ஆதார் ஆணையம் அறிமுகம்
செல்போன் குறுஞ்செய்தி மூலம் ஆதார் கார்டில் மாற்றம் செய்யும் முறையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆதார் விர்ச்சுவல் ஐ.டி பெறலாம்:
ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் எண்ணுக்கு பதிலாக பெறக்கூடியது விர்ச்சுவல் ஐ.டி எனப்படும் 16 இலக்க எண். இந்த எண்ணை பெறுவதற்கு GVID என்று டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை டைப் செய்து 1947 என்று எண்ணுக்கு பதிவு செய்யப்பட்ட செல்போனிலிருந்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
ஆதார் விர்ச்சுவல் ஐ.டியை மீட்டெடுக்கலாம்:
விர்ச்சுவல் ஐ.டியை மீட்டெடுப்பதற்கு RVID என்று டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களை டைப் செய்து பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
ஆதார் எண் மூலம் ஓ.டி.பி:
GETOTP என்று டைப் செய்து இடைவெளி விட்டு ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்..
விர்ச்சுவல் ஐ.டி மூலம் ஓ.டி.பி:
GETOTP என்று டைப் செய்து இடைவெளி விட்டு விர்ச்சுவல் ஐ.டியின் கடைசி ஆறு எண்களை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
ஆதார் கார்டை லாக் செய்தல்:
உங்கள் ஆதார் கார்டை லாக் செய்யவேண்டுமெனில் முதலில் நீங்கள் விர்ச்சுவல் ஐ.டியைப் பெறவேண்டும். பிறகு இரண்டு கட்ட எஸ்.எம்.எஸ் வழிமுறை மூலம் ஆதார் கார்ட்டை லாக் செய்யலாம்.
முதல்படி: முதலில் GETOTP என்று ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
இரண்டாம் படி: ஓடிபி எண்ணைப் பெற்ற உடனையே அடுத்த குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும். LOCKUID என்று இடைவெளி விட்டு ஆதார் எண்ணின் கடைசி ஆறு எண்கள் டைப் செய்து இடைவெளி விட்டு ஆறு இலக்க ஓடிபி எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும்.
ஒருவேளை ஒரே மொபைல் எண் இரு ஆதார் எண்களுக்கு கொடுக்கப்பட்டு, ஆதாரின் கடைசி நான்கு எண்களும் ஒரே எண்ணாக இருந்தால் கடைசி எட்டு ஆதார் எண்கள் மற்றும் ஆறு இலக்க ஓடிபி எண்ணை அனுப்ப வேண்டும்.
ஆதார் கார்டை அன்லாக் செய்தல்:
GETOTP என்று டைப் செய்து இடைவெளிவிட்டு கடைசி விர்ச்சுவல் ஐ.டியின் கடைசி ஆறு இலக்க எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும்.
பின்னர், UNLOCKUID என்று டைப் செய்து விர்ச்சுவல் ஐ.டியின் கடைசி ஆறு இலக்க எண் மற்றும் ஆறு இலக்க ஓடிபியை டைப் செய்து அனுப்பவேண்டும்