роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЮாропிро▒ு, роЬூро▓ை 30, 2017

родொрок்рокி родро▓ைрок்рокாроХை роЕрогிропро▓ாрооா?,

*தொப்பி தலைப்பாகை அணியலாமா?*

*_சுன்னதுல் வல் ஜமாத்தார்கள் மட்டும்  இணையவும்_*

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*✍​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.*

*இஸ்லாத்தின் பார்வையில் தொப்பி, தலைப்பாகை அணிவதற்குரிய ஆதாரங்கள்.*

*♣  வஹ்ஹாபிகளின்* *நிலைப்பாடு:*

*இஸ்லாம் மார்க்கத்தில் தொப்பி, தலைப்பாகை அணிவதற்க்கு எந்த ஒரு முக்கியத்துவமும் கிடையாது (அதாவது சுன்னத் கிடையாது). காரணம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வாழ்நாளில் ஒரே ஒரு தடவை கூட தொப்பி அணிந்தார்கள் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது.*

*♣சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் அதாவது குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள், இமாம்களின் கூற்றுக்கள் அடிப்படையில் தொப்பி, தலைப்பாகை அணிவது சுன்னத்தாகும். அந்த அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி, தலைப்பாகை அணிந்திருப்பதற்கு ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாது என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்த பொய்யன் தஜ்ஜால் பி.ஜே.யின் முகத்திரை கீழ்காணும் ஆதாரங்கள் மூலம் கிழித்தெறியப்படுகிறது.*

♦ ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு பள்ளிவாசலிலும் (ஆடை முதலியவற்றால்) உங்களுடைய அலங்காரத்தைப் பற்றி பிடியுங்கள் (அல்குர்ஆன் 7:31)

குறிப்பு :- ஸீனத் என்பதன் பொருள் அழகு, அலங்காரம் என்பதாகும். சாதாரணமாக அணியும் வழமையான ஆடைகளான ஜுப்பா, சேட், சாறன், போன்றவைகளை விட மேலதிகமான உபரி ஆடைகளை அணிந்து அழகாக, அலங்காரமாக பள்ளிவாசலுக்கு வரவேண்டும் என இந்த அத்தியாயம் ஆர்வமூட்டுகின்றது. உபரி ஆடைகள் எனும் போது தொப்பி, தலைப்பாகை போன்றவற்றை குறிக்கும்.

♦  ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே, இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும்? என்று கேட்டார்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகள், (முழுநீளச்) சட்டைகள் தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், தொப்பிகள், காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால் காலுறை இரண்டும் கனுக்கால்களுக்கு கீழே இருக்கும் படி கத்தரித்துக்கொள்ளட்டும். குங்குமப் பூச்சாயம் மற்றும்‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியின் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள் என்று சொன்னார்கள். 

ஆதாரம்: புகாரி 1542

ஹதீஸ் விளக்கம் : - இஹ்ராம் அணியும்போது தொப்பி அணியாதீர்கள் என்று சொல்லும்போது மற்ற நேரங்களில் தொப்பி அணியுங்கள் என்று உறுதியாக கூறுவது தெரிகிறது.

♦ ஹழ்ரத் இஸ்ஸத் பின்த் இயாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது, ‘அபா கிர்ஸாபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு ஒரு தொப்பியை அளித்து ‘இதனை நீ அணிந்து கொள்’ எனக் கூறினார்கள்.

முக்ஜமுல் கபீர் அத்தபரானி 2520

♦ சுலைமான் பின் தர்கான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது, ‘அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது தொப்பியொன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பலி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது. 

​​ஆதாரம்: புகாரி

♦ (கடும் வெப்பத்தின் காரணமாக) ஸஹாபாக்கள் தலைப்பாகையின் மீதும்,தொப்பியின் மீதும் ஸஜ்தா செய்வார்கள். 

​​அறிவிப்பவர் : ஹழ்ரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு
நூல் : புகாரி

♦ ஹழ்ரத் புழால் பின் உபைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கேட்டதாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஷஹீதுகள் நான்கு பிரிவினர் ஒருவர் பலமான ஈமான் கொண்ட ஒரு முஃமின், இவர் அல்லாஹ்வுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி எதிரிகளுடன் மோதி அதே யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார். மறுமை நாளில் இவரது உயர் அஸ்தஸ்தை ஏனையோர் "இவ்வாறு" பார்ப்பார்கள் என்று பின்புறமாகத் தனது தலையை வளைத்து அன்னார்ந்து காட்டிய போது தலையில் இருந்து தொப்பி விழுந்தது. 

​ஆதாரம் : திர்மிதி 1695

♦‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்கள் (மக்கா வெற்றியின் போது)கறுப்புத் தலைப்பாகை அணிந்தவர்களாக மக்காவில் நுழைந்தனர்’ அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) 

​நூல்: முஸ்லிம்

♦நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஊரிலிருக்கும் போது சிரிய நாட்டுத் தொப்பியையும், பயணம் செல்லும்போது காது வரை மூடும் நீண்ட தொப்பியையும் அணிவார்கள். 

​​அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா 
ஆதாரம்: அபுஷ்ஷெய்க்

♦ நபித்தோழர் ஹாலித் பின் வலீத் (றழியல்லாஹு லாஹு அன்ஹு) அவர்களின் தொப்பியில் நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தலைமுடிகளில் சில முடிகள் இருந்தன. ஒரு யுத்தநேரம் அவர்களிடமிருந்து அந்தத் தொப்பி தவறிவிட்டது. அதனால் காலித் பின் வலீத் ஆத்திரமடைந்தவராகக் காணப்பட்டார்.அங்கிருந்த நபீத்தோழர்கள் தொப்பி காணாமற் போனதற்காக காலித் இவ்வாறு கோபப்படுகிறார் என்று பேசிக்கொண்டனர். இதைக்கேட்ட காலித் இப்னு வலீத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி “தொப்பி” காணாமற் போனதற்காக நான் கவலைப்பவோ கோபப்படவோ இல்லை. அதில் நபீ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலை முடிகளிற் சில முடிகள் இருக்கின்றன. அதன் “பறகத்” தவறிவிடுமென்றும் அது காபிர்களிடம் போய்விடும் என்று அஞ்சுகிறேன்” என்றுசொன்னார்கள்.

அறிவிப்பு ;- ஹழ்ரத் காளி இயாள் (றழியல்லாஹு அன்ஹு) 
​ஆதாரம் ;- அஷ்ஷிபா, தபறானி 9: 349, ஹாகிம்

♦(அதே மக்கா வெற்றியின்போது) ‘நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.’ 

​​அறிவிப்பவர் : ஹழ்ரத் ஜஃபர் இப்னு அம்ரு (ரலியல்லாஹுஅன்ஹு)
நூல் : முஸ்லிம்

♦  நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வுழு செய்யும் போது தன் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்தார்கள். 

​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : அபூதாவூத், இப்னு மாஜா

♦இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தலைப்பாகையை இரண்டு தோல்களுக்குமிடையில் தொங்க விடுபவர்களாக இருந்தார்கள். 

​​ஆதாரம்: திர்மிதி

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வெண்மை நிறமான தொப்பியை அணிந்து வந்தார்கள். 

​​அறிவிப்பாளர் : ஹழ்ரத் இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ 
ஆதாரம்: சுஅபுல் ஈமான் பாகம் 5 ஹதீஸ் எண் 6259

♦ ‘இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மக்காவுக்குப் புறப்பட நேர்ந்தால், ஒட்டகப் பயணம் சிரமமாகும் போது ஏறிச் செல்வதற்கு (மாற்று வாகனமாக) கழுதையையும், ஒரு தலைப்பாகையையும் வைத்திருப்பார்கள். அதை தலையில் கட்டிக் கொள்வார்கள்’.

​அறிவிப்பவர் : ஹழ்ரத் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம்

♦ அப்துல்லாஹ் பின் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வழமையாக) வெள்ளை தொப்பி அணிந்து வந்துள்ளார்கள்.’

​​நூல்: தப்ரானி

♦ருக்கானா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் நமக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள வித்தியாசம் தொப்பியின் மீது தலைப்பாகை அணிவதுதான்’.

நூல்: ஸுனன் அபூதாவூது 4075,4078 ஸுனன் திர்மிதி 3919, 1844

♦நான் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடன் சாப்பிட்டேன் அப்போது அவர்களின் தலையில் வெள்ளைத்தொப்பி இருப்பதைக் கண்ணுற்றேன் அறிவிப்பாளர் : பர்ஹத் ரலியல்லாஹு அன்ஹு. 

