நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, ஜனவரி 22, 2021

குடியரசு தினம்,

குடியரசு தினம்


قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 
“என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.
(அல்குர்ஆன் : 38:35)


لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْن
َ‏ 
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
(அல்குர்ஆன் : 60:8)

குடியரசு என்றால்

குடியரசு என்றால் குடிமக்களின் அரசு என்று பொருள். அதாவது மக்களாட்சி என்று அர்த்தம். மக்கள் தங்கள் விருப்பப்படி தேர்தல் மூலம் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. இப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் இந்தியாவும் குடியரசு நாடானது.
ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது என்று பாடப் புத்தங்களில் படித்திருப்பீர்கள் அல்லவா? அரசியல் அமைப்புச் சட்டம் என்றால் என்ன தெரியுமா? நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்.
டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்ட மேதைகள் பலர் சேர்ந்து இதை உருவாக்கினார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். அதனால்தான் விடுமுறையும் கிடைக்கிறது.

அடிமை நாடாக எவ்வாறு மாறியது

இந்தியா அடிமை நாடாக எவ்வாறு மாறியது
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை சிறிய அரசர்கள், பெரிய அரசர்கள், பேரரசர்கள் எனத் தங்கள் எல்லையைப் பொறுத்து ஆட்சி செய்தார்கள். இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை. இப்படிப் பிரிந்து சிதறி கிடந்ததாலும், ஒற்றுமை இல்லாததாலும் ஆங்கிலேயர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். தந்திரமாக மன்னர்களிடம் பேசி நம் நாட்டுக்குள்ளே நுழைந்து பின்னர் நம்மை அடிமைப்படுத்தினார்கள்.

குடியரசு தினம் ஏன்


ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று இருந்தார்கள்.
அது மட்டுமல்ல, மன்னர்கள் ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள் சுயமாகச் சிந்திக்க முடியாது; சுதந்திரம் பற்றி நினைக்கவும் முடியாது. மன்னர் இறந்துபோனால், உடனே அவருடைய மகன் மன்னராகிவிடுவார். இதைத்தான் முடியாட்சி அல்லது மன்னராட்சி என்று சொல்லுவார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது என்று சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் நினைத்தார்கள். வாரிசு உரிமை உள்ள மன்னராட்சி முறை கூடாது என்று நினைத்தார்கள்.
மக்கள் பங்கு கொள்ளும் மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதற்கு நாடு குடியரசாக இருப்பது அவசியம் என்றும் முடிவு செய்தார்கள்.

குடியரசு என்பதன் விளக்கம்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத்தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது.குடியரசு என்பதற்கு, மறைந்தஅமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன் தான் மிகச்சரியாக இலக்கணம் வகுத்தார். அவரது புகழ்பெற்ற உரையின் இறுதியில் “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு‘ என்று அவர் ரத்தினச் சுருக்கமாக விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்துக்கு பொருள் தரும்படியாக இந்தியா விளங்கி வருகிறது.

அத்தகையமக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம்பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்தியஅரசியல் அமைப்புச் சட்டம்.

அரசியல் சட்ட சாசனம்

1947 ம் ஆண்டிலேயே சுந்திரம் கிடைத்தாலும் அரசியல் சட்ட சாசனத்தை உருவாக்க நான்கு வருடங்கள்

உண்மையில் இந்தியா சுதந்திரம் அடையப் போகிறது என்ற உறுதி எப்போது ஏற்பட்டதோ அப்போதே அரசியல் சாசன சட்டத்தை நம் தலைவர்கள் உருவாக்கத் துவங்கி விட்டனர். எனினும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் அனுசரித்து சட்டம் அமைப்பதில் தான் அவ்வளவு தாமதம் ஏற்பட்டது.1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்தியஅரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்தசின்கா என்பவரை நியமித்தது.பிறகு ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல்அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாகஎழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால்ஏற்றுக்கொள்ளப்பட்டு,, 1950 ஜனவரி 26 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. அதனால், அந்த நாளை நினைவுகூறும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசியகுடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.


கானல்நீரான பொது சிவில் சட்டம்

சுதந்திரம் பெற்றபின் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபையில் பொது சிவில் சட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.அப்போது அரசியல் நிர்ணய சபைஉறுப்பினர்களாக இருந்த முகமது இஸ்மாயில் சாகேப், நசிருத்தீன் அகமது, மகபூப் அலிபெய்க் மற்றும் பாக்கர் சாகேப் பகதூர் போன்றவர்கள் இச்சட்டம் வந்தால் தாங்கள் பின்பற்றும் ஷரியத்சட்டம் ஆபத்துக்குள்ளாகும் என்று கருதி, அதில்திருத்தங்கள் கொண்டுவந்து, தங்கள் தனிநபர் சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென கோரினர். அதற்குஅவர்கள் யூகோஸ்லாவியா, செர்பிய, குரேஷியா மற்றும் ஸ்லோவினிய நாடுகளில்சிறுபான்மை இனத்தவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை சுட்டிக்காட்டி, அதேபோன்றதொரு பாதுகாப்பை இங்கேயும் கோரினர்.இது குறித்து கருத்து தெரிவித்தஅம்பேத்கர் ஒரு சில ஆட்சேபங்களை தெரிவித்தாலும் பிறகு அவர் கூறும்போது ஒரு பொது சிவில் சட்டம் இயற்ற அரசுகள் முற்படும்போது நாட்டில் வாழும் பிற சமய மக்களை குறிப்பாக முஸ்லிம்சமூகத்தினரின் கருத்தொற்றுமையுடன் செயல்படவில்லையென்றால் குழப்பமேஏற்படும் என்பதையும் கூறி எச்சரித்தார்.

