நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், டிசம்பர் 12, 2018

ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எனக்காக நீங்கள் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் சொர்க்கத்தை பெற்றுத்தருவதில் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எனக்காக நீங்கள் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் சொர்க்கத்தை பெற்றுத்தருவதில் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’. நபிகள் குறிப்பிட்ட அந்த ஆறு விஷயங்கள் இது தான்: 1. நீங்கள் பேசினால் உண்மையே பேசுங்கள், 2. நீங்கள் வாக்குறுதி கொடுத்தால் முழுமையாக நிறைவேற்றுங்கள், 3. உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்து விடுங்கள், 4. உங்களின் கற்புகளை பேணிக் காத்துக்கொள்ளுங்கள், 5. உங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், 6. உங்களின் கைகளை போர் செய்யாமல் தடுத்துக் கொள்ளுங்கள். வாய்மையே சொர்க்கத்தை வென்று கொடுக்கும் ‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள். மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்’. (திருக்குர்ஆன் 9:119) ‘வாய்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். நன்மை சொர்க்கத்தின் பக்கம் வழிகாட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார். (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி) புகாரி, முஸ்லிம்) வாக்குறுதியை நிறைவேற்றினால் சொர்க்கம் உறுதி ‘நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்’. (திருக்குர்ஆன் 17:34) ‘இன்னும், நீங்கள் இறைவனின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்’. (திருக்குர்ஆன் 16:91) வாக்குறுதி என்பது வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல. அதில் உண்மையும், உறுதியும் அடங்கியிருக்க வேண்டும். வெற்று வாக்குறுதிகளை கொடுப்பவன் ஏமாற்றுப்பேர்வழி. அவன் பொய்யன். அவன் ஒதுங்கும் இடம் நரகமே. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவனும், அதை பாதுகாப்பவனும் தான் உண்மையான மனிதன். உண்மையான மனிதன் ஒதுங்கும் இடம் சொர்க்கமே. வாக்கு மோசடிகளில் ஈடுபடுவோரின் முகமூடிகளை திருக்குர்ஆனும், நபிமொழிகளும் இவ்வாறு தோலுரித்துக் காட்டுகிறது. ‘இறைவிசுவாசிகளே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது இறைவனிடம் கடும் கோபத்துக்குரியது’. (திருக்குர்ஆன் 61:2,3) ‘நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய்சொல்வதும், வாக்குறுதியளித்தால் அதற்கு மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), புகாரி) ‘இறைநம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் இறைவனிடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்’. (திருக்குர்ஆன் 33:23) ‘இன்னும், அவர்கள் தங்கள் (வசம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்’. (திருக்குர்ஆன் 23:8) ‘இத்தகையோரே பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 23:10,11) நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானித பொருட்களை அதனுடைய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும்படியும், அதற்கு மோசடி செய்யாமல் இருக்கும்படியும் இறைவன் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறான். ‘அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் என இறைவன் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்’. (திருக்குர்ஆன் 4:58) ‘இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்’. (திருக்குர்ஆன் 8:27) ‘இந்தச் சமுதாயத்திலிருந்து முதன்முதலாக உயர்த்தப்படுவது வெட்கமும், அமானிதமும் ஆகும். எனவே அவ்விரண்டையும் இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல் : தப்ரானீ) கற்பை பாதுகாப்பவருக்கு சொர்க்கமே பாதுகாப்பு ‘இறைநம்பிக்கையாளர்கள் தங்களது கற்புகளை பாதுகாத்துக் கொள்வார்கள்’. (திருக்குர்ஆன் 23:5) ‘ஒரு பெண் ஐவேளைத் தொழுது, மேலும், ரமலான் மாதம் நோன்பும் நோற்று, மேலும், அவள் தமது கற்பையும் பாதுகாத்து, இன்னும், அவள் தமது கணவனுக்கும் கட்டுப்பட்டு நடந்தால், சொர்க்கத்தின் எந்தவாசல் வழியாக நீ உள்ளே செல்ல நாடுகிறாயோ, அந்த வாசல் வழியாக நுழைந்து கொள்’ என்று அவருக்கு சொல்லப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி), நூல்: அஹ்மது) ‘எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியில் இருக்கும் நாவுக்கும், இரண்டு தொடைகளுக்கு மத்தியில் இருக்கும் பாலின உறுப்புக்கும் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டாரோ, அவருக்கு நான் சொர்க்கத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஸஹ்ல் பின் ஸத் (ரலி) புகாரி) பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டவர்களுக்கு சொர்க்கம் தகாத பார்வை என்பது பாவத்தில் தள்ளிவிடும். ஆபாச பார்வை என்பது விபச்சாரத்தில் தள்ளிவிடும். ‘பார்வை என்பது விஷம் தடவப்பட்ட ஷைத்தானின் ஒரு அம்பு’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) தப்ரானீ) ‘(நபியே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக. இது அவர்களுக்கு பரிசுத்தமானது, அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் கூறுவீராக’. (திருக்குர்ஆன் 24:30,31) ‘இன்னும், உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்’. (திருக்குர்ஆன் 2:195) மேற்கூறப்பட்ட ஆறு அம்சங்களையும் இஸ்லாம் கூறும் வழியில், இறைத்தூதர் காட்டிய வழியில் செயல்படுத்தி வாழ்ந்து வந்தால் சொர்க்கம் நிச்சயம். இது வேத சத்தியம், இது நபி (ஸல்) அவர்களின் உறுதியான உத்தரவாதம்.

