அன்புள்ளவர்களே! எதிர்வரும் பிப் 14-ம் தேதி உலக முழுவதும் காதலர் தினமாக வேலன்டைன் டே (Valentine’s Day) ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. |
இக் காதலர் தினத்தைப்பற்றி நம் மார்க்கம் [அல்குர்ஆனும் – அல்ஹதீஸும் ] என்ன சொல்கிறது. என்பதனைப் பற்றியும்.. காதலர் தினம் நம்மிடம் சில செய்திகளை சொல்ல வேண்டுமென ஆசைப்படுகிறது அவைகள் என்னென்ன என்பதனைப் பற்றியும்.. இன்றைய ஜுமுஆ உரையில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்……
அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:-
قال الله تعالى
وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا ۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِۘ
(நம்) தூதர் ﷺ உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். [அல்குர்ஆன் 59:7.]
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم ♣
عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ : رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم “مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ
நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.அபூதாவூத் 4606,
【காதலர் தினம் நம்மிடம் பேசுகிறது…】
அன்புள்ளவர்களே! காதலர் தினம் முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், சில செய்திகளை சொல்லி விட்டு சொன்றுள்ளது அவற்றை சற்று விரிவாக பார்போமா! வாருங்கள்…..
நபி ஸல் |
நபி சொன்ன, வாழ்ந்த வாழ்க்கையின் பிரகாரம் நாம் வாழ முயற்சிக்க வேண்டும். நபி சொல்லாத வாழ்க்கையை , சந்தோஷத்தை புறந்தள்ளி விட வேண்டும். ஏன்? அதில்தான் வெற்றி இருக்கிறது.
காதலர் தினத்தின் வருகையையொட்டி முஃமீன்கள் யாவரும் சந்தோஷபடாமல் அத்தினத்தில் நடைபெரும் அனாச்சாரங்களை பற்றி அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடியவர்களே அதிகம். எனென்றால்?
அடிக்கடி வாட்சப்பில் இஸ்லாமிய பெண்ணுடன் மாற்றாருக்கு திருமண நடப்பதாக வரும் பத்தரிக்கையை பார்க்கும் போது நம் மணம் வெதும்புகிறது. நமக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் அப்பிள்ளையை வளர்த்த பெற்றோர்களுக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும்.
இன்னும் அத் தினத்தில் நடந்த அனாச்சாரங்களை பற்றி பேச நாவு கூசுகிறது. அவ்வளவும் காதல் என்ற பெயரில் திருமணம் முடித்த பின் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் காதலர் தினம் என்ற பெயரில் நடக்கிறது. இவ்வாறு நடப்பதை யாரும் மற[று]க்க முடியாத உண்மையாகும்.
عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مِنْ حُسْنِ اِسْلاَمِ الْمَرْءِ تَرْكُهُ مَا لاَ يَعْنِيْهِ
ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது, நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும்”(திர்மிதீ 2317]
மேற்கூறிய ஹதிசை ஆராயும் போது:- தனது மறுமை வாழ்க்கைக்கு தேவைப்படாத பாவமான காரியங்களை விட்டும் ஒதுங்கி இருப்பது மிக சிறப்பானதாகும். அதனடிப்படையில் காதலர் தினம் என்பதும் தமக்கும், தமது சமுதாயத்திற்க்கும் தேவையில்லாத ஒன்றாகும். ஆதலால் அதனை விட்டும் தவிர்ந்திடுவோமாக!
وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ ۛۚ وَاَحْسِنُوْا ۛۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். {அல்குர்ஆன் 2:195..}
وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ{ உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் } என்ற வசனத்திற்க்கு உலக ரீதியாக கருத்து அர்தம்:- காதலர் தினத்தன்று பூ கொடுத்தல், லட்டர் கொடுத்தல், செல் மூலம் மெசேஜ் அனுப்புதல், Etc……. இவையெல்லாம் உலக வாழ்வில் நம் கையால் அழிவை தேடும் காரணிகளாகும்.