பொது சிவில் சட்டம் இந்துக்களுக்கும் எதிரானது என்பதால் அப்போதைய இந்துக்கள் பலரும் அதை எதிர்த்தனர்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, நாடு முழுவதும் இந்துக்களுக்குஒரு பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டுவர இந்து தனிநபர் சட்டங்களை தொகுக்கஅம்பேத்கர் தலைமையில் ஒரு குழு அமைத்தார். பெண்களுக்கு சம உரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை வழங்க வேண்டுமென்பதில் அம்பேத்கருடன் நேருவும்ஒத்த கருத்து கொண்டிருந்தார். அத்தகைய கருத்துகளையொட்டி அம்பேத்கர் முயன்றுஉருவாக்கிய மசோதா இந்து பழமைவாதிகளிடமும், இந்து மகா சபையினரிடமும் (இன்றைய பிஜேபியின் முன்னோடி) கடுமையான கண்டனத்தை சந்தித்தது. அன்றையகுடியரசுத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் இந்த மசோதா இந்துபாரம்பரியத்துக்கு எதிரானது என்றும், ஒவ்வொரு இந்து குடும்பத்தையும்பாதிக்கும் என்று கூறியதோடு, மசோதா நிறைவேறினாலும் சட்ட அங்கீகாரம் பெறதன்னுடைய கையெழுத்து கிடைக்காது என்பதையும் உணர்த்திவிட்டார். பெண்களைத்தவிர பெரும்பாலான காங்கிரஸ்உறுப்பினர்களும், எதிர்ப்பாக இருந்தனர். எனவேஎவ்வித விளக்கமுமின்றி மசோதா கைவிடப் பட்டது.

டாக்டர் அம்பேத்கர் அவர்களுடன் முஸ்லிம்களின் நட்புறவு

நாட்டின் சுதந்திரத்திற்கு முன் அம்பேத்கர் அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி தேர்தலில் நிறுத்தி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து கை கொட்டிச் சிரித்தார்கள் ஓர் அறிவாளி நயவஞ்சகமாக தோற்கடிக்கப்பட்டதை உணர்ந்த முஹம்மதலி ஜின்னா அவர்கள் கிழக்கு வங்காளத்தில் வெற்றி வாகை சூடிய முஸ்லிம் லீக் வேட்பாளரை ராஜினாமா செய்ய வைத்து அந்த இடத்தில் அம்பேத்கர் அவர்களை முஸ்லிம் லீக் டிக்கெட்டில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பெருமை முஹம்மது அலி ஜின்னா அவர்களையே சாரும்.

குடியரசு அமைக்கப்பட்டதன் நோக்கம்

குடிமக்கள் அனைவருக்கும்போதுமான வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மக்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டும்.பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.குழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வி தர வேண்டும்.ஒரு சிலரின் கைகளிலேயே நாட்டின் செல்வ வளம் குவியா வண்ணம் தடுக்க வேண்டும்.ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்க வேண்டும். நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.பன்னாட்டு அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும்.

மேற்காணும் அத்தனை அம்சங்களும் இஸ்லாம் கற்றுத் தந்த அரசியல் பாடமாகும். இஸ்லாமிய அரசில் அத்தகைய அம்சங்கள் முழுமையாக இருந்தன ஆனால் இன்று பெயரளவில் தான் குடியரசு ஆட்சி என்று கூறப்படுகிறது

மாற்று மதத்தவர்கள் தெய்வங்களை திட்டக் கூடாது


وَلَاتَسُبُّواالَّذِينَيَدْعُونَمِنْدُونِاللَّهِفَيَسُبُّوااللَّهَعَدْوًابِغَيْرِعِلْمٍ (الانعام108)حكمهاباقفيهذهالأمةعلىكلحالفمتىكانالكافرفيمنعةوخيفأنيسبالإسلامأوالنبيعليهالسلامأواللهعزوجلفلايحللمسلمأن يسبصلبانهمولادينهمولا كنائسهم ولايتعرضإلىمايؤديإلىذلكلأنهبمنزلةالبعثعلىالمعصية(قرطبي

ஜெரூசலம் வெற்றி கொள்ளபட்ட போதும் அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கும், அவர்களின் ஆலயங்களும் முழுமையான பாதுகாப்பு உண்டு. என்று எழுதிக் கொடுத்த உமர் ரழி.. அவர்கள்

لَمَّا دَخَلَ عمرُ رض الجَابِية جاء رؤساء بيت المقدس الي عمررض فوقع الصلح بينه وبينهم علي جزية معلومة وكتب باالصلح وثيقتين وثيقةظلت عند العرب ووثيقة ظَلَّتْ عند الروم خلاصةُ هذه الوثيقة اطلاقُ حُرِّية الدين للمسيحيين واِبْقاؤهم علي ما كانوا عليه من امر دينهموطُقٌوْسِهِمْ وكَنَا ئِسِهم وفي رواية لاتُسَكَّنكنائسُهمولاتُهْدَمُولايُنقَضُمنهاولامنصلبانهمولاشيءمنأموالهمولايُكْرَهونعلىدينهمولايُضَارّأحدمنهم(دروس التاريخ


சிறுபான்மை இந்துக்களை நல்ல விதமாக நடத்துங்கள்-காயிதே மில்லத்

இந்தியா பாகிஸ்தான் பிரிந்த போது முஸ்லிம் லீக் கட்சியும் பிரிய நேரிட்டது. இந்தியாவில் காயிதே மில்லத் அவர்களின் தலைமையிலும், பாகிஸ்தானில் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் தலைமையிலும் செயல்படத் துவங்கிய நேரத்தில் கட்சிப் பணத்தை பிரிப்பது பற்றிய பேச்சு வந்தது. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் காயிதே மில்லத் அவர்களிடம் அது பற்றிப் பேச அழைப்பு விடுத்த போது கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் கூறினார்கள் கட்சிப்பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அதை நாங்கள் எப்படியோ சமாளித்துக் கொள்வோம் ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் முக்கியமான ஒரு காரியம் செய்ய வேண்டும். உங்கள் நாட்டில் (பாகிஸ்தானில்) வாழும் சிறுபான்மை இந்து மக்களை நீங்கள் நல்ல விதமாக நடத்துங்கள் அவர்களின் உரிமைகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்களின் மத உரிமைகளில் தலையிடாதீர்கள் அவ்வாறு செய்தால் அதுவே எங்களுக்குப் போதும். நீங்கள் பணம் தரா விட்டாலும் பரவாயில்லை.

