நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

வெள்ளி, ஜனவரி 29, 2021

நோய் பற்றி இஸ்லாம்,

அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى ♣

اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِىْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ‌ ۘ اِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِىْ الْمَهْدِ وَكَهْلًا ۚوَاِذْ عَلَّمْتُكَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ‌ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْـــٴَــةِ ‏ الطَّيْرِ بِاِذْنِىْ فَتَـنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًۢا بِاِذْنِىْ‌ وَ تُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏

அல்லாஹ் கூறுவான்: “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; [1] பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து [2] நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், [3] இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); [4] இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், [5] இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் upகுருடனையும், [தொழுநோயுடையவரை] வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); [6] இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.. [அல்குர்ஆன் 5:110, 3:49]

♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم ♣

 أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ، وَفِرَّ مِنَ الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنَ الأَسَدِ 

“தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு” (புகாரி 5707 )

மேற்கண்ட  அல்குர்ஆனின் ஆயத்துகளில்:- அல்லாஹ் ஈஸா (عَلَيْهِ السَّلاَمُ) அவர்களுக்கு முக்ஸிசாவாக தொழுநோயாளியை குணமாக்கும் பாக்கிய‌த்தை கொடுத்துள்ளான். 

மேற்கண்ட  – அல்ஹதீஸில்:- தொழுநோய் ஓர் கடினமான நோய் என்பது தெரியவருகிறது.

அன்புள்ளவர்களே!  இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் ஜனவரி 30 – ஆம் திகதி உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக ஆண்டு தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது.

பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும்,  இந்த நாள் கடைபிடிக்கப்படுவதின் முக்கிய நோக்கமாகும்.

உலக அளவில், தென்கிழக்காசிய நாடுகளில்தான் தொழுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு போதிய சுகாதார விழிப்புணர்வு இல்லாததே, முதன்மைக் காரணமாகும். 

பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதும் நம் மீது தலையாய கடமையாக உள்ளது. இதனைப்பற்றி நம் மார்க்கம் என்ன செல்கிறது என்பதனை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்

 தொழுநோய் எனும் கொடிய நோய் பற்றி அல்குர்ஆனும்்

【மூன்று விதமான‌ நோய்கள்】

அன்புள்ளவர்களே! அல்லாஹுத்தஆலா  நமக்கு மூன்று விதமான நோய்களை ‌    தந்துள்ளான்.

  1. நன்மை தரும் நோய்கள்.
  2. அச்சத்தை தரும் நோய்கள்.
  3. அழிவைத் தரும் நோய்கள்.

கைர்… இவைகளைப் பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்…

【1. நன்மை தரும் நோய்கள்】

அதாவது ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் காய்சல், தலைவலி, களைப்பு, கவலை, துக்கம், சோர்வு, முள் தைத்தல், சோதனை,   போன்ற‌  நோய்களாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَايُصِيبُ الْمُسْلِمُ مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ وَلاَ هَمٍّ وَلاَ حَزَنٍ وَلاَ أَذًي وَلاَ غَمٍّ حَتَّي الشَّوْكَةِ يُشَاكُهَا إِلاَّ كَفَّرَ اللهُ بِهَا مِنْ خَطَايَاهُ. رواه البخاري باب ماجاء في كفارة المرض

ஒரு முஸ்லிமுக்கு களைப்போ, நோயோ, கவலையோ, துக்கமோ, சோர்வோ ஏற்படுமேயானால் அவருக்கு ஏதேனும் முள் தைத்து விட்டாலும் கூட, அதன் காரணமாக அல்லாஹுதஆலா அவரது பாவங்களை மன்னித்துவிடுவான்”  (புகாரி 5641, 5642 )

عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَامِنْ مُسْلِمٍ يُشَاكُ شَوْكَةً فَمَا فَوْقَهَا، إِلاَّ كُتِبَتْ لَهُ بِهَا دَرَجَةٌ، وَمُحِيَتْ عَنْهُ بِهَا خَطِيئَةٌ. رواه مسلم باب ثواب المؤمن فيما يصيبه من مرض..

