மாவீரனை எழுப்பாதீர்கள் "நீங்கள் தாங்க மாட்டீர்கள்"
ஒரு கல்லறை என்ன செய்யும்.?
ஜெருசலமும் அதை சுற்றி உள்ள பகுதிகளும் முழுமையாக சலாவுதீன் அய்யுபி(ரஹ்) அவர்களின் கைக்குள் வந்தது. மாவீரன் சலாவுதீன் அய்யுபி கிபி 1193 ஆம் ஆண்டு மரணமடைந்தார். சுல்தான் ஸலாவுதீன் அய்யுபி வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலுவை யுத்தக்காரர்கள் மீண்டும் ஜெருசலத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என காத்துக் கொண்டிருந்தனர். ஒரு வருடம், இரு வருடம் அல்ல 700 ஆண்டுகள் காத்திருந்தனர். 19ஆம் நூற்றாண்டில் உதுமானிய பேரரசை வீழ்த்தி, ஜெருசுலத்தை மீண்டும் சிலுவை யுத்தக்காரர்கள் கைப்பற்றினார்கள். ஜெருசுலத்தை கைப்பற்றியவுடன் கிபி கிபி 1917 ல் சிரியா சென்ற பிரிட்டிஷ் படை தளபதி எட்மண்ட் ஆலன் நேராக சுல்தான் ஸலாவுதீன் அய்யூபி அவர்களின் அடக்கஸ்தலம் சென்று “Today The Wars Of Crusaders Are Completed” இன்றோடு சிலுவை யுத்தக்காரர்களின் போர் முடிவு பெற்றது என்று கூறினான்.
அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் படை தளபதி ஹென்றி கொரோடு சுல்தான் சலாவுதீன் அடக்கஸ்தலத்தின் மீது கால் வைத்து: “Awake Salahudeen! We Have Returned, My Presence Here Consecrate The Victory Of The Cross Over Crescent” எழுந்திரு சலாவுதீன்! நாங்கள் திருப்பி வந்திருக்கிறோம்! புனிதத்தன்மை வாய்த என்னுடைய வருகையின் மூலம் சிலுவை, பிறையை வென்றது. 700 வருட பகையை பாருங்கள்.... கடைசியாக 1924 ஆம் ஆண்டு ஜெருசலம் மீண்டும் யூதர்களின் கையில் சென்று விட்டது.
வரலாறு முக்கியம் ஏனென்றால் அது நிகழ்காலத்தை வடிவமைக்கிறது என்பார்கள் "சுல்தான் ஸலாவுதீன் வெற்றியும் அவரின் வரலாறும் எப்படி எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையோ.? அதேபோல முகலாய மன்னர் மாவீரன் அவுரங்கசீப் வெற்றியும், வரலாறும் எதிரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அவுரங்கசீப்பை இந்துக்களுக்கு எதிராக கட்டமைக்க தொடர்ந்து இந்துத்துவா பாசிச கும்பல்கள் முயன்று வருகின்றன இது அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முகலாய மன்னர்களும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று கட்டமைக்க அவர்கள் விரும்புகின்றனர். மன்னர் பாபர் முதல் மன்னர் பகதூர்ஷா வரை இதற்கு விதிவிலக்கல்ல. வரலாறுகளில் மண்ணுக்காகவும், அதிகாரத்திற்காகவும் எண்ணிலடங்கா போர்கள் நடந்துள்ளன. ஆனால் முஸ்லிம் மன்னர்கள் என்று வரும்போது மட்டும் அதை மதத்திற்காகவும் கலாச்சாரத்திற்காகவும் நடந்த போர் என இந்துத்துவ கும்பல்கள் திரித்து, சித்தரித்து, தற்போதைய சூழ்நிலையில் அவர்களின் அரசியலுக்கும் தேர்தல் கால யுக்திகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். பிளவுவாத அரசியல் மட்டுமே நாம் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க முடியும் என ஆணித்தரமாக நம்புகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்த அவுரங்கசீப் என்ற பெயர் பாசிச கும்பல்களுக்கு மிகவும் எரிச்சல் ஊட்டக்கூடிய பெயர். இவரை விட முகலாய மன்னர்களில் விமர்சிக்கப்பட்ட மற்றொரு மன்னரை கைகாட்ட முடியாது என்ற அளவிற்கு இவர் மீது பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.