​​ஆதாரம் : அத்திஹாமா

​​♦  ஹழ்ரத் ஹஸனுல் பஸரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘ஸஹாபாக்கள் தங்களுடைய தலைப்பாகை தொப்பியின் மீது ஸஜ்தா செய்பவர்களாக இருந்தார்கள்’. 

​(நூல்: புகாரி 1/151
​​
♦ தப்ரானி இமாம் மற்றும் சுயூத்தி இமாம் ஆகியோர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளை தொப்பி அணிந்திருந்தார்கள் என்று அறிவிக்கிறார்கள். இமாம் தப்ரானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இதை நம்பகமானது என்றும், இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸஹீஹான ஹதீது என்றும் கூறுகின்றார்கள். 

​(நூல்: சிராஜுல் முனீர் பாகம் 4, பக்கம் 112)

♦  நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் மூன்று தொப்பிகள் இருந்தன. 

​​அறிவிப்பாளர் : ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ 
ஆதாரம்:  அபுஷ்ஷெய்க்

♦  ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொப்பி அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

​நூல்: ஸஹீஹுல் புஹாரி பாகம் 2, பக்கம் 863

♦கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் ஷாம் (சிரியா) பிரதேசத்தில் கிரிஸ்தர்கள் சரணடைய இரு சாராருக்குமிடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாந்தது ஒப்பந்த நிபந்தனைகளை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே முன்வைத்தார்கள் அவற்றில் முஸ்லிம்களுக்கு ஒப்பாகக் கூடிய முறையில் அவர்களுடைய தொப்பி, தலைப்பாகைகளை கிறிஸ்தவர்கள் அணிவது கூடாது என நிபந்தையிட்டார்கள்.

தப்ஸீர் இப்னு கஸீர் 2: 543

♦ ஹழ்ரத் முல்லா அலி காரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள், ‘தொப்பியானது முஸ்லிம்களின் சிறப்பான,முக்கிய இஸ்லாமிய சின்னமாகும்.

மிர்காத் அல்மஸாபீஹ் வால்யூம் 8, பக்கம் 246  எமக்கு இந்த விசயத்தில் சஹீஹான அறிவிப்புகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையை சுட்டிக்காட்டுகிறது. இதனால் தலையை மறைப்பது ஒரு சுன்னத்தான விசயம் என உறுதியாகக் கூறமுடியும்.

♦  இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள் தொப்பி அணிவது சுன்னத் ஆகும்.
​ 
துஹ்பதுல் முஹ்தாஜ் 3: 36

♦  இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள் தொப்பி, தலைப்பாகை அணிவது சுன்னத் ஆகும். 

​ஆரிவளதுல் அஹவதி 4: 250

*சில காலங்களுக்கு முன்னால் புதுமை விரும்பிகள் தொப்பி அணிவது கூடாது சுன்னத் இல்லை என்றும் அதற்க்கு ஆதாரம் இல்லை என்றும் பிரச்சாரம் மேற்கொண்ட போது சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தகுந்த ஆதாரம் காட்டிய நேரத்தில் தொப்பி அணியலாம் ஆனால் கட்டாயமில்லை, என்று கூறினார்கள்.*

*♦இன்று சத்தியத்தை இறைவன் நிலைத்துட செய்துவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்! சத்திய கொள்கை 'அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமா'அத்தினர் தொப்பி அணிவது கட்டாயம் என்று யாரும் சொல்லவில்லை சொல்லவும் மாட்டார்கள். எனவே சுன்னத்தான காரியமே என்றுதான் சொல்கிறோம். எனது சமுதாயத்திற்க்கு மத்தியில் குழப்பங்கள் ஏற்படும் போது யார் எனது வழிமுறைகளை (சுன்னத்) உயிர்பிக்கின்றார்களோ அவர்களுக்கு நூறு ஷஹீதுகளின் நன்மைகளை பெற்றுக்கொள்வார்கள் என கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.* 

*​​எனவே சுன்னாக்களை குழிதோண்டி புதைக்கும் புதுமை விரும்பிகளே!! அல்லாஹ்வை பயந்து சுன்னாக்களை கடைபிடிக்கிற போது தான் நாம் பெருமானாரின் அன்பை பெற்றுக்கொள்ளலாம்

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்