குடியரசு தலைவர்

குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார். சில குடியரசுகளில் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார். ஐக்கிய அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் இந்த முறை உள்ளது. சில நாடுகளில் குடியரசுத் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படாமல், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அவைகளால் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்தியாவில்இந்த முறை பின்பற்றப்படுகிறது. இத்தகைய முறைகள் உள்ள குடியரசுகளில் குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள்.

1. டாக்டர் ராஜேந்திர பிரசாத் (26.-1.-1950 – 13.-5.-1962)

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவ ரானார் ராஜேந்திர பிரசாத். 1950 ஜனவரி 21ஆம் தேதி முதல் 1962ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். சுதந்திரப் போராட்ட வீரராகவும் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுவில் ஒருவராகவும் பணியாற்றினார்.

2. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (13.-5.19-62 – -13.-5.19-67)

இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவ ராகவும் இரண்டாவது குடியசுத் தலைவராகவும் பணியாற்றியவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தமிழ் நாட்டின் திருத்தணி நகரில் பிறந்தவர். தத்துவத்தில் பல்வேறு பட்டங்களைப் பெற்றவர். ஹிந்து கலாசாரத்தின் முக்கியப் பரப்புரையாளராய் திகழ்ந்தவர்.

3. டாக்டர் ஜாகீர் ஹுசைன் (13.5.67 — 13.5.69)

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சிறந்த கல்வியாளர். 13.5.67இல் இருந்து 13.5.69 வரை மட்டுமே குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர். பதவிக் காலத்தை முடிக்கும் முன்னரே மரணம் அடைந்துவிட்டார். அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர். டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம் டெல்லி பல்கலைக்கழகம் பெர்லின் பல்கலைக்கழகம் உள்ளிட்டவைகளில் உயர்கல்வி கற்றவர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை தனது வாழ்நாளில் பெற்றார்.

4. வரகிரி வேங்கட கிரி என்ற வி.வி.கிரி (24.8.69 – 24.8.74)

முன்னாள் மதராஸ் மாகாணத்தில் இன்றைய ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சிந்தால பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வி.வி.கிரி. ஐரோப்பாவில் சட்டம் பயின்ற இவர் பிரபல தொழிற்சங்க வாதியாகப் பெயரெடுத்தார். மதராஸ் மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் தொழிலாளர் நல அமைச்சராகப் பணியாற்றினார். ஜாகிர் ஹுசைன் மறைவை அடுத்து தற்காலிக குடியரசுத் தலைவராக பணியாற்றிய விவிகிரி முறைப்படி குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

5. பக்ருதீன் அலி அஹ்மது (24.8.74 – 11.2.77)

அஸ்ஸாமில் பிறந்தவர். லண்டனில் மேற்படிப்பு படித்தபோது நேருவை நேரில் சந்தித்து காங்கிரசில் இணைந்து விடுதலைக்காக பாடுபட்டார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். விடுதலைக்குப் பின்னர் நேருவின் அமைச்சரவையில் உணவு, வேளாண்மை, கல்வி, தொழில் உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு முன் நிறுத்தப்பட்டார். 1974 ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 1977 பிப்ரவரி 11ம் தேதி வரை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார்.இவரது ஆட்சி காலத்தில் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது.

இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனம் என அழைக்கப்பட்ட எமர்ஜென்சி இக்காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திரா அரசு செய்த இமாலய தவறாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விட்டது. எழுத்துரிமை பேச்சுரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பாதிக்கப்பட்டன.இது பிரதமர் இந்திரா காந்தியின் விருப்பத்தின் பேரில் நடந்தது எனினும் இந்த சட்ட அறிவிப்பில் பக்ருதீன் அலி அஹ்மது எவ்வாறு கையொப்பமிட்டார் என்ற வினா இன்று வரை எழுந்து கொண்டே இருக்கிறது. இவர் கொசவாவின் பிரிஸ்டினா பல்கலைக் கழகத்தினால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டார். இவர் இந்தியாவின் குடியரசுத் தலைவர்களில் இரண்டாவது முஸ்லிம் குடியரசுத் தலைவராவார். அவ்வாறே பதவியில் இருக்குபோதே மரணம் அடைந்தோரில் இரண்டாமவராவார். பதவிக் காலத்தில் மரணம் அடைந்தவர்களில் டாக்டர் ஜாகிர் ஹுசைன் முதலாமவர் என்பது குறிப்பிடத்தக்கது.

6. நீலம் சஞ்சீவ ரெட்டி (25.7.77 – 25.7.82)

மதராஸ் மாகாணத்தில் இருந்து முதன்முதலாக ஆந்திரப் பிரதேசம் உருவான பின்பு முதலாவதாக முதல் அமைச்சராக பதவி வகித்தவர். காங்கிரஸ் அல்லாத கட்சியால் முன் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்ற முதல் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டி மட்டுமே. 1977ல் இந்திரா காந்தி ஆட்சியினை வீழ்த்தி அசுரபலத்துடன் ஆட்சியில் அமர்ந்த ஜனதா கட்சியின் செல்வாக்கினை நிரூபிக்கும் விதமாக நீலம் சஞ்சீவ ரெட்டியின் தேர்வு அமைந்திருந்தது.

