роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЮாропிро▒ு, роЯிроЪроо்рокро░் 11, 2016

рооро░ுрод்родுро╡роо் -роЗроЮ்роЪிрой் роЪிро▒рок்рокு,

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..
கொடி போல இடை தளிர்போல நடை என்று சொல்வார்கள். அது போல் எப்போதும் மெல்லிடையுடன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் எனில் என்ன செய்வது? வெகு சுலபமாக செயது முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்கிறது, கவலை வேண்டாம்.
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்வது எப்படி என்று கோவை பாலாவிடம் கேட்டோம். அவரது விளக்கம் ஒரு இஞ்சிப் பாலை குடித்தது போல் இருந்தது.
'ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட... இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. ரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்