நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

புதன், பிப்ரவரி 05, 2014

இஸ்லாம் கூறும் வாரிசுரிமை பெறுவோர்

வாரிசுரிமை பெறுவோர் ஆண்களில் வாரிசுரிமை பெறக்கூடியவர்கள் பத்துப் பேர் ஆவர். விரிவாகச் சொன்னால் அவர்கள் பதினைந்து பேராக இருப்பார்கள். அவர்கள், 1. மகன் 2. மகனின் மகன் 3. தந்தை 4. தந்தை வழிப் பாட்டன் 5. தாய் வழிச் சகோதரன் 6. தந்தை வழிச் சகோதரன் 7. தாய் தந்தை வழிச் சகோதரன் 8. தந்தை வழிச் சகோதரனின் மகன் 9. தாய் தந்தை ஒன்றுபட்ட சகோதரனின் மகன் 10. தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தகப்பனார் 11. தந்தை மட்டும் ஒன்றுபட்ட சிறிய தந்தை 12. தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தையின் மகன் 13. தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தையின் மகன் 14. கணவன் 15. அடிமையாயிருந்து விடுதலை பெற்றவன் இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்துவாரிசுதாரர்களாக வந்தால் இவர்களில் மூவர் மட்டுமே வாரிசுரிமை பெறுவர். 1. மகன் 2. தந்தை 3. கணவன் இவர்கள் தவிர ஏனையோர் மகன் அல்லது தந்தை இருப்பதால் வாரிசுரிமையை விட்டும் தடுக்கப்படுவர். சொத்துரிமை பெறக்கூடியவர்களில் தாய் தந்தை ஒன்றுபட்ட சிறிய தந்தை, தந்தை மட்டும் ஒன்றுபட்ட சிறிய தந்தை என்று குறிப்பிடப்படுகிறது. பெண்களில் வாரிசுரிமை பெறுவோர் எழுவர் ஆவர். விரிவாகச் சொன்னால்பத்துப் பேர் வாரிசுரிமை பெறுவர். அவர்கள், 1. மகள் 2. மகனின் மகள் 3. தாய் 4. தாய் வழிப் பாட்டி 5. தந்தை வழிப் பாட்டி 6. தாய் தந்தை ஒன்றுபட்ட சகோதரி 7. தந்தை வழிச் சகோதரி 8. தாய் வழிச் சகோதரி 9. மனைவி 10. அடிமையாயிருந்து விடுதலை பெற்ற பெண் வாரிசுரிமை பெறும் பெண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இருந்தால் இவர்களில் ஐவர் மட்டுமே வாரிசுரிமை பெறுவர். அவர்கள், 1. மகள் 2. மகனின் மகள் 3. தாய் 4. மனைவி 5. தாய் தந்தை ஒன்றுபட்ட சகோதரி ஏனையோர் இவர்களால் வாரிசுரிமை பெறத் தடை செய்யப்படுவர். மேற்கூறப்பட்டவர்களில் ஆண்களும், பெண்களும் ஆகிய அனைவரும் வாரிசுரிமை பெறு வோ ரில் இடம் பெற்றால், மொத்தத்தில்ஐவர் மட்டுமே வாரிசுரிமைப் பங்கீடு பெறுவர். அவர்கள், 1. தந்தை 2. தாய் 3. மகன் 4. மகள் 5. கணவன் அல்லது மனைவி ஏனையோர் இவர்களால் வாரிசுரிமை இழப்பர். சொத்துரிமை கணக்குகளில் பெரும்பாலும் ஆண்களில் 4 பேரும்,பெண்களில் 8 பேரும் மட்டுமே வாரிசுகளாக வருவர். பெண் பங்குதாரர்கள் 1. மனைவி 2. தாய் 3. பாட்டி 4. மகள் 5. மகனின் மகள் 6. தாய் வழிச் சகோதரி 7. உடன் பிறந்த சகோதரி 8. தந்தை வழிச் சகோதரி ஆண் பங்குதாரர்கள் 1. கணவன் 2. தந்தை 3. பாட்டன் 4. தாய் வழிச் சகோதரன் இவர்கள் தவிர மகன், மகனின் மகன், சிறிய தந்தை, உரிமை விடப்பட்ட அடிமை போன்றோர் அஸபாக்களாக வருவர். வாரிசுரிமை ஏற்படுவதற்கான காரணங்கள் மூன்று ஆகும். 1. வம்சா வழித் தொடர்பு 2. திருமணத் தொடர்பு 3. ஒப்பந்த அடிப்படையான தொடர்பு (அடிமை-எஜமான் என்ற தொடர்பு) 3 வது வகையான ஒப்பந்த அடிப்படையிலான தொடர்பு இரு வகைப்படும். 1. நண்பர்கள், கூட்டாக வியாபாரம் செய்வோர் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உடன்படிக்கை 2. அடிமை உரிமை விடப்பட்டதால் ஏற்படும் தொடர்பு வாரிசுரிமையைத் தடுப்பவை மூன்றுநிலைகள் ஆகும். அவை, 1. அடிமைத்தனம் 2. கொலை செய்தல்:- கொன்றவன் கொல்லப்பட்டவனிடமிருந்து எதையும் வாரிசாகப் பெற மாட்டான். 3. மதமாற்றம் – முஸ்லிமுக்கு காஃபிர் (இறை நிராகரிப்பாள ன் ) வாரிசாக மாட்டான். அதுபோல , காஃபிருக்கு (இறை நிராகரிப்பாளனுக்கு) ஒரு முஸ்லிம் வாரிசுரிமை பெற மாட்டான்

