ரமலான் மாதமும் பள்ளிவாசல்
நிர்வாகிகளும்
************************
பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஏனைய மாதங்களை விட ரமலான் மாதத்தில் அதிகமான பணிகளை சுமக்கும் நிலையில் உள்ளனர் என்பதை நடைமுறையில் காண முடியும்
இரவுத்தொழுகைக்கு ஹாபிளை ஏற்பாடு செய்வது
தொடர் பயானுக்கு இமாம்களை ஏற்பாடு செய்வது
இப்தார் சஹ்ருக்கு ஏற்பாடு செய்வது
ஏனைய மாதங்களை விட ரமலான் மாதத்தில் பள்ளிவாசல் பராமரிப்புக்கு ஏற்பாடு செய்வது
இன்னும் இது போன்ற சில பணிகள் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்
ரமலான் மாதத்தில் முஸ்லிம் சமூகம்
மகிழ்வாக இருப்பதற்கும் ஒரு வகையில் பள்ளிவாசல் நிர்வாகிகளும் காரணமாக உள்ளனர்
பள்ளிவாசல் நிர்வாகிகள்
ஏன் அதை செய்யவில்லை
ஏன் இதை செய்யவில்லை என்று கடுமையாக விமர்சனம் செய்வது சமுகத்திற்கு எளிதானது
ஆனால் அவர்கள் செய்யும் பணிகளுக்கு தனது ஒத்துழைப்பு எந்தளவு உள்ளது என்பதை சுயமாக சிந்திப்பதே நடைமுறையில் மிகவும் குறைவானது
இறைவழியில் செலவு செய்வதை பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு செலவு செய்வது போல் மனதளவில் சிலருக்கு ஷைய்த்தான் பிம்பத்தை உருவாக்குகிறான்
இதன் காரணமாகவே பொதுவான பணிகளுக்கு தானதர்மம் செய்பவர்களும் தங்களது நன்மைகளை ஏதோ ஒரு வகையில் உலக வாழ்வில் பாழ்படுத்திக் கொள்கின்றனர்
பள்ளிவாசல் நிர்வாகிகள் மீது தனிப்பட்ட அதிருப்தி இருப்பினும் அவர்கள் செய்யும் பணிகளில் ஒத்துழைப்பு தராது இருப்பது சமூக கடமையிலும் மார்க்க கடைமைகளில் இருந்தும் விலகும் செயலாகும்
பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்யும் பணிகளுக்கு தனிப்பட்டு எவரும் சம்பளம் கொடுப்பதும் இல்லை நிர்வாகத்தின் சார்பாக கூலி எதுவும் அவர்களுக்கு நிர்மாணிக்கப்படுவதும் இல்லை என்பதை
உணர வேண்டும்
தன்னிறைவு பெற்ற நிர்வாகிகளில் சிலர் தங்களது பொருளாதாரத்தையும் பொதுப்பணிகளுக்கு அதிகமாக செலவு செய்கின்றனர் என்பதையும் பொதுமக்கள் உணர வேண்டும்
பொருப்புகளை குறை கூறுவது எளிதானது
ஆனால் அதை ஏற்று செயல்முறைபடுத்துவது
மிகவும் சிரமம் மிகுந்தது
பல விதமான விமர்சனங்கள் சங்கடங்களை எதிர்கொண்டாலும் அதன் மூலமும் மறுமையில் இறைவனின் திருப்தியை பெற முடியும் என்பதையும் ஏற்றுள்ள பொருப்பில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை பள்ளிவாசல் நிர்வாகிகள் மனதில் பதித்து கொள்ள வேண்டும்
وَمَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَ تَثْبِيْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَيْنِ فَاِنْ لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ
அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடியும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கையோடும்
யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது
உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது
அதன்மேல் பெருமழை பெய்கிறது அப்பொழுது அதன் விளைச்சலை இரட்டிப்பாக்கித் தருகிறது
இன்னும் அதன்மீது பெருமழை பெய்யாவிட்டாலும் சிறு தூறலே (அதற்குப் போதுமானது)
அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 2:265)
اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தையும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாதவர்களே இத்தகையவர்களே நேர்வழியில் உள்ளனர்
(அல்குர்ஆன் : 9.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக