِلَى مَغْفِرَةٍ مِنْ اللَّهِ وَرِضْوَانٍ قَالَ فَتَخْرُجُ تَسِيلُ كَمَا تَسِيلُ الْقَطْرَةُ مِنْ فِي السِّقَاءِ فَيَأْخُذُهَا فَإِذَا أَخَذَهَا لَمْ يَدَعُوهَا فِي يَدِهِ طَرْفَةَ عَيْنٍ حَتَّى يَأْخُذُوهَا فَيَجْعَلُوهَا فِي ذَلِكَ الْكَفَنِ وَفِي ذَلِكَ الْحَنُوطِ وَيَخْرُجُ مِنْهَا كَأَطْيَبِ نَفْحَةِ مِسْكٍ وُجِدَتْ عَلَى وَجْهِ الْأَرْضِ قَالَ فَيَصْعَدُونَ بِهَا فَلَا يَمُرُّونَ يَعْنِي بِهَا عَلَى مَلَإٍ مِنْ الْمَلَائِكَةِ إِلَّا قَالُوا مَا هَذَا الرُّوحُ الطَّيِّبُ فَيَقُولُونَ فُلَانُ بْنُ فُلَانٍ بِأَحْسَنِ أَسْمَائِهِ الَّتِي كَانُوا يُسَمُّونَهُ بِهَا فِي الدُّنْيَا حَتَّى يَنْتَهُوا بِهَا إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَسْتَفْتِحُونَ لَهُ فَيُفْتَحُ لَهُمْ فَيُشَيِّعُهُ مِنْ كُلِّ سَمَاءٍ مُقَرَّبُوهَا إِلَى السَّمَاءِ الَّتِي تَلِيهَا حَتَّى يُنْتَهَى بِهِ إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ اكْتُبُوا كِتَابَ عَبْدِي فِي عِلِّيِّينَ وَأَعِيدُوهُ إِلَى الْأَرْضِ فَإِنِّي مِنْهَاخَلَقْتُهُمْ وَفِيهَا أُعِيدُهُمْ وَمِنْهَا أُخْرِجُهُمْ تَارَةً أُخْرَى قَالَ فَتُعَادُ رُوحُهُ فِي جَسَدِهِ فَيَأْتِيهِ مَلَكَانِ فَيُجْلِسَانِهِ فَيَقُولَانِ لَهُ مَنْ رَبُّكَ فَيَقُولُ رَبِّيَ اللَّهُ فَيَقُولَانِ لَهُ مَا دِينُكَ فَيَقُولُ دِينِيَ الْإِسْلَامُ فَيَقُولَانِ لَهُ مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ فَيَقُولُ هُوَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولَانِ لَهُ وَمَا عِلْمُكَ فَيَقُولُ قَرَأْتُ كِتَابَ اللَّهِ فَآمَنْتُ بِهِ وَصَدَّقْتُ فَيُنَادِي مُنَادٍ فِي السَّمَاءِ أَنْ صَدَقَ عَبْدِي فَأَفْرِشُوهُ مِنْ الْجَنَّةِ وَأَلْبِسُوهُ مِنْ الْجَنَّةِ وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ قَالَ فَيَأْتِيهِ مِنْ رَوْحِهَا وَطِيبِهَا وَيُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ مَدَّ بَصَرِهِ قَالَ وَيَأْتِيهِ رَجُلٌ حَسَنُ الْوَجْهِ حَسَنُ الثِّيَابِ طَيِّبُ الرِّيحِ فَيَقُولُ أَبْشِرْ بِالَّذِي يَسُرُّكَ هَذَا يَوْمُكَ الَّذِي كُنْتَ تُوعَدُ فَيَقُولُ لَهُ مَنْ أَنْتَ فَوَجْهُكَ الْوَجْهُ يَجِيءُ بِالْخَيْرِ فَيَقُولُ أَنَا عَمَلُكَ الصَّالِحُ فَيَقُولُ رَبِّ أَقِمْ السَّاعَةَ حَتَّى أَرْجِعَ إِلَى أَهْلِي وَمَالِي.. (أحمد)حدبث البراء بن عازب رضي الله عنه –مشكاة- باب ما يقال عند من حضره الموت-كتاب الجنائز
சுருக்கம்- நல்ல முஃமினின் ரூஹை கைப்பற்ற மலக்குகள் வருகை தருவார்கள். அவர்களுடன் வாசனையான கஃபன் இருக்கும்
