நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

செவ்வாய், மார்ச் 18, 2025

பத்ரு போர்வரலாறு,

பத்ரு போர்வரலாறு

 
*அதன் சிறப்புகள்...*   
*பத்ருப் போரின் படிப்பினைகள்...* 

இது ஒரு நீண்ட பதிவு......
பொறுமையாக படியுங்கள்...!!!
படிப்பினைகள் பெறலாம்.,
*வரலாறு முக்கியம்.*

*பத்ரு போர்* 
(இஸ்லாத்தின் முதல் போர்) பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் பொறுமையாக படிக்கவும்.
தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்வோம். 
நன்மையை மட்டும் நாடியவர்களாக.

*இன்ஷா அல்லாஹ்* 

இஸ்லாத்தின் முதல் போர் பத்ரு போர் ஆகும்! 
மேலும் வரலாற்றில் சொல்லப்பட கூடிய மிக முக்கியமான போர் ஆகும்!

இந்த பெயர் வர காரணம் 
இந்த போர் பத்ர் எனும் இடத்தில் நடைபெற்றது 
இந்த இடம் மதினாவில் இருந்து சுமார் 80 மைல் தொலைவில் உள்ளது!

பத்ர் போர் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் 17 ல் இந்த போர் நடைபெற்றது!

நூல் : அஹ்மத் : 2121

இந்த மாதத்தில் தான் முதன் முதலில் நோன்பு கடமையாக்கப்பட்டது! 
ஸஹாபாக்கள் அனைவரும் நோன்பு வைத்த நிலையில் போரில் கலந்து கொண்டனர்! 

பத்ர் களத்தில் நின்ற அனைத்து ஸஹாபாக்களும் நோன்பாளிகள், 
உடல் பலம் குறைந்தவர்கள், ஆயுத, படைப்பலம் மிக குறைவு 
ஆனால் ஏதிரிகளான மக்கா காபிர்கள் பலமான போர் வீரர்களுடனும், போர்க் குதிரைகளும் இருந்தன!

காஃபிர்களின் படையில் மூன்றில் ஒரு பகுதி தான் முஸ்லீம்களின் படை இருந்தது!

அல்லாஹ் இந்த போரில் நேரடியாக உதவி செய்து முஸ்லீம்களுக்கு வெற்றியை கொடுத்தான்!

*முஸ்லீம்கள் போர் தொடுக்க காரணம் :*

ஷாம் பிரதேசத்திலிருந்து மக்காவை
நோக்கி திரும்பி கொண்டிருந்த
அபூஸுஃப்யான் (பின்னால் முஸ்லீம் ஆகி விட்டார்) தலைமையிலான வியாபாரக் கூட்டத்தை தாக்குவதன்
மூலம் மக்காவாசிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் சேதத்தை உண்டு பண்ணுவதற்கான வாய்ப்பு முஸ்லிம்களுக்கு கிடைக்கிறது!

அதனால் நபி (ஸல்) அவர்கள் *313 ஸஹாபாக்களை* தயார் செய்து அந்த வியாபார கூட்டத்தை பிடிக்கவே சென்றார்கள் 
ஆனால் எதிர்பாராத விதமாக போர் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது!

நூல் : புகாரி : 4418

*முஸ்லீம்களின் படை :*

அந்த வியாபார கூட்டம் மதினாவை தான் கடந்து செல்ல வேண்டும் அதனால் நபி (ஸல்) அவர்கள் அழைப்பின் பேரில் மதீனாவிலிருந்து 313 வீரர்கள் போருக்கு தயார் ஆகினானர்கள்!

நூல் : அஹ்மத் : 2121

இந்த படையில் 82 முஹாஜிர்கள் (மக்காவில் இருந்து மதினா வந்தவர்கள்) , 231 அன்ஸாரிகள் (மதினா வாசிகள்)

ஸஹாபாக்களிடம்  போதிய யுத்த சாதனங்கள் இருக்கவில்லை.  
60 கேடயங்களும்! மிக்தாத் இப்னு அஸ்வர் (ரழி) அவர்களிடம் ஒரு குதிரையும்! 
70 ஒட்டகங்களும் இருந்தன! 
ஓர் ஒட்டகத்திற்கு மூவராக மாறிமாறி பயணம் செய்தனர்!

நூல் : புகாரி : 3956 | அஹ்மத் : 973 : 3706

முஹாஜிரின்களின் படைக்கு அலீ (ரழி) அவர்களும் 
அன்ஸாரின்களின் படைக்கு ஸஅத் இப்னு முஆத் (ரழி) அவர்கள் தலைமை தாங்கினார்கள்!

*காஃபிர்களின் படை :*

முஸ்லிம்களுடைய படை தன்னை தாக்க வருகிறது என அறிந்து கொண்டு அபூஸுஃப்யான் மக்காவாசிகளிடம் உதவி வேண்டி தூது அனுப்பினார்!

தங்களது வியாபாரக் குழுக்களுக்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்தை அறிந்த மக்காவாசிகள் முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்ற மக்கத்து காஃபிர்கள் போருக்கு தயார் ஆகினார்கள்!

மக்கா காபிர்களுடைய படையில் 1000 வீரர்கள் இருந்தனர்! 
100 குதிரைகளும் 
600 கவச ஆடைகளும் 
பெருமளவிலான ஒட்டகங்களும் இருந்தன!

நூல் : அஹ்மத் : 904

காஃபிர்களின் படைக்கு தலைவனாக அபூ ஜஹ்ல் மற்றும் இப்னு ஹிஷாம் இருந்தான்!

அபூஸுப்யானுடைய தந்திரமான அறிவை பயன்படுத்தி மக்காவினுடைய வியாபாரக் குழு முஸ்லிம்களிடம் சிக்க கூடாது என்று பாதுகாப்பாக வேறு வழியில் சென்று விட்டார்!

*பத்ர் போரின் போது ஆலோசனை :*

அபூஸுப்யானுடைய வணிக குழு தப்பித்து விட்டதால் காஃபிர்களுடன் போர் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது!

நபி (ஸல்) அவர்கள் சஹபாக்களை அழைத்து ஆலோசனை செய்தார்கள்!

முஹாஜிர்களில் ஒருவரான மிக்தாத் பின் அல் அஸ்வத் (ரழி) அவர்கள் எழுந்து : 
யா ரஸூலல்லாஹ் (ஸல்)
அல்லாஹ் உங்களுக்கு இட்டக்கட்டளையை நிறைவேற்றுங்கள்!

அல்லாஹ்வின் மீது ஆணையாக! 
பனு இஸ்ராயீல்கள் மூஸா நபியிடம் நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள் ! நாங்கள் உக்கார்ந்து கொண்டு இருக்கின்றோம் என்று சொன்னது போன்று நாங்கள் உங்களிடம் சொல்ல மாட்டோம்! உங்களின் வலது புறமும் இடது புறமும் நின்று நாங்கள் போரிடுவோம் என்று கூறினார்கள்! 

நூல் : புகாரி : 3952

இந்த ஆலோசனை கேட்ட பின்பு நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சி உடன் போருக்கு தயார் ஆகுங்கள்! 
என்று கூறினார்கள்!

*பத்ர் எனும் இடம் :*

முஸ்லீம்கள் விரைவாக பத்ர் இடத்திற்கு சென்று தண்ணீர் தொட்டி உள்ள பகுதிகளை கைப்பற்றி கொண்டனர் 
இதனால் காஃபிர்களுக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது! 
தங்குவதற்கு மலை பகுதி தான் ஸஹாபாக்களுக்கு கிடைத்தது! 

ஸஹாபாக்கள் அனைவரும் நோன்பு வைத்து இருந்தார்கள் அதிக துர பயணத்தினாலும் மிகுந்த கலைப்பில் இருந்தார்கள்!

அல்லாஹ் அவர்கள் ஒரு தூக்கத்தை கொடுத்தான் அதன் மூலம் அவர்களுக்கு உடல் அசதி போய் உடல் வலிமை பெற்றார்கள்! 
ஆனால் நபி (ஸல்) அவர்கள் மட்டும் உறங்காமல் அழுது துஆ செய்து கொண்டு இருந்தார்கள்!

அல் குர்ஆன் : 8 : 11
நூல் : அஹ்மத் : 973

மறுநாள் அல்லாஹ் மழை பொழிய வைத்தான் முஃமின்களின் முகாம் இறுக்கமடைந்தது. 
காபிர்களின் தங்குமிடம் சகதியாகி, நிலைத்து நிற்க முடியாமல் போனது!

அல்லாஹ் அந்த மழை மூலம் ஸஹாபாக்களின் உள்ளத்தை உறுதி படுத்தி, பரிசுத்தம் படுத்தினான் இன்னும் அவர்களை உறுதிப்படுத்தினான்! 

அல் குர்ஆன் : 8 : 11

*நபி (ஸல்) அவர்களின் துஆ :*

முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்ததால் அன்றைய இரவு அழுது அழுது இறைவனிடம் நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் பிரார்த்தனை செய்தார்கள்!

இறைவா! 
நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று! 
நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! 
இறைவா! 
இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள்!

என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்த பின்னர் அல்லாஹ் அல்குர்ஆன் : 54 : 45 வசனத்தை இறக்கி அருளினான்!

நூல் : புகாரி : 3953

போர் நடைபெறும் முன்பே அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு காஃபிர்கள் எந்த இடத்தில் கொல்லப்படுவார்கள் என்று முன்னறிவிப்பு செய்து விட்டான்!

நூல் : மிஸ்காத் : 531

*பத்ர் போர் ஆரம்பம் :*

*ஹிஜ்ரி 2ம் ஆண்டு,* 
*ரமழான் மாதம் 17ம் நாள் காலை பத்ருப் போர் நடைபெற்றது.* 
ஸஹாபாக்கள் அனைவரும் நோன்புடனும் போர் செய்தனர்!

அன்றைய கால போர் முறைப்படி 
போர் 
செய்யும் முன் 
போர் ஓத்திகை செய்து பார்ப்பார்கள்! 
அதன் படி முஸ்லீம்களில் மூவரும் 
காஃபிர்களில் மூவரும் போர் ஒத்திகை செய்தனர்! 

*ஹம்ஸா (ரலி) _    உத்பா*

*உபைதா (ரலி) _ வலீத்*

*அலி (ரலி) _ ஷைபா*

இந்த மூன்று ஸஹாபாக்களும் காஃபிர்களை வெட்டி வீழ்த்தினார்! 
உபைதா (ரழி) அவர்களுக்கு மட்டும் காயம் ஏற்பட்டு விட்டது 
இந்த சண்டையில் பின்னால் ஸஹாபாக்கள் இவரை தூக்கி சென்று விட்டனர்!
இதற்க்கு பின்பு போர் ஆரம்பம் ஆனது!

நூல் : அபூதாவூத் : 2291

*பத்ர் போரில் அல்லாஹ்வின் உதவி :*

பத்ரில் கலந்து கொண்ட முஸ்லிம் படையினர் குறைவாக இருந்தும், அல்லாஹ் காபிர்களின் பார்வையில் அதிகமாக காட்டினான்! 
இன்னும்  காஃபிர் படைகளை முஸ்லீம்களுக்கு குறைவான எண்ணிக்கையாக அல்லாஹ் காண்பித்தான்!

அல் குர்ஆன் : 8 : 43

அல்லாஹுத்தஆலா பத்ர் போரில் 1000 மலக்கு மார்களை அனுப்பி தனது உதவியை நேரடியாக வழங்கினான்! 
இதில் ஜிப்ரயில் (அலை) அவர்களும் போரில் கலந்துக் கொள்ள போர் கவசங்களுடன் குதிரையில் வந்தார்கள்!

அல் குர்ஆன் : 8 : 9
நூல் : புகாரி : 3995

பத்ர் களத்தில் வானவர்கள் இறங்கி எதிரிகளை தாக்கியதும் காஃபிர்கள் நிலை குழைந்து போனார்கள்! 
பெரும்பாலான காஃபிர்களை மலக்கு மார்கள் தாக்கினார்கள்!

