நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

சனி, டிசம்பர் 28, 2019

கண்டுகொள்ளுமா அன்வாருஸ் ஸுஃப்பா ,

*"அந்த மூன்று பேர்..."*

"தீயா வேல செய்யணும் குமாரு" என்பது போல் பக்கா பிளான்களோடு கனக்கச்சிதமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அன்வாருஸ் ஸுஃப்பா டீம். மிக ஆபத்தான நேரத்தில் களத்திற்கு வந்து நல்ல செய்தி சொல்லியுள்ள ஹுத்ஹுத் பாராட்டுதலுக்குரியது. 

ஹுத்ஹுத் ரிப்போர்டுகள் வெளிவந்ததுமே, ஆலிம்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கிற அன்வாருஸ் ஸுஃப்பாவின் ரஃபீக் ஹாஜியார், அவர் என்ன சொன்னாலும் தலையாட்டிக் கொண்டே செய்கின்ற கொத்தடிமைகளாக வாழவிரும்புகிற முஆவின்களிடம், "விமர்சனம் செய்யக் கூட அந்த பதிவை பகிராதீர்கள். அதற்கு பதிலும் தராதீர்கள். கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாலே போதும்" என்று ஆணை பிறப்பித்திருக்கிறார். அதுதான் இப்போதைய மயான அமைதிக்குக் காரணம். 

"நாங்கள் நடத்துகிற இடத்தில் வந்து உங்கள் பாடத்திட்டத்தை வைக்கும்படி கேட்கக்கூடாது" என்று ரவ்ளாத்துல் ஜன்னாத்துடன் ஒப்பந்தம் இருந்தும், முனாஃபிக்கின் அடையாளமான வாக்குமீறுதலை தன்னிலிருந்து துவங்கி கடைக்கோடி அன்வோ ஊழியன் வரை மூலகொள்கையாகவே பயிற்றுவித்திருக்கிறார் ரஃபீக் ஹாஜியார். 

"ஆலிம்களின் துணை இல்லாமல் எப்படி இவரால் இவ்வளவு துணிச்சலாக நடக்கமுடிகிறது?" என்று யோசித்தேன். அப்போது தான் விபரம் தெரிந்தது... 

(1) பள்ளபட்டியில் பிறந்து சென்னையில் ஜமாஅத்துல் உலமா மாவட்ட பொறுப்பில் போட்டியிட்டு தோற்ற, கோடம்பாக்கத்தை ஆட்டிப் படைக்கிற தர்வேஷ் ரஷாதீ மௌலானாவும், 

(2) புதுவயலில் பிறந்து முன்னால் ஜமாஅத்துல் உலமாவின் செயலாளராக பணியாற்றியபோது அன்வாருஸ் ஸுஃப்பாவை ஜஉ ஏற்பதாக கையெழுத்துப் போட்ட ரிளா பாகவீ மௌலானாவும், 

(3) அன்வாருஸ் ஸுஃப்பாவின் செருப்புத் தோலாக உழைக்கிற அப்துல்லாஹ் பாகவீ மௌலானாவும், 

இவர்கள் தான் உலமாக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கிற பாடத்திட்டமான அன்வாருஸ் ஸுஃப்பா ரஃபீக் ஹாஜியாரின் ஆலோசகர்கள். 

தர்வேஷ் ரஷாதீ மௌலானா யார் என்று கோடம்பாக்கத்தில் போய் கேட்டுப்பாருங்கள் தெரியும். தனக்கு சாதகமான ஆட்களை மட்டுமே அங்குள்ள பள்ளிகளில் பணியமர்த்தவும், தனக்கு சாதகமான யாரையாவது நீக்கிவிட்டால் நிர்வாகத்தை தந்திரமாக மிரட்டுவதும் ரஷாதீ மௌலானாவிற்கு கைவந்த கலை. 

