роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

родிроЩ்роХро│், роПрок்ро░ро▓் 01, 2019

роороХ்родрок் роородро░ро╕ா роХேро│்ро╡ி рокродிро▓்,

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே வீணான ஜோக்களை படித்து சிரித்து நிமிடத்தை வீணாக்குவதற்கு பதிலாக நம் மார்க்கத்தை பற்றி  தெரிந்து கொள்ளலாம் . முதன் முதலில்.......
🌷 இரவு,பகல் இவ்விரண்டில் முதன் முதலில் படைக்கப்பட்டது? 
👉 இரவு.
🌷 அல்லாஹ் முதன் முதலில் எந்த உயிரினத்தை படைத்தான்?
👉 தேனீ.
🌷 கஃபாவை கிப்லாவாக வைத்து தொழுத முதல் தொழகை?
👉 அஸர் தொழுகை.
🌷 கத்னா(சுன்னத்)முதன் முதலில் யாருக்கு செய்யப்பட்டது?
👉 நபி இப்ராஹீம்(அலைஹி)அவர்களுக்கு.
🌷 ஐந்து வேளை தொழுகையில் முதன் முதலில் கடமையாக்கப்பட்ட தொழுகை?
👉 பஜ்ர் தொழுகை.
🌷 உலகில் முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
👉 ஹழ்ரத் பிலால்(ரழி)அவர்கள்.
🌷 முதன் முதலில் நோன்பு நோற்றவர் யார்?
👉 நபி ஆதம்(அலைஹி)அவர்கள்.
🌷 வாரத்தின் நாட்களில் முதன் முதலில் படைக்கப்பட்ட நாள்?
👉 ஞாயற்றுக்கிழமை.
🌷 மலைகளில்  முதன் முதலில் அல்லாஹ் எந்த மலையை படைத்தான்?
👉 மக்காவிலுள்ள ஜபலே ஹபி குபைஹ் மலை.
🌷 உலகில் முதன் முதலில் படைக்கப்பட்ட மரம்?
🌷 பேரீத்தமரம்.      
🌷 மஸ்ஜிதுல் அக்ஸாவை முதன் முதலில் கட்டியவர் யார்?
👉 சுலைமான் நபி (அலைஹி)அவர்கள்.
🌷 மதீனாவாசிகளுக்கு முதன் முதலாக தொழகை வைத்தவர் யார்?
👉 முஸ்அப் பின் உமைர் (ரலி)அவர்கள்.
🌷🌷🌷 முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்மணி யார்?
👉👉👉👉👉 அன்னை கதீஜா (ரலி அன்ஹா) அவர்கள்.
🌷🌷 இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்தியாகம் செய்தவர் யார்?
👉 சுமையா (ரலி)அவர்கள்.
🌷 நபி (ஸல்) அவர்களால் கட்டப்பட்ட இஸ்லாத்தின் முதல் பள்ளிவாசல் எது?
👉 நபி (ஸல்) அவர்கள் மதினாவின் அருகாமையில் குபா என்ற பகுதியில் "குபா பள்ளிவாசலை"கட்டினார்கள்.
🌷 இஸ்லாத்தில் முதன் முதலாக நடந்த போர் எது?
👉 பத்ரு போர்.

பிறருக்கும் பகிர்ந்து கொள்வோமே இன்ஷா அல்லாஹ்

роороХ்родрок் роХேро│்ро╡ி рокродிро▓்,

1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும்?
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98) மற்றும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்றும் (96:1) கூற வேண்டும்.

2) திருக்குர்ஆன் யாரிடமிருந்து இறங்கியது?
அல்லாஹ்விடமிருந்து இறங்கியது

3) திருக்குர்ஆன் யார் மூலம் இறங்கியது?
ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) மூலம் இறங்கியது.

4) திருக்குர்ஆன் யாருக்கு இறங்கியது?
ஹழ்ரத்முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது

5) திருக்குர்ஆன் எந்த இடத்தில் இறங்கியது?
ஹிரா என்னும் மலைக் குகையில் இறங்கியது

6) திருக்குர்ஆன் எந்த மொழியில் இறங்கியது?
அரபி மொழியில் இறங்கியது.

