நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வியாழன், ஜூன் 30, 2022

ஈமான் கொண்ட திருநங்கைகள்,

ஈமான் கொண்ட திருநங்கைகள் மறுமை நாளில் எவ்வாறு சுவர்க்கத்தில் நுழைக்க படுவார்கள்?*

*الجواب بعون الله الملك الوهاب 👇*


الجنس البشري نوعان : ذكر وأنثى ، ولا ثالث لهما 


நாளை மறுமையில் சுவனம் செல்பவர்கள் இரு தரப்பினர்களாக இருப்பார்கள் 

ஒன்று ஆண் தரப்பினர் 
மற்றொன்று பெண் தரப்பினர் 

இவ்விரு தரப்பினர் அல்லாது மூன்றாம் தரப்பினர் கிடையாது 
என்பதே இறைவன் பகர்கின்ற சான்றாகும்


قال تعالى

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا 

*وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌*  

وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌  اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏


மனிதர்களே! 
நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். 

அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். 

(ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். 

*பின்பு அவ்விருவரிலிருந்து பல ஆண்கள், பெண்கள் என இரு பாலரை (இப்பூமியில்) பரப்பினான்.* 

ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். 

அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். 

இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர் களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்.) 

நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்.


(அல்குர்ஆன் : 4:1)


اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًى‏

(யாதொரு கேள்வியும் தம்மிடம்) கேட்காது விட்டுவிடப்படுவோம் என்று மனிதன் எண்ணிக்கொண்டானா?


(அல்குர்ஆன் : 75:36)

اَلَمْ يَكُ نُطْفَةً مِّنْ مَّنِىٍّ يُّمْنٰىۙ‏

அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்கவில்லையா?

(அல்குர்ஆன் : 75:37)

ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰىۙ‏

(இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான்

(அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான்.

(அல்குர்ஆன் : 75:38)

فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰى‏


ஆண், பெண் என இரு ஜோடிகளையும் அதிலிருந்தே உற்பத்தி செய்கின்றான்.

(அல்குர்ஆன் : 75:39)



والخنثى ليس بنوع ثالث، إنما مرده إلى أحد النوعين ، 
فهو في الحقيقة إما ذكر ، وإما أنثى ، 

وإنما أشكل حاله علينا.


قال القرطبي رحمه الله في تفسير قوله تعالى : 

(وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً) :

" حَصَرَ ذُرِّيَّتَهُمَا فِي نَوْعَيْنِ ، 

فَاقْتَضَى أَنَّ الْخُنْثَى لَيْسَ بِنَوْعٍ ، 

لَكِنْ لَهُ حَقِيقَةٌ تَرُدُّهُ إِلَى هَذَيْنَ النَّوْعَيْنِ وَهِيَ الْآدَمِيَّةُ ، 

فَيَلْحَقُ بِأَحَدِهِمَا " 

ஆகவே மேற்கண்ட வசனத்தின் மூலமாக அறியமுடிகிறது 

இறைவன் படைத்தது ஆண் பெண் என்ற இருபாலரை மட்டும்தான் 

மூன்றாம் பாலினர் என்பது கிடையாது 

ஆகவே அரவாணிகள் என்ற  திருநங்கைகள் ஒன்று ஆணினத்தில் உள்ளவராக அல்லது பெண்ணினத்தில் உள்ளவராக தான் இருக்க முடியும்


பார்க்க 👇

 "تفسير القرطبي" (5/ 2) .

وقد أخبر الله تعالى أن الناس يوم القيامة فريقان اثنان لا ثالث لهما ، 

அதே போன்று மறுமை நாளில் இரு பிரிவினர்கள் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவார்கள் என்ற இறைவனின் செய்தியும் இதை உறுதிப்படுத்துகிறது


فقال عز وجل : (

وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ قُرْاٰنًا عَرَبِيًّا لِّـتُـنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا 

وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيْهِ‌ فَرِيْقٌ فِى الْجَنَّةِ وَفَرِيْقٌ فِى السَّعِيْرِ‏


(நபியே!) இவ்வாறே இந்தக் குர்ஆனை அரபி மொழியில் நாம் வஹீ மூலம் உங்களுக்கு அறிவித்தோம். 