மூஸா நபியும் உதவியும்,

அல்லாஹ்வை மறுத்தவர்கள், எத்தனை படை, பலம், செல்வம் அந்தஸ்து உள்ளவர்களாக இருந்தாலும் அழிவு தான் அவர்கள் முடிவு என்ற படிப்பினைகளை இந்த நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

“ஓ! மூஸா! உங்கள் இனத்தாரின் ஆண் குழந்தைகளை பிர் அவுன் வதை செய்து கொண்டிருந்தான். உங்களைப் பற்றி உங்கள் தாய் கவலை கொண்டாள். ஆகவே உங்கள் தாயை நோக்கி, ‘உங்களைப் பேழையில் வைத்து கடலில் எறிந்து விடுங்கள். அக்கடல் அதனை கரையில் சேர்த்து விடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதனை எடுத்துக் கொள்வான்’ என்று உங்கள் தாய்க்கு அறிவித்தோம்”. (திருக்குர்ஆன் 20:39)

எகிப்து நாட்டில் பனிஇஸ்ரவேலர்கள் செல்வாக்கு அதிகமாக இருந்த காலம் அது. அப்போது, எகிப்தின் பூர்வீக குடிகளான கிப்திகள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் மீண்டும் கிப்திகள் பனி இஸ்ரவேலர்களிடமிருந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். மேலும் அவர்களை பழிவாங்கும் வகையில் கொத்தடிமைகளாக நடத்தினார்கள். ‘பிரவுன்’ என்ற பரம்பரை பெயரில் கிப்தி இனத்தினர் ஆட்சி செய்தார்கள். அந்த வரிசையில் 11-வது அரசனாக வந்தவன் தான் பிர் அவுன். ‘நானே கடவுள், மக்களை என்னையே வணங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டான். வேறுவழியின்றி மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

