நம்முடன் இணைந்து இருப்பவர்கள்

ஞாயிறு, மே 30, 2021

பிராமணர்களின் பூர்விகம் எது,

பிராமணர்களின் பூர்விகம் எது, எப்படி இந்தியாவில் அவர்களது வாழ்க்கை முறையைக் கட்டமைத்துக் கொண்டனர்?
இந்த கேள்விக்கு நாம் பதில் சொல்வதை விட பிராமணர்களே சொல்லியுள்ள தரவுகளை பதிவிட்டால்தான் ஒப்புக்கொள்வார்கள்.

ஒரிஜினல் பிராமணரும், பண்டிதரும், சாதி தர்ம ஆதரவாளருமான பாலகங்காதர திலகர் ஆய்வின் படி பிராமணர்களின் பூர்விகம் ஸ்கேண்டிநேவியா, அதை ஒட்டிய வட துருவ பிரதேசமாகும். இதற்கு ஆதாரமாக பிராமணர்களின் தலையாய ரிக் வேதத்திலிருந்தே தரவுகளை கொடுக்கிறார். வேதத்தில் பிராமணர்களின் பூர்வேஈக தேசம் ஆயிரம் ஆறுகள் ஓடும் பனிபடர்ந்த பகுதி எனவும் அங்கே 6 மாதம் பகல் 6 மாதம் இரவாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது ஸ்காண்டிநேவிய நாடான சுவீடன், பின்லாந்து, நார்வே பகுதியே பிராமணர்களின் பூர்விகம் என நிறுவுகிறார். ஆயிரம் ஏரிகளின் நாடு பின்லாந்து, நள்ளிரவில் சூரியன் தெரியும் நாடு நார்வே என்ற சொற்பதங்கள் இன்றும் உள்ளது.

பிராமணர்களின் மொழியான சமஸ்கிருதம் வட ஐரோப்பிய மொழிகளோடு மிகவும் ஒத்திருக்கிறது. ஒரே இலக்கண அமைதியை கொண்டிருக்கிறது. பல சம்ஸ்கிருத சொற்கள் இன்றளவும் ஜெர்மன், டேனிஷ், ஸ்விடிஷ் ஆங்கிலத்தில் அதே அர்த்தத்தில் பேசப்படுகிறது. எனவே வேதத்தின் அடிப்படையிலும், மொழியின் அடிப்படையிலும் பிராமணர்களின் பூர்வீகம் வட ஐரோப்பியா என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அடுத்து இந்தியாவில் எப்படி தம் வாழ்க்கையை கடடமைத்து கொண்டனர் என்று பார்க்கலாம். வட துருவம் மிக கடும் குளிர் பிரதேசம், ஆண்டிற்கு 9 மாதங்கள் பனிப்பொழிவு ஏற்படும் ஆதலால் உணவு பஞ்சம் எப்போதும் இருக்கும். ஆண்டின் 3 மாதத்தில் கிடைக்கும் கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற தானியங்களையும், பழங்களையும் பதப்படுத்தி வைத்து கொண்டு குளிர்காலத்தில் மாமிசம், மீன் மற்றும் முட்டைகளுடன் சேர்த்து உண்டு வந்த பிராமணர்கள், குளிர் காலங்களில் கடுமையான உணவு பற்றாக்குறை மற்றும் பல வித நோய் தொற்றுக்களால் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். எப்டியாவது வாழ்ந்தாக வேண்டுமே. கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி நகர்ந்து மித வெப்பமான மத்திய ஆசிய பகுதிக்கு வந்தவர்களை அங்கிருந்த பூர்வ குடிகளான ஜிப்ஸிகள் அடித்து விரட்ட தெண் கிழக்கு திசையில் நகர்ந்து கி.மு 1500 வாக்கில் சிந்து சமவெளியை (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்) அடைந்தனர். அங்கு ஏற்கனவே நாகரிகமான மக்கள் இனம் ஆரிய பிராமணர்களை போல் நாடோடியாக இல்லாமல் விவசாயம் செய்து நகரங்களை அமைத்து கல் வீடுகளில் வாழ்ந்து வந்தனர். சிந்து சமவெளி நாகரீகம் ஆரியர்களின் வருகைக்கு 1000 ஆண்டுகள் பேசாமையானது. அதாவது இன்றிலிருந்து சுமார் 5000 ஆண்டுகள் பழமைமையானது.