எவரேனும் ஒரு முஸ்லிமுக்கு முள் தைத்துவிட்டால் அல்லது அதைவிட குறைந்த நோவினை ஏற்பட்டாலோ அதற்குப் பகரமாக அல்லாஹுதஆலாவிடம் அவருக்கு ஒரு பதவி எழுதப்படுகிறது. அவரது ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது  (முஸ்லிம் 2572 )

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا يَزَالُ الْبَلاَءُ بِالْمُؤْمِنِ وَالْمُؤْمِنَةِ فِي نَفْسِهِ وَوَلَدِهِ وَمَالِهِ حَتَّي يَلْقَي اللهَ وَمَا عَلَيْهِ خَطِيئَةٌ. رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في الصبر علي البلاء

உண்மை விசுவாசிகளான ஆண், பெண்களில் சிலர் மீது அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து சோதனைகளும் நோய்களும் வந்து கொண்டே இருக்கும். சில சமயம் உயிர் மீது, சில சமயம் பிள்ளைகள் மீது, சில சமயம் செல்வத்தின் மீதும் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும் அதன் காரணமாக அவருடைய பாவங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கும் இறுதியில் அவர் மரணித்த பிறகு ஒரு பாவம் கூட இல்லாத நிலையில் அல்லாஹுதஆலாவைச் சந்திப்பார் (திர்மிதீ 2399)

 عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: إِنَّ اللهَ يَقُولُ: إِذَا ابْتَلَيْتُ عَبْداً مِنْ عِبَادِي مُؤْمِناً، فَحَمِدَنِي عَلَي مَاابْتَلَيْتُهُ فَأَجْرُوا لَهُ كَمَا كُنْتُمْ تُجْرُونَ لَهُ وَهُوَ صَحِيحٌ. رواه احمد والطبراني في الكبير 

ஒரு முஃமினான  என் அடியார்களில் எவரையேனும் (ஏதேனும் சிரமம், நோய் முதலியவைகளைக் கொண்டு) நான் சோதிக்கும் பொழுது, அவன் என் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட சிரமத்தைக் கண்டு (பொறுமையுடன்) என்னைப் புகழ்ந்தால், இவர் ஆரோக்கியமாக இருந்தபோது செய்து வந்த செயல்களுக்குரிய கூலியை நீங்கள் எழுதி வந்ததைப்போல அனைத்து அமல்களின் நன்மையையும் அப்படியே எழுதிவிடுங்கள்” (என நான் மலக்குகளுக்கு கட்டளையிடுகிறேன்) என்று அல்லாஹுதஆலா கூறுவதாக நபி  அவர்கள் சொன்ன ஹதீஸ் குத்ஸியை ஹஜ்ரத் ஷத்தாதுப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்னத் அஹ்மத்)

عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِذَا أَحَبَّ اللهُ قَوْماً اِبْتَلاَهُمْ، فَمَنْ صَبَرَ فَلَهُ الصَّبْرُ وَمَنْ جَزِعَ فَلَهُ الْجَزَعُ. رواه احمد 

ஏதேனும் ஒரு கூட்டத்தாரை அல்லாஹுதஆலா நேசிக்க நாடினால் அவர்களைச் சிரமங்களில் ஆழ்த்திச் சோதிப்பான், எவர் பொறுமை கொள்வாரோ அவருக்குப் பொறுமை (யின் கூலி) எழுதப்படுகிறது; எவர் பொறுமை கொள்ள வில்லையோ அவருக்குப் பொறுமையின்மை எழுதப்படுகிறது” (பிறகு அவர் அழுது புலம்பிக் கொண்டிருப்பார்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் மஹ்மூதுப்னு லபீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்)

【2. அச்சத்தை தரும் நோய்கள்】

அதாவது காலரா, பிளேக், கொரோனா வைரஸ் போன்ற‌ கொள்ளை நோய்களாகும்.

عَنْ عَائِشَةَؓ زَوْجِ النَّبِيِّؐ قَالَتْ:سَاَلْتُ رَسُولُ اللّٰهِؐ عَنِ الطَّاعُونِ فَأَخْبَرَنِي أَنَّهُ عَذَابٌ يَبْعَثُهُ اللّٰهُ عَلَي مَنْ يَّشَاءُ، وَأَنَّ اللّٰهَ جَعَلَهُ رَحْمَةً لِّلْمُؤْمِنِينَ، لَيْسَ مِنْ أَحَدٍ يَقَعُ الطَّاعُونُ فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابِرًا مُحْتَسِباً يَعْلَمُ أَنَّهُ لاَ يُصِيبُهُ إِلاَّ مَاكَتَبَ اللّٰهُ لَهُ إِلاَّكَانَ لَهُ مِثْلُ أَجْرِ شَهِيدٍ. رواه البخاري 3474