وَاَحْسِنُوْا என்ற வசனத்திற்க்கு உலக ரீதியாக கருத்து அர்தம் :- மேற் சொன்ன விஷயங்களை தவிர்தலே நன்மை செய்வோராக ஆகலாம். இன்ஷா அல்லாஹ்.
முன்பெல்லாம் இந்த காதல் (LOVE ) என்ற சொல்லை ஆங்கில ஆசிரியர்கள் கூட வகுப்பறையில் பயன்படுத்த கூச்சப்பட்ட காலம் மாறி இன்று சின்ன குழந்தைகளுக்கு கூட இந்த சொல்லை பயன்படுத்தும் அளவுக்கு கல்வித்துறைகூட மாறி போய்விட்டது என்றால் அது ஆச்சரியப் படுவதற்கில்லை.
காதல் என்ற பெயரில் காமம் மட்டும் விஞ்சி நிற்கிறது. இந்த தினத்தில் பொதுமக்கள் கூடும் இடம் என்று கூட பார்க்காமல் இவர்கள் அடிக்கும் காமக்கூத்துக்கள், கலாச்சார சீரழிவின் அடையாளமாக உள்ளது. எனவே இத்தகைய கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் கொண்டாட்டங்களை தடுக்க அரசும், சமூக ஆர்வலர்களும் முன்வரவேண்டும்
ஆக நம் ஆசையை, நஃப்ஸை கட்டுப்படுத்தி, ஸஹாபாக்களை போல பேணுதலாக வாழுவோமாக!
【காதலர் தினத்தன்று ஒரு முஃமீன் எப்படி மக்களை அத்தீமையிலிருந்து பாதுகாக்க பாடுபடுவார்? 】
அன்புள்ளவர்களே!! நாம் நம் பிள்ளைகளை காதலர் தினத்தன்று கொண்டாடும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாமல் கவனமாக பாதுகாக்க வேண்டும், ஏனென்றால் நாம் தாம் அதற்க்கு பொருப்பாளி. இது தொடர்பாக மறுமையில் நாம் விசாரிக்கப்பவோம்.
وَقَالَ تَعَالي: (وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ۞). (المؤمنون:٣
இன்னும் அவர்கள் வீணானவற்றைப் புறக்கணித்து இருக்கிறவர்கள் (அல்முஃமினூன்:3)
وَقَالَ تَعَالي: (وَالَّذِيْنَ لاَ يَشْهَدُوْنَ الزُّوْرَ لا وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّواْ كِرَامًا۞). (الفرقان:٧٢
இன்னும் அவர்கள் எத்தகையோறென்றால் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; வீணானதின் பக்கம் அவர்கள் நடந்து சென்றால் கண்ணியமானவர்களாக (அதை விட்டும் ஒதுங்கிச்) செல்வார்கள் (அல்ஃபுர்கான்:72)
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “ مَنْ رَأَى مُنْكَرًا فَاسْتَطَاعَ أَنْ يُغَيِّرَهُ بِيَدِهِ فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْفَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ ” .
உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால் தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும். திர்மிதி (2173),
【காதலர் தினம் பிற சமுதாயக் கலாச்சாரம்…】
அன்புள்ளவர்களே! இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் காதலர் தினத்தன்று புர்கா மாற்றிகொண்டு / தொப்பி போட்டுக் கொண்டு பலர் கொண்டாடி வருகின்றார்கள்.
இந்த காதலர் தினத்தை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்..
ஒரு உண்மையான முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.
«عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ” .
ஒரு சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் அவர்களைச் சேர்ந்தவராவார்.( அபூதாவூத் 1514 , 4031)
இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்?
إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَأَحْسَنَ الْهَدْىِ هَدْىُ مُحَمَّدٍ وَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ وَكُلَّ ضَلاَلَةٍ فِي النَّارِ ”
செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” Sunan an-Nasa’i 1578
عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ أُمِّ عَبْدِ اللَّهِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ: رَسُولُ اللَّهِ صلى الله عليه و سلم “مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். அபூதாவூத் 4606
மீடியாக்களை புரகணிப்போம்!””
இன்று எந்த திரைப்படமாக இருந்தாலும் காதலை வைத்துதான் கதையை ஆரம்பிக்கின்றன.
