நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

செவ்வாய், ஏப்ரல் 01, 2014

பெண்கள் முடிக்கு சாயமடிப்பது

பெண்கள் முடிக்கு சாயமடிப்பதும், நகை ஆபரணம், அணிவதும், திருமணமான பெண்கள் கைகளிலும் கால்களிலும் மைலாஞ்சி இடுவதும் அனுமதிக்கப் பட்டதாகும். இது குறித்து பிரபலமாhன ஹதீஸ்கள் உள்ளன. என இமாம் நவவீ தம் மஜ்மூவு என்ற நூலில் பாக1பகக்324 குறிப்பிடுகிறார்கள். ஒரு பெண் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் வந்து மைலாஞ்சி இடுவதைப் பற்றிக்கேட்டாள். அதில் எந்த தவறுமில்லை, ஆனால் நான் அதை விரும்பவில்லை, காரணம் என் அன்பிற்குரிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் வாடையை வெறுப்பவர்களாக இருந்தார்கள். (நூல்: நஸயீ) மேலும்,ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார், ”ஒரு பெண் திரைக்கு அப்பால் நின்று கொண்டு தன் கையில் ஒரு கடிதத்தை வைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் நீட்டினாள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் கையை மூடிக் கொண்டு அது ஆணுடைய கையா அல்லது பெண்ணின் கையா என்பது எனக்குத் தெரியாது, என்றார்கள், அது பெண்ணுடைய கைதான் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். அப்போது ‘நான் பெண்ணாக இருந்திருந் தால் உன்னுடைய நகங்களை மைலாஞ்சியால் சாயமிட்டி ருப்பேன்’ என அந்தப் பெண்ணிடம் கூறினார்கள். (ஆதாரம்: அபூ தாவூத, நஸயீ) ஆனால் தண்¡ர் செல்லமுடியாத அளவிற்கு தடையாக இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது கூடாது. ==> 2. பெண்கள் நரைத்த தலைமுடியை கருப்பு அல்லாத நிறங்களைக் கொண்டு சாயமிடுவது அனுமதிக்கப் பட்டுள்ளது. கருப்புசாயமிடுவதை பொதுவாக நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். இமாம் நவவீ குறிப்பிடுகிறார்கள்: ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன் முடிக்கு கருப்பு சாயமிடுவது தடை செய்யப் பட்டுள்ளது. இதில் ஆண் பெண் என்று பாகுபாடு கிடையாது. (ரியாலுஸ்ஸாலிஹீன், மஜ்மூவு) ஒரு பெண் தன் கருத்த தலைமுடியை வேறு நிறமாக மாற்றுவதற்கு சாயத்தைப் பயன்படுத்துவதும் கூடாது, அதற்கு எந்தத் தேவையும் இல்லை, காரணம் முடியைப் பொறுத்தவரையில் கருப்பாக இருப்பது தான் அழகு, கருப்பாக இருக்கும் முடியை வேறு நிறமாக மாற்றுவது நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பானதாகும்.

பிரபல்யமான பதிவுகள்