அதுவரை அரிசி பயிரிட்டு வந்த சிந்து சமவெளி மக்களிடம் பிராமணர்கள் முதன்முறையாக கோதுமையை அறிமுகப்படுத்தினார். பாலுக்காகவும், உழவுக்காகவும் மாடுகளை பயன்படுத்தி வந்த திராவிடர்களிடம் வேகமாக ஓடும் ஆனால் பால் தராத, விவசாயப்பணிகளுக்கு பயன்படாத குதிரையை அறிமுகப்படுத்தினர். குதிரை மாடுகளை விட உயர்வானது எனவும் சொல்லினர். இதுவே ஆரியர்கள் தங்களை உயர்வானர்கள் என்று காட்டி கொள்ள எடுத்த முதல் படி. அதை தொடர்ந்து துருப்பிடிக்கும் இரும்பை திராவிடர் பயன் படுத்திய செம்பை விட உறுதியான உலோகம் என நம்பவைத்தனர்.

அதுபோலவே சம்ஸ்கிருத மொழியையைம் முன்னிலை படுத்தினர். உண்மையில் சமஸ்கிருதம் (sanskrit) என்பதன் அர்த்தம் "நன்றாக செய்யப்பட்டது" என்றாகும். san என்ற சொல் "நல்ல, புனித" என்ற பொருளிலும் create என்ற சொல் அதே பொருள் மற்றும் எழுத்து வடிவில் இப்போதும் பிரெஞ்சு, ஸ்பேனிஷ் மொழிகளில் வழங்கப்படுகிறது. ஆக இந்த மொழி மக்களால் பேசப்பட்டு தோன்றியதில்லை. மாறாக ஒரு குழுவினரால் கட்டமைக்கப்பட்ட மொழி. வேண்டுமென்றே சாமானியவர்களுக்கு புரியாத, மிகக்கடினமான இலக்கணத்தை இம்மொழிக்கு உருவாக்கினார். மேலும் கடினமான கூட்டெழுத்துக்களை சேர்த்தும், பிரித்து படிக்கும்போது எதிர்மறையான பொருளைத்தரும் விதமான சொற்களை சேர்த்தும் அமைக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம். இதை தேவ பாஷை என அறிமுகப்படுத்தினர்.

ஆரியர்கள் சிந்து சமவெளியில் குடியேறியபோது அவர்களுடன் பெண்கள் வரவில்லை. ஆண்கள் மட்டுமே குடியேரினர். அவர்கள் வேண்டுமென்றே பெண்களை விட்டுவிட்டு வந்தார்களா, அல்லது அவர்கள் வரும் வழியில் பெண்கள் நோய் மற்றும் எதிரிகளால் கொல்லப்பட்டனரா என்று தெளிவில்லை. ஆனால் ஆண்கள் மட்டுமே வந்து குடியேறினர் என்ற கருத்தை சங்கராச்சாரியார் குறிப்பிட்டுள்ளார். இங்கு குடியேறிய ஆரிய ஆண்கள் இனப்பெருக்கத்துக்காக பூர்வகுடி திராவிட பெண்களையே சார்ந்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் திராவிட பெண்களுடன் இனவிருத்தி செய்தாலும் அப்பெண்களை தங்கள் இனத்தவராக ஒப்பு கொள்ளவில்லை. மாறாக அப்பெண்கள் எப்பொழுதும் மீண்டும் திராவிட ஆண்களோடு கலந்து விடுவார்களோ என்ற அச்சம் ஆரிய ஆண்களை சதா குடைந்து கொண்டிருந்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆரியர்கள் நாகரீகத்தில் பின் தங்கி இருந்தனர். சிந்து சமவெளியில் ஏற்கனவே ஆண்கள் விவசாயம், நெசவு தொழில், உலோக வார்ப்பு, கட்டிட கலை என பல தொழில்நுட்பங்களை அறிந்திருந்தனர். ஆனால் ஆரிய ஆண்கள் நாடோடிகளாகவும், நாகரீகரிகமற்றவர்களாகவும், பல நோய் தொற்று உள்ளவர்களாகவும் இருந்ததால் தங்களை மணந்த பெண்கள் தங்களை விட்டு போய் விடக்கூடம் என்ற சந்தேகத்திலேயே வாழ்ந்தனர்.

இதன் வெளிப்பாடாக தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகள் பெண் யோனியில் ஜனித்த பாவம் தீர வேண்டும் என்று ஆண்களுக்கு பூணூல் அணிவித்தனர். பெண்களை சொத்து, சடங்குகளில் பங்கேற்கும் உரிமை என எதுவும் இல்லாமல் அடிமைகளாக நடத்தினர். அந்த நடை முறைகளையே வேதங்களிலும் சொல்லி வைத்தனர். ஆக ஆரிய பிராமணர்கள் ஆண் வழி அதாவது தந்தைவழி சமூகமாக உருவெடுத்தது. மாறாக இயற்கை வழிவந்த திராவிட இனம் உயிர் தோன்றலுக்கு காரணமான பெண்ணை தெய்வமாக வழிப்படும் தாய் வழி சமூகமாக இருந்தது.