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக
பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி, ”அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட்” என்று கூறும் அளவிற்கு கவுரமான விஷயமாக மாறி விட்டது.
உங்க லவ்வரோட பேர டைப் பன்னி அப்படி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிமிடருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும்
சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.
அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْ
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். {அல்குர்ஆன் 24:30.}
وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِ عَلٰىجُيُوْبِهِنَّيُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். {அல்குர்ஆன்:24:31.}
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، – يَعْنِي الْيَشْكُرِيَّ – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ سَوَّارٍ أَبِي حَمْزَةَ، – قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ سَوَّارُ بْنُ دَاوُدَ أَبُو حَمْزَةَ الْمُزَنِيُّالصَّيْرَفِيُّ – عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ “ .
உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழச்சொல்லி ஏவுங்கள்; பத்து வயதாகும் போது தொழவில்லையெனில் (காயம் ஏற்படாதவாறு) அடியுங்கள்! மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்’ [அபூதாவுத் 495).
அன்னியப் பெண்னின் பார்வை வேண்டாம்!! அர்ஷின் நிழல் வேண்டும்:
அன்னியப் பெண்களைக் கண்டால் பார்வையைத் தாழ்த்துமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது. இதற்கு மாற்றமாக பார்ப்பதைத் தாண்டி அன்னியப் பெண்ணின் தோல் தன் மீது படும் அளவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து கொண்டார்கள் என்று கூறும் இந்த ஹதீஸை நம்பினால் குர்ஆனிற்கு மாற்றமாக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நடந்தார்கள் என்று நம்ப வேண்டிவரும்.
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். திருக்குர்ஆன் 24:30
அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமில்லாத (கியாமத்) நாளில் தனது ரஹ்மத் என்னும் அர்ஷின் நிழலில் ஏழு வகையான மனிதர்களுக்கு இடம் அளிப்பான்: அவைகளில் 5-வது நபர் . وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَّجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللهَ நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர் (ஒதுங்கிக் கொண்டவர்) (புகாரி – 6806 )
மதம் மாறி நரகில் செல்க:
காதல் என்ற பெயரில் மாற்றுமத சமூகத்திலேயே திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது.
உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் . (அல்குர்ஆன் 2:217)
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221.)
அன்னியப் பெண்னின் பார்வையே கூடாது பிறகு எப்படி காதலிப்பது கூடும்????
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى امْرَأَةً فَدَخَلَعَلَىزَيْنَبَ بِنْتِ جَحْشٍ فَقَضَى حَاجَتَهُ مِنْهَا ثُمَّ خَرَجَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ لَهُمْ “ إِنَّ الْمَرْأَةَ تُقْبِلُ فِي صُورَةِ شَيْطَانٍ فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا فَلْيَأْتِ أَهْلَهُ فَإِنَّهُ يُضْمِرُ مَا فِي نَفْسِهِ ” .
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பார்வையை இன்னொரு பார்வையால் தொடராதே! முதலாவது (எதார்த்தப் பார்வை) உனக்கு ஆகுமானது, பிந்தையது உனக்கு ஆகுமானதல்ல.” நூல்கள்: அபூதாவூத் 2151, திர்மிதி 2777.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள். புகாரி (5232)
“ஒரு பெண்ணுடன் எந்த (அன்னிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி (5233)
حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْتَحِنُ مَنْ هَاجَرَ إِلَيْهِ مِنَ المُؤْمِنَاتِ بِهَذِهِ الآيَةِ بِقَوْلِ اللَّهِ: {يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ المُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ} [الممتحنة: 12] إِلَى قَوْلِهِ {غَفُورٌ رَحِيمٌ} [البقرة: 173]، قَالَ عُرْوَةُ: قَالَتْ عَائِشَةُ: فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنَ المُؤْمِنَاتِ، قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ بَايَعْتُكِ» كَلاَمًا، وَلاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي المُبَايَعَةِ، مَا يُبَايِعُهُنَّ إِلَّا بِقَوْلِهِ: «قَدْ بَايَعْتُكِ عَلَى ذَلِكِ»
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(திருக்குர்ஆனின் 60:10 முதல் 12 வரையிலான) இந்த வசனங்களின் கட்டளைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள். இந்த (வசனத்திலுள்ள) நிபந்தனையை இறை நம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக் கொண்டாரோ அவரிடம், உன் விசுவாசப் பிரமாணத்தை நான் ஏற்றுக் கொண்டேன் என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வழங்கும் போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன் என்று அவர்கள் வாய் மொழியாகவே தவிர வேறு எந்த முறையிலும் பெண்களிடம், விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை. நூல்: புகாரி 4891, 2713
கையைப் பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி தான் விசுவாசப் பிரமாணம்! இதை திருக்குர்ஆன் 48:10 வசனத்தில் காணலாம். அத்தகைய விசுவாசப் பிரமாணத்தைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களின் கையைப் பிடித்து எடுத்ததில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.
