நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், மார்ச் 19, 2025

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை,


நபி  ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகை குறித்து....
தான் கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க ஈஸா அலைஹிஸ்ஸலாம் பூமிக்கு வருவார்கள். 
அச்சமயம் வேதக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்பர்
وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا (159النساء)
وَقَالَ اِبْن مَالِك فِي قَوْله " إِلَّا لَيُؤْمِنَن بِهِ قَبْل مَوْته " قَالَ : ذَلِكَ عِنْد نُزُول عِيسَى وَقَبْل مَوْت عِيسَى اِبْن مَرْيَم عَلَيْهِ السَّلَام لَا يَبْقَى أَحَد مِنْ أَهْل الْكِتَاب إِلَّا آمَنَ بِهِ (تفسير ابن كثير)
ஈஸா அலைஹிஸ்ஸலாம் மீண்டும் வருவார்கள் என நாமும் நம்புகிறோம் கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள் ஆனால் அவர்கள் கடவுளாக வருவார்கள் என நம்புகிறார்கள்ஆனால் நாம் இந்த உம்மத்தில் ஒருவராகவும் தாம் கடவுள் இல்லை என நிரூபிப்பதற்கும் இந்த பூமிக்கு வருவார்கள் என்று நம்புகிறோம்.                                            
عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ حَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا} (بخاري) باب نُزُولُ عِيسَى ابْنِ مَرْيَمَ عليهما السلام-كتاب أحاديث الأنبياء
என் உயிர் எவர் கைவசம் உள்ளதோ அத்தகைய இறைவன் மீது சத்தியமாக உங்களிடம் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களின் குமாரர்  (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) இறங்கும் காலம் நெருங்கி விட்டது. அவர்கள் மிகச் சிறந்த நீதிமானாக வருகை தருவார்கள். சிலுவையை ஒழிப்பார்கள். பன்றியைக் கொல்லுவார்கள். காஃபிர்களிடம் ஜிஸ்யா வாங்க மறுப்பார்கள் (அதாவது இஸ்லாத்தை ஏற்பதைக் கட்டாயமாக்குவார்கள். அவர்களின் ஆட்சியில் மக்களிடம் )  செல்வம் நிரம்பி வழியும். யாரும் ஜகாத் வாங்க மாட்டார்கள். மக்கள் மனதில் துன்யாவின் சொத்து சுகங்களை விட சஜ்தா மக்களிடம் முக்கியமானதாக இருக்கும்.                
கிறிஸ்தவர்கள் கருதுவதைப் போன்று ஈஸா அலை சிலுவையில் அறையப்படவில்லை. அல்லாஹ் அவர்களை விண்ணுக்கு உயர்த்தி விட்டான். அப்படியானால் சிலுவையில் அறையப்பட்டது யார் என்பதில் இப்னு அப்பாஸ் ரழி அவர்களின் கூற்று
وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا-بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ..(158النساء)عَنْ اِبْن عَبَّاس رضي الله عنه قَالَ لَمَّا أَرَادَ اللَّه أَنْ يَرْفَع عِيسَى إِلَى السَّمَاء خَرَجَ عَلَى أَصْحَابه وَفِي الْبَيْت اِثْنَا عَشَر رَجُلًا مِنْ الْحَوَارِيِّينَ يَعْنِي فَخَرَجَ عَلَيْهِمْ مِنْ عَيْن فِي الْبَيْت وَرَأْسه يَقْطُر مَاء فَقَالَ : إِنَّ مِنْكُمْ مَنْ يَكْفُر بِي اِثْنَيْ عَشْر مَرَّة بَعْد أَنْ آمَنَ بِي قَالَ : ثُمَّ قَالَ أَيّكُمْ يُلْقَى عَلَيْهِ شَبَهِي فَيُقْتَل مَكَانِي وَيَكُون مَعِي فِي دَرَجَتِي فَقَامَ شَابّ مِنْ أَحْدَثهمْ سِنًّا فَقَالَ لَهُ: اِجْلِسْ ثُمَّ أَعَادَ عَلَيْهِمْ فَقَامَ ذَلِكَ الشَّابّ فَقَالَ: اِجْلِسْثُمَّ أَعَادَ عَلَيْهِمْ فَقَامَ الشَّابّ فَقَالَ : أَنَا فَقَالَ : هُوَ أَنْتَ ذَاكَ فَأُلْقِيَ عَلَيْهِ شَبَه عِيسَى -(وفي رواية قَالَ عيسي عليه السلام لِأَصْحَابِهِ أَيّكُمْ يُلْقَى عَلَيْهِ شَبَهِي وَهُوَ رَفِيقِي فِي الْجَنَّة ؟ فَانْتُدِبَ لِذَلِكَ شَابّ مِنْهُمْ فَكَأَنَّهُ اِسْتَصْغَرَهُ عَنْ ذَلِكَ فَأَعَادَهَا ثَانِيَة وَثَالِثَة وَكُلّ ذَلِكَ لَا يُنْتَدَب إِلَّا ذَلِكَ الشَّابّ فَقَالَ : أَنْتَ هُوَ وَأَلْقَى اللَّه عَلَيْهِ شَبَه عِيسَى)-وَرُفِعَ عِيسَى مِنْ رَوْزَنَة فِي الْبَيْت إِلَى السَّمَاء قَالَ : وَجَاءَ الطَّلَب مِنْ الْيَهُود فَأَخَذُوا الشَّبَه فَقَتَلُوهُ ثُمَّ صَلَبُوهُ (تفسير ابن كثير) (نسائ) 
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் எப்போது தமது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்தார்களோ ஏப்போது தன் தோழர்களை அழைத்து அல்லாஹ் என்னை விண்ணுக்கு உயர்த்தப் போகிறான். ஆனால் அது என்னைக் கொல்ல நினைக்கும் எதிரிகளுக்கு தெரியக்கூடாது எனவே உங்களில் ஒருவருக்கு அல்லாஹ் எனது உருவத்தை அல்லாஹ் தந்து விடுவான் அவர் கொல்லப்படுவார் ஆனால் நாளை மறுமையில் அவருக்கு நிச்சயம் சுவனம் உண்டு எனக்கூறிய பின், இதற்கு உங்களில் யார் தயார் என்று கேட்க, ஒரு இளைஞர் எழுந்து நான் தயார் என்றார் அவர் இளைஞராக இருக்கிறாரே என்று தயங்கி மீண்டும் ஒருமுறை நபி ஈஸா அலைஹிஸல்லாம் அறிவிப்புச் செய்த போது மீண்டும் அவரே எழுந்தார். மூன்றாவது தடவையும் நபியவர்கள் அறிவித்த போது அவரே முன் வந்தார். அல்லாஹ்வின் தூதருக்காக தன்னுயிரை தியாகம் செய்ய முன்வந்த அவரை எண்ணி நபியவர்கள் வியந்தார்கள். அதை அங்கீகரித்தார்கள். இறுதியில் அவர் தான் ஈஸா நபிக்கு பகரமாக கொல்லப்பட்டார் இது ஒரு அறிவிப்பாகும். மறரொரு அறிவிப்பில் கொல்ல வந்த யூதர்களில் ஒருவன் ஈஸா அலை இருக்கும் அறையில் நுழைந்தவுடன் ஈஸா நபியை அல்லாஹ் உயர்த்தி, அந்த யூதனுக்கு ஈஸா நபியின் உருவத்தை அல்லாஹ் கொடுத்தான் என்றும் அவனைத் தான் சந்தேகத்துடனேயே யூதர்கள் சிலுவையில் அறைந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது– தஃப்ஸீர் இப்னுகஸீர்
ஒரு நபியின் உயிருக்கு ஆபத்து வரும்போது தன் உயிரைக் கொடுத்து பாதுகாப்பது தோழர்களின் கடமை என்பதால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் இப்படி கூறினார்கள். இவ்வாறே உஹது போரில் நபி ஸல் அவர்களும் இவ்வாறு கூறினார்கள்
عَنْ أَنَسِ رضي الله عنهأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُفْرِدَ يَوْمَ أُحُدٍ فِي سَبْعَةٍ مِنْ الْأَنْصَارِ وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ فَلَمَّا رَهِقُوهُ قَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ ثُمَّ رَهِقُوهُ أَيْضًا فَقَالَ مَنْ يَرُدُّهُمْ عَنَّا وَلَهُ الْجَنَّةُ أَوْ هُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ فَتَقَدَّمَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَاتَلَ حَتَّى قُتِلَ فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى قُتِلَ السَّبْعَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبَيْهِ مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا(مسلم) بَاب غَزْوَةِ أُحُدٍ-  مَا أَنْصَفْنَا أَصْحَابَنَاأي ما أنصفت قريش الأنصار لكون القرشيين لم يخرجا للقتال بل خرجت الأنصار واحدا بعد واحد- وأنه يجب على الناس أن يقوا رسول الله بأنفسهم فلما قال ( من يردهم عنا ) كان ينبغي للكل أن يبادر فتأخر بعضهم ليس بإنصاف (شرح مسلم)
    உஹதுப் போரின் போது நபி ஸல் அவர்கள் ஏழு நபித்தோழர்கள் மட்டும் பாதுகாப்புக்காக சுற்றி நின்றிருந்த நிலையில் கூட்டத்தை விட்டு தனித்து விடப்பட்டார்கள். ஏழு நபர்கள் மட்டும் தானே கூட இருக்கிறார்கள் என்றெண்ணி எதிரிகள் தைரியம் கொண்டு நபி ஸல் அவர்களைச் சுற்றி வளைத்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் தம் தோழர்களிடம் இப்போது உங்களில் எவர் கேடயமாக இருந்து என்னைப் பாதுகாப்பாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார் என்று கூறியவுடன் நபி ஸல் அவர்களின் உயிரைப் பாதுகாக்க தம் உயிரையும் தியாகம் செய்ய ஒரு அன்சாரித்தோழர்  உடனே முன்வந்தார். முடிந்தவரை நபிகளாரை நெருங்க விடாமல் எதிரிகளுடன் போராடி இறுதியில் ஷஹீதாக்கப்பட்டார். மறுபடியும் எதிரிகள் நபிகளாரை முன்னோக்கி வர மீண்டும்  நபி ஸல் அவர்கள் இப்போது உங்களில் எவர் கேடயமாக இருந்து என்னைப் பாதுகாப்பாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார் என அறிவிப்புச் செய்தார்கள். அப்போதும் மற்றொரு அன்சாரித் தோழர் முன் வந்தார். அவரும் ஷஹீதாக்கப்பட்டார். இவ்வாறே ஏழு அன்சாரிகள் ஷஹீதாக்கப்பட்டனர்.                                                                   
தன் உயிர் போனாலும் நபி ஸல் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று அன்சாரி சஹாபியின் அறிவுரை
ஹழ்ரத் ஸஃது இப்னு ரபீஉ ரழி அவர்கள் நபி ஸல் அவர்களுக்குப் பிரியமான அன்சாரீ  சஹாபீ. நபி ஸல் அவர்களை மதீனாவுக்கு வரும்படியும் அங்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் தருகிறோம் என்று கூறி அகபாவில் ஒப்பந்தம் செய்தவர்களில் இவரும் ஒருவர். உஹதுப் போர் முடிந்த போது நபி ஸல் அவர்கள் தோழர்களிடம் உங்களில் யாரேனும் சென்று ஸஃது இப்னு ரபீஉ ரழி எந்த இடத்தில் குற்றுயிராக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு அவர் இறுதியாக என்ன சொல்கிறார். என்பதையும் கேட்டு வரும்படி அனுப்புகிறார்கள். ஹழ்ரத் ஜைதுப்னு தாபித் ரழி அவர்கள் சென்று பார்த்தபோது ஸஃது இப்னு ரபீஉ ரழி அவர்கள் எழுபது வெட்டுக் காயங்களுடன் குற்றுயிராக மயக்கமுற்றுக் கிடந்தார்கள். அந்த எழுபது வெட்டுகளில் 12 மட்டுமே அன்னாரின் விழிப்பு நிலையில் எதிரிகள் வெட்டியதாகும் மீதி அனைத்தும் அன்னார் மயக்கமுற்ற பிறகு வெட்டியதாகும். மயக்கம் தெளிந்த பின் அவர்கள் ஜைது ரழி அவர்களை நோக்கி நான் இன்னும் சற்றுநேரத்தில் இறந்து விடுவேன். என் பாசமுள்ள நபிக்கு என் சலாமைக் கூறுங்கள். மேலும் இத்தகைய ஷஹாதத் என்னும் மாபெரும் பாக்கியத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்ததற்காக என் சார்பில் நன்றியும் கூறுங்கள். என் நண்பர்கள் அனைவருக்கும் என் சலாமைக் கூறுங்கள் மேலும் எனது நண்பர்களிடம் கூறுங்கள். நம் தோழர்களில் யாரேனும் உயிருடன் இருக்கும் நிலையில் நமது உயிரினும் மேலான நபி ஸல் அவர்களை எதிரிகளில் ஒருவன் நெருங்கினால் அந்த தோழரின் கண்களில் மட்டுமே உயிர் ஒட்டியிருந்தாலும் சரி, அந்த நிலையில் அவர் நமது நபியைப் பாதுகாக்கத் தவறினால் அவரை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான் என்று கூறுங்கள் என்றார்.இந்த வார்த்தையைக் கூறிய சற்று நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது. நூல் ஜாதுல் மஆத்                                                      
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்த விதம் பற்றி குர்ஆன் கூறுவது
وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا (16) فَاتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا (17) قَالَتْ إِنِّي أَعُوذُ بِالرَّحْمَنِ مِنْكَ إِنْ كُنْتَ تَقِيًّا (18) قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا (19) قَالَتْ أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌوَلَمْ أَكُ بَغِيًّا (20) قَالَ كَذَلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا (21) فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا (22) فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِقَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَذَا وَكُنْتُ نَسْيًا مَنْسِيًّا (23) فَنَادَاهَا مِنْ تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا (24) وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا (25) فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا (26) فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا (27) يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا (28) فَأَشَارَتْ إِلَيْهِ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا (29) قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا (30) وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَمَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا (31) وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا (32سورة مريم) 
மேற்காணும் வசனத்தின் படி ஈஸா அலைஹிஸ்ஸலாம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புவது உண்மையல்ல
வயிற்றில் இருக்கும்போதே தவ்ராத்தை கற்றுக் கொண்ட அதிசயம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நிகழ்ந்தது
عن أنس رض قال: كان عيسى بن مريم قد درس التوارة وأحكمها وهو في بطن أمه, فذلك قوله: {إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيّاً}  قال عكرمة: {آتَانِيَ الْكِتَابَ }أي: قضى أنه  يؤتيني الكتاب فيما قضى (تفسير ابن كثبر ) فقيل هذا الوحي نزل عليه وهو في بطن أمه وقيل لما انفصل من الأم آتاه الله الكتاب والنبوة وأنه تكلم مع أمه وأخبرها بحاله وأخبرها بأنه يكلمهم بما يدل على براءة حالها فلهذا أشارت إليه بالكلام. (تفسير الرازي)
வயிற்றில் இருக்கும்போதே வஹீ இறங்கியது என்று ஒரு அறிவிப்பிலும் மற்றொரு அறிவிப்பில் பிறந்த பின்பு வஹீ இறங்கியது அதைக் கொண்டு தான் அவர்கள் பேசினார்கள் தாயின் பத்தினித்தனத்தை நிரூபித்துக் காட்டினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.   
தொட்டில் குழந்தையாக இருக்கும் போது பேசியது ஈஸா அலைஹிஸ்ஸலாம் பேசியது அவர்களுக்கு அல்லாஹ் தந்த முஃஜிஸா 
மேற்படி வசனத்தில் தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் அடிமை என ஈஸா நபியை அல்லாஹ் பேச வைத்த காரணம் பிற்காலத்தில் அவரை கடவுளாக்கி விடுவார்கள் என்பதால்..
عَنْ أَبِي هُرَيْرَةَ رضعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمْ يَتَكَلَّمْ فِي الْمَهْدِ إِلَّا ثَلَاثَةٌ عِيسَى وَكَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يُقَالُ لَهُ جُرَيْجٌ كَانَ يُصَلِّي جَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ فَقَالَ أُجِيبُهَا أَوْ أُصَلِّي فَقَالَتْ اللَّهُمَّ لَا تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ الْمُومِسَاتِ وَكَانَ جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ فَتَعَرَّضَتْ لَهُ امْرَأَةٌ وَكَلَّمَتْهُ فَأَبَى فَأَتَتْ رَاعِيًا فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا فَوَلَدَتْ غُلَامًا فَقَالَتْ مِنْ جُرَيْجٍ فَأَتَوْهُ فَكَسَرُوا صَوْمَعَتَهُ وَأَنْزَلُوهُ وَسَبُّوهُ فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الْغُلَامَ فَقَالَ مَنْ أَبُوكَ يَا غُلَامُ قَالَ الرَّاعِي قَالُوا نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍقَالَ لَا إِلَّا مِنْ طِينٍ وَكَانَتْ امْرَأَةٌ تُرْضِعُ ابْنًا لَهَا مِنْ بَنِي إِسْرَائِيلَ فَمَرَّ بِهَا رَجُلٌ رَاكِبٌ ذُو شَارَةٍ فَقَالَتْ اللَّهُمَّ اجْعَلْ ابْنِي مِثْلَهُ فَتَرَكَ ثَدْيَهَا وَأَقْبَلَ عَلَى الرَّاكِبِ فَقَالَ اللَّهُمَّ لَا تَجْعَلْنِي مِثْلَهُ ثُمَّ أَقْبَلَ عَلَى ثَدْيِهَا يَمَصُّهُ قَالَ أَبُو هُرَيْرَةَ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمَصُّ إِصْبَعَهُ ثُمَّمُرَّ بِأَمَةٍ فَقَالَتْ اللَّهُمَّ لَا تَجْعَلْ ابْنِي مِثْلَ هَذِهِ فَتَرَكَ ثَدْيَهَا فَقَالَ اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا فَقَالَتْ لِمَ ذَاكَ فَقَالَ الرَّاكِبُ جَبَّارٌ مِنْ الْجَبَابِرَةِ وَهَذِهِ الْأَمَةُ يَقُولُونَ سَرَقْتِ زَنَيْتِ وَلَمْ تَفْعَلْ (بخاري)باب (وَاذْكُرْ فِى الْكِتَابِ مَرْيَمَ)كتاب أحاديث الأنبياء
ஈஸா அலைஹிஸ்ஸலாம் செய்து காட்டிய அற்புதங்களில் இன்னும் சில.....
وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ (ال عمران
قال وهب: كان يطير ما دام الناس ينظرون إليه فإذا غاب عن أعينهم سقط ميتا ليتميز فعل الخلق من فعل الله تعالى. وقيل: لم يخلق غير الخفاش لأنه أكمل الطير خلقا ليكون أبلغ في القدرة لأن لها ثديا وأسنانا وأذنا، وهي تحيض وتطهر وتلد. ويقال: إنما طلبوا خلق خفاش لأنه أعجب من سائر الخلق؛ ومن عجائبه أنه لحم ودم يطير بغير ريش ويلد كما يلد الحيوان ولا يبيض كما يبيض سائر الطيور، فيكون له الضرع يخرج منه اللبن، ولا يبصر في ضوء النهار ولا في ظلمة الليل، وإنما يرى في ساعتين: بعد غروب الشمس ساعة وبعد طلوع الفجر ساعة قبل أن يُسفر جدا، ويضحك كما يضحك الإنسان، ويحيض كما تحيض المرأة. (قرطبي
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் களிமண்ணால் பறவை உருவம் செய்து அல்லாஹ்வின் அனுமதி கொண்டு உயிர் பெறு என்பார்கள் அதற்கு உயிர் வந்து பறந்து செல்லும். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மட்டுமே பறந்து செல்லும். பிறகு கீழே விழுந்து மீண்டும் களி மண்ணாக மாறி விடும். மனிதர் மூலமாக அல்லாஹ் உருவாக்கும் அமைப்புக்கும் அல்லாஹ் நேரடியாக உருவாக்கும் படைப்புக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக..                                                                                                        
மேலும் நபி ஈஸா உருவாக்கிய பறவை என்பது வவ்வால் என்று கூறப்பட்டுள்ளது. ஏன் அதை தேர்வு செய்தார்கள் என்பதற்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன. மக்கள் அதைத்தான் உருவாக்கும்படி ஈஸா அலை அவர்களிடம் கேட்டார்கள். காரணம் வவ்வால் ஒரு ஆச்சரியமான படைப்பு. மனிதனைப் போன்று அதற்கு ஒப்புவமை நிறைய உண்டு. பாலூட்டி இனமாக இருப்பதுடன் பற்கள், மார்பு ஆகியவை உண்டு. மனிதனைப் போன்ற சிரிக்கும். மனிதப் பிறவியைப் போன்று மாத விடாய் அதற்கு ஏற்படும்.                      
இறந்தவர்களை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு உயிர்ப்பித்துக் காட்டுவார்கள்.
{وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ} قيل: أحيا أربعة أنفس: العاذر: وكان صديقا له، وابن العجوز وابنة العاشر وسام بن نوح؛ فالله أعلم. فأما العاذر فإنه كان قد توفى قبل ذلك بأيام فدعا الله فقام بإذن الله وودكه يقطر فعاش وولد له، وأما ابن العجوز فإنه مر به يُحمل على سريره فدعا الله فقام ولبس ثيابه وحمل السرير على عنقه ورجع إلى أهله. وأما بنت العاشر فكان أتى عليها ليلة فدعا الله فعاشت بعد ذلك وولد لها؛ فلما رأوا ذلك قالوا: إنك تحيي من كان موته قريبا فلعلهم لم يموتوا فأصابتهم سكتة فأحيي لنا سام بن نوح. فقال لهم: دلوني على قبره، فخرج وخرج القوم معه، حتى انتهى إلى قبره فدعا الله فخرج من قبره وقد شاب رأسه. فقال له عيسى: كيف شاب رأسك ولم يكن في زمانكم شيب؟ فقال: يا روح الله، إنك دعوتني فسمعت صوتا يقول: أجب روح الله، فظننت أن القيامة قد قامت، فمن هول ذلك شاب رأسي. فسأله عن النزع فقال: يا روح الله إن مرارة النزع لم تذهب عن حنجرتي؛ وقد كان من وقت موته أكثر من أربعة آلاف سنة، فقال للقوم: صدقوه فإنه نبي؛ فآمن به بعضهم وكذبه بعضهم وقالوا: هذا سحر. (قرطبي)
நான்கு பேரை நபி ஈஸா அலை உயிர்ப்பித்துள்ளார்கள். 1. நபி ஈஸா அலஅவர்களின் நண்பரான ஆதிர். இவர் இறந்து சில கழிந்த நிலையில் அவரை உயிராக்கினார்கள். அவர் சில காலம் வாழ்ந்தார்.அவருக்கு குழந்தையும் பிறந்தது.  2. ஒரு மூதாட்டியின் மகன் அவரை பிணமாக ஒரு பலகை மீது வைத்துக் கொண்டு செல்லப்பட்டு அடக்கப்பட்டது. அடக்கியவர்கள் திரும்பி வந்த பின் அல்லாஹ்விடம் ஈஸா அலை துஆ செய்தபோது அவர் கப்ரில் இருந்து எழுந்து தனது ஆடையை அணிந்து கொண்டு அந்த பலகையையும் அவரே தூக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். இவரும் சில காலம் இருந்தார்  3. ஒரு பெண். இவரையும் நபி ஈஸா அலை உயிராக்கினார்கள் இவருக்கு குழந்தையும் பிறந்தது 4. நபி நூஹ் அலை அவர்களின் மகன் ஸாம். மக்கள் அனைவரும் நபி ஈஸா அலை அவர்களிடம் நீங்கள் சமீபத்தில் இறந்தவர்களை மட்டும்தான் உயிராக்குகிறீர்கள் உங்களால் நீண்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்களை உயிராக்க முடியுமா..  குறிப்பாக நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நபி நூஹ் அலை அவர்களின் மகன் ஸாமை  உயிராக்க முடியுமா என்று கேட்க,அவரது கபரை காட்டுங்கள் என்றார்கள் அவ்வாறே அவரது கப்ரு காட்டப்பட்டது.  அனைவரும் உடன் இருக்க நபி    ஈஸா அலை அவர்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்து ஸாமை உயிராக்கினார்கள். அவர் கபரில் இருந்து எழுந்தார். அவர இறக்கும்போது அவர் காலத்தில்  நரை இல்லை. ஆனால் இப்போது எழுப்பும்போது அவருக்கு நரை இருந்த து. அவரிடம் அது  பற்றி  ஈஸா அலை அவர்கள் காரணம் கேட்க, கியாமத் வந்து விட்டதோ என்ற பயத்தில் நரைத்து விட்டது என்றார். அவரிடம் ஈஸா அலை அவர்கள் அவர் இறக்கும்போது அவரது சகராத் வேதனை எவ்வாறு இருந்த து என்று கேட்டார்கள் அதற்கு அவர் இன்னும் என் கழுத்தை விட்டும் அதன் தாக்கம் நீங்கவில்லை என்றார். வேறு சில அறிவிப்புகளில் அவர் ஈஸா அலை அவர்களிடம் நான் ஏற்கெனவே சகராதை அனுபவித்து விட்டதால் என்னை மீண்டும் மவ்த்தாக்கும்போது இன்னொரு சகராத் வேதனை எனக்கு வரக்கூடாது என்று வேண்டினார். அவ்வாறே நபி ஈஸா அலை மீண்டும் அவரை கப்ருக்குள் செல்ல வைத்தார்கள். இவர் மட்டும் உலகில் மீண்டும் வாழவில்லை
ஈஸா அலைஹிஸ்ஸலாம் எவ்வாறு கடவுளாக ஆக்கப்பட்டார்கள் என்ற பின்னணி
பைபிளின் பல வசனங்களில் இறை நல்லடியார்களை குறிப்பாக நபிமார்களை இறை மகன்கள் என்று கூறப்பட்டுள்ளது. விரிவாக கூற நேரமில்லை இஸ்ராயீல் (அதாவது யஃகூப் அலைஹிஸ்ஸலாம்)தாவீது (தாவூது அலைஹிஸ்ஸலாம்),சாலமன் (சுலைமான் அலைஹிஸ்ஸலாம்), ஆகியோரை கர்த்தரின் பிள்ளைகள் என்று கூறும் பல வசனங்கள் பைபிளில் இடம் பெற்றுள்ளன. மக்கள் அனைவரையும் கூட இவ்வாறு கூறும் வசனங்கள் பைபிளில் உள்ளன. “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள் (உபாகமம் 14:1)அதனால் அனைவரும் கடவுளின் வாரிசுகளாகி விட முடியாது. ஈஸா அலைஹிஸ்ஸலாம் விஷயத்தில் “அன்றியும்வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: 'இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்' என்று உரைத்தது.(மத்தேயு 3:17) பைபிளில் உள்ள இது போன்ற பல வசனங்கள் அனைத்தும் இறை நேசர் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளதே தவிர இறை மகன் என்ற அர்த்தத்தில் கூறப்படவில்லை. இதை தவறாக புரிந்து தான் கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுள் என்கிறார்கள்
                                        
