роироо்рооுроЯрой் роЗрогைрои்родு роЗро░ுрок்рокро╡ро░்роХро│்

роЪெро╡்ро╡ாроп், роЪெрок்роЯроо்рокро░் 13, 2016

роХроГрокா

கஃபாவின் மீது போர்த்தப்படும் போர்வைக்கு என்ன பெயர்?

எப்போது அந்த போர்வை மாற்றப்படும்?

புது போர்வை போர்த்தப்பட்டால் பழைய
போர்வையை என்ன செய்வார்கள் ?

இந்த போர்வை செய்ய எவ்வளவு செலவு ஆகிறது?

அந்த போர்வை கருப்பு நிறம் மட்டும் தானா ?

இது போன்ற பல தகவல்கள் இதில் அடங்கும் !!!

1. கஃபாவின் மீது
போர்த்தப்படும் போர்வைக்கு பெயர்:

கஃபாவின் மீது போர்த்தப்படும் கருப்பு நிறபோர்வைக்கு "கிஸ்வா" என்று பெயர் சொல்லப்படும். தங்க ஜரிகைகலால் ஆனது, கஃபாவிற்க்கு போர்வை மாற்றம் என்பது ஒரு வைபவம் என்றே ஆரம்பித்து... இன்று வரை
தொடர்கிறது.

2. எப்போது மாற்றப்படும் !!!

வருடந்தோறும் துல்ஹஜ் பிறை 9 ம் நாள், ஹஜ்ஜோடு சேர்த்து இந்த போர்வை மாற்றப்படுகிறது.

3. பழைய போர்வை !!!

பழைய போர்வை சின்னஞ்சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், பிரமுகர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் KhகலீFபா உமர் [ ரலியல்லாஹூ அன்ஹூ ] அவர்களுடைய  ஆட்சி காலத்தில் அது ஹஜ் பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.

14 -மீ- நீளமும் 101-செ.மீ அகலமும் கொண்ட 47 துண்டுகள் பயன் படுத்தப்படும்.

இந்த போர்வையின் நீளம் -658 ச.மீ ஆகும்.

670-கிலோ பட்டு நூலும் 15 கிலோ அசல் தங்க ஜரிகை இழைகள் பயன்படுத்தப் படுகிறது.

இதற்காக ஆகும் செலவு சவுதி ரியால் -1 கோடியே 70- லட்சம் என்று சொல்லப்படுகிறது.

அது இந்திய ரூபாய் சுமார் 20-கோடியை தாண்டும்.

தொடும்போர்வை நெய்யப்பட்ட பிறகு திருக் குர்ஆன் வசனங்கள் ஜரிகை இழைகளால் மேலும் கலைநயமிக்க எழுத்துக்களால் அதில் பின்னப்படுகின்றன. கிஸ்வாவின் நிறம் ஒவ்வொரு ஆட்சியாளர் காலங்களில், ஒவ்வொரு நிறத்திலும் இருந்திருக்கிறது.

ஆரம்பகாலங்களில் இந்த போர்வை மாற்றும் வைபவம். முஹர்ரம் மாதம் 10-ஆம் நாள் நடை பெற்றது, பிறகுதான் அது துல்ஹஜ் மாதம் ஆனது.

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE

рокிро░рокро▓்ропрооாрой рокродிро╡ுроХро│்