திருமணம் செய்து கொள்வதற்குத் தடுக்கப்பட்ட உறவுமுறைகளான தந்தை, சகோதரன், மகன், தாய் தந்தையின் சகோதரர்கள், சகோதர சகோதரியின் மகன்கள் போன்றவர்களையும், கணவனையும் தவிர வேறு எவரிடமும் பெண்கள் தொட்டு பேசக் கூடாது.
திருமணம் செய்து கொள்வதற்குத் தடுக்கப்பட்ட உறவுமுறைகளான தந்தை, சகோதரன், மகன், தாய் தந்தையின் சகோதரர்கள், சகோதர சகோதரியின் மகன்கள் போன்றவர்களையும், கணவனையும் தவிர வேறு எவரிடமும் பெண்கள் போன் பேச கூடாது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا ابْنُ ثَوْرٍ، عَنْ مَعْمَرٍ، أَخْبَرَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَا رَأَيْتُ شَيْئًاأَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم “ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ فَزِنَا الْعَيْنَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ وَيُكَذِّبُهُ ”
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு (விதியில்) எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனா கவே உள்ளான். கண்கள் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். காதுகள் செய்யும் விபசாரம் (ஆபாசப் பேச்சுகளைச்) செவியுறுவதாகும். நாவு செய்யும் விபசாரம் (ஆபாசப்) பேச்சாகும். கை செய்யும் விபசாரம் (அந்நியப் பெண்ணைப்) பற்றுவதாகும். கால் செய்யும் விபசாரம் (தவறான உறவைத் தேடி) அடியெடுத்து வைப்பதாகும். மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது. அபூதாவூத் 2152}.
இச்சை காதல் வேண்டாம்!! இறைக்காதல் வேண்டும்!!!
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنْطَلَقَ ثَلاَثَةُ رَهْطٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ حَتَّي اَوَوْا الْمَبِيْتَ اِلَي غَارٍ فَدَخَلُوْهُ، فَانْحَدَرَتْصَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَسَدَّتْ عَلَيْهَا الْغَارَ، فَقَالُوْا: اِنَّهُ لاَ يُنْجِيْكُمْ مِنْ هذِهِ الصَّخْرَةِ اِلاَّ اَنْ تَدْعُوا اللهَ بِصَالِحِ اَعْمَالِكُمْ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ: اَللّهُمَّ! كَانَ لِيْ اَبَوَانِ شَيْخَانِ كَبِيْرَانِ، وَكُنْتُ لاَ اَغْبِقُ قَبْلَهُمَا اَهْلاً وَلاَ مَالاً فَنَأَي بِيْ فِيْ طَلَبِ شَيْءٍ يَوْمًا فَلَمْ اُرِحْ عَلَيْهِمَا