நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், ஜனவரி 23, 2023

ஆண் பிள்ளைகளின் ஆடை,

 ஆண் பிள்ளைகளின் ஆடை

ஆண் பிள்ளைகள் சிகப்பு நிற ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். நமது பிரியமான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிவப்பு நிற ஆடைகளை விரும்பியதில்லை
(அபூதாவூத் 02/204)

*16 பட்டாடை கூடாது*

ஆண் பிள்ளைகள் பட்டாடை அணிவதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கிறார்கள் ஆகையால் ஆண் பிள்ளைகள் பட்டாடைகள் அணியக் கூடாது. (அபூதாவூத் 02/205)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” பட்டாடை அணிவதும் தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும்.”
நூல் : திர்மிதி (1642)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”சாதாரனப் பட்டையோ அலங்காரப்பட்டையோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் இறைமறுப்பாளர்களாகிய அவர்களுக்கும் மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியதாகும்.”
நூல் : புகாரி (5426)

*17 எந்த ஆடைகளின் நிறம் சிறந்தது*

ஆண்களுக்கான ஆடையின் நிறம் வெள்ளை ஆகும். வெண்ணிற ஆடைகளை அணிவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களின் விருப்பமாக இருந்தது (மஆரிஃபுல் ஹதீஸ் 06/293)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”வெள்ளை ஆடையை அணியுங்கள். அது மிகத் தூய்மையானதும் மணமிக்கதும் ஆகும்.”
(திர்மிதி (2734)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”வெண்மையான ஆடைகளை அணியுங்கள். ஏனெனில் அதுதான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். மேலும் இறந்தவர்களையும் வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.”
(திர்மிதி (915))

*18 ஆண் பிள்ளைகளின் கீழாடை*

பிரியமான பிள்ளைகளே! ஆண் குழந்தைகள் தங்களின் கீழாடையை (பேண்ட், லுங்கியை) கரண்டை காலுக்கு கீழ் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கரண்டை காலுக்கு கீழ் வரை பேண்ட் லுங்கி போன்ற ஆடைகள் அணிவது மிக தீய பழக்கம் ஆகும். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகிறார்கள். இவர்களை அல்லாஹ் மறுமை நாளன்று பார்க்கவும் மாட்டான். அபூதாவூத் 02/209

*19 தூய்மையான ஆடைகள்*

அன்பு குழந்தைகளே! அல்லாஹ் அழகானவன் அழகையே விரும்புகின்றான். எனவே அழுக்கு ஆடைகளை அணியாதீர்கள்.  நமது நேசர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுக்கான ஆடை அணிந்திருந்தவரை பார்த்து "இவருக்கு அழுக்கு நீக்கும் எந்த பொருளும் கிடைக்கவில்லையா?" என்று கடிந்து கொண்டார்கள்.
இப்னு ஹிப்பான் 12/294

*20 ஆடைகளை அழுக்காகாதீர்*

பிரியமான பிள்ளைகளே! அழுக்கு ஆடைகளை அணியக்கூடாது என்றால், ஆடைகளை அழுக்காகாமல்  வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தானே பொருளாகும். ஆடைகளை சீக்கிரம் அழுக்காக்கி விடுவது மிக தீய பழக்கமாகும். எனவே ஆடைகளை அழுக்காகாமல் பக்குவமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கவனக்குறைவாக இருப்பதினால் தான் சீக்கிரம் அழுக்காகி விடுகிறது. இதனால் அம்மாவிற்கு ஆடைகளை துவைப்பதில்  சிரமம் ஏற்படுகிறது. நல்ல பிள்ளைகள்  ஆடைகளை அழுக்காக்கி  தங்கள் தாய்களை சிரமம் தர மாட்டார்கள். நீங்கள் நல்ல பிள்ளைகள் தானே!

*21 மாற்றார்களுக்கு ஒப்பான ஆடையை அணியக்கூடாது* 

அன்பு குழந்தைகளே!ஒரு முஸ்லிம் செய்கின்ற எந்த காரியமாக இருந்தாலும் அது காபிர்களுக்கு ஒப்பாக இருக்கக் கூடாது. ஆடை அணிவதாக இருந்தாலும் அது காபிர்களுக்கு மாற்றம் செய்யும் விதமாக அமைய வேண்டும். இதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு தெளிவு படுத்தியுள்ளார்கள்.