“நான் ரஸூலுல்லாஹி  அவர்களிடம், “கொள்ளை நோயைப் பற்றி வினவினேன், “இது ஒரு வேதனையாகும். அல்லாஹ், தான் நாடியவர்களின் மீது இதனை இறக்குகின்றான். எனினும், அல்லாஹ் இதனை முஃமின்களுக்கு அருளாகவே ஆக்கிவைத்துள்ளான். எவருடைய ஊரிலாவது இந்நோய் பரவி, அப்பகுதியில் வசிக்கும் அவர், பொறுமையுடன் “அல்லாஹ் அவருக்கென எதை எழுதி (முடிவு செய்து) வைத்து விட்டானோ அதைத் தவிர வேறு எதுவும் அவரை வந்தடையாது’ என்று நம்பிக்கை வைத்து நன்மையை ஆதரவு வைத்தவராக தன் பகுதியில் தங்கிவிட்டால் (பிறகு அல்லாஹ் வின் ஏற்பாட்டின் படி கொள்ளை நோயால் அவர் பீடிக்கப்பட்டு இறந்துவிட்டால்) அவருக்கு (அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த) ஷஹீதுக்குச் சமமான நன்மை கிடைக்கும்’’  (தக்மிலா )

தெளிவுரை! தாஊன் என்பது கொடிய கொள்ளை நோயாகும், தொடை, அக்குல், அல்லது கழுத்து போன்ற பகுதியில் ஒரு வகையான புண் உண்டாகும். அது கடுமையான வருத்தத்தை உண்டு பண்ணும், மிகுதமானோர் இந்த நோய் வந்த இரண்டு அல்லது மூன்றாவது நாளன்று இறந்து விடுவர். தாஊன் என்பது எல்லாக் கொள்ளை நோய்க்கும் சொல்லப்படும். கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள பகுதியில் இருந்து யாரும் வெளியேறிச் செல்லக் கூடாது. என்பதே மார்க்கச் சட்டமாகும். இதனால் தான் ஹதீஸில் நன்மையை ஆதரவு வைத்து அந்த ஊரிலேயே தங்கிவிடும்படி சொல்லப்பட்டுள்ளது.

 عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ، أُسَامَةَ بْنَ زَيْدٍ مَاذَا سَمِعْتَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الطَّاعُونِ فَقَالَ أُسَامَةُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” الطَّاعُونُ رِجْسٌ أُرْسِلَ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ أَوْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا فِرَارًا مِنْهُ “”. قَالَ أَبُو النَّضْرِ “” لاَ يُخْرِجُكُمْ إِلاَّ فِرَارًا مِنْهُ “”.

(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர்  அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா (ரலி), ‘இறைத்தூதர்  அவர்கள், ‘கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது. அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது…. (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று கூறினார்கள்’ என்று பதிலளித்தார்கள்.  நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று கூறினார்கள்’ என்று பதிலளித்தார்கள். (புகாரி 3473)   

மக்களின் நலனுக்காக சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் ஆலோசனைகளை கடைபிடிப்பதுடன் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோய் இருக்கின்ற இடங்களுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு இஸ்லாம் ந‌மக்கு வழிகாட்டியுள்ளது.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் [رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎ ] அவர்கள் கூறுகிறார்கள் இறைத்தூதர்  அவர்கள் ‘ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்” என்று சொல்ல கேட்டேன் என கூறினார்கள். (புகாரி 5729 ) 

【3. அழிவைத் தரும் நோய்கள்】

அதாவது வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் போன்ற‌ மோசமான நோய்களாகும். இந்நோய்களை விட்டும் நபி  அவர்கள் பாதுகாவல் தேடியுள்ளார்கள். இத் துஆவை நாம் அதிகமாக ஓதி வரவேண்டும்.

عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ ‏”‏ ‏.‏. (أبو داود 1554)

யா அல்லாஹ்! வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களில் இருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் (அபூதாவூத் 1554 ) 

عن عثمان بن عفان رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ يَضُرَّهُ شَيْءٌ

உஸ்மான் [رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎ ] அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி  அவர்கள் கூறினார்கள். காலையிலும் மாலையிலும் மூன்று முறை ‘‘பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்‘‘ என ஒதி வருவாரோ அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படமாட்டாது. (அபூதாவூத் 5088 , திர்மிதி 3388  ) 

【தொழுநோய்】

அன்புள்ளவர்களே! தொழுநோய் என்றால் என்ன?

தொழுநோயானது காற்றின் மூலம் மைக்ரோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியால் பரவுகிறது. இந்த நோய்  ஏற்பட்டால் முதலில் தேமல், படை போன்ற தோல் நோய்கள் ஏற்படும். தேமல், படை ஏற்பட்ட இடங்களில் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மேற்கண்ட அறிகுறிகள் உடல்பகுதிகளில் தென்பட்டால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த  தொழுநோய் இல்லாத இந்தியாவாக‌ உருவாக்க நம் அனைவரும் இணைந்து செயலாற்றுவோமாக!.

【தொழுநோயாளிகளிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?】

அன்புள்ளவர்களே! கீழ்காணும் ஹதீஸ்களின் மூலம் நபிகளார் ﷺ நமக்கு அழகிய வழிகளை  கற்றுத்தந்துள்ளார்கள்.

 أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ، وَفِرَّ مِنَ الْمَجْذُومِ كَمَا تَفِرُّ مِنَ الأَسَدِ 

“தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு” (புகாரி 5707 )

ஸகீஃப் தூதுக்குழுவில் தொழுநோயாளி ஒருவர் இருந்தார். அவரிடம் நபி  அவர்களிடம் உறுதிமொழி [பைஅத்] பெறுவதற்க்கு வந்தார் அவரிடம் , நபி  “நாம் உம்மிடம் உறுதிமொழி பெற்றுவிட்டோம். நீர் திரும்பிச் செல்லலாம்” என்று கூறியனுப்பினார்கள்.(முஸ்லிம் 4489)

தொழுநோயாளிகளைத் தொடர்ந்து (முறைத்துப் ) பார்க்காதீர்கள் . (இப்னுமாஜா 3533)

தொழுநோயாளிடம் ,ஒரிரண்டு ஈட்டியின் அளவு (இடைவெளி ) உனக்கும் அவருக்கும் நிலையில் பேசு ” என்று நபி  அவர்கள் கூறினார்கள் . (அபூநுஐம் , தபரானீ)

காரணம் ….. காற்றின் மூலமே அதிகம் பரவும் இந்நோய் நோயுற்றவருடன் ஏற்படும் நேரடித்தொடர்பின் மூலமும் நோய்யுயிரி சுவாசக் குழாய் வழியாக உட்செல்வதின் மூலமும் இவை பரவுகிறது. நோய்த்தொற்று உள்ள நபர் தும்பும் போதும் இரும்பும் போதும் கோடிக்கணக்கான தொழுநோய் நுண்ணுயிர்கள் காற்றில் பரவுகிறது. இது நாசி வழியாக உள் சென்று நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவரைத் தாக்குகிறது. மேலும் இவை நோயுற்றவரின் உடலில் வழியும் சீழ்களில் தொடர்பு ஏற்படுவதாலும் இவை பரவுகிறது.

18 ஆம் நூற்றாண்டின் கடைசியிலேதான் (1873-ம் ஆண்டில்) தொழுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. அதெப்படி 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நபியவர்களால் துள்ளியமாக கண்டுபிடிக்கப்பட்டது என்றால்? அல்லாஹ்தான் ﷻ அறிவித்துக் கொடுத்தான். 