(இதனைக் கொண்டு, அரபி மொழி பேசும் மக்காவாசிகளாகிய) தாய்நாட்டாரையும், 
அதைச் சூழ்ந்த கிராமங்களில் வசிப்பவர்களையும், 
நீங்கள் எச்சரிக்கை செய்து அனைவரும் (விசாரணைக்காக) ஒன்று சேரக்கூடிய நாளைப் பற்றி அச்சமூட்டுங்கள்! 

அந்நாள் வருவதில் சந்தேகமே இல்லை. 
(அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சுவனபதிக்கும், 
ஒரு கூட்டத்தார் நரகத்திற்கும் செல்வார்கள்.

(அல்குர்ஆன் : 42:7)


وأخبر عن أهل الجنة أنهم قسمان : مؤمنين ومؤمنات ، ولا ثالث لهما .


كما أخبر عن أهل النفاق ، وأهل الكفر والإشراك أنهما قسمان ، ولا ثالث لهما ، فقال تعالى


அதேபோன்று நாளை மறுமையில் சுவனத்திற்கு செல்பவர்கள் இரு பிரிவினர்கள் தான் 
ஒன்று முஃமினான ஆண்கள்
மற்றொன்று முஃமினான பெண்கள் 

எவ்வாறு நரகத்திற்குச் செல்பவர்கள் ஆண் மற்றும் பெண் என்ற இரு பிரிவினர்களோ அது போலவே


وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىۙ‏

நிச்சயமாக அவன்தான் ஆண், பெண் என்ற இரு பிரிவினரை ஜோடி ஜோடிகளாகப் படைக்கின்றான்.

(அல்குர்ஆன் : 53:45)



لِّيُدْخِلَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَيُكَفِّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ‌ 

وَكَانَ ذٰ لِكَ عِنْدَ اللّٰهِ فَوْزًا عَظِيْمًا ۙ‏


(அல்லாஹ்) நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சுவனபதிகளில் புகுத்துவான். 
அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். 
என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். 

அவர்களின் பாவச்சுமையையும், அவர்களிலிருந்தும் நீக்கி விடுவான். 

இது அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் மகத்தான ஒரு வெற்றியாக இருக்கின்றது..


(அல்குர்ஆன் : 48:5)

وَّيُعَذِّبَ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِيْنَ وَ الْمُشْرِكٰتِ الظَّآنِّيْنَ بِاللّٰهِ ظَنَّ السَّوْءِ‌ عَلَيْهِمْ دَآٮِٕرَةُ السَّوْءِ‌  

وَ غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَاَعَدَّ لَهُمْ جَهَنَّمَ وَسَآءَتْ مَصِيْرًا‏


அல்லாஹ்வைப் பற்றிக் கெட்ட எண்ணம் கொள்ளும் நயவஞ்சகமுள்ள ஆண்களையும் பெண்களையும், இணை வைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் (அல்லாஹ்) வேதனை செய்தே தீருவான். 

வேதனை அவர்கள் (தலைக்கு) மேல் சூழ்ந்துகொண்டு இருக்கின்றது. 

அல்லாஹ் அவர்கள் மீது கோபப்பட்டு, அவர்களைச் சபித்து, 

அவர்களுக்காக நரகத்தையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். 
அது செல்லுமிடங்களில் மகா கெட்டது.


(அல்குர்ஆன் : 48:6)



الخنثى في اللغة : الذي لا يخلُص لذكر ولا أنثى ، 

أو الذي له ما للرجال والنساء جميعا ، مأخوذ من الخنث ، وهو اللين والتكسر ، 

يقال : خنثت الشيء فتخنث ، أي : عطفته فتعطف ، والاسم الخنث .