7. கியானி ஜெயில்சிங் (25.7.82 – 25.7.88)

இந்திராவின் ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்ச ராக இருந்தவர். இந்திராகாந்தி ஆணையிட்டால் அவர் வீட்டை பெருக்கி சுத்தம் செய்யவும் தயார் என பகிரங்கமாக அறிவித்தவர். இந்திராவின் ஆட்சிக் காலத்தில் பஞ்சாபில் தொடர்ந்து நடைபெற்றுவந்த சீக்கிய கிளர்ச்சியாளர்களின் இயக்கமான காலிஸ்தான் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. அதனால் பஞ்சாபில் மனித மீறல்கள் அதிகரித்தன. அதனைத் தொடர்ந்து பஞ்சாபில் காங்கிரசுக்கு எதிரான அதிரலைகள் ஏற்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக ஜெயில் சிங்கை குடியசுத் தலைவராக காங்கிரஸ் தெரிவு செய்ததாக அப்போது அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இருப்பினும் பஞ்சாப் பிரச்னை சூடுபிடித்ததே யொழிய குறையவில்லை. ‘ஆப்பரேசன் ப்ளு ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நீல நட்சத்திர நடவடிக்கை 1984ம் ஆண்டு ஜூன் 3ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை நீடித்தது. சீக்கியர்களின் புனித தலமாகக் கருதப்படும் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்தது. பொற்கோயிலுக்குள் ராணுவத்துக்கும் காலிஸ்தான் அமைப்பினருக்கும் சண்டை நடந்தது. இதில் இந்திய ராணுவத்தின் கவச வாகனங்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் இத்தாக்குதலில் இடம் பெற்றன. இதில் இந்திய ராணுவத் தரப்பில் 83 பேர் கொல்லப்பட்டனர். 220 பேர் கொடுங்காயம் அடைந்தனர்.

இந்த அதிரடித் தாக்குதலில் 1500 பேர் பலியாகி விட்டதாக மற்றொரு தகவல் கூறுகிறது. சீக்கியர்களின் பாரம்பரியமிக்க மிகப்பெரிய நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அகாலிதளப் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே இதில் கொல்லப்பட்டார்.

பொற்கோயிலில் நடத்தப்பட்ட நீல நட்சத்திர நடவடிக்கைக்கு எதிர்நடவடிக்கையாக இந்திரா காந்தியை அவரின் சீக்கிய மெய்காப்பாளர்கள் படுகொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்களில் பெரும் சீக்கிய எதிர்ப்பு கலவரங்கள் நிகழ்ந்தன. பல்லாயிரம் சீக்கியர்கள் வன்முறைக்கு பலியாயினர். பெருஆலமரம் சாயும்போது சருகுகள் உதிர்வது வாடிக்கைதான் என இந்திராவுக்குப் பிறகு பதவி ஏற்ற ராஜீவ்காந்தி இந்த சீக்கியர் இனப்படுகொலைக்கு புதிய வியாக்கினம் கொடுத்தார். அது அப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கோபத்தைத் தணிப்பதற்காக அந்த சமூகத்தைச் சேர்ந்த பிரபலத்தை உயர்பதவியில் அமர்த்துவதால் மட்டுமே பிரச்னை தீர்ந்துவிடாது. மாறாக அதிகரிக்குமே ஒழிய குறையப்போவதில்லை என்பதும் நிரூபணம் ஆனது.

8. ராமஸ்வாமி வெங்கட்ராமன் (25.7.87 – 25.7.92)

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். காமராஜ் அமைச்சரவையில் இடம்பெற்று சிறந்த முறையில் பங்காற்றியவர். மத்திய அமைச்சரவையில் நிதி, ராணுவம் மற்றும் தொழில்துறை அமைச்சராக செயல்பட்டவர். 1989ம் ஆண்டு திமுக அரசை கலைத்ததிலும் 91ல் நரசிம்மராவை பிரதமராக்கியதிலும் இவருக்கு மறைமுகப் பங்குண்டு. ஒரே காலகட்டத்தில் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பிரதமர், குடியரசுத் தலைவர் என நாட்டின் முக்கியப் பதவிகளில் கோலோச்சியது வரலாற்றின் வித்தியாசமான காட்சியாக அமைந்தது.

9. சங்கர் தயாள் சர்மா (25.7.92 – 25.7.97)

-மத்தியப்பிரதேச முதல் அமைச்சராகவும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் ஆந்திர ஆளுநராகவும் பதவிகளை வகித்த டாக்டர் சங்கர் தயாள் சர்மா மூன்று பிரதமர்களைப் பார்த்தவர். தேசிய அவமானமாக கருதப்பட்ட, பாசிச வெறியர்களால் நடத்தப்பட்ட பாபர் மஸ்ஜித் இடிப்பு இவர் குடியரசுத் தலைவராக இருக்கும்போது நடந்தது. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட அவமானகரமான நிகழ்வைக் கண்டு மனம் கொதித்தார். பாசிசவாதிகளின் இந்த செயலால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவமானம் நேருமே பெயர் கெட்டுவிடுமே என செய்தியாளர்களின் கூட்டத்தில் கிட்டத்தட்ட கண்ணீர்விட்டே கதறினார். உலக அளவில் பி.பி.சி.யும், சி.என்.என்.னும், மஸ்ஜித் இடிப்பை முழுவதுமாகப் படம்பிடித்து காட்டிய போதும் மஸ்ஜிதின் ஒரே ஒரு கும்பம்தான் இடிக்கப்பட்டது என மத்திய அரசும் இந்திய ஊடகங்கள் பலவும் புருடா விட்டபோது மஸ்ஜித் இடிப்பை வன்மையாக கண்டித்தார். தனது அறிக்கையில் தரைமட்டமாக்கப்பட்ட மஸ்ஜித் என்றே குறிப்பிட்டு பூசி முழுகியவர்களின் மூக்கை பதம் பார்த்தார்.