حَتَّي نَامَا فَحَلَبْتُ لَهُمَا غَبُوْقَهُمَا فَوَجَدْتُهُمَا نَائِمَيْنِ، فَكَرِهْتُ اَنْ اَغْبِقَ قَبْلَهُمَا اَهْلاً اَوْ مَالاً، فَلَبِثْتُ وَالْقَدَحُ عَلي يَدَيَّ اَنْتَظِرُ اِسْتِيْقَاظَهُمَا حَتَّي بَرَقَ الْفَجْرُ فَاسْتَيْقَظَا فَشَرِبَا غَبُوْقَهُمَا، اَللّهُمَّ اِنْ كُنْتُ فَعَلْتُ ذلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيْهِ مِنْ هذِهِ الصَّخْرَةِ، فَانْفَرَجَتْ شَيْئًا لاَ يَسْتَطِيْعُوْنَ الْخُرُوْجَ، قَالَ النَّبِيُّ ﷺ: وَقاَلَ اْلآخَرُ: اَللّهُمَّ! كَانَتْ لِيْ بِنْتُ عَمٍّ، كَانَتْ اَحَبَّ النَّاسِ اِلَيَّ فَاَرَدْتُهَا عَنْ نَفْسِهَا، فَامْتَنَعَتْ مِنِّيْ حَتَّي اَلَمَّتْ بِهَا سَنَةٌ مِنَ السِّنِيْنَ فَجَاءَتْنِيْ فَاَعْطَيْتُهَا عِشْرِيْنَ وَمِائَةَ دِيْنَارٍ عَلي اَنْ تُخَلِّيَ بَيْنِيْ وَبَيْنَ نَفْسِهَا فَفَعَلَتْ، حَتَّي اِذَا قَدَرْتُ عَلَيْهَا قَالَتْ: لاَ اُحِلُّ لَكَ اَنْ تَفُضَّ الْخَاتَمَ اِلاَّ بِحَقِّهِ، فَتَحَرَّجْتُ مِنَ الْوُقُوْعِ عَلَيْهَا فَانْصَرَفْتُ عَنْهَا وَهِيَ اَحَبُّ النَّاسِ اِلَيَّ فَتَرَكْتُ الذَّهَبَ الَّذِيْ اَعْطَيْتُهَا، اَللّهُمَّ اِنْ كُنْتُ فَعَلْتُ ذلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيْهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ غَيْرَ اَنَّهُمْ لاَ يَسْتَطِيْعُوْنَ الْخُرُوْجَ مِنْهَا، قَالَ النَّبِيُّ ﷺ: وَقاَلَ الثَّالِثُ: اَللّهُمَّ! اِنِّيْ إِسْتَأْجَرْتُ اُجَرَاءَ فَاَعْطَيْتُهُمْ اَجْرَهُمْ غَيْرَ رَجُلٍ وَاحِدٍ، تَرَكَ الَّذِيْ لَهُ وَذَهَبَ ، فَثَمَّرْتُ اَجْرَهُ حَتَّي كَثُرَتْ مِنْهُ اْلاَمْوَالُ فَجَاءَنِيْ بَعْدَ حِيْنٍ فَقَالَ: يَا عَبْدَ اللهِ! اَدِّ اِلَيَّ اَجْرِيْ، فَقُلْتُ لَهُ: كُلُّ مَا تَرَي مِنْ أَجْرِكَ مِنَ اْلاِبِلِ وَالْبَقَرِ وَالْغَنَمِ وَالرَّقِيْقِ فَقَالَ: يَا عَبْدَ اللهِ! لاَ تَسْتَهْزِئئْ بِيْ، فَقُلْتُ: اِنِّيْ لاَ اَسْتَهْزِئئُ بِكَ، فَاَخَذَهُ كُلَّهُ فَاسْتَاقَهُ فَلَمْ يَتْرُكْ مِنْهُ شَيْئًا، اَللّهُمَّ! فَاِنْ كُنْتُ فَعَلْتُ ذلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيْهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ فَخَرَجُوْا يَمْشُوْنَ.