وفي الاصطلاح : من له آلتا الرجال والنساء ،
أو من ليس له شيء منهما أصلا ، وله ثقب يخرج منه البول

المخنَّث بفتح النون : هو الذي يشبه المرأة في اللين والكلام والنظر والحركة ونحو ذلك ، 

وهو ضربان :
أحدهما : من خُلق كذلك ، فهذا لا إثم عليه .
والثاني : من لم يكن كذلك خلقة ، بل يتشبه بالنساء في حركاتهن وكلامهن ، 

فهذا هو الذي جاءت الأحاديث الصحيحة بلعنه 
 
ولهذا جاء في حديث ابْنِ عَبَّاسٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ـ 

قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ... 

رواه البخاري،


அரவாணி என்றால், வெளித்தோற்றத்தையும் உடலமைப்பையும் கொண்டு ஆண் என்றோ, பெண் என்றோ தீர்மானிக்க இயலாத மனிதர் என்று பொருள். 

ஷரீஆவின் பார்வையில், 
ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் உள்ள, 
அல்லது இரண்டுமே இல்லாத மனிதருக்குத்தான் அடிப்படையில் ‘அரவாணி அல்லது ‘அலி’ (குன்ஸா) என்று சொல்லப்படும்


முதலில் ஓர் அடிப்படையைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்

அதாவது ஒருவரை ‘அரவாணி’ என்று எப்போது தீர்மானிக்க முடியும் என்றால், 

பருவ வயதை அடைந்தபிறகு தான் அந்த முடிவுக்கே வர முடியும். 

பருவமடைவதற்கு முன்பு ஆண் குறியும் பெண் குறியும் இருப்பதால் ஆண் என்றோ பெண் என்றோ தீர்மானிப்பதில் குழப்பம் ஏற்படும்.

பருவம் அடைந்தபிறகு பெரும்பாலும் ஆண், அல்லது பெண் என்பது இயல்புகளாலும் உடலமைப்பாலும் தெரிந்துவிடும். 

மார்பு பெரிதாவது, 
மாதவிடாய் வருவது, 
ஆண்மேல் ஈர்ப்பு போன்ற அடையாளங்கள் அவள் ஒரு பெண் என்பதைத் தீர்மானித்துவிடும். 

தாடி மற்றும் மீசை முளைப்பது, 
பெண்மேல் ஈர்ப்பு, 
ஆண்குறியிலிருந்து விந்து வெளிப்படுவது 
போன்ற அறிகுறிகள் அவன் ஆண் என்பதற்குச் சான்றுகள்.

இருபாலில் ஒருபால் முடிவாகிவிட்டால், 
மற்றொரு பாலின் உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம். 

இனி ஆணை ஆணாகவும் 
பெண்ணைப் பெண்ணாகவும் நடத்துவதில் சிக்கலும் இராது. 

அதுவரை எந்த முடிவுக்கும் வந்துவிடவோ திருமணம் செய்துவைக்கவோ கூடாது


அரவாணிகளில் இன்னொரு வகை உள்ளனர். 
இவர்களே எண்ணிக்கையில் அதிகம். 

ஆணுறுப்புடன் மட்டும் பிறக்கும் ஒரு குழந்தை, பருவ வயதை நெருங்க நெருங்க பெண்ணின் குணாதிசயங்களை அடைந்துவிடும். 
ஆண்மீது ஈர்ப்பு ஏற்படும். 

பெண்களுடன் இருப்பதையே விரும்பும். 
இதைத்தான் இன்று ‘திருநங்கை’ என்கின்றனர். 

இவர்களை ஷரீஆவின் வழக்கில் ‘முகன்னஸ்’ என்பர்.


மென்மை, பேச்சு, பார்வை, அசைவு, நடை ஆகியவற்றில் பெண்ணுக்கு ஒப்பாக இருப்பவரே ‘முகன்னஸ்’ ஆவார். 

ஆணுறுப்போடு பிறந்த ஒருவனுக்கு இந்த மாற்றங்கள் இயற்கையாகவே தோன்றுமானால் 
அவன் அரவணைக்கப்பட வேண்டியவன்; 
அனுதாபத்திற்குரியவன்; 
அது அவனுடைய குற்றமோ குறையோ ஆகாது.