மகாகவி இக்பாலின் கவிதைகளை சிலநேரங்களில் மேற்கோள் காட்டும் ஜவஹர்லால் நேருவைப் போலன்றி இக்பாலின் கவிதைகளை சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் குறிப்பிடும் வி.பி.சிங் போன்றோ, மிர்சா காலிப், அமீர் குஸ்ரு கவிகளை அவ்வப்போது குறிப்பிடும் அடல்பிகாரி வாஜ்பாய் போலவோ பகவத் கீதையை சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் மேற்கோள் காட்டும் அப்துல் கலாம் போலவோ அல்லாமல் உரையாற்றும் போதேல்லாம் திருக்குர்ஆனின் வரிகளை மேற்கோள் காட்டும் சங்கர் தயாள் சர்மா அனைத்து மக்களையும் நேசித்தவர். திருக்குர்ஆன் உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான மறை என்றார். பலவேதங்கள் தங்களது இனத்தைப் பற்றி, பிரிவைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. கடவுள் கொள்கையைக்கூட அவைகள் பொதுமைப்படுத்துவதில்லை என்று குறிப்பிடும் சங்கர் தயாள் சர்மா திருமறைக் குர்ஆன் பிற வேதங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு விளங்குகிறது என்பதை அழகுற விவரிக்கிறார்.

திருக்குர்ஆன் இறைவனை ரப்புல் ஆலமீன் என்று கூறுவதை சிலாகித்த சங்கர் தயாள் சர்மா, உலகம் அனைத்திற்கும் அவன்தான் இறைவன் என்று குர்ஆன் கூறுகிறது ரப்புல் முஸ்லிமீன் என்று குறிப்பிடவில்லையே என்று அவர் குறிப்பிடுகிறார். பல்கலைக்கழகங்களில் அவர் ஆற்றிய பட்டமளிப்பு உரைகள் இன்றளவும் கல்வியாளர்களால் பாராட்டப்படுகிறது.

10. கே.ஆர்.நாராயணன் (25.7.1997 – 25.7.2002)

கோச்செரில்ராமன் நாராயணன் என்ற கே.ஆர். நாராயணன் இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். இந்த தேசத்தின் முதல் தலித் குடியசுத் தலைவரான இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் தாய்லாந்து, துருக்கி, சீனா, மற்றும் அமெரிக்காவில் இந்திய தூதராகப் பணியாற்றினார்.

சட்டம் மற்றும் அறிவியல் துறைகளில் முனைவர் பட்டம் வாங்கியவர். இவர் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக இருந்தபோது பாப்ரி மஸ்ஜித் இடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது ராஜ்யசபா தலைவராகவும் இருந்ததால் தனது கண்டனங்களை கூர்மையாகப் பதிவு செய்தார். தேசத்தந்தை காந்தியாரின் படுகொலைக்குப் பிறகு நாட்டை மிகவும் துயரத்தில் ஆழ்த்திய நிகழ்வு பாப்ரி மஸ்ஜித் இடிப்பு நிகழ்வு என்றார். இவரது பதவியின் கடைசிக் காலத்தில் உலகையே உலுக்கிய குஜராத் இனப்படுகொலை நடந்தது. குஜராத் இனப்படுகொலையைத் தடுக்க உடனடியாக ராணுவத்தினை அங்கு அனுப்பி வைக்கவேண்டும் என அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் வேண்டுகோள் விடுத்தார். அது வாஜ்பாயினால் புறக்கணிக்கப்பட்டது. இதில் கே.ஆர்.நாராயணனின் சான்றாண்மை வெளிப்பட்டது எனலாம்.

11. அவுல் பக்கிர் ஜெயினுல் ஆப்தீன் அப்துல் கலாம் (25.7.2002 – 25.7.2007)

இவர் இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். குடியரசுத் தலைவர்களில் இவர் போல் பிரபலம் பெற்றவர் யாரும் இல்லை எனும் அளவுக்குப் புகழ் அடைந்தவர். இவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடுவால் பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கூட்டணி மீண்டும் கே.ஆர்.நாராயணனை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன் நிறுத்துவதாக யூகங்கள் புறப்பட்டதால் செல்வாக்குமிக்க கே.ஆர். நாராயணனை எதிர்ப்பதற்கு மற்றொரு செல்வாக்கு மிக்க ஆளுமை தேவைப்பட்டது. சந்திரபாபு நாயுடு கலாம் பெயரை முன்மொழிந்த போது கலாம் இதற்கு சம்மதிப்பாரா? என சந்தேகம் தெரிவித்தவர்கள் தான் பாஜக தலைவர்கள்.

நான் சம்மதம் வாங்கித் தருகிறேன் என தைரியம் ஊட்டி கலாமை தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக்கினார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலாமை ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதன் பின்னர் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் ஒரு முஸ்லிமை நாங்கள் தான் குடியரசுத் தலைவராக்கினோம் என பெருமை பீற்றிக் கொண்டார்கள்.

பாஜகவைப் பிடிக்காதவர்களும் கலாமை விமரிசிக்கும் சிலரும் கலாம் பாஜகவின் வேட்பாளர் என்றே இன்றளவும் கூறி வருகின்றனர். இது உண்மையன்று. கலாம் முன்னிறுத்தப்படாவிட்டால் கே.ஆர்.நாராயணன் முன்னிறுத்தப்பட்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடும் பாஜகவின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு இருக்கலாம் அந்தவகையில் பாஜகவின் மானத்தைக் காப்பாற்றியவர் அப்துல் கலாம் என்று வேண்டுமானால் கூறலாம். இந்திய ஏவுகணை இயலின் தந்தை இந்திய ஆற்றலின் பிதாமகன் என குறிப்பிடப்படும் அப்துல்கலாம் தமிழர்களின் நலத்தினை குறித்தோ முஸ்லிம்களின் அவலநிலை குறித்தோ பேசப்படும் அளவுக்கு அவர் கடமை ஆற்றவில்லை என பொதுவாகக் குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு குடியரசுத் தலைவர் பணி என்பது வரையறுக்கப்பட்ட பணி அதில் அதிகார முறைகேடு செய்யாமல் இருந்ததே மிகப்பெரும் விஷயம் என பாராட்டுவோரும் உண்டு. அதனை நிரூபிக்கும் விதமாக இவருக்கு அடுத்து பொறுப்புக்கு வந்த குடியரசுத் தலைவரின் பணிகள் அமைந்தன.