நல்வாழ்த்துகள் கூறி அந்த ரூஹை இலகுவான முறையில் கைப்பற்றுவார்கள். பிறகு அந்த ஆன்மா விண்ணை நோக்கி வழி நெடுக வாழ்த்துகளுடன் புறப்பட்டுச் செல்லும். அந்த ஆன்மாவுக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்படும். (கெட்ட ஆன்மாவுக்காக வானத்தின் எந்தக் கதவுகளும் திறக்கப்படாது)
إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ (40) الاعراف
பிறகு முதல் வானத்தையும் தாண்டி இரண்டாவது வானம் மூன்றாவது வானம் என வழி நெடுக மலக்குகளின் வாழ்த்துக்களுடன் ஏழாவது வானம் வரை அந்த ஆன்மா செல்லும். அங்கு அல்லாஹ்வும் வாழ்த்துக்கள் கூறி, மலக்குகளிடம் அவருடைய பெயரை உயர்ந்த சுவனத்தில் எழுதி விடுங்கள் என்று கூறுவான். மேலும் மலக்குகளிடம் அவரை பூமியில் உள்ள ஆன்மா உலகிலேயே கொண்டு போய் விட்டு விடுங்கள் என்று கூறுவான். பிறகு கப்ரில் அவருக்கு விசாரணை ஆரம்பமாகும். மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் கூறுவார். நபி ஸல் அவர்களைக் காட்டி இவர்கள் யார் என்று கேட்கும்போது அதற்கும் சரியாக பதில் கூறுவார். பிறகு அவர் செல்லப் போகும் சுவனத்தைப் பார்த்து மகிழும் வகையில் அதற்கான வாசல்கள் திறக்கப்படும். மேலும் அவர் செய்த நல்ல அமல்கள் சிறந்த அழகான வாலிபரின் உருவத்தில் ஆக்கப்பட்டு அவருக்குத் துணையாக அவர் இருப்பார்....
அதுவே கெட்டவரின் ஆன்மாவாக இருந்தால் மேற்கூறிய அனைத்திலும் நேர் மாற்றமாக இருக்கும். அவருடைய ஆன்மா முதல் வானம் தாண்டி செல்ல முடியாது
ஆன்மா உலகில் நரகவாதிக்கு காலையிலும் மாலையிலும் நரகத்தை காட்டப்படும்அதுவே அவருக்கு நரகம் போன்றது. கியாமத் ஏற்பட்ட பின் அவரது சொந்த உடலுடன் நரகத்தில் நுழைய வைக்கப்படுவார்.
النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ (46) المؤمن
احتج أصحابنا بهذه الآية على إثبات عذاب القبر قالوا الآية تقتضي عرض النار عليهم غدواً وعشياً ، وليس المراد منه يوم القيامة
فَإِنَّ أَرْوَاحَهُمْ تُعْرَض عَلَى النَّار صَبَاحًا وَمَسَاء إِلَى قِيَام السَّاعَة فَإِذَا كَانَ يَوْم الْقِيَامَة اِجْتَمَعَتْ أَرْوَاحهمْ وَأَجْسَادهمْ فِي النَّار (رازي
عَنْ ابْنِ عُمَرَ رض أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ أَحَدُكُمْ عُرِضَ عَلَى مَقْعَدِهِ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ إِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمِنْ أَهْلِ الْجَنَّةِ وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ فَيُقَالُ هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ ( نسائ
சுவனவாதிக்கு நரகத்தை காட்டப்பட்டு நீ கெட்டவனாக இருந்திருந்தால் இது தான் நீ செல்லுமிடமாக இருந்திருக்கும். ஆனால் அல்லாஹ் தன் கருணையால் சுவனத்தை மாற்றி விட்டான் என சுவனம் காட்டப்படும். அது இன்னும் அவருக்கு சந்தோஷமாக இருக்கும்