ஆனால், ஆணாகப் பிறந்த சிலர் வேண்டுமேன்றே செயற்கையாகப் பெண்ணைப்போல் நடந்துகொள்வதும் 
ஆணுறுப்பை அகற்றிவிடுவதும் உண்டு. 
இதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. 

ஒரு நபிமொழியில் இத்தகையோரை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.


لَعَنَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ المُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، والمُتَرَجِّلَاتِ مِنَ النِّسَاءِ، 

وقَالَ: أخْرِجُوهُمْ مِن بُيُوتِكُمْ قَالَ: فأخْرَجَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ فُلَانًا، وأَخْرَجَ عُمَرُ فُلَانًا


நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

பெண்களைப்போல் ஒப்பனை செய்யும் ஆண்களையும், 
ஆண்களைப்போல் ஒப்பனை செய்யும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். 
இத்தகையவர்களை உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றிவிடுங்கள் என்றும் சொன்னார்கள். 
அவ்வாறு சிலரை நபியவர்களும் உமர் ரலி அவர்களும் வெளியேற்றவும் செய்தார்கள். 

(புஹாரி)



ينقسم الخنثى إلى مُشكِل وغير مُشكِل :

أ. الخنثى غير المشكل :
من يتبين فيه علامات الذكورة أو الأنوثة ، 

فيعلم أنه رجل ، أو امرأة ، فهذا ليس بمشكل ، 
وإنما هو رجل فيه خلقة زائدة ، أو امرأة فيها خلقة زائدة ، وحكمه في إرثه 
وسائر أحكامه حكم ما ظهرت علاماته فيه .

ب. الخنثى المشكل :
هو من لا يتبين فيه علامات الذكورة أو الأنوثة ، 
ولا يعلم أنه رجل أو امرأة ، أو تعارضت فيه العلامات .

فتحصل من هذا أن المشكل نوعان :

نوع له آلتان ، واستوت فيه العلامات ، 

ونوع ليس له واحدة من الآلتين وإنما له ثقب .

ذهب جمهور الفقهاء إلى أن الخنثى قبل البلوغ إن بال من الذكَر : فغلام ، وإن بال من الفرج : فأنثى .
وأما بعد البلوغ فيتبين أمره بأحد الأسباب الآتية :
إن خرجت لحيته ، أو أمنى بالذكر ، أو أحبل امرأة ، أو وصل إليها : فرجُل ، 

وكذلك ظهور الشجاعة والفروسية ، ومصابرة العدو دليل على رجوليته كما ذكره السيوطي نقلا عن الإسنوي .


وإن ظهر له ثدي ونزل منه لبن أو حاض ، أو أمكن وطؤه : فامرأة ، 

وأما الولادة فهي تفيد القطع بأنوثته ، وتقدم على جميع العلامات المعارضة لها .

وأما الميل : فإنه يستدل به عند العجز عن الإمارات السابقة ، فإن مال إلى الرجال فامرأة ، وإن مال إلى النساء فرجل ، وإن قال أميل إليهما ميلا واحدا ، أو لا أميل إلى واحد منهما فمشكل .


قال السيوطي : وحيث أطلق الخنثى في الفقه ، فالمراد به المشكل .


قَالَ النَّوَوِيُّ الْمُخَنَّثُ ضِرْبَانِ: أَحَدُهُمَا مَنْ خُلِقَ كَذَلِكَ وَلَمْ يَتَكَلَّفِ التَّخَلُّقَ بِأَخْلَاقِ النِّسَاءِ وَزِيِّهِنَّ وَكَلَامِهِنَّ وَحَرَكَاتِهِنَّ وَهَذَا لَا ذَمَّ عَلَيْهِ وَلَا إِثْمَ وَلَا عَيْبَ وَلَا عُقُوبَةَ لِأَنَّهُ مَعْذُورٌ.