உங்களுக்கு முன் இருந்த ஒரு சமுதாயத்தினரில் மூன்று நபர்கள் ஒன்றாகப் பயணம் செய்தார்கள். (இரவு நேரமாகிவிட்டதால்) இரவைக் கழிக்க ஒரு குகையில் நுழைந்தார்கள். அந்த நேரம் மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து குகையின் வாயிலை அடைத்துவிட்டது. (இதைப்பார்த்த) அவர்கள், எல்லோரும் தத்தமது நற்செயல்கள் மூலம் அல்லாஹுதஆலாவிடம் துஆக் கேட்டுத்தான் இந்தப் பாறையிலிருந்து ஈடேற்றம் பெறமுடியும்” என்று சொன்னார்கள். (அவ்வாறே அவர்கள் தத்தமது நற்செயல்களின் பொருட்டால் துஆச் செய்தார்கள்) அவர்களில் ஒருவர், யாஅல்லாஹ், (உனக்குத் தெரியும்) எனது பெற்றோர் மிக வயது முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு முன்னதாக எனது மனைவி, மக்கள், அடிமைகளுக்குப் பால் கொடுக்கமாட்டேன். ஒரு நாள் நான் ஒரு பொருளைத் தேடி வெகுதூரம் சென்று விட்டுத் திரும்பி வந்தபோது பெற்றோர் தூங்கி விட்டிருந்தனர். என்றாலும், நான் அவர்களுக்காக மாலை நேரப் பாலைக் கறந்து (அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அவர்களிடம் சென்றபோது. அவர்கள் (அப்பொழுதும்) உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. அவர்களுக்குமுன் மனைவி, மக்கள், அடிமைகளுக்குப் பால் கொடுப்பதையும் விரும்பவில்லை. நான் பால் பாத்திரத்தைக் கையில் ஏந்தியவாறு, அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து அவர்களின் தலைப் பக்கமாக நின்று கொண்டிருந்தேன். காலைப்பொழுது ஆகிவிட்டது, அவர்கள் விழித்துவிட்டார்கள், (நான் அவர்களுக்குப் பாலைக் கொடுத்தேன்) அந்நேரத்தில் அவர்கள் முதல் நாள் மாலை நேரத்துப் பாலைக் குடித்தார்கள். யாஅல்லாஹ், உன்னுடைய திருப்பொருத்தத்திற்காக இச்செயலை செய்திருந்தேனென்றால், இப்பொழுது இந்த பாறையின் காரணமாக சிரமத்தில் சிக்கி இருக்கும் எங்களை இதிலிருந்து ஈடேற்றம் பெறச் செய்வாயாக!” என்று துஆச் செய்தார். அவருடைய துஆவின் பலனால் அந்தப் பாறை சிறிதளவு விலகியது. ஆனால், வெளியேற முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், இரண்டாம் மனிதர், யாஅல்லாஹ்! என்னுடைய சிறிய தந்தைக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் எனக்கு மிக அன்புக்குரியவளாக இருந்தாள். நான் (ஒருமுறை) அவளுடன் என் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ள நினைத்தேன். ஆனால், அவள் அதற்கு இணங்கவில்லை. இந்நிலையில் வறுமையின் காரணமாக அவள் (என்னிடம்) வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவள் என்னைத் தனிமையில் சந்திக்கவேண்டுமென்ற நிபந்தனையுடன் அவளுக்கு நான் நூற்றி இருபது தங்க நாணயங்களைக் கொடுத்தேன், அவளும் அதற்குச் சம்மதித்துவிட்டாள். இறுதியில் (என் இச்சையைப் பூர்த்தி செய்யச் சரியான சந்தர்ப்பம் பெற்றிருந்த போது) அநியாயமாக இந்த முத்திரையை உடைப்பதை உனக்கு ஆகுமானதாக நான் கருதவில்லை” என்று சொன்னாள். (இதைக்கேட்டதும்) நான் என் தீய எண்ணத்தை விட்டுவிட்டேன், உண்மையில் அவள் எனக்கு மிகப்பிரியமானவளாக இருந்தும், அவளை விட்டும் விலகிவிட்டேன். அவளுக்கு நான் கொடுத்த அந்தத் தங்கக் காசுகளையும் விட்டுவிட்டேன். யாஅல்லாஹ்! உன்னுடைய பொருத்தத்திற்காக இச்செயலை