роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

ро╡ிропாро┤рой், роЯிроЪроо்рокро░் 01, 2016

рооройைро╡ிрооாро░்роХро│ே,

*மனைவிகளுக்கு சில உபதேசங்கள்*

1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. கணவன் வீட்டினுள் நுழைந்த உடன் நீங்கள்தான் முதல் வாசனை என்பதை கணவருக்கு உணரச் செய்யுங்கள். நல்ல மணமுடன் எப்போதும் இருங்கள்.

2. கணவன் ஓய்வு எடுக்க கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்பொழுதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயல்படுங்கள்.

3. கணவனுடனான தொடர்ச்சியான கலந்துரையாடலை பேணிக்கொள்ளுங்கள். வாதாட்டம், தங்களது கருத்தில் பிடிவாதம் போன்றவற்றை தவிர்த்து கொள்ளுங்கள்.

4. உங்களுக்கு ஷரிஅத் விதித்துள்ள பொறுப்புகளை விளங்கி கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க கூடிய விடயங்களை ஷரீஅத் தங்களுக்கு வழங்கியுள்ளது.

5. உங்கள் சத்தத்தை அவருக்கு முன் உயர்த்தாதீர்கள். குறிப்பாக கணவன் இருக்கும் பொழுது.

6. நீங்கள் இருவரும் "கியாமுல் லைல்" போன்ற பின்னிரவுத் தொழுகைகளை ஒன்றாக நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். ஏனெனில், அது உங்கள் இருவருக்கும் இடையில் சந்தோஷத்தையும், அன்பையும், ஒளியையும் ஏற்படுத்துகின்றது.

7. கணவன் கோபத்திலிருக்கும் போது, நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி, இரவில் உறங்க செல்ல வேண்டாம்.

8. கணவன் ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தேர்ந்தெடுத்து வழங்குங்கள்.

9. கணவனின் தேவைகளை விளங்கி கொள்வதற்கும், அவருடன் அழகிய முறையில் பழகுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.

10. உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்துங்கள்.

11. உங்களுடைய கணவன் தனது அன்பை, விருப்பத்தை வெளிப்படுத்தும் வரை காத்து கொண்டிருக்காதீர்கள்.

12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமண பெண்ணை போல தயாராகி தோற்றமளியுங்கள். கணவனை முந்தி நீங்கள் உறங்க செல்ல வேண்டாம்.

13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில், அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவராக இருப்பார்.

14. எப்போதும் புன்னகையுடனும், அன்பை வெளிப்படுத்தும் உணர்வுகளுடனும் கணவன் பயணித்திலிருந்து திரும்பும் போது வரவேற்பளியுங்கள்.

15. *கணவனின் திருப்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறுவதற்கு முக்கியமானது* என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். எப்போதும் தோற்றத்திலும், வார்த்தையிலும் அவரை வரவேற்கும் போது புதிய விடயங்களை செய்யுங்கள்.

16. ஏதாவது ஒரு விடயத்தை கணவன் கேட்கும் போது மறுக்கவோ அல்லது தாமதிக்கவோ வேண்டாம். மாறாக, உற்சாகத்துடன் விரைவாக அதனை நிறைவேற்றுங்கள்.

17. வீட்டில் உள்ள பொருட்களை கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது புதிய முறையில் ஒழுங்குபடுத்துங்கள். அதனை கணவனின் மகிழ்ச்சிக்காக செய்கின்றீர்கள் என்பதை உணர்த்துங்கள்.

18. வீட்டை அழகிய முறையில் நிர்வகிப்பதற்கும், நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், முதன்மைபடுத்த வேண்டிய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.

19. *பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய திறமைகளை(உதாரணம்: சமையல்) கற்றுக்கொள்ளுங்கள்.* ஏனெனில், அவை உங்களது வீட்டிற்கும், உங்கள் தஃவாவிற்கும் அவசியமானவையாகும்.

20. கணவன் வீட்டுக்கு கொண்டுவரும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அவற்றை இன்முகத்தோடு பெற்று கொள்ளுங்கள். அதற்காக நன்றி செலுத்துங்கள்.

21. வீட்டை சுத்தமாக வைப்பதிலும், ஒழுங்காக வைப்பதிலும் பேணுதலாக இருங்கள். சில வேலை கணவன் அதனை உங்களிடம் எதிர்பார்க்காத போதும் கூட.