وَالثَّانِي مَنْ يَتَكَلَّفُ أَخْلَاقَ النِّسَاءِ وَحَرَكَاتِهِنَّ وَسَكَنَاتِهِنَّ وَكَلَامَهُنَّ وَزِيَّهُنَّ فَهَذَا هُوَ الْمَذْمُومُ الَّذِي جَاءَ فِي الْحَدِيثِ لَعْنُهُ 

قال ابن قدامة – رحمه الله - :
ولا يخلو الخنثى من أن يكون مشكلاً ، أو غير مشكل : 
فإن لم يكن مشكلاً ، بأن تظهر فيه علامات الرجال : 

فهو رجل له أحكام الرجال ، أو تظهر فيه علامات النساء : فهو امرأة له أحكامهن ، 

وإن كان مشكلاً فلم تظهر فيه علامات الرجال ولا النساء : 

فاختلف أصحابنا في نكاحه ، فذكر الخرقي أنه يرجع إلى قوله ، 

فإن ذكر أنه رجل ، وأنه يميل طبعه إلى نكاح النساء : فله نكاحهن ، 

وإن ذكر أنه امرأة يميل طبعه إلى الرجال : زوِّج رجلاً

إن كان من الورثة الذين لا يختلف إرثهم بالذكورة والأنوثة 

فإنه يعطى نصيب ذكر أو أنثى؛ لأنه لا يختلف، 

فالأخ من الأم إذا كان أنثى فإن نصيبه السدس سواء كان ذكراً أم أنثى، 

وكما هلك هالك عن بنت وأخ شقيق خنثى فإن البنت لها النصف وللخنثى ما تبقى سواءً كان ذكراً أم خنثى، 

أما إذا كان يختلف في الذكورة والأنوثة 

فإنه يعطى نصف ميراث ذكر ونصف ميراث أنثى كما لو مات ميت عن ابن ذكر وعن بنت خنثى فإنه يعطى -أي الخنثى- نصف ميراث الأنثى ونصف ميراث الذكر


ஆனால், வெகுசிலருக்குப் பருவத்திறகுப் பின்பும் எந்த அறிகுறியும் தூக்கலாக வெளிப்படாமல் சமநிலையில் இருந்துவிடலாம். 
இத்தகைய அரவாணிகளே சிக்கலானவர்கள். 

அரபியில் இவர்களையே ‘குன்ஸா முஷ்கில்’ என்பர். 

வாரிசுரிமைச் சட்டப்படி இவர்களுக்கு ஆணின் பங்கில் பாதியும் பெண்ணின் பங்கில் பாதியும் வழங்கப்படும் என்று ஷைகு இப்னு பாஸ் ரஹ்  போன்றோர் தீர்ப்பு அளித்துள்ளார்கள்.


கெய்ரோ அஸ்ஹர் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள 
ஃபத்வா’வின்படி, 

ஆண் அல்லது பெண்ணின் பங்குகளில் எது குறைவாக இருக்குமோ அதை இவர்கள் பெறுவார்கள். 

சொத்துக்குரியவர் இறக்கும்போது அரவாணியின் பால்நிலை என்ன என்பதைக் கவனத்தில் கொண்டே அரவாணிக்குப் பங்கு பிரிக்கப்பட வேண்டும்.

அரவாணியின் பால்நிலை தெளிவாகத் தெரிவதற்குமுன், ஆண்-பெண் இடையே வித்தியாசப்படும் விதிமுறைகளில் மிகக் கவனத்துடனேயே அரவாணியை நடத்த வேண்டும். 

அதாவது ஆண்கள் மத்தியில் அவள் ஒரு பெண்ணாகப் பாவிக்கப்படுவாள்; 
பெண்கள் மத்தியில் அவன் ஓர் ஆணாகப் பாவிக்கப்படுவான்

எனவே, தெளிவுக்கு முன் அந்நிய ஆணுடனோ, அந்நியப் பெண்ணுடனோ அரவாணி தனித்திருக்க அனுமதியில்லை.

அதிகப்படியான விபரங்களுக்கு

பார்க்க 👇

الموسوعة الفقهية " ( 20 / 21 – 23 ) .