அல் குர்ஆன் : 8 : 17

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்று கொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்று கொண்டிருந்தார். 
அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் 
*“ஹைஸூம்! முன்னேறிச் செல்”* என்று கூறியதையும் செவியுற்றார்!

உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார்.

உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித் தெரிவித்தார். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 
“நீர் சொன்னது உண்மையே. 
இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்” 
என்று கூறினார்கள்!

நூல் : முஸ்லிம் : 3621

பல காஃபிர்கள் இறந்தார்கள் 
இன்னும் சிலர் புறமுதுகு காட்டி ஓடினார்கள்! 
முஸ்லிம்கள் பெரும் வெற்றியடைந்தனர்!

எதிரிகள் தோற்றனர். முஸ்லிம்களது தரப்பில் *14 பேர் ஸஹீத் ஆனார்கள்*
அவர்களில் 6 ஸஹாபாக்கள் (முஹாஜிர்கள்), 8 ஸஹாபாக்கள் அன்ஸாரிகள் ஆவர் , எதிரிகளின் தரப்பில் 70 பேரும் கொல்லப்பட்டிருந்தனர்!

நூல் : புகாரி : 3986

போரில் கொல்லப்பட்ட ஹாரிஸா பின் சுராகா (ரலி) அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்த்த சொர்க்கம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்!

நூல் : புகாரி : 2809

எதிரிகளில் 70 நபர்கள் சிறை
பிடிக்கப்பட்டவர்கள் 
போக மற்றவர்கள் யுத்தக் களத்திலிருந்து விரண்டோடினர்!

எதிரிகளின் முக்கியமான தலைவர்கள் 24 பேரும் இந்த போரில் கொல்லப்பட்டிருந்தனர். 
கொல்லப்பட்ட காஃபிர்களின் உடலை பத்ர் இடத்தில் இருந்த பாழடைந்த கிணறில் தூக்கி எறிந்தார்கள்!

நூல் : புகாரி : 3976

மக்காவில் நபி (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழும் போது, 
ஸஜ்தாவில் இருக்கும் பொழுது காஃபிர்கள் ஒட்டகக் குடலை கழுத்தில் போட்டு வேதனைப்படுத்தி சிரித்து கொண்டு இருந்தார்கள்!

இந்த செயலை செய்த அனைத்து காஃபிர்களும் பத்ரு களத்தில் கொல்லப்பட்டனர்!

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலம் நபி அவர்களும் ஸஹாபாக்களும் பெரும் துன்பம் கொடுத்த அபூஜஹ்ல் எனும் காஃபிரை 
இரு வாலிப சிறுவர்கள் (முஆத், முஅவ்வித்) போரில் வெட்டி வீழ்த்தினர்! பின்பு இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் அபூஜஹ்லை கொன்றார்!

அபூஜஹ்ல் மரணம் அடையும் நேரத்தில் கூட தன்னை கொல்ல உயர்த்த குலம் யாரும் கொல்ல வில்லையே மிகவும் தாழ்ந்த ஒருவன் கையால் கொல்லப்படுகிறேன் என்று மரண நேரத்தில் கூட பெருமை அடித்து கொண்டான்!

நூல் : புகாரி : 3962 - 4020

பத்ர் போரில் பிடிக்கப்பட்ட 70 காஃபிர்களை விடுதலை செய்ய குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்தார்கள் 
அதை கொடுக்க இயலாதவர்கள் எழுதபடிக்க தெரியாத 10 முஸ்லீம்களுக்கு எழுத படிக்க கற்று கொடுக்க வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்!

நூல் : அத்தபகா துல் குப்ரா : இப்னு ஸஅத் : 2116

போரில் கிடைக்கும் பொருட்கள் ஆரம்ப காலத்தில் இருந்து அந்த பொருட்களை யாரும் பயன் படுத்த கூடாது 
ஆனால் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கும் ஸஹாபாக்களும் முதன் முதலில் அதை ஹலால் ஆக்கினான்!

நூல் : புகாரி : 3621

*போரில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு :*

1) அல்லாஹ் பத்ர் போரில் கலந்து கொண்டவர்களுக்கு சொர்க்கத்தை கடமையாக்கி விட்டான்! 
நரகத்தை தடை செய்து விட்டான்!

2) பத்ர் போரில் கலந்து கொண்டவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான்! 
இவர்கள் விரும்பியதை செய்து கொள்ளலாம்!

நூல் : புகாரி : 3983 : 4908


*பத்ர் போர் படிப்பினை :*

1) அதிகமான மக்கள் ஒன்றை பின் பற்றுவதால் அது மார்க்கம் ஆகிவிடாது! 
குறைவான மக்கள் ஒன்றை பின் பற்றுவதால் அது அசத்தியம் ஆகி விடாது! 
என்பதை நாம் இந்த போரின் மூலம் விளங்கி கொள்ளலாம்!

2) அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்டு! 
அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்தால் 
இறை உதவியை நாம் நேரடியாக காணலாம்! 
நாம் எதிர் பார்க்காத விதத்தில்!

3) உண்மையாக மார்க்கத்தை பின் பற்ற கூடியவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்கள் பலகீனமானவர்களாக இருந்தாலும் ..... 
அசத்தியவாதிகள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் 
அல்லாஹ் இறை நம்பிக்கையுள்ள...
இறைவன் மீது மட்டும் பொறுப்பு சாட்டக்கூடிய... 
பலகீனமானவர்களுக்கு தான் உதவி புரிவான்!

4) மறுமை பற்றி அல்லது 
உலகம் பற்றி எந்த விசயமாக, காரியமாக இருந்தாலும் 
நாம் அது சம்பந்தமான அனைவரிடமும் ஆலோசனை செய்ய வேண்டும். 
அவர்கள் கூறும் ஆலோசனை சரியாக இருந்தால் அதை ஏற்று நடக்க வேண்டும்!

வீட்டில் ஒன்றை பற்றி ஆலோசனை செய்கிறோம் என்றால் 
வீட்டாரை அனைவரையும் அமர வைத்து ஆலோசனை செய்ய வேண்டும் 
பெண்களிடமும் ஆலோசனைகள் கேட்க வேண்டும் 
ஆலோசனைகள் சரியாக இருந்தால் 
அதை ஏற்று செய்ய வேண்டும்! 

5) அல்லாஹ் ஒரு கூட்டத்திற்கு உதவி செய்ய நாடி விட்டால் முழு உலகமும் ஒன்று சேர்ந்தாலும் அவர்களை தோற்கடிக்க முடியாது!

*முஃமின்களே!* 
*அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால்,* 
*உங்களை வெல்பவர் எவரும் இல்லை!*

அல் குர்ஆன் : 3 : 160

6) பத்ர் போரில் ஸஹாபாக்கள் எண்ணிக்கை மிக குறைவு 
மிகவும் பலகீனமாக இருந்தார்கள் 
ஆனாலும் அல்லாஹ்வின் மீதும் ரஸூலின் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்தார்கள்! 
அல்லாஹ் அவர்களை உறுதி படுத்தினான் மலக்கு மார்களை கொண்டு அல்லாஹ் உதவி செய்தான்!

பத்ரில் (நடந்த யுத்தத்தில்) நீங்கள் (எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும் மிகக்) குறைந்தவர்களாயிருந்த சமயத்தில் நிச்சியமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான்!

அல் குர்ஆன் : 3 : 123

நாம் எந்த அளவுக்கு அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து இருக்கின்றோமோ 
அப்போது நாம் அறியாத விதத்தில் நாம் எதிர் பார்க்காத வழியில் 
நிச்சயமாக அல்லாஹ் உதவி புரிவான்!

அல்லாஹ்வின் ஆற்றல் மீது ஒரு போதும் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்!

*அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக* - 
*பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்!*

அல் குர்ஆன் : 4 : 81


*அல்லாஹ் போதுமானவன்.*

பிரபல்யமான பதிவுகள்