ஆடை அழகாக இருப்பதும் சுன்னத்
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ.. 32 الاعراف)فقد دلت الآية على لباس الرفيع من الثياب والتجمل بها في الجمع والأعياد وعند لقاء الناس ومزاورة الإخوان.قال أبو العالية:كان المسلمون إذا تزاوروا تجملوا (قرطبي)وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُوا وَاشْرَبُوا وَالْبَسُوا وَتَصَدَّقُوا فِي غَيْرِ إِسْرَافٍ وَلَا مَخِيلَةٍ (بخاري)
يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ (31)الاعراف- والزينة هنا الملبس الحسن، إذا قدر عليه صاحبه -
நீங்கள் தொழும்போது அழகிய ஆடைகளை அவசியமாக்கிக் கொள்ளுங்கள். என்று இதற்கு பலர் விளக்கம் கூறியுள்ளனர். குறிப்பாக ஈத் ஜும்ஆ போன்ற நாட்களில்..
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى حُلَّةً سِيَرَاءَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوْ اشْتَرَيْتَ هَذِهِ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لَا خَلَاقَ لَهُ فِي الْآخِرَةِ ثُمَّ جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا حُلَلٌ فَأَعْطَى عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ كَسَوْتَنِيهَا وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا فَكَسَاهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَخًا لَهُ بِمَكَّةَ مُشْرِكًا (بخاري- باب مَنْ تَجَمَّلَ لِلْوُفُودِ - باب فِى الْعِيدَيْنِ وَالتَّجَمُّلِ فِيهِ - باب يَلْبَسُ أَحْسَنَ مَا يَجِدُ
இமாம் புகாரீ ரஹ் அவர்கள் ஈதுப் பெருநாட்களுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவது மேலும் தன்னை சந்திக்க வருபவர்களுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவது மாற்றார்களுக்கு அன்பளிப்பு வழங்குவது போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் கீழ்காணும் ஹதீஸை கொண்டு வந்துள்ளார்கள்.
கருத்து- உமர் ரழி அவர்கள் ஒருமுறை மஸ்ஜிதின் வாசலில் பட்டு கலந்த ஆடை விற்கப் படுவதைக் கண்டு அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இதை விலைக்கு வாங்கிக் கொண்டால் ஈதுப் பெருநாளுக்காகவும் தங்களைச் சந்திக்க வருபவர்களுக்காகவும் இதை அணிந்து கொள்ளலாமே என்று கேட்க அதற்கு நபி ஸல் அவர்கள் மறுமையில் யாருக்கு எவ்வித நற்கூலியும் இல்லையோ அவர் தான் இதை வாங்குவார் என்று கூறி மறுத்து விட்டார்கள். பின்பு சில தினங்கள் கழித்து அதே போன்ற பட்டாடை நபி ஸல் அவர்களுக்கு அன்பளிப்பாக தரப்பட்டதோ அதை உமர் ரழி அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். உடனே உமர் ரழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் இதை வேண்டாம் என்று தடுத்தீர்கள். இப்போது நீங்களே இதை எனக்கு அணியக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் இதை உமக்காக நான் கொடுத்தனுப்பவில்லை. மக்காவில் இருக்கும் உமது காஃபிரான சகோதரருக்கு கொடுத்து விடுங்கள் என்றார்கள்.
இதில் படிப்பினைகள் நிறைய உள்ளன. எனினும் முக்கியமான படிப்பினை ஈதுப் பெருநாட்களுக்காக அழகிய ஆடைகளை உடுத்துவதை நபி ஸல் அவர்கள் விரும்பியதால் தான் இதை தாங்கள் வாங்கிக் கொள்ளலாமே என உமர் ரழி அவர்கள் கேட்டார்கள். ஆனாலும் பட்டு என்பதால் நபி ஸல் மறுத்தார்கள்.
நண்பர்களை சந்திக்கும்போது தன் ஆடைகளை, அங்க அவயங்களை சரி செய்து கொள்வதும் நபிவழி தான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சில நேரங்களில் தண்ணீரில் தன் முகத்தைப் பார்த்து தலை முடியையும், தாடி முடியையும் சரி செய்வார்கள்
ஆடை என்பது மனிதனுக்கு கண்ணியம் சேர்க்கும் அம்சங்களில் முக்கியமான ஒன்றாகும். அதனால் அந்த கண்ணியத்தைக் கெடுக்க அதாவது சுவன ஆடைகளை உருவ வேண்டும் என்பதற்காகவே ஷைத்தான் ஆதம் ஹவ்வா இருவரிடம் குழப்பம் செய்தான்.