مرقاة المفاتيح شرح مشكاة المصابيح -( 8 /279)

جامع أحكام النساء - (5/ 413)

فتح المنعم شرح صحيح مسلم -( ج 8/517)

المغني " ( 7 / 619 )

الشرح الممتع " ( 12 / 160 ) 



أما من اجتمع في أعضائه علامات النساء والرجال، 
فينظر فيه إلى الغالب من حاله، فإن غلبت عليه الذكورة 
جاز علاجه طبيا بما يزيل الاشتباه في ذكورته، ومن غلبت عليه علامات الأنوثة، 

جاز علاجه طبيا، بما يزيل الاشتباه في أنوثته، سواء أكان العلاج بالجراحة، أم بالهرمونات؛ 

لأن هذا مرض، والعلاج يقصد به الشفاء منه، وليس تغييرا لخلق الله عز وجل".

{قرارات المجمع الفقهي الإسلامي بمكة المكرمة ص262}



*உண்மையான திருநங்கைகள் யார்?*


ஆணுறுப்புடன் பிறந்துவிட்டுப் பின்னர் இயல்பாகவே பெண்ணாக மாறிவிடும் திருநங்கைகளைப் பற்றியே நாம் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும். 

காரணம் இவர்கள்தான் மக்களோடு மக்களாக வாழ்ந்துவருகின்றனர். 

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 ஆயிரம் திருநங்களைகள் உள்ளதாக ஒரு கணக்கு உண்டு. 
திருநங்கைகளை 163 நாடுகள் அங்கீகரித்துள்ளனவாம்!

பிறப்புறுப்பால் ஆண் என்று கருதப்பட்டு, 
பின்னர் தன்னையும் அறியாமலேயே பெண்ணாக உணர்ந்து, 
பெண்ணாகவே வாழ முற்படுவோர்தான் உண்மையான திருநங்கைகள். 
இந்த மாற்றம் இயற்கையாகவே ஏற்படுகிறது என்றும், 
அதற்கு அறிவியல்பூர்வமான காரணம் உண்டு என்றும் சிலர் கூறுகின்றனர், 


கருப்பையில் கரு உருவாகும்போது ‘குரோமோசோம்கள்’ எனப்படும் நிறமூர்த்தங்கள் அல்லது இனக்கீற்றுகளே சிசுவின் பாலினத்தைத் தீர்மானிக்கின்றன. 

குரோமோசோம்கள் ஆணில் XYயும் பெண்ணில் XXம் இருக்கும். 

பெண்ணின் X உடன் ஆணின் Y சேர்ந்தால் (XY) சிசு ஆணாகப் பிறக்கும். 

பெண்ணின் X உடன் ஆணின் X சேர்ந்தால் (XX) சிசு பெண்ணாகப் பிறக்கும் என்பது நாமெல்லாம் அறிந்த அறிவியல் உண்மை.


ஆனால், மூன்றாவது ஒரு சேர்க்கையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. XXY அல்லது XYY சேர்ந்தால், அது மூன்றாவது பாலினமாகப் பிறக்கிறதாம்! 

முந்தியது பெண்ணுறுப்புடன் பிறந்து ஆணாக மாற வல்லது; 
பிந்தியது ஆணுறுப்புடன் பிறந்து பெண்ணாக மாற வல்லது. 

இந்த இரண்டாவது வகையினரே திருநங்கைள் என்பது அவர்களது கணிப்பு.


ஆணுறுப்புடன் பிறக்கும் சிறுவன் ஹார்மோன்கள் சுரக்கும் பருவத்தை, அல்லது 13 வயதை அடையும்போது, உடலில் பெண்மைக்கான குணாதிசயங்களைத் தன்னை அறியாமலேயே உணர்வான். 

பெண்களைப்போல் பேசுவது, பெண்களைப்போல் நடப்பது, பெண்களுக்கே உரிய ஆசைகள், எண்ணங்கள் மனதிலே அரும்புவது ஆகிய மாற்றங்கள் ஏற்படும். 
அப்போதுதான் அச்சிறுவனுக்குப் பாலியல் தடுமாற்றம் ஏற்படும். 

தான் ஆணா? அல்லது பெண்ணா என்று குழப்பம் அடைவான்.