【தொழு நோயாளியிடம் சோதிக்கும் அல்லாஹ் ﷻ】

، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “” إِنَّ ثَلاَثَةً فِي بَنِي إِسْرَائِيلَ أَبْرَصَ وَأَقْرَعَ وَأَعْمَى بَدَا لِلَّهِ أَنْ يَبْتَلِيَهُمْ، فَبَعَثَ إِلَيْهِمْ مَلَكًا، فَأَتَى الأَبْرَصَ. فَقَالَ أَىُّ شَىْءٍ أَحَبُّ إِلَيْكَ قَالَ لَوْنٌ حَسَنٌ وَجِلْدٌ حَسَنٌ، قَدْ قَذِرَنِي النَّاسُ. قَالَ فَمَسَحَهُ، فَذَهَبَ عَنْهُ، فَأُعْطِيَ لَوْنًا حَسَنًا وَجِلْدًا حَسَنًا. فَقَالَ أَىُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ قَالَ الإِبِلُ ـ أَوْ قَالَ الْبَقَرُ هُوَ شَكَّ فِي ذَلِكَ، إِنَّ الأَبْرَصَ وَالأَقْرَعَ، قَالَ أَحَدُهُمَا الإِبِلُ، وَقَالَ الآخَرُ الْبَقَرُ ـ فَأُعْطِيَ نَاقَةً عُشَرَاءَ. فَقَالَ يُبَارَكُ لَكَ فِيهَا. وَأَتَى الأَقْرَعَ فَقَالَ أَىُّ شَىْءٍ أَحَبُّ إِلَيْكَ قَالَ شَعَرٌ حَسَنٌ، وَيَذْهَبُ عَنِّي هَذَا، قَدْ قَذِرَنِي النَّاسُ. قَالَ فَمَسَحَهُ فَذَهَبَ، وَأُعْطِيَ شَعَرًا حَسَنًا. قَالَ فَأَىُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ قَالَ الْبَقَرُ. قَالَ فَأَعْطَاهُ بَقَرَةً حَامِلاً، وَقَالَ يُبَارَكُ لَكَ فِيهَا. وَأَتَى الأَعْمَى فَقَالَ أَىُّ شَىْءٍ أَحَبُّ إِلَيْكَ قَالَ يَرُدُّ اللَّهُ إِلَىَّ بَصَرِي، فَأُبْصِرُ بِهِ النَّاسَ. قَالَ فَمَسَحَهُ، فَرَدَّ اللَّهُ إِلَيْهِ بَصَرَهُ. قَالَ فَأَىُّ الْمَالِ أَحَبُّ إِلَيْكَ قَالَ الْغَنَمُ. فَأَعْطَاهُ شَاةً وَالِدًا، فَأُنْتِجَ هَذَانِ، وَوَلَّدَ هَذَا، فَكَانَ لِهَذَا وَادٍ مِنْ إِبِلٍ، وَلِهَذَا وَادٍ مِنْ بَقَرٍ، وَلِهَذَا وَادٍ مِنَ الْغَنَمِ. ثُمَّ إِنَّهُ أَتَى الأَبْرَصَ فِي صُورَتِهِ وَهَيْئَتِهِ فَقَالَ رَجُلٌ مِسْكِينٌ، تَقَطَّعَتْ بِيَ الْحِبَالُ فِي سَفَرِي، فَلاَ بَلاَغَ الْيَوْمَ إِلاَّ بِاللَّهِ ثُمَّ بِكَ، أَسْأَلُكَ بِالَّذِي أَعْطَاكَ اللَّوْنَ الْحَسَنَ وَالْجِلْدَ الْحَسَنَ وَالْمَالَ بَعِيرًا أَتَبَلَّغُ عَلَيْهِ فِي سَفَرِي. فَقَالَ لَهُ إِنَّ الْحُقُوقَ كَثِيرَةٌ. فَقَالَ لَهُ كَأَنِّي أَعْرِفُكَ، أَلَمْ تَكُنْ أَبْرَصَ يَقْذَرُكَ النَّاسُ فَقِيرًا فَأَعْطَاكَ اللَّهُ فَقَالَ لَقَدْ وَرِثْتُ لِكَابِرٍ عَنْ كَابِرٍ. فَقَالَ إِنْ كُنْتَ كَاذِبًا فَصَيَّرَكَ اللَّهُ إِلَى مَا كُنْتَ، وَأَتَى الأَقْرَعَ فِي صُورَتِهِ وَهَيْئَتِهِ، فَقَالَ لَهُ مِثْلَ مَا قَالَ لِهَذَا، فَرَدَّ عَلَيْهِ مِثْلَ مَا رَدَّ عَلَيْهِ هَذَا فَقَالَ إِنْ كُنْتَ كَاذِبًا فَصَيَّرَكَ اللَّهُ إِلَى مَا كُنْتَ. وَأَتَى الأَعْمَى فِي صُورَتِهِ فَقَالَ رَجُلٌ مِسْكِينٌ وَابْنُ سَبِيلٍ وَتَقَطَّعَتْ بِيَ الْحِبَالُ فِي سَفَرِي، فَلاَ بَلاَغَ الْيَوْمَ إِلاَّ بِاللَّهِ، ثُمَّ بِكَ أَسْأَلُكَ بِالَّذِي رَدَّ عَلَيْكَ بَصَرَكَ شَاةً أَتَبَلَّغُ بِهَا فِي سَفَرِي. فَقَالَ قَدْ كُنْتُ أَعْمَى فَرَدَّ اللَّهُ بَصَرِي، وَفَقِيرًا فَقَدْ أَغْنَانِي، فَخُذْ مَا شِئْتَ، فَوَاللَّهِ لاَ أَجْهَدُكَ الْيَوْمَ بِشَىْءٍ أَخَذْتَهُ لِلَّهِ. فَقَالَ أَمْسِكْ مَالَكَ، فَإِنَّمَا ابْتُلِيتُمْ، فَقَدْ رَضِيَ اللَّهُ عَنْكَ وَسَخِطَ عَلَى صَاحِبَيْكَ “”

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் ﷻ அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.

அவர் தொழு நோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்’ என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரைவிட்டுச் சென்றுவிட்டுது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், ‘எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஒட்டகம் தான்… (என்றோ) அல்லது மாடு தான்… (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)’ என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், ‘இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்’ என்று கூறினார்.

பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அழகான முடியும் இந்த வழுக்கை என்னைவிட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்’ என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், ‘எச்செல்வம் உனக்கு விருப்பமானது?’ என்று கேட்டார். அவர், ‘மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்’ என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, ‘இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்’ என்று கூறினார்.

பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அல்லாஹ் ﷻ என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)’ என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவி விட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், ‘உனக்கு எச்செல்வம் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)’ என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈன்றிட பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, ‘நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை) வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்’ என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், ‘(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)’ என்றார். உடனே அவ்வானவர், ‘உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?’ என்று கேட்டதற்கு அவன், ‘(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்’ என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், ‘நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் ﷻ மாற்றி விடட்டும்’ என்று கூறினார்.

பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், ‘நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ்  மாற்றி விடட்டும்’ என்று கூறினார்.

பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, ‘நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்’ என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், ‘நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் ﷻ என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்’ என்று கூறினார். உடனே அவ்வானவர், ‘உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபமுற்றான்’ என்று கூறினார். (புஹாரி : 3464, (முஸ்லிம் 5672)

அன்புள்ளவர்களே! மேற்கண்ட ஹதிஸில் பல படிப்பினை சம்பவங்கள் நிரம்பியுள்ளன. மேற்கண்ட ஹதிஸின் மூலம்:-

  1. அல்லாஹ் ﷻ நமக்கு கொடுக்கும் அருட்கொடைகளில் பழைய நிலைகளை நம் மறக்க/ மறுக்க‌ கூடாது. என்பது நமக்கு தெரிய வருகிறது.
  2. அல்லாஹ் ﷻ நம் வாழ்வில் முன்னேற்ற வழி கொடுத்தால் பிற்காலத்தில் சோதிப்பான். அச்சோதனையில் தோல்வியுற்றால் நம் அருட்கொடைகள் அனைத்தும் வீணாகிவிடும். என்பது நமக்கு தெரிய வருகிறது.
  3. மேற்கண்ட மூவரில் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீது அல்லாஹ் ﷻ கோபமுற்றது போல வாழாமல், குருடரைப் போல நேர்மையாக நன்றியுள்ள அடியாராக வாழ்திட வேண்டுமென‌  நமக்கு தெரிய வருகிறது.

【தொழு நோயாளியின் துஆ மிகவும் சக்திவாய்ந்தது】

(ஒரு முறை) கூஃபாவாசிகளின் தூதுக்குழு ஒன்று (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் வந்தது. அவர்களிடையே உவைஸ் அவர்களைப் பழித்துப் பேசிவந்த மனிதர் ஒருவரும் இருந்தார்.

உமர் (ரலி) அவர்கள், “இங்கு (உங்களில்) “கரன்” குலத்தைச் சேர்ந்தவர்களில் யாரேனும் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அப்போது அந்த மனிதர் வந்தார். அப்போது உமர் [رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎ ] அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர்  அவர்கள், “உங்களிடம் யமன் நாட்டிலிருந்து ஒரு மனிதர் வருவார். அவர் “உவைஸ்” எனப்படுவார். அவர் யமன் நாட்டில் தம் தாயார் ஒருவரை மட்டுமே விட்டுவருவார். அந்த மனிதருடைய மேனியில் [தொழுநோய்] வெண்குஷ்டம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். அதையடுத்து ஒரு தீனார் அல்லது ஒரு திர்ஹம் அளவு இடத்தைத் தவிர (மற்ற இடங்களிலிருந்து) அதை அல்லாஹ் குணப்படுத்தினான். ஆகவே, உங்களில் யாரேனும் அவரைச் சந்தித்தால் அவர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரட்டும் (அவரிடம் உங்கள் பாவமன்னிப்புக்காகப் பிரார்த்திக்கச் சொல்லவும்)” என்று கூறினார்கள். (முஸ்லிம் 4969)

மேற்கண்ட ஹதிஸில்:- தொழுநோய் உடைய உவைஸுல் கரன் என்பவருடைய துஆவை அல்லாஹ் ﷻ அங்கிகரித்ததுமட்டுமல்லாமல்; அவரை யாரேனும் சந்தித்தால் அவரிடம் உங்கள் பாவமன்னிப்புக்காகப் பிரார்த்திக்கச் சொல்லவும் என்று உமர் [رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ‎ ] அவர்கள் கூறினார்கள்.

【தொழு நோயும்.. ஈஸா (عَلَيْهِ السَّلاَمُ) மும்…】

நபி மூஸா (عَلَيْهِ السَّلاَمُ) அவர்களின் காலத்தில் எப்படி சூனியக்காரர்கள் நிறைந்திருந்து, மக்கள் திசை மாறியதை மூஸா ((عَلَيْهِ السَّلاَمُ) அல்லாஹ்வின் அருளைக் கொண்டு முறியடித்தார்களோ, அதுபோல மருத்துவர்கள் நிறைந்திருந்து, குணமாக்க முடியாத நோய்களை [தொழுநோயுடையவரை] ஈஸா (عَلَيْهِ السَّلاَمُ) அல்லாஹ்வின் அனுமதி பெற்று குணப்படுத்திக் காட்டினார்கள். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் சுகமாக்கினார்கள், சக்தி படைத்த அல்லாஹ்வின் அருளைப் பெற்று இறந்தோரையும் ஈஸா (عَلَيْهِ السَّلاَمُ) உயிர்ப்பித்தார்கள்.

اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِىْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ‌ ۘ اِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِىْ الْمَهْدِ وَكَهْلًا ۚوَاِذْ عَلَّمْتُكَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ‌ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْـــٴَــةِ ‏ الطَّيْرِ بِاِذْنِىْ فَتَـنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًۢا بِاِذْنِىْ‌ وَ تُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِىْ‌ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏

அல்லாஹ் ﷻ கூறுவான்:“மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; [1] பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து [2] நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், [3] இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); [4] இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், [5] இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், [தொழுநோயுடையவரை] வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); [6] இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.. [அல்குர்ஆன் 5:110, 3:49]

【தொழு நோயும்.. மூஸா (عَلَيْهِ السَّلاَمُ) மும்…】

، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” إِنَّ مُوسَى كَانَ رَجُلاً حَيِيًّا سِتِّيرًا، لاَ يُرَى مِنْ جِلْدِهِ شَىْءٌ، اسْتِحْيَاءً مِنْهُ، فَآذَاهُ مَنْ آذَاهُ مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَقَالُوا مَا يَسْتَتِرُ هَذَا التَّسَتُّرَ إِلاَّ مِنْ عَيْبٍ بِجِلْدِهِ، إِمَّا بَرَصٌ وَإِمَّا أُدْرَةٌ وَإِمَّا آفَةٌ. وَإِنَّ اللَّهَ أَرَادَ أَنْ يُبَرِّئَهُ مِمَّا قَالُوا لِمُوسَى فَخَلاَ يَوْمًا وَحْدَهُ فَوَضَعَ ثِيَابَهُ عَلَى الْحَجَرِ ثُمَّ اغْتَسَلَ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ إِلَى ثِيَابِهِ لِيَأْخُذَهَا، وَإِنَّ الْحَجَرَ عَدَا بِثَوْبِهِ، فَأَخَذَ مُوسَى عَصَاهُ وَطَلَبَ الْحَجَرَ، فَجَعَلَ يَقُولُ ثَوْبِي حَجَرُ، ثَوْبِي حَجَرُ، حَتَّى انْتَهَى إِلَى مَلإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَرَأَوْهُ عُرْيَانًا أَحْسَنَ مَا خَلَقَ اللَّهُ، وَأَبْرَأَهُ مِمَّا يَقُولُونَ، وَقَامَ الْحَجَرُ فَأَخَذَ ثَوْبَهُ فَلَبِسَهُ، وَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا بِعَصَاهُ، فَوَاللَّهِ إِنَّ بِالْحَجَرِ لَنَدَبًا مِنْ أَثَرِ ضَرْبِهِ ثَلاَثًا أَوْ أَرْبَعًا أَوْ خَمْسًا، فَذَلِكَ قَوْلُهُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا}.””

மூஸா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது, பனூ இஸ்ராயீல்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால் தான் இந்த அளவிற்கு இவர் (தன் மேனியை) மறைத்துக் கொள்கிறார். (இவருக்குக்) தொழு நோய் இருக்கவேண்டும்; அல்லது குடலிறக்க நோய் இருக்க வேண்டும்’ என்று கூறினார்கள். மூஸா (அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். எனவே, (இறைவனின் திட்டப்படி) ஒரு நாள் மூஸா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத்திற்குத்) தனியாகச் சென்று, தம் ஆடைகளை (கழற்றிக்) கல்லின் மீது வைத்துவிட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக் கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களின் துணியுடன் ஓடலாயிற்று. மூஸா(அலை) அவர்கள், தம் தடியை எடுத்துக் கொண்டு கல்லை விரட்டிப்பிடிக்க முனைந்தார்கள். ‘கல்லே என் துணி! கல்லே என் துணி!’ என்று குரல் எழுப்பலானார்கள். (அதை விரட்டிச் சென்றபடி) இறுதியில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரின் தலைவர்களிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர், மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அழகானவர்களாகவும் தாம் சொன்ன குறைபாடுகளிலிருந்து தூய்மையானவர்களாகவும் இருப்பதை, அவர்களை ஆடையில்லாத கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக் கொண்டார்கள். கல் (ஓடாமல்) நின்றது. உடனே, மூஸா(அலை) அவர்கள், தம் துணியை எடுத்துக் கொண்டு தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்கலானார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து தழும்புகள் (இன்னும்) உள்ளன. இந்த நிகழ்ச்சியைத் தான், ‘இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்’ என்றும் (திருக்குர்ஆன் 33:69)  இறைவசனம் குறிக்கிறது. (புகாரி 3404 )

【நோய் தொற்று என்பது நாம் சுன்னத்தை விடுதலிலயே! 】

، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “” الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ،

இஸ்லாத்தை பொறுத்த வரை ஒரு முஸ்லிம் தன்னுடைய கை மற்றும் நாவின் மூலம் (ஏற்படும் தீங்குகளை விட்டும்) சக முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றால்தான் அவர் உண்மை முஸ்லிமாக இருக்க‌ முடியும், (புஹாரி : 9)

