நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, ஜனவரி 14, 2022

வெள்ளிக்கிழமை ஜும்மா சிறப்புகள்,

இஸ்லாத்தில் #வெள்ளிக்கிழமை #சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளுவோம் 💞

• அல்லாஹ் மாதங்களை 12 ஆக பிரித்து உள்ளான் அதில் 1) துல்கஅதா
2) துல்ஹஜ் 3)  முஹர்ரம் 4)  ரஜப்  
ஆகிய 4 மாதங்களை புனிதமாக ஆக்கி உள்ளான்!

(நூல் : புகாரி : 3197)

• அதே போன்று அல்லாஹ் வாரத்தை 7 நாட்களாக ஆக்கி அதில் மிகச் சிறந்த நாளாக வெள்ளிக் கிழமையை ஆக்கி உள்ளான்!

• இஸ்லாத்தில் ஏன் வெள்ளிக்கிழமை நாளை சிறந்த நாளாக உள்ளது என்று நாம் சுருக்கமாக பார்ப்போம்!

💟 வெள்ளிக்கிழமை சிறந்த நாள் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும்!

1) வெள்ளிக்கிழமை அன்று தான் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்தான்!

2) வெள்ளிக்கிழமை அன்று தான் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் சொர்க்கத்திற்கு அனுப்பினான்!

3) வெள்ளிக்கிழமை அன்று ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றினான்! வெள்ளிக்கிழமை நாளில் தான் அல்லாஹ் அவர்களின் உயிரையும் கைபற்றினான்!

4) வெள்ளிக்கிழமை அன்று கியாமத் நாள் ஏற்படும்!

5) வெள்ளிக்கிழமை அன்று தான் முதல் மற்றும் இரண்டாம் சூர் ஊதப்படும்!

(நூல் : முஸ்லிம் : 1548 | அபூதாவூத் : 1047 | அஹ்மத் : 10303)

• மேலே உள்ளது மட்டும் அல்லாமல் • அல்லாஹ் அல் குர்ஆனில் அல் ஜூம்ஆ -62 என்று ஒரு சூராவையே வெள்ளிக்கிழமை பற்றி வஹீயாக அருளி உள்ளான்!

💟 வெள்ளிக்கிழமை செய்ய வேண்டியவைகள் செய்ய கூடாதாவைகள் :

• ஜூம்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சில வழிகாட்டுதல்கள் மற்றும் சில அமல்களையும் சொல்லியும் செய்தும் நமக்கு காட்டி உள்ளார்கள்!

💟 செய்ய வேண்டியவைகள் :

💜 அதிகம் ஸலவாத் கூறுவது :

உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்! அந்த நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது,

சில நபித் தோழர்கள் நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிவிடும் போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக் காட்டப்படும்? என்று கேட்டனர். எங்கள் நபி (ஸல்) அவர்கள் நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான். அதாவது நபிமாாகளின் உடல்கள் மக்கிவிடாது என்றனர்!

(நூல் : அபூதாவூத் : 1047)

💙 ஸலவாத் கூறுவதன் சிறப்பு :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்!

(நூல் : முஸ்லிம் : 687)

💜 சூரத்துல் கஹ்ப் ஓதுவது :

• சூரத்துல் கஹ்ப் (18 வது அத்தியாயம்) வெள்ளிக்கிழமை ஓதுவது சுன்னாஹ் ஆகும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவர் ஜும்மா தினத்தில் சூரத்துல் கஃபை ஓதுகிறாரோ அது அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கு மத்தியில் ஒரு ஒளியாக இருக்கும்!

(நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ : 6470)

💙 வெள்ளிக்கிழமை எந்த நேரத்தில் சூரத்துல் கஹ்ப் ஓத வேண்டும்?

• இந்த நேரத்தில் தான் சூரத்துல் கஹ்ப் ஓத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நேரத்தை குறிப்பிட வில்லை!

• எனவே நாம் நமக்கு ஏற்ற நேரத்தில் வியாழன் மஹ்ரிப் பிறகு இருந்து வெள்ளிக்கிழமை மஹ்ரிப் முன் வரை இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஓதி கொள்ளலாம்!

