நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், மார்ச் 19, 2025

சோதனைகள் நீங்கிட ,


 சோதனைகள் நீங்கிட  இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம்
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (17) الانعام
கடன் சுமை நீங்க தொழுகைக்குள் அல்லாஹ்விடம் துஆ கேட்கலாம்
عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنْ الْمَغْرَمِ فَقَالَ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ (بخاري 832
அல்லாஹ்வின் தூதரே நீங்கள் அதிகமாக கடன் சுமையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் ஒருவன் கடனாளியாக ஆகி விட்டால் அதிகம் பொய் பேசுவான் வாக்குறுதிக்கு மாறு செய்வான். என்று கூறினார்கள். கடன் என்பது பல பாவங்களைச் செய்ய வைத்து விடும் என்பது இதன் கருத்தாகும்.              
குகைக்குள் சிக்கிய மூன்று இளைஞர்கள் துஆ  செய்த போது அல்லாஹ் அவர்களை காப்பாற்றிய விதம்
عَنْ ابْنِ عُمَرَ رَضِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَرَجَ ثَلَاثَةُ نَفَرٍ يَمْشُونَ فَأَصَابَهُمْ الْمَطَرُ فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ قَالَ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ فَقَالَ أَحَدُهُمْ اللَّهُمَّ إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ1 فَأَجِيءُ بِالْحِلَابِ فَآتِي بِهِ أَبَوَيَّ فَيَشْرَبَانِ ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي فَاحْتَبَسْتُ2 لَيْلَةً فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ قَالَ فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَيَّ فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا حَتَّى طَلَعَ الْفَجْرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ قَالَ فَفُرِجَ عَنْهُمْ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي كُنْتُ أُحِبُّ امْرَأَةً مِنْ بَنَاتِ عَمِّي كَأَشَدِّ مَا يُحِبُّ الرَّجُلُ النِّسَاءَ فَقَالَتْ لَا تَنَالُ ذَلِكَ مِنْهَا حَتَّى تُعْطِيَهَا مِائَةَ دِينَارٍ فَسَعَيْتُ فِيهَا حَتَّى جَمَعْتُهَا فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ اتَّقِ اللَّهَ وَلَا تَفُضَّ الْخَاتَمَ إِلَّا بِحَقِّهِ فَقُمْتُ وَتَرَكْتُهَا فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً قَالَ فَفَرَجَ عَنْهُمْ الثُّلُثَيْنِ وَقَالَ الْآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقٍ مِنْ ذُرَةٍ3 فَأَعْطَيْتُهُ وَأَبَى ذَاكَ أَنْ يَأْخُذَ فَعَمَدْتُ إِلَى ذَلِكَ الْفَرَقِ فَزَرَعْتُهُ4 حَتَّى اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيهَا ثُمَّ جَاءَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ أَعْطِنِي حَقِّي فَقُلْتُ انْطَلِقْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرَاعِيهَا فَإِنَّهَا لَكَ فَقَالَ أَتَسْتَهْزِئُ بِي قَالَ فَقُلْتُ مَا أَسْتَهْزِئُ بِكَ وَلَكِنَّهَا لَكَ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فَكُشِفَ عَنْهُمْ رواه البخاري كتاب البيوع
