நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், மே 28, 2018

லால்பேட்டை முஃப்தீ  அப்துர் ரப் ஃபாஜில்  மன்பயீ  (نورالله مرقده)ஹஜ்ரத்,

ஹஜ்ரத்  மௌலானா அல்லாமா ஷைகுல்  உலமா வல்  மஷாயிக்  உஸ்தாதுல்  அஸாதிதா  ஃபகீஹூல் மில்லத்  முஃப்தீ  அப்துர் ரப் ஃபாஜில்  மன்பயீ  (نورالله مرقده)ஹஜ்ரத் அன்னவர்களின் வரலாற்று குறிப்பு:
ஹஜ்ரத் கிப்லா  அவர்கள் ரமலான் மாதம் ரஹ்மத்துடைய பத்தில் பத்தாவது பிறையின் காலை 1.30  மணியளவில் தனது 78 வது வயதில்   ரஹ்மத்தான அல்லாஹ்வை சந்திக்க நம்மை விட்டு மறைந்து விட்டார்கள். ( انا لله وانا اليه راجعون)
பிறப்பு:1940
தந்தை பெயர்:சமணன் வகையராவைச் சேர்ந்த அப்துல் பாஸித் ஆலிம்  (نورالله مرقده)
ஸனது:
லால் பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாரில் 1959 ல் ஆலிம்  பட்டமும், 1960ல் ஃபாஜில்  பட்டமும்  பெற்றார்கள்.
நிகாஹ்:லால் பேட்டை மாமாங்கனி இறைநேசச்செல்வர் அஹ்லுல் குர்ஆன் அல்ஹாஜ் M.M. முஹம்மது யூசுஃப் (نورالله مرقده) அன்னவர்களின் மூத்த மகளும், மௌலானா M.Y. முஹம்மது  அன்ஸாரி மன்பயீ ஹஜ்ரத்,  மௌலானா M.Y.முஹம்மது அலீம் சித்தீக் மன்பயீ  ஹஜ்ரத்  ஆகியோரின் மூத்தசகோதரியை  1964ல் திருமணம் செய்துக்கொண்டார்கள்.(ஹஜ்ரத்  அவர்களின்  மனைவியாரும் ஒரு மாதம் முன்பு மரணித்தார்கள்.)உஸ்தாதுமார்கள்:
01.அல்லாமா ஷைகுல் மில்லத்  ஜியாவுதீன் அஹ்மது அமானீ ஃபாஜில் பாகவீ ஹஜ்ரத்  (نورالله مرقده)
02.அல்லாமா கைருல் மில்லத்  அப்துல்லாஹ் பாகவீ ஹஜ்ரத்  (نورالله مرقده)
03.அல்லாமா பஹ்ருல் உலூம் முஹம்மது இப்ராஹிம் நூரீய்யீ ஹஜ்ரத்  (نورالله مرقده)
04.அல்லாமா  ஷம்சுல்  மில்லத்  முஹம்மது ஜகரிய்யா ஃபாஜில் மன்பயீ  ஹஜ்ரத்  (نورالله مرقده)
ஹஜ் பயணம்: 1979 ல் கப்பலில் பிரயாணம் செய்து ஹஜ் செய்தார்கள்.  
பாடம்போதித்தல்:
ஹஜ்ரத் கிப்லா  அவர்கள் பொதக்குடி- அந்நூருல் முஹம்மதிய்யா அரபிக் கல்லூரியிலும், திருச்சி- ஜாமிஆ  அன்வாருல் உலூம்  அரபிக் கல்லூரியிலும் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார்கள். கடைசியாக   அல்லாமா  அமானீ ஹஜ்ரத்  அவர்கள்  கீழ் ஃபத்வா எழுதலில் ஈடுபட்டு ,ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியில் சுமார் 1970 முதல்    பேராசிரியராக பணியில் ஈடுபட்டு 2017 வரை பணிசெய்தார்கள். (சுமார் 50 ஆண்டு காலம்) இடையில் 1992 முதல் 2007 வரை நிர்வாகத்தால்  துணை  முதல்வராக ஆக்கப்பட்டார்கள்.