ஒரு நாள் அவன் ஒரு கனவு கண்டான். பாலஸ்தீனிலிருந்து ஒரு நெருப்புத் துண்டு பறந்து வந்து கிப்திகளைக் கொன்று பனி இஸ்ரவேலர்களை காப்பாற்றுவது போல அந்த கனவு அமைந் திருந்தது. இந்த கனவு பிர் அவுன் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. ஜோதிடரிடம் அந்த கனவிற்கு விளக்கம் கேட்டபோது, ‘பனி இஸ்ரவேலர்கள் குலத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அது ஒட்டுமொத்த கிப்திகள் வம்சத்தையே அழித்து ஆட்சி அதி காரத்தை கைப்பற்றும்’ என்று கூறினார். மேலும், இனிமேல் பிறக்கின்ற அத்தனை ஆண் குழந்தை களையும் கொன்று விட்டால் இந்த ஆபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது. பிர் அவுன் சொன்னான், ‘இப்போது நம்மிடம் இருக்கும் கொத்தடிமைகள் பலர் ஐம்பது வயதை தாண்டியவர்கள். அப்படி நாம் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கொல்வதாய் இருந்தால் இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு வேலை செய்வதற்கே ஆள் இல்லாமல் போய்விடுமே, என்ன செய்வது’ என்றான். அப்படியானால் ஓராண்டு விட்டு மறு ஆண்டு என்று கணக்கில் ஆண் பிள்ளை களைக் கொல்லலாம் என்று முடிவு செய்தார்கள்.
அரசாங்க அதிகாரம் கொண்ட பெண்களால் ஒவ்வொரு வீடும் கண்காணிக்கப்படும். கர்ப்பிணி பெண்கள் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால் உடனே கொல்லப்படும். பெண் பிள்ளைகளுக்கு உயிர்பிச்சை வழங்கப்படும். ஆனால் மூஸாவின் தாயார் அவர்களை கருவுற்றிருந்த போது மற்ற பெண்கள் போல் அவர்களுக்கு வயிறு பெரிதாய் தெரியவில்லை. அதனால் தன் கர்ப்பத்தை அரசாங்க பெண்களிடம் இருந்து மறைத்துக் கொண்டார்கள். பிள்ளையையும் பெற்றெடுத் தார்கள். அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்த போது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு உள்ளுணர்வு மூலம் வழி சொன்னான். “அந்த பிள்ளையை ஒரு பேழையில் வைத்து நைல் நதியில் மிதக்க விட்டு விடு. அதனை வளர்க்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றான் அல்லாஹ்.
பெற்ற பிள்ளையை நதியில் எறிவதா? எப்படி மனம் வரும். ஆனால் மூஸாவின் தாயார் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக உடனே அதனைச் செய்தார்கள். எந்த இக்கட்டான சூழ் நிலையிலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவன் நல்ல வழியைக் காட்டுவான் என்ற படிப்பினை இதில் புதைந்துள்ளது. யார் எதிரியோ அந்த பிர் அவுனின் மனைவி ஆஸியாஅம்மையார் அரசியின் கைகளில் பேழை மிதந்து வந்து சேர்ந்தது. திறந்து பார்த்த அரசிக்கு ஆனந்தம். அதுவரை அவர்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைக்கவில்லை.

ஆஸியாஅம்மையார்
ஓடோடி வந்து பிர் அவுனிடம் பேழையில் கண்டெடுத்த பிள்ளையை காட்டினார். ஆண் குழந்தையான இதை உடனே கொல்ல வேண்டும் என்றான் பிர் அவுன். ஆயிஷா அம்மையார் கெஞ்சினார். “நமக்கோ பிள்ளையில்லை. இது நமக்கு கண் குளிர்ச்சியாக இருக்கும். வெளியில் வளர்ந்தால் தானே எதிரியாய் மாறுவான். நம்மிடம் நம் அன்பின் அரவணைப்பில் நமக்கு நன்மை செய்யக் கூடிய பிள்ளையாக அல்லவா மாறி விடும். நமக்கும் ஒரு வாரிசு கிடைக்குமே?” என்றார்். அந்த வார்த்தைகள் பிர் அவுன் மனதில் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்தியது. ‘சரி வளர்த்துக் கொள்’ என்று அனுமதி அளித்தான். மூஸா அவர்கள் அரண்மனையில் வளர்ந்து வாலிபர் ஆனார்கள்.

ஒரு நாள் சண்டையை விலக்க முற்பட்டபோது எதிரி ஒருவன் முகத்தில் குத்தினார்கள். இதில் அவன் அந்த இடத்திலேயே இறந்துவிட்டான்.

அந்தக்காலத்தில் இதுபோன்ற கொலைக் குற்றம் செய்தவரை கல்லால் எறிந்து கொல்வது தண்டனையாக இருந்தது. எனவே அந்த தண்டனைக்குப் பயந்த மூஸா நபிகள் அந்த ஊரைவிட்டே ஓடி விட்டார்கள். மனம் போன போக்கில் நடந்தவர் பல நாட்கள் கடந்த பின்னர் மத்யன் என்ற ஊரை அடைந்தார்.

ஊரின் கடைக்கோடியில் கிணற்றில் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட சிரமப்பட்டுக் கொண்டிருந்த இரு பெண்களைக் கண்டார். அவர்களுக்கு தண்ணீர் இறைத்துக்கொடுத்து உதவினார். வீட்டிற்கு சென்ற பெண்கள் தன் வயோதிக தந்தையிடம் நடந்த விவரத்தை கூறினார்கள். தந்தையும் அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார். அவர்தான் மத்யன் நகரில் வாழ்ந்து வந்த சுஐப் நபியவர்கள்.