அதென்ன தந்திரமாக மிரட்டுவது?. ஒரு இமாமை இப்படித்தான் நிர்வாகம் நீக்கிவிட்டது. நம்முடைய தர்வேஷ் மௌலானா அந்த பள்ளியில் பத்து ஆலிம்களுடன் போய் தொழுது நீண்ட நேரமாக துஆ செய்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். அவ்வளவு தான் அந்த இமாம் சேர்க்கப்பட்டுவிட்டார். ஏன்? என்ன நடந்தது? என்று கேட்கிறீர்களா?. நிர்வாகியின் பார்வையிலிருந்து பாருங்கள் புரியும். ஒரு பள்ளியில் ஒரு இமாம் நீக்கப்பட்டதற்குப் பின் அங்கு 10 ஆலிம்கள் சம்பந்தமே இல்லாமல் ஐநேர வக்துகள் அல்லாத நேரத்தில் வந்து தொழுது துஆ செய்தால் "தங்களுக்கு எதிராகத் தான் இவர்கள் துஆ செய்கிறார்கள்" என்ற கிலி ஏற்படத்தானே செய்யும்?. 

இப்படி நடந்து கொண்ட இன்னொரு நிர்வாகியை அவர் உடல்நலமில்லாமல் இருக்கையில், நலம் விசாரித்த பின் "நம்ம வாழ்க்கையில யாருடைய பத்துஆவையும் வாங்கிடக்கூடாது ஹாஜியார்... அதுவே நம்முடைய மவ்த்த மோசமாக்கிடும். அது நம்மோட நிக்குமா? நம்ம சந்ததிகளையும் பாதிச்சிடும். அதனால யாரோட பத்துஆவையும் வாங்காம வாழ்ந்து மவ்த்தாயிடணும்" என்று உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஹாஜியார்களின் உளவியலை பயன்படுத்திக் கொள்ளும் கெட்டிக்காரர். 

"சரி... இதெல்லாம் நல்லது தானே?. உலமாக்களுக்கு சாதகமாகத் தானே செய்கிறார்?" என்று நீங்கள் கேட்கலாம். அதுதான் இல்லை. கோடம்பாக்க வட்டாரத்தில் எந்த இமாமவது ஊருக்கு போனால், நிர்வாகத்திடம் லீவ் சொல்கிறார்களோ இல்லையோ.... முதலில் தர்வேஷ் மௌலானாவிடம் முஸாஃபஹா செய்து, "மவ்லானா மூணுநாள் ஊருக்குப் போறேன். கொஞ்சம் பாத்துக்கங்க" என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். அதன் அர்த்தமாவது... "இந்த மூணுநாள்ல ஏதாவது பண்ணி வேலைக்கி உல வச்சிடாத ராசா.." என்பதே!. 

அடையார் இமாமிற்கும், ஹிதாயத்துல்லாஹ் ஹாஜியாருக்கும் இடையில் கருத்துவேறுபாடு வந்து தனியாக பிரிந்து வந்தபோது, ஹிதாயத்துல்லாஹ் உடன் இணைந்து அடையார் இமாமிற்கு எதிராக களவேலை பார்த்தவர் நம்முடைய தர்வேஷ் மவ்லானா. தனக்கு எதிராக யார் வளர்கிறார்களோ அவர்களின் குடியைக் கெடுக்க அரும்பாடு பட்டு தொண்டாற்றுபவர் நம்முடைய தர்வேஷ் மவ்லானா. இதுவே அவருடைய தனிப்பெரும் சிறப்பாகும். குடியைக் கெடுப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்கிறீர்களா?. அடுத்தவரின் குடியைக் கெடுத்தால் சென்னையில் சொந்த பெயரிலேயே 3 வீடுகள் வாங்கலாம்.

அடுத்தது, நம்முடைய ரிளா பாகவீ. இவர் ஏற்கனவே ஜஉ செயலாளராக இருந்த போது "இந்தா... உனக்கொரு கையெழுத்து.. உனக்கொரு கையெழுத்து" என்று ரவ்ளாத்துல் ஜன்னாத்திற்கும், தீனிய்யாத்திற்கும் கையெழுத்திட்ட தியாக வள்ளல் அவர். 

சமீபத்தில் சிவகங்கையில் ஒரு இமாம் "நான் என்ன தவறு செய்தேன்?. என்மீது குறைகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று ஜுமுஆவிலேயே பகிரங்கமாக பேசிய அந்த ஆடியோ வாட்சப் தளங்களில் ஒரு 8 மாதத்திற்கு முன் வலம் வந்தது நினைவிருக்கலாம். அதற்குப் பின்னர் அந்த இமாம் நீக்கப்பட்டதும், வீடு தேடிப்போய் மிரட்டப்பட்டதும், அதற்கு பஞ்சாயத்து பேசிவதற்காக ரிளா பாகவீ போய் "நீ தாம்பா பொறுத்து போகணும். அந்த ஹாஜியார் எப்படிப்பட்டவர் தெரியுமா?" என்று அந்த இமாமிற்கு புத்தி சொல்லிவிட்டு வந்ததெல்லாம் திரைமறைவில் நடந்த பேரங்களைச் சொல்லும். 

அப்துல்லாஹ் பாகவீ சொல்லவே தேவையில்லை. அன்வாருஸ் ஸுஃப்பாவின் அடிமை. ரஃபீக் ஹாஜியார் ஓங்கி அறைந்தால் கூட, "கோவமா இருக்கீங்களா ஹாஜியார்.. நான் வேணா டீ வாங்கிட்டு வரவா?" என்று கேட்பார். அப்படியொரு விசுவாசம் உள்ளவர் இந்த மௌலானா. 

இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேனென்றால்.... உலமாக்களின் வாழ்வாதாரம் சீரழிவது குறித்து கொஞ்சம் கூட கவலைப்படாத, ஒத்த குணம் கொண்ட இவர்களெல்லாம் சேர்ந்துதான் ரஃபீக் ஹாஜியாரை வழிநடத்துகிறார்கள். 

*உலமாக்களின் வாழ்தாரம் குறித்து கவலைப்படாமல் இப்படியெல்லாம் குழிபறிப்பதால் தான், குடியுரிமையே கேள்விக்குறியாகி நிற்கிறது.*

சரி... இதெல்லாம் இவர்களின் ப்ளான்கள். இப்படியெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். இந்த மாநாட்டில் என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்கலாம். ஹுத்ஹுத் சொன்ன ஆரூடம் போல, அந்த மேடையில், உலமாக்களின் பெருமை, கண்ணியம் என்று பேசிவிட்டு, அன்வோ எப்படியெல்லாம் செயல்படுகிறது தெரியுமா என்று பேசிவிட்டு, தனியே அவர்கள் சந்திக்க வரும்போது, "உங்க பள்ளில அன்வாருஸ் ஸுஃப்பா இல்லாட்டி அந்த மஹல்லா உருப்படாது" என்று சொல்வார். இருக்கும் இமாம், ஒத்துழைப்பாரா? மாட்டாரா? என்பதைப் புரிந்து கொண்டு "நாம ஏன் இதற்கென தனியாக ஓர் ஆலிமை நியமிக்கக் கூடாது?" என்று கேட்டு, அந்த இமாமின் குடியைக் கெடுக்க ஸ்கெச் போடுவார். 

இன்னொரு விஷயம், எதிர்ப்புகள் கிளம்பிய உடன், உமராக்கள் கூட்டத்திற்கு ஆள் சேர்க்கிற வேலையில் ஹாஜியாரே களமிறங்கிவிட்டார். கூட்டத்தில் யாரையாவது பார்த்து, "ஹாஜியார் எங்கிருந்து வர்றீங்க?" என்று கேட்டு, "சென்னைல இருந்து" என்று சொன்னால் ஆச்சர்யமே படாதீர்கள். "டிக்கெட் யார் போட்டா?" னு மட்டும் காது பக்கத்துல போய் கேளுங்க. 

ஆக, திண்டுக்கல்லில் அன்சீசனில் ஒரு குட்டி இஸ்திமாவைப் பார்க்கலாம். அல்வா, பால்கோவெல்லாம் இருக்காது என்பதனை முன்கூட்டியே தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

பயனுள்ள சில புகைப்படங்கள்,






பயனுள்ள சில புகைப்படங்கள்

கீரைகளும் அதன் நிறைந்துள்ள சத்துக்கள்,











பிரபல்யமான பதிவுகள்