عن الحكم بن هشام الثقفي قال : ( أخبرت أن رجلا أخذ أسيرا فألقي في جب ووضع على رأس الجب صخرة فكتب فيها : ( سبحان الملك الحق القدوس سبحان الله وبحمده ) فأخرج من الجب من غير أن يكون أخرجه إنسان 
ஒரு இறைநேசர் தகுந்த காரணமின்றி கைதியாகப் பிடிக்கப்பட்டார். அவரை அடைத்து வைத்திருந்த அறை வாசலில் அவர் வெளியே வர முடியாத அளவுக்கு பெரிய பாறாங்கல்லும் வைக்கப் பட்டிருந்தது. அவர் மேற்படி திக்ரை அந்தக் கல்லின் மீது எழுதினார். அவரால் இலகுவாக அங்கிருந்து வெளியேற முடிந்தது.                                                               
இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவம்
عن مشرف بن أبان : حدثني صالح بن سليمان أ وغيره قال : ( احتاج إبراهيم بن أدهم إلى دينار وكان على شاطىء البحر فدعا الله عز و جل فتشرعت السمك في فم كل واحدة منهن دينار واحد فأخذ دينارا واحدا ) 
இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரழி அவர்கள் கடற்கரையில் இருந்த போது இக்கட்டான சூழ்நிலையில் ஒரு தீனார் அவசியமாக தேவைப்பட்டது. உடனே அல்லாஹ்விடம் துஆச் செய்ய, சற்று நேரத்தில் பல மீன்கள் நீருக்குள் இருந்து எட்டிப் பார்த்தன. ஒவ்வொன்றின் வாயிலும் ஒரு தீனார் இருந்த து. இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரழி அவர்கள் அத்தனைக்கும் ஆசைப்படாமல் ஒரே ஒரு மீனின் வாயில் இருந்த ஒரு தீனாரை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.                
இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் பயணம் செய்த கப்பல் கடும் புயலில் சிக்கியும் அவர்களின் துஆவால் தப்பியது
عن يحيى بن عثمان بقية بن الوليد قال :(كنا في البحر فهبت الرياح وهاجت الأمواج فبكى الناس وصاحوا فقيل لمعيوف - أو ابن معيوف - هذا ابراهيم بن أدهم لو سألته أن يدعو الله عز و جل ؟ وإذا هو نائم في ناحية السفينة ملفوف رأسه في كساء فدنا منه فقال: يا أباإسحاق أما ترى ما الناس فيه ؟ فقال :اللهم قد أريتنا قدرتك فأرنا رحمتك  فهدأت السفينة (مجابوا الدعوة)
சில மக்கள் கடலில் பயணம் செய்த கப்பல் கடும் புயலில் சிக்கியது. மக்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். அப்போது ஒருவர் கூறினார். இதோ இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் இருக்கிறார்கள். அவரிடம் நாம் துஆச் செய்யச் சொல்லலாமே என்று கூற, இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் துஆச் செய்யச் சொன்ன போது அவர்கள் துஆச் செய்தார்கள். புயல் நீங்கியது. 
இப்றாஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் சிலருடன் பயணம் செய்து கொண்டிருந்த போது எதிரில் சிங்கம் வந்த து. அப்போது அவர்கள் பின்வரும் துஆவை ஓதினார்கள். அந்த சிங்கம் வந்த வழியே திரும்பிப் போனது
عن عَبْد الْجَبَّارِ بْنُ كُلَيْبٍ قَالَ: كُنَّا مَعَ إِبْرَاهِيمَ بْنِ أَدْهَمَ فِي سَفْرَةٍ  فَعَرَضَ لَنَا السَّبْعُ1  فَقَالَ إِبْرَاهِيمُ : قُولُوا : اللهُمَّ احْرُسْنَا بِعَيْنِكَ الَّتِي لَا تَنَامُ  وَاحْفَظْنَا فِي كَنَفِكَ الَّذِي لَا يُرَامُ ، وَارْحَمْنَا بِقُدْرَتِكَ عَلَيْنَا ، وَلَا تُهْلِكْنَا ، وَأَنْتَ رَجَاؤُنَا ؛ يَا اللهُ يَا اللهُ . قَالَ : فَوَلَّى السَّبْعُ عَنَّا . قَالَ خَلَفٌ : فَأَنَا مُنْذُ سَمِعْتُ هَذَا أَدْعُو بِهِ عِنْدَ كُلِّ شِدَّةٍ وَكَرْبٍ ؛ فَمَا رَأَيْتُ إِلَّا خَيْرًا (المجالسة وجواهر العلم)   
பகைவர்களிடமிருந்து பாதுகாக்க  துஆச் செய்தாலும் அல்லாஹ் உடனே ஏற்பான்
عن عصام بن زيد - رجل من مزينة - قال : ( كان رجل من الخوارج يغشى مجلس الحسن فيؤذيهم فقيل للحسن : يا أبا سعيد ألا تكلم الأمير حتى يصرفه عنا ؟ قال : فسكت عنهم  قال : فأقبل ذات يوم و الحسن جالس مع أصحابه فلما رآه قال : ( اللهم قد علمت أذاه لنا فاكفناه بماشئت ) قال : فخر الرجل والله من قامته فما حل إلى أهله إلا ميتا على سرير فكان الحسن إذا ذكره بكى 
ஹஸன் பஸரீ ரஹ் அவர்களின் மஜ்லிஸுக்கு வந்து ஒருவர் எப்போதும் தொந்தரவு தந்து கொண்டிருந்தார். ஹஸன் பஸரீ ரஹ் அவர்களைத் திட்டுவார் அப்போது ஹஸன் பஸரீ ரஹ் அவர்களிடம் மற்றவர் இந்த அளவுக்கு உங்களை திட்டுகிறார். அவரைப் பற்றி நீங்கள் அரசரிடம் புகார் கூறக் கூடாதா என்று கேட்க இமாம் அவர்கள் அமைதியாக இருந்து விட்டனர். மற்றொரு முறை அந்த மனிதர் சபைக்கு வந்து மிகவும் நோவினைப் படுத்திய போது இமாம் அவர்கள் அவரை விட்டும் பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்ய உடனே அந்த மனிதர் கீழே விழுந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்குள் அவர் இறந்து விட்டார். நல்லோர்களின் சாபம் உடனே பலிக்கும்.                   
عن سعد رضي الله عنه أن : رجلا نال من علي رضي الله عنه (وفي رواية فنهاه سعد فلم ينته فقال سعد : أدعو عليك فلم ينته) فدعا عليه سعد بن مالك فجاءته ناقة أو جمل فقتله فأعتق سعد نسمة و حلف أن لا يدعو على أحد (مستدرك الحاكم) (مجابوا الدعوة)
அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஒருவன் திட்டினான். அவனை ஸஃது ரழி தடுத்தும் கேட்கவில்லை. உனக்கு எதிராக துஆ செய்வேன் என்று எச்சரித்தும் அவன் கேட்கவில்லை. இறுதியில்  அவனுக்கு எதிராக ஸஃது ரழி அவர்கள் துஆ செய்ய, அவனை ஒட்டகம் மிதித்துக் கொன்றது.  இனிமேல் யாருக்கும் எதிராக நான் துஆ செய்ய மாட்டேன் என ஸஃது ரழி கூறினார்கள்.      