நபி ஸல் அவர்களைப் பற்றி ஈஸா அலைஹிஸ்ஸலாம் கூறிய முன்னறிவிப்புகள் இன்றைய பைபிளில்....
وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ (الصف:6
மேற்கானும் வசனம் பைபிளில் பின்வருமாறு- நான் பிதாவைவேண்டிக்கொள்ளுவேன். அப்போதுஎன்றைக்கும் உங்களுடனே கூடஇருக்கும்படிக்கு சத்தியஆவியாக வேறொரு தேற்றரவாளரைஅவர் உங்களுக்குத்தந்தருள்வார் (யோவான் 14:16)'பிதாவிடத்திலிருந்து நான்உங்களுக்குஅனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்துபுறப்படுகிறவருமாகிய சத்தியஆவியான தேற்றரவாளர் வரும்போது, அவர் என்னைக் குறித்துச்சாட்சி கொடுப்பார்' (யோவான் 15:26)'அப்பொழுது கர்த்தர் என்னைநோக்கி,. உன்னைப் போல ஒருதீர்க்க தரிசியை நான்அவர்களுக்கு அவர்கள்சகோதரர்களிடமிருந்துஎழும்பப்பண்ணி, என்வார்த்தைகளை அவர் வாயில்அருளுவேன். நான் அவருக்குக்கற்பிப்பதையெல்லாம்அவர்களுக்குச் சொல்லுவார்.என் நாமத்திலே அவர் சொல்லும்என் வார்த்தைகளுக்குச்செவிகேடாதவன் எவனோ அவனை நான்விசாரிப்பேன்' (உபாகமம் 18:17-19) பைபிளில் இடம்பெற்றுள்ள இந்த வசனங்களில் நபியவர்களின் பெயரை திரித்துதேற்றரவாளர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தேற்றரவாளர் யார் என்பதற்கு கிறிஸ்தவ அறிஞர்கள் “இது இயேசுவைப் பற்றி அவருக்கு முன்பிருந்த மோஸஸ் (மூஸா நபி) கூறியது என்பர்.