நாள் செல்லச்செல்ல தன்னை முழுவதுமாகப் பெண்ணாகவே தீர்மானித்து, 
பெண்ணுக்குரிய தன்மைகளோடே நடந்துகொள்வான். 
பார்ப்பவர்கள் நையாண்டி செய்ய, அவனோ தனக்குள் புழுங்கிக்கொண்டிருப்பான். 
பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். 
இவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், இவன் போன்ற திருநங்கைகள் மட்டுமே!


உண்மையில் இது ஒரு நோய்; ஊனம் என்றே கூறுகிறார்கள். 
மற்ற நோயாளிகளையும் மாற்றுத் திறனாளிகளையும் எவ்வாறு அணுகுகிறோமோ 
அவ்வாறே இந்த திருநங்கைகளையும் அணுக வேண்டும்; 
பரிவுகாட்ட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


*திருநங்கைகள் பெண்களா?*

ஆணுறுப்புடன் பிறந்தாலும், அது செயல்பட வேண்டிய பருவ வயது வரும்போது, அது முற்றாகச் செயலிழந்துவிட்டால், 
வெறும் சிறுநீர் வெளியேறும் குழாயாக மட்டுமே கருதப்பட வேண்டும்; 
பாலின உறுப்பாகக் கருதப்படாது. 

எனவே, கூடுதலான கட்டி ஒன்று உடலில் இருந்தால், அதை அறுவை சிகிச்சைமூலம் அகற்றுவதைப் போன்று அகற்றிவிடலாம். 

அத்துடன் மறைந்துள்ள பெண்ணுறுப்பை அறுவை சிகிச்சைமூலம் வெளிவரச் செய்யலாம்.


மருத்துவரின் ஆலோசனைப்படியும் அச்சிறுவனின் விருப்பப்படியும் 18 வயதிற்குமேல் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டால், 
அச்சிறுவன் திருநங்கையாக மாறுவான். 
இது உலக நாடுகளின் முடிவாக இருந்துவருகிறது. 
மருத்துவ ஆய்வும் இதை உறுதி செய்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது,


*இது விஷயத்தில் மார்க்கத் தீர்ப்பு*

எகிப்து நாட்டின் தாருல் இஃப்தா அளித்துள்ள ஃபத்வாவின் படி 

ஆணுறுப்புடன் பிறந்த சிறுவன் பருவம் அடைகின்றபோது ஹார்மோன் மாற்றத்தின் விளைவால் பெண்ணின் குணாதிசயங்களை வெளிப்படுத்தத் தொடங்கினால், 
அதை இயன்றவரை மாற்ற முயலுமாறு சொல்ல வேண்டும்.

மாற்றிக்கொள்ளவே முடியாத அளவுக்கு இயல்பாகவே இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது தீர்க்கமாகத் தெரியும்பட்சத்தில், நம்பிக்கையான மருத்துவரிடம் ஆலோசனை செய்து 
அதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மருத்துவப் பரிசோதனையில் அவை இயல்பான மாற்றங்கள்தான் என்பது முடிவாகும்போது, 
அது நோய் அல்லது ஊனம் என்பது இறுதியாகிவிடும். 

அப்போது பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்


فعُلم بذلك أن مردّ الخلق جميعا إلى الذكورة والأنوثة ، وإلى الجنة والنار


ஆக நாம் அறிந்து கொண்டதன்படி 
ஆண் பெண் என்ற இரு பாலினரே உலகத்தில் உள்ளனர்
மூன்றாம் பாலினர் கிடையாது 

நாங்கள் மூன்றாம் பாலினத்தவர் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அரவாணிகள் என்ற திருநங்கைகள் 

மார்க்க சட்டத்தின்படி 
ஆண் அல்லது பெண் இனத்தில் சேர்ந்து விடுவர் 

ஆகவே இன்ஷா அல்லாஹ் 
திருநங்கைகளில் ஆணின் தன்மையோடு உலகில் விசுவாசித்து வாழ்ந்தவர்கள் ஆண்களோடு சுவர்க்கத்திற்கும் 

பெண்ணின் தன்மையோடு உலகில் விசுவாசித்து வாழ்ந்தவர்கள் பெண்களோடு  சுவனத்திற்கும் செல்வர்கள்

பிரபல்யமான பதிவுகள்