மூஸா நபியிடம் விவரங்களை கேட்டறிந்த சுஐப் நபிகள், “நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இங்கு நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்” என்றார். அதோடு ஒரு நிபந்தனையும் விதித்தார். அதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “நீங்கள் எனக்கு எட்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையில் இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் அதனை பத்து வருடங்களாக முழுமை செய்தால் அது நீங்கள் எனக்கு செய்யும் நன்றி தான்”. (திருக்குர்ஆன் 28:27) மூஸா நபிகள் அந்த நிபந்தனையை நிறைவேற்றி, சாரா அம்மையாரை மணமுடித்தார்கள்.

இதற்கிடையில் ஏக இறைக்கொள்கையை ஏற்று பலர் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர். அவர்களை கடுமையாக துன்புறுத்தினான் பிர் அவுன். அங்கிருந்து செல்ல இறை கட்டளை வந்தது. மூஸா நபிகள் தலைமையில் மக்கள் கூட்டமாக சென்றபோது வழியில் இருந்த கடல் இரண்டாக பிளந்து அவர்களுக்கு வழிவிட்டது. அந்த மக்கள் அனைவரும் பத்திரமாக கரையேறினார்கள். ஆனால் அவர்களை பின்தொடர்ந்து வந்த பிர் அவுன் மற்றும் அவனது படையினர் அனைவரும் கடலில் மூழ்கி பலியானார்கள். மூஸா நபி காலத்தில் வாழ்ந்த பெரும் பணக்காரன் காரூன்.அவனிடம் உன் செல்வங்களை ஏழைகளுக்கு ‘ஜகாத்’ கொடு என்ற போது, “மூஸாவே உம் இறைவனேயே நான் ஏற்கவில்லை. மேலும் இந்த செல்வங்கள் எல்லாம் என் அறிவாலும் திறமையாலும் சம்பாதித்தவை. உன் இறைவனின் பங்கு இதில் எங்கிருக்கிறது தரமுடியாது” என்றான். அதுமட்டுமில்லாமல் பணம் கொடுத்து ஒரு பெண்ணை தயார் செய்து அவள் மூலம் மூஸா மீது பாலியல் குற்றம் சுமத்தினான். ஆனால் சாட்சி சொல்ல வந்தபோது அந்தப்பெண் மூஸாவை பார்த்த உடனே மனம் மாறி உண்மையைச் சொன்னாள். மூஸா நபியை அழிக்க முயன்ற காரூன் மீது தண்டனை இறங்கியது. அவனையும் அவன் சேர்த்த செல்வங்களையும் பூமி விழுங்கியது. அல்லாஹ்வை மறுத்தவர்கள், எத்தனை படை, பலம், செல்வம் அந்தஸ்து உள்ளவர்களாக இருந்தாலும் அழிவு தான் அவர்கள் முடிவு என்ற படிப்பினைகளை இந்த நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