சோதனைகள் நீங்கிட ,


 சோதனைகள் நீங்கிட  இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம்
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (17) الانعام
கடன் சுமை நீங்க தொழுகைக்குள் அல்லாஹ்விடம் துஆ கேட்கலாம்
عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنْ الْمَغْرَمِ فَقَالَ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ (بخاري 832
அல்லாஹ்வின் தூதரே நீங்கள் அதிகமாக கடன் சுமையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் ஒருவன் கடனாளியாக ஆகி விட்டால் அதிகம் பொய் பேசுவான் வாக்குறுதிக்கு மாறு செய்வான். என்று கூறினார்கள். கடன் என்பது பல பாவங்களைச் செய்ய வைத்து விடும் என்பது இதன் கருத்தாகும்.              
குகைக்குள் சிக்கிய மூன்று இளைஞர்கள் துஆ  செய்த போது அல்லாஹ் அவர்களை காப்பாற்றிய விதம்
عَنْ ابْنِ عُمَرَ رَضِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَرَجَ ثَلَاثَةُ نَفَرٍ يَمْشُونَ فَأَصَابَهُمْ الْمَطَرُ فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ قَالَ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ فَقَالَ أَحَدُهُمْ اللَّهُمَّ إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ1 فَأَجِيءُ بِالْحِلَابِ فَآتِي بِهِ أَبَوَيَّ فَيَشْرَبَانِ ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي فَاحْتَبَسْتُ2 لَيْلَةً فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ قَالَ فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَيَّ فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا حَتَّى طَلَعَ الْفَجْرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ قَالَ فَفُرِجَ عَنْهُمْ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي كُنْتُ أُحِبُّ امْرَأَةً مِنْ بَنَاتِ عَمِّي كَأَشَدِّ مَا يُحِبُّ الرَّجُلُ النِّسَاءَ فَقَالَتْ لَا تَنَالُ ذَلِكَ مِنْهَا حَتَّى تُعْطِيَهَا مِائَةَ دِينَارٍ فَسَعَيْتُ فِيهَا حَتَّى جَمَعْتُهَا فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ اتَّقِ اللَّهَ وَلَا تَفُضَّ الْخَاتَمَ إِلَّا بِحَقِّهِ فَقُمْتُ وَتَرَكْتُهَا فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً قَالَ فَفَرَجَ عَنْهُمْ الثُّلُثَيْنِ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقٍ مِنْ ذُرَةٍ3 فَأَعْطَيْتُهُ وَأَبَى ذَاكَ أَنْ يَأْخُذَ فَعَمَدْتُ إِلَى ذَلِكَ الْفَرَقِ فَزَرَعْتُهُ4 حَتَّى اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيهَا ثُمَّ جَاءَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ أَعْطِنِي حَقِّي فَقُلْتُ انْطَلِقْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرَاعِيهَا فَإِنَّهَا لَكَ فَقَالَ أَتَسْتَهْزِئُ بِي قَالَ فَقُلْتُ مَا أَسْتَهْزِئُ بِكَ وَلَكِنَّهَا لَكَ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فَكُشِفَ عَنْهُمْ رواه البخاري كتاب البيوع
عن الحكم بن هشام الثقفي قال : ( أخبرت أن رجلا أخذ أسيرا فألقي في جب ووضع على رأس الجب صخرة فكتب فيها : ( سبحان الملك الحق القدوس سبحان الله وبحمده ) فأخرج من الجب من غير أن يكون أخرجه إنسان 
ஒரு இறைநேசர் தகுந்த காரணமின்றி கைதியாகப் பிடிக்கப்பட்டார். அவரை அடைத்து வைத்திருந்த அறை வாசலில் அவர் வெளியே வர முடியாத அளவுக்கு பெரிய பாறாங்கல்லும் வைக்கப் பட்டிருந்தது. அவர் மேற்படி திக்ரை அந்தக் கல்லின் மீது எழுதினார். அவரால் இலகுவாக அங்கிருந்து வெளியேற முடிந்தது.                                                               
இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவம்
عن مشرف بن أبان : حدثني صالح بن سليمان أ وغيره قال : ( احتاج إبراهيم بن أدهم إلى دينار وكان على شاطىء البحر فدعا الله عز و جل فتشرعت السمك في فم كل واحدة منهن دينار واحد فأخذ دينارا واحدا ) 
இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரழி அவர்கள் கடற்கரையில் இருந்த போது இக்கட்டான சூழ்நிலையில் ஒரு தீனார் அவசியமாக தேவைப்பட்டது. உடனே அல்லாஹ்விடம் துஆச் செய்ய, சற்று நேரத்தில் பல மீன்கள் நீருக்குள் இருந்து எட்டிப் பார்த்தன. ஒவ்வொன்றின் வாயிலும் ஒரு தீனார் இருந்த து. இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரழி அவர்கள் அத்தனைக்கும் ஆசைப்படாமல் ஒரே ஒரு மீனின் வாயில் இருந்த ஒரு தீனாரை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.                
இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் பயணம் செய்த கப்பல் கடும் புயலில் சிக்கியும் அவர்களின் துஆவால் தப்பியது
عن يحيى بن عثمان بقية بن الوليد قال :(كنا في البحر فهبت الرياح وهاجت الأمواج فبكى الناس وصاحوا فقيل لمعيوف - أو ابن معيوف - هذا ابراهيم بن أدهم لو سألته أن يدعو الله عز و جل ؟ وإذا هو نائم في ناحية السفينة ملفوف رأسه في كساء فدنا منه فقال: يا أباإسحاق أما ترى ما الناس فيه ؟ فقال :اللهم قد أريتنا قدرتك فأرنا رحمتك  فهدأت السفينة (مجابوا الدعوة)
சில மக்கள் கடலில் பயணம் செய்த கப்பல் கடும் புயலில் சிக்கியது. மக்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். அப்போது ஒருவர் கூறினார். இதோ இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் இருக்கிறார்கள். அவரிடம் நாம் துஆச் செய்யச் சொல்லலாமே என்று கூற, இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் துஆச் செய்யச் சொன்ன போது அவர்கள் துஆச் செய்தார்கள். புயல் நீங்கியது. 
இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் சிலருடன் பயணம் செய்து கொண்டிருந்த போது எதிரில் சிங்கம் வந்த து. அப்போது அவர்கள் பின்வரும் துஆவை ஓதினார்கள். அந்த சிங்கம் வந்த வழியே திரும்பிப் போனது
عن عَبْد الْجَبَّارِ بْنُ كُلَيْبٍ قَالَ: كُنَّا مَعَ إِبْرَاهِيمَ بْنِ أَدْهَمَ فِي سَفْرَةٍ  فَعَرَضَ لَنَا السَّبْعُ1  فَقَالَ إِبْرَاهِيمُ : قُولُوا : اللهُمَّ احْرُسْنَا بِعَيْنِكَ الَّتِي لَا تَنَامُ  وَاحْفَظْنَا فِي كَنَفِكَ الَّذِي لَا يُرَامُ ، وَارْحَمْنَا بِقُدْرَتِكَ عَلَيْنَا ، وَلَا تُهْلِكْنَا ، وَأَنْتَ رَجَاؤُنَا ؛ يَا اللهُ يَا اللهُ . قَالَ : فَوَلَّى السَّبْعُ عَنَّا . قَالَ خَلَفٌ : فَأَنَا مُنْذُ سَمِعْتُ هَذَا أَدْعُو بِهِ عِنْدَ كُلِّ شِدَّةٍ وَكَرْبٍ ؛ فَمَا رَأَيْتُ إِلَّا خَيْرًا (المجالسة وجواهر العلم)   
பகைவர்களிடமிருந்து பாதுகாக்க  துஆச் செய்தாலும் அல்லாஹ் உடனே ஏற்பான்
عن عصام بن زيد - رجل من مزينة - قال : ( كان رجل من الخوارج يغشى مجلس الحسن فيؤذيهم فقيل للحسن : يا أبا سعيد ألا تكلم الأمير حتى يصرفه عنا ؟ قال : فسكت عنهم  قال : فأقبل ذات يوم و الحسن جالس مع أصحابه فلما رآه قال : ( اللهم قد علمت أذاه لنا فاكفناه بماشئت ) قال : فخر الرجل والله من قامته فما حل إلى أهله إلا ميتا على سرير فكان الحسن إذا ذكره بكى 
ஹஸன் பஸரீ ரஹ் அவர்களின் மஜ்லிஸுக்கு வந்து ஒருவர் எப்போதும் தொந்தரவு தந்து கொண்டிருந்தார். ஹஸன் பஸரீ ரஹ் அவர்களைத் திட்டுவார் அப்போது ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் மற்றவர் இந்த அளவுக்கு உங்களை திட்டுகிறார். அவரைப் பற்றி நீங்கள் அரசரிடம் புகார் கூறக் கூடாதா என்று கேட்க இமாம் அவர்கள் அமைதியாக இருந்து விட்டனர். மற்றொரு முறை அந்த மனிதர் சபைக்கு வந்து மிகவும் நோவினைப் படுத்திய போது இமாம் அவர்கள் அவரை விட்டும் பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்ய உடனே அந்த மனிதர் கீழே விழுந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்குள் அவர் இறந்து விட்டார். நல்லோர்களின் சாபம் உடனே பலிக்கும்.                   
عن سعد رضي الله عنه أن : رجلا نال من علي رضي الله عنه (وفي رواية فنهاه سعد فلم ينته فقال سعد : أدعو عليك فلم ينته) فدعا عليه سعد بن مالك فجاءته ناقة أو جمل فقتله فأعتق سعد نسمة و حلف أن لا يدعو على أحد (مستدرك الحاكم) (مجابوا الدعوة)
அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஒருவன் திட்டினான். அவனை ஸஃது ரழி தடுத்தும் கேட்கவில்லை. உனக்கு எதிராக துஆ செய்வேன் என்று எச்சரித்தும் அவன் கேட்கவில்லை. இறுதியில்  அவனுக்கு எதிராக ஸஃது ரழி அவர்கள் துஆ செய்ய, அவனை ஒட்டகம் மிதித்துக் கொன்றது.  இனிமேல் யாருக்கும் எதிராக நான் துஆ செய்ய மாட்டேன் என ஸஃது ரழி கூறினார்கள்.      
ஹஜ்ஜாஜுக்கு எதிராக ஸயீத் ரழி அவர்கள் செய்த துஆவை அல்லாஹ்  உடனே ஏற்றுக் கொண்டான் 
ثم دعا الحجاج بآلات اللهو، فضربت بين يدي سعيد فبكى سعيد. فقال الحجاج: ويلك يا سعيد. فقال سعيد: الويل لمن زحزح عن الجنة، وأدخل النار. فقال: يا سعيد أي قتلة تريد أن أقتلك بها؟ قال: اختر لنفسك يا حجاج، فوالله لا تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة. قال: فتريد أن أعفو عنك؟ قال: إن كان العفو من الله فنعم، وأما منك أنت فلا. فقال: اذهبوا به فاقتلوه. فلما أخرج من الباب ضحك، فأخبر الحجاج بذلك، فأمر برده فقال: ما أضحكك وقد بلغني أن لك أربعين سنة لم تضحك؟ قال: ضحكت عجباً من جراءتك على الله، ومن حلم الله عليك، فأمر بالنطع فبسط بين يديه، وقال: اقتلوه. فقال سعيد: " كل نفس ذائقة الموت " . ثم قال: " وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً مسلماً وما أنا من المشركين " . قال: وجهوه لغير القبلة. فقال سعيد: " فأيما تولوا فثم وجه الله " فقال: كبوه لوجهه. فقال: " منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى " فقال الحجاج: اذبحوه. فقال سعيد: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله. ثم قال: اللهم لا تسلطه على أحد يقتله بعدي. فذبح على النطع رحمة الله تعالى عليه، فكان رأسه يقول بعد قطعه: لا إله إلا الله مراراً. وذلك في شعبان سنة خمس وتسعين. وكان عمر سعيد تسعاً وأربعين سنة،(حياة الحيوان– البداية والنهاية 
قال عون ابن أبي شداد العبدي ... وبلغنا أن الحجاج عاش بعده خمسة عشر ليلة ووقع الاكلة في بطنه فدعا بالطبيب لينظر اليه فنظر اليه ثم دعا بلحم منتن فعلقه في خيط ثم أرسله في حلقه فتركها ساعة ثم استخرجها وقد لزق به من الدم فعلم أنه ليس بناج وبلغنا أنه كان ينادي بقية حياته مالي ولسعيد بن جبير كلما أردت النوم أخذ برجلي (حلية الاولياء)
ஹஜ்ஜாஜ் கடைசியாக கொலை செய்த து ஸயீத் இப்னு ஜுபைர் ரழி அவர்களைத் தான். உன்னை எப்படிக் கொல்லட்டும் என ஸயீத் ரழி அவர்களிடமே அவன் கேட்க, அது உன் இஷ்டம். ஆனால் அல்லாஹ் மீது சத்தியமாக நீ என்னை எப்படிக் கொன்றாலும் அல்லாஹ் பதிலுக்கு உன்னை மறுமையில் கொல்லுவான்.  என்று கூறியபோது, நான் உன்னை மன்னிப்பதை விரும்புகிறாயா என்று கேட்க, மன்னிப்பு அல்லாஹ்விடமிருந்து என்றால் அது எனக்கு சந்தோஷம். உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்றார்கள். பிறகு ஹஜ்ஜாஜ் ஸயீத் ரழி அவர்களைக் கொல்ல உத்தரவிட்டான். ஸயீத் ரழி சிரித்தார்கள். உடனே ஹஜ்ஜாஜ் 40 வருடங்களாக சிரித்த தில்லை என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். எதற்காக நீ இப்போது சிரித்தாய் என்று கேட்க, அல்லாஹ்வுக்கு எதிராக உனது திமிரையும், அல்லாஹ் உன்னை இன்னும் விட்டு வைத்திருப்பதையும் எண்ணி ஆச்சரியத்தால் சிரிக்கிறேன். என்றார்கள். பிறகு அவர்களைக் கொல்வதற்காக படுக்க வைக்கப்பட்ட போது ஒவ்வொரு ஆத்மாவும் மவ்த்தை அனுபவித்தே தீரும் என்றார்கள். அப்போது கிப்லாவின் பக்கம் முகம் இருந்தது. அந்த சந்தோஷத்தில் ஸயீத் ரழி வஜ்ஜஹ்து ஓதினார்கள். உடனே ஹஜ்ஜாஜ் அவரின் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்றான். அவ்வாறு திருப்ப ப்பட்ட போது   என்ற ஆயத்தை ஓதினார்கள். அவரைக் குப்புறப் படுக்க வையுங்கள் என்றான் ஹஜ்ஜாஜ். அப்போது  فأيما تولوا فثم وجه الله
என்ற ஆயத்தை ஸயீத் ரழி அவர்கள்  ஓதினார்கள். பின்பு ஸயீத் ரழி அவர்கள்  منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى "
ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் நாவு கடைசி நேரத்தில் கலிமாவை உச்சரித்த து மட்டுமன்றி, அவர்களின் தலையைத் துண்டாக்கிய பின்பும் அவர்களின் தலை மட்டும் கலிமாவை மொழிந்து கொண்டே இருந்தது.  இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஸயீத் ரழி அவர்கள் கடைசி நேரத்தில் யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யார் மீதும் இவனை நீ சாட்டி விடாதே என்று துஆ செய்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். இதற்குப் பின் 15 இரவுகள் மட்டுமே ஹஜ்ஜாஜ் வாழ்ந்தான். இந்த 15 நாட்களும் தூங்கவே இல்லை. படுத்தால் என் காலைப் பிடித்து ஸயீத் இழுப்பது போன்றிருக்கிறது என்பான்
முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்ய மன்னர் ஷாஜஹான் உத்தரவிட்ட போது ஹழ்ரத் செய்த துஆவின் விளைவு
மன்னர் ஷாஜஹானுக்கு ஒருமுறை பட்டாடை அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர் அணிந்தார். அப்போது ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் வேண்டாம் தந்தையே நீங்கள் பட்டாடை அணியக்கூடாது என் உஸ்தாத் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ஆண்கள் பட்டாடை அணியக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார்கள். என்று தடுக்க, அதைக் கேட்காத ஷாஜஹான் என்னைத் தடுக்க அவர் யார் என்று கூறியதுடன் பட்டாடைகளை அணிந்தார். அத்தோடு முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். அது தெரிந்த முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ரப்பிடம் தொழுது துஆச் செய்வதில் ஈடுபட்டனர். அதேநேரம்  இதை அறிந்து பயந்த ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் சென்று கெஞ்சுகிறார்கள். ஹழ்ரத் அவர்கள் நமக்கு எதிராக துஆச் செய்தால் என்ன ஆகும். எனவே தயவு செய்து கைது உத்தரவை வாபஸ் பெறுங்கள். என்று கெஞ்ச, மன்னர் ஷாஜஹான் கைது உத்தரவை வாபஸ் பெறுகிறார். அந்த உத்தரவை வாங்கிக் கொண்டு வேகமாக ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் உஸ்தாதிடம் வருவதற்குள் உஸ்தாத் அவர்கள் துஆ ஓதி கைகளை முகத்தில் தடவி விட்டார்கள். ஒளரங்கசீப் ரஹ் விஷயத்தைக் கூறியவுடன் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் நீங்கள் இத்தகைய காரியத்தில் ஈடுபட்ட காரணத்தால் உம்முடைய ஆட்சிக்காலம் வரை தான் முகலாய அரசு நீடிக்கும் என்றார்கள். அதன்படி ஒளரங்கசீப் ரஹ் அவர்களோடு முகலாய ஆட்சி முடிவுக்கு வந்தது 
.  
அநீதமான அரசனின் தீமைக்கு எதிராக நமக்கு கற்றுத் தரப்பட்ட துஆக்கள்
ஆட்சியாளர் உங்களில் ஒருவரை அச்சுறுத்தினால் பின்வரும் துஆவை ஓதுங்கள்
عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم قال إذا تَخَوَّفَ أحَدُكُمُ السُّلْطانَ فَلْيَقُل اللَّهُمَّ رَبَّ السَّمَواتِ وَرَبَّ العَرْشِ العَظيم كُنْ لِي جاراً مِنْ شَرِّ فُلانِ بنِ فُلانٍ وَشَرِّ الجِنِّ والإِنْسِ وأتْباعِهِمْ أنْ يَفْرُطَ عَلَيَّ أحَدٌ مِنْهُمْ عَزَّ جارُكَ وَجَلَّ ثَناؤكَ وَلاَ إله  غَيْرُكَ رواه الطبراني  (الترغيب والترهيب
عن عامر قال : كنت جالسا مع زياد بن أبي سفيان فأتى برجل يحمل ، ما نشك في قتله ، قال : فرأيته حرك شفتيه بشئ ما ندري ما هو ، فخلى سبيله فأقبل إليه بعض القوم فقال : لقد جئ بك وما نشك في قتلك ، فرأيتك حركت شفتيك بشئ ما ندري ما هو ، فخلى سبيلك ، قال : قلت اللهم رب إبراهيم ورب إسحاق ورب يعقوب ورب جبريل وميكائيل وإسرافيل ومنزل التوراة والانجيل والزبور والقرآن العظيم [ مصنف ابن أبي شيبة ]
ஆட்சியாளர் ஜியாதிடம் ஒருவர் அழைத்து வரப்பட்டார். அவர் கொல்லப்படுவது உறுதி என்ற நிலை இருந்தது. ஆனால் அவர் நாவில் எதையோ முனுமுனுத்தவராக இருந்தார். சற்று நேரத்தில் அவரை ஜியாத் விடுவித்து விட்டார்அவரிடம் சிலர் உங்களுக்கான மரண தண்டனை உறுதியான நிலையில் நீங்கள் அழைத்து வரப்பட்டீர்கள். ஆனால் உமது நாவில் எதையோ முனுமுனுத்தவராக இருந்தீர்கள் பிறகு விடுவிக்கப்பட்டு விட்டீர்கள். அப்படி என்ன ஓதினீர்கள் என்று கேட்கப்பட்ட போது நான் இன்ன துஆவை ஓதினேன் என்று மேற்படி துஆவை ஓதிக்காட்டினார் 
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ عِنْدَ الْكَرْبِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْكَرِيمِ قَالَ وَكِيعٌ مَرَّةً لَا إِلَهَ إِلَّا اللَّهُ فِيهَا كُلِّهَا (ابن ماجة
عن الحسن بن حسن أن عبد الله بن جعفر رضي الله عنه تزوج امرأة فدخل بها فلما خرج قلت لها ما قال لك قلت قال إذا نزل بك أمر فظيع أو عظيم فقولي لا إله إلا الله الحليم الكريم لا إله إلا الله رب العرش العظيم سبحان الله رب العالمين فدعاني الحجاج فقلتها فقال لقد دعوتك وأنا أريد أن أضرب عنقك وما في أهلك اليوم أحد أحب إلي منك أو أعز منك  (سنن الكبرى )
ஹஸன் இப்னு ஹஸன் ரஹ் அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி அவர்கள் என் உறவுக்காரப் பெண்ணை மணமுடித்தார்கள். அப்பெண்ணிடம் முதலிரவையும் முடித்த பின்பு நான் அந்த அம்மையாரிடம் உங்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி அவர்கள் ஏதேனும் துஆவைக் கற்றுத் தந்தார்களா என்று கேட்டேன். அதற்கு அப்பெண் ஆம் ஏதேனும் இக்கட்டான சூழ்நிலை உனக்கு ஏற்பட்டால் இந்த துஆவை ஓது என அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி கூறியதாக மேற்படி துஆவை அந்தப் பெண் என்னிடம் கூறினார்கள். அந்த துஆவை நானும் கற்றுக் கொண்டேன். பின்பு ஒரு நேரத்தில் ஹஜ்ஜாஜ் என்னைக் கொல்வதற்காக அழைத்த போது நான் இந்த துஆவை ஓதினேன். அப்போது ஹஜ்ஜாஜ் என்னிடம் நான் உன் கழுத்தை வெட்டவே உம்மை அழைத்தேன். ஆனால் இன்று நீர் என் கண்ணுக்கு முன்னால் உம் குடும்பத்தார்களில் எனக்குப் பிரியமானவராக தெரிகிறீர் என்று ஹஜ்ஜாஜ் கூறினான்.