முதல்வர் பணி:
அல்லாமா ஷம்சுல் மில்லத் முஹம்மது  ஜகரிய்யா ஃபாஜில் மன்பயீ  (نورالله مرقده)அன்னவர்களுக்கு பின்பு  2007 முதல் 2009 வரை  முதல்வராக பணிசெய்தார்கள்.
சிறந்த ஃபத்வா(மார்க்கத்தீர்ப்பு):
வேலூர்- ஜாமிஆ  அல்பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி யின் முன்னால் முதல்வர்  அல்லாமா ஷைகுத் தஃப்ஸீர் ஷைகுல்  உலமா  வல் மஷாயிக்  ஆரிஃபுபில்லாஹ்  நஜ்முல்  மில்லத் PSP.ஜைனுல் ஆபிதீன் பாகவீ  ஹஜ்ரத்  (دامت بركاته)(طول الله عمره مع الصحة الدائمة)அன்னவர்கள்  ஒரு  விழாவில் கூறினார்கள்: மௌலானா  அப்துர் ரப் ஹஜ்ரத் அவர்கள்  தென்னகத்திலேயே மார்க்க தீர்ப்பு(ஃபத்வா)
வழங்குவதில் சிறந்தவர். 
பட்டம், பதவிக்கு ஆசைப்படாதவர்:
கூத்தாநல்லூர் - மதரஸா மன்பவுல்  உலா அரபிக் கல்லூரியின் முன்னால் பேராசிரியர்,
பொரவச்சேரி- ஜாமிஆ ஃபைஜூல் ஹஸனாத் அரபிக் கல்லூரியின் முன்னால் முதல்வர்,
பேட்டை  ரியாலுல் ஜினான் அரபிக் கல்லூரியின் முன்னால் முதல்வர் ,
கிளியனூர்  அல்லாமா ஷைகுல்  உலமா வல் மஷாயிக் ஆரிஃபுபில்லாஹ்  மன்பவுல் இல்ம் வல் இர்ஃபான்  அப்துல் ஹமீது ஃபாஜில் நூரிய்யீ ( نورالله مرقده)அன்னவர்களின் நெருக்கமான  மாணவருமான,
அல்லாமா ஷைகுல் ஹதீஸ்  ஆரிஃபுபில்லாஹ் மன்பவுல் இர்ஃபான் ஷைகுல் உலமா வல் மஷாயிக் அஃப்ஜலுல் உலமா  ஆயங்குடி  A.முஹம்மது சாலிஹ் ரஹ்மானீ ஃபாஜில் தேவ்பந்தீ ஹஜ்ரத் கிப்லா  (دامت بركاته)(طول الله عمره مع الصحة الدائمة )அன்னவர்கள் கூறினார்கள்: மௌலானா  அப்துர் ரப் ஹஜ்ரத் அவர்கள்  பொதக்குடியில் பேராசிரியராக பணியாற்றும் போது முதல்வராக பொறுப்பேற்க நிர்வாகம் சொல்லும் போது ஏற்க மறுத்து விட்டார்கள்.  ஏனெனில், பட்டம், பதவி போன்றவற்றை விரும்பாதவர்.
பெரிய  உஸ்தாதுமார்கள்:
ஆரணி- தாருல் உலூம் ரஷீதிய்யா  அரபிக் கல்லூரியின் நிறுவனர், முதல்வர்  அல்லாமா ஆஷிகே ரசூல் ஆஷிகே இலாஹி முஃபக்கிருல் உம்மத் முஹ்யுஸ் ஸுன்னா ஷைகுல்  உலமா வல் மஷாயிக்  ஆரிஃபுபில்லாஹ்  உஸ்வதுல் ஆரிஃபீன் சிராஜூஸ் ஸாலிகீன் கன்ஜூல்  அஸ்ரார்  சூஃபீ பாவா ஷாஹூல் ஹமீது சிஷ்தீ ஸாபிரீ  (دامت بركاته)(طول الله عمره مع الصحة الدائمة) அன்னவர்கள் கூறினார்கள்:
எல்லா மதரஸாக்களை  விட  லால் பேட்டை  மதரஸாவுக்குண்டான சிறப்பு மதரஸாவின் ஆரம்ப காலமுதல்   அனைத்து உஸ்தாதுமார்களும் பெரியவர்கள்,வயது முதிர்ந்தவர்களாகும்.அப்போது சிறிய உஸ்தாதுமார்கள் மௌலானா  அப்துர்  ரப் ஹஜ்ரத்  அவர்களும்,  மௌலானா அப்துல் அலி ஹஜ்ரத்  (نورالله مرقده) அவர்களும்  ஆகும்.