யாஜூஜ் வல் மஃஜூஜ் ,

திருக்குர்ஆனில் சொல்லப் பட்ட சரித்திரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, அதன் படிப்பினைகளை நம் வாழ்வில் பின்பற்றி வாழ்வதே சிறப்பு. மன்னர் துல்கர்னைன் வரலாறு பற்றி திருக்குர்ஆனில் சூரத்துல் அல்கஹ்பு என்ற அத்தியாயத்தில் (வசனங்கள் 83 முதல் 99 வரை) மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் மார்க்க அறிஞர்கள் சிலர், அவரை அல்லாஹ் வின் நபி என்றும், சிலர் அவர் நபி அல்ல என்றும், நீதி நேர்மையுடன் இறைகட்டளைக்கு அடிபணிந்து ஆட்சி செய்த நேர்மையான அரசர் என்றும் கூறுகின்றனர். இவருக்கு, ‘இரண்டு கொம்புடையவர்’ என்ற பெயரும் உண்டு. அவர் கிழக்கிலிருந்து மேற்கு வரை ஆட்சி செய்ததினால் அவருக்கு காரணப்பெயராக அது ஏற்பட்டது என்றும் சொல்வதுண்டு. மாவீரர் துல்கர்னைனனும், இப்ராகிம் நபி காலத்தில் வாழ்ந்தவர் என்று வரலாறு கூறுகிறது. இவர் நீதி, நேர்மை கோலோச்சும் பேரரசர். உலகின் கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசையின் எல்லை வரை வெற்றி கொண்டு ஆட்சியை நிலைநாட்டியவர். பின்பு வெற்றி வாகை சூடிக்கொண்டே தெற்கு திசையின் கோஹஸ்தான் வரை தன் படையை வழிநடத்தி சென்றவர் என்ற விவரங்கள் வரலாற்று குறிப்புகளில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில், மன்னர் துல்கர்னைன் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதற்கு பின்னணியில் உள்ள வரலாறு குறித்து அறிந்துகொள்வோம், வாருங்கள். அண்ணல் எம் பெரு மானார் (ஸல்) அவர்கள் மதீனத்து மண்ணிலே ஏகத் துவ கொள்கையை நிலை நாட்டி, தன்னை இறை வனின் திருத்தூதர் என்று பிரகடனப்படுத்திய கா லகட்டம் அது. நபிகளார் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் குறித்த அடை யாளங்கள் ‘தவ்ராத்’ வேதத் தில் குறிப்பிடப்பட்டு இருந் தது. ‘தவ்ராத்’ வேதத்தை கற்றறிந்த யூதர்கள், தங்கள் ே்வதத்தில் குறிப்பிடப்ப ட்டுள்ள அங்க அடையா ளங்களைக் கொண்டவர் மதீனத்தில் உள்ள முகம் மது நபிகள் தான் என்பதை அறிந்து கொண்டனர். இருந்தாலும், அங்க அடையாளங்களை மட்டும் வைத்தே அண்ணலாரை இறைவனின் தூதராக ஏற்றுக்கொள்ள அவர்கள் மனம் இடம் கொடுக்கவி ல்லை. எனவே அண்ண லாரை சோதித்துப் பார்க்க முடிவு செய்தனர். இதைய டுத்து, ‘அண்ணலாரிடம் குகைவாசிகள் என்றால் யார்?, துல்கர்னைன் என் பவர் யார்?’ என்ற வினாவை எழுப்பினார்கள். மேலும், ‘இதற்கு சரியான பதிலை சொன்னால் எங்களது வேதத்தில் குறிப்பிட்டுள்ள இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) என்பவர் நீங்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்றார்கள். ஒரு வேளை, அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்களால் இந்தக்கேள்விகளுக்கு சரியான பதில் கூற முடியாமல் போனால், அவர் உண்மையான நபி அல்ல, திருக்குர்ஆன் உண்மையான இறைவேதம் அல்ல என நிரூபித்து விடலாம் என்ற நப்பாசையில் யூதர்கள் இந்த கேள்விகளை கேட்டனர். ஆனால் நடந்தது வேறு. அல்லாஹ் திருக்குர்ஆனில் சூரா அல்கஹ்பு என்ற அத்தியாயத்திம் மூலம், குகைவாசிகள் மட்டுமின்றி துல்கர்னைன் என்பவர் பற்றிய முழு விவரங்களையும் விரிவாகவே நபி களாருக்கு கற்றுக்கொடுத்து விட்டான். “நபியே, துல்கர்னைன் பற்றி யூதர்களாகிய அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். ‘அவரு டைய சரித்திரத்தில் சிறிது நான் உங்களுக்கு ஓதி காண்பிக்கின்றேன்’ என்று நீங்கள் கூறுங்கள்”. “துல்கர்னைனுக்கு நாம் பூமியில் ஆதிக்கத்தை கொடுத்து, வளமிக்க வசதி வாய்ப்பையும் கொடுத்தோம். ஒவ்வொரு பொருளையும் தன் இஷ்டப்படி செய்யக்கூடிய வழியையும் நாம் அவருக்கு அறிவித்தி ருந்தோம்”. (திருக்குர்ஆன் 18:83-84) “சூரியன் மறையும் மேற்கு திசையை அவர் அடைந்த போது சேற்றுக்கடலில் சூரியன் மறைவதுபோல் அவர் கண்டார். அங்கு அவர் ஒருவகையான மக்களை கண்டார். இறைவன் அவரை நோக்கி, “துல்கர்னைனே! நீங்கள் இந்த மக்களை தண்டித்து வேதனை செய்ய அல்லது அவர்களுக்கு வேண்டிய நன்மையை செய்ய உங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கிறேன்” என்று திருக்குர்ஆன் (18:86) குறிப்பிடுகிறது. “எனவே துல்கர்னைன் அம்மக்களை நோக்கி, எவன் என் கட்டளையை மீறி அநி யாயம் செய்கிறானோ அவனை நானும் தண்டி த்து வேதனை செய்வேன். பின் தன் இறை வனிடம் சென்று அங்கும் அவன் வேதனை செய்யப்படுவான்”. (திருக்குர்ஆன் 18:87) “ஆனால் எவர் நம்பிக்கை கொண்டு நான் கூறுகின்ற நற்செயல்களை செய்கிறாரோ அவருக்கு இறைவனிடத்தில் அழகான கூலி உண்டு’’ என்று சொல்லி அந்த கூட் டத்தா ரையே முழுமையாக மாற்றி ஏக இறைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளச் செய்தார்கள். பின்பு கிழக்குத் திசையிலும் ஒரு கூட்டத்தாரை கண்டு அவர்களுக்கும் உபதேசம் செய்து சூரிய வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய தடுப்புகளை ஏற்படுத்துகின்ற ஞானத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, காட்டுமிராண்டிகளாக இருந்த மக்களுக்கு அறிவு சுடரை ஏற்றி வைத்தார்கள். பின்பு தெற்கு திசையில் பயணித்த போது அங்கு இரு மலைகளுக்குடையே உள்ள இடைவெளியில் சில மக்களைக்கண்டார். அவர்களின் பேச்சு எளிதில் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அம்மக்கள், கை சாடையாக அவரிடம் பேச முற்பட்டனர். “யாஜூஜ், மாஜூஜ் என்ற குள்ள இன மக்கள் எங்களிடையே அநியாயம் செய்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்களின் தீமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே தாங்கள் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை ஏற்படுத்தி தர முடியுமா? அதற்கான ஒரு தொகையை நாங்கள் தாங்களுக்கு தரட்டுமா?’’ என்று வினவினார்கள். அதற்கு துல்கர்னைன் “என் இறைவன் எனக்கு கொடுத்ததே எனக்கு போதுமானது, மிக்க மேலானது. உங்கள் பொருள் எனக்கு தேவையில்லை. ஆனால் உங்கள் உழைப் பைக் கொண்டு எனக்கு உதவி செய்தால் அவர்களுக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு உறுதியான தடுப்புச்சுவரை நான் ஏற்படுத்தி தர முடியும்’’ என்றும் கூறினார். “நீங்கள் அதற்கு தேவையான இரும்பு பாளங்களை கொண்டு இரண்டு மலைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை இட்டு நிரப்புங்கள். அதன் பின் தீயிட்டு கொளுத்தி அது நன்றாக உருகும் வரை காத்திருங்கள். இரும்பு பாளங்கள் உருகிய பிறகு அதன் மீது பழுக்க காய்ச்சிய செம்பு உலோகத்தை ஊற்றுங்கள். அது குளிர்ந்ததும் உறுதியான ஒரு தடுப்பு சுவராகிவிடும். அதன் பக்கவாட்டில் யாரும் துளையிடவும் முடியாது. அதன் உயரத்தில் யாரும் ஏறவும் முடியாது. உங்களுக்கு அநியாயம் செய்யும் யாஜூஜ், மாஜூஜ் மக்கள் அந்த கரையிலேயே அடைபட்டு கிடப்பார்கள். நீங்கள் இக்கரையில் சுகமாக வாழலாம்” என்று கூறி, அந்த தடுப்பு சுவரை எழுப்பினார். இவ்வாறு தடுப்பு இரும்பு சுவர் தயாராகி விட்டதும், “இது என் இறைவனுடைய அருள், இறைவனுடைய வாக்குறுதியாகிய யுக முடிவு வரும் காலத்தில் இறைவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான் என்ற இறைவனின் வாக்குறுதி முற்றிலும் உண்மையானதே” என்று கூறினார். இப்படிப்பட்ட ஒரு இரும்பு சுவர் இன்ன இடத் தில் இருக்கிறது என்றும், அதனை யுகமுடிவு நாளில் தான் அறியச்செய்வேன் என்றும் அல்லாஹ் அருள்மறையில் கூறு கிறான். இன்று அறிவியல் தன் முழு வீச்சை எட்டிய நிலையிலும், வான்கோள்களில் உள்ள விபரங்களை நுண்கருவிகள் மூலம் தெளிவாக அறிந்து கொள்கின்றபோதும் இந்த இரும்புச்சுவர் பற்றி இன்றுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அல்லாஹ்வின் கூற்றுப்படி அது உலக முடிவு நாளில் தான் தெரியவருமோ என்னவோ? திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள், இது திருக்குர்ஆன் கூறும் அறிவியல் செய்திகளில் ஒன்று என்று விளக்கம் தருகின்றனர். அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் இறைவனின் அருளால் மன்னர் துல்கர்னைன் சரித்திரத்தை முழுமையான கூறியதைக் கண்டு யூதர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். அண்ணலார் (ஸல்) அவர்கள் தான் உண்மைத் தூதர் என்பதை புரிந்து கொண்டனர். இது போன்று திருக்குர்ஆனில் சொல்லப் பட்ட சரித்திரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, அதன் படிப்பினைகளை நம் வாழ்வில் பின்பற்றி வாழ்வதே சிறப்பு

b

யாஜூஜ், மாஜூஜ் தோற்றம் பற்றி மிக தெளிவாக அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் உலக முடிவின் கடைசி காலத்தில் வருவார்கள்.

“உலகம் அழிவுபட்டு மறுமைநாள் ஏற்படுவதற்கு ஓர் அடையாளமாக யாஜூஜ், மாஜூஜ் என்ற கூட்டத்தினர் வருவார்கள். இவர்கள் மனித இனத்தின் ஒரு வகையைச் சார்ந்தவர்கள். அவர்கள் மனிதர்கள் போன்று இருந்தாலும் உயரத்தில் மிகவும் குறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் உயரம் ஒரு சாண் அல்லது இரண்டு சாண்கள் அளவிற்கே இருக்கும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் வரும்வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் அகன்றதாகவும், கேடயம் போல் வட்டமாகவும், கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று காலித் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாக அஹ்மது என்ற நூலிலே பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாஜூஜ், மாஜூஜ் தோற்றம் பற்றி மிக தெளிவாக அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் உலக முடிவின் கடைசி காலத்தில் வருவார்கள். மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.

“யாஜூஜ், மாஜூஜ் மக்கள் ஆதம் (அலை) அவர்களின் சந்ததியாவார்கள். அவர்களின் நோக்கம் மற்ற இன மக்களை அழிப்பது, அவர்களுக்குள் குழப்பம் விளைவிப்பது ஆகும். அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் மேலான வாரிசுகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை”.

புகாரி ஹதீஸின் அடிப்படையில் நரகத்தில் நாம் ஒருவர் என்றால் அவர்கள் ஆயிரம் பேர்களுக்கும் மேலாக இருப்பார்கள் என்று அறியமுடிகிறது.

மேலும் திருக்குர்ஆன் அல் அன்பியா சூராவிலே (21:96) “யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்திற்கு வழி திறக்கப்பட்டால், அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் தண்ணீர் பாய்வதை போல் வழிந்து உலகின் பல பாகங்களிலும் அதிவிரைவில் பரவி விடுவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வசனத்தின் மூலம் இவர்கள் அதிவேகமாக இயங்கக் கூடியவர்கள் என்ற உண்மையையும் அறிய முடிகிறது.

உலக அழிவு நெருங்கும் நாள்வரை துல்கர்னைன் எழுப்பிய இரும்பு சுவற்றின் பின்பகுதியிலேயே அடைபட்டு கிடப்பார்கள்.

“ஒவ்வொரு நாளும் யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் துல்கர்னைன் எழுப்பிய சுவரை உடைக்க முயற்சி செய்வார்கள். காலை முதல் மாலை வரை சிறிது முயற்சி செய்து கொஞ்சம் உடைத்திருப்பார்கள். களைப்பின் மிகுதியால் மறுநாள் வந்து மீதியை உடைக்கலாம் என்று சென்று விடுவார்கள். ஆனால் இறைவனின் கட்டளைப்படி அந்த உடைப்புகள் சரி செய்யப்பட்டு மீண்டும் புது சுவராக மாறி விடும். மீண்டும் அவர்கள் முயற்சி தொடரும். இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். எது வரை என்றால் இறைவன் நாடி அந்த இரும்பு சுவரை தவிடு பொடியாக்கும் வரை. மறுமை நாளின் அடையாளம் வரும் வரை அவர்கள் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்’’ என்று திர்மிதியில் ஒரு ஹதீஸில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

“யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் எண்ணிக்கையில் மற்ற ஜனங்களைவிட அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்” (இப்னு கதீர்)

“அந்நாளில் அவர்களில் சிலரை சிலருடன் அலை போல் மோதவிடுவோம். மேலும் சூர் ஊதப்பட்டதும் அவர்களை ஒன்று திரட்டுவோம்”. (திருக்குர்ஆன் 18:99)

மறுமையின் காலம் அறிவிக்கப்பட்டவுடன், அடைபட்டுக்கிடக்கும் யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்கள் பூமியின் மூலை முடுக்கெல்லாம் சென்று மனிதர்கள் அனைவரையும் கொன்று குவிப்பார்கள்.

நபி ஈஸா தன் கூட்டத்தாரை காப்பாற்றும் பொருட்டு, அவர்களை தூர் மலையின் உயரத்துக்கு கொண்டு சென்று விடுவார்கள். ஆனால் பூமியில் கொன்று குவித்த மனித இனத்தை தாண்டி யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் அவ்வழியே செல்வார்கள். முதலில் ஒரு கூட்டத்தினர் ஒரு நீரோடையை காண்பார்கள். அதில் நீர் பருகுவார்கள். அதன் பின் வரும் கூட்டத்தினர் அதே இடத்தை கடந்து செல்லும்போது அந்த இடத்தில் முன் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததாக கூறுவார்கள். அதாவது, பூமி காய்ந்து போகும் அளவுக்கு ஒரு சிறிய கூட்டத்தினரே அவ்வளவு நீரையும் பருகி நீரோடையே வற்றிப்போகச் செய்வார்கள்.

பின்னர் யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் ஈஸா நபி அவர்கள் தங்கி இருக்கும் மலை உச்சியை அடைந்து ஈஸா நபியையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் முற்றுகை இடுவார்கள். அவர்களின் கொடுமைகள் எல்லை மீறிச்செல்லவே, ஈஸா நபியும் அவரின் தோழர்களும் இறைவனிடம் மனம் கசிந்துருகி துஆ செய்வார்கள். அந்த கொடுமைகளிலிருந்தும், கொடிய மக்களிடம் இருந்தும் காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்வார்கள்.

இறைவன் அவர்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு புழுக்களை கொண்டு யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினரை தாக்குதல் செய்வான். புழுக்களின் தாக்குதலுக்கு தாக்குபிடிக்காமல் யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் அனைவரும் செத்தொழிந்து போவார்கள். பின்னர் ஈஸா நபி அவர்களும், அருமை தோழர்களும் தங்கள் இருப்பிடம் திரும்பி விடுவார்கள்.

இதனை நபிநாதர் இயம்பியதாக முஸ்லிம் ஹதீது கிரந்தத்தில், நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் முழுமையாக அழிக்கப்பட்டபின் அல்லாஹ் அருள் மழையை அனுப்புவான். அது பூமியையும் அதன் வீடுகளையும் மிகவும் சுத்தமாக கழுவி விடும். பின்னர் பூமியை நோக்கி, உன்னின் கனிகளை முளைக்கச் செய், உன்னிடம் உள்ள பரக்கத்தையும் திரும்ப கொடு என்று கட்டளையிடப்படும். அதன் அடிப்படையில் ஒரு கூட்டமே உண்ணும் அளவிற்கு அந்த கனிகளில் பரக்கத் மிகுந்திருக்கும். ஒரு ஒட்டகை பாலை ஒரு கூட்டமே பருகும் அளவு அதிலும் பரக்கத் பொருந்தியிருக்கும். வளமான வாழ்க்கையை மக்கள் அனுபவிப்பர்.

அப்போது, “அல்லாஹ், ஒரு சுகமான காற்றை அனுப்புவான். அக்காற்று மனிதனின் அக்குள் வரை செல்லும். மூமீன்கள், முஸ்லிம்கள் அனைவரின் உயிர்களும் கைப்பற்றப்படும். கெட்ட மக்கள் மட்டுமே எஞ்சி நிற்பர். அவர்கள் இருக்கும் போது தான் மறுமை நாள் நிகழும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

அப்போது தான் வானம் பிளக்கப்படும். சூரியன் பிரகாசம் குறைக்கப்படும். நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும். மலைகள் அதன் இடத்திலிருந்து அகற்றப்படும். கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் தெறித்தலையும், காட்டு மிருகங்கள் ஊர்களில் வந்து ஒன்று கூடும். கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும். உலகம் முடிவு பெறும். விசாரணை காலம் ஏற்படும். உயிர்கள் உடலுடன் மீண்டும் சேர்க்கப்படும். அந்த மறுமை நாள் ஏற்பட்டு விடும். 

பிரபல்யமான பதிவுகள்