ஆடை அழகாக இருப்பதும் சுன்னத்,


ஆடை அழகாக இருப்பதும் சுன்னத்
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ.. 32 الاعراف)فقد دلت الآية على لباس الرفيع من الثياب والتجمل بها في الجمع والأعياد وعند لقاء الناس ومزاورة الإخوان.قال أبو العالية:كان المسلمون إذا تزاوروا تجملوا (قرطبي)وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُوا وَاشْرَبُوا وَالْبَسُوا وَتَصَدَّقُوا فِي غَيْرِ إِسْرَافٍ وَلَا مَخِيلَةٍ (بخاري) 
 يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ (31)الاعراف- والزينة هنا الملبس الحسن، إذا قدر عليه صاحبه -
நீங்கள்  தொழும்போது அழகிய ஆடைகளை அவசியமாக்கிக் கொள்ளுங்கள். என்று இதற்கு பலர் விளக்கம் கூறியுள்ளனர். குறிப்பாக ஈத் ஜும்ஆ போன்ற நாட்களில்..
 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى حُلَّةً سِيَرَاءَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوْ اشْتَرَيْتَ هَذِهِ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لَا خَلَاقَ لَهُ فِي الْآخِرَةِ ثُمَّ جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا حُلَلٌ فَأَعْطَى عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ كَسَوْتَنِيهَا وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا فَكَسَاهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَخًا لَهُ بِمَكَّةَ مُشْرِكًا  (بخاري- باب مَنْ تَجَمَّلَ لِلْوُفُودِ  - باب فِى الْعِيدَيْنِ وَالتَّجَمُّلِ فِيهِ - باب يَلْبَسُ أَحْسَنَ مَا يَجِدُ
    இமாம் புகாரீ ரஹ் அவர்கள் ஈதுப் பெருநாட்களுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவது மேலும் தன்னை சந்திக்க வருபவர்களுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவது மாற்றார்களுக்கு அன்பளிப்பு வழங்குவது போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் கீழ்காணும் ஹதீஸை கொண்டு வந்துள்ளார்கள்.                                                   
கருத்து- உமர் ரழி அவர்கள் ஒருமுறை மஸ்ஜிதின் வாசலில் பட்டு கலந்த ஆடை விற்கப் படுவதைக் கண்டு அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இதை விலைக்கு வாங்கிக் கொண்டால் ஈதுப் பெருநாளுக்காகவும் தங்களைச் சந்திக்க வருபவர்களுக்காகவும் இதை அணிந்து கொள்ளலாமே என்று கேட்க அதற்கு நபி ஸல் அவர்கள் மறுமையில் யாருக்கு எவ்வித நற்கூலியும் இல்லையோ அவர் தான் இதை வாங்குவார் என்று கூறி மறுத்து விட்டார்கள். பின்பு சில தினங்கள் கழித்து அதே போன்ற பட்டாடை நபி ஸல் அவர்களுக்கு அன்பளிப்பாக தரப்பட்டதோ அதை உமர் ரழி அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். உடனே உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இதை வேண்டாம் என்று தடுத்தீர்கள். இப்போது நீங்களே இதை எனக்கு அணியக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் இதை உமக்காக நான் கொடுத்தனுப்பவில்லை. மக்காவில் இருக்கும் உமது காஃபிரான சகோதரருக்கு கொடுத்து விடுங்கள் என்றார்கள்.                                                
இதில் படிப்பினைகள் நிறைய உள்ளன. எனினும் முக்கியமான படிப்பினை ஈதுப் பெருநாட்களுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவதை நபி ஸல் அவர்கள் விரும்பியதால் தான் இதை தாங்கள் வாங்கிக் கொள்ளலாமே என உமர் ரழி அவர்கள் கேட்டார்கள். ஆனாலும் பட்டு என்பதால் நபி ஸல் மறுத்தார்கள். 
நண்பர்களை சந்திக்கும்போது தன் ஆடைகளை, அங்க அவயங்களை சரி செய்து கொள்வதும் நபிவழி தான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சில நேரங்களில் தண்ணீரில் தன் முகத்தைப் பார்த்து தலை முடியையும், தாடி முடியையும் சரி செய்வார்கள்
ஆடை என்பது மனிதனுக்கு கண்ணியம் சேர்க்கும் அம்சங்களில் முக்கியமான ஒன்றாகும். அதனால் அந்த கண்ணியத்தைக் கெடுக்க அதாவது சுவன ஆடைகளை உருவ வேண்டும் என்பதற்காகவே ஷைத்தான் ஆதம் ஹவ்வா இருவரிடம் குழப்பம் செய்தான்.  
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِنْ سَوْءَاتِهِمَا وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ إِلَّا أَنْ تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ (20) وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ (21) فَدَلَّاهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَاتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا 
2.சுவனம் கிடைப்பதற்காக வலிப்பு நோயையும் நான் பொறுத்துக் கொள்கிறேன் ஆனால் என் ஆடைகள் விலகி விடாதிருக்கு துஆச் செய்யுங்கள் என ஒரு பெண் கோரிக்கை வைத்தார்.
عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا (بخاري5652
அதாஃ ரஹ் அவர்கள் கூறினார்கள் என்னிடம் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் சுவனவாதியான ஒரு பெண்ணை உமக்குக் காட்டவா என்று கேட்டு விட்டு இதோ இந்த கறுப்பான பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து தனக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் அது நீங்க அல்லாஹ்விடம் துஆ செய்யும்படியும் கூறினார். நபி ஸல் அவர்கள் அப்பெண்ணிடம் நீ இதை பொறுத்துக் கொண்டால் உனக்கு சுவனம் உறுதியாகி விடும் என்றார்கள். அப்போது அந்தப்பெண் சுவனம் கிடைப்பதற்காக வலிப்பு நோயையும் நான் பொறுத்துக் கொள்கிறேன் ஆனால் என் ஆடைகள் விலகி விடாதிருப்பதற்கு மட்டும் துஆச் செய்யுங்கள் என ஒரு பெண் கோரிக்கை வைத்தார். அவ்வாறே நபி ஸல் துஆச் செய்தார்கள்.                                                       
3. அரசனிடம் ஈமானைப் பற்றி தைரியமாக பேசிய குகைவாலிபர்கள் அங்கிருந்து ஓடக் காரணம் ஆடையை உருவச் சொல்லி அரசன் சொன்னது தான்
إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا (10) الكهف -         
فَيُقَال إِنَّ مَلِكهمْ لَمَّا دَعَوْهُ إِلَى الْإِيمَان بِاَللَّهِ أَبَى عَلَيْهِمْ وَتَهَدَّدَهُمْ وَتَوَعَّدَهُمْ وَأَمَرَ بِنَزْعِ لِبَاسهمْ عَنْهُمْ الَّذِي كَانَ عَلَيْهِمْ مِنْ زِينَة قَوْمهمْ وَأَجَّلَهُمْ لِيَنْظُرُوا فِي أَمْرهمْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ عَنْ دِينهمْ الَّذِي كَانُوا عَلَيْهِ وَكَانَ هَذَا مِنْ لُطْف اللَّه بِهِمْ فَإِنَّهُمْ فِي تِلْكَ النَّظْرَة تَوَصَّلُوا إِلَى الْهَرَب مِنْهُ وَالْفِرَار بِدِينِهِمْ مِنْ الْفِتْنَة وَهَذَا هُوَ الْمَشْرُوع عِنْد وُقُوع الْفِتَن فِي النَّاس أَنْ يَفِرّ الْعَبْد مِنْهُمْ خَوْفًا عَلَى دِينه (تفسير ابن كثير
வெண்மை ஆடை நல்லது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பச்சை, கறுப்பு நிற ஆடைகளையும் அணிந்துள்ளார்கள் சட்டையும் அணிந்துள்ளார்கள். சஹாபாக்களின் சட்டை என்பது கெண்டைக்காலின் பாதி வரைக்கும் இருந்தது. இப்போதுள்ள இளைஞர்கள் அணிவது போன்று இடுப்புக்கு மேல் உள்ளதாக இல்லை
عن أم سلمة رض قالت كان أحب الثياب إلى رسول الله صلى الله عليه وسلم القميص- عن المغيرة بن شعبة رض أن النبي صلى الله عليه وسلم لبس جبة رومية ضيقة الكمين(ترمذي)عن أبي إسحاق السبيعي يقول أدركتُهم وقُمُصُهم إلى نصف الساق أو قريب من ذلك وكم أحدهم لا يجاوز يده(التمهيد
முழுக்கைச் சட்டை அணிவது சுன்னத்
عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رضي الله عنها قَالَتْ كَانَتْ يَدُ كُمِّ قَمِيصِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الرُّصْغِ(ابوداود)
நபி ஸல் அவர்களின் சட்டைக் கை மணிக்கட்டு வரை இருந்தது.
சிறுநீர் கழிக்கும்போது நின்று கொண்டே ஆடையை தூக்க மாட்டார்கள் மாறாக பாதிக்கு மேல் உட்கார்ந்த பிறகு தான் ஆடையை தூக்குவார்கள் வெட்க உணர்வின் காரணமாக சிறுநீர் கழிப்பதற்காக தூரமாகச் சென்று விடுவார்கள்
عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَأَرَادَ أَنْ يَقْضِيَ حَاجَتَهُ فَقَالَ لِي ائْتِ تِلْكَ الْأَشَاءَتَيْنِ قَالَ وَكِيعٌ يَعْنِي النَّخْلَ الصِّغَارَ فَقُلْ لَهُمَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمَا أَنْ تَجْتَمِعَا فَاجْتَمَعَتَا فَاسْتَتَرَ بِهِمَا فَقَضَى حَاجَتَهُ ثُمَّ قَالَ لِي ائْتِهِمَا فَقُلْ لَهُمَا لِتَرْجِعْ كُلُّ وَاحِدَةٍ مِنْكُمَا إِلَى مَكَانِهَا فَقُلْتُ لَهُمَا فَرَجَعَتَا (ابن ماجة)حديث صحيح
 இந்தஹதீஸ் BAZZAR நூலில் சற்று விரிவாக உள்ளது. அதாவது ஹுனைன் போரின் போது நபி ஸல் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது நபி ஸல் சிறுநீர் கழிக்க நாடினார்கள். நபி ஸல் எப்போது சிறுநீர் கழித்தாலும் சற்று தூரமாகவும், மறைவாகவும் செல்வார்கள். அங்கு மறைவு எதுவும் இல்லாததால் ஏதாவது மறைவு உள்ளதா என்று பார்க்கும்படி கூறினார்கள். சற்று தூரத்தில் சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, இன்னொரு மரம் இருந்தால் பார் என்றார்கள். நான் சென்று சற்று தூரத்தில்  மற்றொரு சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, அந்த இரு மரங்களையும் சேர்ந்தாற்போல் இங்கு வரும்படி அல்லாஹ்வின் தூதர் அழைத்த தாக கூறி அழைத்து வா என்றார்கள். நான் போய் கூறியவுடன் ஒன்றுக்கொன்று தூரமாக இருந்த அந்த இரு மரங்களும் ஒன்று சேர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகே வந்து மறைத்துக் கொண்டன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறுநீர் கழித்தவுடன் அவ்விரு மரங்களும் பிரிந்து சென்று அதனதன் இடத்தில் போய் நின்று கொண்டன. நபியவர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதில் மரங்களும் பங்கு வகிக்கின்றன என்றால் அவைளுக்கும் அவர்கள் அருட்கொடை..            
தொப்பி, தலைப்பாகை அணிவதும் சுன்னத்
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ(بخاري)
قَالَ رُكَانَةُ وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فَرْقُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ الْعَمَائِمُ عَلَى الْقَلَانِسِ(ابوداود)
நமக்கும் இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் வித்தியாசம் தொப்பி அணிந்து தலைப்பாகை அணிவதாகும்
عن عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ عَمَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَدَلَهَا بَيْنَ يَدَيَّ وَمِنْ خَلْفِي(ابوداود)
عَنْ أَبِي يَزِيدَ الْخَوْلَانِيِّ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الشُّهَدَاءُ أَرْبَعَةٌ رَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الْإِيمَانِ لَقِيَ الْعَدُوَّ فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ فَذَلِكَ الَّذِي يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ أَعْيُنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ هَكَذَا وَرَفَعَ رَأْسَهُ حَتَّى وَقَعَتْ قَلَنْسُوَتُهُ قَالَ (الراوي)فَمَا أَدْرِي أَقَلَنْسُوَةَ عُمَرَ أَرَادَ أَمْ قَلَنْسُوَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ...(بخاري)
ஷுஹதாக்கள் நான்கு சாரார். அவர்களில் முதலாவது வகை. புதிதாக ஈமான் கொண்ட சிறந்த மனிதர். அவர் போர்க்களத்தில் எதிரியை சந்தித்தார். அப்போதே ஷஹீதாக்கப்பட்டார். அவரது அந்தஸ்து மிகவும் உயர்ந்தது அவரை மற்ற மக்கள் தங்களின் தலையை உயர்த்தி அன்னாந்து பார்ப்பார்கள் என்று கூறியவர்களாக தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி விழுந்தது 
தலையை உயர்த்திக் காட்டினார்கள் என்றால் நபி ஸல் அவர்கள் தலையை உயர்த்திக் காட்டும்போது தொப்பி விழுந்த தா அல்லது அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவிக்கும் உமர் ரழி அவர்களின் தலையை உயர்த்திக் காட்டும்போது தொப்பி விழுந்ததா என்பதில் அறிவிப்பாளர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது.ஆக மொத்தம் யாரேனும் ஒருவர் தொப்பி அணிந்தார்கள் என்பது உறுதியான விஷயம்