நான் செய்திருந்தால், எங்களின் இந்தச் சிரமத்தை நீக்குவாயாக!” என்று துஆ செய்தார், அவ்வாறே பாறை இன்னும் கொஞ்சம் விலகியது, ஆயினும் வெளியே வரமுடியவில்லை. மூன்றாமவர், யாஅல்லாஹ், நான் கூலியாட்கள் சிலரை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். அனைவருக்கும் நான் கூலியைக் கொடுத்துவிட்டேன். ஒருவர் மட்டும் கூலிவாங்காமல் சென்றுவிட்டார். நான் அவருடைய கூலிப் பணத்தைத் தொழிலில் முதலீடு செய்தேன். இறுதியாக அவர் செல்வம் பெருகிவிட்டது, சிலநாட்கள் கழித்து ஒரு நாள் அவர் வந்தார், வந்தவர், அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குத் தாருங்கள்” என்றார். அதற்கு நான், நீ பார்க்கின்ற இந்த ஒட்டகம், மாடு, ஆடுகள் மற்றும் அடிமைகள் இவையெல்லாம் உம்முடைய கூலிப்பணம் தான்!”. உம்முடைய கூலிப் பணத்தைத் தொழிலில் முதலீடு செய்ததால் இந்த லாபங்கள் கிடைத்துள்ளன” என்றேன். அல்லாஹ்வின் அடியாரே! என்னைக் கேலி செய்யாதீர்” என்று அவர் கூறினார்”, நான் கேலி செய்யவில்லை” (உண்மையைக் கூறுகிறேன்) என்றேன். (என்னுடைய விளக்கத்திற்குப்) பிறகு அவர் பொருள்கள் அனைத்தையும் கொண்டு சென்று விட்டார், எதையும் விட்டுவைக்கவில்லை. யாஅல்லாஹ், நான் இந்தச் செயலை உன்னுடைய பொருத்தத்திற்காகவே செய்திருந்தேனென்றால், நாங்கள் சிக்கியுள்ள இந்தச் சிரமத்தை நீக்குவாயாக!” என்று துஆச் செய்தார். அப்படியே அந்தப் பாறை முழுமையாக விலகியது, (குகையின் வாசல் திறந்து கொண்டது) எல்லோரும் வெளியேறிவிட்டனர்” என்ற ஹதீஸைத் தாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புஹாரீ 2272.
இஸ்லாமிய பெண் பிள்ளையும் நரகமும்:
وعن أُسامَة، عن النَّبيِّ ﷺ قَالَ: قُمْتُ عَلَى بابِ الْجنَّةِ، فَإِذَا عامَّةُ مَنْ دخَلَهَا الْمَسَاكِينُ، وأَصْحَابُ الجَدِّ محْبُوسُونَ،غَيْر أَنَّ أَصْحاب النَّارِ قَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ، وقُمْتُ عَلَى بابِ النَّارِ، فَإِذَا عامَّةُ مَنْ دَخَلَهَا النِّسَاءُ متفقٌعَلَيهِ.
“நான் சொர்க்கத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள்தான் . பணக்காரர்கள (உள்ளநுழைய) தடுக்கப்பட்டிருந்தனர். எனினும் நரகவாசிகள் நரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நான் நரகின் வாசலில் நின்றேன். அதில் நுழைந்தவர்களில் அதிகமானவர்கள் பெண்கள்தான்.” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உஸாமா (ரழி) அவர்கள் . நூல் : புகாரி 3241.5198.
இஸ்லாமிய பெண் பிள்ளைகள் சோதனை:
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ ”.
(பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யும் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை. புகாரி 5096
முன்மாதிரி இஸ்லாமிய பெண்கள் எப்படி இருப்பார்கள்:
- 1. மற்ற பெண்களை போல [தீமைகளை] துனிந்து செய்யமாட்டார்கள்.
- 2. இறையச்சத்தோடு இருப்பார்கள்.
- 3. அந்நியரிடம் போசும் போது நளினம் காட்டமாட்டார்கள்.
- 4. நல்ல பேச்சுக்களை பேசுவார்கள்.
- 5. தங்களின் வீடுகளிலே தங்கியிருப்பார்கள்.தெருவில் ஓழுக்கமில்லாமல் திரியமாட்டார்கள்.
- 6. தொழுகையை முறைப்படி உறுதியுடன் தொழவார்கள்.
