شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّـهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّـهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
ரமழான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, எவர் உங்களில் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்கட்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ அவர் மற்ற நாட்களில் நோற்கட்டும்;. உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காகக் குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பூர்த்தி செய்து, அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துவதற்காக அல்லாஹ் இலகுவை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல்குர்ஆன் 2:185)
பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை முடித்துக்கொள்ளுங்கள் (ஹதீஸ்)
اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربي و ربك الله هلال رشد و خير
பிறையைக் கண்டதும் ஓதும் தூஆ
அல்லாஹும்ம அஹில்லஹூ அலைனா பில் அம்னி வல் ஈமான் வஸ்ஸலாமத்தி வல் இஸ்லாம் ரப்பி வ ரப்புக்கல்லாஹ் ஹிலாலு ருஸ்தின் வ ஹைர்.
அல்லாஹ்! இந்த பிறையை அபிவிருத்து உள்ளதாகவும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் கொண்டு தரக் கூடியதாகவும் வெளியாக்கி வை! (பிறையே!) எனது ரப்பும், உனது ரப்பும்அல்லாஹ் தான்! நேர்வழிக்கும் நல்லதற்க்கும் வழிவகுக்கும் பிறையாக ஆக்கிவைப்பாயாக. ஆமீன்