நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், ஜனவரி 12, 2017

மனைவிமார்களே,

யார் வீடுகளில்
பாத்திரம் பூரிக்கட்டையெல்லாம்
பறக்கிறதோ

அவர்களுக்கு இதை
படித்துக்காட்டுங்கள்

அண்ணல் நபி [ஸல்] அவர்கள்

மஸ்ஜிதே நபவியில் அமர்ந்து தம் தோழர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.

அதுசமயம் , சல்மான் ஃ பார்சீ [ரலி] அவர்கள் அங்கு வந்து,

அண்ணலார் [ஸல்] அவர்களிடம்,

''அல்லாஹ்வின் தூதரே!

நான் தங்கள் அருமை மகளார் ஃபாத்திமா [ரலி] அவர்களின் வீட்டின் பக்கமாக வந்து கொண்டிருந்தேன்.

வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டது.''
என்று கூறினார்கள்.
உடனே நபி [ஸல்] அவர்கள் தம் மகளார் வீட்டிற்கு விரைந்தார்கள்.

வீட்டில் ஃபாத்திமா [ரலி] அவர்கள் அழுது கொண்டிருந்தனர்.

அண்ணலார் [ஸல்] அவர்கள் தம் மகளாரிடம் அழுகைக் காரணத்தைக் கேட்டனர்.

மகளார்:
''அன்புள்ள தந்தையே!

நானும் எனது கணவரும் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தோம்,,

விளையாட்டு வினையாகிவிட்டது.

பேச்சுனூடே என் கணவர் '' பெண்கள் ஷைத்தான்களாவர் .. உங்களை எங்களுக்காக படைக்கப்பட்டது,,

நாங்கள் அந்த ஷைத்தான்களின் தீங்கை விட்டும் அல்லாஹ் விடத்தில் காவல் தேடுகிறோம். '' என்று கூறினார்கள்

.
நான் உடனே, ''நிச்சயமாக பெண்கள் ரைஹான் இலைகளைப் போன்றவர்கள்,,

அவைகளை உங்களுக்காக படைக்கப்பட்டது,,

நீங்கள் எல்லாம் ரைஹான்களை முகர்ந்திட ஆசைப்படுகின்றீர்கள் .'' என்று பதில் கூறினேன்.

இச் சொல் என் கணவரின் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டது.

உடனே அவர்கள் வீட்டை விட்டும் புறப்பட்டு விட்டார்கள்,,

எனவே தான் அழுது கொண்டிருக்கிறேன்.''
மகளாரின் மொழி கேட்டு அண்ணலார் [ஸல்] அவர்கள்

மருமகன் அலீ [ரலி] அவர்களைத் தேடித் புறப்பட்டார்கள்.

கடை வீதி, பள்ளி வாசல் முதலிய இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில்,

ஜன்னத்துல் பகீ உ , என்னும் கப்ருஸ்தானில் அலீ [ரலி] அவர்களை கண்டார்கள்.

அது சமயம் அலீ [ரலி] அவர்கள் ,

ஒரு பாழடைந்த கப்ரில் ஓர் ஈச்சமரத்தின் கீழ், தலைக்கு மண் கட்டி ஒன்றை வைத்தவர்களாக, ஆழ்ந்த சிந்தனையில் படுத்திருந்தார்கள்.

வீட்டில் அமைதி குலைந்து விட்டால் மண வாழ்க்கையும் மண்ணறை போன்றுதானே!

அண்ணலார் [ஸல்] அவர்களின் அருகில் சென்று,

''யா அபுத்துராப்,
கல் என்ன சொல்கிறது? '' எனக் கேட்டார்கள்.
அண்ணலாரின் குரல் கேட்டு துள்ளி எழுந்தார்கள் அலீ [ரலி] அவர்கள்.

அவர்களைச் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.
வீட்டின் வாய்ற்படியருகே வந்து,

''அஸ்ஸலாமு அழைக்கும் யா ஃபாத்திமா ! உனது தந்தையும் , கணவரும் வந்திருக்கின்றோம். உள்ளே வரலாமா?''

என அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே சென்றனர்.

தமது மகளாரை விளித்து, ''மகளே! உனது பேச்சால் புண்பட்டுப் போயிருக்கும் உன் கணவரிடம் மன்னிப்புக் கேள் .''

என்றார்கள் .

