நம்முடன் இணைந்து இருப்பவர்கள்
செவ்வாய், ஏப்ரல் 07, 2020
தினமணி வேசிகளின் பத்திரிக்கை,
தினமணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான்,Ex. MP., கடும் கண்டனம்....
"தினமணியின் மீதிருக்கும் மன்னிக்க முடியாத குற்றம்"
'தினமணி' ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்களுக்கு,
'மன்னிக்கக்கூடாத குற்றம்" எனும் தலைப்பில் தலையங்கம் 4.4.2020 அன்று தங்கள் நாளிதழில் வெளிவந்தது. தங்களின் பத்திரிக்கை தர்மமும், பாரபட்சமற்ற பார்வையும், நல்லிணக்க நோக்கமும் சிதைந்துபோய், உறைந்திருப்பதை தலையங்கம் வெளிச்சமாக்கி இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது.
“கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதில் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாடு கூட்டப்பட்டது” என்று தொடங்கி இருக்கிறீர்கள்.
இந்த ஆன்மீக மாநாடு 6 மாதங்களுக்கு முன்பே நாள் குறிக்கப்பட்டு முறையான, பகிரங்கமான தகவல்களோடு கூட்டப்பட்ட நிகழ்வு. கொரோனாவின் வீரியம் பற்றிய புரிதலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அரசாங்கத்திற்கே இல்லாத நேரத்தில் தொடங்கப்பட்ட ஒன்று. மார்ச் 22 இல் 'ஒரு நாள் ஊரடங்கு' என்று பிரதமர் எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் இல்லாமல் திடீரென அறிவித்த உடனேயே மாநாடு கலைக்கப்பட்டதாகத் தெரிவித்து, அனைவரும் அவரவர் ஊர்களுக்குச் சென்று விடுங்கள் என சொல்லப்பட்டு, பலபேர் டெல்லியிலிருந்து பயணம் ஆகிவிட்டனர்.
இந்த நோய்த் தொற்றின் வேகத்தை உணர்த்தி அரசாங்க நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு,
வேண்டுமென்றே திட்டமிட்டு டெல்லியில் இந்த மாநாட்டைத் தொடங்கியதைப்போல தலையங்கம் காட்டுகிற பாரபட்சமான பார்வை கடும் கண்டனத்திற்குரியது.
"தப்லீக் ஜமாத் தலைமையகம் மதத்தீவிரவாதத்தின் நாற்றங்காலாகச் செயல்பட்டு வந்திருக்கிறது" என்பது தலையங்கத்தின் அடுத்த குருட்டுப் பார்வை.
தப்லீக் பற்றிய எந்த புரிதலும் அறவே இல்லாமல், ஒரு நாளிதழின் தலையங்கம் எழுதப்பட்டிருப்பது வேதனைக்குரியது. தப்லீக் ஜமாஅத்தினர் வெளித்தளத்தில் அலைந்து திரிந்து மற்ற மதத்தவர்களிடத்தில் மதப்பிரச்சாரம் செய்பவர்கள் அல்ல.
எந்த விளம்பரமும் இன்றி, அமைதியாக மசூதிக்குள் ஒன்றுகூடி, இறைவனைப் பற்றிய அச்சத்தை நினைவுகூர்ந்து, வணக்க வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்தி, அன்றாட வாழ்வின் ஒழுக்க மாண்புகளை எடுத்துரைத்து, மானுட வாழ்வினைச் செம்மைப்படுத்துகிற அறவழிப்பயிற்சி முறையே அவர்களின் ஒன்றுகூடல்.
அதில் அடுத்தவர் எவரைப் பற்றிய பேச்சுக்களும் இருக்காது; அடுத்த மதத்தவரின் எந்த விமர்சனமும் தலைகாட்டாது; உலக சுயலாபம் பற்றிய எந்த தகவலும் இடம்பெறாது; ஏன்?