7) திருக்குர்ஆனில் முதன்முதலாக இறங்கிய வசனம் எது?
இக்ரஹ் என்னும் வசனம் ஆகும்.

8) திருக்குர்ஆன் எதற்காக வேண்டி இறங்கியது?
மனித, ஜின் வர்க்கத்திற்கு நேர்வழி காட்டுவதற்காகஇறங்கியது.

9) திருக்குர்ஆனின் திருப்பணி என்ன?
நன்மையை ஏவுவதும், தீமையை தடுப்பதும் ஆகும்.

10) திருக்குர்ஆனில் அல்லாஹ் என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?.
2698 இடங்களில்

11) திருக்குர்ஆனில் 'ரப்பு' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?
151 இடங்களில்

12) திருக்குர்ஆனில் 'ரப்புல் ஆலமீன்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வருகிறது?
42 இடங்களில

13) திருக்குர்ஆனில் உள்ள பெரிய சூரா எது?
சூரா அல்பகரா

14) திருக்குர்ஆனில் உள்ள சிறிய சூரா எது?
சூரத்துல் கவ்ஸர்

15) திருக்குர்ஆனில் உள்ள நீண்ட வார்த்தை எது?
ஃபஅஸ்கைனாகுமூஹூ, வல்யஸ்தக்லி ஃபன்னஹூம்
11எழுத்துக்களை கொண்டவை.

16) திருக்குர்ஆனில் (சூரா ஆரம்பமின்றி) உள்ள சிறிய வசனம் எது?
அல்முத்தஸ்ஸிர் அத்தியாயத்தில் உள்ள'சும்ம நழர' என்றவசனம்

17) திருக்குர்ஆனில் தான, தர்மம் பற்றி எத்தனை இடங்களில் வருகிறது?
150 இடங்களில்

18) சில சூராக்களில் ஆரம்பத்தில் (அலிஃப்,லாம், மீம்) போன்று துவங்கும் எழுத்துகளுக்கு என்ன பெயர் கூறப்படும்?
ஹூருஃபே முகத்த ஆத் என்று கூறப்படும்.

19) ஹூருஃ பே முகத்த ஆத் எழுத்துக்கள் எத்தனை?
14 எழுத்துக்கள்

20) ஜூஸ்வு 2 என்றால் என்ன?
பாகம் என்று பொருள்

21) திருக்குர்ஆனில் எத்தனை பாகங்கள் உள்ளன?
30பாகங்கள் உள்ளன.

22) சூரா என்றால் என்ன?
அத்தியாயம் என்று பெயர்

23) திருக்குர்ஆனில் எத்தனை சூராக்கள் உள்ளன?
114 சூராக்கள் உள்ளன.

24) ஆயத் என்றால் என்ன?
திருக்குர்ஆனின் வசனம் என்று பெயர்

25) திருக்குர்ஆனில் எத்தனை ஆயத்துக்கள் உள்ளன?
ஆயிஷா (ரலி) அவர்களின் கணக்குப்படி6666

26) திருக்குர்ஆன் வசனத்திற்கு மட்டும் ஏன் ஆயத் என்று பெயர் வந்தது?
இறைவேதமாகிய திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் அத்தாட்சியாக விளங்குவதால்

27) திருக்குர்ஆனில் உள்ள பெரிய வசனம் எது?
சூறத்துல் பகராவில் உள்ள கடன் பற்றிய282வது வசனம் (யா அய்யுஹல்லதீன ஆமனூஇதா ததாயன்ந்ததும்;....)

28) திருக்குர்ஆனில் ஐன் (ருகூவு) என்றால் என்ன?
தொழுகையில் ஒருரக் அத்தில் ஒதுவதற்கு ஏதுவாக உள்ள ஒரு பகுதி

29) ருகூவு என்று ஏன் பெயர் வந்தது?
பெரும்பாலும் தொழுகையில் அதுவரை ஓதிய பிறகு ருகூவிற்கு குனிவதால்

30) திருக்குர்ஆனில் அரபி எழுத்துக்கள் 29ம் வரும் வசனங்கள் எத்தனை?
சும்ம அன்ஸல்னா மேலும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் இரண்டு வசனங்கள் மட்டுமே

31) திருக்குர்ஆனில் புள்ளியிட்ட எழுத்து இல்லாத வசனம் எது?
சூரா இக்லாஸின் 'அல்லாஹூஸ்ஸமது'என்ற வசனமாகும்.