இந்த நபி மொழியிலிருந்து ஏராளமான சட்டங்களை மார்க்க வல்லுணர்கள் கூறியுள்ளனர். எந்த ஒரு தனி நபரும் மற்றவர்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படுத்தக்கூடாது. நோயாளியின் கிருமி மற்றவர்களுக்கு தொற்றும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட நபர், ரொட்டி மாஸ்டராகவோ பொது சந்தையில் விற்பனையாளராகவோ இருக்கக்கூடாது. இது போன்ற விதிமுறைகளை இந்த நபி மொழி நமக்கு சொல்லித்தருகிறது. நபி  அவர்களே தும்மினால் கூட உம்மத்தின் படிப்பினைக்காக கையையோ அல்லது துணியையோ வாயருகில் வைத்துக்கொள்வார்கள். தும்மலின் சப்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள். (அபூதாவூத் 4374)

இந்த நபி மொழி, ஒரு நோயாளி மற்றவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக எப்படி நடந்து கொள்ளவேண்டும், என்பது பற்றியும் மற்றவர்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும், என்பது பற்றியும் அழகான வழிகாட்டுதலை கொடுக்கிறது.

சாப்பாட்டுக்கு முன்பு கை கழுவிக்கொள்ள வேண்டுமென்பதும் இஸ்லாம் போதிக்கும் சுகாதாரக் கொள்கைகளில் ஒன்று. உணவருந்தும் முன்பும் பின்பும் கைகழுவிக் கொள்வது சாப்பாட்டில் அபிவிருத்தியை உண்டாக்கும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத் – 3763)

நக இடுக்குகளில் அழுக்கு படிவதால் அது உணவருந்தும் போது அழுக்கும் உடலுக்குள் சென்று உடல்நலத்ததைக் கெடுக்கக் கூடும். கூட்டாக சாப்பிடும் போது இத்தொற்று இலகுவாக பரவ வாய்புள்ளது. எனவே, இது போன்ற காரியங்களிலும் இஸ்லாம் கவனம் செலுத்தியிருக்கிறது. நகத்தை வெட்டுவதையும் இடுக்குகளில் உள்ள முடிகளைக் கலைவைதையும் மனிதனுடைய இயல்பான காரியங்களில் உள்ளவை என்று கூறி நபியவர்கள் உடல் சுத்தத்தின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள். நாற்பது நாட்களுக்கு அதிகமாக அவற்றை அகற்றாமல் விட்டு வைக்கக்கூடாது, என்று காலக்கெடுவையும் கண்டிப்புடன் கூறியுள்ளார்கள். (திர்மிதி – 2758)

ஒருவர் தண்ணீர் குடித்து விட்டு மற்றொருவர் தண்ணீரை மூடி வைக்க வில்லையென்றால் அதன் மூலம் பிறருக்கு நோய் தொற்று வர வழி செய்கிறோம். தண்ணீர் பாத்திரத்தை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பையைக் கட்டி வையுங்கள். தூங்கிவிழித்தால் தண்ணீர்ப் பாத்திரத்திற்குள் கைகளை நுழைப்பதற்கு முன் மூன்று முறை கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் அவனுயை கரங்கள் (அசூசையான இடங்களில்) உலாவிஇருப்பதை அவன் அறியமாட்டான் என்று கூறி தண்ணீரின் தூய்மையைப் பேணுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள், நபியவர்கள். நாகரிகம் தெரியாத அந்தக் காலத்திலேயே அதிகமாக செருப்பணியுங்கள், என்று நபி  அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். (ஸஹிஹ் முஸ்லிம்)

செருப்பின் மூலம் கிருமிகளின் தாக்கத்தை விட்டும் பாதுகாப்புப் பெற முடியும். தண்ணீரில் நாய் வாய் வைத்துவிட்டால் அந்த பாத்திரத்தை ஏழுமுறை கழுவுங்கள். ஒரு முறை மண்ணால் தேய்த்து கழுவுங்கள். இவையனைத்தும் இறைத்தூதர் போதிக்கும் சுக ஆதாரங்களாகும்.

எனவே, இவ்வாறான நோய்கள், சோதனைகளில் இருந்து அல்லாஹுதஆலா ﷻ நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்.

【 சபதம் எடுங்கள்】

அன்புள்ளவர்களே! இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து. எனது மவ்த் ஆகும் வரைக்கும் தொழு நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வேன். தொழுநோயாளியாக நான் ஆகுவதை விட்டும் அல்லாஹ்விடம் அதிகமாக பாதுகாவல் தேடுவேன். என்று உறுதி மொழியேற்போமாக!

பிரபல்யமான பதிவுகள்