பாத்திமா [ரலி] அவர்கள் தனது கணவராம் அலீ [ரலி] அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

தமது மகளைப் பார்த்து ''மகளே! உன்னுடைய கணவர் உன் மீது அதிருப்தி கொண்டநிலையில்,

உனக்கு மரணம் நேரிட்டிருக்கும்
ஆயின் நீ சுவனத்தின் மணத்தைக் கூட முகர்ந்திருக்க முடியாது போயிருப்பாய்!

அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான் .'' எனக் கூறிவிட்டு சென்றார்கள்.

சகோதரர்களே!
சிந்தித்துப்பாருங்கள்,

நம் குடும்பத்தில் கணவர் மனைவியர் களிடையே கசப்புணர்ச்சிகள் ,

சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விடுகின்றன.

அந்நிலையில் எம்முறையில் நாம் நடந்து கொள்கிறோம்?

'' அவன் கிடக்கிறான் வெறும்பயல்.

நீ வீட்டிற்கு வந்துவிடும்மா ?

உண்ண உணவும் , உடுத்த உடையும் உனக்கு இல்லையென்றா அவன்தலையில் கட்டினோம்?

நீ இங்கேயே இருந்துவிடு. சோறும், துணிமணிகளும் நாங்கள் தருகின்றோம். அவனோடு வாழ்ந்து போதும் .''

இவ்வாறெல்லாம் சில பெற்றோர்கள் தம் பெண்மக்களுக்கு நசீஹத்து செய்து, அவள் செய்துவிட்ட தவறுகளை அவள் உணர முடியாமலே செய்துவிடுவதுடன்

, அவளது மணவாழ்க்கை யையும் வீணடித்து விடுகின்றனர்,,

அது மட்டுமின்றி, அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் உரியவளாகவும் அவளை ஆக்கிவிடுகின்றனர்
ஆனால் , அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி [ஸல்] அவர்களோ

எல்லாவற்றுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்த காரணத்தால்,

சுவர்க்கத் தலைவி என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றிருந்தும், தனது மகளாரின் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் , மணாளரிடம் மன்னிப்புக் கேட்கச் செய்து,

அவ்விருவரின் வாழ்க்கையையும் மணமுள்ள வாழ்க்கையாக மாற்றி அமைத்து நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள்

என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்..

அல்லாஹ் மி்க அறிந்தவன்.                 
உங்கள் மனைவியை கண்ணியப்படுத்துங்கள்

வாழ்க்கைக்கு கணவன்–மனைவி உறவு முக்கியமானது. குடும்பத்திற்கு அடிநாதமாக இருந்து தாங்குபவர்கள் கணவன்–மனைவி தான் என்று கூறலாம். ‘கணவன்–மனைவிக்கு ஆடையாகவும், மனைவி கணவனுக்கு ஆடையாகவும் இருக்கின்றனர்’ என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. 

ஆடைகள் மனிதனின் வெட்கத்தலங்களை மறைத்து அவர்களை பாதுகாக்கின்றது. அதுபோல ஒருவருக்கொருவர் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இஸ்லாம் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

கதிஜா (ரலி) இறந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரினுள் நுழைகிறார்கள். அங்கு குழுமியிருக்கிற அனைவரும் நபி அவர்களை தங்கள் வீட்டில் விருந்தினராக தங்குமாறு அன்பு அழைப்பு விடுக்கின்றார்கள். 

நபி அவர்களோ ‘கதிஜாவின் கப்ருக்கு (கதிஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின்) அருகே எனக்குக் கூடாரம் அடியுங்கள்’ என்று அறிவிக்கின்றார்கள். பதினான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் தனது மனைவி கதிஜா அவர்களின்மேல் நபியவர்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறது இச்சம்பவம். 

அன்பு, பாசம், நேசம், கருணை, பரிவு, விட்டுக்கொடுத்தல், அரவணைத்து செல்லுதல், குற்றம், குறை காணாது தவிர்த்தல், மனம் விட்டு பேசுதல் இவைகள்தான் கணவன்–மனைவி இடையே நெருக்கத்தையும், மன பிணைப்பையும் ஏற்படுத்தும்.

கால மாற்றத்தினூடே இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சிறு, சிறு பிரச்சினைகள், கருத்து மாறுபாடுகள் காலப்போக்கில் பெரிய பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது. 