இஸ்லாம் கூறும்கடனும் வஸிய்யத்தும்

கடனும் வஸிய்யத்தும் ஒருவர் இறந்த பின் அவரது சொத்து வாரிசுதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். வாரிசுரிமைப் பற்றிக் குறிப்பிடும் 4:11,12வது வசனங்களில், . . . இவ்வாறு வாரிசுகளுக்குச் சொத்து பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தா ன். . . என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனவே, இறந்தவருக்குக் கடன் இருந்தால் சொத்து பிரிக்கப்படுவதற்கு முன்கடன் அடைக்கப்பட வேண்டும். "மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் (தியாகி)க்கு கடனைத் தவிர மற்றெல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான். இந்த விஷயத்தை எனக்கு ஜிப்ரீல் (அலை) கூறினார்கள் என நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார். ஆதாரம்: அஹ்மத் 2220; முஸ்லிம் 4860; திர்மிதீ 1640, 1886; நஸயீ 3156 மார்க்கப் போரில் உயிர் நீத்த ஷஹீத் என்று கூறப்படும் உயிர்த்தியாகி கேள்வி கணக்கு ஏதுமின்றி சுவர்க்கம் செல்வார் என்றிருக்க அவருக்குக் கடன் இருக்குமானால் அது மட்டும் மன்னிக்கப்படாது. ஏனெனில் கடன் என்பது பிறரது உரிமை ஆகும். பிறரது உரிமை அவர் மன்னிக்காதவரை இறைவனால் மன்னிக்கப்பட மாட்டாது. எனவேதான் இறந்தவருக்குக் கடன் இருந்தால் அதை முதலில் கொடுத்துவிட வேண்டும். அல்லது இறந்தவருக்குக் கடன் கொடுத்தவர்விரும்பினால் அந்தக் கடனைத் திரும்பிப் பெறாமல் மன்னித்து விடலாம். அதுவரை உயிர்த்தியாகியான ஷஹீத் கூட மன்னிக்கப்பட மாட்டார். சொத்து முழுவதும் கடனுக்கே சரியாகப் போனால் கடன் அடைக்கப்பட்டு, வாரிசுதாரர்களுக்கு ஏதும் கொடுக்கப்பட மாட்டாது. அல்லது வாரிசுதாரர்கள் இருக்க, கடன் தொகை இருக்கும் சொத்தை விட அதிகமாக இருந்தால் வாரிசுதாரர்கள் தான் அந்தக் கடனுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களும் வறியவர்களாக இருந்தால் செல்வந்தர்கள் யாராவது அக்கடனுக்குப் பொறுப்பேற்கலாம்.அல்லது கடன் கொடுத்தவர்கள் பெருந்தன்மையோடு கடனை மன்னித்துவிடலாம். கடன் என்பதில் மக்களிடம் வாங்கிய கடன் மட்டுமின்றி, இறந்தவர் செலுத்த வேண்டிய ஸகாத்,நஷ்ட ஈட்டுத் தொகை முதலியவையும் அடங்கும் என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் மனைவிக்குக் கொடுக்க வேண்டிய மஹர் கூட கடன் தான் என்றும் குறிப்பிடுகின்றனர். மற்றும் சில அறிஞர்கள், ஒரு மனிதன் இறந்த பின்னர் அல்லாஹ்வுக்காக செலுத்தவேண்டிய ஸகாத் போன்றவற்றைச் செலுத்தத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அம்மய்யித்தை அடக்கம் செய்வதற்கான செலவினங்களுக்கும்,கஃபன் ஆடை போன்றவற்றிற்கும் அவரது சொத்தில் இருந்துதான் செலவு செய்ய வேண்டும். அவரது உறவினர்களில் மகன், மகள் போன்றவர்கள் தமது சொந்தப் பணத்தில் செலவு செய்தால் அது குற்றமாகாது. எனவே, இறந்தவருக்குக் கடன் இருந்தால் அதைக் கொடுத்த பின்னர் தான் அவரது சொத்து வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். வஸிய்யத் (உயில்) அவசியமா? வஸிய்யத் என்றால் இறந்தவர் இறக்கும் முன் அல்லது