22. *எப்போதும் திருப்திப்படுபவராக இருங்கள். வீண் விரயங்களை விட்டும் தவிர்த்திடுங்கள். வரவுக்கு மேலதிக செலவுகளை ஏற்படுத்தாதீர்கள்.*

23. குடும்ப ஒன்று கூடல்களை பொருத்தமான நேரத்தில் ஏற்பாடு செய்யுங்கள்.

24. கணவன் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வீட்டுக்கு வரும் போது, அவரிடம் முறைப்பாடுகளை வேதனைகளை முன் வைக்காதீர்கள்.

25. குழந்தைகள் கணவனை வரவேற்கும் வகையில் தயார்படுத்தி வையுங்கள்.

26. குழந்தைகளை பற்றி கணவன் வீடு திரும்பியவுடன் அல்லது தூங்கி எழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிடும் போது முறையிடாதீர்கள்.

27. கணவன் குழந்தைகளுடன் உரையாடும் போது அல்லது ஏதாவது ஒரு விடயத்திற்காக தண்டிக்கும் போது நீங்கள் தலையிட வேண்டாம்.

28. குழந்தைகளுக்கும் தந்தைக்கும் இடையில் சிறந்த தொடர்பை பேணிக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

29. நீங்கள் எவ்வளவு தான் வேலை பளுவுடன் இருந்தாலும், குழந்தைகளை பராமரிப்பதில் பொடுபோக்காக இருப்பதில்லை என்பதை உணர செய்யுங்கள்.

30. குழந்தைகளுக்கு ஓய்வு கிடைக்கும் போது அவர்களது திறமைகளை வளர்ப்பதிலும்,  அவர்களுக்கு அவசியமான விடயங்களை கற்று கொடுப்பதிலும் அதிக கவனம் செலுத்துங்கள்.

31. *நீங்கள் தொழுகையை பேணி கொள்ளுங்கள். கணவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் தொழுகையை பேண சொல்லி, அன்பு கட்டளையிடுங்கள்.*

32. சிறு குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு தேவையான விடயங்களை செய்யுங்கள்.

33. குழந்தைகள் மீதும் கணவர் மீதும் உள்ள உங்கள் கடமைகளுக்கு இடையில் நடுநிலைமையை பேணுங்கள்.

34. *கணவனின் பெற்றோருக்கு கண்ணியம் செலுத்துங்கள். அவரையும் அவரது பெற்றோரையும் பிரிக்கும் செயலில் ஈடுபடாதீர்கள்.*

35. கணவனின் குடும்பத்தினரை அன்புடனும், கண்ணியத்துடனும் நடத்துங்கள். அவர்களுக்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பரிசு பொருட்களை வழங்குங்கள்.

36. கணவனின் விருந்தினர்களை கவனிப்பதில் அக்கறை செலுத்துங்கள். திடீரென்று அவர்கள் வந்தாலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.

37. கணவனின் உபகரணங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

38. எப்போதும் எந்தவொரு விருந்தாளியையும் அழைத்து வரும் நிலையில் நல்ல முறையில் உபசரித்துக் கொள்ளுங்கள்.

39. கணவன் தாமதமாக வரும் போது, அவரை கடிந்து கொள்ளாதீர்கள். மாறாக, அவரை எதிர்பார்த்து இருந்ததை நளினத்துடன் உணர செய்யுங்கள்.

40. வீட்டின் ரகசியங்களை பேணி பாதுகாத்து கொள்ளுங்கள்.

இவை ஒரு மனைவி கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் மட்டுமே. ஆனால், மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது.
*எப்போதும் நாம் அல்லாஹ்வின் திருப்தியின் பால் தேவையுடையவர்களாக இருக்கின்றோம்.* அதனை ஒரு போதும் மறந்துவிட கூடாது.

_அல்லாஹ் நம் பெண்கள் அனைவரையும் விவாகரத்து என்னும் கொடிய வியத்திலிருந்து காப்பானாக;

роиீродி роорой்ро▒рооே,

நீதி மன்றமே:

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் எனவும்; அச்சமயம் எல்லோரும் எழுந்து நிற்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது உச்ச நீதி மன்றம்.

இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
காரணம் எக்காலத்திலும் நான் தியேட்டரில் கால்வைக்கப் போவதில்லை என்பது மட்டுமல்ல;

ஆடை அவிழும் தியேட்டரில் ஆபாசம் வழியும் பாடல் ஒலித்தால் என்ன பிரச்னை?

தேசிய கீதத்தை ஆபாசப்பாடல் என்றுகூறி அவமதிப்பு செய்துவிட்டதாக என்மீது பாய வேண்டாம்.

நாட்டின் மீதும் நாட்டின் சின்னங்கள் மீதும் எனக்கு நிரம்ப மரியாதை இருக்கிறது.

இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் என்முன்னோர்கள்.

அவர்களின் குருதியைக் கொடுத்துதான் சுதந்திரம் வாங்கித் தந்தார்கள். இது என் நாடு. எனவே நேசமும் பாசமும் இயல்பாகவே எனக்குள் இருக்கிறது.

ஆனால் அந்தப்பாடல் இழிவானது.
எந்த வெள்ளையனை என் முன்னோர் எதிர்த்தார்களோ அதே வெள்ளை அரசனைப் புகழ்ந்து இயற்றிய பாடலை எப்படி நான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ள முடியும்?

ஆகவே அந்த இழிவான பாடலை திரையரங்கில் ஒலிப்பதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. தியேட்டர் என்றால் குத்துப்பாடலும், முக்கல் முனகலும் ஒலிப்பது இயல்பு தானே!

ஆனால் இந்த நாட்டின் உயர்ந்த பீடங்களில் ஒன்றான உச்சநீதி மன்றத்திடம் கேட்க என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.

நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கையில் தியேட்டரின் டிடிஎஸ் சிஸ்டத்தை சீரமைப்பதுதான் நீதி மன்றத்தின் பணியா?

இருபது நாட்களாக மக்கள் வங்கி வாசலில் படுத்துறங்குகிறார்கள்; வியாபாரமும் படுத்து விட்டதால் வியாபாரிகள் உறக்கமில்லாமல் தவிக்கிறார்கள்.

இதெல்லாம் நீதிமன்றத்தின் கண்ணுக்குத் தெரியவில்லையா?

மணிப்பூரின் இரோம் ஷர்மிளா பதினாறாண்டுகளாக உயிரைப் பணயம் வைத்து அகிம்சா போராட்டம் நடத்தினாரே! நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதா நீதி மன்றம்?

காந்தியின் தேசத்தில் ஒரு அகிம்சா போராட்டம் தோற்றுப்போனது இந்த நாட்டுக்கு அவமானமில்லையா?

வடகிழக்கிலும், கஷ்மீரிலும் ராணுவம் தன் சொந்த குடிமக்களை குதறுகிறதே; அவர்களின் ஓலங்களை ஏன் செவிமடுக்கவில்லை இந்த நீதிபீடம்?

தண்டோரா காடுகளில் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதை தடுக்க நீதியரசர்களால் முடிந்ததா?

ராணுவமும், போலீசும், மண்ணை காக்க போராடும் பழங்குடி மக்களின் பச்சை ரத்தத்தை பசுமை வேட்டை என்ற பெயரில்
குடித்ததை தட்டிக் கேட்டதா இந்த நீதி மன்றம்?

எளியமக்களை சுடும் சல்வா ஜுடும் குண்டர்களை என்ன செய்தது இந்த மன்றம்?

ஆறுகளை மலடாக்கும் மணற் கொள்ளையர்களை நீதிமன்றத்தின் கண்களிலிருந்து மறைப்பது மணலா? புழுதியா? அல்லது கரன்சியா?

குடிதண்ணீருக்கே தவிக்கும் தேசத்தில் நதி தண்ணீரை கோக்கும் பெப்சிக்கும் தாரைவார்ப்பதை தானாக முன் வந்து தடுத்ததா நீதிமன்றம்?

கொள்ளளவை எட்ட முடியாமல் முல்லைப்பெரியாறு அணை கொதிப்பதை தணித்தார்களா இவர்கள்?

நாடு முழுக்க கொள்ளளவையும் தாண்டி சிறைச்சாலைகள் எல்லாம் நிரபராதிகளால் நிரம்பி வழிவதை இந்த நீதிமன்றம் கண்டுகொண்டதா?

அடிப்படை உரிமைகளை பறிக்கும், அரசியல் சாசனத்துக்கே எதிரான தடா, பொடா, யுஏபிஏ சட்டங்களை எதிர்த்ததா நீதிமன்றம்?