32) திருக்குர்ஆனில் 'சுப்ஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸத்தி அம்மா யஸி ஃபூன்' என்ற வசனம் எங்கு வருகிறது?
ஸாஃப்பாத் என்ற அத்தியாயத்தின் கடைசியில் வருகிறது.

33) திருக்குர்ஆனில் எத்தனை சூராக்களின் ஆரம்பத்தில் ஹாமீம் என்று வருகிறது?
7 சூராக்களில் வருகிறது

34) திருக்குர்ஆனில் கூறப்படும் இறையச்சத்தை அடிப்படையாகக்
கொண்டு கட்டப்பட்ட பள்ளிவாசல் எது?
மதினாவிற்கு அருகில் உள்ள மஸ்ஜிதே குபா ஆகும்.

35) திருக்குர்ஆனில் ஆயத்துல் குர்ஸி எந்த ஜூஸ்வில் உள்ளது?
3ம் ஜூஸ் உவின் ஆரம்பத்தில் வருகிறது.

36) திருக்குர்ஆனில் யாஸூன் சூரா ஜூஸ்உவில் ஆரம்பிக்கிறது?
22ம் ஜூஸ்வின்; இறுதியில்

37) திருக்குர்ஆனில் உள்ள மொத்த ஸஜ்தாக்கள் எத்தனை?
14 ஆகும்.

38) திருக்குர்ஆனில் உள்ள நீண்ட அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர் எது?
துல் ஜலாலி வல் இக்ராம்

39) திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் அனைத்திலும் ஒரே எண்ணிக்கையில் ஆயத்துக்கள் உள்ளனவா?
இல்லை

40) திருக்குர்ஆனில் எத்தனை மாதங்களின் பெயர் உள்ளது?
ஒரே ஒரு மாதத்தின் பெயர் தான் உள்ளது

41) திருக்குர்ஆனில் உள்ள ஒரு மாதத்தின் பெயர் என்ன?
ரமலான் மாதம்

42) திருக்குர்ஆனில் உள்ள ஒரே வார்த்தைக் கொண்ட ஆயத்து எது?
முத்ஹாம்மதான்

43) திருக்குர்ஆனில் இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளில் ஒரு கடமையின் பெயரில் உள்ள சூரா எது?
சூரா அல்ஹஜ்

44) திருக்குர்ஆனில் மதீனாவிற்கு கூறப்பட்ட மற்றொரு பெயர்?
யஸ்ரிப்

45) திருக்குர்ஆனில் 'சூரத்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் இடம் பெறுகிறது.?
7 இடங்களில்

46) திருக்
குர்ஆனில் 'குல்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் இடம் பெறுகிறது?
232 இடங்களில்

47) திருக்குர்ஆனில் உதாரணம் காட்டப்படும் இரண்டு சிறிய உயிரினம் எது?
1.ஈ (22:73) 2. சிலந்தி (29:41)

48) திருக்குர்ஆனில் முதல் சூரா எது? கடைசி எது?
முதல் சூரா ஃபாத்திஹா கடைசி சூரா நாஸ்

49) திருக்குர்ஆனில் எத்தனை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உள்ளன?
114 உள்ளன

50) திருக்குர்ஆனில் 'ஸகர்' என்ற நரகத்தின் காவலாளிகள் எத்தனை பேர் என குர்ஆன் கூறுகிறது?.
19 பேர்

51) திருக்குர்ஆனின் கடைசி 'ஸஜ்தா'எந்த சூராவில் உள்ளது?
சூரத்துல் 'அலக்' என்ற அத்தியாயத்தில் உள்ளது.

52) திருக்குர்ஆனில் 'ஜின்' என்ற வார்த்தை எத்தனை இடங்களில் வந்துள்ளது?
22 இடங்களில்

53) திருக்குர்ஆனில் உள்ள ஜபர் (என்ற அகரம்) எத்தனை?
53,223 இடங்களில் வருகிறது

54) திருக்குர்ஆனில் உள்ள ஜேர் (என்ற இகரம்);எத்தனை?
39,582 இடங்களில் வருகிறது

55) திருக்குர்ஆனில் உள்ள பேஷ் (என்ற உகரம்;) எத்தனை?
8804 இடங்களில் வருகிறது

56) திருக்குர்ஆனில் 'மத்து' என்ற நீட்டல் குறி எத்தனை?
1771 இடங்களில் வருகிறது

57) திருக்குர்ஆனில் 'ஷத்து'என்ற அழுத்தல் எத்தனை?
1274 இடங்களில் வருகிறது

58) திருக்குர்ஆனில் 'நுக்தா' (புள்ளி)க்கள் எத்தனை?
1,05,684 எழுத்துக்கள்

59) திருக்குர்ஆன் கூறும் அழியாமல் பாதுகாக்கப்பட்டு பின்வரும் சமுதாயத்திற்கு அத்தாட்சியாக உள்ள மனித உடல் எது?
ஃபிர்அவ்னின் உடல்

60) திருக்குர்ஆன் கூறும் மூஸா நபியின் எதிரி யார்?
ஃ பிர்அவ்ன்

61) திருக்குர்ஆன் கூறும் இப்ராஹீ நபியின் எதிரி யார்?
ஃநம்ரூத்

62) திருக்குர்ஆன் கூறும் ஈஸா நபியின் எதிரி யார்?
யூத சமுதாயம்

63) திருக்குர்ஆனில் நன்மையை ஏவும் வசனங்கள் எத்தனை?
சுமார் 1000

64) திருக்குர்ஆனில் தீமையை தடுக்கும் வசனங்கள் எத்தனை?
சுமார் 1000

65) திருக்குர்ஆனில் உதாரணம் கூறும் வசனங்கள் எத்தனை?
1000

66) திருக்குர்ஆனில் வாக்குறுதி கூறும் வசனங்கள் எத்தனை?
1000

67) திருக்குர்ஆனில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வசனங்கள்
எத்தனை?
1000

68) திருக்குர்ஆனில் ஹலால் (ஆகுமாக்கப்பட்டவை) பற்றிய வசனங்கள் எத்தனை?
250

69) திருக்குர் ஆனில் ஹராம் (ஆகாதவை) பற்றிய வசனங்கள் எத்தனை?
250

70) திருக்குர்ஆனில் வரலாறு கூறும் வசனங்கள் எத்தனை?
1000

71) திருக்குர்ஆனில் துஆக்கள் (பிரார்த்தனை) அடங்கிய வசனங்கள் எத்தனை?
1000

72) திருக்குர்ஆனில் மன்சூக் (சட்டம் மாற்றப்பட்டவை) வசனங்கள் எத்தனை?
66

73) திருக்குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
25 நபி மார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

74) திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?
4 இடங்களில் முஹம்மது என்றும், ஒரு இடத்தில் அஹ்மது
என்றும் கூறப்பட்டுள்ளது.

75) நபி ஆதம் (அலை) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?
25 இடங்களில்

76) திருக்குர்ஆனைப் போன்று வாழ்ந்தவர்கள் யார்?
நபி (ஸல்) அவர்கள்

77) திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் என்னென்ன பெயர்கள் மூலம் அழைக்கிறான்?
முஹம்மது, அஹ்மது, தாஹா, யாஸீன்,முஸ்ஸம்மில்,
முத்தஸ்ஸிர், அப்துல்லாஹ் ஆகிய 7பெயர்களில்
அழைக்கிறான்.