ஹஜ்ரத்  கிப்லா அவர்களின் மாணவர்கள்:
ஹஜ்ரத் கிப்லா அவர்கள் மாணவர்கள் பல ஆயிரம்  ஆகும்.  அதில் பிரபலமானவர்கள்: சமீபத்தில் நம்மை விட்டு  மறைந்த லால் பேட்டை  அல்லாமா  உஸ்தாதுல்  உலமா  அப்துல்  அலி ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத்  (نورالله مرقده)
லால் பேட்டை மௌலானா வஜ்ஹூல்லாஹ் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத்  ( نورالله مرقده)
புதுப்பேட்டை அல்லாமா ஜவ்ஹர் ஹூஸைன் மன்பயீ ஃபாஜில் பாகவீ ஹஜ்ரத் அவர்கள் (دامت بركاته),
முதுகுளத்தூர் ஆலிம் கவிஞர்  மௌலானா  உமர் ஜாஃபர் மன்பயீ  ஹஜ்ரத்  (نورالله مرقده),
துலுக்கநாயக்கன்பட்டி மௌலானா  அய்யூப் கான் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத்  (نورالله مرقده),
வேதாளை மௌலானா   ஆரிஃபுபில்லாஹ் அப்துல் கனீ  மன்பயீ ஹஜ்ரத்  (دامت بركاته),
லால் பேட்டை மௌலானா பஹ்ருல் உலூம்  அப்துல் மஜீது ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத்  (دامت بركاته),
ஆயங்குடி மௌலானா ஆரிஃபுபில்லாஹ் காஜா முஹம்மது மன்பயீ மக்கீ ஹஜ்ரத்  (دامت بركاته),
லால் பேட்டை மதரஸாவில் அல்லாமா அப்துர் ரஹ்மான் மிஷ்பாஹீ ஹஜ்ரத் கிப்லா  (دامت بركاته )அவர்கள் தவிர இப்போதைய மற்ற  அனைத்து  உஸ்தாதுமார்களும்  மாணவர்களே.
அதிரை பண்ணூலாசிரியரும்,ஹஜ்ரத் ரசூல்  (صلى الله عليه وسلم.) அன்னவர்களை கனவில் பல முறை கண்டு மகிழ்ந்தவருமான மௌலானா சூஃபீ S.S.ஷைகு அப்துல்லாஹ் காதிரீ மன்பயீ ஹஜ்ரத்  (دامت بركاته),
சுமார் 1965க்கு பின்பு  ஸனது பெற்ற  அனைத்து மன்பயீக்களும் ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மாணவர்களே.
ஹஜ்ரத் கிப்லா தன்மை: ஹஜ்ரத் கிப்லா அவர்கள் இயற்கையாகவே  அமைதியாக இருப்பவர்கள்.
பெரியவர்  முதல்   சிறியவர்கள் வரை அனைவர்கள் மீதும்  அன்பாக இருப்பார்கள்.
ஹஜ்ரத் கிப்லா அவர்களை சந்திக்க சென்றால் யார்?எந்த குடும்பம்? யாருடைய மகன்? ஓதுபவர்களாக இருந்தால் எங்கே ஓதுகிறீர்கள்? எத்தனையாவது ஜூம்ரா ?போன்ற வை கேட்பார்கள்.இவ்வாறு வணக்கம் வழிபாடுகளிலும் ரொம்ப பேணுதலுல்லவர்கள்.தொழுகைக்கு பின்பு  அதிகம் துஆவில் ஈடுபடுவார்கள்.