மன்னர் அவுரங்கசீப் பெயரில் உள்ள நகர்களையும், சாலைகளையும் பெயர் மாற்றம் செய்து ஆனந்தம் அடைந்தனர். ஆனாலும் வெறி அடங்கவில்லை. அவ்வப்போது மாமன்னர் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என பாசிச கும்பல்கள் பேசி வருவது வழக்கமான ஒன்று என்றாலும், இம்முறை மிகத் தீவிரமாக இறங்கியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் மிக நெருக்கமாக இருப்பதால் இவர்கள் தற்பொழுது இந்த விஷயத்தை அரசியல் வெற்றிக்கு பயன்படுத்த முயல்கின்றனர்.
அவுரங்கசீப்பை பற்றி whatapp ஸ்டேட்டஸ் வைத்த முஸ்லிம் இளைஞர் கைது! அவுரங்கசீப் பற்றி தவறாக சித்தரித்து படம் எடுத்ததே சட்டசபையில் சுட்டிக்காட்டிய எம்எல்ஏ சஸ்பெண்ட்!! இப்படி அவுரங்கசீப்பிற்கு ஆதரவாக பேசினால் நசுக்கி விடுவேன் என மிரட்டும் பாஜக முதலமைச்சர்கள்! எனப்பட்டியல் நீளுகிறது.
பாசிசம் அவுரங்கசீப்பின் வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறது. பொய்யையும் அவதூறையும் அவர் மீது தாராளமாக அள்ளித் தெளிக்கிறது. இவற்றையெல்லாம் கொண்டு தனது சித்தாந்தத்தை வெற்றி பெற வைக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறது.
ஒளரங்கசீப்பின் கல்லறை மிகவும் எளிமையாகக் கட்டப்பட்டிருக்கிறது. அங்கு வெறும் மண் மட்டும்தான் இருக்கிறது. கல்லறை ஒரு சாதாரண வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்கிறது. சமாதியின் மீது ஒரு செடி நடப்பட்டுள்ளது. இவ்வாறு தான் அவரின் கல்லறை அமைந்துள்ளது. இப்படித்தான் எனது கல்லறை சாதாரணமாக அமைய வேண்டும் என அவர் உயிர் எழுதி வைத்திருந்தார். அவரின் கல்லறையை கட்டுவதற்கு அந்த நேரத்தில் கல்லறையைக் கட்ட 14 ரூபாய் 12 அணா செலவானதாகச் சொல்லப்படுகிறது.
அவரின் கல்லறை மிக சாதாரணமாக இருக்கிறது என எண்ணி விட வேண்டாம். "மன்னர் அவுரங்கசீப்பை எழுப்ப முயற்சிக்காதீர்கள், அது உங்களின் அத்தியாயங்களை முடித்து விடும், உங்களின் நிம்மதியை கெடுத்து விடும்"
அவுரங்கசீப்பின் மீது எந்த அளவுக்கு பொய்களும் அவதூறுகளும் பரப்பப்படுகிறது, அந்தப் பொய்களுக்கும் அவதூறுகளுக்கும் எதிராக உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விஷயத்தில் பொது சமூகம் தொய்வை சந்தித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகம் வரலாற்றைப் படிப்பதையும் வரலாற்றை பரப்புவதையும் ஒரு பெரிய பாரச் சுமையாக கருதுகிறது.
பாசிசம் முஸ்லிம்களுக்கு எதிராக உயிரோடு இருப்பவர்கள் மீதும், உயிரற்ற சடலத்தின் மீதும் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். கருத்தியலாகவும், அரசியலாகவும், அனைத்து வகையிலும் யுத்தத்தை தொடங்கி விட்டார்கள். எந்த வகையில் எதிர்ப்புகள் வந்தாலும், அந்தத் தளத்தில் நின்று அதை முறியடிக்கும் வல்லமைகளை முஸ்லிம் சமூகம் பெற்றிருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!
அவுரங்கசீப்புகள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை சமகாலத்தில் வாழும் முஸ்லிம்கள் நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் வரலாறு நம்மை மன்னிக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக