நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, பிப்ரவரி 21, 2021

ஜமாத்துல் உலமா தேர்தல்,

*யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள்,* *விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.*
*அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.*

*வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.*
*யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.*

*நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.*
*வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*

*மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்.*
*தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.*

*பணம் இருந்தால் நீங்கள்  உயர்ந்தவன்  குணம் இருந்தால் நீங்கள் குப்பை.*
*நடித்தால் நீங்கள் நல்லவன்.*
*உண்மை பேசினால் பைத்தியக்காரன்.*
*அன்பு காட்டினால் ஏமாளி.*
*எடுத்துச் சொன்னால் கோமாளி.*

*இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.*
*அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.*
*பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.*

*நிலவை....தூரத்தில் இருந்து ரசிப்பதை போல.*

*சில உறவுகளையும்..... தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.*
*சில வலிகள் இல்லாமல் இருக்கலாம்.*

*தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உங்கள் ஆயுதமாக வைத்துக்கொள்ளுங்கள்.அவர்களுக்கு புரியவைக்க வரும் காலம் ஒன்று உள்ளது.*
*சிந்தித்து செயல்படுங்கள்.* *இதுவும் கடந்து போகும் அல்லது இதுவும் பழகி போகும்.*

*நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.*
*ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.*

*யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை.*
*யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை.*
*யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை.*
*ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.*

*மனிதனும் வாழை மரமும் ஒன்று தான். தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.*
*தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.*

*இந்த பதிவு எல்லோருக்கும் பொருந்தும் என்பதால் பதிவிட தோன்றியது.*

*ஆக... அன்பான ஆலிம் பெருமக்களே! (23-02-2021) ஜமாஅத்துல் உலமா சபை தேர்தலில் வாக்களிக்க இருக்கும் ஆலிம்கள் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யுங்கள்.ஸனது பெற்ற அனைத்து ஆலிம்களுக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுப்போம் என்று உத்தரவாதம் தரும் நிர்வாகிகளை தேர்வு செய்யுங்கள்.அனைத்து ஆலிம்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும்  பாதிப்புகளுக்கும் அனுசரித்து போகும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யுங்கள்.*
          ..................... ..................... *சேவைகள் தொடர..* ..
      *வாழ்த்துக்கள்.* 
...........................................
தமிழ்நாடு 
மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் இன்று (23-02-2021) நடைபெற்ற 
மாநிலத்தேர்தலில் வெற்றி பெற்ற 


சங்கைமிகு மெளலவி

 *P.A.காஜா* 
 *முஈனுத்தீன்* பாகவி ஹள்ரத் அவர்களுக்கும்.

சங்கைமிகு மெளலவி 
v s *அன்வர் பாஷா உலவி* ஹள்ரத் அவர்களுக்கும் .

சங்கைமிகு மெளலவி 
 *மீரான் மிஸ்பாஹி* ஹள்ரத் அவர்களுக்கும்

 *மனம் நிறைந்த* *வாழ்த்துக்கள் .* 

எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களின் இந்த 
வெற்றியின் மூலம் உலமாக்களுக்கும் உலக மக்களுக்கும்  சேவைகள் செய்ய
அருள் புரிவானாக!
ஆமீன் . யாரப்பல் ஆலமீன்.
...........................................
        துஆவுடன் வாழ்த்தும்.


பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவர் ஜ
காதர் பாஷா மன்பயீ 

பிரபல்யமான பதிவுகள்