ஹஜ்ஜாஜுக்கு எதிராக ஸயீத் ரழி அவர்கள் செய்த துஆவை அல்லாஹ்  உடனே ஏற்றுக் கொண்டான் 
ثم دعا الحجاج بآلات اللهو، فضربت بين يدي سعيد فبكى سعيد. فقال الحجاج: ويلك يا سعيد. فقال سعيد: الويل لمن زحزح عن الجنة، وأدخل النار. فقال: يا سعيد أي قتلة تريد أن أقتلك بها؟ قال: اختر لنفسك يا حجاج، فوالله لا تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة. قال: فتريد أن أعفو عنك؟ قال: إن كان العفو من الله فنعم، وأما منك أنت فلا. فقال: اذهبوا به فاقتلوه. فلما أخرج من الباب ضحك، فأخبر الحجاج بذلك، فأمر برده فقال: ما أضحكك وقد بلغني أن لك أربعين سنة لم تضحك؟ قال: ضحكت عجباً من جراءتك على الله، ومن حلم الله عليك، فأمر بالنطع فبسط بين يديه، وقال: اقتلوه. فقال سعيد: " كل نفس ذائقة الموت " . ثم قال: " وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً مسلماً وما أنا من المشركين " . قال: وجهوه لغير القبلة. فقال سعيد: " فأيما تولوا فثم وجه الله " فقال: كبوه لوجهه. فقال: " منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى " فقال الحجاج: اذبحوه. فقال سعيد: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله. ثم قال: اللهم لا تسلطه على أحد يقتله بعدي. فذبح على النطع رحمة الله تعالى عليه، فكان رأسه يقول بعد قطعه: لا إله إلا الله مراراً. وذلك في شعبان سنة خمس وتسعين. وكان عمر سعيد تسعاً وأربعين سنة،(حياة الحيوان– البداية والنهاية 
قال عون ابن أبي شداد العبدي ... وبلغنا أن الحجاج عاش بعده خمسة عشر ليلة ووقع الاكلة في بطنه فدعا بالطبيب لينظر اليه فنظر اليه ثم دعا بلحم منتن فعلقه في خيط ثم أرسله في حلقه فتركها ساعة ثم استخرجها وقد لزق به من الدم فعلم أنه ليس بناج وبلغنا أنه كان ينادي بقية حياته مالي ولسعيد بن جبير كلما أردت النوم أخذ برجلي (حلية الاولياء)
ஹஜ்ஜாஜ் கடைசியாக கொலை செய்த து ஸயீத் இப்னு ஜுபைர் ரழி அவர்களைத் தான். உன்னை எப்படிக் கொல்லட்டும் என ஸயீத் ரழி அவர்களிடமே அவன் கேட்க, அது உன் இஷ்டம். ஆனால் அல்லாஹ் மீது சத்தியமாக நீ என்னை எப்படிக் கொன்றாலும் அல்லாஹ் பதிலுக்கு உன்னை மறுமையில் கொல்லுவான்.  என்று கூறியபோது, நான் உன்னை மன்னிப்பதை விரும்புகிறாயா என்று கேட்க, மன்னிப்பு அல்லாஹ்விடமிருந்து என்றால் அது எனக்கு சந்தோஷம். உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்றார்கள். பிறகு ஹஜ்ஜாஜ் ஸயீத் ரழி அவர்களைக் கொல்ல உத்தரவிட்டான். ஸயீத் ரழி சிரித்தார்கள். உடனே ஹஜ்ஜாஜ் 40 வருடங்களாக சிரித்த தில்லை என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். எதற்காக நீ இப்போது சிரித்தாய் என்று கேட்க, அல்லாஹ்வுக்கு எதிராக உனது திமிரையும், அல்லாஹ் உன்னை இன்னும் விட்டு வைத்திருப்பதையும் எண்ணி ஆச்சரியத்தால் சிரிக்கிறேன். என்றார்கள். பிறகு அவர்களைக் கொல்வதற்காக படுக்க வைக்கப்பட்ட போது ஒவ்வொரு ஆத்மாவும் மவ்த்தை அனுபவித்தே தீரும் என்றார்கள். அப்போது கிப்லாவின் பக்கம் முகம் இருந்தது. அந்த சந்தோஷத்தில் ஸயீத் ரழி வஜ்ஜஹ்து ஓதினார்கள். உடனே ஹஜ்ஜாஜ் அவரின் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்றான். அவ்வாறு திருப்ப ப்பட்ட போது   என்ற ஆயத்தை ஓதினார்கள். அவரைக் குப்புறப் படுக்க வையுங்கள் என்றான் ஹஜ்ஜாஜ். அப்போது  فأيما تولوا فثم وجه الله
