அஸ்ஸலாமு அலைக்கும வரஹ் ..
*ஷைகுல் ஹதீஸ் அல்லாமா A.E.M.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மரணச் செய்தி
தமிழக முஸ்லிம்களுக்கும் மற்றும் உலமாக்கள் அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தையும் மன வேதனையும் அளிக்கிறது.*
*தமிழகத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் உலமாக்களுக்கும் அவர்கள் ஆற்றிய சேவை மகத்தானது.*
*ஹஜரத் மாநில ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் பொறுப்பில் இருந்த போது அடியேன் மூன்று ஆண்டுகள் சென்னை மாவட்ட செயலாளரக இருந்து அவர்களின் கீழ் பணியாற்றும் வாய்ப்ப்பை பெற்றேன்.*
*கம்பீரமான தோற்றம், வசீகரமான பார்வை குழந்தை போன்ற உள்ளம் புன் சிரிப்புடன் அணுகுமுறை போன்ற நற் குணங்களைக் கொண்ட ஹஜ்ரத் பெருந்தகை ஜமாத்துல் உலமா சபைக்கு யார் நிதி வழங்கினாலும் வாங்கி அப்படியே பொருளாளர் அல்லது பொறுப்பாளர்களிடத்தில் வழங்கும் தன்மை கொண்டவர்கள்.*
*சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்கும் போதெல்லாம் தவறாமல் கலந்துக் கொள்ளக் கூடியவர்கள்.*
*சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் செயல்பாடுகளை குறிப்பாக வெள்ள நேரத்தின் செயல்பாடுகளை அலைபேசியில் அழைத்து பாராட்டியதுடன் ஜமாத்துல் உலமா சபையின் கூட்டங்களிலும் மனதார பாராட்டியவர்கள்.*
*மன்பயிக்களின் சிறப்பான கல்வி ஞானத்திற்கு, ஹஜ்ரத் போன்றவர்களின் அறிவு ஞானம் பெரிதும் உதவியது.*
*ஷைகுல் ஹதீஸ் என்னும் பெயருக்கு ஏற்றார் போல அவர்களின் வகுப்புகளும் இருக்குமென அவர்களின் மாணவர்களின் மூலமாக அறிய முடிகிறது. தன்னுடைய நீண்ட கால அனுபவங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து பொது அறிவையும் மாணவர்கள் பெறுவதற்கு வழி வகுத்தவர்கள்.*
*மறைந்த பெங்களுர் ஷபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்கு அஸரஃப் அலி ஹஜ்ரத் கிப்லா அவர்களுக்கு சென்னை மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ஹஜ்ரத் அவர்களை அழைத்துப் பேச வைத்தோம். நாங்கள் அவர்களுக்கு போக்கு வரத்து செலவுக்காக ஹத்யா வழங்க முன்வந்த போது அவற்றை ஏற்க மறுத்து என்னுடைய கடமையை ஆற்ற இங்கே வந்தேன்.*
*இதைக் கூட செய்யா விட்டாமல் எப்படி என்றுக் கூறி புறப்பட்டார்கள்.*
*ஹஜ்ரத் அவர்களின் சேவைகள் தமிழக வரலாற்றில் எப்போதும் இடம் பெற்றிருக்கும் எனபதில் எவ்வித சந்தேகமில்லை.*
*ஹஜ்ரத் அவர்களின் சேவைகளை வல்ல ரஹ்மான் கபூல் செய்து ஜன்னத்துல் பிர்தவுஸை வழங்கிய அருள்வானாக.*
https://youtu.be/5ZPlgPMBwSg
மௌலானா
அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் கிப்லா அவர்களின் வாழ்க்கை வரலாறு
https://youtu.be/-CpWQLyzKls