ஒன்றுகூடி இருக்கிற எவரின் சொந்த பிரச்சனைகள்கூட பேசப்படாது. முழுக்க முழுக்க அவரவர் தங்களின் வாழ்வு நிலையை மனசாட்சியோடு சுயபரிசோதனை செய்து அதனை தூய்மைப்படுத்திக் கொள்கிற பயிற்சிப் பாசறையாக மாத்திரமே அது காணப்படும்.
இத்தகைய கூட்டங்களில் எந்த விபரீத நிகழ்வும் நிகழ்ந்ததாக இதுவரையிலும் ஏதும் கிடையாது. லட்சக்கணக்கில் கூடினாலும் எந்த பாதுகாப்புத் தேவையும் இல்லாமல் இறைவனின் பாதுகாப்பே எங்களுக்கு மிகச் சிறந்தது எனச் சொல்பவர்கள். இதே டெல்லி நிஜாமுதீனில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ தடவை தப்லீக் மாநாடுகள் நடைபெற்று முடிந்திருக்கின்றனவே?
எந்த அசம்பாவிதமோ, விதிமீறலோ இது வரை இருந்ததாக சரித்திரம் உண்டா?
சென்ற ஆண்டு திருச்சியில் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றபோது 10 லட்சம் பேர் கூடினார்களே? எந்த ஒரு போலீஸுக்காவது அங்கே வேலை இருந்ததா? எவ்வளவு அமைதி? என்ன அருமையான சுயக்கட்டுப்பாடு நிறைந்த முன்னுதாரணம்? உளவுத்துறையே ஆச்சரியத்தில் உறைந்து போய் நின்றதைப் பார்க்கவில்லையா?
தினமணி சொல்வதைப்போல இதில் எங்கே இருக்கிறது மதத்தீவிரவாதம்? அப்படி ஒரு தீவிரவாதப் பேச்சோ, வன்மத்தைக் காட்டுகிற போக்கோ, அழிவை உருவாக்குகிற திட்டமிடலோ எப்போதாவது தப்லீக் ஜமாஅத் நிகழ்வுகளில் காணப்பட்டதாக எந்த ஆதாரமாவது இருக்கிறதா?
இந்தியாவில் என்று மாத்திரமல்ல; உலகில் பரவலாக எல்லா நாடுகளிலும் நிகழ்வுறக்கூடிய தப்லீக் ஜமாஅத்தின் எந்த நிகழ்விலாவது, யாராகிலும், எப்போதாவது கண்டதுண்டா? ஏன் இந்த வீண் பழி?
எந்த முன்னேற்பாடுகளுக்கும், யாருக்கும் வாய்ப்பு தரப்படாமல் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாட்டையே, நாட்டு மக்களையே ஸ்தம்பிக்க வைத்து விட்டதை யாரும் மறுக்க முடியாது.
விமானம், ரயில், பேருந்து பயணங்கள் அனைத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது.
இந்த நிலையிலும் தப்லீக் மாநாட்டிற்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் அவசர, அவசரமாக எப்படியோ கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அவரவர் ஊர்களுக்குத் திரும்பி விட்டனர். ஆனாலும் சிலர் சில பகுதிகளுக்குச் செல்ல வாகனங்கள் கிடைக்காமல் டெல்லி மர்கஸிலேயே தங்க நேரிட்டுவிட்டது உண்மைதான்.
இந்த நிலையிலும் 17 வாகனங்கள் தனியார் நிறுவனங்களிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அவ்வாகனங்கள் பயணிப்பதற்கு தப்லீக் தலைமையகத்திலிருந்து அனுமதி கேட்டும் மத்திய மாநில அரசுகளின் நிர்வாகம் அதனை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டது. இதுவெல்லாம் தினமணிக்குத் தெரியாதோ?