12. பிரதிபா தேவிசிங் பாட்டீல் (25.7.-2007- – 25.7.2012)

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் எனும் பெருமைக் குரிய பிரதிபா பாட்டீல் சுற்றுப்பயணம் செய்யாத நாடுகள் உலகில் இன்னும் கண்டுபிடிக்காமல் மட்டுமே இருக்கமுடியும்.

சோனியாகாந்தி குடும்பத் திற்கு நெருக்கமானவர் என்ற ஒரே தகுதியைத் தவிர அவருக்கு சிறப்பியல்புகள் எதுவும் இல்லை எனலாம். பிரதிபா பாட்டீலை நினைத்து இந்திய பெண் குலம் ஒன்றும் பெரிதாக பெருமைபட்டுக் கொள்ள முடியாது என்பதுதான் நிஜம்.

13. பிரணாப் முகர்ஜி (25.7.2012 – 2017)

நீண்ட காங்கிரசு பாரம்பரியம் கொண்டவர் இந்திரா காலத்தில் இருந்தே பிரதமர் பதவியின் மீது இரண்டு கண்களையும் வைத்து வந்தவர். அவருக்கு ஆறுதல் பரிசாக இந்தப் பதவியை காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி என்பது
ஆளுமையாக கருதப்பட்ட பதவியாக இருப்பினும் நாட்டின் முதல் குடிமகன் என கவுரவமாக அழைக்கப்பட்டாலும் முப்படைகளின் தலைவரே அவர் என சொல்லப்பட்டாலும் அப்பதவியை ரப்பர் ஸ்டாம்ப் என்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்றும் சில வேளைகளில் அழைக்கப்பட்டு வருவதையும் நாம் மறுப்பதில்லை.

1950ல் இருந்து இன்றுவரை பதிமூன்று பேர் இந்தியாவின் குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர்கள் வரலாற்றில் இரண்டுமுறை அப்பதவியை அலங்கரித்தவர் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த போதே மரணமடைந்தவர்கள் இருவர் ஒருவர் டாக்டர் ஜாகிர் ஹுசைன், மற்றொருவர் பக்ருதீன் அலி அஹ்மது ஆவார்.

இஸ்லாமிய அரசு முறையும் குடியாட்சியே!  

கலீபா(பிரதிநிதி) எனும்சொல்லே குடியாட்சியை பிரதிபலிக்கக் கூடியது

அபூபக்கர் (ரலி) மக்களின் தேர்வு

عن جرير قال لي ذو عمرو يا جرير إن بك علي كرامة وإني مخبرك خبرا إنكم معشر العرب لن تزالوا بخير ما كنتم إذا هلك أمير تأمرتم في آخر فإذا كانت بالسيف كانوا ملوكا يغضبون غضب الملوك ويرضون رضا الملوك - بخاري

மக்கள் விரும்பாதவர் இமாமத்செய்ய முடியாது.

இன்றைய குடியரசு முறையும் இஸ்லாமிய குடியரசு முறைக்கும்இரண்டு பிரதான வித்தியாசங்கள்–

 முதலாவது
ஆட்சியாளர் தேர்வுமுறை.

1. இன்றைய குடியரசு– தேர்தல் election

2. இஸ்லாமியகுடியரசு- தேர்வு selection

(உதாரணம்; அபூபக்கர் (ரலி) தேர்வுசெய்யப் பட்டார்கள். பிறகுமக்களின் அங்கீகாரத்தைபெற்றார்கள், அவ்வாறே உமர் (ரலி)உஸ்மான் (ரலி) ஆகியவர்கள்களும்

இரண்டாவது வித்தியாசம், இஸ்லாமிய ஆட்சியாளர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும்அல்லாஹ்வின் பிரதிநிதி. அல்லாஹ்வின் அதிகாரத்தை பூமியில் நிலைநாட்டுபவர்.

தேர்தல் முறைக்கு மாறிய முஸ்லீம்கள்

ஆட்சியாளர்களிடம் தக்வாவும் மக்களிடம் பொருப்புணர்வும் அவசியம், அது குறைந்து போகிற கட்டத்தில் இதுவே மன்னரட்சிக்கு வழிவகுக்கும் . முஸ்லிம்களின் அரசியல் அப்படித்தான் தடம் புரண்டது.

இதிலிருந்து விடுபட விரும்பிய முஸ்லிம்கள் தேர்தல் பாணி அரசியலுக்கு மறினர்.

 19 ம் நூற்றாண்டிலிருந்து சந்தர்ப்ப சுழ்நிலைகள் காரணமாக முஸ்லிம் உலகத்திலும் தோ்தல் அரசியல் வௌிப்படத் தொடங்கியது.

இப்போது துருக்கி, இரான் ,எகிப்து ,ஜோடான் ,லெபனான் , மெராக்கோ, குவைத் ,எமன் ,பாகிஸ்தான் பங்களாதேஷ் ,மலேஷியா, செனகல் நைஜீயா, போன்ற நாடுகளில் தோ்தல் பானி ஜனநாக நடைமுறை வழக்கில் இருக்கிறது. இந்தியா தொன்னாப்க்கா ஐரோப்பா வடஅமொக்கா ஆஸ்திரேலியா போன்ற முஸ்லிம்கள் பெரும் சிறுபான்மையினராக வாழ்கிற தேசங்களிலும் தோ்தல் அரசியலில் முஸ்லிம்கள் பங்கேற்று வருகிறாகள.