மேற்சொன்ன நாகரீகம் , தொழில் ஏதும் அறியாத பிராமணர்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்தி கொள்ள ஏற்கனவே தொழில் வளர்ச்சி பெற்றிருந்த திராவிட மக்களை தொழில் ரீதியாக பிரித்தனர். பிறகு அந்த பிரிவினையை சாதி என்றும், தொழில் அடிப்படையில் இல்லாது பிறப்பின் அடிப்படையில் ஆனது என்றும் மேலும் கடுமையாக்கி அதற்கு ஆதரவாக வேதத்தில் ஸ்லோகங்களையும் உருவாக்கினார். ஆனால் நால்வகை சாதியை சொல்லும் ஸ்லோகம் பழைய ரிக் வேதத்தில் இல்லை என்றும், பின்னாளில் இடைச்செருகலாக புகுத்தப்பட்டது என்றும் அந்த சொல்லாடல்களின் தன்மையை ஆராய்ந்த பண்டிதர்கள் சொல்கிறார்கள்.

எது எப்படியோ, ஆனால் வேதத்தில் இன்று இந்து கடவுளாக பிராமணர்கள் முன்னிறுத்தும் சிவனோ, விஷ்ணுவோ, விநாயகனோ, முருகனோ எங்கும் குறிப்பிட படவில்லை. மாறாக வேதம் முழுவதும் இந்திரனையே முழுமுதல் கடவுளாகவும் இந்திரனை குஷிப்படுத்த யாக, யக்ஞங்கள் செய்யும் முறைகளுமே விளக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் சிவனும் விஷ்ணுவும் எப்படி இந்து மதத்தில் புகுத்தப்பட்டனர்??

ஆரியர்கள் குடியேறும் இங்கிருந்த ஒரிஜினல் இந்துக்கள் முன் பெண் தெய்வங்களையும் (காளி, மாரி, கொற்றவை,கெங்கம்மா) , இயற்கையையும் (மலை, வேம்பு ,ஆல் போன்ற மரங்கள்), முன்னோர்களையும் (குல தெய்வம் & சிறு தெய்வ) வழிப்பட்டனர். அந்த சமயத்தில் சமண சமயமும் மேலோங்கி இருந்தது. கடைசி மற்றும் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் கிமு 600 களில் வாழ்ந்தவர். அதற்கு 23 தலைமுறைகள் முன்பு (ஒரு தலைமுறைக்கு 25 வருடங்கள் என கொண்டாலும் சுமார் 600 ஆண்டுகள்) தோன்றிய முதல் தீர்த்தங்கரர் ஆதிநாத் என்று வழங்குப்படுகிறார். இந்த முதல் சமண துறவியை அபகரித்து ஆதி சிவன் என்றாக்கி பிராமணர்கள் தங்கள் தெய்வமாக வரித்து கொண்டனர். தவம் இயற்றுதல், தியானம் செய்தல், தன்னுள் மனதுள் கடந்து மனித இனத்தை உய்விக்கும் தேடல் சமண சமய கோட்ப்பாடுகளின் அடிப்படையாகும். தவம், தியானம் செய்யும் முறைகள் எதுவும் பிராமணர்களின் வேதத்தில் குறிப்பிடவில்லை. அதாவது உள்ளுக்குள் தேடும் உண்மையை அறியும் வித்தைகள் வேதத்தில் இல்லை. மாறாக பொருட்களை தீயிலிட்டு இந்திரனுக்கு படைக்கும் யாக முறைகளே உள்ளது. இப்படி ஆதிநாத்தை ஆதி சிவன் ஆக்கியதை நவீன கால ஆதி யோகி சிலையிலும் பார்க்கலாம்.

தற்போது கிருஷ்ணனை இந்து கடவுளாக ஒப்புக்கொண்டு கொண்டாடும் பிராமணர்கள், ஒரு காலத்தில் அதே கிருஷ்ணனை சூத்திரன், பெண் காமந்தகன், கள்வன் என்று தூற்றினார். காரணம் கிருஷ்ணன் திராவிடன். கரிய நிறமுடைய இடையன். பிராமணர்களின் கடவுளான இந்திரனுக்கு பூசை செய்ய விடாமல் தடுத்து இயற்கை வடிவான கோவர்த்தன மலைக்கு பூசை செய்ய சொன்னதால் ஆரம்பத்தில் கிருஷ்ணனை எதிரியாக பார்த்த பிராமணர்கள் பின்னாளில் அவரது பெருமை வளர்ச்சியை அபகரிக்கும் விதமாக கிருஷ்ணனை இந்து கடவுளாக ஏற்று கொண்டனர்.

இது போல காலத்திற்கேற்ப மக்களின் அறியாமையை முதலீடாக்கி பல வகைகளிலும் தன்னிருப்பை பிராமணர்கள் வரலாற்றின் வழி நெடுகிலும் தக்கவைத்து கொண்டனர்.https://ta.quora.com › பிராம...
Web results
பிராமணர்களின் பூர்விகம் எது ...

பிரபல்யமான பதிவுகள்