இப்படியாக ஒரு நெருக்கடியான நிலையை அரசே உருவாக்கி விட்டு, மக்களை அவரவர் இடங்களுக்குப் பயணிக்க முடியாமலும் செய்துவிட்டு, நோய்த்தொற்று உருவாக அரசு நிர்வாகமே முழு காரணமாகவும் இருந்துவிட்டு "டெல்லி மாநாடுதான் இந்த நோய் பரவுவதற்குக் காரணம்" எனச் சொல்லுவது அறிவுடையோரின் சொல்லாக இருக்க முடியாது.
மக்களின் ஒன்றுகூடல் தான் இந்த பரவலுக்குக் காரணமென்றால் தப்லீக் மாநாடு நடைபெற்ற அந்த நாட்களிலும் சரி; தப்லீக் மாநாடு கலைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 22 மற்றும் மார்ச் 25 முதல் தொடங்கப்பட்ட நாட்களிலும் சரி; விதிகளை மீறி ஒன்று கூடிய மற்ற எந்த நிகழ்ச்சியும் தினமணியின் கண்களுக்குத் தெரியவில்லையா? அது ஆளும் பாஜகவின் சார்புடைய நிகழ்ச்சிகள் என்பதாலா? அல்லது அந்நிகழ்ச்சிகளின் நிறம் தினமணியின் விருப்பமான நிறம் என்பதாலா?
சென்ற ஜனவரி 30 அன்றே சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் என தெரிந்தும்கூட அந்த நேரத்திலேயே உலகின் மற்ற நாடுகளில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1000 என்று தெரிந்திருந்தும் அமெரிக்க அதிபர் தனது மகள், மனைவியுடன் தாஜ்மஹாலைப் பார்வையிட வருகிறார் என அறிவித்து பிப்ரவரி 24இல் குஜராத் மக்களை ஒன்று திரட்டி கொரோனா நோய்த் தொற்றுக்கு வசதியாக பல்லாயிரக்கணக்கில் மக்களை கூடச்செய்த பிரதமர் மோடியின் அலட்சியப்போக்கு தினமணியின் கண்களை மறைத்து விட்டதா?
தமிழகத்தைப் பொறுத்தவரையில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட பலர் தாமாகவே முன்வந்தும், சிலர் அதிகாரிகளால் அழைக்கப்பட்டும், நோய்த் தொற்றிலிருந்து அவர்களை தூரமாக்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் சிலருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மற்றவர்கள் சில நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர் என்கிற செய்தியை தமிழக அரசே அறிவித்துள்ளது. இதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த நோய் பரவலுக்கு டெல்லி மாநாடு தான் காரணம் என்று சொல்லுவோர் 'முரட்டு முட்டாள்களின் முன்னோடிகள்' என்றால் தவறா? அப்படியானால் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற ஒருவர் வேண்டுமென்றே தன்மேல் இந்த நோயை வாங்கிக்கொண்டு அதனை எப்படியாவது மாநாட்டில் மற்றவர்களுக்கும் பரவச் செய்து விடுவோம் என்று வந்ததாகச் சொல்கிறார்களா? என்ன பித்தலாட்டம் இது? இந்த நோய்த்தொற்றுக்கும், தப்லீக் மாநாட்டிற்கும் என்ன சம்பந்தம்? இந்த மாநாடு நடத்தப்பட்ட அந்த நேரத்தில்தான் நோய்த் தொற்றின் வேகம் எல்லோருக்கும் தெரிய வந்திருக்கிறது. எனவே அனைவரும் கலைந்து சென்றிருக்கிறார்கள். அவ்வளவுதான். இதில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் யாருக்கேனும் அவர்களின் விமானப்பயணம் மூலமாக இந்நோய் தொற்றி இருந்தால் அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டபோது மற்றவர்களுக்கும் தாவியிருக்கக்கூடும். இதனை யாரும் வேண்டுமென்றே செய்திருப்பார்களா? அறிவோடு சிந்திக்க வேண்டாமா?
ஜனவரி இறுதியிலேயே இந்த நோய்த் தொற்றின் விபரீதம் பற்றிய எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் ( WORLD HEALTH ORGANISATION - WHO ) தெரிவித்து விட்ட பிறகு இந்திய அரசாங்கம் விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? இது சீனாவிலிருந்து உருவாகி மற்ற நாடுகளுக்கும் பரவுகிற இந்நிலையில் விமான பயணிகள் அனைவரையும் விமான நிலையங்களிலேயே இந்நோய் குறித்த பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தால் இது இந்தியாவுக்குள் தலைகாட்டியிருக்குமா? டெல்லி மாநாட்டுக்கு வந்தவர்களில் அப்படி யாருக்காவது இந்நோய் இருந்திருந்தால் அவர்கள் இந்தியாவுக்குள்தான் நுழைந்திருக்க முடியுமா?
இரண்டு மாதங்களுக்குமேல் மிக மிக அலட்சியமாக இருந்துவிட்டு, இந்த நோய்த்தொற்று மிகச்சாதாரணமாக நமது நாட்டில் எல்லா இடங்களுக்கும் பரவிடும் வாய்ப்புகளையும் திறந்து வைத்துவிட்டு, எல்லை மீறியவுடன் இப்போது ஊரடங்கு என்று மூன்று வாரங்களுக்கு அறிவித்து நாட்டு மக்களையும், தேசத்தின் பொருளாதாரத்தையும் முடங்கச் செய்திருப்பதுதான் அறிவுடைமையா? தினமணியின் கேள்வி இப்படித்தான் இருந்திருக்க வேண்டுமே தவிர ஒருதலைப்பட்சமாக, கண்களை மூடிக்கொண்டு, தப்லீக் ஜமாஅத் மீது சேற்றை வாரி வீசுவதை ஏற்கமுடியாது. தப்லீக் ஜமாஅத்தினர் மிகவும் பொறுமையைப் பேணக்கூடியவர்கள். இப்படி வாரி வீசப்படுகிற அவதூறுகளையும் இறைவனின் பெயரால் சகித்துக் கொள்ளக்கூடியவர்கள்தான். என்ன செய்வது? அதனால் பொது தளத்தில் நின்று பணியாற்றக்கூடிய நம்மைப் போன்றவர்கள் கண்டும் காணாமல் இருந்திட முடியுமா?
ஆகவே, தினமணி கூறுவதைப்போல இதில் தப்லீக் ஜமாஅத்தின் பொறுப்பற்றதனம் என்றோ, அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஆபத்து என்றோ எதுவுமே கிடையாது; மாறாக, தினமணியின் இத்தகைய விஷமப்பாய்ச்சலும், விஷம் தோய்ந்த துவேஷப் பிரச்சாரமுமே பொறுப்பற்ற தனமும் ஆபத்து நிறைந்ததும் ஆகும் என்று இப்போதைக்குச் சொல்லி வைக்கிறோம். தினமணி தன்னைத் திருத்திக் கொண்டால் மட்டுமே அது சொல்லும் நிமிர்ந்த நன்னடைக்கும், நேர்கொண்ட பார்வைக்கும் அர்த்தம் உண்டு.
M.அப்துல் ரஹ்மான்.,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில முதன்மைத் துணைத் தலைவர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபல்யமான பதிவுகள்
-
பத்ரு ஸஹாபாக்கள ் இரவு நமக்கு ரமலான் பிறை 17 அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தினb் முதல் போர் நடந்த நாள்.. பத்ரு போர் 313 ஸஹாபாக்கள் ...
-
இஸ்லாமிய கேள்விகளும் அதற்கான பதில்களும் ஸஹாபாக்களில் இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்? விடை: ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)...
-
இஸ்லாமிய கேள்வி பதில்* 1. நாம் யார்? *நாம் முஸ்லிம்கள்.* 2. நம் மார்க்கம் எது? *நம் மார்க்கம் இஸ்லாம்.* 3. இஸ்லாம் என்றால் என்ன? *அல்...
-
https://youtu.be/CuQi6wXI9uo நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும்...