அஸ்ஸலாமு அலைக்கும்…
தமிழக அரபுக் கல்லூரிகளின் முன்னோடியான நூற்றாண்டு கால சிறப்பு மிக்க லால்பேட்டை “ஜாமிஆ மன்பவுல் அன்வார்” அரபுக்கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்கள், உள்ளூர், வெளியூர், வெளிநாடு என உலகெங்கிலும் மார்க்கப் பணிகள் உட்பட பல்வேறு தளங்களில் கோலோச்சி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி, பட்டம் பெற்ற அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் கல்லூரியின் முதல்வர், அ.நூருல் அமீன் மன்பயீ ஹஸ்ரத் அவர்களை தலைமையாக ஏற்று “மன்பயீ பேரவை”அமலுக்கு வந்தது.
மேற்குறிப்பிட்ட தேதியில் “மன்பயீகள் சங்கமம்” என்ற நிகழ்ச்சி, ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி லால்பேட்டையில் நடைபெற்றது. அன்றைய தின பகல் பொழுதில் “மன்பயீ பேரவை” யினுடைய மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்த வகையில் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணத்து “சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மன்பயீ பேரவை” என மும்மாவட்டங்களையும் இணைத்து நிர்வாகிகளை முடிவு செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்………….,
நமது சென்னை மண்டல மன்பயீ பேரவை உருவானது முதல் இன்று வரை பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக பல்வேறு நடவடிக்கைகள், இனிதே நடந்தேறி வருகிறது.
நவீன உலகின் வளர்ச்சிக் கேற்ப நமது மாவட்டத்திற்கென்று பிரத்யேகமாக இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நமது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மன்பயீ பேரவை சார்பாக நடைபெறவுள்ள பல நிகழ்ச்சிகளின் அப்டேட்களை இனி இந்த தளத்தில் காண முடியும் இன்ஷா அல்லாஹ்.
முதல் கட்டமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு கோணங்களில் அலசிப் பார்க்கின்ற வகையில் மன்பயீ உலமாக்களால் எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பொன்று பதிவு செய்யப்படவுள்ளது.
இன்ஷா அல்லாஹ், இனி நமதுசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டமன்பயீ பேரவையின் அடுத்தடுத்த நகர்வுகளை இந்த வலைத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்