‘யார் ஒரு கூட்டத்தாருக்கு ஒப்பாகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவராவார்’
(அபூதாவுத்)

அன்பு குழந்தைகளே! இதுவரை நான் சொன்னதிலிருந்து ஒரு சிலவற்றை கேட்கிறேன் பதில் சொல்வீர்களா?

▪️ஆடைகளை அல்லாஹ் எதற்காக படைத்துள்ளான்?
( உடலை மறைப்பதற்கும் குளிர் விருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் )

▪️ ஆடை அணியும்போது என்ன நிய்யத் செய்ய வேண்டும்? எந்த நிய்யத் செய்யக்கூடாது? தவறான நிய்யத் செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் ?( அல்லாஹுத்தஆலாவின் அருட்கொடை என்ற நிய்யத்தில் ஆடை அணிய வேண்டும். பெருமை புகழ் பகட்டுக்காக ஆடை தனியாக கூடாது. இந்த நிய்யத்தில் யார் ஆடை அணிவாரோ மறுமை நாளன்று அவருக்கு இழிவின் ஆடை அணிவிக்கப்படும்.) 

▪️ ஆடை அணியும்போது அல்லாஹ்விற்கு எப்படி நன்றி செலுத்துவது? நன்றி செலுத்துவதில் சிறப்புகள் என்ன?
 ( எதை அணிகின்றோமோ அந்த ஆடையின் பெயரை கூறி அணிய வேண்டும். யார் ஆடை அணிந்ததும் அல்லாஹ்விற்கு புகழ்ந்து நன்றி செலுத்துகிறாரோ அவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.)

▪️ ஆடை அணிந்த பிறகு எந்த துஆ ஓத வேண்டும்? அதன் சிறப்பு என்ன?
 ( துஆ ஓதுவதால் பிந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.)

 ▪️ ஆடை அணியும் முறை என்ன?
 (ஆடைகளை நன்றாக உதறி வலது புறத்திலிருந்து அணிய ஆரம்பிக்க வேண்டும்.) 

▪️ஆடைகளை களையும் முறை என்ன?
(பிஸ்மில்லாஹ் கூறி இடது புறத்திலிருந்து கழட்ட துவங்க வேண்டும்.)

 ▪️ எங்கு உடை மாற்ற வேண்டும்? மாற்றிய பிறகு ஆடைகளை எங்கு எப்படி வைக்க வேண்டும்?
 ( யாரும் பார்க்காத இடத்தில் ஆடைகளை மாற்ற வேண்டும். கழட்டிய உடைகளை மடித்து அதற்குரிய இடத்தில் வைக்க வேண்டும். 

▪️உடைகளில் தவிர்க்க வேண்டிய எட்டு விஷயங்கள் என்ன? (ஆண் பிள்ளைகளின் உடை பெண் பிள்ளைகளின் உடையை போன்று, பெண் பிள்ளைகளின் உடை ஆண் பிள்ளைகளின் உடைகளை போன்று இருக்கக் கூடாது. மெல்லிய ஆடைகள் இறுக்கமான ஆடைகள் அணியக்கூடாது. ஆண் பிள்ளைகள் சிவப்பு நிற ஆடைகள், பட்டாடைகள் அணியக்கூடாது. ஆண் பிள்ளைகள் கரண்டை காலுக்கு கீழ் ஆடைகளை தொங்க விடக் கூடாது. )

▪️ எந்த நிற ஆடைகள் அணிய வேண்டும்?
( வெள்ளை நிற ஆடை அணிவது சிறந்தது )

▪️ அழுக்கு ஆடைகள் அணிவதால், ஆடைகளை அழுக்காக்குவதால்  என்ன ஏற்படும்?
(அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் பெற்றோர்களுக்கும் அது சிரமத்தை ஏற்படுத்தும். )

பிரபல்யமான பதிவுகள்