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَبْدُ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتُوُلِّيَ وَذَهَبَ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ أَتَاهُ مَلَكَانِ فَأَقْعَدَاهُ فَيَقُولَانِ لَهُ مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَقُولُ أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ فَيُقَالُ انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنْ النَّارِ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعَدًا مِنْ الْجَنَّةِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَرَاهُمَا جَمِيعًا وَأَمَّا الْكَافِرُ أَوْ الْمُنَافِقُ فَيَقُولُ لَا أَدْرِي كُنْتُ أَقُولُ مَا يَقُولُ النَّاسُ فَيُقَالُ لَا دَرَيْتَ وَلَا تَلَيْتَ ثُمَّ يُضْرَبُ بِمِطْرَقَةٍ مِنْ حَدِيدٍ ضَرْبَةً بَيْنَ أُذُنَيْهِ فَيَصِيحُ صَيْحَةً يَسْمَعُهَا مَنْ يَلِيهِ إِلَّا الثَّقَلَيْنِ (بخاري)
தற்கொலை செய்து இறந்தவர்களின் ஆன்மாக்கள் ஆவியாக அலையும் என்று நம்புவது மூட நம்பிக்கை
இவ்வாறு நம்புவது கப்ருடைய வாழ்க்கையை மறுப்பது போன்றாகும். ஏனெனில் கப்ரில் அதாவது ஆன்மா உலகில் நல்லவராக இருந்தால் நல்லதை அனுபவித்துக் கொண்டிருப்பார். கெட்டவராக இருந்தால் அவர் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பார் அதை விட்டு விட்டு அவரை அல்லாஹ் ஆவியாக அலைய அல்லாஹ் அந்த ஆன்மாவுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது. அப்படியானால் இறந்த மனிதனைப் போலவே பேசி நான் ஆவியாக வந்துள்ளேன் என்று உயிரோடு இருப்பவரின் உடலுக்குள் வந்து பேசுவது இறந்தவரோடு கூட இருந்த ஷைத்தான் ஏற்படுத்தும் நாடகமாகும்.
கப்ரில் மனிதனின் எல்லா பாகங்களும் அழிந்தாலும் அஜபுத் தனப் என்ற ஒரு சிறு பகுதி மட்டும் அழியாது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ ابْنِ آدَمَ يَأْكُلُهُ التُّرَابُ إِلَّا عَجْبَ الذَّنَبِ مِنْهُ خُلِقَ وَفِيهِ يُرَكَّبُ (مسلم)
ஒருவரை அடக்கி பல்லாயிரம் வருடங்கள் ஆனாலும் அவரது உடலில் அஜபுத் தனப் என்ற முதுகுத் தண்டின் உள்வால் எலும்பு அழியவே அழியாது. அதை வைத்து அல்லாஹ் மீண்டும் அவரை அல்லாஹ் எழுப்புவான். இதை ஒரு விஞ்ஞானி ஆய்வு செய்து பார்த்துள்ளார். மிக கடுமையான வெப்பத்தில் வைத்து அந்த உள்வால் பகுதியை எரிப்பதற்கு எவ்வளவோ முயன்றும் அவரால் அதை அழிக்க முடியவில்லை.
கப்ரில் இருக்கும்போது உடலுக்கும் ஆன்மாவுக்கும் தொடர்பு
கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பின்பு ரூஹ் ஆன்மா உலகில் இருந்தாலும் அந்த ஆன்மாவுக்கும் இந்த உடலுக்கும் ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். இந்த உடலுக்கு என்னவெல்லாம் நிகழுமோ அதை அந்த ஆன்மா உணரும். அதுபோல அந்த ஆன்மாவுக்கு எந்த நடக்குமோ அதை இந்த உடல் உணரும்.
நல்லோர்களின் உடல்கள் அவர்களின் கப்ருகளில் அழியாமல் அப்படியே இருக்கும். நபிமார்கள் விஷயத்தில் இது நூறு சதவீதம் உறுதியான விஷயமாகும். மற்ற நல்லோர்களுக்கும் அல்லாஹ் நாடினால்.
عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَام وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنْ الصَّلَاةِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمْ السَّلَام (نسائ
ஜாபிர் ரழி அவர்களின் தந்தை அப்துல்லாஹ் ரழி உஹதுப் போரில் ஷஹீதாக்கப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து தோண்டி எடுக்கப்பட்ட போதும் 46 வருடங்கள் கழித்து தோண்டி எடுக்கப்பட்ட போதும் அப்படியே இருந்தது.
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا حَضَرَ أُحُدٌ دَعَانِي أَبِي مِنْ اللَّيْلِ فَقَالَ مَا أُرَانِي إِلَّا مَقْتُولًا فِي أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنِّي لَا أَتْرُكُ بَعْدِي أَعَزَّ عَلَيَّ مِنْكَ غَيْرَ نَفْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ عَلَيَّ دَيْنًا فَاقْضِ وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْرًا فَأَصْبَحْنَا فَكَانَ أَوَّلَ قَتِيلٍ وَدُفِنَ مَعَهُ آخَرُ فِي قَبْرٍ ثُمَّ لَمْ تَطِبْ نَفْسِي أَنْ أَتْرُكَهُ مَعَ الْآخَرِ فَاسْتَخْرَجْتُهُ بَعْدَ سِتَّةِ أَشْهُرٍ فَإِذَا هُوَ كَيَوْمِ وَضَعْتُهُ هُنَيَّةً غَيْرَ أُذُنِهِ (بخاري 1351
உஹுதுப் போர் நடக்கவிருந்த போது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்து, நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் (நாளைய போரில்) முதலில் நான் தான் கொல்லப்படுவேன் எனக் கருதுகின்றேன். மேலும் எனக்குப் பின் நான் விட்டுச் செல்பவர்களில் நபி (ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என்மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன் சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்! என்றார். மறுநாள் (போரில்) அவர் தாம் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரைக் கப்ரில் விட்டு வைப்பதை எனது மனம் விரும்பவில்லை. எனவே (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்று தான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போல - அவரது காதைத் தவிர - உடம்பு அப்படியே இருந்தது. அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி (1351) عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى صَعْصَعَةَ أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَمْرَو بْنَ الْجَمُوحِ وَعَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو الأَنْصَارِيَّيْنِ ثُمَّ السَّلَمِيَّيْنِ كَانَا قَدْ حَفَرَ السَّيْلُ قَبْرَهُمَا وَكَانَ قَبْرُهُمَا مِمَّا يَلِى السَّيْلَ وَكَانَا فِى قَبْرٍ وَاحِدٍ وَهُمَا مِمَّنِ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ فَحُفِرَ عَنْهُمَا لِيُغَيَّرَا مِنْ مَكَانِهِمَا فَوُجِدَا لَمْ يَتَغَيَّرَا كَأَنَّهُمَا مَاتَا بِالأَمْسِ وَكَانَ أَحَدُهُمَا قَدْ جُرِحَ فَوَضَعَ يَدَهُ عَلَى جُرْحِهِ فَدُفِنَ وَهُوَ كَذَلِكَ فَأُمِيطَتْ يَدُهُ عَنْ جُرْحِهِ ثُمَّ أُرْسِلَتْ فَرَجَعَتْ كَمَا كَانَتْ وَكَانَ بَيْنَ أُحُدٍ وَبَيْنَ يَوْمَ حُفِرَ عَنْهُمَا سِتٌّ وَأَرْبَعُونَ سَنَةً. (موطأ مالك
அம்ர் பின் ஜமூஹ்(ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோரின் கப்ரை நீரோட்டம் அரித்து விட்டது என்ற செய்தி கிடைத்தது. அவ்விருவருடைய கப்ர் நீரோடைக்குப் பக்கத்தில் அமைந்திருந்தது. அவ்விருவரும் ஒரே கப்ரில் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர். அவ்விருவரும் உஹத் போரில் உயிர் தியாகிகளாவார்கள். எனவே அவ்விருவரையும் வேறு இடத்தில் அடக்கம் செய்வதற்குத் தோண்டிய போது நேற்று இறந்தவர்களைப் போன்று எந்த மாற்றமும் (சேதமும்) இல்லாதவர்களாகப் பெற்றோம்.அவ்விருவரில் ஒருவர் காயம்பட்ட நிலையில் காயத்தின் மீது கை வைத்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார். (இப்போதும்) அதே போன்றே இருந்தார். காயத்தில் வைக்கப்பட்ட கையை அகற்றிய போது திரும்பவும் அதே இடத்திற்கு அந்தக் கை சென்றது. உஹுத் போருக்கும் இன்று தோண்டப்பட்ட நாளுக்கும் இடைப்பட்ட கால அளவு நாற்பத்தி ஆறு வருடங்களாகும்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ ஸஃஸஆ நூல்: முஅத்தா (893)
இந்த இரண்டு செய்திகளும் போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல் பல வருடங்கள் கழிந்த பின்பும் அப்படியே இருந்ததைக் கூறுகிறது. ஆறு மாதங்களுக்குப் பின் தனி இடத்தில் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை அடக்கம் செய்ததாக அவர்களது மகன் ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.
