நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

ஜக்காத்

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல் குர்ஆன் 2:261) இறைவனின் பாதையில் தங்கள் செல்வங்களை செலவு செய்த எந்த ஒரு நபித்தோழரும் ‘இதனால் எங்களுக்கு வறுமை ஏற்பட்டு விட்டது’ என்ற வாதத்தை எடுத்து வைக்கவில்லை எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு’ (அல் குர்ஆன் 9:34) என்ற வசனம் இறக்கப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவர்கள் ்உங்கள் சிரமத்தை நான் நீக்குகிறேன்’ என்று கூறி விட்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்கு பெரும் பாரமாகத் தெரிகிறது’ என்றுக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதை தூய்மைப்படுத்தவதற்கே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தை கடமையாக்கவில்லை’ என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவூத் 1417) ஜக்காத் என்பது தங்கம், வெள்ளி, பயிர்கள், பழங்கள், வியாபார பொருட்கள், ஒட்டகம், ஆடு, மாடு போன்ற கால் நடைகள் ஆகிய குறிப்பிட்ட பொருட்களுக்காக ஷரீஅத் வரையறுத்துள்ள குறிப்பிட்ட அளவின்படி 100 க்கு 2.5 சதவிகிதம் அளவு ஜக்காத் தொகையாகக் கொடுக்க வேண்டும் முறையான வகையில் ஜக்காத்தை (இஸ்லாமிய வரியை) கொடுத்து நாமும் வழம் பெற்று நம்மை சார்ந்தவர்களையும் வழமோடு வாழவேண்டும். ஜக்காத் கடமையான நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருடைய சொத்துக்களை பங்கிடுவதற்கு மற்றும் அவரது மரண சாசணத்தை நிறைவேற்றுவதற்கு முன்னரே கடமையான ஜக்காத்தை இறந்தவரின் சொத்திலிருந்து முதலில் நிறைவேற்ற வேண்டும். ஜக்காத்தை பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி ஒருவர் தனது பெற்றோர்களுக்கோ, அல்லது பெற்றோர்களின் பெற்றோருக்கோ அல்லது தமது வாரிசுகளுக்கோ கொடுக்கக் கூடாது. ஜக்காத்தை இறை நிராகரிப்பாளர்களுக்கோ அல்லது இணை வைப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு அனுமதியில்லை.

பிரபல்யமான பதிவுகள்