இறக்கும் தருவாயில் சொத்துரிமைப் பங்கீடுபெறாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு அல்லது மத்ரஸா, பள்ளிவாசல், அறக்கட்டளை போன்றவற்றிற்கு தனது சொத்தை சாஸனம் செய்தல் ஆகும். வஸிய்யத் செய்யத்தக்க பொருள்வளம் பெற்றவராக ஒருவர் இருந்தால், அப்பொருள் அவருக்குக் கிடைத்து, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வஸிய்யத்து எழுதப்பட்டு விட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், முஅத்தா, திர்மிதீ, அபூதாவூத், நஸயீ) மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் ர ஸு ல் (ஸல்) அவர்களிடம் "நான் இதைக் கேள்விப்பட்ட பின்னர், எனது வஸிய்யத்தை நான் எழுதி வைத்து விட்டேன். எழுதி வைக்காமல் ஓர் இரவு கூடக் கழித்ததில்லை!" எனவும் குறிப்பிடுகிறார்கள். "வஸிய்யத்து செய்யத்தக்க பொருளாதாரம் ஒரு முஸ்லிமிடம் இருக்க இரண்டு இரவுகள் கடக்கலாகாது!" என நபி (ஸல்) குறிப்பிட்டதாக அஹ்மதில் பதிவாகியுள்ளது, "உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர், ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின் அவர் (தம்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி வஸிய்யத் (மரண சாஸனம்) செய்வது விதியாக்கப் பட்டிருக்கிறது. இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது முத்தகீன்கள் (பயபக்தியுடையோர்) மீது கடமையாகும். வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர் எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ, அவர்கள் மீதே சாரும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகாவும் அறிபவனாகவும் இருக்கின்றான். ஆனால் வஸிய்யத் செய்பவரிடம் (பாரபட்சம் போன்ற) தவறோ, அல்லது மனமுரண்டான அநீதமோ இருப்பதை அஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து அந்த (வஸிய்யத்தை) சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கின்றான். (அல்குர் ஆன்: 2:180,181,182) இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வஸிய்யத் செய்வது அவசியம் என்கின்றனர் சிலர். ஒவ்வொரு வாரிசுகளுக்கும் உரிய பங்கு இவ்வளவுதான் எனக் கூறும் 4:11,12மற்றும் 4:176வது வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னருள்ள நிலையாகும் இது. வாரிசுகளின் பாகங்கள் இவ்வளவு என இறைவன் வரையறுத்து விட்டதால் வஸிய்யத் செய்வது அவசியமானது அல்ல. ஒருவர்விரும்பினால் வஸிய்யத் செய்யத் தடை ஏதும் இல்லை

உண்பதற்கு தடுக்கப்பட்டவை

உண்பதற்கு தடுக்கப்பட்டவை -10 1. தாமாகச் செத்தது . 2, இரத்தம் , 3, பன்றியின் இறைச்சி , 4. அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாதது , 5. கழுத்து நெறித்துச் செத்தது , 6. அடிப்பட்டுச் செத்தது , 7. கீழே விழுந்துச் செத்தது , 8. கொம்பால் முட்டப்பட்டு செத்தது , 9. விலங்குகள் கடித்துச் செத்தது , 10. இணைக கற்பிக்கப்படும்இடங்களில் அறுக்கப்பது , -அல்-குர்ஆன்:-5:3

பிரபல்யமான பதிவுகள்