பன்மை சமூகதில் முஸ்லிம்கள்

வணக்கம் இறை நம்பிக்கை கொள்கை அல்லாத பிற காரியங்களுக்காக நாமும் அவர்களுடன் தோள் கொடுக்கலாம் .ஒரு மதத்தவர் பிற மதத்வருக்கு உதவ வேண்டும் என்ற நிகரில்லா ஒரு ஐக்கியத்தை குர்ஆன் போதிக்கின்றது

اۨلَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ يَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ‌ وَلَوْلَا دَ فْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَـعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًا‌ وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُه اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ‏ 
இவர்கள் (எத்தகையவரென்றால்,) தங்களுடைய இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக நியாயமின்றி தங்கள் வீடுகளிலிருந்து எதிரிகளால் துரத்தப்பட்டார்கள். மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காத வரையில் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயர் அதிகமாக நினைவு செய்யப்படும் பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிகப் பலவானும், அனைவரையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 22:40)

வரலாற்றில் இரு சரித்திரம்

1. உமர் (ரலி)அவர்கள் இறை தூதர்களின் உறைவிடமான பைத்துல் முகத்தஸை முஸ்லிம் களின் ஆளுமையில் மீட்டி எடுத்து பின்பு அங்கு இருந்த கிரிஸ்தவர்களின் / யூதர்களின் கோவிலை இடிக்க வில்லை. முன்பு போல் அதில் தொடர்ந்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கினார்கள் .

2. கையை விட்டும் நழுவிய பைத்துல் முகத்தஸை சலாஹுதீன் அய்யூப்பி (ரஹ்) கி.பி.1187 அக்டோபர் முஸ்லிம்களின் ஆளுமையில் மீட்டி எடுத்தர்கள் . அப்போது அந்த கோவிலை இடிக்க நினைத்த போது இடிக்க கூடாது . ஏனெனில் உங்களுக்கு முன்பு உமர் (ரலி)அவர்கள் இதை வெற்றி கொண்ட போது இடிக்கவில்லை .என சக முஸ்லிம் கூறி தடுத்தார்கள் . எனவே அது அவ்வாறே பாதுகாப்புடன் அவர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கினார்கள் .

لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏ 
(நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 60:8)

சிலை வணங்கிகளான மக்கவாசிகளுடன்

ஹுதைபியா உடன்படிக்கை செய்திருந்தார்கள்

அநீதத்திற்கு எதிரான் “ஹில்புல் புலூல்” என்ற நற்பணி இயக்கத்தில் நபியாகும் முன்பே உருப்பினராக இருந்து களம் கண்டார்கள் .

(வேதக்காரர்களான) யூதர்களுடன் ஒப்பந்தம்

மதீனாவில் அரசியல்
அமைப்புகள்

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அரசியல் அமைப்பு, சட்ட ஒழுங்கு ஆகிய அனைத்திலும் முதன் முதலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலைத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள். அதன் மூலம் மதீனாவில் புதிய இஸ்லாமிய சமுதாயத்திற்கும், சமூகத்திற்குமான அடித்தளத்தை மிக ஆழமாக உறுதிப்படுத்தினார்கள்.

இரண்டாம் கட்டமாக, முஸ்லிம் அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை முறைப்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம், முழு மனித சமுதாயமும் நிம்மதி, பாதுகாப்பு, நற்பயன்கள், நல்லுறவுகள் கிடைக்கப்பெற வேண்டும். ஒரே ஒருமைப்பாட்டுக்குக் கீழ் நாட்டு மக்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஆகவே சுயநோக்கங்களும், இனவெறியும் நிரம்பி இருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத மன்னித்தல்,
பெருந்தன்மையுடன் நடத்தல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை நபி (ஸல்) அமைத்தார்கள்.

மதீனாவிற்கு அருகில் யூதர்கள்தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் முஸ்லிம்களின் மீது உள்ளத்தில் பகைமையை மறைத்து வைத்திருந்தாலும் வெளிப்படையாக
முஸ்லிம்களை எதிர்க்கவுமில்லை அவர்களிடத்தில் சண்டை, சச்சரவு செய்யவுமில்லை. எனவே நபி (ஸல்) யூதர்களுடன் நன்மையான நல்ல உடன்படிக்கையை ஏற்படுத்திக்
கொண்டார்கள்.

” யூதர்களுக்கு அவர்களது செல்வத்திலும், மதத்திலும் முழு சுதந்திரம் அளித்தார்கள்.”

அவர்களை மதீனாவை விட்டு விரட்ட வேண்டுமென்றோ அல்லது அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றோ அவர்கள் நாடவுமில்லை
அதைச் செய்யவுமில்லை.

உடன்படிக்கையின் அம்சங்கள்

நபி (ஸல்) அவர்கள் யூதர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அம்சங்களை இப்போது நாம் பார்ப்போம்:

1) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஃமின்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராக கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை
உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரை சாராத மற்ற
யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.

2) யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.

3) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

4- وإن بينهم النصر على من دَهَم يثرب . . على كل أناس حصتهم من جابنهم الذي قبلهم .
யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாகக வேண்டும்.

இந்த உடன்படிக்கையும், ஒப்பந்தமும் உறுதிபெற்றதால் மதீனாவும், மதீனாவைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒற்றுமை மிக்க நாடாக மாறி அதற்குத் தலைநகரம் மதீனாவாக விளங்கியது. ( ரஹீகுல் மக்தூம்;பக்கம் 193)

எனவே நாமும் நம் நாட்டிலும் மாநிலத்திலும் நம்ஊர்களிலும் இதை கடை பிடித்தால் இலகுவாக தாவா செய்ய வழி கிட்டும். பாதுகாப்பு கிட்டும்.

உரிமை பறிக்கப் பட்டால் அநியாயம் நடந்தால் மதம் கடந்து போராட வேண்டும் .

2480 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»
2480. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَ: «فَلَا تُعْطِهِ مَالَكَ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي؟ قَالَ: «قَاتِلْهُ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي؟ قَالَ: «فَأَنْتَ شَهِيدٌ»، قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ؟ قَالَ: «هُوَ فِي النَّارِ»

ஒரு நபித் தோழர் கேட்டார் நபியே (ஸல்) ஒருவன் என் உடமையை பறிக்கிறான் . நபி (ஸல்) நீ கொடுக்க கூடாது.
அவர்: என்னோடு சண்டையிட்டால்?. நீயும் சண்டையிடு
உன்னை கொன்றுவிட்டால் நீ உயிர் தியாகி. நீ அவனை கொன்றுவிட்டால் அவன் பாவி நரகம் செல்வான்.. ஹதீஸ்:முஸ்லிம்.