- 7. ஜகாத் கொடுப்பார்கள்.
- 8. அல்லாஹ்வுக்கும். அவனது தூதருக்கும் கீழ் படிந்து நடப்பார்கள்.
ஆதாரம்: கீழுள்ள குர்ஆன் வசனங்கள் அல்குர்ஆன்:33:32-33.
يٰنِسَآءَ النَّبِىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۚ
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். {அல்குர்ஆன்:33:32.}
وَقَرْنَ فِىْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَـرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلٰى وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِيْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ۚ
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.{அல்குர்ஆன்:33:33.}
அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசுவது நம் பெண்களிடத்தில் காணப்படாத ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் நம் சமுதாயப் பெண்களில் சிலர் அந்நிய ஆண்களிடத்தில் குழைந்து பேசுகிறார்கள். பேசும்வார்த்தை சரியாக இருந்தாலும் ஒரு ஆணிடத்தில் அதிகமாக பேசுவது தீய எண்ணத்தை அவன் மனதில் வளர்க்கும். பெண்கள் ஆண்களால் ரசிக்கப்படுபவர்களாக இருக்கும் போது இருவருக்கும் மத்தியில் பேச்சுத் தொடர்ந்தால் அது நாளைடைவில் தவறான தொடர்பாக உருவெடுத்துவிடும். பெண் அவ்வாறு நினைக்காவிட்டாலும் சாதாரண ஒவ்வொரு ஆணுடைய எண்ணமும் இப்படித் தான் இருக்கும். நபிமார்களின் மனைவியருக்கு இவ்வாறு அல்லாஹ் உபதேசிக்கிறான்.
இஸ்லாமிய பெண்களின் பெற்றோர்களின் கடமை:
عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، اَلْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْرَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ.
நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்கள், உங்களில் ஒவ்வொருவரிடமும் (அவருக்குக் கீழ் உள்ளவர்கள் பற்றி) விசாரிக்கப்படும், அரசன் பொறுப்பாளன், அவரிடம் அவரது குடிமக்களைப்பற்றி விசாரிக்கப்படும். குடும்பத் தலைவன் தனது வீட்டாருக்குப் பொறுப்பாளன், அவரிடம் அவரது வீட்டாரைப்பற்றி விசாரிக்கப்படும். பெண் தன் கணவனுடைய வீட்டிற்குப் பொறுப்பாளி அவளிடம் அவ்வீட்டில் வசிக்கின்ற குழந்தைகள் போன்றோரைப் பற்றி விசாரிக்கப்படும். வேலைக்காரர் அவரது முதலாளியுடைய பொருளுக்குப் பொறுப்பாளர், அவரிடம் அவருடைய முதலாளியின் உடமைகள், செல்வங்களைப் பற்றி விசாரிக்கப்படும், மகன் அவனுடைய தந்தையுடைய பொருளுக்குப் பொறுப்பாளன், அவனிடம் அவனது தந்தையுடைய பொருளைப்பற்றி விசாரிக்கப்படும். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள், ஒவ்வொருவரிடமும் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் பற்றி விசாரிக்கப்படும்” (புகாரி)
பெற்றோர்களகிய நாம் அவசியம் தம் பிள்ளைகளைகள் படிக்கின்ற இடம், விளையாடுகின்ற இடம், பழகுகின்ற இடம், பழகும்நண்பர்களையும், போன் பேசுவது யாரிடம் என கண்னும் கருத்துமாக கண்கானித்து வரவேண்டும். நம்புவதும் நம்பிக்கையை வளர்ப்பதும் பெற்றோர்களின் கடமைகளில் ஒன்றாகும்.
காதலின் முதல் ஆரம்பம் செல்தான்:
பெற்றோர்கள் தங்களின் பிள்ளையில் செல்லை அவ்வ போது கண்கானிக்க வேண்டும். பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரியதவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக்கொடுப்பதாகும். செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக்கொண்டிருக்கிறது.
பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன. செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்குசர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்பதில் கவனம் தேவை:
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். 66:6.
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவீர் . தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்கள்கள் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) , தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் , தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)