நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், மார்ச் 28, 2022

மனைவிக்கு பிரியமான விஷயம்,

அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்

அவர்களின் மகனாருக்கு அவரின் திருமணத்தின் போது....

மகனே ஒரு பெண்ணை நீ திருமணம் செய்ய போகிறாய்..

 அந்த பெண்ணிடம்
பத்து விஷயங்களை நடைமுறை செய்தால் தான் நீ மகிழ்ச்சியாக வாழலாம்
அவளுடைய வாழ்க்கையை சரியாக்கலாம்...

முதலாவதாக மகனே பெண்கள் அன்பை விரும்பக் கூடியவர்கள்.. எனவே
உன் அன்பை நீ அவளுக்கு வெளிபடுத்த வேண்டும்..

இரண்டாவதாக அன்பை வெளிப்படுத்துவதில் ஒருநாளும் நீ கஞ்சனாக ஆக கூடாது...

மூன்றாவதாக சொன்னார்கள்..
பெண்கள் கடினமான ஆணை வெறுப்பார்கள்.. பலகீனமான மிருதுவான ஆண்களுக்கு பணிவிடை செய்வார்கள்.. 

ஆகவே அவளுடைய அன்பை நீ அடைய வேண்டுமெனில் அவளோடு மிருதுவாக நடந்துகொள்....

நான்காவதாக சொன்னார்கள்..
பெண்கள் கணவனிடம் நல்ல பேச்சையும் அழகான தோற்றத்தையும், உடல் ஆடை பரிசுத்ததையும், எதிர்பார்ப்பாள்..

எனவே உன் உடலையும் பேச்சையும் தோற்றத்தையும் அழகாக்கி கொள் என்றார்கள்..

ஐந்தாவதாக சொன்னார்கள்..
உன் வீட்டில் உனது மனைவி அரசியாக ஆள்வதற்கு பார்ப்பாள்..அவளை அரசியாக ஆள்வதற்கே விட்டுவிடு நீ சந்தோஷமாக வாழ்வாய் என்றார்கள்..

ஆறாவதாக சொன்னார்கள்..
பெண்கள் கணவரின் உழைப்பை விரும்புவார்கள்.. எனவே நீ சம்பாதித்து கொடுத்து அவளை நல்ல முறையில் வாழவைக்க வேண்டும்..அதே சமயம் உன் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் அவளையும் நல்ல முறையில் வாழவைக்க வேண்டும்..

ஏழாவதாக சொன்னார்கள்..
பெண்கள் வளைவிலிருந்து படைக்கப்பட்டவள்.. அதுதான் அவளின் அழகின் இரகசியம்..

வளைந்தவள் என்பதற்காக அவசரப்பட்டு அவளை நேராக்கமுயற்சிக்காதே...
அவளோடு நீயும் வளைந்து நடந்து சரியாக்கிவிடு என்றார்கள்..

அடுத்ததாக சொன்னார்கள்..
பெண் என்பவள் நீ வாழ்க்கையெல்லாம் நலவுகள் செய்தாலும் உன்னிடம் ஒரு நலவையும் காணவில்லை என சொல்லி விடுவாள்.. அதற்காக நீ அவளை வெறுத்து விடாதே..!!

சொன்னார்கள் அடுத்ததாக..
பெண் உடலாலும் சிந்தனையாலும் பலகீனமானவள்,அல்லாஹ்வே அவளின் மீதுள்ள பர்ளுகளை இல்லாமல் ஆக்கியுள்ளான்...

அவளுடைய தொழுகை நோன்பை கூட விட வைத்திருக்கிறான்.. அல்லாஹ் அந்த பெண்ணுக்கு பர்ளை லேசாக்கியது போன்று நீயும் அவளுக்கு அந்த காலகட்டத்தில் உன் தேவைகளையும்..
அவளுக்கு கட்டளைகளையும் லேசாக்கி கொள்...!!!

கடைசியாக சொன்னார்கள் ‌..
பெண் என்பவள் உன் சிறை கைதி.. சிறைகைதியாக வந்தவளின் மீது இரக்கப்படு அல்லாஹ் உன்மீது இரக்கப்படுவான்..

இந்த பத்தையும் கடைபிடி..
அல்லாஹ் உன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவான்.❤️❤️❤️

பிரபல்யமான பதிவுகள்