💙 சூரத்துல் கஹ்ப் ஓதுவதின் சிறப்பு :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல் கஹ்ஃபு எனும் (18 வது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் பெருங்குழப்பவாதியான தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார்!

(நூல் : முஸ்லிம் : 1475)

💜 குளிப்பது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள் :

வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்!

(நூல் : முஸ்லிம் : 1535)

• ஜூம்ஆ நாள் என்பது வியாழன் மஹ்ரிப் நேரம் ஆரம்பம் ஆனதில் இருந்து வெள்ளிக்கிழமை மஹ்ரிப் நேரம் வரை ஆகும்!

• இந்த இடைப்பட்ட நேரத்தில் நாம் எப்போது வேண்டும் என்றாலும் நாம் குளித்து கொள்ளலாம்! குளித்து கொள்ளுவது சுன்னத் முஅக்கதா  (வலியுறுத்தப்பட்ட சுன்னத்) ஆகும் !

• குளிப்பது என்பது நாம் சாதரணமாக குளிப்பது அல்ல குளிப்பு கடமை ஏற்பட்டால் எவ்வாறு குளிக்க வேண்டுமோ அவ்வாறு குளிக்க வேண்டும்!

(நூல் : முஸ்லீம் : 1540)

• நோயாளிகளுக்கு விதி விலக்கு உண்டு குளித்தால் உடலில் உள்ள நோய் அதிகம் ஆகும் என்றால் அவர்கள் குளிப்பதை தவிர்த்து கொள்ளலாம்!

💜 நல்ல ஆடைகளை அணிவது :

• வெள்ளிக்கிழமை அன்று நம்மிடம் உள்ள நல்ல ஆடைகளை அணிந்து கொள்ளுவது சுன்னாஹ் ஆகும்!

(நூல் : அபூதாவூத் : 343)

• பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் வெள்ளை ஆடை அணிவது வலியுறுத்தப்பட்ட சுன்னாஹ் ஆகும்!

(நூல்: அஹ்மத் : 3426)

💜 வாசனை திரவியம் பூசி கொள்ளுவது :

• வெள்ளிக்கிழமை அன்று நறுமணத்தை பூசிக்கொள்ளுவது சுன்னாஹ் ஆகும்!

(நூல் : முஸ்லிம் : 1537)

• பெண்கள் பள்ளிக்கு சென்று தொழ கூடியவர்களாக இருந்தால் வாசனை திரவியம் பயன் படுத்த கூடாது!

• வீட்டில் மஹரமான ஆண்கள் மட்டும் இருந்தால் வாசனை திரவியம் பூசி கொள்ளலாம்!

💜 ஜூம்ஆ தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு விரைவாக செல்லுவதின் சிறப்பு :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

1) குளிப்பு கடமை போன்று குளித்து விட்டு நேரத்தோடு பள்ளிவாசலுக்கு செல்ல கூடியவர்களுக்கு ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்கள்!

2) இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்!

3) மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்!

4) நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைக் குர்பானி செய்தவர் போன்றவர் ஆவார்!

5)  ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்!

• இமாம் (தமது அறையிலிருந்து) வெளியேறி (பள்ளிவாசலுக்குள் வந்து)விட்டால், (பெயர்களைப் பதிவு செய்யும்) வானவர்களும் இமாமின் சொற்பொழிவைச் செவியுற (உள்ளே) வந்துவிடுகின்றனர்!

(நூல் : முஸ்லிம் : 1540)

💜 ஒரு வருடம் நோன்பு மற்றும் இரவில் வணங்கிய நன்மை :

எவர் ஜும்ஆ நாளன்று மிக நல்ல முறையில் குளித்து காலை நேரத்தில் வாகனத்தில் செல்லாமல் நடந்து பள்ளிக்கு சென்று இமாமுக்கு அருகில் அமர்ந்து, குத்பாவைக் கவனத்துடன் கேட்டு, அச்சமயம் எந்த விதப் பேச்சும் பேசாமல் இருக்கிறாரோ, அவர்

ஜும்ஆத் தொழுகைக்கு எத்தனை எட்டுக்கள் எடுத்துவைத்து வந்தாரோ, அந்த ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருடம் நோன்பு வைத்த நன்மையும், ஒரு வருடம் இரவு நின்று வணங்கிய நன்மையும் கிடைக்கிறது!