இதில் கோபம் தான் முக்கிய பங்காற்றுகிறது. எதற்கெல்லாம் கோபப்பட வேண்டும் என்று வரையறை இல்லாமல் சாதாரண விஷயங்களுக்குக் கூட கோபத்தில் வார்த்தைகளை விட்டு மீண்டும் அதை அள்ள முடியாமல் பிரிந்து வாழ்கிறார்கள் பலர். 

‘கண்ணியமானவன், சங்கையானவன் மனைவிக்குக் கண்ணியம், சங்கை செய்வான். சாபத்திற்குரியவன் மனைவியை கேவலப்படுத்துவான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். மனைவியை கேவலப்படுத்துபவன் சாபத்திற்கு உரியவன் என்பதே இதன் பொருள்.    

தனது மனைவியை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இது. தன் மரணப்படுக்கையில் அபுபக்கர் (ரலி) கூறியது நாம் கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது. 

அவர்கள் கூறினார்கள் ‘என் மரணத்திற்கு பிறகு என் ஜனாஸாவை (உடலை) என் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) குளிப்பாட்ட வேண்டும்’. 

‘ஏன்?’ என்று கேட்டார்கள் தோழர்கள். 

‘என் இதயத்துடன் நெருக்கமானவள் என் மனைவி. அவள் அதைச்செய்தால் எனக்கு பிடித்தமானதாக இருக்கும்’ என்று பதிலளித்தார்கள். 

தனது இறுதி சடங்கைக் கூட தனது மனைவி செய்ய வேண்டும் என்று விரும்பும் அளவிற்கு தனது மனைவியை நேசித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் தவறுகள் செய்யக் கூடியவர்கள் தாம். ஆணும் பெண்ணும் இதில் விதிவிலக்கல்ல. மனைவி தன் கணவனுக்காகவும், அவன் குடும்பத்திற்காகவும் எத்தனையோ நன்மைகளை, தியாகங்களை செய்திருந்தாலும், அவள் அறிந்தோ, அறியாமலோ செய்த சிறு தவறுகளால் கோபப்பட்டு அவசர முடிவுகளை எடுத்து இறுதியில் பிரிவை நோக்குகிறார்கள். மனைவி இத்தனை நாள் தனக்கு செய்த உபகாரங்களை கணவன் கொஞ்சம்கூட நினைத்து பார்ப்பதில்லை.

‘எந்த முஃமினான கணவனும் தன் மனைவியை கோபப்பட்டு பிரிந்துவிட வேண்டாம். அவளின் ஒரு குணம் உன்னை வெறுப்படையச் செய்தால், மறு குணம் உன்னை திருப்தியுறச் செய்யும்’ என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

அன்பும், கருணையும் இருக்கும் இடத்தில் பகைமைக்கும், பிரிவினைக்கும் வேலையில்லை. மனைவி என்பவள் குடும்பத்தை தாங்கும் அஸ்திவாரம். அவள் மீது காட்டப்படும் அன்பும், பரிவும், கண்ணியமும் மனைவி எனும் அஸ்திவாரத்தை பலப்படுத்தும். அது கட்டிடம் எனும் குடும்பத்தை மகிழ்ச்சியிலும், அமைதியிலும் நிலைத்திருக்கச் செய்யும். 

மஞ்சள் காமாலை மருந்து,

ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.
*******   ******   *****  *****
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.

உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
இது அவசியம் பயன் படும்.

சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.

ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.
ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான்.
சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.

எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.

அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.

மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால்,சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.

மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி  ,கீழாநெல்லி  இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.
இரண்டுநாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.

அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார்.
பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.

அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன்.
மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன்.

அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது.
மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.

நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.

எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை  மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும்  விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.

நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும்
இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி
விடுகின்றனர்.பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை
வழக்கமான உணவு உண்ணலாம்.

என் பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர்
வேண்டும் எனக்கேட்டான்.பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம்.
பையன் முகத்தில் ஒருத் தெளிவு.
மருந்  துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.
அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.

எனக்கு ஆச்சர்யம் இன்றுவரைத்தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.

மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.

பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஓரே   வே  ளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.

விழுப்புரம் நகரிலிருந்து பாண்டிச் செல்லும் வழியில் 16கிமீ தூரம்
கெங்கராயம்பாளையம் உள்ளது.

பிரபல்யமான பதிவுகள்