தவக்குல்:
தன்னுடைய வருமையை யாரிடமும்  சொல்லியது கிடையாது.  அல்லாஹ்வை நம்பி வாழ்ந்தார்கள்.
ஹஜ்ரத் கிப்லா எளிய வாழ்க்கை,  நடை, உடை,:
ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தனது  இறுதி காலம் வரை ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.  உடை ஜூப்பா,கைலி,தொப்பி,மேலணிஅனைத்தும் வெண்ணிறமாகும்.ஹஜ்ரத் அவர்கள்  மிக உயரமானவர்கள்,பெருநாட்களில் தலைப்பாகை கட்டுவார்கள். ஊரில் எங்கு சென்றாலும் நடந்தே செல்வார்கள். அஸருக்கு  பின்பு  மதரஸாவிலிருந்து நடந்த வண்ணமே வந்து புதுப்பள்ளிக்கு அருகில் உள்ள தனது மச்சான்  மௌலானா  அப்துல் முகனீ பாகவீ ஹஜ்ரத்  (نورالله مرقده)அன்னாரின் சங்கைமிகு  குர்ஆன் கிதாப் கடையில் அமருவார்கள்.
ஹஜ்ரத் கிப்லா உடன் பிறப்புக்கள்:
ஹஜ்ரத் கிப்லா அவர்களுடன் பிறந்தவர்கள் மூன்று பெண்கள்  ( இவர்களில் இருவர் மரணித்துவிட்டார்கள்)மூத்த  சகோதரீ மௌலானா அப்துல் முகனீ பாகவீ ஹஜ்ரத்(نورالله مرقده)அவர்களின் மனைவி (அல்லாமா ஃபைஜூர் ரஹ்மான் ஃபாஜில் பாகவீ மதனீ ஹஜ்ரத்(دامت بركاته), மௌலானா ஷஃபீகுர் ரஹ்மான் மன்பயீ  ஹஜ்ரத் ஆகியோரின் தாயார்  ஆகும்) 
இரண்டாவது சகோதரீ மௌலானா S.E. கனீமத்துல்லாஹ் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத்  ( نورالله مرقده)அவர்கள் மனைவி ஆகும்.  இவர்கள் சிறிய வயதில் மரணித்துவிட்டார்கள்.இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்கள் மரணித்த பின்பு  இவர்கள் தங்கையை கனீமத்துல்லாஹ் ஹஜ்ரத் இரண்டாவதாக நிகாஹ் செய்துக்கொண்டார்கள்.  (இவர்கள் மூன்றாவது சகோதரியாகும்)
மேலும் மூன்று சகோதரர்கள் மூத்த சகோதரர் மர்ஹூம் முஹம்மது சித்தீக்,  அடுத்து மர்ஹூம்  வாத்தியார் அதாவுர் ரஹ்மான்,மூன்றாவது ஹஜ்ரத் கிப்லா  ஆகும்,  அடுத்து ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முன்னால் பேராசிரியர் மௌலானா முஹம்மது ஸயீத் மிஷ்பாஹீ ஹஜ்ரத்  (دامت بركاته) ஆகும்.
ஜனாஷா தொழுகை:
ஹஜ்ரத் கிப்லா அவர்களின் ஜனாஷாவில் மக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டார்கள்.ஜூம்ஆ நாள் போன்று மேலத் தெரு  (புதுத்தெரு)சந்து வரை கார்,சைக்கிளாக நின்று  அலைமோதியது.இவ்வாறே வடக்கு தெரு  பாதிவரை ஆகும்.