78) நபி (ஸல்) அவர்களுடைய சிறப்பு பெயர்கள் திருக்குர்ஆனில் எத்தனை கூறப்பட்டுள்ளது?
ஷாஹித், பஷீர், நதீர், தாஈ, ஹாதி,ஸிராஜிம்-முனீர் உட்பட 27 பெயர்கள்

79) திருக்குர்ஆனில் 'யா அய்யுஹன்ன பிய்யு'என்று எத்தனை இடங்களில் வருகிறது?
11 இடங்களில்

80) திருக்குர்ஆனில் நபிமார்களின் பெயர்களைக் கொண்ட சூராக்கள் எத்தனை?
மொத்தம் 6 சூராக்கள்

81) திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை?
1.தவ்ராத், 2.ஸபூர் 3.இன்ஜீல் (ஆதாரம் : அபூதாவூத்)

82) திருக்குர்ஆனில் முதன் முதலில் முழுவதுமாக இறங்கிய சூரா எது?
சூரா ஃபாத்திஹா

83) திருக்குர்ஆன் லவ்ஹூல் மஹ் ஃபூலில் இருந்து எங்கு இறங்கியது?.
முதல் வானத்தில் பைத்துல் இஸ்ஸஹ் என்ற இடத்தில் இறங்கியது

84) திருக்குர்ஆன் முதல் (வஹீ) வசனம் எப்போது அருளப்பட்டது?
கி.பி.610ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்

85) திருக்குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
ரமலான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர் என்னும் சங்கை மிகு இரவில் (ஆதாரம் 97.01)

86) திருக்குர்ஆனின் கடைசி சூரா எங்கு இறக்கப்பட்டது?
மதீனாவில்

87) திருக்குர்ஆனில் மதீனாவில் இறங்கிய கடைசி சூரா எது?
சூரா நஸ்ரு

88) திருக்குர்ஆனை அல்லாஹ் எப்படி பாதுகாக்கின்றான்?
கல்வியாளர்கள் உள்ளத்தில் பாதுகாக்கின்றான்

89) திருக்குர்ஆன் ஒன்று திரட்டப்பட்ட காரணம் என்ன?
யமாமா என்ற போரில் ஏறத்தாழ 70ஹாஃபிழ்கள் (குர்ஆனை
மனனம் செய்தவர்கள்) ஷஹீதாக்கப்பட்டு வீரமரணம்
அடைந்ததால் (ஆதாரம் :புகாரி)

90) திருக்குர்ஆனை ஒன்று திரட்டும் யோசனையை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களிடம் தெரிவித்தவர் யார்?
உமர் (ரலி)அவர்கள் (ஆதாரம் :புகாரி)

91) திருக்குர்ஆன் முதன் முதலில் அச்சிடப்பட்டது எப்போது?
ஹிஜ்ரி 1113
வது ஆண்டில்

92) திருக்குர்ஆன் எங்கு முதன் முதலில் அச்சிடப்பட்டது?
ஜெர்மனில் ஹம்பர்க் நகரில்

93) திருக்குர்ஆன் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
ஓதுதல், ஓதப்பட்டவை, ஓதப்பட வேண்டியது என்பதாகும்.

94) திருக்குர்ஆனில் பிஸ்மில்லாஹ் எழுதப்படாத சூரா எது?
சூரா தவ்பா என்ற பராஅத் சூராவாகும்

95) திருக்குர்ஆன் ஒலி வடிவமாக இறங்கியதா? எழுத்து வடிவில் இறங்கியதா?
ஒலி வடிவில் இறங்கியது

96) திருக்குர்ஆனை ஒன்று சேர்த்தவர் என்ற சிறப்பு பெயருக்குரியவர் யார்? ஹளரத் உஸ்மான் ரலியல்லாஹூ அன்ஹூ

97) திருக்குர்ஆனில் 'ஷத்து' குறியீடுகளை அமைத்தவர் யார்?
கலீல் இப்னு அஹ்மது அஸ்தீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்

98) திருக்குர்ஆனுக்கு 'ஸபர், ஜேர், பேஷ்'என்னும் உயிர் குறியீடுகளை அமைத்தவர் யார்?
ஹிஜ்ரி 43ல் இராக் ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்பவராவார்.

