நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், ஆகஸ்ட் 27, 2020

இரவில் செல்போன் பார்ப்பவரா உஷார்,

இரவில் செல்போன் பார்ப்பவரா உஷார் ‌

செல்போன் பார்த்து இரவு தூக்கத்தை வீணடிக்காதே

இரவு தூக்கம் என்பது இறைவனுடைய ரஹ்மத்

உறக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. 

உறக்கம் இளைப்பாறுதலை தருவதாக அல்லாஹ் கூறுகின்றான்


وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۙ‏


மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக  (அதாவது சோர்வு தணித்து, விடாய் நீங்கி, மனநிறைவு தருவதாக)  ஆக்கினோம்.


(அல்குர்ஆன் : 78:9)


ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும்.

நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை அதன் விளைவுகள் அதிகம்.

இத்தகைய ஆரோக்கியத்தை , இளைப்பாறுதலை அல்லாஹ் தான் கொடுக்கின்றான்



وَهُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا‏


மேலும், அவனே உங்களுக்கு இரவை ஆடையாகவும், உறக்கத்தை அமைதியாகவும் பகலை உயிர்த்தெழும் வேளையாகவும் ஆக்கினான்.


(அல்குர்ஆன் : 25:47)




எனவே தூக்கம் என்பது வாழ்வின் எந்த அளவுக்கு இன்றியமையாத தேவை என்பதை நாம் அறிவோம்

ஒரு முஸ்லிம் தூக்கத்தை அல்லாஹ் தன் அடியாருக்கு வழங்கிய அருட்கொடையாகவே கருத வேண்டும்


وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏


(அவ்வாறின்றி) நீங்கள் இளைப்பாறுவதற்கு இரவையும் (பல இடங்களுக்குச் சென்று வாழ்க்கைக்குத் தேவையான) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டுப் பகலையும் உங்களுக்கு அவன் உற்பத்தி செய்திருப்பதற்கு 

அவனது கிருபை தான் காரணம். 

இதற்கு நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!


(அல்குர்ஆன் : 28:73)


இறைவன் நமக்கு அழிக்கக்கூடிய அருட்கொடைகள் ஒவ்வொன்றிர்க்கும் நாம்  நபியவர்களின் வாழ்வு முறையை பின்பற்றி நன்றி செலுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும்

அந்த அடிப்படையில் ஒரு முஸ்லிம் தான் தூங்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த ஒழுக்கங்களைப் பேணி உறங்குவது இந்த அட்ருட்கொடைக்கு நன்றி செலுத்துவதாக அமையும்

பிரபல்யமான பதிவுகள்