என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அவ்ஸிப்னு அவ்ஸ் ஸகஃபீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(நூல் : நஸயீ : 1381) | தரம் : ஸஹீஹ் |

💜 இமாமுக்கு நெருக்கமாக அமர வேண்டும் :

சொற்பொழிவுக்கு வாருங்கள்! இமாமை நெருங்கி அமருங்கள். ஒரு மனிதர் இமாமை விட்டும் தூரமாகிச் சென்றால் அவர் சுவனத்தில் நுழைவதிலும் பிற்படுத்தப்படுவார்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்!

(நூல் : அபூதாவூத் : 1108)

• ஜூம்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது நாம் அவருக்கு நெருக்கமாக அமர வேண்டும்!

💜 துஆ ஏற்று கொள்ளும் நேரம் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார்  தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை!

(நூல் : முஸ்லிம்  : 1543)

• வெள்ளிக்கிழமை துஆ ஏற்று கொள்ளப்படும் நேரம் பற்றி இரண்டு வகையான ஹதீஸ்கள் உள்ளன நாம் அந்த இரண்டு நேரங்களில் துஆ செய்யலாம் ஆனால் துஆ ஏற்று கொள்ளப்படும் நேரம் மிகவும் குறைவே!

1) அஸருக்குப் பின் இறுதி நேரம் அதவாது மஹ்ரிப் தொழுகைக்கு பாங்கு கூறும் முன் வரை!

(நூல் : அபூதாவூத் : 886)

2) இமாம் (சொற்பொழிவு மேடையில்) அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்!

(நூல் : முஸ்லிம் : 1546)

• இமாம் குத்பா ஓத ஆரம்பித்து விட்டால் நாம் பேச கூடாது அதனால் நாம் தொழுகையில் ஸஜ்தா மற்றும் அத்தஹியாத் இருப்பில் துஆ செய்து கொள்ளலாம்!

💜 ஜூம்ஆ நாளின் கூலி :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார்!

இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன!

(நூல் : முஸ்லிம் : 1556)

💟 செய்ய கூடாதாவைகள் :

❤️ வியாபாரம் : 

• ஜூம்ஆ நாளில் பாங்கு கூறி விட்டால் வியாபாரம் செய்ய கூடாது நம்முடைய கொடுக்கல் வாங்களை விட்டு விட வேண்டும்!

• ஜூம்ஆ தொழுகை முடிந்த பின்பு நாம் வியாபாரம் செய்து கொள்ளலாம்!

(அல் குர்ஆன் : 62 : 9 & 10)

• பொதுவாக அல்லாஹ் வியாபாரம் செய்ய கூடாது என்று கூறி உள்ளான்! அதனால் அந்த நேரத்தில் நாம் நாம் எந்த வித வியாபாரமும் செய்ய கூடாது! 

❤️ குத்பா ஆரம்பம் ஆகி விட்டால் பேச கூடாது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ ‘ மௌனமாக இரு ’ என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்!

(நூல் : முஸ்லிம் : 1541)

❤️ வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க்க கூடாது :

• நபி அவர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க்க தடை செய்து உள்ளார்கள்!

(நூல் : புகாரி : 1985)

• யாரேனும் வெள்ளிக்கிழமை நோன்பு வைக்க வேண்டும் என்றால் அவர் வியாழன் வெள்ளி அல்லது வெள்ளி, சனிக்கிழமை நோன்பு சேர்த்து வைக்க வேண்டும்!

• மாதம் மூன்று சுன்னத்தான நோன்புகளை வழமையாக வைக்க கூடியவர்களுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை அவர்கள் நோன்பு வைக்கும் நாள் வந்தால் அவர்கள் நோன்பு வைக்கலாம்! 