ஆனால் முஅத்தாவில் நாற்பத்தி ஆறு வருடங்களுக்குப் பிறகு அப்துல்லாஹ் (ரலி), அம்ர் பின் ஜமூஹ் (ரலி) ஆகியோரின் உடல் ஒரே கப்ரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜாபிர் அவர்களால் தனியாக அடக்கம் செய்யப்பட்ட அவரது தந்தையின் உடல் எப்படி ஒரே கப்ரில் வந்தது? என்ற கேள்வி எழலாம். இதற்கு ஹதீஸ் கலை மேதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் அளிக்கும் விளக்கம் ஏற்புடையதாக இருக்கிறது. ஜாபிர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் உடலைத் தோண்டி எடுத்து, பக்கத்தில் அடக்கம் செய்திருக்க வேண்டும். நீரோட்டத்தால் கப்ர் அரிக்கப்பட்டு இரு கப்ருகளும் ஒன்றாகி இருவரின் உடலும் ஒரே கப்ரில் இருப்பது போல் அமைந்திருக்கலாம்.ஆக ஜாபிர் ரழி அவர்களின் உடல் இரண்டு தடவைகள் தோண்டி எடுக்கப்பட்டு மாற்றி அடக்கம் செய்யப் பட்டுள்ளது.1. நபி ஸல் இருக்கும்போதே அதாவது உஹதுப் போர் முடிந்து ஆறு மாதங்களுக்குப் பின் 2. அடக்கம் செய்யப் பட்டு 46 வருடங்கள் கழித்தும் மறுமுறை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கப்ருடைய வேதனைகளுக்குக் காரணமான சில பாவங்கள்
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ أَوْ مَكَّةَ فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ ثُمَّ قَالَ بَلَى كَانَ أَحَدُهُمَا لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ وَكَانَ الْآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ فَكَسَرَهَا كِسْرَتَيْنِ فَوَضَعَ عَلَى كُلِّ قَبْرٍ مِنْهُمَا كِسْرَةً فَقِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ لِمَ فَعَلْتَ هَذَا قَالَ لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ تَيْبَسَا أَوْ إِلَى أَنْ يَيْبَسَا (بخاري
மண்ணுக்கும் மனிதன் அடக்கம் செய்யப் படுவதால் மனிதனுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.
இனம் இனத்தோடு தான் சேரும் என்பார்கள்.
كُلُّ شَيْئِ يَرْجِعُ الي أَصله
ஒவ்வொரு பொருட்களும் அதனுடைய அசலின் பக்கம் தான் செல்லும் என்று அரபியில் பழமொழி இதனால் மனிதன் இறந்தாலும் மண்ணுக்குள் அடக்கம் செய்யப் படுகிறான். அந்த மண்ணும் அவனை உள் வாங்கிக் கொள்கிறது. அல்லாஹ் மனிதனை மண்ணால் படைத்ததன் நோக்கம் மண்ணிடம் உள்ள நல்ல தன்மைகள் மனிதனிடம் வர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் மண்ணில் இருந்து மனிதனைப் படைத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளன.
1. மறைக்கக் கூடிய தன்மை. மண்ணிலே எதைப் போட்டு மறைத்தாலும் மறைந்து விடும். ஒரு சடலத்தைப் போட்டு மறைத்தாலும் மறைந்து விடும். அதுபோல மறைக்க வேண்டிய விஷயங்களை மறைக்கக் கூடிய தன்மை மனிதனிடம் வர வேண்டும்.
ஒரு அடியானின் குறையை வெளிப்படுத்தி கேவலப் படுத்தக் கூடாது என்பது அல்லாஹ்வின் தன்மை. அந்த தன்மை மனிதனிடமும் வர வேண்டும் என்பதை அல்லாஹ் விரும்புகிறான்.
قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ... يَدْنُو أَحَدُكُمْ مِنْ رَبِّهِ حَتَّى يَضَعَ كَنَفَهُ عَلَيْهِ فَيَقُولُ عَمِلْتَ كَذَا وَكَذَا فَيَقُولُ نَعَمْ وَيَقُولُ عَمِلْتَ كَذَا وَكَذَا فَيَقُولُ نَعَمْ فَيُقَرِّرُهُ ثُمَّ يَقُولُ إِنِّي سَتَرْتُ عَلَيْكَ فِي الدُّنْيَا فَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ (بخاري)
உங்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் மிகவும் நெருங்குவார். அல்லாஹ் திரையை ஏற்படுத்தி மற்ற மக்களின் பார்வையை மட்டும் அவரை மறைத்து விடுவான். அந்த அடியானிடம் நீ இன்னின்ன பாவம் செய்தாயா என்ற கேள்விகள் தோடரும். அந்த அடியான் யாருகுக்கும் தெரியாமல் அதைச்செய்திருப்பான். கடைசியில் அல்லாஹ் கூறுவான். உலகிலும் நீ செய்த பாவத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்தேன். இப்போதும் நான் உன்னை மன்னித்து விட்டேன் என்று கூறுவான்.
2.மண்ணின் இரண்டாவது தன்மை. உறிஞ்சக் கூடிய தன்மை.
மண்ணின் மீது நீரை ஊற்றினால் அதை உறிஞ்சக் கூடிய தன்மை அதாவது அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை மண்ணிடம் உள்ளது. அதேபோல் ஒரு முஃமின் மற்றவர் ஏதேனும் அறிவுரை கூறும்போது அந்த அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவரிடம் வர வேண்டும். பல பேருக்கு அறிவுரைகள் சொன்னால் பிடிக்காது. வேறு சிலர் அதைக் கேட்டாலும் அதை உள்வாங்குவதில்லை.
மற்றவர்கள் தனக்கு அறிவுரை கூறுவதை மிகவும் விரும்பிய சஹாபாக்கள்
وقد كان السلف يطلب هذا بعضهم من بعض . قال أبو بكر رضي الله عنه حين خطب : إن أحسنت فأعينوني ، وإن زغت فقوموني . وروي أن رجلا قال لعمر : اتق الله يا عمر ، فأنكر عليه بعضهم ، فقال عمر : دعه ، فما نزال بخير ما قيل لنا هذا . (تفسير القران للسمعاني)
நமது முன்னோர்களில் ஒருவரை மற்றவரைக் கண்டால் தனக்கு ஏதேனும் உபதேசம் செய்யும்படிக் கேட்டுக் கொள்வார்கள். அபூபக்கர் ரழி அவர்கள் (ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன்) மக்களுக்கு உரையாற்றிய போது நான் நல்லபடியாக நடந்து கொண்டால் எனக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்குங்கள். நான் ஏதேனும் தவறு செய்வதைக் கண்டால் என்னை உடனே அப்புறப்படுத்தி விடுங்கள் என்றார்கள்.
கலீஃபா உமர் ரழி அவர்களை நோக்கி ஒருவர் உமரே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்றார். அதைக் கேட்ட மக்கள் அமீருல் முஃமினீன் அவர்களைப் பார்த்து இந்த வார்த்தையைக் கூறுகிறாரே என மனதில் அதை வெறுத்தார்கள். ஆனால் உமர் ரழி அவர்கள் அதை வரவேற்றார்கள். மேலும் உமர் ரழி கூறினார்கள். அவரை விடுங்கள். இவ்வாறு அறிவுரைகள் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை தான் நாங்கள் நலமோடு இருக்க முடியும் என்றார்கள்.