என்ற ஆயத்தை ஸயீத் ரழி அவர்கள்  ஓதினார்கள். பின்பு ஸயீத் ரழி அவர்கள்  منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى "
ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் நாவு கடைசி நேரத்தில் கலிமாவை உச்சரித்த து மட்டுமன்றி, அவர்களின் தலையைத் துண்டாக்கிய பின்பும் அவர்களின் தலை மட்டும் கலிமாவை மொழிந்து கொண்டே இருந்தது.  இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஸயீத் ரழி அவர்கள் கடைசி நேரத்தில் யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யார் மீதும் இவனை நீ சாட்டி விடாதே என்று துஆ செய்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். இதற்குப் பின் 15 இரவுகள் மட்டுமே ஹஜ்ஜாஜ் வாழ்ந்தான். இந்த 15 நாட்களும் தூங்கவே இல்லை. படுத்தால் என் காலைப் பிடித்து ஸயீத் இழுப்பது போன்றிருக்கிறது என்பான்
முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்ய மன்னர் ஷாஜஹான் உத்தரவிட்ட போது ஹழ்ரத் செய்த துஆவின் விளைவு
மன்னர் ஷாஜஹானுக்கு ஒருமுறை பட்டாடை அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர் அணிந்தார். அப்போது ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் வேண்டாம் தந்தையே நீங்கள் பட்டாடை அணியக்கூடாது என் உஸ்தாத் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ஆண்கள் பட்டாடை அணியக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார்கள். என்று தடுக்க, அதைக் கேட்காத ஷாஜஹான் என்னைத் தடுக்க அவர் யார் என்று கூறியதுடன் பட்டாடைகளை அணிந்தார். அத்தோடு முல்லா ஜீவன் ரஹ் அவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். அது தெரிந்த முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் ரப்பிடம் தொழுது துஆச் செய்வதில் ஈடுபட்டனர். அதேநேரம்  இதை அறிந்து பயந்த ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் தன் தந்தையிடம் சென்று கெஞ்சுகிறார்கள். ஹழ்ரத் அவர்கள் நமக்கு எதிராக துஆச் செய்தால் என்ன ஆகும். எனவே தயவு செய்து கைது உத்தரவை வாபஸ் பெறுங்கள். என்று கெஞ்ச, மன்னர் ஷாஜஹான் கைது உத்தரவை வாபஸ் பெறுகிறார். அந்த உத்தரவை வாங்கிக் கொண்டு வேகமாக ஒளரங்கசீப் ரஹ் அவர்கள் உஸ்தாதிடம் வருவதற்குள் உஸ்தாத் அவர்கள் துஆ ஓதி கைகளை முகத்தில் தடவி விட்டார்கள். ஒளரங்கசீப் ரஹ் விஷயத்தைக் கூறியவுடன் முல்லா ஜீவன் ரஹ் அவர்கள் நீங்கள் இத்தகைய காரியத்தில் ஈடுபட்ட காரணத்தால் உம்முடைய ஆட்சிக்காலம் வரை தான் முகலாய அரசு நீடிக்கும் என்றார்கள். அதன்படி ஒளரங்கசீப் ரஹ் அவர்களோடு முகலாய ஆட்சி முடிவுக்கு வந்தது 
.  
அநீதமான அரசனின் தீமைக்கு எதிராக நமக்கு கற்றுத் தரப்பட்ட துஆக்கள்
ஆட்சியாளர் உங்களில் ஒருவரை அச்சுறுத்தினால் பின்வரும் துஆவை ஓதுங்கள்
عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم قال إذا تَخَوَّفَ أحَدُكُمُ السُّلْطانَ فَلْيَقُل اللَّهُمَّ رَبَّ السَّمَواتِ وَرَبَّ العَرْشِ العَظيم كُنْ لِي جاراً مِنْ شَرِّ فُلانِ بنِ فُلانٍ وَشَرِّ الجِنِّ والإِنْسِ وأتْباعِهِمْ أنْ يَفْرُطَ عَلَيَّ أحَدٌ مِنْهُمْ عَزَّ جارُكَ وَجَلَّ ثَناؤكَ وَلاَ إله  غَيْرُكَ رواه الطبراني  (الترغيب والترهيب
عن عامر قال : كنت جالسا مع زياد بن أبي سفيان فأتى برجل يحمل ، ما نشك في قتله ، قال : فرأيته حرك شفتيه بشئ ما ندري ما هو ، فخلى سبيله فأقبل إليه بعض القوم فقال : لقد جئ بك وما نشك في قتلك ، فرأيتك حركت شفتيك بشئ ما ندري ما هو ، فخلى سبيلك ، قال : قلت اللهم رب إبراهيم ورب إسحاق ورب يعقوب ورب جبريل وميكائيل وإسرافيل ومنزل التوراة والانجيل والزبور والقرآن العظيم [ مصنف ابن أبي شيبة ]
ஆட்சியாளர் ஜியாதிடம் ஒருவர் அழைத்து வரப்பட்டார். அவர் கொல்லப்படுவது உறுதி என்ற நிலை இருந்தது. ஆனால் அவர் நாவில் எதையோ முனுமுனுத்தவராக இருந்தார். சற்று நேரத்தில் அவரை ஜியாத் விடுவித்து விட்டார்அவரிடம் சிலர் உங்களுக்கான மரண தண்டனை உறுதியான நிலையில் நீங்கள் அழைத்து வரப்பட்டீர்கள். ஆனால் உமது நாவில் எதையோ முனுமுனுத்தவராக இருந்தீர்கள் பிறகு விடுவிக்கப்பட்டு விட்டீர்கள். அப்படி என்ன ஓதினீர்கள் என்று கேட்கப்பட்ட போது நான் இன்ன துஆவை ஓதினேன் என்று மேற்படி துஆவை ஓதிக்காட்டினார் 
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ عِنْدَ الْكَرْبِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْكَرِيمِ قَالَ وَكِيعٌ مَرَّةً لَا إِلَهَ إِلَّا اللَّهُ فِيهَا كُلِّهَا (ابن ماجة
عن الحسن بن حسن أن عبد الله بن جعفر رضي الله عنه تزوج امرأة فدخل بها فلما خرج قلت لها ما قال لك قلت قال إذا نزل بك أمر فظيع أو عظيم فقولي لا إله إلا الله الحليم الكريم لا إله إلا الله رب العرش العظيم سبحان الله رب العالمين فدعاني الحجاج فقلتها فقال لقد دعوتك وأنا أريد أن أضرب عنقك وما في أهلك اليوم أحد أحب إلي منك أو أعز منك  (سنن الكبرى )
ஹஸன் இப்னு ஹஸன் ரஹ் அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி அவர்கள் என் உறவுக்காரப் பெண்ணை மணமுடித்தார்கள். அப்பெண்ணிடம் முதலிரவையும் முடித்த பின்பு நான் அந்த அம்மையாரிடம் உங்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி அவர்கள் ஏதேனும் துஆவைக் கற்றுத் தந்தார்களா என்று கேட்டேன். அதற்கு அப்பெண் ஆம் ஏதேனும் இக்கட்டான சூழ்நிலை உனக்கு ஏற்பட்டால் இந்த துஆவை ஓது என அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரழி கூறியதாக மேற்படி துஆவை அந்தப் பெண் என்னிடம் கூறினார்கள். அந்த துஆவை நானும் கற்றுக் கொண்டேன். பின்பு ஒரு நேரத்தில் ஹஜ்ஜாஜ் என்னைக் கொல்வதற்காக அழைத்த போது நான் இந்த துஆவை ஓதினேன். அப்போது ஹஜ்ஜாஜ் என்னிடம் நான் உன் கழுத்தை வெட்டவே உம்மை அழைத்தேன். ஆனால் இன்று நீர் என் கண்ணுக்கு முன்னால் உம் குடும்பத்தார்களில் எனக்குப் பிரியமானவராக தெரிகிறீர் என்று ஹஜ்ஜாஜ் கூறினான்.

கருத்துகள் இல்லை:

பிரபல்யமான பதிவுகள்