யாருக்கு என்ன ரிஜ்க்,


யாருக்கு என்ன ரிஜ்க் (இரணம்) விதிக்கப்பட்டதோ நிச்சயம் வந்தடையும்
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ (6) هود
சில பாவங்களால் ரிஜ்க் தடைபடும். அதுவும் அல்லாஹ்வின் விதியாகும்
ரிஜ்க் வந்தடைதல் என்பது இரண்டு வகை- 1.சில உயிர்களுக்கு அல்லாஹ் ரிஜ்கை வைத்திருப்பான். ஆனால் தேடிச் செல்வதால் அது கிடைக்கும். அதற்கு உதாரணம்
عَنْ أَبِي تَمِيمٍ الْجَيْشَانِيِّ قَالَ سَمِعْتُ عُمَرَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَوْ أَنَّكُمْ تَوَكَّلْتُمْ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرَزَقَكُمْ كَمَا يَرْزُقُ الطَّيْرَ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا (ابن ماجة
நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தால் பறவைக்கு அல்லாஹ் ரிஜ்க் வழங்குவது போல் உங்களுக்கும் வழங்குவான். அது வயிறு ஒட்டிப் போன நிலையில் காலையில் செல்கிறது. மாலையில் கூடு திரும்பும்போது வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகிறது.                   
படிப்பினை- தேடிச் செல்வதால் உணவு நிச்சயம் கிடைக்கும்.
உழைக்கும் சக்தி இருந்தும் உணவைத் தேடிச் செல்லாதவருக்கு ரிஜ்க் தடையாகும் என்பதோடு அத்தகையவரை அல்லாஹ் சபிக்கிறான்.
عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِيِّ رضي الله عنه  قَالَ وَأَهْلُ الْجَنَّةِ ثَلَاثَةٌ ذُو سُلْطَانٍ مُقْسِطٌ مُتَصَدِّقٌ مُوَفَّقٌ وَرَجُلٌ رَحِيمٌ رَقِيقُ الْقَلْبِ لِكُلِّ ذِي قُرْبَى وَمُسْلِمٍ وَعَفِيفٌ مُتَعَفِّفٌ ذُو عِيَالٍ قَالَ وَأَهْلُ النَّارِ خَمْسَةٌ الضَّعِيفُ الَّذِي لَا زَبْرَ لَهُ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعًا لَا يَبْتَغُونَ أَهْلًا وَلَا مَالًا وَالْخَائِنُ الَّذِي لَا يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دَقَّ إِلَّا خَانَهُ وَرَجُلٌ لَا يُصْبِحُ وَلَا يُمْسِي إِلَّا وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ وَذَكَرَ الْبُخْلَ أَوْ الْكَذِبَ وَالشِّنْظِيرُ الْفَحَّاشُ (مسلم) بَاب الصِّفَاتِ الَّتِي يُعْرَفُ بِهَا فِي الدُّنْيَا أَهْلُ الْجَنَّةِ وَأَهْلُ النَّارِ- كِتَاب الْجَنَّةِ وَصِفَةِ نَعِيمِهَا وَأَهْلِهَا
ஐந்து விதமான நபர்கள் நரகவாதிகள் 1, புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனமானவர். (சோம்பேறி) இவருக்கென சுய சம்பாத்தியம் இல்லாமல் எப்போதும் உங்களைப் பின் தொடர்வார். இப்படிப்பட்டவர்கள் (செலவுக்கு அஞ்சி) திருமணம் செய்யவும் மாட்டார்கள். சம்பாதிக்கும் வழியையும் தேட மாட்டார்கள். 2, எந்த ஆசையையும் விட்டு வைக்காத மோசடிக்காரன்- (இவன் அடுத்தவர்களை ஏமாற்றியே தனது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வான்.) அற்பமான பொருளாக இருந்தாலும் இவன் அடுத்தவர்களை ஏமாற்றித் தான் அதை அடைவான் 3, (கூடவே இருந்து குழி பறிக்கும்) துரோகி- இவன் காலையிலும், மாலையிலும் (எந்த நேரமும்) உன்னுடைய பொருள் விஷயத்திலும், உன் வீட்டார் விஷயத்திலும் உனக்கு துரோகம் செய்வான். 4,கஞ்சன் அல்லது பொய்யன் 5,அசிங்கமான வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமற்றவன் நூல்- முஸ்லிம்               
 மேற்படி ஹதீஸ் உழைக்காமல் ஊர் சுற்றும் ஊதாரிகளுக்கு பெரும் எச்சரிக்கையாகும். ஒரு காலத்தில் பொருளாதாரத்திலும் இன்ன பிற துறைகளிலும் முதலிடத்தில் இருந்த முஸ்லிம் சமூகம் இன்று பல வகையிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவீதம் பேர் வறுமையில் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது. பல நகரங்களில் தலித்துகளின் வருமானத்தை விட முஸ்லிம்களின் வருமானம் குறைவாக உள்ளது. பல ஊர்களில் சொந்த வீட்டில் வசித்த முஸ்லிம்கள் அந்த வீடுகளை மாற்றார்களுக்கு விற்று விட்டு வாடகை வீட்டில் வசிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.          
2. சில உயிர்களுக்கு அல்லாஹ் ரிஜ்கை வைத்திருப்பான். ஆனால் தேடிச் செல்வதற்கு அவைகளால் முடியாது. அதனால் இருந்த இடத்திலேயே அவைகளுக்கு அது கிடைக்கும். அதற்கு உதாரணம்
ان سليمان عليه السلام كان جالسا علي شاطئ بحر فبصر بنملة تحمل حبة قمح تذهب بها نحو البحر فجعل سليمان عليه السلام ينظر اليها  حتي بلغت الماء...... .....   (الدرر السنية
நபி சுலைமான் அலை அவர்கள் ஒரு தடவை கடற்கரை ஓரம் நடந்து சென்ற போது ஒரு எறும்பு ஒரேயொரு தானியத்தை சுமந்த படி வேகமாகச் செல்வதை கவனித்தார்கள். அது தண்ணீருக்குள் அருகில் சென்றவுடன் அங்கே ஒரு தவளை தயாராக இருந்தது. அது வாயைத் திறந்தவுடன் இந்த எறும்பு அதன் வாய்க்குள் சென்று அந்த தானியத்துடன் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டது. உடனே அந்த தவளை தண்ணீருக்குள் பாய்ந்த து. நீண்ட நேரம் கழித்து அந்த தவளை மேலே வந்த து. அதன் வாயைத் திறந்தவுடன் அந்த எறும்பு வெளியே வந்த து. இப்போது அந்த தானியம் அதன் வாயில் இல்லை. இதைக் கண்ட சுலைமான் அலை என்ன நடக்கிறது இங்கே என ஆச்சரியப்பட்டார்கள். அந்த எறும்பிடமே விஷயத்தைக் கேட்டார்கள் அப்போது அந்த எறும்பு சொன்னது. கடலுக்குள் ஒரு பாறைக்குள் ஒரு பார்வையில்லாத புழு இருக்கிறது. அந்தப் புழுவின் ரிஜ்குக்காக அல்லாஹ் எங்களை  நியமித்துள்ளான். நான் அதற்கான இரையை சுமந்து செல்வேன். தவளையின் பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்வேன். அந்தப் பாறையை அடைந்தாலும் அதன் உட்பகுதிக்குள் அந்த தவளையால் செல்ல முடியாது எனவே அந்த பாறையை அடைந்தவுடன் தவளை தன் வாயால் அந்த துவாரத்தை தண்ணீர் செல்லாத படி அடைத்துக் கொள்ளும் நான் உள்ளே சென்று அந்த உணவை வைத்து விட்டு வருவேன். பிறகு என்னைக் கொண்டு வந்து அந்த தவளை பாதுகாப்பாக கரையில் விட்டு விடும் என்று எறும்பு கூறியது. உடனே சுலைமான் அலை அவர்கள் அந்தப் புழு அதற்கு நன்றி செலுத்துகிறதா என்று கேட்க, அதற்கு அந்த எறும்பு ஆம் ஒவ்வொரு முறையும் அது பின்வருமாறு தஸ்பீஹ் செய்கிறது                             
يا من تنساني في جوف هذه الصخرة تحت هذه  اللجة برزقك  - لا تنس عبادك المؤمنين  برحمتك
 இந்த ஆழ்கடலுக்குள் இருக்கும் மறக்காமல் எனக்கு உணவு கொடுக்கும் இறைவா உன் அடியார்களை நீ மறந்து விடாதே என்று கூறும் என்பதாக அந்த எறும்பு செய்தி அறிவித்தது
அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் இறைநேசர்களை அல்லாஹ் மற்ற ஜீவராசிகளைக் கொண்டு பாதுகாப்பான்
 عن إبراهيم بن أدهم أنه قال كنت ضيفاً لبعض القوم فقُدِّم المائدة فنزل غراب وسلب رغيفاً فاتبعته تعجباً فنزل في بعض التلال3 وإذا هو برجل مقيد مشدود اليدين فألقى الغراب ذلك الرغيف على وجهه  وعن ذي النون أنه قال:كنت في البيت إذ وقعت ولولة في قلبي وصرت بحيث ما ملكتُ نفسي فخرجتُ من البيت وانتهيت إلى شط النيل فرأيت عقرباً قوياً يعدو فتبعته فوصل إلى طرف النيل4 فرأيت ضفدعاً5 واقفاً على طرف الوادي فوثب العقرب6 على ظهر الضفدع وأخذ الضفدع يسبح7 ويذهب فركبتُ السفينة وتبعتُه فوصل الضفدع إلى الطرف الآخر من النيل ونزل العقرب من ظهره وأخذ يعدو8 فتبعته  فرأيت شاباً نائماً تحت شجرة  ورأيت أفعى9 يقصده فلما قربت الأفعى من ذلك الشاب وصل العقرب إلى الأفعى فوثب العقرب على الأفعى فلدغه والأفعى أيضاً لدغ العقرب فماتا معاً وسلم ذلك الإنسان منهما  (تفسير الرازي
சுருக்கம்- துன்னூனுல் மிஸ் ரீ ரஹ் கூறுகிறார்கள் நான் ஒரு நாள் வீட்டில் இருந்தபோது என் மனம் ஒரு நிலையில் இல்லாமல் எதையோ தேடி புறப்பட நாடியது. நான் வீட்டிலிருந்து புறப்பட்டு நைல் நதி ஓரம் நடந்து சென்றேன். அப்போது ஒரு பெரிய தேள் மிக வேகமாக ஊர்ந்து செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டு அதனைப் பின் தொடர்ந்து சென்றேன். நீரின் அருகே தேள் சென்றவுடன் அங்கே ஒரு தவளை காத்திருந்தது அதன் முகுகின் மீது இந்தத் தேள் ஏறிக் கொண்டது. அதனை தன் முதுகில் சுமந்தவாறு  அந்த தவளை நீரில் பாய்ந்தது நானும் பின் தொடர்ந்து சென்றேன் நதியின் மற்றொரு கரையை அடைந்ததும் அந்தத் தேள் தவளையில் முதுகில் இருந்து இறங்கி பாய்ந்து ஓடியது. அங்கே கண்ட காட்சி என்னை மெய் சிலிர்க்க வைத்தது அங்கு ஒரு நல்லடியார் உறங்கிக் கொண்டிருக்கிறார் அவரைத் தீண்டுவதற்காக ஒரு கருநாகம் அருகில் வருகிறது அந்தப் பாம்பை அவரருகில் நெருங்க விடாமல் இந்தத் தேள் ஓடி வந்து அதைத் தடுக்கிறது இரண்டும் சண்டை போடுகின்றன. தேள் தன் கொடுக்குகளால் கருநாகத்தை முடிந்த வரை காயப்படுத்த கடைசியில் இரண்டும் இறந்தன. அந்த நல்லடியார் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார் -தஃப்ஸீர் ராஜீ                                                    
ரிஜ்க் விஷயத்தில் ஜீவராசிகளின் பிரார்த்தனையை அல்லாஹ் உடனே ஏற்பான்
عَنْ زَيْد الْعَمِّيّ عَنْ أَبِي الصِّدِّيق النَّاجِيّ قَالَ خَرَجَ سُلَيْمَان بْن دَاوُد عَلَيْهِمَا السَّلَام يَسْتَسْقِي فَإِذَا هُوَ بِنَمْلَةٍ مُسْتَلْقِيَة عَلَى ظَهْرهَا رَافِعَة قَوَائِمهَا إِلَى السَّمَاء وَهِيَ تَقُول : اللَّهُمَّ إِنَّا خَلْق مِنْ خَلْقك وَلَا غِنَى بِنَا عَنْ سُقْيَاك وَإِلَّا تَسْقِنَا تُهْلِكنَا فَقَالَ سُلَيْمَان اِرْجِعُوا فَقَدْ سُقِيتُمْ بِدَعْوَةِ غَيْركُمْ (تفسير ابن أبي حاتم) (تفسير ابن كثير) 
மல்லாந்து படுத்துக் கொண்டு அந்த எறும்பு துஆ கேட்டதைக் கண்டு நபி சுலைமான் அலை வாருங்கள் நாம் திரும்பிச் செல்வோம் இன்னொரு படைப்பின் துஆவினால் நமக்கும் நிச்சயம் மழை பெய்யும் என்றார்கள்         
மனிதர்களிலும் ஒழுக்கமுள்ளவர்கள் ரிஜ்க் விஷயத்தில் செய்த துஆ ஏற்கப்பட்டுள்ளது.
மெளலானா ஷைகு அப்துல் ஹக் திஹ்லவீ ரஹ் அவர்கள் தங்களுடைய கிதாபில் எழுதுகிறார்கள். ஒரு காலத்தில் புது டெல்லியில் கடுமையான பஞ்சம். மழை இல்லை. அங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மழைத் தொழுகைக்கு ஏற்பாடு செய்கிறார்கள். வயதான முதியவர்கள், குழந்தைகள், கால்நடைகள் அங்கே அழைத்து வரப்பட்டதுடன் தங்களின் வறுமையை அல்லாஹ்விடம் முறையிட காலிப் பாத்திரங்களுடன்  வருகிறார்கள். அனைவரும் சேர்ந்து நீண்ட நேரம் இஸ்திஃபார் செய்து மழைத் தொழுகை நடத்தினர். மழைக்கான அறிகுறி தென்படவில்லை. அப்போது அந்த வழியாக ஒரு வாலிபன் தன் தாயாரை குதிரையில் ஏற்றிக் கொண்டு வந்தான். குதிரையின் மேலிருந்த திரைச் சீலைக்குள் தாயார் இருக்கிறார். அவன் குதிரையில் இருந்து கீழே இறங்கி இங்கே என்ன நடக்கிறது. என்று கேட்டான். மழைக்காக துஆச் செய்தோம். இன்னும் மழை வரவில்லை என்றபோது நான் வேண்டுமானால் அல்லாஹ்விடம் துஆச் செய்யட்டுமா என்று கேட்டு விட்டு தன் தாயாரைச் சுற்றியிருந்த திரையை இலேசாக விலக்கி அவரின் முந்தானையை கையில் பிடித்தபடி திரைக்குள் இருந்த படி துஆச் செய்ய உடனே மழை பெய்தது. அனைவரும் ஆச்சரியமடைந்து அந்த இளைஞனை சூழ்ந்து கொண்டு அப்படி என்ன நீ துஆ செய்தாய் என்று கேட்க, அதற்கு அந்த இளைஞன் நான் பெரிதாக ஒன்றும் கேட்டு விடவில்லை.            
தேவைக்கு மேல் சேர்த்து வைப்பதால் ரிஜ்கில் பற்றாக்குறை ஏற்படும்
திருடன் என்பவன் யார் என்று ஒரு கவிஞரிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர் “தேவைக்கு மேலே சேர்த்து வைப்பவனே திருடன். ஏனென்றால் இறைவன் எல்லோருக்கும் படைத்ததிலிருந்து இவன் திருடுகிறான் என்று கூறினார்.                      
சோம்பேறித்தனத்தால் பற்றாக்குறை ஏற்படும். 
உதாரணம் ஐந்து பேர் நரகவாதிகள் என மேற்சொன்ன ஹதீஸ்
ஒரு முஃமின் சோம்பேறியாக இருக்க மாட்டார்
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தபொழுது வெறுங்கையுடன் தான் சென்றார்கள். எவ்வித பொருளாதாரமும் அவர்களிடம் இல்லை. இந்நிலையில், சஅத்பின்ரபீஆ(ரழி) அவர்களுடன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களை சகோதரராக நபி (ஸல்) அவர்கள் இணைத்து வைத்தார்கள். சஅத் (ரழி) அவர்கள் அவருக்காக எவ்வளவோ உதவிகள் செய்ய தயாராக இருந்தார்கள். ஆனால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழி அவர்களோ அதை ஏற்காமல் சஃதே! அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பானாக! உங்களது செல்வங்கள் உங்களிடமே இருக்கட்டும். முதலில் எனக்கு கடைவீதியை காட்டுங்கள். எனது ரிஜ்கை நானே தேடிக் கொள்கின்றேன். உங்களுக்கு பாரமாக நான் இருக்க விரும்பவில்லை என்றார்கள்.               
அதன் படி அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள், தனது வியாபாரத்தை அங்கு தொடங்கினார்கள். அல்லாஹ் அவரது வியாபாரத்தில் அருட்கொடைகளைச் சொறிய ஆரம்பித்தான்.அவர் கனவிலும் நினைத்திராத அளவுக்கு அவரது செல்வ வளங்கள் அதிகரித்தன. அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் ஒரு கல்லைத் தொட்டாலும் அது தங்கமாக மாறி விடும் என்று சொல்லுமளவுக்கு அவர் ஆரம்பித்த அத்தனை வியாபாரங்களிலும் இறைவன் தனது அருள் மழையைப் பொழிந்தான்.  இவ்வளவு சொத்துக்களையும் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் தனது சம்பாத்தியத்தின் மூலமாகவே ஈட்டிக் கொண்டார். மேலும்,அவற்றில் இருந்து வரக் கூடிய வருமானத்தை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவர் செலவிடுவதற்காக என்றுமே தயங்கியதில்லை.                                
வீண் விரயம் செய்வதால் பற்றாக்குறை வரும்.
உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள் என்பது இறைவனின் சொல்.அடுத்தவர் கை பட்ட உணவு தீட்டுப்பட்ட உணவு என்று வாழை இலையில் எவ்வளவு உணவுகள் மிச்சமிருந்தாலும் கழிவுகள் ஓடும் கால்வாயில் கொட்டுகிறார்கள். இங்கிலாந்தில் மக்கள் தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கை வீணாக்குகிறார்களாம். புனிதமான நோன்பு மாதத்தில் கூட எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளில் எவ்வளவோ உணவுப் பொருட்கள் இறைவனின் கட்டளைக்கு முற்றிலும் விரோதமாக வீணாக்கப் படுகின்றன. ஏழைகள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் வருடத்துக்கு 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணாக்கப் படுகின்றன என்று புள்ளி விவரம் சொல்கிறது. இப்படி வளரும் மற்றும் வளர்ந்து விட்ட நாடுகளில் வாழும் நிறையப்பேருக்கு உலகின் மற்ற பகுதிகளில் எவ்வளவு வறுமை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நேரமும் இல்லை. ஆர்வமும் இல்லை தன்னுடைய வயிறு நிரம்பினால் சரி என்ற மனப்பான்மை வளர்ந்து கொண்டிருக்கிறது. 
இன்னொரு முக்கியக் காரணம் உலக வர்த்தக அமைப்பின் WORLD TRADE ORGANIZATION கொள்கைகளின்படி சில நாடுகள் சில உணவுப் பொருட்களை மற்ற நாடுகளிலிருந்து தங்களுக்கு தேவை இல்லாவிட்டாலும் இறக்குமதி செய்ய வேண்டுமாம். இதன்படி ஜப்பான் நிறைய அரிசியை இறக்குமதி செய்து வைத்திருக்கிறதாம். ஆனால் அதை உபயோகிப்பவர்கள் இல்லையாம். அந்த அரிசி அப்படியே கிடங்குகளில் கிடந்து மக்கிய பிறகு அதைக் கால்நடைகளுக்குக் கொடுக்கிறார்களாம்.  இதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உலக வர்த்தக அமைப்பின் அனுமதி தேவையாம். இப்படி ஒரு கொடுமை. இஸ்லாத்தை அலட்சியப்படுத்தும் அமெரிக்காவின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் உலக வர்த்தக அமைப்பு இயங்கும் இலட்சணம் இது. தொழில் நுட்பத்திலும் மற்ற துறைகளிலும் எத்தனையோ சாதனைகள் புரிந்து வரும் மனித இனம் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் சிலர் உணவில்லாமல் உயிரிழக்கிறார்கள் என்பதை உணர்ந்து தலை குனிய வேண்டும். அதை முழுவதும் ஒழிக்க பாடுபட வேண்டும்.