99) திருக்குர்ஆனின் சூராக்களை வரிசைப்படுத்தியது யார்?
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்

100) திருக்குர்ஆனின் ஞானம் பெற்ற உலமாக்களை அதிகமாக உருவாக்கும் தமிழக மாவட்டம் எது?
வேலூர் மாவட்டம்

101) திருக்குர்ஆனின் ஞானம் பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மாவட்டம் எது?
திருநெல்வேலி மாவட்டம்

102) திருக்குர்ஆனை மனைம் செய்தவர்கள் ஹாபிழ்கள் தமிழகத்தில் அதிகஎண்ணிக்கையில் வாழும் ஊர் எது?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம்

103) திருக்குர்ஆன் முதன் முதலில் எந்த மொழியில் தர்ஜூமா செய்யப்பட்டது?
சுர்யானீ மொழியில்

104) திருக்குர்ஆன் இரண்டாவதாக எந்த மொழியில் எப்போது தர்ஜமா செய்யப்பட்டது?
பர்பரீ மொழியில், ஹிஜ்ரி 127ல்

105) திருக்குர்ஆன் மூன்றாவது தடவை எந்த மொழியில், எப்போது தர்ஜூமா செய்யப்பட்டது?
பாரசீக மொழியில், ஹிஜ்ரி 255ல்

106) திருக்குர்ஆனை ஒதுவதால் என்ன நன்மை?
ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு (ஆதாரம் :திர்மிதீ)

107) திருக்குர்ஆனை ஒதக் கேட்பதால் என்ன நன்மை?
ஒதுவது போன்றே நன்மை கிடைக்கும் (அல்ஹதீஸ்)

108) திருக்குர்ஆனை ஒளுவுடன் ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
ஒரு எழுத்துக்கு 25 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)

109) திருக்குர்ஆனை ஒருவர் உட்கார்ந்து தொழுகும் போது ஓதினால் என்ன நன்மை கிடைக்கும்?
உட்கார்ந்து தொழும் போது ஒரு எழுத்துக்கு50,50 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம் :இஹ்யா)

110) திருக்குர்ஆனை நின்று தொழும் போது ஒதினால் என்ன நன்மை கிடைக்கும்?
ஒரு எழுத்துக்கு 100 நன்மைகள் கிடைக்கும் (ஆதாரம்:இஹ்யா)

111) திருக்குர்ஆனை பார்த்து ஒதுவது சிறந்ததா? பார்க்காமல் ஒதுவது சிறந்ததா?
பார்த்து ஒதுவதே சிறந்தது

112) திருக்குர்ஆனை திக்கி ஓதினாலும் நன்மைகள் கிடைக்குமா?
ஆம் : இரு மடங்கு நன்மைகள் கிடைக்கும்
(ஆதாரம் : புகாரி, அபூதாவூது, முஸ்லிம்,திர்மிதி)

113) திருக்குர்ஆன் மறுமையில் பரிந்துரைக்குமா?
ஆம் அதனை ஒதியவருக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கும்
(ஆதாரம் : முஸ்லிம்)

114) சூரா ஃ பர்த்திஹா ஓதினால் என்ன நன்மை?
திருக்குர்ஆனில் 3ல் 2 பகுதி ஒதிய நன்மைகள் உண்டு.

115) சூரா யாசீன் ஓதினால் என்ன நன்மை?
10 திருக்குர்ஆன் ஓதிய நன்மைகள் உண்டு (ஆதாரம்: திர்மிதி)

116) சூரா இக்லாஸ் ஓத்னால் என்ன நன்மை?
திருக்குர்ஆனில் 3ல் 1பங்கு ஒதிய நன்மைகள் உண்டு.
(ஆதாரம் :புகாரி , இப்னு கஸீர்)

117) திருக்குர்ஆனில் எந்த சூராவை ஒதினால்4000 வசனங்கள் ஒதிய
நன்மை கிடைக்கும்?
சூரா தகாசுர்

118) திருக்குர்ஆனில் தலைசிறந்த 'ஆயத்'எது?
ஆயத்துல் குர்ஸீ

119) திருக்குர்ஆனில் 'இதயம்' எந்த அத்தியாயம்?
யாஸீன் என்ற அத்தியாயம்

120) திருக்குர்ஆனில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
3,21,267 (3 லட்சத்து 21 ஆயிரத்து 267எழுத்துக்கள் உள்ளன.)

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்