❤️ வெள்ளிக்கிழமை என்று சிறப்பு அமல் எதுவும் செய்ய கூடாது :

• சிலர் வெள்ளிக்கிழமை சிறந்த நாள் என்று இஸ்லாம் காட்டிதராத வற்றை எல்லாம் செய்வார்கள் அந்த நாளில் தஸ்பீக் நபில் தொழுவது மாலை நேரத்தில் அதிகம் ஸலவாத் ஓதுவது அவ்வாறு ஓதினால் அதற்கு ஒரு சிறப்பு கூறுவது! போன்ற அனைத்துமே பித்அத் ஆகும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!

(நூல் : முஸ்லிம் : 2103)

💟 பெண்களுக்கு ஜூம்ஆ தொழுகையில் விதி விலக்கு :

• ஆண்களை பொறுத்த வரை ஜூம்ஆ கட்டாயம் தொழ வேண்டும் நிர்பந்த காரணம் இன்றி ஜூம்ஆ தொழுகையை விட கூடாது!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்!

(நூல் : அபூதாவூத் : 901)

• பெண்கள் மீது ஜூம்ஆ கடமை கிடையாது! அவர்கள் விருப்பம் பட்டால் பள்ளிக்கு சென்று ஆண்களுக்கு பின்னால் நின்று ஜூம்ஆ தொழுகலாம்!

(நூல் : முஸ்லிம் : 1580)

• பள்ளிக்கு சென்று ஜமாத் ஆக தொழ முடியவில்லை என்றால் வீட்டிலேயே லுஹர் தொழுது கொள்ளலாம்!

(நூல் : இப்னு அபீ ஷைபா)

• பெண்கள் வீட்டில் ஜூம்ஆவிற்கு பதில் லுஹர் தொழுவதாக இருந்தால் 4 ரக்ஆத்கள் லுஹர் தொழ வேண்டும்!

• அதே போன்று முன் மற்றும் பின் சுன்னத்கள் லுஹர் உடைய சுன்னத்களே தொழ வேண்டும்!

💟 ஜூம்ஆ தொழுகைக்கு வராதவர்களுக்கு எச்சரிக்கை :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்! பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்!

(நூல் : முஸ்லிம் : 1570)

💟 ஜூம்ஆ முபாரக் கூறலாமா :

• இன்றும் பல ஊர்களில் வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா முபாரக் என்ற ஒருவருக்கு ஒருவர் கூறி கொள்ளுவார்கள்!

• ஆனால் உண்மையில் ஜூம்ஆ முபாரக் என்று கூறுவது சுன்னாஹ்வும் கிடையாது இது இஸ்லாம் மார்க்கத்திலும் கிடையாது!

• இஸ்லாத்தில் சட்டம் அமல் பொறுத்த வரை அனைத்துமே நமக்கு தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள் செய்தும் காட்டி உள்ளார்கள்! இதை தவிர்த்து நாமாக ஒன்றை நன்மையான காரியம் என்று செய்தாலும் சரி அது பித்ஆத் ஆகி விடும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்!

(நூல் : புகாரி : 2697)

• ஜூம்ஆ முபாரக் பொறுத்த வரை நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி யாருக்கும் கூறவும் இல்லை பிறரை இவ்வாறு கூற சொல்லவும் இல்லை! ஸஹாபாக்கள் வாழ்விலும் ஜூம்ஆ முபாரக் கூறியதாக ஸஹீஹான எந்த செய்தியும் கிடையாது!

• அமல் பொறுத்த வரை நபி (ஸல்) அவர்கள் சொல் செயல் இல்லை என்றால் அதை நாம் ஏற்று கொள்ள கூடாது!

• ஜூம்ஆ முபாரக் கூறுவது சிறந்த சொல் அல்லது நன்மையான சொல் என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு சொல்லி கொடுத்து இருப்பார்கள்!

• ஆனால் ஜூம்ஆ முபாரக் என்ற சொல் இஸ்லாமிய வரலாற்றில் கிடையாது பின்னால் வந்தவர்கள் உருவாக்கியது தான்!

