https://youtu.be/tgL12ojp0es
(929) குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்
===========================
கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது விந்தையானது.
அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா?
إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا
நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ
அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான்
(அல்பகரா :2:26)
இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா?
இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக
அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும்,
29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான்.
இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.
அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான்.
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான்
(அல்பகரா :2:26)
அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு,
அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
தன்னோடு ஒப்பிடும் போது, எதிரி பல மடங்கு பெரிதாய் அமைந்தவன் என்று அறிந்திருந்தும் எந்தவித அச்சமுமின்றி எதிர்கொள்ளும் தைரியத்தை எங்கிருந்து கொசு கற்றுக் கொண்டது?.
இந்த போராட்டத்தில் சாவு நிச்சயம் என்று தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் எதிர்த்து போராடும் போர்க்குணத்தை எங்கே அது கற்றுக் கொண்டது?.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மனிதன் கொசுவுக்கு பயந்து வலைக்குள் பதுங்கி கொள்ளும் அச்சத்தை அது ஏற்படுத்தி இருக்கிறதே!
உலகில் உயிர் கொல்லி நோய்கள் என்று அறிவிக்கப்பட்டவைகளில் மிக அதிகமானவை கொசுக்களால் தான் பரப்பப்படுகின்றன. இத்தனை ஆச்சரியங்களை உள்ளடக்கிய கொசுவை அற்பமாக எண்ணிக் கொண்டீர்களா?,
அதுபற்றி ஆராய வேண்டாமா?. அதை தானே திருக்குர்ஆன் சொல்லிக் கொண்டிருக்கிறது.
நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் காணலாம்.
விந்தையான கொசு பற்றிய விபரங்கள்
1. அது பெண்பால்.
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.
5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்
7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.
உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு.
2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.
மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.
ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.
சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.
கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்.
ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம்,5 நாட்கள் மட்டுமே
முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரிய முனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. கொசுவின் துணையுறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்டதும் கொசுதான்.
ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளிலேயே அது உணவு உட் கொள்ளும். கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்
பெண் கொசுதான்.
கடிக்கும்போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது. ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருளை செலுத்துகிறது. மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது.
' ஏடிஸ் ' வகை கொசுதான் டெங்கு பரப்புகிறது.
ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும்போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது.
டெங்குவிற்கு மருந்தில்லை; டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.
கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும்.நுளம்பு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் நுளம்பினத்தின் பெண் நுளம்புகளே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்காவியாக இருக்கின்றது
கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின்(alletrin) சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருள் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற உடல்நலக்கேடுகள் விளைகின்றன.
உடலில் தேங்காய் எண்ணை அல்லது விளக்கெண்னை பூசிக்கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில் பூச்சிகளும் நம்மை கடிக்காது.
கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கும் காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ் கொசுக்களை கவருகின்றன ஆக பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஷயத்திலும் உண்மையே
Vitamin B --- கொசுவின் எதிரி...,
இந்த வைட்டமின் B அதிகமாக இருப்பவர்களை கொசு அண்டுவதில்லை...
வைட்டமின் B எவ்வளவு நீங்கள் எடுத்துகொள்ளலாம் என்று மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகளை வாங்குவது நல்லது.
சுத்தம் கொசுவுக்கு பகை:-
கொசு ..தொல்லை ..பற்றி தொடரே
எழுதலாம் அவ்வளவு செய்தி இருக்கு
குறிப்பா கொசு எப்படி உருவாகிறது?
மிகசிறு நீர் தேகத்தில் தான் கொசு லார்வா என்கிற முட்டையை பாதுகாக்கிறது அதாவது கொட்டாங்குச்சி எனப்படும்
செரட்டை அதில் நாள்பட தண்ணீர் இருக்குமால் அதுவே கொசுவின் வீடு
அதே போன்று சிறு சிறு டப்பாக்கள் அதில் தண்ணீர் கொசுவுக்கு சொகுசான வீடு.
ஓடும் தண்ணீரில் கொசு ஐயா இருக்க மாட்டார் அவருக்கு நன்னீர் அவசியம்
எனவே குடிநீர் தேக்கம் அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் அற்புதமான இல்லம்
குடிநீர் சேகரிப்பு தொட்டியை யாரும் சரியாக பராமரிப்பதில்லை ..காத்து கொசுவுக்கு பகை சிறு சிறு செடி கொடிகள் தவிர்த்தல் நலம் ...
கொசு நம் ரத்தத்தை உறிஞ்சும் போது அது உறைந்துவிடக்கூடாது என்பதற்காக தனது எச்சில் போன்ற திரவத்தை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள ரசாயனம் தோலில் பட்டதும் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகிறது.
இந்த பதிவை படித்தபின்பு
நீயெல்லாம் எனக்கு கொசுமாதிரி என்று
யாரையாவது சொல்வீர்களா?