பெரிய பள்ளிவாசல் தாழ்வாராம் முழுவதுமாக ஹவுஸ் வரை  மக்கள் திரளாக  ஜனாஸா தொழுகைக்கு நின்றார்கள்.   ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முதல்வர் மற்றும்  ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மாணவருமான மௌலானா நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத்  ( دامت بركاته)அவர்கள் ஜனாஸா தொழவைத்தார்கள். பின்பு ஹஜ்ரத் அவர்களுக்கு தாழ்வாரத்தில் இறங்கால் கூட்டம் நடந்தது.  அதில் பல உலமாக்கள்  இறங்கள் தெரிவித்தார்கள்.ஆயங்குடி தொழிலதிபர் மௌலானா ஜாஃபர் மன்பயீ ஹஜ்ரத், சிந்தாமணிப்பட்டி மௌலானா சிராஜூத்தீன் ரஷாதீ ஹஜ்ரத், மௌலானா ஷைகுல் ஹதீஸ்  AEM. அப்துர் ரஹ்மான் மிஷ்பாஹீ ஹஜ்ரத், மௌலானா நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் மற்றும் சில உலமாக்கள் பேசினார்கள்.ஷைகுல் ஹதீஸ்  AEM.ஹஜ்ரத் (دامت بركاته ) கூறினார்கள்:அல்லாமா அப்துர் ரப் ஹஜ்ரத் அவர்கள் ஃபிக்ஹில்(மார்க்க சட்டங்களில்)மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் .இவ்வாறு திறமையான  ஹஜ்ரத் அவர்களிடம்  ஆனவம் என்பது அறவே இல்லை. அடக்கமே என்றும் இருந்தது. பணிவுக்கு சொந்தக்காரர்கள் ஆகும்.  
கடைசியாக பேசிய மௌலானா நூருல்  அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கூறினார்கள்:நான்  ஹஜ்ரத்  அவர்களின் மாணவன். ஐந்தாம் ஜூம்ராவில்( در المختار)துர்ருல் முக்தார் கிதாபை ஹஜ்ரத் அவர்களிடம் ஓதினோம் .   வார்த்தைக்கு வார்த்தை  அர்த்தம் சொல்லி விளக்கம் அளிப்பார்கள்.
மேலும் ஹஜ்ரத் அவர்கள்  எல்லா கலையிலும் தேர்ச்சி பெற்றவர்கள். குறிப்பாக வராஸத்துடைய (சொத்து பிரிவு கலையில்)ரொம்ப தேர்ச்சி பெற்றவர்கள். நாம்  சொத்தைபிரித்து ஹஜ்ரத்  அவர்களிடம் காண்பித்தால் ஒரு நிமிடம் பார்த்து  இங்கு தப்பு,இங்கு சரி  என சொல்லிவிடுவார்கள்.அந்தளவு தேர்ச்சி பெற்றவர்கள். ஏனெனில்,  அல்லாமா  அமானீ ஹஜ்ரத் அவர்களுடன் ஃபத்வாவில் ஈடுபட்ட அணுபவமாகும்.  இந்த  அளவு திறமையான ஹஜ்ரத் பணிவாக இருப்பார்கள்.  ஹஜ்ரத் அவர்களின்  மாணவனாகிய எனக்கு  கீழ் உஸ்தாதாக பணி செய்தும்   உஸ்தாதாகிய ஹஜ்ரத்  அவர்கள்  விடுமுறை  எடுக்க இருந்தால் சொல்லிவிட்டு செல்வார்கள். இந்த பணி  எல்லோரிடமும் வருவது கஷ்டம்  ஆகும். பின்பு முதல்வர் அவர்கள் துஆவுடன் இறங்கல் கூட்டம் நிறைவுபெற்றது.
  اللهم  صل وسلم على سيدنا  محمد وبارك عليه وعلى آله وصحبه وسلم.
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه ونور قبره ويسر حسابه وارفع درجاته. اللهم انا نتوسل إليك أن نسألك علما نافعا وعملا متقبلا.
آمين آمين آمين يارب العالمين. صلى الله على محمد صلى الله عليه وسلم.
இப்படிக்கு
வெளியீடு:
மக்தபா  மஜீதிய்யா
இப்னு ஹாஜா இர்ஷாதீ
லால் பேட்டை.

பிரபல்யமான பதிவுகள்