புதன், ஜனவரி 15, 2020

காசிம் ஸுலைமானி யார்

காசிம் சுலைமானி(லஃனத்துல்லாஹி அலைஹி)!

அமெரிக்காவிற்க்கு எதிரி என்பதற்காக ஈராக்கின் சதாம் ஹுசைனையும், சதாம் ஹுசைனுக்கு எதிரான, ஈரானின் காசிம் சுலைமானியையும் ஆதரிப்பது ஒரு பொழுதும் நேர்மையான பார்வையில்லை. சதாம் ஹுசைன் என்கிற மனிதனைக் கொன்ற பொழுது அமெரிக்காவுடன் கை கோர்த்தவர்கள் தான் ஷியா மதத்தவர்கள் என்பதை மறுக்க இயலாது. அகம் மகிழ்ந்த அயோக்கியர்கள் அவர்கள்!

கம்யூனிசக் கம்பங்களில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறந்தன. அது சதாம் ஹுசைன் தூக்கிலடப்பட்ட பொழுது! அந்த தூக்கு கயிற்றை இறுக்க முழுக் காரணமாக இருந்தவர்கள் இந்த காசிமி சுலைமானிகளும், அலி மலிக்கிகளும் தான்!

அமெரிக்காவின் கைப்பாவைகள் என்றைக்காவது ஒரு நாள் அமெரிக்காவின் கைகளினாலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்படுவர். அது தான் இந்த ஷியா மதத்தவன் விடயத்தில் நடந்துள்ளது. அமெரிக்காவின் தூதரகத்தை எரித்து அமெரிக்காவை விரட்டி விட்டு அலி மலிக்கியை தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டு, ஈராக்கின் பக்தாத், டிகிரிட்டி மற்றும் பஸ்ரா இசுலாமியர்களை அழிக்கும் திட்டத்தை தீட்டியவன் தான் இந்த காசிம் சுலைமானி! இந்த ஷியா மதத்தவனுக்கு இசுலாமியர்களின் இரத்தம் என்றால் நிரம்ப பிடிக்கும். அவன் சிரியாவில் குடித்த குருதி கொஞ்சமல்ல.

எந்த ஒரு மனிதனின் மரணமும் மகிழ்ச்சிக்குறியது அல்ல. ஆனால், காசிம் சுலைமானி கொல்லப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஓர் இசுலாமியனாக மட்டும் அல்ல மனிதத்தை நேசிப்பவனாகவும் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியே!
நோன்பு பிடித்துக் கூட அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தலாம். காரணம் ஜோர்டன் அகதிகள் முகாம்களில் இலட்சத்திற்கும் மேற்பட்டு, அனாதைகளாக, உடல் உறுப்புக்களை இழந்தவர்களாக, நாம் ஏன்? எதற்காக? யாரால்? எப்படி இந்த நிலைக்கு தள்ளப்பட்டோம்?! நமது பெற்றோர்கள் திரும்பி வருவார்களா மாட்டார்களா? என ஏங்கி நிற்கிற, ஒவ்வொரு குழந்தையின் வலிக்கும் சூத்திரதாரி, இந்த அயோக்கியன் காசிம் சுலைமானி!

லெபானான் ஷியா மதத்வனின் ஹிஸ்புல்லாஹ், ஈராக் பிரட்சினைகள், பாலூசிஸ்தான் விவகாரம், சிரியாவின் கோரத் தாண்டவம் என அத்துனையிலும் இவன் மூக்கு இடைப்பட்டுள்ளது. இந்த ஷியா மத வெறியனால் அழிக்கப்பட்ட இசுலாமியர்கள் அதிகம்.

காசிம் ஸுலைமானி எனப் பெயர் வைத்து விட்டாலே போதும் என நினைக்கிற பத்தாம்பசலி இசுலாமிய இளைஞர்களுக்காகவே இந்தப் பதிவு.

காசிம் சுலைமானி நீதிமான் அல்ல. அநீதியாளனைக் கொண்டு மற்றோர் அநீதியாளான் அல்லாஹ்வால் கொல்லப்பட்டான் அவ்வளவே!