மண்ணை பொன்னாக்கும் விவசாயிகளின் வாழ்வை பாழாக்குகிறது அரசு. பொங்கியதா நீதிமன்றம்?

மீத்தேன், பெட்ரோல் என விவசாயிகளின் வாழ்வில் மண்ணள்ளிப் போடுகிறது பன்னாட்டு நிறுவனங்கள். என்ன செய்தது நீதிமன்றம்?

நாட்டின் பல ரயில் நிலையங்களில்
வட்டிக்கு வாங்கி, உயிரும் உதிரமும் கொடுத்து விளைவித்த நெல் மூட்டைகள் ஒரு குடோன் இல்லாமல் மழையில் நனைந்து வெயிலில் வெந்துபோகிறது.

இரண்டாயிரம் கோடிக்கு தனிமனுதனுக்கு விமானம் வாங்கும் நாட்டில் ஒரு குடோன் கட்டவழியில்லையா? அல்லது நிதி இல்லையா? இதெல்லாம் நீதி மன்றத்துக்கு தெரியவில்லையா?

எவனுக்கும் வேண்டாத அணுஉலைகளை கூடங்குளத்தில் வைத்து கொளுத்துகிறார்கள்.
எத்தனை முறை தட்டியாயிற்று நீதிமன்றத்தின் கதவுகளை!
என்ன பலன்?

தனி மனிதனின் உரிமையையோ, தேசத்தின் இறையான்மையை பாதுகாக்கவோ எத்தனை முறை ஏறி இறங்கினாலும் கிடைக்காத தீர்ப்புகள்,

கார்ப்பரேட் நலன்களுக்கு மட்டும் என்றால் ஜெட் வேகத்தில் கிடைப்பது எப்படி?

இந்தியாவில் மட்டும் நீதி என்ன உலோகத்தால் செய்யப்பட்டிருக்கிறது?

அரசின் கொடூரமான திட்டங்களுக்கு எதிராக நீதி வேண்டி நீதிமன்றம் சென்றால்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என்றுகூறி தள்ளுபடி செய்கிறார்கள்.

ஆனால் தள்ளுபடி செய்யவேண்டிய வழக்குகளில் தீர்ப்பு என்ற பெயரில் மக்கள் தலையில் மண்ணள்ளிப்போடுவது எந்த வகையில் நியாயம்?

தியேட்டர் விசயத்துக்கே வருவோம்.

டெல்லி தியேட்டர் தீ விபத்துக்குப்பின் பல விதிமுறைகளை சொன்னது நீதிமன்றம். இன்றைய மல்டி ப்ளெக்சு தியேட்டர்கள் எல்லாம் அப்படித்தான் அமைக்கப்பட்டுள்ளனவா?

உயிருக்கே உத்திரவாதம் இல்லாத போது பாட்டு சீனுக்கெல்லாம் உட்கார்ந்தால் என்ன? எழுந்து நின்றால் என்ன?

தியேட்டர்களில் நடக்கும் வரி ஏய்ப்பு, கட்டணக்கொள்ளை, குடி தண்ணீருக்கும் கூடுதல்விலை விவகாரங்களை எல்லாம் எந்த நாட்டு நீதிமன்றம் சீர் செய்யும்?

அதெல்லாம் அரசின் பணி என்றால் மைக் செட் கட்டுவதற்கு மட்டும் நீதிமன்றம் முன் வருகிறது?

மக்கள் ஊழியம் செய்ய ஓட்டு போடுகிறார்கள். அரசுகள் அட்டூழியம் செய்கின்றன.

நிவாரணம் தேடி நீதி மன்றம் வருகிறார்கள் மக்கள்.

நீதிபதிகள் உதட்டைப் பிதுக்கி, தோள்களை குலுக்கி, கையை விரித்தால்  மக்கள் என்னதான் செய்வார்கள்?

அய்யா நீதியரசர்களே! நானும் நாட்டில் சிலகோடி மக்களும் இன்னும் இந்திய நீதிமன்றங்களை நம்புகிறோம்.

எங்கள் நம்பிக்கையை காற்றில் பறக்கவிடுவீர்களா? காப்பாற்றுவீர்களா?

இப்படிக்கு
தேசத்தை நேசிக்கும் எளிய குடிமகன்களில் ஒருவன்

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்