ஸலாத்துன் நாரிய்யா
اَلصَّلٰوةُ النَّارِيَّةُ
اَللّٰهُمَّ صَلِّ صَلٰوةً كَامِلَةً وَّسَلِّمْ سَلَامًا تَامًّا، عَلٰى سَيِّدِنَا مُحَمَّدِنِ الَّذِيْ تَنْحَلُّ بِهِ الْعُقَدُ، وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ، وَتُقْضٰى بِهِ الْحَوَآئِجُ، وَتُنَالُ بِهِ الرَّغَآئِبُ، وَحُسْنُ الْخَوَاتِمِ، وَيُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ الْكَرِيْمِ، وَعَلٰى اٰلِهِ وَصَحْبِهِ فِيْ كُلِّ لَمْحَةٍ وَّنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُوْمٍ لَّكَ.
ஸலாத்துன் நாரியா
அல்லாஹும்ம ஸல்லி ஸலாத்தன் காமிலத்தன் வஸல்லிம் ஸலாமன் தாம்மன் அலா ஸய்யிதினா முஹம்மதின் அல்லதி தன்ஹல்லு பிஹில் உகத். வதன்ஃபரிஜு பிஹில் குரப் வதுக்லா பிஹில் ஹவாயிஜ். வதுனாலு பிஹிர் ரகாயிபு வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹில் கரீம். வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி ஃபீ குல்லி லம்ஹத்தின் வ நஃப்சின் பி அததி குல்லி மஃலூமின் லக்க.
தரூத் எ நாரியா மாபெரும் ஆற்றலாகும். தினமும் ஓதப்படும் பட்சத்தில் உலகில் ஒருவராலும் ஒரு தீங்கும் ஏற்படாத வலிமையும் ஆற்றலும் பெற்றுத் தரக்கூடியதாகும். உலகில் ஒருவர் ஆற்றக்கூடிய அனைத்து காரியங்களிலும் மாபெரும் வெற்றியை நல்கக்கூடியதாகும். சோதனை காலங்களில் இத் தரூது ஓதப்பட்டால், அல்லாஹு தஆலா மனிதர்களுக்கு அவர்கள் அறியாத புறத்தில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்வான். ஓதுபவர் ஒவ்வொரு தங்கடங்களில் இருந்தும் தப்பிப்பார், சோதனைகள் சாதனைகளாகும், நற்பலன்கள் நாடிவரும், நல்வாழ்வு தேடிவரும்.*
பொருள்: அல்லாஹ்வே! எங்களுடைய தலைவரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் ஸஹாபிகள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்கு பரிபூரண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக!
அந்த முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படிப்பட்டவரென்றால் அவர்களின் மூலமாகத் தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர்களின் மூலம்தான் துன்பங்கள் நீங்குகின்றன. அவர்களின் மூலம்தான் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர்களின் மூலம்தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்றுக் கொள்ளப்படுகிறது. அவர்களுடைய திருமுகத்தின் மூலம்தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது.
[09/09, 9:28 PM] +91 97916 80838: DUROOD-E-NAARIYA
ALLAHUMMA SALLI SALAATHAN KAMILATAN,
WA SALLIM SALAAMAN TAAAMAN,
ALA SAYYIDINA MUHAMMADINIL LAZEE,
TANHALLU BIHIL UQADU,
WA TANFARIJU BIHIL KURABU,
WA TUQZA BIHIL HAWA IJU,
WA TUNAALU BIHIR RAGHAAA’IBU, WAHUSNUL KHAWATIMI,
WA YSTASQAL GHAMAMU BI WAJHIHIL KAREEM,
WA ALA A’LIHI WASAHBIHI
FI KULLI LAMHATIN WA NAFSIN BI ADADADI KULLI MA’LUMIL LAK.