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِنْ سَوْءَاتِهِمَا وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ إِلَّا أَنْ تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ (20) وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ (21) فَدَلَّاهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَاتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا
2.சுவனம் கிடைப்பதற்காக வலிப்பு நோயையும் நான் பொறுத்துக் கொள்கிறேன் ஆனால் என் ஆடைகள் விலகி விடாதிருக்கு துஆச் செய்யுங்கள் என ஒரு பெண் கோரிக்கை வைத்தார்.
عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا (بخاري5652
அதாஃ ரஹ் அவர்கள் கூறினார்கள் என்னிடம் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் சுவனவாதியான ஒரு பெண்ணை உமக்குக் காட்டவா என்று கேட்டு விட்டு இதோ இந்த கறுப்பான பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து தனக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் அது நீங்க அல்லாஹ்விடம் துஆ செய்யும்படியும் கூறினார். நபி ஸல் அவர்கள் அப்பெண்ணிடம் நீ இதை பொறுத்துக் கொண்டால் உனக்கு சுவனம் உறுதியாகி விடும் என்றார்கள். அப்போது அந்தப்பெண் சுவனம் கிடைப்பதற்காக வலிப்பு நோயையும் நான் பொறுத்துக் கொள்கிறேன் ஆனால் என் ஆடைகள் விலகி விடாதிருப்பதற்கு மட்டும் துஆச் செய்யுங்கள் என ஒரு பெண் கோரிக்கை வைத்தார். அவ்வாறே நபி ஸல் துஆச் செய்தார்கள்.
3. அரசனிடம் ஈமானைப் பற்றி தைரியமாக பேசிய குகைவாலிபர்கள் அங்கிருந்து ஓடக் காரணம் ஆடையை உருவச் சொல்லி அரசன் சொன்னது தான்
إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا (10) الكهف -
فَيُقَال إِنَّ مَلِكهمْ لَمَّا دَعَوْهُ إِلَى الْإِيمَان بِاَللَّهِ أَبَى عَلَيْهِمْ وَتَهَدَّدَهُمْ وَتَوَعَّدَهُمْ وَأَمَرَ بِنَزْعِ لِبَاسهمْ عَنْهُمْ الَّذِي كَانَ عَلَيْهِمْ مِنْ زِينَة قَوْمهمْ وَأَجَّلَهُمْ لِيَنْظُرُوا فِي أَمْرهمْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ عَنْ دِينهمْ الَّذِي كَانُوا عَلَيْهِ وَكَانَ هَذَا مِنْ لُطْف اللَّه بِهِمْ فَإِنَّهُمْ فِي تِلْكَ النَّظْرَة تَوَصَّلُوا إِلَى الْهَرَب مِنْهُ وَالْفِرَار بِدِينِهِمْ مِنْ الْفِتْنَة وَهَذَا هُوَ الْمَشْرُوع عِنْد وُقُوع الْفِتَن فِي النَّاس أَنْ يَفِرّ الْعَبْد مِنْهُمْ خَوْفًا عَلَى دِينه (تفسير ابن كثير
வெண்மை ஆடை நல்லது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பச்சை, கறுப்பு நிற ஆடைகளையும் அணிந்துள்ளார்கள் சட்டையும் அணிந்துள்ளார்கள். சஹாபாக்களின் சட்டை என்பது கெண்டைக்காலின் பாதி வரைக்கும் இருந்தது. இப்போதுள்ள இளைஞர்கள் அணிவது போன்று இடுப்புக்கு மேல் உள்ளதாக இல்லை
عن أم سلمة رض قالت كان أحب الثياب إلى رسول الله صلى الله عليه وسلم القميص- عن المغيرة بن شعبة رض أن النبي صلى الله عليه وسلم لبس جبة رومية ضيقة الكمين(ترمذي)عن أبي إسحاق السبيعي يقول أدركتُهم وقُمُصُهم إلى نصف الساق أو قريب من ذلك وكم أحدهم لا يجاوز يده(التمهيد
முழுக்கைச் சட்டை அணிவது சுன்னத்
عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رضي الله عنها قَالَتْ كَانَتْ يَدُ كُمِّ قَمِيصِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الرُّصْغِ(ابوداود)
நபி ஸல் அவர்களின் சட்டைக் கை மணிக்கட்டு வரை இருந்தது.
சிறுநீர் கழிக்கும்போது நின்று கொண்டே ஆடையை தூக்க மாட்டார்கள் மாறாக பாதிக்கு மேல் உட்கார்ந்த பிறகு தான் ஆடையை தூக்குவார்கள் வெட்க உணர்வின் காரணமாக சிறுநீர் கழிப்பதற்காக தூரமாகச் சென்று விடுவார்கள்
عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَأَرَادَ أَنْ يَقْضِيَ حَاجَتَهُ فَقَالَ لِي ائْتِ تِلْكَ الْأَشَاءَتَيْنِ قَالَ وَكِيعٌ يَعْنِي النَّخْلَ الصِّغَارَ فَقُلْ لَهُمَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمَا أَنْ تَجْتَمِعَا فَاجْتَمَعَتَا فَاسْتَتَرَ بِهِمَا فَقَضَى حَاجَتَهُ ثُمَّ قَالَ لِي ائْتِهِمَا فَقُلْ لَهُمَا لِتَرْجِعْ كُلُّ وَاحِدَةٍ مِنْكُمَا إِلَى مَكَانِهَا فَقُلْتُ لَهُمَا فَرَجَعَتَا (ابن ماجة)حديث صحيح
இந்தஹதீஸ் BAZZAR நூலில் சற்று விரிவாக உள்ளது. அதாவது ஹுனைன் போரின் போது நபி ஸல் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது நபி ஸல் சிறுநீர் கழிக்க நாடினார்கள். நபி ஸல் எப்போது சிறுநீர் கழித்தாலும் சற்று தூரமாகவும், மறைவாகவும் செல்வார்கள். அங்கு மறைவு எதுவும் இல்லாததால் ஏதாவது மறைவு உள்ளதா என்று பார்க்கும்படி கூறினார்கள். சற்று தூரத்தில் சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, இன்னொரு மரம் இருந்தால் பார் என்றார்கள். நான் சென்று சற்று தூரத்தில் மற்றொரு சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, அந்த இரு மரங்களையும் சேர்ந்தாற்போல் இங்கு வரும்படி அல்லாஹ்வின் தூதர் அழைத்த தாக கூறி அழைத்து வா என்றார்கள். நான் போய் கூறியவுடன் ஒன்றுக்கொன்று தூரமாக இருந்த அந்த இரு மரங்களும் ஒன்று சேர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகே வந்து மறைத்துக் கொண்டன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறுநீர் கழித்தவுடன் அவ்விரு மரங்களும் பிரிந்து சென்று அதனதன் இடத்தில் போய் நின்று கொண்டன. நபியவர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதில் மரங்களும் பங்கு வகிக்கின்றன என்றால் அவைளுக்கும் அவர்கள் அருட்கொடை..
தொப்பி, தலைப்பாகை அணிவதும் சுன்னத்
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ(بخاري)
قَالَ رُكَانَةُ وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فَرْقُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ الْعَمَائِمُ عَلَى الْقَلَانِسِ(ابوداود)
நமக்கும் இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் வித்தியாசம் தொப்பி அணிந்து தலைப்பாகை அணிவதாகும்
عن عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ عَمَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَدَلَهَا بَيْنَ يَدَيَّ وَمِنْ خَلْفِي(ابوداود)
عَنْ أَبِي يَزِيدَ الْخَوْلَانِيِّ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الشُّهَدَاءُ أَرْبَعَةٌ رَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الْإِيمَانِ لَقِيَ الْعَدُوَّ فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ فَذَلِكَ الَّذِي يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ أَعْيُنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ هَكَذَا وَرَفَعَ رَأْسَهُ حَتَّى وَقَعَتْ قَلَنْسُوَتُهُ قَالَ (الراوي)فَمَا أَدْرِي أَقَلَنْسُوَةَ عُمَرَ أَرَادَ أَمْ قَلَنْسُوَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ...(بخاري)
ஷுஹதாக்கள் நான்கு சாரார். அவர்களில் முதலாவது வகை. புதிதாக ஈமான் கொண்ட சிறந்த மனிதர். அவர் போர்க்களத்தில் எதிரியை சந்தித்தார். அப்போதே ஷஹீதாக்கப்பட்டார். அவரது அந்தஸ்து மிகவும் உயர்ந்தது அவரை மற்ற மக்கள் தங்களின் தலையை உயர்த்தி அன்னாந்து பார்ப்பார்கள் என்று கூறியவர்களாக தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி விழுந்தது
தலையை உயர்த்திக் காட்டினார்கள் என்றால் நபி ஸல் அவர்கள் தலையை உயர்த்திக் காட்டும்போது தொப்பி விழுந்த தா அல்லது அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவிக்கும் உமர் ரழி அவர்களின் தலையை உயர்த்திக் காட்டும்போது தொப்பி விழுந்ததா என்பதில் அறிவிப்பாளர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது.ஆக மொத்தம் யாரேனும் ஒருவர் தொப்பி அணிந்தார்கள் என்பது உறுதியான விஷயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக