நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், பிப்ரவரி 25, 2021

உண்மையான வன்முறை த்தீவிரவாதிகள் யார்,

வன்முறைத்_தீவிரவாதிகள்_யார்?

குண்டுவெடிப்பு மற்றும் தீவிரவாதம் என்ற உடனேயே பொது சமூகத்திற்கு நினைவில் வருவது தாடிவைத்த குல்லாய் அணிந்த நபர்கள்தான், அதாவது இஸ்லாமியர்கள். பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊடுருவியுள்ள அனைத்து வெகுஜன தொடர்பு, திரைப்படம் உள்ளிட்ட அனைத்துமே தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள் என்ற ஒரு பார்வையை உருவாக்கிவிட்டது, ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை உண்மையான தீவிரவாத அமைப்பு எது என்பதை கீழே உள்ள புள்ளிவிபரங்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்

1. ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 2006

2. மக்கா மசூதி குண்டுவெடிப்பு அய்தராபாத் 2006

3. சம்ஜோதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு 2006

4. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2006

5. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2007

6. மோண்டசா மசூதி குண்டுவெடிப்பு குஜராத் 2007

7. நான்தேட் குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006

8. பர்மானி குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006

9. ஜல்னா குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2008

10. பூனே குண்டுவெடிப்பு 2008

11. கான்பூர் குண்டுவெடிப்பு 2004

12. கன்னூர் குண்டுவெடிப்பு 2007

13. பன்வேல் குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2007

14. தானே குண்டுவெடிப்பு 2007

15. வாஷி நவிமும்பை குண்டுவெடிப்பு 2009

16. கோவா குண்டுவெடிப்பு 2010

#இந்த_குண்டுவெடிப்பில்_தொடர்புடைய_குற்றவாளிகளின்_பெயர்:-

1. சுனில் ஜோஷி - மத்தியப்பிரதேச ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் 1990 - 2003 வரை பதவி வகித்தவர்.

2. சந்தீப் டாங்கே கஷ்யப பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் ஷாஜபூர் மத்தியப்பிரதேசம் 2005 - 2007

3. தேவேந்திர குப்தா ஜார்கண்ட் ஜமாதாடா - ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பிரச்சார் பிரமுக்.

4. லோகேஷ் சர்மா - ஆர்.எஸ்.எஸ். கார்யவாகக் தேவ்கட் மத்தியப்பிரதேசம்.

5. சந்திரகாந்த லாவே - ஜில்லா பிரமுக் ஷாஹாபூர் மத்திய பிரதேசம். 6. சாமியார் அசிமானந்தா- மிகவும் மூத்த ஆர்.எஸ். எஸ்.தலைவர்களுள் ஒருவர்.

7. ராஜேந்திர சமுந்தர் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர ஊடகச்செயற்பாட்டாளராக இருந்தவர். பிரச்சார் பிரமுக் மகாராட்டிரா.

8. முகேஷ் வாசனி - குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர், கோத்ரா மாவட்ட ஆர்.எஸ்.எஸ் - கார்யகர்த்தா, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருந்த இவர் நிரபராதி என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்.

9. ராம் காலசங்காரா - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

10. கமல் சவுகான் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

11. சாமியாரினி பிரஞ்யா சிங் - ஆர்.எஸ்.எஸ் கார்ய கர்த்தா அபினவ் பாரத் அமைப்பின் இரண்டாம் மட்டத் தலைவர்

12. ராஜேந்திர சவுதிரி - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

13. ராம்பாலக் தாஸ் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

14. லக்சுமந்தாஸ் தன்சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

15. ராம் மனோகர் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

16. குமார் சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

17. தேஜ்ராம் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

18. சந்தீப் உபாத்தியாய்

19. சரன் உபாத்தியாய் சகோதரர்கள் - இருவருமே ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தாக்கள்

20. ராகுல் பாண்டே -ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா

21. உமேஷ் தேஷ்பாண்டே -ஆர்.எஸ்.எஸ். கார்ய கர்த்தா

22. சஞ்சய் சவுதிரி -அபினவ்பாரத்

23. ஹிமான்சு பான்சே - அபினவ்பாரத்

24. ராம்தாஸ் முல்கே -அபினவ்பாரத்

25. நரேஷ் ராஜாகேடாவர் -சனாதன் சான்ஸ்தா

26. யோகேஷ் வித்துல்கள் -சனாதன் சான்ஸ்தா

27. மாருதி பாங்கே -சனாதன் சான்ஸ்தா

28. துப்தேவர் குருராஜ்- சனாதன் சான்ஸ்தா

29. மிலிந்து எகாவோட் -சனாதன் சான்ஸ்தா

30. மாலேகவுடா பாட்டில் -சனாதன் சான்ஸ்தா

31. கோவா தேவாயலத்தில் குண்டுவைக்கச்சென்ற போது தவறுதலாக குண்டுவெடித்து நிகழ்விடத்திலேயே உடல் சிதறி மரணமடைந்தார்.

32. யோகேஷ் நாயக் -சனாதன் சான்ஸ்தா

33. விஜய் தோல்கர் -சனாதன் சான்ஸ்தா

34. வினாயக் பாட்டில்- சனாதன் சான்ஸ்தா

35. பிரசாத் ஜுவேகர் -சனாதன் சான்ஸ்தா

36. சாரங்க் குல்கர்னி, தனஞ்சய் அப்டேகர், திலிப் மாங்கோகர், ஜெய்பிரகாஷ் அன்னா, ருத்ரா பாட்டில் பிரசாத் அஷ்டேகர் சனாதன் சான்ஸ்தாவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையவர்கள். 37. ராஜேஷ் கட்கரி -சனாதன் சான்ஸ்தா

38. விக்ரம் பாவே இவர்கள் அனைவர் மீதும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு பிணை வழங்கப் பட்டு சுதந்திரமாக வலம் வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் இதர இந்துத்துவ அமைப்பினரின் வன்முறை வெறியாட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை

1980 மோர்தாபாத் கலவரம் 400 பேர் மரணம்

1983 நெல்லிலே அஸ்ஸாம் கலவரம் 10000 படுகொலை

1987 ஹாசின்புரா வன்முறை 100பேர் படுகொலை

1989 பாகல்பூர் வன்முறை 1000 பேர் படுகொலை

1992 மும்பை கலவரம் 3000 பேர் படுகொலை

2002 குஜராத் கலவரம் 5000 பேர் படுகொலை 2013 முசாபர் நகர் வன்முறை 180 பேர் படுகொலை

1980 முதல் இன்றுவரை பாஜக- ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ அமைப் பினர் இஸ்லாமியர்களை திட்டமிட்டு படு கொலை செய்த பட்டியல் மேலே உள்ளது. மேலும் மாட்டுக்காக பல இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர், பல பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டன.

நாட்டில் 15 இடங்களில் குண்டுவைத்து அந்த பழிகளை இஸ்லாமியர்கள் மீது போட்டு அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்தனர், மேலும் போலியான என்கவுன்ட்டர் அதுவும் இஸ்லாமியர்களை மட்டும் என்கவுன்ட்டர் செய்தனர்.

ஆனால் பல குண்டுவெடிப்புகளில் சந்தேகத்தின் பெயரில் பிடித்துச்சென்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இன்றளவும் விசாரணைக்கைதிகள் என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் வாடுகின்றனர். இது குறித்து உச்சநீதிமன்றமே மாநில அரசுகளையும் மத்திய அரசையும் கண்டித்துள்ளது. அய்தராபாத் குண்டுவெடிப்பிற்குப் பிறகு விசாரணை என்ற பெயரில் சிறையி லடைக்கப்பட்ட பல இஸ்லாமிய இளைஞர்கள் 8 முதல் 10 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவிக்கப்பட்டனர்.

இந்தியாவில் முதல் தீவிரவாத செயல் காந்தியைக் கொன்றதாகும். அதைச்செய்தது இந்துமகாசபையைச் சேர்ந்த நாதுராம் கோட்சே. ஆனால் அவரை தேசபக்தராக மாற்றும் நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது.

இந்துத்துவ தீவிரவாதிகளின் பிடியிலிருந்து இந்த தேசத்தை விடுவிக்க இரண்டாம் சுதந்திர போராட்டத்தை முன்னெடுப்பது தேசப்பற்றாளர்களின் மீது உள்ள வரலாற்றுக் கடமை...

ரஜப் அல்லாஹ்வின் மாதம்,

ரஜப்மாதம்

قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي…….)).

الشيخ الألباني 3094

‘ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் ‘உலுல் அஸ்ம்’ என்று அந்த ரசூல்மார்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரைத் தெரிவு செய்து அவர்களில் மிக மிகச் சிறப்பான நபியாக ரசூலாக அடியானாக அண்ணலார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் தேர்வு செய்தான்.

இவ்வாறே இடங்களைப் படைத்த அல்லாஹ் மக்கா முகர்ரமா. மதீனா முனவ்வரா, பைத்துல் முகத்திஸ் ஆகிய இடங்களை ஏனைய சகல இடங்களைவிடவும் கண்ணியப்படுத்தி வைத்தான். இது போல கால நேரங்களைப் படைத்த அல்லாஹ் வெள்ளிக்கிழமையை நாட்களின் தலைவனாகவும் மாதங்களில் முஹர்ரம், துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, ரஜப், ஆகிய நான்கு மாதங்களை அல்லாஹ் சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான்.

குர்ஆனில் பதியப்பட்ட புனிதமிக்க மாதங்கள்

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً‌  وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ‏
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 9:36)

ஹதீஸில் பதியப்பட்ட புனிதமிக்க மாதங்கள்

عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِي بَكْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَا لأرض السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَان (البخاري, ومسلم).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை – துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.
என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புகாரி 3197. 4406. 4662. 5550)

வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளிலிருந்து இந்த நான்கு மாதங்களும் கண்ணியமாக்கப்பட்டிருந்த காரணத்தினால்தான் நபிகள் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பிற்கு முன்பிருந்த காலத்து மக்களிடத்திலும் இந்த மாதங்கள் சிறப்பானதாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. இன்னும் இந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள் என்றும் அல்லாஹ் உத்தரவிட்டிருக்கிறான். அதனால்தான் கண்ணியமிக்க இந்த மாதங்களில் புரியப்படும் நல்லமல்களுக்கு அதிகபட்ச நற்கூலியும், பாவச் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். கடும் குற்றச் செயல்களாகக் கருதப்படும் என ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்திருக்கிறார்கள்.

ரமலானுக்கான பயிற்சி மாதம் ரஜப்

ரமலானுக்காக எமக்கு பயிற்சிப் பாசறையாக ரஜப் மாதம் திகழ்கிறது. ரமலான் மாதத்தில் நற்காரியங்களைச் செய்வதற்கு நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும். ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் மற்ற அமல்களையும் இந்த மாதத்திலும் நிறைவேற்றும்படி நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம்.

சன்மார்க்க அறிஞர்களில் ஒருவராகிய அபூபகர் அல்-பல்கி (ரஹ்மதுல்லஹி அலைஹி)அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “ரஜப் மாதம் விதைகளை விதைக்கப்படும் மாதமாகும். ஷஃபான் மாதமாவது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் மாதமாகும். ரமலான் மாதமோ பழங்களை அறுவடை செய்யும் மாதமாகும்” (நூல்: லதாயிஃபுல் மஆரிஃப்)

அளவு கடந்து அமல் செய்யக் கூடாது

عَنْ مُجِيبَةَ الْبَاهِلِيَّةِ عَنْ أَبِيهَا أَوْ عَمِّهَا أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ انْطَلَقَ فَأَتَاهُ بَعْدَ سَنَةٍ وَقَدْ تَغَيَّرَتْ حَالُهُ وَهَيْئَتُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَمَا تَعْرِفُنِي قَالَ وَمَنْ أَنْتَ قَالَ أَنَا الْبَاهِلِيُّ الَّذِي جِئْتُكَ عَامَ الْأَوَّلِ قَالَ فَمَا غَيَّرَكَ وَقَدْ كُنْتَ حَسَنَ الْهَيْئَةِ قَالَ مَا أَكَلْتُ طَعَامًا إِلَّا بِلَيْلٍ مُنْذُ فَارَقْتُكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ لِمَ عَذَّبْتَ نَفْسَكَ ثُمَّ قَالَ صُمْ شَهْرَ الصَّبْرِ وَيَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ قَالَ زِدْنِي فَإِنَّ بِي قُوَّةً قَالَ صُمْ يَوْمَيْنِ قَالَ زِدْنِي قَالَ صُمْ ثَلَاثَةَ أَيَّامٍ قَالَ زِدْنِي قَالَ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ صُمْ مِنَ الْحُرُمِ وَاتْرُكْ وَقَالَ بِأَصَابِعِهِ الثَّلَاثَةِ فَضَمَّهَا ثُمَّ أَرْسَلَهَا (أبوداود, أحمد).

முஜீபதுல் பாஹிலிய்யா நபிகளார் (ஸல்) அவர்களிடம் வந்துவிட்டு சென்றார்கள். அதன் பின் ஒரு வருடம் கழித்து மறுபடியும் வந்த போது அவரது நிலை மாறியிருந்தது. நபிகளாரிடம் என்னை நீங்கள் அறியமாட்டீர்களா? அறத்கு நபியவர்கள் நீங்கள் யார்? நான் தான் அல்பாஹிலீ சென்ற வருடம் வந்து உங்களை சந்தித்து விட்டு சென்றேன். ஏன் நீர் இந்தளவு மாறிப்போயிருக்கிறீர் என்று நபியவர்கள் கேட்டார்கள்.

நான் உங்களை பிரிந்து சென்றதிலிருந்து இரவில் மாத்திரம் தான் உண்ணக்கூடியவனாக இருந்தேன். அதற்கு நபியவர்கள் எதற்காக நீர் உம்மை வருத்திக் கொள்கிறீர், பொறுமையுடைய மாதத்தில் மாத்திரம் நோன்பு வைப்பதுடன், ஒவ்வொரு மாதமும் ஒரு நோன்பை வையுங்கள். அதற்கு அவர் இன்னும் அதிகப்படுத்துங்கள் எனது உடலில் வலிமை இருக்கிறது என்று கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் இரண்டு நோன்பு வைக்குமாறு நபியவர்கள் கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று அவர் கேட்டுக்கொண்ட போது ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு வைக்குமாறு கூறினார்கள். இன்னும் அதிகப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்ட போது புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள், புனிதமான மாதங்களில் நோன்பு வையுங்கள் விடுங்கள் என்று நபியவர்கள் தனது மூன்று விரல்களையும் இணைத்து பிரித்துக்காட்டினார்கள்’ (அபூதாவுத், அஹ்மத்).

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ,அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணஙகுவேன், என்று நான் கூறிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. (இது பற்றி அவர்கள் என்னிடம் கேட்டபோது) “என் தந்தையும் தாயும் தஙகளுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே!” என்றேன். நபி (ஸல்) அவாகள், “இது உம்மால் முடியாது! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறஙகும்! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வையும்! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடஙகு நற்பலன் அளிக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்!” என்றார்கள். நான், “என்னால் இதைவிட சிறப்பானதைச் செய்ய முடியும்.” என்று கூறினேன். “அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டுவிடுவீராக!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு “என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்” என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!, இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்!” என்றார்கள். நான் “என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் “இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை!” என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி 1976

ரஜப் மாதத்தில் நோன்பு வைப்பதன் சிறப்பு

(( أن رسول الله صلى الله عليه وسلم لم يصم بعد رمضان إلا رجباً وشعبان

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானுக்கு பின் ரஜபிலும், ஷஃபானிலும் தவிர நோன்பு நோற்கவில்லை’

இமாம் பைஹகி (ரஹ்) , இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

من صام ثلاثة أيام من رجب كتب الله له صيام شهر ومن صام سبعة أيام أغلق عنه سبعة أبواب من النار

‘எவர் ரஜப் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்பாரோ அவருக்கு ஒரு மாதம் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் எழுதி விடுகிறான். எவர் ஏழு நாட்கள் நோன்பு நோற்பாரோ நரகத்தின் ஏழு வாயல்களும் அவரை விட்டு மூடப்பட்டு விடும்’

إن شهر رجب شهر عظيم ، من صام منه يوماً كتب الله له صوم ألف سنة

‘நிச்சயமாக ரஜப் மாதம் ஒரு மகத்தான மாதமாகும். எவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு ஆயிரம் வருடம் நோற்பு நோற்ற நன்மை கிடைக்கும்’

إن في الجنة نهراً يقال له رجب ماؤه أشد بياضاً من اللبن وأحلى من العسل من صام يوماً من رجب سقاه الله من ذلك النهر (البيهقي).

நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு ஆறு இருக்கின்றது அதன் தண்ணீர் பாலை விட வென்மையாகும், அதன் சுவை தேனை விட இனிமையாகும். எவர் ரஜப் மாதத்தில் ஒரு நோன்பை நோற்பாரோ அவருக்க அந்த ஆற்றிலிருந்து அல்லாஹ் நீர் புகட்டுவான்.’

நோன்பாளியின் பேணுதல்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!’ (என்று அல்லாஹ் கூறினான்)’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி 1894
அத்தியாயம் : 30. நோன்பு

ரமலானுக்கான துஆவை கொண்டு பயிற்சி

இம்முழு மாதத்தைப் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக உறுதியான ஆதாரத்துடன் அறிய வருவது என்னவென்றால்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ ( أحمد )

ரஜப் மாதத்தின் பிறையை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டவுடன் பின்வரும் துவாவை ஓதுவார்கள். ‘அல்லாஹும்ம பாரிக்லனா ஃபீ ரஜபின் வஷஃபான வபல்லிங்னா ரமழானன’ (யா அல்லாஹ்! ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக) என்று நமது நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாத துவக்கத்திலிருந்து புனித ரமழான் மாதத்தினை அடையும் வரை ஓதி வந்திருக்கிறார்கள். (நூல் முஸ்னத் அஹ்மத், தப்ரானீ)

ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.
(அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம், ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க, வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு வலா அக்திரு. வதுஅலமு வலா அஉலமுஇ வஅன்த்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் கைருன்லீ ‘ஃபீ தீனி, வமஆஷீ, வ ஆம்பத்தி அம்ரீ’ ஃ ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹிஃ ஃபக்துர்ஹு லீ. வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆஜிலிஹி’ஃ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர கான, ஸும்ம ரள்ளினீ பிஹி’ என்று பிரார்த்தித்து, ‘உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்’ என்று கூறினார்கள்.
(பொருள்: இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், ‘நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.)
ஸஹீஹ் புகாரி 6382
அத்தியாயம் : 80. பிரார்த்தனைகள்

இந்த துஆ ஸஹீஹான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது இதை ஓதுவது சுன்னத்தாகும். ஆகவே தினமும் இந்த தூஆவை நாமும் ஒதுவது சுன்னத்தாகும்.

ரமலானுக்காக குர்ஆனை கொண்டு பயிற்சி

فضل رجب على سائر الشهور كفضل القرآن على سائر الأذكار

‘ஏனைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ரஜப் மாதத்தின் சிறப்பு, ஏனைய திக்ருகளை விட குர்ஆனுக்கு இருக்கும் சிறப்பை போன்றதாகும்.’

ரமலானுக்காக தொழுகையை கொண்டு பயிற்சி

من صلى المغرب في أول ليلة من رجب ثم صلى بعدها عشرين ركعة ، يقرأ في كل ركعة بفاتحة الكتاب ، وقل هو الله أحد مرة ، ويسلم فيهن عشر تسليمات ، أ تدرون ما ثوابه ؟ ……قال : حفظه الله في نفسه وأهله وماله وولده ، وأجير من عذاب القبر ،وجاز على الصراط كالبرق بغير حساب ولا عذاب

‘ரஜபுடைய ஆரம்ப இரவில் ஒருவர் மஃரிபை தொழுது, அதன் பின் 20 வது ரக்அத்துகள் தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தின் பின் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஓதி பத்து ஸலாம்களை கொடுத்தால் அவருக்கு கிடைக்கும் கூலியை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ் அவரையும், அவரது குடும்பத்தினரையும், அவரது செல்வங்களையும், அவரது குழந்தைகளையும் நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பதுடன், எந்த வித கேள்வி கணக்கும், தண்டனையுமின்றி மின்னல் வேகத்தில் ஸிராதை அவர் கடந்து செல்வார்’

(من صام من رجب وصلى فيه أربع ركعات …. لم يمت حتى يرى مقعده من الجنة أو يرى له

‘ரஜப் மாதம் ஒருவர் ஒரு நோன்பை நோற்று, நான்கு ரக்அத்துகள் தொழுவாரானால், அவர் சுவர்க்கத்தில் தங்குமிடத்தை பார்க்காமல், அல்லது அது காட்டப்படாமல் அவர் மரணிக்கமாட்டார்’

ரமலானுக்காக திக்ரை கொண்டு பயிற்சி

அபான் இப்னு ஙயாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கும் மற்றொரு நபிமொழியும் பைஹகியில் காணப்படுகிறது. ரஜபில் ஓர் இரவுண்டு. அவ்விரவில் நல்லமல் புரிவோருக்கு நூறு ஆண்டுகள் நல்லமல் புரிந்த கூலி கிடைக்கும். அது ரஜபு மாதத்தின் 27வது இரவாகும். அவ்விரவில் யாராவது 12 ரக்அத்கள் தொழுதால் ஒவ்வொரு ரக்அத்திலும் ஸூரத்துல் பாத்திஹாவும், வேறு ஏதாவது ஸூரத்தும் ஓத வேண்டும். ஒவ்வொர இரண்டு ரக்அத்களும் தொழுது முடித்த பின்னர், ‘ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்’ என்று 100 தடவைகளும், இஸ்திக்பார் 100 தடவைகளும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது 100 தடவை ஸலவாத்துகளும் ஓதிவிட்டு மறுமை, இம்மை சம்பந்தப்பட்டவை குறித்து தேவையானவற்றை துஆச் செய்யலாம். பின்னர் பகலில் நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் அவரது துஆக்களை ஏற்றுக் கொள்வான்.

அல்லாஹ் நபியை நேசிப்போம்

அமல்கள் இல்லாவிட்டாலும் அல்லாஹ்வையும் நபியவர்களை நேசிக்க வேண்டும்

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘மறுமை நாள் எப்போது வரும்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதற்காக என்ன முன்முயற்சி செய்துள்ளாய்?’ என்று கேட்டார்கள். அவர், ‘அதற்காக நான் அதிகமான தொழுகையையோ, நோன்பையோ தான தர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்’ என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி 6171
அத்தியாயம் : 78. நற்பண்புகள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
ஓர் அடியாரை அல்லாஹ் நேசிக்கும் பொழுது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களை அவன் அழைத்து ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று கூறுவான். எனவே, அவரை ஜிப்ரீலும் நேசித்துவிட்டு விண்ணகத்தில் வசிப்பவர்களை அழைத்து ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று ஜிப்ரீல் அறிவிப்பார். உடனே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்குப் பூமியில் வசிப்பவர்களிடமும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி 6040
அத்தியாயம் : 78. நற்பண்புகள்

நன்றி அல்பலாஹ்



நபிகள் நாயகம் ஸல் தனது மருமகன் ஹழ்ரத் அலி ரலி க்கு உபதேசம்,

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தனது மருமகன் ஹழ்ரத் அலி ரழியல்லாஹு
அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.

“அலியே! ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல்
உறங்கவேண்டாம்.

1. முழு குர்ஆனை ஓதாமல் உறங்காதே. 

2. தினமும் 4000 தீனார்கள் தர்மம் செய்யாமல்
உறங்காதே.

3. கஃபதுல்லாஹ்வை தவாபு செய்யாமல் உறங்காதே.

4. சுவர்க்கத்தில் உனது இடத்தை பாதுகாக்காமல்
உறங்காதே.

5. உனது (ஹவா நஃப்ஸ் என்ற)எதிரியைக்  கொல்லாமல் உறங்காதே.

அதற்கு ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு,
“நாயகமே! அனைத்தும் ஒரு இரவில் எப்படி சாத்தியம்
என கேட்க..

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

1. குல்ஹூவல்லாஹூ சூராவை 3 முறை ஓதினால் குர்ஆன் முழுவதும் ஓதிய நன்மை பெறுவீர்.

2. சூரத்துல் பாத்திஹாவை 4 முறை ஓதினால் 4000
தீனார்கள் தர்மம் செய்த நன்மை பெறுவீர்.

3. நான்காம் கலிமாவை 10 முறை ஓதினால் கஃபாவை
தவாபு செய்த நன்மை பெறுவீர்.

4. லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் என்று 10 முறை ஓதினால்
சுவனத்தில் உமது இடத்தை பாதுகாத்த நன்மையை
பெறுவீர்.

5. அஸ்தக்பிருல்லாஹில் அளீம் வ அதூபு இலைஹி
என 10 முறை ஓதினால் உமது எதிரியை
கொன்றதற்கு சமம் என கூறினார்கள். 

இன்ஷா அல்லாஹ் நாமும் ஓதி மற்ற மற்றவர்களுக்கு நன்மை பெற செய்வோம்.

பிரபல்யமான பதிவுகள்