நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், மே 29, 2024

குழந்தைக்கு பெயரிடுதல்,

குழந்தைக்கு பெயரிடுதல்

அபூதர்தா (ரலி) அறிவிக்கிறார்கள் : இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *'(இறுதி) தீர்ப்பு நாளில் நீங்கள் உங்கள் பெயர்களைக் கொண்டும். உங்கள் தந்தையுடைய பெயரைக் கொண்டும் அழைக்கப்படுவீர்கள்.* *எனவே உங்களுக்கு அழகிய பெயர்களை வைத்துக் கொள்ளுங்கள்'*
(நூல் - அபூதாவூது)

  குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமெனில் உடனே மொபைலில் தேட ஆரம்பித்து, *சற்று ஸ்டைலாக, இதுவரை கேள்விப்படாத புதிய பெயராக இருந்தால் உடனே அதனை கூறி அழைக்க ஆரம்பித்து விடுகிறோம்.* என் குழந்தைக்கு ஊரில் யாரும் வைக்காத பெயரை வைக்கணும் என தேடி தேடி கண்டுபிடித்து நிம்மதி பெருமுச்சு விடுகின்றனர். *ஆனால் பெயரின் உச்சரிப்பை பற்றியோ, அர்த்தத்தை பற்றியோ எவ்வித கவலையும் படுவதில்லை.* 
பெயர் வாழ்க்கையை மாற்றும். பெயருக்கும். வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் புதியவர்கள் யாரேனும் வந்தால், அவர்களுடைய பெயர்களைக் கேட்பார்கள். *நபி (ஸல்) அவர்களுக்கு அப்பெயர்கள் விருப்பமானதாக இல்லையென்றால், அதனை மாற்றி வைப்பார்கள்..*

   அலீ (ரலி) அவர்கள் கூறுவதாவது!- 'ஹஸன்' பிறந்த போது நான் அவனுக்கு ஹர்ப் (போர்) என்று பெயரிட்டேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். என்னுடைய பேரக் குழந்தையை காட்டுங்கள். இவனுக்கு என்ன பெயர் வைத்து உள்ளீர்கள்? என்று கேட்டார்கள். 'ஹர்ப்' என்று நாங்கள் சொன்னோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவன் *ஹஸன்* (அழகன்) அல்லவா என்று சொன்னார்கள். பின்னர் ஹுஸைன் பிறந்த போது நான் அவனுக்கு ஹர்ப் (போர்) என்று பெயரிட்டேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். என்னுடைய பேரக் குழந்தையை காட்டுங்கள். இவனுக்கு என்ன பெயர் வைத்து உள்ளீர்கள்? என்று கேட்டார்கள்.. 'ஹர்ப் என்ற சொன்னோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவன் *ஹுஸைன்* (ஹஸன் என்பதன் மிகச்சிறிய சுருக்கம் -குட்டியழகன்) அல்லவா? என்ற சொன்னார்கள். மூன்றாவது மகன் பிறந்த போது நான் அவனுக்கு 'ஹர்ப் (போர்) பெயரிட்டேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். என்னுடைய பேரக் குழந்தையை காட்டுங்கள். இவனுக்கு என்ன பெயர் வைத்து உள்ளீர்கள்? என்று கேட்டார்கள். 'ஹர்ப் என்ற சொன்னோம். இவன் *முஹ்ஸின்* (அன்பு நிறைந்தவன்) அல்லவா? என்று கூறினார்கள். அதற்கு பின் நான் என் பேரக்குழந்தைகளுக்கு ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பிள்ளைகளின் பெயர்களான ஷப்பர். ஷுபைர், முஷப்பிர் ஆகிய பெயர்களை சூட்டினேன் என்று கூறினார்கள்

(நூல் - அஹ்மத்)

பிரபல்யமான பதிவுகள்