💟 வெள்ளிக்கிழமை மரணித்தால் நல்ல மரணமா?

• வெள்ளிக்கிழமை மௌத் ஆனால் அது நல்ல மௌத் என்று ஒரு செய்தி அபூ யஃலா (7/146) எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் அது பலகீனம் ஆகும்!

• இந்த செய்தியை அறிவிக்க கூடிய யஸீத் அர்ரகாஷீ என்பவர் பலவீனமானவர் ஆவர்!

• இதே செய்தி திர்மிதீ 994வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீசை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே இது பலகீனமான ஹதீஸ் என்று ஹதீஸ் கிழயே குறிப்பிட்டு உள்ளார்கள்! 

• இதே கருத்தில் அஹ்மத் நூலில் இரண்டு ஹதீஸ்கள் உள்ளன. 6294வது ஹதீஸை ஹிஷாம் பின் ஸஅது என்பார் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர். 6359வது ஹதீஸை முஆவியா பின் ஸயீத் என்பார் அறிவிக்கிறார். இவர் யாரென்று அறியப்படாதவர்!

• இஸ்லாத்தில் பொதுவாக குறிப்பிட்ட நாளில் மரணித்தால் சிறப்பு உள்ளது என்று ஒரு ஸஹீஹான செய்தி கிடையாது!

💟 தஸ்பீக் நபில் தொழுகை :

• தஸ்பீக் தொழுகை பற்றிய இப்னு மாஜா : 1387 - அபூதாவூத் : 1297 - இப்னு குஸைமா : 1216 - ஹாகிம் : 1196 ஆகிய நூல்களில் வந்து உள்ளது!

1) திர்மிதியில் தஸ்பீக் தொழுகை பற்றி வர கூடிய ஹதீஸில் அறிவிப்பாளர் வரிசையில் : மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பர் உள்ளார் இவர் பலகீனமானவர் ஆவர் அதனால் இந்த ஹதீஸும் பலகீனம் ஆகும்!

2) இப்னு குஸைமா : 1216 இந்த ஹதீசை பதிவு செய்த இமாம் அவர்களே இந்த ஹதீஸ் உடைய அறிவிப்பாளர் வரிசை சரி இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்கள்!

3) ஹாகிம் : 1196 தஸ்பீக் தொழுகை பற்றி வர கூடிய ஹதீஸில்
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக  வரும் இந்த ஹதீஸில் ஏழாவது அறிவிப்பாளர் அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் பலகீனமானவர் ஆவர் இவர் இட்டுக்கட்டி ஹதீஸ்களை சொல்ல கூடியவர் உதாரணமாக அவர் இட்டுக்கட்டிய ஹதீஸ் கிழே கொடுத்து உள்ளோம்!

சுவர்க்கத்தின் திறவுகோல் ஏழைகளாவர். யாசிப்போர் அல்லாஹ்வின் நெருங்கிய நண்பர்களாவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ள அறிவிப்பு அவர் அறிவித்த பொய்யான செய்திகளில் ஒன்றாகும்.

(நூல்: மீஸானுல் இஃதிதால் : 1 / 232)

• அஹ்மத் பின் தாவூத் என்பவர் முற்றிலும் பலவீனமானவராவார். இவரைப் பொய்யர் என்று (ஹதீஸ் கலை வல்லுனர்கள்) குற்றம் சுமத்தியுள்ளனர்!

(நூல்: தல்கீஸுல் ஹபீர் : 4 / 96)

• இதே போன்று தான் தஸ்பீக் தொழுகை சம்பந்தமாக வர கூடிய அனைத்து ஹதீஸ்களுமே அறிவிப்பாளர் வரிசை பலகீனமான உள்ளது ஒரு ஸஹீஹான ஹதீஸும் இந்த தொழுகை பற்றி கிடையாது!

• ஒரு அமலை செய்ய ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆவது இருக்க வேண்டும் பலகீனமான ஹதீஸ்களை வைத்து மட்டும் அமல் செய்ய கூடாது!

பிரபல்யமான பதிவுகள்