அவசரப்படுவது மனிதனின் ஆதி காலத்து குணம்,

அவசரப்படுவது மனிதனின் ஆதி காலத்து குணம்

خُلِقَ الْإِنْسَانُ مِنْ عَجَلٍ  (37) الانبياء
-----------_
وعن السدي لما نفخ فيه الروح فدخل في رأسه عطس ، فقالت له الملائكة : قل الحمد لله ، فقال ذلك : فقال الله له : يرحمك ربك. فلما دخل الروح في عينيه نظر إلى ثمار الجنة ، ولما دخل الروح في جوفه اشتهى الطعام ، فوثب قبل أن تبلغ الروح رجليه إلى ثمار الجنة. وهذا هو الذي أورث أولاده العجلة.  (الرازي
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து ரூஹ் ஊதப்படும் போது மேலிருந்து துவங்கப்பட்டது. ரூஹ் தலையை அடைந்தவுடன் தும்மினார்கள். அப்போது அல்ஹம்து லில்லாஹ் சொல்லும்படி கற்றுத் தரப்பட்டது அவ்வாறே அல்ஹம்து லில்லாஹ் சொன்னார்கள். உடனே அல்லாஹ் பதிலுக்கு  யர்ஹமுக ரப்புக என்றான். அன்று முதல் இன்று வரை நடைமுறை உள்ளது. பின்பு  ரூஹ் ஊதப்பட்டது. ரூஹ் கண்ணை  அடைந்தவுடன் தன் கண்களால் சுவனத்துக் கனிகளைக் கண்டார்கள். பின்பு ரூஹ் வயிற்றை  அடைந்தவுடன் அந்தப் பழங்களை உண்ணும் ஆசை ஏற்பட்டது. ரூஹ் கால் வரை சென்று அடையும் முன்பே உடனே எழ ஆசைப்பட்டார்கள். அப்போதிருந்து அவசரப்படும் குணம் மனிதனுக்கு உருவாகி விட்டது.        
சில காரியங்களில் அவசரப்படுவது அவசியம். சில காரியங்களில் நிதானம் அவசியம்.
துன்யாவுடைய காரியங்களில் நிதானம் அவசியம். 
ஒரு தொழில் தொடங்க வேண்டுமானால் ஒரு திருமணம் நடத்த வேண்டுமானால் அதற்கு மாப்பிள்ளை அல்லது மணப்பெண் பார்க்க வேண்டுமானால் நிதானம் மிக அவசியம். 
எந்தக் காரியத்திலும் அதன் பின் விளைவுகளைப் பற்றி நன்கு சிந்தித்து அக்காரியத்தில் இறங்க வேண்டும்
துன்யாவின் காரியங்களில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமும், நடுநிலையும் மிகச் சிறந்தது
عَنْ أَنَسٍ ، أَنَّ رَجُلا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَوْصِنِي ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : خُذِ الأَمْرَ بِالتَّدْبِيرِ ، فَإِنْ رَأَيْتَ فِي عَاقِبَتِهِ خَيْرًا ، فَأَمْضِهِ ، وَإِنْ خِفْتَ غَيًّا ، فَأَمْسِكْ "(شرح السنة- مشكاة- باب الحذر والتأني- باب السلام
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் எந்த ஒரு உலக காரியத்தையும் திட்டமிட்டு, யோசித்துச் செய்யுங்கள். அதன் பின் விளைவு நல்லதாக இருந்தால் அதைச் செயல்படுத்துங்கள். அதன் பின் விளைவு கெட்டதாக இருந்தால் அதைச் செய்யாமல் விட்டு விடுங்கள்.  
قال النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذا أردت أن تفعل أمرا فتدبر عاقبته فإن كان خيرا فأمضه و إن كان شرا فانته (فيض القدير)  فتدبر عاقبته) بأن تتفكر وتتأمل ما يصلحه ويفسده وتدقق النظر في عواقبه مع الاستخارة ومشاروة ذوي العقول فالهجوم على الأمور من غير نظر في العواقب موقع في المعاطب فلذا قيل : ومن ترك العواقب مهملات
عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ  عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التُّؤَدَةُ فِي كُلِّ شَيْءٍ إِلَّا فِي عَمَلِ الْآخِرَةِ (ابوداود) بَاب فِي الرِّفْقِ- كِتَاب الْأَدَبِ
ஒவ்வொரு விஷயத்திலும் நிதானம் நல்லது மறுமையின் காரியங்களில் தவிர.. அதாவது மறுமை சம்பந்தப்பட்ட ஒரு உபரியான அமலை செய்ய நினைத்தால் உடனே செய்ய வேண்டும். யோசித்துக் கொண்டிருப்பது கூடாது 
عن الزهري عن رجل من بَلِىٍّ قال  أتيت رسول الله صلى الله عليه وسلم مع أبي فنَاجى أبي دُوني قال فقلتُ لأبي ما قال لك قال إذا أردتَ أمرا فعليك بالتؤدة حتى يُريَك الله منه المخرج أو حتى يجعل الله لك مخرجا رواه البخاري في الأدب المفرد
என் தந்தையுடன் நபி ஸல் அவர்கள் ரகசியம் பேசினார்கள். நான் என் தந்தையிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்ட போது ஒரு காரியத்தைச் செய்ய நாடினால் அதில் அல்லாஹ் உனக்கு ஏதேனும் வழியை ஏற்படுத்தும் வரை நிதானத்தை கடை பிடித்துக் கொள்ளுங்கள் என நபி ஸல் கூறியதாக என் தந்தை கூறினார்கள்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ الْمُزَنِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ وَالِاقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنْ النُّبُوَّةِ (ترمذي)
அழகிய மவுனமும் உலக காரியங்களில் நிதானமும் நடுநிலையும் நுபுவ்வத்தின் 24 பங்குகளில் ஒன்றாகும். 
விளக்கம்- நுபுவ்வத் என்பது பல பாகங்களாகப் பிரிவது கிடையாது. இருப்பினும் மேற்காணும் தன்மைகள் நபிமார்களின் தன்மைகளைப் போன்றதாகும். நூல் மிர்காத் நபிமார்கள் யோசித்தே முடிவெடுப்பார்கள்.  
நிதானம் அல்லாஹ்வைச் சார்ந்தது. அவசரம் ஷைத்தானைச் சார்ந்தது
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : الأَنَاةُ مِنَ اللَّهِ وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ (ترمذي)  عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَشَجِّ عَبْدِ الْقَيْسِ إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ الْحِلْمُ وَالْأَنَاةُ (ترمذي) بَاب مَا جَاءَ فِي التَّأَنِّي وَالْعَجَلَةِ-بَاب مَا جَاءَ فِي بِرِّ الْوَالِدَيْنِ
துன்யாவின் ஒரு காரியத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல்,அவசரப்பட்டுச் செய்தால் அக்காரியம் கெட்டு விடும்
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم : إِذَا تَأَنَّيْتَ. وَفِى رِوَايَةِ الْمُعَاذِىِّ وَالشُّعَيْبِىِّ وَالْهَرَوِىِّ :« إِذَا تَبَيَّنْتَ أَصَبْتَ أَوْ كِدْتَ تُصِيبُ وَإِذَا اسْتَعْجَلْتَ أَخْطَأْتَ أَوْ كِدْتَ تُخْطِئُ ».(سنن الكبري)
நன்கு யோசித்து அதைச் செய்ய முடிவெடுத்தாலும் அதற்காக இஸ்திகாரா தொழுவது சுன்னத். ஏதேனும் முக்கியமான (உலக) காரியத்தை தொடங்கும் முன்போ அல்லது அதை தொடங்குவதில் குழப்பம் ஏற்படும்போதோ நல்ல முறையில் உளூச் செய்து, மன ஓர்மையுடன் இஸ்திகாரா தொழுகை இரண்டு ரக்அத் தொழுது பின்வரும் துஆவை ஓதினால் 
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الْأُمُورِ كُلِّهَا كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنْ الْقُرْآنِ يَقُولُ إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالْأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي قَالَ وَيُسَمِّي حَاجَتَهُ. (بخاري) باب الدُّعَاءِ عِنْدَ الاِسْتِخَارَةِ .- الدعوات
பொருள்- யாஅல்லாஹ் உன்னுடைய ஞானத்தின் பொருட்டால் நான் தொடங்கும் இக்காரியத்தில் நலம் உண்டாகுவதை உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய ஆற்றலின் பொருட்டால் இக்காரியத்தை நான் துணிவுடன் செய்வதையும் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அருளையும் நான் வேண்டுகிறேன். என்னிடம் எவ்வித ஆற்றலும் இல்லை. நீ தான் ஆற்றல் உடையவன். (எந்தக் காரியத்திலும் அதன் பின் விளைவு பற்றி) நான் எதையும் அறியாதவன். நீ அனைத்தையும் அறிந்தவன். நீ மறைவானவைகளை அறியும் ஞானமுள்ளவன். ஆகவே (நான் தொடங்கும்  அல்லது நான் செல்லும்)இக்காரியம்  என் இம்மைக்கும், மறுமைக்கும், என் இறுதி முடிவுக்கும் நன்மையாக அமையும் என்று நீ அறிந்தால் இதை செய்வதற்குரிய ஆற்றலை எனக்கு தருவாயாக ! இதை எனக்கு எளிதாக்குவாயாக! இதில் எனக்கு பரக்கத்தையும் தருவாயாக ! அதற்கு மாறாக  (நான் தொடங்கும்  அல்லது நான் செல்லும்) இக்காரியம்  என்னுடைய இம்மைக்கும், மறுமைக்கும், என் இறுதி முடிவுக்கும் தீமையாக அமையும் என்று நீ அறிந்தால் இக்காரியத்தையும் விட்டும் என்னையும் திருப்புவாயாக ! என்னை விட்டு இக்காரியமும் திரும்பிச் செல்ல வைப்பாயாக ! இதை விட நன்மை எங்கே, எதில் இருக்குமோ அதை எனக்கு ஏற்படுத்துவாயாக ! அதை எனக்கு பிடித்தமானதாகவும் ஆக்கி வைப்பாயாக !  நூல்- புஹாரீ-5382
துன்யாவின் எத்தனையோ காரியங்களில் சின்னச் சின்ன விஷயங்களில் கூட ரெண்டுங்கெட்டான் நிலையில் இருக்கக்கூடாது என கற்றுத் தரப்பட்டுள்ளது உதாரணம்..... பாதி நிழலிலும், பாதி வெயிலிலும் உட்காரக் கூடாது 
عن أَبي هُرَيْرَةَ يَقُولُ قَالَ رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الشَّمْسِ فَقَلَصَ عَنْهُ الظِّلُّ وَصَارَ بَعْضُهُ فِي الشَّمْسِ وَبَعْضُهُ فِي الظِّلِّ فَلْيَقُمْ (ابوداود) بَاب فِي الْجُلُوسِ بَيْنَ الظِّلِّ وَالشَّمْسِ- كِتَاب الْأَدَبِ
உங்களில் ஒருவர் வெயிலில் அமர்ந்திருக்கும்போது வெயில் அந்த இடத்தை விட்டும் நீங்கி நிழல் வந்து விட்டால் பாதி வெயிலிலும் பாதி நிழலிலும் அவர் அமர வேண்டாம். அந்த இடத்தை விட்டும் எழுந்து விடட்டும்.
செருப்பணிந்தால் இரண்டு காலிலும் அணிவது அல்லது இரண்டையும் கழட்டி விடுவது. ஒரு காலில் மட்டும் அணியக்கூடாது
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَمْشِي أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ لِيُحْفِهِمَا جَمِيعًا أَوْ لِيُنْعِلْهُمَا جَمِيعًا (بخاري) - اللباس
பாதி மொட்டை பாதி முடி – இதுவும் கூடாது
عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْقَزَعِ (بخاري) باب الْقَزَعِ- كتاب اللباس- القزع : هو أن يحلق رأس الصبى فيترك بعض شعره
மறுமையின் நன்மையான காரியத்தைச் செய்வதற்கு யோசிக்கக்கூடாது.
عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ فَلَمَّا سَلَّمَ قَامَ سَرِيعًا دَخَلَ عَلَى بَعْضِ نِسَائِهِ ثُمَّ خَرَجَ وَرَأَى مَا فِي وُجُوهِ الْقَوْمِ مِنْ تَعَجُّبِهِمْ لِسُرْعَتِهِ فَقَالَ ذَكَرْتُ وَأَنَا فِي الصَّلَاةِ تِبْرًا4 عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يُمْسِيَ أَوْ يَبِيتَ عِنْدَنَا فَأَمَرْتُ بِقِسْمَتِهِ (بخاري) وَقَالَ عُمَرُ رضى الله عنه إِنِّى لأُجَهِّزُ جَيْشِى وَأَنَا فِى الصَّلاَةِ (بخاري) باب تَفَكُّرِ الرَّجُلِ الشَّىْءَ فِى الصَّلاَةِ-كتاب العمل في الصلاة
அசர் தொழுது முடித்து சலாம் கொடுத்தவுடன் வேகமாக நபி ஸல் அவர்கள் தன் மனைவிமார்களில் ஒருவரின் வீட்டுக்கு விரைந்து சென்றார்கள். பிறகு திரும்பி வந்தார்கள், அவர்களின் இந்த விரைவுக்கு காரணம் தெரியாமல் தோழர்கள் விழித்த போது நான் எங்களிடம் இருந்த ஒரு தங்க கட்டியை உரியவருக்குக் கொடுத்த எண்ணியிருந்தேன் அது இப்போது தான் நினைவுக்கு வந்தது. அது மாலை வரை அல்லது இரவு வரை என் வீட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை அதனால் அதை உரியவர்களுக்குப் பங்கிட்டுத் தரும்படி என் வீட்டாரிடம் சொல்லி விட்டு வந்தேன் என்றார்கள்.                               
இமாம் அபூஹனீஃபா ரஹ் அவர்களிடம் சிலர் வருகை தந்து மஸ்ஜிதுக்காக அன்பளிப்புக் கேட்டபோது யோசிக்காமல் உடனே இடது கை அருகில் இருந்த ஒரு பண முடிப்பை எடுத்து அப்படியே தந்து விட்டார்கள். வந்தவர்களுக்கு ஒருபுறம் சந்தோஷம் என்றாலும் இடது கையால் எடுத்துக் கொடுத்ததில் கவலையும் இருந்தது. அதற்கு இமாம் அபூஹனீஃபா ரஹ் விளக்கம் கூறினார்கள். என்னுடைய இடது கையில் இருந்து வலது கைக்கு மாறுவதற்குள் என்னுடைய மனம் மாறி விட்டால் என்ன செய்வது அதனால் தான் இடது கையால் தந்தேன் என்றார்கள். 
மறுமையின் நன்மையான காரியத்தை துவங்குவதில் அவசரம் வேண்டும். ஆனால் அதைச் செய்ய ஆரம்பித்த பின்பு நிதானம் வேண்டும் . தொழுகையை நிதானமாக தொழுவதைப் போல... 
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ وَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ ثَلَاثًا فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي فَقَالَ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنْ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا وَافْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا  (بخاري