عصر الخلافة الراشدة - (1 / 126)
كما كان يحقق في شكاوى الرعية ضدهم، ولما ضرب ابن لعمرو بن
العاص أحد الأقباط وبلغ عمر شكواه، أراد أن يقتص للقبطي وخاطب عمراً بعبارته
المشهورة: " متى استعبدتم الناس وقد ولدتهم أمهاتهم أحرارا "

அம்ருபின்ஆஸ் அவர்களின் மகன் கிப்தி கூட்டத்தைச்சார்ந்த ஒருவரை (அனியாயமாக) அடித்து விட்டபொழுது உமர் ரலி அவர்களிடம் கிப்தி முறையிட்டார் பலிவாங்க விரும்பினார்.உமர் ரலி அவர்கள் அதை நிறைவேற்றினார்கள்.

ஆட்சி/ஆட்சியாளர்களின் இலக்கணம்.

عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ»

ஸஹீஹ் புகாரி 2554. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

65 - (1855) عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ، وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ، وَشِرَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ، وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ»، قِيلَ: يَا رَسُولَ اللهِ، أَفَلَا نُنَابِذُهُمْ بِالسَّيْفِ؟ فَقَالَ: «لَا، مَا أَقَامُوا فِيكُمُ الصَّلَاةَ، وَإِذَا رَأَيْتُمْ مِنْ وُلَاتِكُمْ شَيْئًا تَكْرَهُونَهُ، فَاكْرَهُوا عَمَلَهُ، وَلَا تَنْزِعُوا يَدًا مِنْ طَاعَةٍ»

3778. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள். உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்: உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்கள் உங்களைச் சபிப்பார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கெதிராக நாங்கள் வாள் ஏந்தலாமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்; உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண்டாம்). உங்கள் ஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கும் (மார்க்கத்திற்கு முரணாண செயல்கள்) எதையேனும் கண்டால், அந்த ஆட்சியாளரின் செயல்பாட்டை வெறுப்பீர்களாக! கட்டுப்படுதலில் இருந்து உங்கள் கையை விலக்கிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 33. ஆட்சியதிகாரம்

ஆட்சி/ தலைமை பொறுப்பு தானாக வந்தால் அது மதிப்பை உயர்த்தும்.

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَمُرَةَ، لاَ تَسْأَلِ الإِمَارَةَ، فَإِنَّكَ إِنْ أُوتِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا، وَإِنْ أُوتِيتَهَا مِنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا -[128]-، وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ، فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا، فَكَفِّرْ عَنْ يَمِينِكَ وَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ»

6622. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து' என்றார்கள். 3
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 83. சத்தியங்களும் நேர்த்திக்கடன்களும்

பதவி மோகம் பிடித்து அதை தேடி பிச்சைக்காரன் போல் அலைந்து பொருக்கினால் இப்படி தான் கேவளம் அடைய நேரிடும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ القِيَامَةِ، فَنِعْمَ المُرْضِعَةُ وَبِئْسَتِ الفَاطِمَةُ»

7148. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 93. நீதியும் நிர்வாகமும்


ஆட்சியாளன் எவ்வளவு அநியாயம் செய்கிறான்.தட்டிக் கேட்க ஆளே இல்லையா . ?

அநியாயக்காரன் தனக்கு தானே குழி பறிக்கிறான்.

وَكَذٰلِكَ جَعَلْنَا فِىْ كُلِّ قَرْيَةٍ اَكٰبِرَ مُجْرِمِيْهَا لِيَمْكُرُوْا فِيْهَا‌ وَمَا يَمْكُرُوْنَ اِلَّا بِاَنْفُسِهِمْ وَمَا يَشْعُرُوْنَ‏ 
அன்றி, இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பாவிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கின்றோம். அங்கு அவர்கள் விஷமம் (செய்ய சதி) செய்து கொண்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கேயன்றி (மற்றெவருக்கும்) சதி செய்துவிட முடியாது. (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் : 6:123)

நவினாலோ கையினாலோ உரிய தண்டனை உங்களால் கொடுக்க முடியாது.. அல்லாஹ்விடமே விட்டு விடுவோமே.

قُلْ لِّلَّذِيْنَ اٰمَنُوْا يَغْفِرُوْا لِلَّذِيْنَ لَا يَرْجُوْنَ اَيَّامَ اللّٰهِ لِيَجْزِىَ قَوْمًا بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏ 
(நபியே!) இறைநம்பிக்கையாளர்களிடம் நீர் கூறிவிடும்: “யார் அல்லாஹ்விடமிருந்து தண்டனைகுறிய கெட்ட நாள் வருவது பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர்களின் நடவடிக் கைகளைக் கண்டுகொள்ளாது விட்டுவிடுங்கள் மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அல்லாஹ்வே நேரடியாக கொடுப்பான். (அல்குர்ஆன் : 45:14)

وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ‌ اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُ ۙ‏ 

(நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீங்கள் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில்தான்!(அல்குர்ஆன் : 14:42)

مُهْطِعِيْنَ مُقْنِعِىْ رُءُوْسِهِمْ لَا يَرْتَدُّ اِلَيْهِمْ طَرْفُهُمْ‌ وَاَفْـِٕدَتُهُمْ هَوَآءٌ ‏ 
(அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது, (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) செயலற்று விடும். (அல்குர்ஆன் : 14:43)



            வஸ்ஸலாம்

தொகுப்பு :
மௌலவி அல்ஹாபிழ்
அ.முகம்மது வலியுல்லா அல்தாபி

பிரபல்யமான பதிவுகள்