நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

திங்கள், பிப்ரவரி 03, 2025

தஹஜ்ஜுத் என்பது இரவுத் தொழுகை

தஹஜ்ஜுத் என்பது இரவுத் தொழுகையின் பெயர்களில் ஒன்றாகும்.

பொதுவாகவே இரவுத் தொழுகைக்கு பல பெயர்கள் உள்ளது. அவைகளில்:

கியாமுல் லைல்

அத் தராவீஹ்

அல்-வித்ர்

அத்-தஹஜ்ஜுத்.

எல்லாப் பெயர்களும் இரவு நேரத் தொழுகையைத் தான் குறிக்கின்றன, ஆனால் அவைகளின் பெயரைப் பொறுத்து நேரங்கள் வித்தியாசப்படுகின்றன.

இரவுத் தொழுகையின் நேரம் எப்போது ஆரம்பமாகின்றது; எப்போது முடிவடைகின்றது?

இரவுத் தொழுகையின் நேரம் இஷாத் தொழுகைக்குப் பிறகுலிருந்து ஆரம்பமாகின்றது; பஜ்ர் உதயமாகியதும் முடிவடைகின்றது.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ⟪இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்’ என்று கூறினார்கள்.⟫

நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

தஹஜ்ஜுது தொழுகையின் நேரம்

ومن الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ ‌ عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَم رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا‏

நீர் உமக்கு உபரியாக இரவிலும் “தஹஜ்ஜுத்” தொழுகையை (குர் ஆனாகிய) இதை (ஓதுவதைக் கொண்டு நிறைவேற்றுவீராக! (இதனால் மக்காமே மஹ்மூத் என்னும்) மிக்க புகழ் பெற்ற இடத்தில் உம்மை உமதிரட்சகன் (மறுமையில்) எழுப்பப் போதுமானவன்.

(அல்குர்ஆன் : 17:79)



இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்:

اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا ؕ ‏

நிச்சயமாக இரவில் எழுந்திருப்பது, (ஆத்மாவை) மிக அதிகம் பழக்கி, (அடக்கி வைப்பதுடன்) எதனையும் உள்ளமும், நாவும் ஒத்துக் கூறும்படியும் செய்கிறது. (ஸூரத்துல் முஸ்ஸம்மில்: 6)

இரவில் எழுந்திருப்பது என்றால் உலமாக்களில் அதிகமானவர்கள் கூறுகின்றார்கள்: அதாவது உரக்கத்திற்குப்பிறகு (தஹஜ்ஜுத்) எழுந்து நிற்பது என்று விளக்குகின்றார்கள்.

தஹஜ்ஜுது தொழுகையின் சிறந்த நேரம்:

நள்ளிரவுக்கு பிறகு உரக்கத்தில் இருந்து எழுந்து தொழுவது தஹஜ்ஜுத் தொழுகையின் சிறந்த நேரமாகும்.

குறைந்த அளவு ஒரு ரக்ஆத் தொழுவது;  பூரணமாக தொழுதால் பதினோரு ரக்ஆத்கள் தொழுவது இதுவே நபி வழியாகும்.

பிறகு மீண்டும் பஜ்ர் நேரம் வரை உரங்குவது. இவ்வாறான முறையில் தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்றுவது சிறந்தது. இந்த முறை உடலுக்கு சுலபமாகவும் பஜ்ர் தொழுகைக்கு சுருசுருப்புடன் எழும்புவதற்கும் சிறந்த முறையாகும்.

عن عَبْد اللَّهِ بْن عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ : أَحَبُّ الصَّلَاةِ إِلَى اللَّهِ صَلَاةُ دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ، وَأَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، وَكَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ وَيَنَامُ سُدُسَهُ، وَيَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் ரழியல்லாகு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

⟪அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது அலைஹிஸ் ஸலாம் அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது அலைஹிஸ் ஸலாம் அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்.⟫ (நூல்: புகாரி 1131)

இவ்வாறான முறையில் தொழுவது சிறமமாக இருந்தால் இரவின் மூன்றின் கடைசிப் பகுதியில் உரக்கத்தில் இருந்து எழுந்து தொழுது கொள்ளளாம்.

இதுவும் ஒரு மகத்தான நேரமாகும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ، يَقُولُ : مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ ؟ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ ؟ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’.

நூல்கள்: புகாரி:1142,  முஸ்லிம்.

மேலும் இரவுத் தொழுகை தொழுபவர் அவருடைய கடைசி இரவுத்தொழுகை வித்ர் தொழுகையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

عَنْ عَبْدِ اللَّهِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்.

நூல்கள்: புகாரி: 998, முஸ்லிம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

பிரபல்யமான பதிவுகள்