மறுமை நாளின் அடையாளம்,


 ‘தாப்பதுல் அர்ள்’ 
மறுமை நாளின் கடைசி பத்து அடையாளங்களில் ஒன்று  ‘தாப்பதுல் அர்ள்’  அல்குர்ஆனும், நபிமொழியும் இதற்கு இப்பெயரையே கூறுகின்றன. அதன் நேரடி மொழிபெயர்ப்பு ‘பூமியின் மிருகம்’ என்பதாகும்.
 وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ (82) النمل
“தண்டனை நிகழும் என்ற வார்த்தை அவர்கள் மீது உறுதியாகி விடும்போது நாம் பூமியிலிருந்து ஒரு மிருகத்தை வெளியாக்கி விடுவோம். மக்கள் எமது அத்தாட்சிகளை உறுதியாக நம்பிக்கை கொண்டோராயிருக்கவில்லை என்று அவர்களுக்கு அது சொல்லும்.” (ஸூரா நம்ல் : 82)
தாப்பதுல் அர்ழ் என்றவார்த்தை குர்ஆனில் மற்றொரு இடத்தில் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சம்பவத்தில் கரையான் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப் படுகிறது
فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض } الأرضة { تأكل منسأته } عصاه  }سبأ 12 - 14 /
கியாமத்தின் கடைசி பத்து பெரிய அடையாளங்களில் ஒன்று தாப்பத்துல் அர்ழ் 
حُذَيْفَة بْن أُسَيْد الْغِفَارِيّ رَضِيَ اللَّه عَنْهُ قَالَ أَشْرَفَ عَلَيْنَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غُرْفَة وَنَحْنُ نَتَذَاكَر السَّاعَة فَقَالَ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " لَا تَقُوم السَّاعَة حَتَّى تَرَوْا عَشْر آيَات : طُلُوع الشَّمْس مِنْ مَغْرِبهَا وَالدُّخَان وَالدَّابَّة وَخُرُوج يَأْجُوج وَمَأْجُوج وَخُرُوج عِيسَى اِبْن مَرْيَم وَالدَّجَّال وَثَلَاثَة خُسُوف : خَسْف بِالْمَشْرِقِ وَخَسْف بِالْمَغْرِبِ وَخَسْف بِجَزِيرَةِ الْعَرَب وَنَار تَخْرُج مِنْ قَعْر عَدَن تَسُوق النَّاس - أَوْ تَحْشِر النَّاس - تَبِيت مَعَهُمْ حَيْثُ بَاتُوا وَتَقِيل مَعَهُمْ حَيْثُ قَالُوا "  (ابن ماجة
சூரியன் மேற்கில் உதயமாகுவதும் இந்த மிருகம் தோன்றுவதும் அடுத்தடுத்து நடைபெறும்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَوَّلُ الآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجُ الدَّابَّةِ عَلَى النَّاسِ ضُحًى ». قَالَ عَبْدُ اللَّهِ فَأَيَّتُهُمَا مَا خَرَجَتْ قَبْلَ الأُخْرَى فَالأُخْرَى مِنْهَا قَرِيبٌ (ابن ماجة
  அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை நான் மனனமிட்டேன். இன்னும் நான் அதனை மறக்கவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்வதை நான் கேட்டேன். ‘அடையாளங்களில் முதலாவது வெளியாவது சூரியன் மேற்கில் உதிப்பதும், முற்பகல் நேரத்தில் அம்மிருகம் தோன்றி மக்களிடம் வருவதும் தான். இவற்றில் எது முதலில் தோன்றுகிறதோ அடுத்தது அதனையடுத்து கிட்டடியிலேயே தோன்றி விடும்.’ (ஆதார நூல் : ஸஹீஹ் முஸ்லிம்)
சூரியன் மேற்கில் உதயமாகுதல்
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا فَذَلِكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ ». (ابن ماجة
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘சூரியன் மேற்கில் உதிக்கும் வரை மறுமை நாள் தோன்ற மாட்டாது. அவ்வாறு அது உதித்து மக்கள் அதனைக் கண்டால் அவர்கள் அனைவரும் ஈமான் கொள்வார்கள். ஆனால் அப்போது ஈமான் கொள்ளல் எந்த ஆண்மாவுக்கும் (அது ஏற்கனவே ஈமான் கொண்டு இல்லாவிட்டால்) பயன் கொடுக்க மாட்டாது. அல்லது தன் ஈமானில் அது எந்த நன்மையை சம்பாதிக்கவும் மாட்டாது.’
விளக்கம் தவ்பாவுக்கு இரண்டு விதமான எல்லைகள் உண்டு என்று சொல்லப்படும் 1. தனி மனிதனைக் கவனித்து அதாவது உயிர் பிரியும் கடைசி நேரம் வந்து விட்டால் தவ்பா ஏற்கப்பட்டாது இது ஒவ்வொரு தனி மனிதனைக் கவனித்து 2. ஒட்டு மொத்த மக்களைக் கவனித்து. இது தான் சூரியன் மேற்கில் உதயமாகுவதாகும்
சூரியன் மேற்கில் உதயமாகி விடால் தவ்பாவின் வாசல் அடைக்கப்படும் என்பதால் அதற்கு அடுத்து இந்த மிருகம் வந்து ஒவ்வொருவரின் நெற்றியிலும் இவர் முஃமின் இவர் காஃபிர் என அடையாளமிட பொருத்தமாக இருக்கும்.
தாப்பதுல் அர்ழ் வெளியானவுடன் அது ஒவ்வொருவரின் நெற்றியிலும் அடையாளமிடும்
 عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « تَخْرُجُ الدَّابَّةُ وَمَعَهَا خَاتَمُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ وَعَصَا مُوسَى بْنِ عِمْرَانَ عَلَيْهِمَا السَّلاَمُ فَتَجْلُو وَجْهَ الْمُؤْمِنِ بِالْعَصَا وَ تَخْطِمُ أَنْفَ الْكَافِرِ بِالْخَاتَمِ حَتَّى أَنَّ أَهْلَ الْحِوَاءِ لَيَجْتَمِعُونَ فَيَقُولُ هَذَا يَا مُؤْمِنُ وَيَقُولُ هَذَا يَا كَافِرُ ».(ابن ماجة
معانى بعض الكلمات : تجلو : تنوِّر -    الحواء : البيوت المجتمعة من الناس على ماء  -  تخطم : تسم
 ‘தாப்பதுல் அர்ள் என்ற அதிசய மிருகம் தோன்றும்போது அதனிடம் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் பயன்படுத்திய மோதிரமும் மூஸா அலைஹிஸ்ஸலாம் பயன்படுத்திய கைத்தடியும் இருக்கும். அது முஃமினின் நெற்றியில் இவர் முஃமின் என கைத்தடி மூலமாக அடையாளமிட்டு நெற்றியைப் பிரகாசிக்கச் செய்யும் . காஃபிரின் நெற்றியில் இவர் காஃபிர் என மோதிரம் மூலமாக அடையாளமிடும்.  எந்த அளவுக்கென்றால் ஒரு தண்ணீர் பிடிக்கும் இடத்தில் அவரவர் நெற்றியில் உள்ள அடையாளத்தைப் பார்த்து ஓ காஃபிரே! ஓ முஃமினே! என ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வர்.
 அல்லாஹ் பற்றிய, மறுமை நாள் பற்றிய உண்மைகள் குர்ஆன் மூலமாகவும்  பல்வேறு ஆதாரங்கள் சொல்லி விளக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களில் பலர் அதனை ஏற்கவில்லை. அறிவைப் பயன்படுத்தி சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாத மனிதனுக்கு மறுமை நாள் நெருங்கும்போது இப்படியொரு மிருகத்தை அனுப்பி முஃமினுக்கும் காஃபிருக்கும் மத்தியில் அல்லாஹ் பிரித்து விடுவான். இவர் நரகவாதி இவர் சுவன வாதி என நெற்றியிலே  எழுதி ஒட்டியது போன்று அது இருக்கும். சாதாரணமாக மக்களின் பேச்சு வழக்கில் நான் அப்படிப் பட்டவன் என என் நெற்றியிலா எழுதி ஒட்டப் பட்டுள்ளது என்று கேட்கும் வழமை உண்டு. 
தாப்பதுல் அர்ழ் எங்கிருந்து வெளியாகும்
عن عَبْد اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ ذَهَبَ بِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى مَوْضِعٍ بِالْبَادِيَةِ قَرِيبٍ مِنْ مَكَّةَ فَإِذَا أَرْضٌ يَابِسَةٌ حَوْلَهَا رَمْلٌ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « تَخْرُجُ الدَّابَّةُ مِنْ هَذَا الْمَوْضِعِ ». فَإِذَا فِتْرٌ فِى شِبْرٍ. قَالَ ابْنُ بُرَيْدَةَ فَحَجَجْتُ بَعْدَ ذَلِكَ بِسِنِينَ فَأَرَانَا عَصًا لَهُ فَإِذَا هُوَ بِعَصَاىَ هَذِهِ كَذَا وَكَذَا.  (ابن ماجة 
புரைதா ரழி அவர்கள் கூறினார்கள் என்னை நபி ஸல் அவர்கள் மக்காவுக்கு அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள் அந்த இடம் முற்றிலும் காய்ந்து கிடந்தது. அதைச் சுற்றி மணல் இருந்த து அங்கு வைத்து நபி ஸல் அவர்கள் இங்கிருந்து தான் தாப்பதுல் அர்ழ் வெளியாகும் என்றார்கள் அப்போது அங்கே ஒரு கைத்தடி இருந்த து. என புரைதா ரழி கூறினார்கள் பிற்காலத்தில் புரைதா ரழி தன்னுடைய மகனுடன் ஹஜ்ஜுக்குச் சென்ற போதும் அந்த கைத்தடியைக் காட்டினார்கள் 
عَنْ أَبَان بْن صَالِح قَالَ سُئِلَ عَبْد اللَّه بْن عَمْرو عَنْ الدَّابَّة فَقَالَ الدَّابَّة تَخْرُج مِنْ تَحْت صَخْرَة بِجِيَادٍ وَاَللَّه لَوْ كُنْت مَعَهُمْ أَوْ لَوْ شِئْت بِعَصَايَ الصَّخْرَة الَّتِي تَخْرُج الدَّابَّة مِنْ تَحْتهَا قِيلَ فَتَصْنَع مَاذَا يَا عَبْد اللَّه بْن عَمْرو فَقَالَ تَسْتَقْبِل الْمَشْرِق فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَسْتَقْبِل الشَّام فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَسْتَقْبِل الْمَغْرِب فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَسْتَقْبِل الْيَمَن فَتَصْرُخ صَرْخَة تَنْفُذهُ ثُمَّ تَرُوح مِنْ مَكَّة فَتُصْبِح بِعُسْفَانَ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ لَا أَعْلَم (تفسير ابن كثير
சுருக்கம்- அது வெளியானவுடன் கிழக்கு நோக்கி ஒரு சப்தமிடும். ஷாமை நோக்கி ஒரு சப்தமிடும். மேற்கு நோக்கி ஒரு சப்தமிடும். யமன் நோக்கி ஒரு சப்தமிடும். மக்கா நோக்கி ஒரு சப்தமிடும்.
மக்களெல்லாம் மினாவில் இருக்கும்போது இரவு நேரத்தில் வெளியாகும் என்ற நபிமொழி
عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : تَخْرُجُ الدَّابَّةُ لَيْلَةَ جَمْعٍ وَالنَّاسُ يَسِيرُونَ إِلَى مِنًى فَتَحْمِلُهُمْ بَيْنَ عَجُزِهَا وَذَنَبِهَا فَلاَ يَبْقَى مُنَافِقٌ إِلاَّ خَطَمَتْهُ ، قَالَ : وَتَمْسَحُ الْمُؤْمِنَ ، قَالَ : فَيُصْبِحُونَ وَهُمْ أَشَرُّ مِنَ الدَّجَّالِ. (مصنف ابن شبية
“யஃஜூஜ், மஃஜூஜ் பற்றி... 
حَتَّى إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ (96)
 “யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் திறந்து விடப்படுகையில், அவர்கள் அனைத்துப் புறமிருந்தும் விரைந்து வருவார்கள். அந்த சத்திய வாக்குறுதி நிறைவேறல் நெருங்கி விட்டது. அப்போது நிராகரிப்பாளர்களின் பார்வைகள் இமைக்காது நோக்கியவாறு இருக்கும்.” (ஸூரா அன்பியா : 96, 97)
கஹ்ஃப் ஸூராவில் அல்லாஹ் துல்கர்னைன் என்ற மன்னன் பற்றிக் குறிப்பிடும் போது இந்த யஃஜூஜ், மஃஜூஜ் என்ற இனம் பற்றிக் குறிப்பிடுகிறான். துல்கர்னைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சூரியன் மறையாத இடங்களுக்கெல்லாம் பிரயாணம் செய்தபோது நாகரீகத்தில் பின்தங்கியிருந்த ஒரு சமூகத்தினரையும் சந்தித்தார். இவ்வினத்தினரின் அநியாய அட்டூழியங்களிலிருந்து காக்க இரு மலைகளிடையே ஒரு பெரும் இரும்புச் சுவரை எழுப்பியதாகவும் அல்லாஹ் அங்கு விளக்குகிறான். ஸூரா கஃபில் 94 முதல் 99 வரையுள்ள வசனங்களில் விளக்
புகை மூட்டம் பற்றி... 
قَالَ حُذَيْفَة رَضِيَ اللَّه عَنْهُ يَا رَسُول اللَّه وَمَا الدُّخَان ؟ فَتَلَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الْآيَة " فَارْتَقِبْ يَوْم تَأْتِي السَّمَاء بِدُخَانٍ مُبِين يَغْشَى النَّاس هَذَا عَذَاب أَلِيم " - يَمْلَأ مَا بَيْن الْمَشْرِق وَالْمَغْرِب يَمْكُث أَرْبَعِينَ يَوْمًا وَلَيْلَة وَأَمَّا الْمُؤْمِن فَيُصِيبهُ مِنْهُ كَهَيْئَةِ الزُّكْمَة وَأَمَّا الْكَافِر فَيَكُون بِمَنْزِلَةِ السَّكْرَان يَخْرُج مِنْ مَنْخِرَيْهِ وَأُذُنَيْهِ وَدُبُره"  (تفسير ابن كثير
விளக்கம்- உலகம் முழுக்க ஏற்படும் மிகப் பெரிய புகை மண்டல். இது முஃமினுக்கும் காஃபிருக்கும் வெவ்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். முஃமின் இலேசான தலைவலி போன்ற நிலை மட்டுமே ஏற்படும். ஆனால் காஃபிருக்கு மூச்சு விட முடியாத அளவுக்கு மயக்க நிலையில் கொண்டு போய் விட்டு விடும் 
இந்த பூமியின் மத்தியப் பகுதியான அரபுலகிலும் அமெரிக்காவை உள்ளடக்கிய மேற்குலகிலும் இந்தியாவை உள்ளடக்கிய கிழக்குப் பகுதியிலும் வரலாறு காணாத மூன்று பூகம்பங்கள் ஏற்படும்
தஜ்ஜாலைப் பற்றி விரிவாக நபிமொழிகள் உள்ளன
நூஹ் (அலை) அவர்களுக்குப்பின் வந்தஎந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றிதமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்ட தில்லை. நிச்சயமாக நானும்அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக் கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு கண் ஊனமுற்றவனாக அவன் இருப்பான். அது எந்தக்கண் என்பதில்இருவிதமான ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவனது ஒரு கண்ஊனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
தஜ்ஜால் என்பவன் இடதுகண் ஊனமானவன் என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.நூல்: புகாரி 3441, 3440, 4403, 5902, 6999, 7026, 7123, 7128, 7407ஒற்றைக் கண்ணனாக இருப்பவனெல்லாம் தஜ்ஜால் என்று முடிவு செய்து விடக் கூடாது. அவனைப் பற்றி இன்னும் பலஅடையாளங்களும் உள்ளன.ஒரு கண் ஊனமான தஜ்ஜாலின் மற்றொரு அடையாளம் அவனது இருகண்களுக்கிடையே காஃபிர்  என எழுதப்பட்டிருக்கும். அதை அனைவரும்படிக்கும் வகையில் அந்த எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும்.
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்பாளர் அஸ்ஸலாத்து ஜாமிஆ தொழுகை நடத்தும் நேரம் வந்து விட்டது) என்று அறிவிப்பதைச்செவியுற்று நான் பள்ளிவாசல் சென்றேன். நபிகள் நாயகம்(ஸல்)அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் சிரித்துக் கொண்டு மிம்பரில் அமர்ந்தார்கள்.  ஒவ்வொருவரும்தொழுத இடத்திலேயே இருங்கள் என்று கூறிவிட்டு நான் உங்களை ஏன்கூட்டினேன் என்பதை அறிவீர்களா என்று கேட்டார்கள்.  அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்று நாங்கள் கூறினோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு அச்சமூட்டவோ ஆர்வமூட்டவோஉங்களை நான் கூட்டவில்லை. தமீமுத்தாரி கிறிஸ்தவராக இருந்தார்.அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தஜ்ஜால் பற்றி நான் உங்களுக்குக் கூறி வந்ததற்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். அவர்கூறியதாவது: லக்ம் ஜுகாம் ஆகிய கோத்திரத்தைச் சேர்ந்த முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன். ஒரு மாதம் அலைகளால் நாங்கள்அலைக்கழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீபகற்பத்தில்ஒதுங்கினோம். சிறு கப்பல் ஏறி தீபகற்பத்தில் நுழைந்தோம். அப்போதுஅதிகமான மயிர்களைக் கொண்ட பிராணி ஒன்று எங்களை எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள்இருந்ததால் அப்பிராணியின் மலப்பாதை எதுசிறு நீர்ப்பாதை எது என எங்களால் அறிய முடியவில்லை. அப்பிராணியிடம்  உனக்குக் கேடு உண்டாகட்டும்! நீ என்ன பிராணிஎன்று கேட்டோம்.நான் ஜஸ்ஸாஸா என்று அப்பிராணி கூறியது.நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்! அவர் உங்களைப் பற்றி அறிவதில் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார் எனவும்அப்பிராணி கூறியது. அது ஒரு மனிதனைப் பற்றிக் கூறியதும் அப்பிராணி ஒரு ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம்.நாங்கள் விரைந்து சென்று அந்த மடாலயத்தை அடைந்தோம். அங்கேபருமனான ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. இரண்டு கரண்டைக் கால்களுக்கும் முட்டுக்கால்களுக்குமிடையே இரும்பினால் கழுத்துடன் தலைசேர்த்து அவன் கட்டப்பட்டிருந்தான்.  உனக்குக் கேடு உண்டாகட்டும்.ஏனிந்த நிலை என்று நாங்கள் கேட்டோம்.அதற்கு அம்மனிதன்என்னைப் பற்றி அறிய சக்தி பெற்று விட்டீர்கள்.

எனவே நீங்கள் யார்என எனக்குக் கூறுங்கள் என்றான்நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் பயணம் செய்த போது ஒரு மாதம் கடல் எங்களை அலைக்கழித்து இந்தத் தீபகற்பத்தில் நுழைந்தோம்.அடர்ந்த மயிர்களைக் கொண்டஒரு பிராணியைக் கண்டோம்."அப்பிராணி நான்ஜஸ்ஸாஸா  ஆவேன்". இந்த மடாலயத் தில் உள்ள மனிதரைச் சந்தியுங்கள் என்று கூறியது எனவே உம்மிடம் விரைந்து வந்தோம். அதனால் திடுக்குற்றோம். அது ஷைத்தானாக இருக்குமோ என்றுஅஞ்சினோம் எனக்கூறினோம்.பைஸான் எனுமிடத்தில் உள்ள பேரீச்சை மரங்கள் பலன் தருகின்றனவாஎன எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். அதற்கு அம்மனிதன்  விரை வில் அங்குள்ள மரங்கள் பலனளிக்காமல் போகலாம் என்றான்.தபரிய்யா எனும் ஏரியைப் பற்றி எனக்குக்கூறுங்கள்! அதில் தண்ணீர்உள்ளதா என்று அவன் கேட்டான். அதில் அதிகமான தண்ணீர் உள்ளது என்று நாங்கள் கூறினோம்.அந்தத்தண்ணீர் விரைவில் வற்றிவிடக்கூடும் என்று அவன் கூறினான்.ஸுகர் என்னும் நீரூற்றில் தண்ணீர்உள்ளதா அங்குள்ளவர்கள் அத்தண்ணீரால்விவசாயம் செய்கிறார்களா என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் ஆம்!தண்ணீர் அதிகமாகவே உள்ளது அங்குள்ளோர் அத்தண்ணீரால் விவசாயம்செய்து வருகின்றனர் என்றோம் உம்மி சமுதாயத்தில் தோன்றக்கூடிய நபியின் நிலைஎன்னஎன்பதை எனக்குக் கூறுங்கள்என்று அம்மனிதன் கேட்டான். அவர் மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவில் தங்கியிருக்கிறார் என்று கூறினோம்அவருடன் அரபுகள் போர் செய்தார்களா என்று அம்மனிதன் கேட்டான்.நாங்கள் ஆம் என்றோம்.   போரின் முடிவு எவ்வாறு இருந்தது  என்றுஅவன் கேட்டான். அதற்கு நாங்கள்  அவர் தன்னை அடுத்துள்ளஅரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார் எனக் கூறினோம். அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லதாகும்  என்று அவன் கூறினான்.

நான் இப்போது என்னைப் பற்றிக் கூறப் போகிறேன்.  நான்தான் தஜ்ஜால்ஆவேன். (இங்கிருந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதிவழங்கப்படலாம். அப்போது நான் வெளியே வருவேன். பூமி முழுவதும்பயணம் செய்வேன். (நான பயணிக்கக் கூடிய) நாற்பது நாட்களில் எந்தஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். ஆயினும் மக்கா மதீனா ஆகியஇரு ஊர்களைத் தவிர. அவ்விரு ஊர்களும் எனக்கு விலக்கப்பட்டுள்ளன.அவ்விரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயலும் போதெல்லாம் தன்கையில் வாளுடன் ஒரு மலக்கு என்னை எதிர் கொண்டு தடுத்து நிறுத்துவார்.அவற்றின் ஒவ்வொரு வழியிலும் அதைக் காக்கும் வானவர்கள் இருப்பர்என்று அம்மனிதன் கூறினான்.இதை தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். மேலும் தமது கைத்தடியால் மிம்பர் மீது தட்டி இது (மதீனா) தைபா (தூய நகரம்) இது தைபா இது தைபா எனக் கூறினார்கள்.இதே விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவாஎன்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள்  ஆம் என்றனர் அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கி றான்  அல்லது எமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான். இல்லை அவன் கிழக்குத்திசையில் இருக்கிறான் எனமும்முறை கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம்  5235.
தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பிருந்தே ஏதோ ஓரிடத்தில் இருந்து வருகிறான் என்பதையும் அவனைப் பற்றிய ஓரளவு விபரங்களையும் இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
இறந்தவர்களை உயிர்ப்பிப்பது என்பது ஒரே தடவை மட்டுமே அவனால் செய்ய இயலும் தொடர்ந்து செய்ய இயலாது. ஒரு மனிதனைக் கொன்று அவன உயிர்ப்பிப்பான். மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது என்று நபிகள் நாயகம் (ஸல்)கூறியதாக அன்ஸாரித் தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.    நூல்: அஹ்மத்  22573
அவனைப் பின்பற்றியவர்கள் தவிர ஏனைய மக்கள் மிகவும் வறுமையில் இருக்கும் போது அவனிடம் மலை போல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான். இன்னொன்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் என்று குறிப்பிடும் நதி உண்மையில்நரகமாகும். அவன் நரகம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் சொர்க்கமாகும். மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். மக்கள்பார்க்கும் வகையில் மழை பெய்யும். இதைக் கடவுளைத் தவிர வேறு யாரும் செய்ய முடியுமா என்று கேட்பான் என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள்
கூறினார்கள்.  நூல்: அஹ்மத் 14426
தஜ்ஜாலிடம் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதனை நெருப்பு என்று காண்கிறார்களோ அது சுவை மிக்க குளிர்ந்த நீராகும். உங்களில் யாரேனும் இந்த நிலையை அடைந்தால் நெருப்பு என்று காண்பதில்
விழட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி).   நூல்: புகாரி  7130
தஜ்ஜால் வாழும் நாட்கள் எத்தனை
இவ்வளவு அற்புத சக்தியுடன் வெளிப்படும் தஜ்ஜால் நீண்ட நாட்கள் ஆட்டம் போட முடியாது. வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே அவன் இவ்வுலகில்
இருப்பான். தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்  என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒருநாள் ஒரு வருடம் போன்றும்  ஒரு நாள் ஒரு மாதம் போன்றும்  ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.   நூல்: முஸ்லிம்  5228
தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள்
இந்த நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் அவன் சுற்றி வருவான். ஆயினும்சில இடங்களை அவனால் அடைய முடியாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். மதீனா நகருக்கு தஜ்ஜால் பற்றிய அச்சம் இல்லை. அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி  7125

ரமலான் மாதமும் பள்ளிவாசல் நிர்வாகிகளும்,

ரமலான் மாதமும் பள்ளிவாசல் 
                    நிர்வாகிகளும்
           ************************

பள்ளிவாசல்களின் நிர்வாகிகள்  ஏனைய மாதங்களை விட ரமலான் மாதத்தில் அதிகமான பணிகளை சுமக்கும் நிலையில் உள்ளனர் என்பதை நடைமுறையில் காண முடியும்

இரவுத்தொழுகைக்கு  ஹாபிளை  ஏற்பாடு செய்வது 

தொடர் பயானுக்கு இமாம்களை  ஏற்பாடு செய்வது

இப்தார் சஹ்ருக்கு ஏற்பாடு செய்வது

ஏனைய மாதங்களை விட ரமலான் மாதத்தில் பள்ளிவாசல் பராமரிப்புக்கு ஏற்பாடு செய்வது 

இன்னும் இது போன்ற சில பணிகள் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்

ரமலான் மாதத்தில் முஸ்லிம் சமூகம் 
மகிழ்வாக இருப்பதற்கும் ஒரு வகையில் பள்ளிவாசல் நிர்வாகிகளும் காரணமாக உள்ளனர்

பள்ளிவாசல் நிர்வாகிகள் 
ஏன் அதை செய்யவில்லை 
ஏன் இதை செய்யவில்லை என்று கடுமையாக  விமர்சனம் செய்வது சமுகத்திற்கு  எளிதானது 
ஆனால் அவர்கள் செய்யும் பணிகளுக்கு தனது ஒத்துழைப்பு எந்தளவு  உள்ளது என்பதை சுயமாக சிந்திப்பதே  நடைமுறையில் மிகவும் குறைவானது

இறைவழியில் செலவு செய்வதை பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு செலவு செய்வது போல் மனதளவில் சிலருக்கு ஷைய்த்தான்  பிம்பத்தை  உருவாக்குகிறான் 


இதன் காரணமாகவே பொதுவான பணிகளுக்கு தானதர்மம் செய்பவர்களும் தங்களது நன்மைகளை ஏதோ ஒரு வகையில் உலக வாழ்வில்  பாழ்படுத்திக் கொள்கின்றனர் 

பள்ளிவாசல் நிர்வாகிகள் மீது தனிப்பட்ட அதிருப்தி இருப்பினும் அவர்கள் செய்யும் பணிகளில் ஒத்துழைப்பு தராது இருப்பது சமூக கடமையிலும் மார்க்க கடைமைகளில்  இருந்தும்  விலகும் செயலாகும்

பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்யும் பணிகளுக்கு தனிப்பட்டு எவரும் சம்பளம் கொடுப்பதும் இல்லை நிர்வாகத்தின் சார்பாக கூலி எதுவும் அவர்களுக்கு நிர்மாணிக்கப்படுவதும் இல்லை என்பதை 
உணர வேண்டும் 

தன்னிறைவு பெற்ற நிர்வாகிகளில் சிலர் தங்களது பொருளாதாரத்தையும் பொதுப்பணிகளுக்கு அதிகமாக செலவு செய்கின்றனர் என்பதையும் பொதுமக்கள் உணர வேண்டும் 

பொருப்புகளை குறை கூறுவது எளிதானது 
ஆனால் அதை ஏற்று செயல்முறைபடுத்துவது 
மிகவும் சிரமம் மிகுந்தது 

பல விதமான விமர்சனங்கள் சங்கடங்களை எதிர்கொண்டாலும் அதன் மூலமும் மறுமையில் இறைவனின் திருப்தியை பெற முடியும் என்பதையும் ஏற்றுள்ள பொருப்பில்  கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை பள்ளிவாசல் நிர்வாகிகள் மனதில் பதித்து கொள்ள வேண்டும் 


وَمَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَ تَثْبِيْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَيْنِ‌ فَاِنْ لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏

அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடியும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கையோடும் 
யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது 
உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது
அதன்மேல் பெருமழை பெய்கிறது அப்பொழுது அதன் விளைச்சலை இரட்டிப்பாக்கித் தருகிறது 
இன்னும் அதன்மீது பெருமழை பெய்யாவிட்டாலும் சிறு தூறலே (அதற்குப் போதுமானது)
அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்

(அல்குர்ஆன் : 2:265)


اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தையும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாதவர்களே  இத்தகையவர்களே நேர்வழியில்  உள்ளனர்

(அல்குர்ஆன் : 9.18

அவுரங்கசீப் கல்லறையை அகற்ற,

அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி இந்துத்துவா நாக்பூரில் கலவரத்தை துவங்கியுள்ளது!

மாவீரனை எழுப்பாதீர்கள் "நீங்கள் தாங்க மாட்டீர்கள்"

ஒரு கல்லறை என்ன செய்யும்.?

ஜெருசலமும் அதை சுற்றி உள்ள பகுதிகளும் முழுமையாக சலாவுதீன் அய்யுபி(ரஹ்) அவர்களின் கைக்குள் வந்தது. மாவீரன் சலாவுதீன் அய்யுபி கிபி 1193 ஆம் ஆண்டு மரணமடைந்தார். சுல்தான் ஸலாவுதீன் அய்யுபி வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலுவை யுத்தக்காரர்கள் மீண்டும் ஜெருசலத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என காத்துக் கொண்டிருந்தனர். ஒரு வருடம், இரு வருடம் அல்ல 700 ஆண்டுகள் காத்திருந்தனர். 19ஆம் நூற்றாண்டில் உதுமானிய பேரரசை வீழ்த்தி, ஜெருசுலத்தை மீண்டும் சிலுவை யுத்தக்காரர்கள் கைப்பற்றினார்கள். ஜெருசுலத்தை கைப்பற்றியவுடன் கிபி கிபி 1917 ல் சிரியா சென்ற பிரிட்டிஷ் படை தளபதி எட்மண்ட் ஆலன் நேராக சுல்தான் ஸலாவுதீன் அய்யூபி அவர்களின் அடக்கஸ்தலம் சென்று “Today The Wars Of Crusaders Are Completed” இன்றோடு சிலுவை யுத்தக்காரர்களின் போர் முடிவு பெற்றது என்று கூறினான்.

அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் படை தளபதி ஹென்றி கொரோடு சுல்தான் சலாவுதீன் அடக்கஸ்தலத்தின் மீது கால் வைத்து: “Awake Salahudeen! We Have Returned, My Presence  Here Consecrate The Victory Of The Cross Over Crescent” எழுந்திரு சலாவுதீன்! நாங்கள் திருப்பி வந்திருக்கிறோம்! புனிதத்தன்மை வாய்த என்னுடைய வருகையின் மூலம் சிலுவை, பிறையை வென்றது. 700 வருட பகையை பாருங்கள்.... கடைசியாக 1924 ஆம் ஆண்டு ஜெருசலம் மீண்டும் யூதர்களின் கையில் சென்று விட்டது.

வரலாறு முக்கியம் ஏனென்றால் அது நிகழ்காலத்தை வடிவமைக்கிறது என்பார்கள் "சுல்தான் ஸலாவுதீன் வெற்றியும் அவரின் வரலாறும் எப்படி எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையோ.? அதேபோல முகலாய மன்னர் மாவீரன் அவுரங்கசீப் வெற்றியும், வரலாறும் எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

அவுரங்கசீப்பை இந்துக்களுக்கு எதிராக கட்டமைக்க தொடர்ந்து இந்துத்துவா பாசிச கும்பல்கள் முயன்று வருகின்றன இது அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முகலாய மன்னர்களும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று கட்டமைக்க அவர்கள் விரும்புகின்றனர். மன்னர் பாபர் முதல் மன்னர் பகதூர்ஷா வரை இதற்கு விதிவிலக்கல்ல. வரலாறுகளில் மண்ணுக்காகவும், அதிகாரத்திற்காகவும் எண்ணிலடங்கா போர்கள் நடந்துள்ளன. ஆனால் முஸ்லிம் மன்னர்கள் என்று வரும்போது மட்டும் அதை மதத்திற்காகவும் கலாச்சாரத்திற்காகவும் நடந்த போர் என இந்துத்துவ கும்பல்கள் திரித்து, சித்தரித்து, தற்போதைய சூழ்நிலையில் அவர்களின் அரசியலுக்கும் தேர்தல் கால யுக்திகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். பிளவுவாத அரசியல் மட்டுமே நாம் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க முடியும் என ஆணித்தரமாக நம்புகின்றனர். 

அதிலும் குறிப்பாக இந்த அவுரங்கசீப் என்ற பெயர் பாசிச கும்பல்களுக்கு மிகவும் எரிச்சல் ஊட்டக்கூடிய பெயர். இவரை விட முகலாய மன்னர்களில் விமர்சிக்கப்பட்ட மற்றொரு மன்னரை கைகாட்ட முடியாது என்ற அளவிற்கு இவர் மீது பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். 

மன்னர் அவுரங்கசீப் பெயரில் உள்ள நகர்களையும், சாலைகளையும் பெயர் மாற்றம் செய்து ஆனந்தம் அடைந்தனர். ஆனாலும் வெறி அடங்கவில்லை. அவ்வப்போது மாமன்னர் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என பாசிச கும்பல்கள் பேசி வருவது வழக்கமான ஒன்று என்றாலும், இம்முறை மிகத் தீவிரமாக இறங்கியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் மிக நெருக்கமாக இருப்பதால் இவர்கள் தற்பொழுது இந்த விஷயத்தை அரசியல் வெற்றிக்கு பயன்படுத்த முயல்கின்றனர். 

அவுரங்கசீப்பை பற்றி whatapp ஸ்டேட்டஸ் வைத்த முஸ்லிம் இளைஞர் கைது! அவுரங்கசீப் பற்றி தவறாக சித்தரித்து படம் எடுத்ததே சட்டசபையில் சுட்டிக்காட்டிய எம்எல்ஏ சஸ்பெண்ட்!! இப்படி அவுரங்கசீப்பிற்கு ஆதரவாக பேசினால் நசுக்கி விடுவேன் என மிரட்டும் பாஜக முதலமைச்சர்கள்! எனப்பட்டியல் நீளுகிறது. 

பாசிசம் அவுரங்கசீப்பின் வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறது. பொய்யையும் அவதூறையும் அவர் மீது தாராளமாக அள்ளித் தெளிக்கிறது. இவற்றையெல்லாம் கொண்டு தனது சித்தாந்தத்தை வெற்றி பெற வைக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறது. 

ஒளரங்கசீப்பின் கல்லறை மிகவும் எளிமையாகக் கட்டப்பட்டிருக்கிறது. அங்கு வெறும் மண் மட்டும்தான் இருக்கிறது. கல்லறை ஒரு சாதாரண வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்கிறது. சமாதியின் மீது ஒரு செடி நடப்பட்டுள்ளது. இவ்வாறு தான் அவரின் கல்லறை அமைந்துள்ளது. இப்படித்தான் எனது கல்லறை சாதாரணமாக அமைய வேண்டும் என அவர் உயிர் எழுதி வைத்திருந்தார். அவரின் கல்லறையை கட்டுவதற்கு அந்த நேரத்தில் கல்லறையைக் கட்ட 14 ரூபாய் 12 அணா செலவானதாகச் சொல்லப்படுகிறது. 

அவரின் கல்லறை மிக சாதாரணமாக இருக்கிறது என எண்ணி விட வேண்டாம். "மன்னர் அவுரங்கசீப்பை எழுப்ப முயற்சிக்காதீர்கள், அது உங்களின் அத்தியாயங்களை முடித்து விடும், உங்களின் நிம்மதியை கெடுத்து விடும்"

அவுரங்கசீப்பின் மீது எந்த அளவுக்கு பொய்களும் அவதூறுகளும் பரப்பப்படுகிறது, அந்தப் பொய்களுக்கும் அவதூறுகளுக்கும் எதிராக உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விஷயத்தில் பொது சமூகம் தொய்வை சந்தித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகம் வரலாற்றைப் படிப்பதையும் வரலாற்றை பரப்புவதையும் ஒரு பெரிய பாரச் சுமையாக கருதுகிறது. 

பாசிசம் முஸ்லிம்களுக்கு எதிராக உயிரோடு இருப்பவர்கள் மீதும், உயிரற்ற சடலத்தின் மீதும் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். கருத்தியலாகவும், அரசியலாகவும், அனைத்து வகையிலும் யுத்தத்தை தொடங்கி விட்டார்கள். எந்த வகையில் எதிர்ப்புகள் வந்தாலும், அந்தத் தளத்தில் நின்று அதை முறியடிக்கும் வல்லமைகளை முஸ்லிம் சமூகம் பெற்றிருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்! 

அவுரங்கசீப்புகள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை சமகாலத்தில் வாழும் முஸ்லிம்கள் நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் வரலாறு நம்மை மன்னிக்காது.

பிரபல்யமான பதிவுகள்